Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானாட மயிலாடுகிறது தமிழகம், தான் வாழப் போராடுகிறது தமிழீழம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள்ப் பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும். காலங் காலங்காலமாக கயமைத்தனத்துடன் அவர்கள் கழித்த கோலங்கள்தான் எத்தனை.

புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் உரையாற்ற வரும் வெளிநாட்டவர்கள், எம்மோடு உறவாடுதாகக் காட்டிக்கொள்ள, மரியாதைக்குச் சொல்லும் ஒருவார்த்தையை, மற்க்காது பாடமாக்கி வந்து மழலைத் தமிழில் சொல்லிவிட்டுச் செல்வார்கள். மாற்றான் நம் மொழியை உச்சரித்தானே எனும் மனம் மகிழ்வில் நாமும், கைகொட்டிக் களிப்படைவோம். ஆனால் மகிந்தவின் தமிழ்ப்பேச்சு, எந்தவொரு தமிழனுக்கும் தங்கம் தரும் தமிழ்ப்பேச்சல்ல. தமிழ் மக்களின் மனம் வெல்லப் போட்டியிடும் மகிந்தவின், மயக்கப் பேச்சு என்பது புரியும். வன்னிப்பெருநிலப்பரப்பெங்கு

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, இவர்கள்தான் அந்நியர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் எங்கள் அயலவர்கள்? அதுதான் நம் தொப்புள் கொடியுறவென்று sad.gif கொண்டாடுகின்றோமே, அவர்களுக்கு இதுவெதும் புரியவில்லையா? அல்லது புரிந்தும் புரியாத தோற்றமா? அல்லது வேறேதும் மயக்கமா?

உன் உறவுக்காக ஒரு குரல், ஒரேயொரு குரல் உரத்துக் கொடுக்கமாட்டாயா?

ஒரு மாதத்திற்கு முன் இந்த கருத்துக்கள் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால் அண்மைய நிலை வேறு. நடேசன் அவர்களே உத்தியோகபூர்வமான அறிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் காலத்திற்கு பொருத்தமற்ற இக் கருத்து அவசியமற்றது. இதை பார்க்கும் தமிழக உறவுகளை கோபப்படுத்தக் கூடியது.

தயவுசெய்து காலத்துக்கு பொருத்தமற்ற கருத்துக்களை இணைக்காதீர்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி காட்டாறு.

வரலாறு திரும்பும்.(history repeted) :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக உறவுகளும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை நோக்கி நிறைய கேள்விக்கணைகள் தொடுக்கமுடியும்

இதுவே முடிவல்ல. ஆதரவு மட்டுமே. அந்தத் தளத்தில் தமிழகம் நகர்வதை முடிவாக எவரும் கருதக் கூடாது. முன்பொருமுறை திருநாவுக்கரசு அவர்கள் " தமிழீழத்தின் வடிகாலாக தமிழகம் இருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த நிலைமை தமிழகத்தில் இன்னமும் உருவாகவில்லை. இந்த ஆதரவுத் தளம் மத்திய அரசால் எவ்வாறு எதிர் கொள்ளப்படப் போகிறது, அதற்கு தமிழகம் என்ன பதில் வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்தே மிகுதிக் கணிப்பை வெளிப்படுத்தலாம்.

போராட்டம் என்றும் எங்களுடையது. முடிவும் எங்களுடையது. ஆதரவுத்தளம் மட்டுமே தமிழகத்திலிருந்து எதிர்பார்க்கக் கூடிய ஒன்று. இன்றுவரை மத்திய அரசின் போக்கில் மாற்றமில்லை. சென்ற மாவீரர் தின உரையில் தேசியத் தலைவரின் கோரிக்கைக்கு இது கிடைக்கப்பெற்ற ஒரு சிறுபலனே. அதுவும் ஜெயலலிதா மௌனியாய் இருந்திருந்தால் இந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்காது. முதலில் ஜெயலலிதா தெரிந்தோ தெரியாமலோ எடுத்த இந்த நிலைப்பாட்டிற்கு அவருக்குத்தான் நன்றி கூறவேண்டும்.

என்ன உனக்கதற்கு நேரமில்லையா? நல்லது நடந்துசெல் உன் திசையில்..!

மானாட மயிலாட பாத்திரு, மகிழ்ந்திரு..!!

மரணத்துள் வாழப் பழகியவர் நாம்! வருவோம் மீண்டு வருவோம்!

அதுவரை நீ அமைதியாகப் பார்த்திரு!!

-புதுவை, இரத்தினத்துரை.

முதல்ல மற்றவனுக்கு கையை நீட்டுறதுக்கு முதல்ல எங்கடயள் என்னத்தை புடுங்குதுகள் என்று யோசிச்சால் நல்லது .மற்றவன் மானாட மயிலாட பாக்கிறது தெரியுது ஆனால் சில நாடகளில்ல எங்கட புலம்பெயர்ந்த சில விசுக் கோத்தங்கள் செய்யுற கூத்துக்கள் தெரியது இல்லை பாருங்கோ ! முதல்ல மற்றவனை குறை சொல்லறதை நிறுத்திற வழியைப் பாருங்கோ !

இறைவன்

ஜெயலலிதா ,தமிழகத்தில் அதிகரிக்கும் ஈழ விடுதலை ஆதரவு அலையை உணர்ந்ததால் .... வேறு வழியின்றி அவரும் ஈழமக்களுக்காக குரல் கொடுக்கத்தொடங்குகிறார்... என்றாலும் இது மிகவும் வரவேற்கத்தக்கது..

ஆனால் பூனைக்கு மணி கட்டியது கம்யூனிஸ்ட்கள் நடத்திய உண்ணாவிரதம் தான் என்பதை மறக்கக்கூடாது அதற்கு கிடைத்த மக்கள் ஆதரவே முக்கிய கட்சிகள் அனைத்தும் ஈழமக்கள் மக்கள் மேல் பார்வையை திருப்ப க்காரணம்..

ஈழமக்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த முக்கிய தருணத்தில் எந்த தமிழக கட்சிகளையும் ஒரு சார்பாக விமர்சிக்க வேண்டாம் அது இப்போதைய தேவை அல்ல....

அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் முடிந்தால் நன்றி சொல்லுங்கள் ... அது அவர்களுக்கு உற்சாகமளிக்கும்.

நம்பிக்கை இழக்க வேண்டாம்

ஈழமக்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த முக்கிய தருணத்தில் எந்த தமிழக கட்சிகளையும் ஒரு சார்பாக விமர்சிக்க வேண்டாம் அது இப்போதைய தேவை அல்ல....

அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் முடிந்தால் நன்றி சொல்லுங்கள் ... அது அவர்களுக்கு உற்சாகமளிக்கும்.

நம்பிக்கை இழக்க வேண்டாம்

வேலவன் ,

நல்ல கருத்து

நாம் அவர்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று பழமொழி உண்டு இதை போலவே தற்பொழுது தமிழகத்தில் தோன்றியுள்ள ஈழதமிழர் ஆதரவை நாம் நன்றாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும் அதனை உணர்ந்துகொள்ளுங்கள் இதை மழுங்கடிப்பதற்க்காக ஆயிரம் பேர் கங்கணம் கட்டி கொண்டிருக்கும் போது அவர்களை விமர்சித்து ஏன் வீணான மன கசப்புக்களை ஏற்படுத்தாமல் சும்மா அமைதியாக இருக்கலாமே

சும்மா நாற்க்காலியிருந்து கொண்டு அவர்களை விமர்சிக்க வேண்டாம் :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

வேலவன் உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்

தமிழகத் தலைவர்களின் இன்றைய எழுச்சிக்காக நாங்கள் நன்றி கூறவேண்டுமேதவிர கேள்விகள் கேட்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் இன்று சந்திக்கின்ற மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈழத்தமிழருக்காகக் குரல்கொடுக்கிறார்கள் என்றால் அது போற்றுதலுக்குரியது. அவர்கள் நிலையில் நாங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்துப் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என்ன செய்திருக்கின்றன? இனியாவது ஏதாவது செய்தால் நல்லது.

அது ஒருபக்கம் இருக்கட்டும். எங்கட புதுவையண்ணையில எனக்கு அளவுகடந்த மரியாதை இருக்கு. ஆனால், அடிக்கடி அவர் இப்பிடி திட்டுறதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியுதில்லை. முந்தியும் புலம்பெயர்ந்துபோன இளைஞர்களைத் திட்டோ திட்டெண்டு திட்டினவர். பிறகு அவர் புகழ்ந்ததைப் பாக்கும்போது சிரிப்பா இருந்தது. புதுவையண்ணை போன்ற ஒரு கவிஞனுடைய படைப்புக்கள் எல்லாக்காலத்துக்கும் பொருந்திவரவேணும். கொஞ்சம் நிதானம் இருந்தால் நல்லது எண்டுறது என்னுடைய கருத்து. :icon_mrgreen:

புதுவை என்றால் புதுச்சேரி மானிலமா அல்லது ஈழத்திலும் புதுவை உள்ளதா???

அது ஒருபக்கம் இருக்கட்டும். எங்கட புதுவையண்ணையில எனக்கு அளவுகடந்த மரியாதை இருக்கு. ஆனால், அடிக்கடி அவர் இப்பிடி திட்டுறதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியுதில்லை. முந்தியும் புலம்பெயர்ந்துபோன இளைஞர்களைத் திட்டோ திட்டெண்டு திட்டினவர். பிறகு அவர் புகழ்ந்ததைப் பாக்கும்போது சிரிப்பா இருந்தது. புதுவையண்ணை போன்ற ஒரு கவிஞனுடைய படைப்புக்கள் எல்லாக்காலத்துக்கும் பொருந்திவரவேணும். கொஞ்சம் நிதானம் இருந்தால் நல்லது எண்டுறது என்னுடைய கருத்து. :icon_mrgreen:

புதுவை என்றால் புதுச்சேரி மானிலமா அல்லது ஈழத்திலும் புதுவை உள்ளதா???

புதுச்சேரியல்ல வேலவன். எனக்குத் தெரிந்தவரை, யாழ்ப்பாணத்திலுள்ள புத்தூர் என்ற இடத்தில் பிறந்தவர் என்பதால் இரத்தினதுரை என்ற தன்னுடைய பெயருக்கு முன்னால் புதுவை என்று வைத்திருக்கிறார்.

Edited by nakkeran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

22.09.08 அன்று தமிழ் நாதத்தில் வெளிவந்த கவிதை இது.

25.09.08 அன்று நான் இணைத்திருந்தேன். http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry448397

நண்பர் forlov அடுத்த நாள் மானாட மயிலாட என்ற தலைப்பில் இணைத்திருந்தார் என நினைக்கின்றேன். ஆனால் இப்பொழுது அந்த இணைப்பை காணமுடியவில்லை.

நேற்று புஸ்பாவிஜியின் பெயரில் வெளியானது. இன்று forlov என்று இருக்கிறது. திகதியும் 25.09.08 என்று மாறியிருக்கின்றது. என்ன மாயமோ தெரியவில்லை? யாழ் கள நிர்வாகிகள் இரண்டு தலைப்பும் ஒன்றென்ற காரணத்தால் ஒன்றாக்கிவிட்டார்களோ?

இதில் புதுவை இரத்தினதுரையில் எந்த தவறும் இல்லை. அன்று இருந்த நிலைமையில் அந்த கருத்துக்கள் சரியாக இருந்தன.

இதில் இணைக்கப்பட்டுள்ள நாகனின் ஆய்வும் வெளியாகியது 25.09.08 இல் தான்.

ஆனால் புஸ்பாவிஜியின் நேற்றைய இணைப்பில் நாகனின் பெயர் வெளியிடப்படவில்லை. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=390 இணைப்பும் தரப்படவில்லை. எனவே நேற்றுப் பார்கும் போது முழுக்க முழுக்க புதுவை இரத்தினதுரையால் எழுதப்பட்டிருந்தது போலிருந்தது.

ஆக எதையும் அவதானிகாமல் நேற்று (ஏறத்தாழ 20 நாட்களுக்குப் பின்) மீள இணைத்தது தவறு. இரண்டாவது தவறு ஆய்வாளரின் பெயர், மூலம் குறிப்பிடப்படாமல் விட்டது.

தயவுசெய்து விடுதலை புலிகள் சம்பந்தமான இணைப்புக்களை இணைக்கும் போது பொறுப்போடு செயற்படுங்கள்.

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இனையவன்

ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, தமிழகம் முன்னேறிச் செல்வதில் மகிழ்ச்சி. ஆனால் முற்று முழுதாக தமிழர் பக்கமே நின்று, இந்தப் போரை நிறுத்தும்படி இந்திய அரசு வலியுறுத்துமா? அல்லது தமிழகத்தைத் திருப்திப் படுத்தும் தோரணையில் சர்வகட்சிக் கூட்டத்தினை தான் கூட்டி கண்துடைப்பு நிகழ்ச்சி நிரல்களை ஏற்படுத்துமா? வலி எங்களுடையது. நாங்களே அதனை அநுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து மீளவேண்டியதும் நாமே. தமிழக ஆதரவை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து மீழுதல் பொருந்தும். மத்திய அரசு சதி நோக்கமுடையதாகவே செயற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டானே ஒரு கேள்வி இறைவா .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.