Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(3ம் இணைப்பு) மும்முனை முறியடிப்பு : படையினர் 62 பேர் பலி, 72 பேர் காயம், 3 உடலங்கள், ஆயுதங்கள் மீட்பு

Featured Replies

கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(2ம் இணைப்பு)கிளிநொச்சி நோக்கிய படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி; 3 உடலங்கள் மீட்பு

[செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 06:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருமுறிகண்டி - அக்கராயன் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் முன்னரணை கைப்பற்றும் நோக்கில் வான்படையின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்தி மற்றும் செறிவான எறிகணை சூட்டாதரவுகளுடன் தாக்குதலை மேற்கொண்டனர்.

முன்னரணை கைப்பற்றும் நோக்கில் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதில் 20-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான படையினர் காயமடைந்தனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, வன்னிவிளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று காலை பெருமெடுப்பில் நகர்வினை மேற்கொண்டனர்.

இந்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதல் மூலம் படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டது.

படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

அதேநேரம், இன்று காலை வன்னேரிக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத்தாக்குதல் மற்றும் வான்படையின் தாக்குதல் துணையுடன் முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கைக்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர்.

vaneri_20081007002.jpg

vaneri_20081007001.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வீரக்களமாடிய வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:o இனி அடிக்கடி இந்தப் படங்கள் வரும். அதுக்குத்தானே நிமால் சிறிபால சில்வா ஆயத்தப்படுத்துறார்.
  • கருத்துக்கள உறவுகள்

62 SLA soldiers killed in 3 fronts in Vanni - LTTE

[TamilNet, Tuesday, 07 October 2008, 10:45 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) officials in Vanni told media that their defensive formations put up stiff resistance against the SLA offensive units that attempted to advance on three fronts in southern Ki'linochchi district from 5:30 a.m. on Tuesday. 26 SLA soldiers were killed in Akkaraayan - Mu'rika'ndi sector, 16 in Vanni Vizhaangku'lam and 20 in Vannearikku'lam. The SLA offensive units were pushed back in all three fronts the Tigers said claiming that 49 SLA soldiers were wounded in Akkaraayan and 23 in Vanni Vizhaangku'lam. The Tigers also claimed to have seized arms and ammunition in the clearing mission in the evening.

The heavy fighting on Tuesday comes after days of continual artillery and Multi Barrel Rocket Launcher fire with several airstrikes on Ki'linochchi town and its suburbs.

The LTTE officials did not issue details of their casualties.

சிறீலங்கா படையினர் வன்னியின் மும்முனைகளில் மேற்கொண்ட முன்னகர்வு ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதில், படைகள் தரப்பில் 62 பேர் கொல்லப்பட்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:30 முதல் மிகச்செறிவான சூட்டாதரவுடன் படையினர் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்த போதிலும், மும்முனையிலும் முன்னகர்வு முறியடிக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் – முறிகண்டி பகுதியில் விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் படையினர் 26 பேரும், வன்னிவிழாங்குளத்தில் 16 படையினரும், வன்னேரிக்குளத்தில் படையினர் 20 பேரும் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் அக்கராயனில் 49 படையினரும், வன்னிவிழாங்குளத்தில் 23 படையினருமான மொத்தம் 72 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இன்றைய மோதலில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி விபரங்கள் எதுவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, வவுனியா, மன்னார் மருத்துவமனைகளில் படையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளாந்தம் பெருமளவிலான காயமடைந்த படையினர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் மும்முனைச் சமரில் 62 படையினர் பலி - விடுதலைப் புலிகள்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து கிளிநொச்சியின் தென்பகுதியில் மும்முனைகளினூடாக முன்னேற முயன்ற ராணுவத்தின் மீது தமது தாக்குதல்ப் படையணிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகளின் தளபதிகள் வன்னியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

இந்த எதிர்த் தாக்குதல்களில் 26 சிங்களப் படையினர் முருகண்டி - அக்கராயன் பகுதியிலும், 16 பேர் வன்னி விளாங்குளம் பகுதியிலும், மேலும் 20 பேர் வன்னேரிக்குளத்திலும் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த மூன்று முனைகளிலும் ஆகிரமிப்புப் படைகள் தமது பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டதுடன், அக்கராயன் சமரில் மேலும் 49 சிங்களப் படையினரும், வன்னி விளாங்குளத்தில் 23 படையினரும் காயமடைந்ததாகவும் புலிகள் அறிவித்துள்ளனர். சமரின் பின்னர் நடந்த தேடுதலில் பல ஆயுதங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்தக் கடும் சமரானது, கடந்த சில தினங்களாக கிளிநொச்சியிலும் அதன் சுற்றுப்புறம் மீதும் நடந்த அகோர எறிகணை, பல்குழல் மற்றும் விமானத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது.

தமது இழப்புகள் பற்றிப் புலிகளின் அதிகாரிகள் எதுவும் குறிப்பிடவில்லை.

நன்றி தமிழ்நெட்.

தமிழாக்கம் ரகுனாதன்.

  • தொடங்கியவர்

கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பார்க்க சங்கடமாக உள்ளது

யார்பெற்ற பிள்ளைகளோ???

ஆனால்......????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.