Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணிமனை, சமாதான செயலகம் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிப்பு

Featured Replies

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது விமான தாக்குதல் - அருகில் குடிமனைகளில் இருந்த பொது மக்கள் இருவர் பலி - ஜவர் காயம்!!

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் எல்லோராலும் அறியப்பட்ட விடுதலை புலிகளின் சமாதான செயலத்தின் பிரதான அலுவலக வளாகம் மீது விமானம் குண்டு வீசியுள்ளது.இதில் அருகில் குடியிருந்த பொது மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்த குண்டுகளால் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தெருவால் சென்றவர்கள் உட்பட ஜவர் காயமடைந்திருப்பதாக பூர்வாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இத்தாக்குதலை எதிர்த்து புலிகள் விமான எதிர்ப்புத்தாக்குதலை மேற்கொண்டமையால் பல குண்டுகள் சமாதான செயலகத்துக்கு வெளியே வீழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சுப்பையா சிவலிங்கம்(48) தங்கவேலு ரகு(30) ஆகியோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

நன்றி நிதர்சனம்

2DN LEAD

SLAF attacks LTTE Peace Secretariat, Political Head Office

[TamilNet, Thursday, 02 October 2008, 08:25 GMT]

Sri Lanka Air Force on Thursday attacked the Head Office of the Political Section of the Liberation Tigers of Tamileelalam and the LTTE Peace Secretariat, both located close to each other at the heart of the Ki'linochchi town. The attack, reported around 1:00 p.m., also caused damage to nearby houses and the roads. Two civilians were killed and five wounded in the air-strike, according to initial reports.

Two of the wounded civilians were identfied as Subbiah Sivalingam, 48 and Thangkvel Ragu, 30, both were travelers on the road while the attack took place. The other victims are yet to be identified.

At least one of the civilians killed was at his house in the vicinity. Most of the bombs missed their targets and the SLAF bombers disappeared from the sky as they came under LTTE anti-aircraft fire. However, the buildings have sustained heavy damage as each of the buildings were hit by at least one bomb.

Both the offices have been used by the Norwegian peace facilitators and foreign diplomats in their dialogue with the leadership of the LTTE.

Edited by THEEPAN0007

Edited by professor

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணிமனை, சமாதான செயலகம் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிப்பு

[வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 05:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

அனைத்துலக பிரதிநிதிகள், அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்தித்து உரையாடும் தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை செயலகம், சமாதான செயலகம் என்பன சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நகர மையத்தில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணிமனை மற்றும் சமாதான செயலகம் அனைத்துலக நிறுவனங்களுக்கான விடுதலைப் புலிகளின் தொடர்பகம் அருகான மக்கள் குடியிருப்புக்கள் என்பன அமைந்துள்ள பகுதியை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் 16 குண்டுகளை வீசியுள்ளன.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் வந்த இரண்டு வானூர்திகள் தாழப்பறந்து குண்டுகளை வீசியுள்ளன. வானூர்திகளால் வீசப்பட்ட 16 குண்டுகளும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை, சமாதான செயலகம் அனைத்துலக நாட்டு நிறுவனங்களுக்கான தொடர்பகம் என்பன முற்றாக அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

2002 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பின் உருவான பேச்சுவார்த்தை காலம் தொடக்கம் அனைத்துலக பிரதிநிதிகள், அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் விடுதலைப் புலிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தும் உரையாடும் இடமாக நடுவப்பணிமனை, சமாதானச்செயலகம் என்பன இயங்கி வந்தன.

இறுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனப் பிரதிநிதிகள் இங்குதான் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியிருந்தனர்.

அனைத்துலக நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கக்குழுப் பிரதிநிதிகள் தமது பணி ஒழுங்கமைப்புக்களை விடுதலைப் புலிகளின் தொடர்பாளருடன் தொடர்புகொள்ளும் தொடர்பகமும் இப்பகுதியில் அமைந்திருந்தது. அதுவும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

மேலும் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்களின் 17 வீடுகளும் தாக்குதலில் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன.

இதில் பொதுமக்கள் இருவர் கொல்லப்ப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.

பொதுமக்களுக்கான அரசியல் இராஜதந்திரச் செயற்பாட்டின் விடுதலைப் புலிகளின் மையத்தின் மீது சிறிலங்கா வான்படை நடத்திய அழிப்புத்தாக்குதல் அதன் தெளிவான முடிவை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

தங்கவேல் ரகு (வயது 30)

சுப்பையா சிவலிங்கம் (வயது 48)

இராசலிங்கம் சந்திரா (வயது 40)

ஐயாத்துரை மகாலிங்கம் (வயது 55)

சங்கரப்பிள்ளை ஆனந்தசிவம் (வயது 60)

சின்னக்குட்டி வேலும்மயிலும் (வயது 70)

சந்திரராசா வினோத் (வயது 15)

சிவகுருராசா டெனிஸ் (வயது 22)

மகேந்திரராசா சந்திரகுமாரி (வயது 14)

கருணாநந்தநேசராசா சந்திரசேனன் (வயது 24)

செல்வநாயகம் கந்தசாமி (வயது 64)

தேவகுருசேனன் குருகுலதேவன் (வயது 34)

சிவசற்குணராசா சங்கரன் (வயது 27)

விமலநாதன் சிவகாந்திமதி (வயது 18)

தேவராசா கருணாகரன் (வயது 21)

கோகுலராசா சண்முகதர்சினி (வயது 18)

ஆகியோர் இதில் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர். இவர்களின் பெயர் விவரம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரது ஆயுதப்போராட்டத்திற்கு கிட்டத்தட்ட 31 வயதுதான், அனால்,தமிழரது உரிமை போருக்கு ஏறத்தாள 96 வயது (1912 ல் தமிழ்மாணவர் காங்கிறஸ்).

தமிழினம் தனது உரிமைப்போருக்காக ஒரு தலை முறைக்கு மேலாகப்போராடுகிறது,

சிங்களவர்களைப்பொறுத்தவரை இது ஒரு இறுதிப்போர்,எவ்வளவு காலம் அவர்களல் வளங்கள் முழுவதையும் போரிற்கு செலவிட முடியும்? அழிவிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல் தமிழினம் மீண்டும் மீண்டும் எழுந்து போராடித்தமது உரிமையை மீட்டெடுக்கும்.

சிங்களவனைப்பொறுத்த வரை அவனது நம்பிக்கை

1.பெரும்பான்மை சிங்களமக்களினை பிரதினிதித்துவம் படுத்தும் சிங்கள அரசினை சிறுபான்மைத்தமிழரால் எதுவும் செய்யமுடியாது

2.இப்ப கொடுக்கும் அடியின் பின் தமிழினம் எப்பவும் எழுந்திருக்கக்கூடாது(பெரும்

முதலில்..... :o நிலவரத்தை புரிந்துகொள்ளுங்கள்.... :D

பதுங்குவதற்க்கும் பயங்கரவாதியானதுக்கும் காரணம் இலங்கையில்லை.

எங்கயாவது அடிசறுக்கும்... பொறுங்கள்.... :rolleyes:

களத்துக்கு வெளியே இருந்துகொண்டு விமர்சிப்பது எல்லோருக்கும் சுலபமானது. இன்றிருக்கும் களமுனை எப்படியிருக்கிறது அதன் தன்மைகள் என்ன என்பதை நேரடியாக அங்கு இருப்பவர்களால் மட்டுமே தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

உலகின் வல்லரசு நாடுகளின் ஆசீர்வாதத்துடன் எல்லா நாட்டு ஆயுதங்களையும் கொண்டு மாபெரும் ஆயுத வளத்துடன் மூர்க்கமாகப் போரிடும் ஸ்ரீலங்கா இராணுவத்தை விடுதலைப்புலிகள் இதுவரை எதிர்கொண்டதில்லை. இப்போதுள்ள சர்வதேச அரசியல் சூழ்நிலையும் எதிர்பாராதது. யாரோ எப்பொழுதோ சொன்னார்கள் என்பதை இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் விமர்சிப்பதை விடுத்து இன்றைய நிலையில் எங்களால் என்னசெய்ய முடியும் என்பதை மட்டும் சிந்திப்பதே பொருத்தமானது. அதை விட்டுவிட்டு "நாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்துகொண்டு பங்களிப்புச் செய்தோம். அதேபோல விடுதலைப் புலிகளும் சொன்னபடியெல்லாம் செய்யவேண்டும்" என்று நினைப்பது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை. வெளியிலிருந்து விமர்சிப்பது நாம் பங்காளிகளல்ல என்பதைத்தான் சொல்கிறது.

(தொட்டதற்கெல்லாம் சோர்வடைந்துவிடும் வகையில் புலம்பெயர்ந்த மக்களை உருவாக்கி வைத்திருப்பது யார் என்பதை உணர்ந்துகொண்டு, அதை நீக்கி, விடுதலைப் போராட்டம் என்றால் என்னவென்பதை மக்களுக்குத் தெளிவாக்கும் அரசியல் வகுப்பெடுக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். முக்கியமாக, ஸ்ரீலங்கா இராணுவத்தரப்பு தாங்கள் செய்கின்ற பிரச்சாரத்தைத் தாங்களே நம்பிப் பலியாவதாகச் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது அதுவே எமது தரப்பிலும் நடக்கிறது. எங்கள் புலம்பெயர் மக்களும் "ஈரைப் பேனாக்கிப் பெருமாளாக்கும்" ஆய்வாளர்களை;த்தான் தலையில் தூக்கி வைக்கிறார்கள். யதார்த்தத்தை எழுதுபவருடைய நிலை என்ன என்பது உங்களுக்கே தெரியும்)

போர்க்காலங்களில் தேசியங்கள் செலவிடுவது எதில்?

Us_gov_spending_histry_by_function_1902_2010.png

உலகின் வல்லரசு நாடுகளின் ஆசீர்வாதத்துடன் எல்லா நாட்டு ஆயுதங்களையும் கொண்டு மாபெரும் ஆயுத வளத்துடன் மூர்க்கமாகப் போரிடும் ஸ்ரீலங்கா இராணுவத்தை விடுதலைப்புலிகள் இதுவரை எதிர்கொண்டதில்லை. இப்போதுள்ள சர்வதேச அரசியல் சூழ்நிலையும் எதிர்பாராதது

நியம் இதுதான்

எமக்குள்ள ஒரே நம்பிக்கை எம் தலைவர்

தயவு செய்து தூற்றுவதை விட்டு

ஒரு கை கொடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குதிரையில காசு கட்டியாச்சு. ஓடவில்லை என்றால் எரிச்சல் அப்படித்தானே?

போருக்கும் ரேசுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. பிறகு தாங்கள் கொடுத்தத காசுக்கு தலைவர் கணக்கு காட்ட வேண்டுமாம்.

கேள்வி கேளுங்கள். அதற்கு முன் இலங்கை அரசின் பாதுகாப்பு ஒதுக்கீடு எவ்வளவு என்றும் தெரிந்து கொள்ளுங்கள். அது $2 பில்லியன் அமெரிக்க டொலரிலும் அதிகம். அதைவிட ஈரான், ரஸ்யா மற்றும் பல நாடுகள் இனாமாகவும் நீண்ட கால கடனடிப்படையிலும் கொடுப்பது பெரும் தொகைகள்.

இந்தப் பணதுக்கு முன்னால் புலம் பெயர்ந்தோர் கொடுத்ததெல்லாம் ஜுஜுபி.

இதுவரையில் 21 600 க்கு மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈன்றார்களே. எதனையோ ஆயிரம் போராளிகள் நிரந்தர அங்கவீனர்களானார்களே! அவர்கள் முன் உங்கள் பங்களிப்பு??????

களத்தில் என்ன பூப் பறித்துக் கொண்டா இருக்கிறார்கள். எத்தனை வலிகள? எத்தனை அழுத்தங்கள்? எத்தனை எதிரிகள்?

ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருங்கள் இன்று உங்கள் பணம் உல்லாச வாழ்க்கைக்கு காரணம் நீங்கள் செல்வந்த நாடுகளில் குடியிருப்பது. குடியிருப்பதற்கு காரணம் போரட்டத்தை காட்டி அடித்த அசைலம். அப்படிப் பார்த்தாலே நீங்கள் போராட்டத்திற்கு கடன் பட்டிருப்பது நீங்கள் கொடுத்ததிலும் மிகப் பெரும் தொகை.

விடுதலைப்புலிகளின் வெற்றிகள் குறித்து விபரமாக அறிந்திருக்கும் பலருக்கு அந்த வெற்றிகளின் பின்னிருந்த போராட்டங்களும் தியாகங்களும் சரிவரத் தெரிவதில்லை. உண்மையில் பல விடயங்கள் சொல்லப்படுவதில்லை. உதாரணத்துக்கு ஒன்று,

தீச்சுவாலை நடவடிக்கையின் எதிர்த்தாக்குதலின்போது ஒரு கட்டத்தில் மோதல் மிகக் கடுமையாக இருந்தபோது, இருந்த வளங்களையெல்லாம் ஒருங்கிணைத்துத் தாக்குதலை மூர்க்கமாக்கும்படி விடுதலைப் புலிகளின் உயர்பீடத்தால் உத்தரவிடப்பட்டது. அந்தத் தாக்குதல் மட்டும் வெற்றியளித்திருக்காவிட்டால

என்னால் என்னுடைய பதிவுகளிற்கே பதில் சொல்ல முடியும்

தலைவர் மீண்டும் பிடிப்பார் என்பதிலோ அல்லது புலிகளின் போராட்டம் மீதோ நம்பிக்கை இழக்கவில்லை. ஆனால் 6 மாததிற்கு முன் எவராவது, இராணுவம் விடத்ததல் தீவையும் பிடிக்கும் என்றோ அல்லது கிளிநொச்சி வாசல் வரை முன்னேறும் என்றோ சொல்லி இருந்தால் நாம் நம்பி இருப்போமா? சொன்னவரை பரிகசித்து இருப்போம். காரணம், புலிகளும், தமிழ் தேசிய ஊடகங்களும் வரப்போகும் கள நிலவரத்தையும், அதன் கடுமையயும் மறைத்து வந்ததே. மன்னார் வரை வந்த இராணுவத்தை மதவாச்சி வரை விரட்டுவோம் என்பது போன்ற வசனங்களே யதார்தத்தை மறைத்தன.

மீண்டும் பேச்சுவார்தை சகதிக்குள் வீழ்ந்து போக கூடாது என்பதற்காகவே, புலிகளின் தலமை இவ்வளவு பொறுமையாக நடக்கின்றது. இன்றும் கூட தமது சமாதான செயலகம், அரசியல் தலமையகம் தாக்கப்பட்டதை புகைப்படங்களுடன் வெளி உலகத்துக்கு அறிவிப்பது கூட இக் காரணத்திற்காகவே. அதன் பின்னால் ஒளிந்து இருக்கும் அரசியல் காரணம், இராணுவ வெற்றிகளை விட வலிதாக இருக்கப் போவதால் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் 6 மாததிற்கு முன் எவராவது, இராணுவம் விடத்ததல் தீவையும் பிடிக்கும் என்றோ அல்லது கிளிநொச்சி வாசல் வரை முன்னேறும் என்றோ சொல்லி இருந்தால் நாம் நம்பி இருப்போமா? சொன்னவரை பரிகசித்து இருப்போம். காரணம், .....

காரணம் போர் பற்றிய உங்கள் அறிவின்மை.

காரணம் போர் பற்றிய உங்கள் அறிவின்மை.

உங்களின் போரறிவு கொண்டு எமக்கு அப்பவே விளக்கம் அளித்து இருக்கலாம், அல்லது இப்பவாவது விளக்கம் தரலாம். என்னைப் போன்ற முட்டாள்களுக்கு உதவியா இருக்கும், ரேசில் வெல்லும் குதிரைக்கு மேல் பணம் கட்ட

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி நன்றி

காட்டாறு

நிசாலி

நக்கீரன்

காட்டாறிடமிருந்து இதைநான் எதிர்பார்க்கவில்லை

வெற்றிலில் கூடவருபவன் நண்பனல்ல தோல்வியில் எனக்கு தோழ்கொடுப்பவனே வேண்டும்

நன்றி

பனங்காணி,

எமக்கு தேசிய தலைவரை விட வேறு எவராவது தலைவர் என்று குறிப்பிட கூடியவிதத்தில் உள்ளனரா

என் பெயரினை (புனை பெயர்??) தமிழில் எழுதும் போது, 'நிழலி' என்றே வரும் (என நம்புகின்றேன் :rolleyes: )

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் 2007 மாவீரர் தின உரையில் சொன்னது:

எத்தனை இடர் வரினும் இலட்சியப் போர் தொடரும்.

மாறாக சிங்களவனை சும்மா அலேக்காக தூக்கி எறிவோம் என்ற வீரப் பிரதாபம் அல்ல.

ஆகவே நாங்களும் எத்தனை இழப்புகள் வரினும் எத்தனை இடங்கள் பறிபோனாலும் இப் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து வடிவாக திரும்பவும் திரும்பவும் கேளுங்கள்

அவர் சொன்னது

தம்மையே தியாகம் செய்யக்கூடிய இந்த மக்களும் போராளிகளும் இருக்கும்வரை

எத்தனை இடர் வரினும் இலட்சியப் போர் தொடரும்.

முக்கியவரிகளை மறக்கவேண்டாம்

மறந்துவிட்டு

அல்லது

மறுத்துவிட்டு

தலைவரை நோக்கி கை நீட்டி என்ன பயன்???????????

உலகத் தமிழினமே எண்ணிப்பார். நீ உறங்கினால் வரலாற்றில் யாருன்னை மன்னிப்பார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரை நோக்கி கை நீட்டி என்ன பயன்???????????

தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் குகதாசன். நான் எங்கே தலைவரை நோக்கி கை நீட்டினேன்? மாறாக எத்தனை இடரிலும் அந்த உறுதி எமக்கும் இருக்க வேண்டுமென்று தானே ஆதங்கப் படுகிறேன். நீங்கள் சொல்லவருவதைத் தான் நானும் சொல்ல வருகின்றேன்?

ஐயையோ

உங்களை நான் குறிக்கவில்லை

உங்கள் கருத்தே எனது கருத்தும்

நீங்கள் குறிப்பிட்டதை மேலும் விபரித்து எழுதினேன்

சில விடயங்களை விளக்கவேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதினேன்

ஐயையோ

தற்போதுதான் தங்கள் கருத்தும்: எனது கருத்தும் ஒத்துப்போக தொடங்குகிறது

அதைப்போய் முறிப்பேனா???

காட்டாறு பெயரிலும்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குகதாசன்.

நான் தான் தவறாக் விளங்கிக் கொண்டு விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

விடுதலை போராட்டத்தின் மீதான பற்றுதல் தான் விடுதலைப் புலிகள் மீதான ஆதரவாக பரிணமித்தது. அவ்வாறு இல்லாமல், புலிகளின் மேலுள்ள பற்றுதலால் விடுதலைப் போராட்டம் மீதான ஆதரவு வரவில்லை

இதன் வேறு பாட்டை விளங்கிக் கொள்ளும் போதுதான் புலிகள் இராணுவ ரீதியில் பலம் குறையும் போதெல்லாம் மக்கள் ஆதரவின் மூலம் மீண்டும் மீண்டும் உச்ச நிலைக்கு எப்படி வர முடிகின்றது என்ற கேள்விக்கு விடை வருகின்றது. மாவீரர் தின உரையோ அல்லது அவர்களின் தளபதிகளின் பேட்டிகளினாலோ மட்டுமே சுதந்திர தமிழ் ஈழத்திற்கான ஆதரவை தொடர்ந்து தக்க வைக்க முடியாது. மக்கள் மத்தியிலான அரசியல் தெளிவாக்கலே அவர்களை சோர்வடைய வைக்காமல் பாதுகாக்கும்.

இது முட்டையா

கோழியா என்பது போல் உள்ளது

அதேநேரம் புலிகளைத்தெரிவு செய்ததற்கு அவர்களின் தியாகமும் வீரமுமே காரணம்

[ஃஉஒடெ நமெ='KஊGஆTHஆஸாண்' டடெ='ஓcட் 2 2008, 04:12 PM' பொச்ட்='450219']

இது முட்டையா

கோழியா என்பது போல் உள்ளது

அதேநேரம் புலிகளைத்தெரிவு செய்ததற்கு அவர்களின் தியாகமும் வீரமுமே காரணம்

[/ஃஉஒடெ]

மற்ற இயக்கங்களும் விடுதலை போர் என்று தான் ஆரம்பித்தன. ஏன் அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கவில்லை? ஏனெனில், அவர்கள் விடுதலை போராட்டத்தை கைவிட்டதனால் தானே?

புலிகளின் தியாகம் மட்டுமன்றி, அவர்களின் அர்ப்பணிப்பும் கொண்ட நோக்கின் மீதான வழுவல் அற்ற உறுதியும் தான் நாம் ஆதரிக்க காரணம்

ம்ம்ம்ம்ம்... முதல் பதில் எழுதும் போது நினைக்கவே இல்லை இந்த உரையாடல் இவ்வளவுக்கு நீளும் என்று. வேலைத் தளத்தில் இருந்தே எழுதினேன். என் திட்ட முகாமையாளர் வரும் போதெல்லாம் கடுமையாக வேலை செய்பது போல நடிக்க வேண்டியதாகி விட்டது

னிசலி......

ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கிலத்தில் எழுதிப்பழகுங்கள். :rolleyes:

னிசலி......

ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கிலத்தில் எழுதிப்பழகுங்கள். :rolleyes:

நான் என்கே ஆங்கிலத்தில் எழுதினேன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.