Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் தொட்ட கெலியே..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

deckctk.jpg

இரண்டு "மணி" கெலிகள் வானில் உயர இருந்து தாழப் பறக்க இறங்குவதைக் கண்டிட்டு கண்ணன் கத்தினான். கெலி வருகுது... வாங்கோ போய் பார்ப்பம்.

வழமையா கெலி என்றாலே கிலி தான். அமெரிக்க தாயாரிப்பில வந்த "பெல்" கெலிகளில சிங்களப் படை வந்து இரவு பகல் என்றில்லாம வட்டமடிச்சு வட்டமடிச்சு சுடுவது தான் எங்களுக்குப் பரீட்சயம். அது பொறுக்கிப் போடும் வெற்று ஐம்பது கலிபர் கோதுகளை பொறுக்க, அது எங்க கொட்டுண்ணுது என்று பார்க்க வாயைப் பிளந்து கொண்டு அண்ணாந்து திரியிறது தான் அப்ப திரில்.

ஆனால் இப்ப கொஞ்சக் காலமாக யாழ்ப்பாண வான் வெளியில் புகையடிச்சுக் கொண்டு பறக்கும் அன்ரனோக்களும், தாழப் பறந்து திரியும் எம் ஐ 8 கெலிகளும், கிலுக்கிக் கொண்டு வரும் இந்திய ஜவான்களின் "மணி" கெலிகளும்.. எங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான சூழலையே காட்டியிருந்தன.

அண்ண நீங்க வரல்லையா. கெலி கம்பஸ் கிரவுண்டுக்க இறங்கிட்டுது. வாறதெண்டா கெதியா வாங்கோ... என்று குட்டிச் சைக்கிளோடு வீட்டு வாசலில் கத்திக் கொண்டே நின்றான் கண்ணன்.

பொறுடா வாறன்.. என்று அவசர அவசரமா வெளிக்கிட்டு என்ர சொப்பர் சைக்கிளையும் எடுத்து கவட்டுக்க வைச்சுக் கொண்டு.. குறுக்கு வழியென்று இரண்டு பேரும் ரெயில் பாதை ஓரமாய் ஓடும் கல்லுப் பாதையில ஓடி.. யாழ்ப்பாண கம்பஸ் வாசலை அடைஞ்சா... அங்க சைக்கிள் விட இடமில்லாத அளவுக்கு சனம் முண்டி அடிச்சுக் கொண்டிருந்தது கெலி பார்க்க.

சைக்கிள வீதி ஓரமாப் போட்டிட்டு.. மரத்தில தொத்தி... விடுப்புப் பார்த்தா...

கெலிகள் இறங்கேக்க பறந்த தூசி மூஞ்சில படிய கெலிகளின் விசிறிகள் ஓய்வுக்கு வந்து தொங்கிக் கொண்டிருந்தன.

கண்ணாடிக் குடுவைக்கு ஒரு பெரிய வால் வைச்சது போல தும்பி போல இருக்கும் மணிக் கெலி. அதன் வாலில மூன்று வர்ண வட்டத்தில பொட்டு வைச்சிருக்கும்.

அண்ண அங்க பாருங்கோ.. கெலில இருந்து சீக்கியன் இறங்கி வாறான். அவனுக்கு பொட்டு வைச்சு பூமாலை எல்லாம் போடினம்.

ஓமடா.. நானும் கண்டிட்டன். சமாதானம் கொண்டு வருகினம் எல்லோ. அதுதான் பூமாலை போடினமாக்கும்.

வந்தவை ஜீப்புகளில ஏறிப் பறக்க.. கெலிகள் மட்டும் மூலைக்கு ஒன்றாய், மூன்று சக்கரங்கள் தாங்க நின்று கொண்டிருந்தன.

ஒருவழியா.. ஆக்களுக்க நுழைஞ்சு.. கெலியைத் தொட்டுப் பார்த்திட வேணும். அப்ப தான் நான் தொட்ட கெலி ஆகாயத்தில பறக்கும் போது ஆக்களுக்குச் சொல்லிப் புளுகி அடிக்கலாம் என்று போட்டு மரத்தால குதிச்சு.. மதிலால பாஞ்சு.. கம்பஸ் கிரவுண்டுக்க போயிட்டன்.

கண்ணனும்.. பின்னால.. அண்ண நில்லுங்கோ. நானும் வாறன் என்று கொண்டே ஓடி வந்தான்.

கெலி பார்க்க வாற பெட்டையள கெலியோடும் இந்திய ஜவான்கள் வாய் பார்க்கிற நேரமாப் பார்த்து கெலிக்குக் கிட்ட போய்.. கெலியைத் தொட்டிடுறது தான் திட்டம்.

கண்ணா.. நீ போய் கெலியின்ர வால் பக்கம் நில்லு. நான்.. இஞ்ச மூஞ்சிப் பக்கம் நிக்கிறன். அவங்கள் அங்கால பராக்குப் பார்க்கேக்க நீ வால் பக்கமாய் ஓடிப் போய் தொடு. அவன் உன்னை தடுக்க வர நான் இங்கால முன்னால போய் தொடுறன்.

திட்டப்படி.. கண்ணன்.. வால் பக்கமாய் ஓட.. அதைக் கண்டிட்டு.. கெலிக்கு காவல் போல நின்ற அந்த ஒரு இந்திய ஜவானும்.. தொல தொல உடுப்பையும் போட்டுக் கொண்டு.. ஓடி வர நான் கெலியின் முன் பக்கமா ஓடிப் போய் அதன் மூக்குப் பகுதியை தொட்டிட்டுட்டன்.

இதைக் கண்டிட்டு.. எனக்குப் பின்னால ஒரு கூட்டமே கெலியைத் தொட ஓடி வந்திட்டு. அப்புறம் என்ன.. சனங்களைக் கட்டுப்படுத்த முடியாம இரண்டு கெலிக்கும் ஆளுக்கு ஒருவரா காவல் நின்ற இந்திய ஜவான்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கத்த.. கட்டம் போட்ட சேட்டு போட்டுக் கொண்டு புலி அண்ணாமார் ஓடி வந்து சனங்களை விலக்கும் வரைக்கும் அல்லோல கல்லோலம் தான்.

நானும் கண்ணனும்.. அந்தக் களோபரத்துக்குள்ள..நைசா.. சனத்துக்குள்ளால நுழைஞ்சு.. சைக்கிள் அடிக்கு வந்து.. அதைப் பொறுக்கி கவட்டுக்க வைச்சுக் கொண்டு குமாரசாமி வீதியால எடுத்தமே ஓட்டம் வீட்ட.

இப்படி ஒரு சில தடவைகள் தொட்டுப் பார்த்த கெலிகள் அன்றும்.. தாழப் பறந்தன.

அதைக் கண்டிட்டு.. கண்ணனையும் கூப்பிட்டுக் கொண்டு சைக்கிள எடுக்க ஓடினேன். ஆனால்.. கெலி தாழப்பறந்து.. கொஞ்ச நேரம் ஆகியிருக்கும்.. அதற்குப் பின் கெலி பறந்த பக்கமாய் ஒரே துப்பாக்கிச் சத்தங்கள் முழங்கத் தொடங்கின. யாழ் கோட்டைப் பக்கமிருந்து செல்களும் கூவிக் கொண்டு வரத் தொடங்கின.

என்ன பிரச்சனையாம்.. வீதியால ஓடி வந்த அண்ணமாரைக் கேட்டால்..

தலைவரை சுற்றி வளைக்க கம்பஸுக்க.. இந்திய பரா துருப்பு.. பரசூட்டால குதிச்சிட்டுதாம். அதுதான் சண்டை நடக்குதாம்.

சில மணி நேரம்.. கடும் சண்டை. பின்.. ஒரே நிசப்தம்.

கண்ணன் வந்து சொன்னான்.. அண்ண ஆரியகுளம் புத்த கோவில் வளவுக்க 20 சீக்கியங்கட "பொடி" வைச்சிருக்காம். வாறீங்களோ போய் பார்ப்பம்.

போடா.. நான் வரல்ல. கெலி வந்து அடிக்கும். நான் தொட்ட கெலியே என்னை அடிக்கப் போகுது.

அறியா வயதிலும்.. அறிய வைத்தது.. நரிகளின் அரசியல்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றிருந்த உண்மையான நிலை. வாழ்த்துக்கள் நெடுக்ஸ் மீள பழைய நினைவுகளை மீட்ட வைத்ததுக்கும் நன்றிகள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அறியா வயதிலும்.. அறிய வைத்தது.. நரிகளின் அரசியல்..!

நரிகளின் அரசியல் , அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கதை போல கிடக்கிது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

On October 10th, Intelligence inputs suggested that the LTTE leadership, which included not only Prabhakaran but also his deputies like Mahatiya and local military commanders were going to attend a meeting at their tactical HQ at Kokuvil in the Jaffna University campus on the night of October 11th. Not surprisingly the Army decided to utilize this opportunity of capturing them all and cut short the bitter fighting that lay ahead for the capture of Jaffna. A Special Helicopter Borne Operation (SHBO) was already planned earlier in which troops would be dropped in Jaffna University. The troops, would try to capture the LTTE Top leaders in a lightning strike and bring to end the resistance of the LTTE.

http://www.bharat-rakshak.com/IAF/History/...F/Chapter3.html

அன்று எமது தேசிய தலைமையை அகற்ற போடப்பட்டிருந்த திட்டங்களை இன்று விபரிக்கிறார்கள்.. பாருங்களேன்.

அன்று தலைவரை எவ்வளவு பெரிய ஆபத்துக்குள் மாட்டி விட்டிருக்கிறோம் என்று நினைக்கும் போது..???! :blink::icon_mrgreen:

இலங்கைப் படையினருக்கு காட்டுப்புற போர் பயிற்சி உட்பட பயிற்சி வழங்கும் இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரி.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காப் படையினர் மட்டுமல்ல.. இந்தியப் படையினரால்.. கொன்று புதைக்கப்பட்ட எமது மக்கள்..! பல புதைகளில் ஒன்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ்

மீண்டும் அதே பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க வைத்ததற்கு வாழ்த்துக்கள்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்தைப் படித்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்த உறவுகளுக்கு நன்றிகள்.

மறக்க முடியாத, மறக்கக்கூடாத காலங்கள் அவை, நல்லூர் பின் வீதியில் வைத்து டாங்கிகளில் வந்த இந்தியப் படைகள் மக்கள் கூட்டத்துக்கு முன் ஒரு வயதானவரைப் போட்டு அடித்ததும், எங்கள் வீட்டு நாய் போராளிகள் வரும்போது அமைதியாக இருந்துவிட்டு, இந்தியப்படை ரோந்து போகும்போது மட்டும் வித்தியாசமாகக் குரைப்பதுமாக எத்தனையோ சம்பவங்கள் இப்போது கண்முன்னே வந்துபோகின்றன. மீண்டும் நினைத்துப்பார்க்க வைத்த நெடுக்ஸ் அண்ணைக்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நினைவு மீட்டலுக்கு நன்றி. என்னமோ தெரியேல்லை இந்திய இராணுவத்தின் மணம் மட்டும் இன்று வரை மறக்க முடியவில்லை. :o:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நக்கீரன் உங்கள் நினைவுப் பகிர்வுக்கு. நுணாவிலானுக்கும் கூட.

மட்டுவிலில்... இந்தியப் படையினர் மீதான கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றின் போது.. அச்சம்பவ இடத்திற்கு சற்றுத் தொலைவில் நான் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன். இன்றும் மறக்க முடியாத வெடியோசையது..!

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பளையில் 88 ஜனவரியில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த உடலங்களைப் பார்த்திருக்கிறேன். 87 நவம்பர் ஊரடங்கு உத்தரவு சில மணித்தியாலங்கள் தளர்த்தியபோது காங்கேசன் துறைவீதியில் மருதனார் மடத்தில் இருந்து கொக்குவில் வரை வீதிகளில் இந்தியப்படைகளினால் கொல்லப்பட்டிருந்தவர்களின் உடலங்களைக் கண்டேன். எனக்குத் தெரிந்த இந்தியர்களுக்கு இந்திய இராணுவத்தின் கொடுமைகளைப்பற்றி அனுப்பி இருந்தேன். யாரோ ஒரு இந்தியர் புதிய மின்னஞ்சலில் எனக்கு அகதி நாயே, வெளினாடுகளில் கோப்பை கழுவிற நாயே இந்தியவைப் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை என்று அனுப்பி இருந்தார். இப்பொழுதும் எனது வலைப்பதிவில் கருணாநிதியின் பிறந்த நாள் பற்றிய ஆக்கத்துக்கு யாரோ இருவர் இப்படி எழுதியிருக்கிறார்கள்

1)டேய் கிழட்டு பாடு கந்தப்பு போய் வேலையை பாருடா ஆஸ்தேரிலியாவில் தட்டு கழுவி விட்டு பின்னர் இந்தியா சுதந்திர அடைந்தைதை தொடர்பாக கதைகள் பேசுடா நாடு இல்லாத அதியே திருந்துடா

2)போடா புண்ணாங்கு நீ பெரிய இவன் சீற்றம் கொண்டா என்ன ஆவ போவுது?? சீற்றதுடன் இருக்கிறானாம், போங்கடா நீங்களும் உங்க அகதி வாழ்கையும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொட்ட கெலியே..!

உங்கள் கதை என்னை கிலி கொள்ள வைச்சுட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பளையில் 88 ஜனவரியில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த உடலங்களைப் பார்த்திருக்கிறேன். 87 நவம்பர் ஊரடங்கு உத்தரவு சில மணித்தியாலங்கள் தளர்த்தியபோது காங்கேசன் துறைவீதியில் மருதனார் மடத்தில் இருந்து கொக்குவில் வரை வீதிகளில் இந்தியப்படைகளினால் கொல்லப்பட்டிருந்தவர்களின் உடலங்களைக் கண்டேன். எனக்குத் தெரிந்த இந்தியர்களுக்கு இந்திய இராணுவத்தின் கொடுமைகளைப்பற்றி அனுப்பி இருந்தேன். யாரோ ஒரு இந்தியர் புதிய மின்னஞ்சலில் எனக்கு அகதி நாயே, வெளினாடுகளில் கோப்பை கழுவிற நாயே இந்தியவைப் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை என்று அனுப்பி இருந்தார். இப்பொழுதும் எனது வலைப்பதிவில் கருணாநிதியின் பிறந்த நாள் பற்றிய ஆக்கத்துக்கு யாரோ இருவர் இப்படி எழுதியிருக்கிறார்கள்

1)டேய் கிழட்டு பாடு கந்தப்பு போய் வேலையை பாருடா ஆஸ்தேரிலியாவில் தட்டு கழுவி விட்டு பின்னர் இந்தியா சுதந்திர அடைந்தைதை தொடர்பாக கதைகள் பேசுடா நாடு இல்லாத அதியே திருந்துடா

2)போடா புண்ணாங்கு நீ பெரிய இவன் சீற்றம் கொண்டா என்ன ஆவ போவுது?? சீற்றதுடன் இருக்கிறானாம், போங்கடா நீங்களும் உங்க அகதி வாழ்கையும்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா கந்தப்பு. அவர் உண்மையில் இந்தியத் தமிழராக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஈழத்தமிழ் ஈனப்பிறப்பாகக் கூட இருக்கலாம்.

இதே நபர் யாழில் இருக்கும் எமது கருத்துக்களோடு நெருங்கிய பரீட்சயத்தைக் கொண்டவர். வலைப்பதிவுகளில் இடப்படும் இந்திய அராஜத்தைச் சொல்லும் ஆக்கங்களில் இவரின் இந்தப் புராணத்தைக் காணலாம். அனானியாக வந்து பதிவுகளை என்ன வெருட்டல்களை அதுவும் தான் ஏதோ ஜேம்ஸ்பாண்ட் 007 கணக்கா எழுதிவிட்டுப் போவார். இவரைக் கண்டு பயந்திடுவாங்க என்று. :(

இவர் யாழில் எம்மத்தியில் இருக்கும் ஒருவர் தான். அவர் இந்தியராகவும் இருக்கலாம்... ஈழத்தமிழ் ஈனமாகவும் இருக்கலாம். :(

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.