Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் அவலம் தொடர்பில் தமிழகத்தில் பரபரப்பாக உலாவும் இறுவட்டு

Featured Replies

23.10.08 கவர் ஸ்டோரி

இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி.

வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரும்.

முப்பத்திரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய அக் குறுந்தகடு முடிவதற்கு முன்பாக கலைஞரின் முகத்தில் பலவித மாற்றங்கள். இடையிடையே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி இருந்திருக்கிறார் அவர். சி.டி. ஓடி முடிந்த பின்னர், கண்கள் குளமான நிலையில் நீண்டநேரம் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.

``இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?'' என்று புலம்பியிருக்கிறார் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், `இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டுவார கெடுவும், தவறினால் தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவும்.'

கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட முக்கியஸ்தர்களுக்குப் போய்ச் சேர இருக்கிறதாம். கலைஞரை மனம் குலைய வைத்த அந்தக் குறுந்தகட்டில் அப்படி என்னதான் இருந்தது என்று நாம் ஆராய முனைந்தோம். நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்த அந்த சி.டி.யை லேப் டாப்பில் சுழல விட்டோம்....

வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளில் ஓடிப்போய் விழுகிறார்கள்.

இப்போது குண்டுகள் வெடித்து வானில் செம்மண் புழுதிப்படலம். அங்கங்கே அலறலும் கதறலுமான சத்தங்கள். அந்தப் பகுதி முழுக்க பற்றி எரிந்தபடி இருக்க, வீடுகள் பல தரைமட்டமாகிக் கிடக்கின்றன. பதுங்கு குழி ஒன்றில் வெள்ளை முயல்கள் போல பதுங்கிக்கிடந்த பள்ளிச்சிறுமிகள் சிலர் வெளியே வருகிறார்கள். ஒரு சிறுமி பித்துப் பிடித்தவள் போல வெளியே வர மறுத்துக் கதறுகிறாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்து வருகிறார்கள் தோழிகள்.

இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்க் கிடக்க, `தண்ணீர், தண்ணீர்' என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் `ஓ'வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.

அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு `ஐயோ' என்று கதறுகிறார்கள்.

ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். `இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?' என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். ``இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே'' என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.

மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். `என்னடா உங்கள் போர் தர்மம்?' என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.

அதன்பின் வேறொரு காட்சி. தொடரும் சிங்கள குண்டுவீச்சுகளால் டிரக் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக கிளிநொச்சியை நோக்கி நகரும் தமிழ் மக்கள், வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்களும் `ஒரு பொருளாக` பயணிக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு நாய்கள் ஒரு வண்டியில் வருகின்றன. அதற்குக் கூட வசதியில்லாத மற்ற நாய்கள் எஜமான விசுவாசத்தில் வாகனங்களைப் பின்தொடர்ந்து ஓடிவருகின்றன.

வழியில் ஒருவரது டிரக் வண்டி (டயர்கள் பஞ்சர் போலும்) இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டு அப்படியே ரோட்டில் நிற்கிறது. அதில் வந்தவர்கள் பயணக் களைப்பால் மரநிழலில் படுத்துறங்க, அந்த சாலையில் அகதிகளின் வாகன வரிசை அணிஅணியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அடுத்த காட்சி. காடு, கழனி, சாலையோரங்களில் அகதி மக்கள் தொண்டுநிறுவனங்கள் தந்த தென்னை ஓலைக்கீற்றுகளால் குருவிக்கூடுகளைப் போல சிறுசிறு வீடுகளைக்கட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். அதற்கும் கூட வழியில்லாதவர்கள் துணிகளால் கூடாரம் அமைக்கிறார்கள். இடிந்து சிதறிக் கிடக்கும் வீடுகளிலிருந்து அட்டை, தகடுகளை எடுத்து வந்தும் `கூடு' கட்டுகிறார்கள். நேற்று வரை மாளிகை, மாடி வீடுகளில் தூங்கிய குழந்தைகள் இன்று மரங்களில் கட்டிய தூளிகளில் உறங்குகிறார்கள்.

இன்னொரு காட்சி. பன்னாட்டுத் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு கதறுகிறார்கள் தமிழ் அகதிகள். அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டதல்லவா சிங்கள அரசு? இனி அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை, பதற்றம் தமிழ் அகதிகளுக்கு.

``கவலைப்படாதீர்கள். நாங்கள் மீண்டும் வருவோம். உதவிகள் செய்வோம்'' என்கிறார் அந்த வெள்ளை அதிகாரி. அடுத்த காட்சி. உணவுப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் வரிசையாக நிற்கின்றன. தடுப்பணையைத் தாண்டி வரும் அதிகாரியைப் பார்த்து அகதிகள் ஓவென அலறியபடி கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பிறிதொரு காட்சியில் யூனிசெஃப் தொண்டு நிறுவன அலுவலக வாசலில் யாராவது வந்து உதவ மாட்டார்களா? என்று காத்துக் கிடக்கிறார்கள் அகதிகள். ஒருவேளை உணவுக்காவது வழி பிறக்காதா என்ற கவலை அவர்களுக்கு. அந்தக் காத்திருப்பில் காலம்தான் கரைகிறது. கடைசி வரை யாரும் வந்தபாடில்லை.

இந்தக் குறுந்தகட்டில் இடையிடையே அகதிகள் பேசுகிறார்கள். ``ராணுவம் குண்டுவீச்சு நடத்துற தெல்லாம் எங்கட மேல்தான். ஏற்கெனவே யாழில் இருந்து வன்னிக்கு அகதியா வந்து நின்ன நாங்கள் இப்போ கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போறோம். இலங்கை அரசை நம்பி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக முடியாது. போனால் சித்திரவதைப் படுவதோடு அங்கே போய் அடிமையாய்த்தான் நிற்கணும். அங்கே ஒட்டுக்குழு (கருணாபிரிவு) போராளிகள் எங்கட பிள்ளைகளை துப்பாக்கி முனையில் கடத்திப் போய்விடுவினம்'' என்கிறார்கள் அந்த மக்கள்.

வன்னிப்பகுதிக்குள் பள்ளிக்கூட வேன் ஒன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உபயம் சிங்கள விமானக் குண்டுவீச்சுதான். அந்த வேனுக்குள் உருக்குலைந்து கிடக்கும் பள்ளிச்சிறார்களை சிலர் அள்ளியெடுத்தபடி ஓடிவருகிறார்கள். இறந்து விட்ட சிறுமிகளைக் கீழே கிடத்திவிட்டு குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். யாருக்கும் கதறி அழக்கூட நேரமில்லை. இந்த அவலங்களைப் பார்க்கும் நம் கண்கள் குளமாகிப் போகின்றன. இதயத்தின் ஒரு மூலையில் `ஓ'வென்ற அழுகுரல் எதிரொலித்தபடியே இருக்கிறது.

காட்சிகள் இருளாகி மறைகின்றன. `உலகத் தமிழினமே, எங்களுக்காகவும் பேசுங்களேன்' என்ற டைட்டில் விழுந்து நம்மை உலுக்கிப் போடுகிறது.

``எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக் கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. `இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே'' என்ற குரல் பதிவுகள் நம் நெற்றிப் பொட்டில் சம்மட்டியாக விழுகின்றன.

கடைசியாக முடியும்போது, `எம் தமிழினமே! தான் ஆடாவிட்டாலும், தம் சதை ஆட...' என்ற டைட்டிலோடு நிலைகுத்தி நின்று முடிகிறது. அலை அலையாய் அதிர்ச்சிகள் நம் நெஞ்சுக்குள் மோதிய படி இருக்கிறது நீண்ட நேரமாய்..

தமிழக முதல்வர் கலைஞர், இந்த வயதிலும் இப்படியொரு காட்சியைப் பார்ப்பதற்கு என்ன மன உறுதியைப் பெற்றிருந்தாரோ? ஸீ

ஸீ பா. ஏகலைவன்

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருப்பவர் கேனல் பானு. புலிகளுக்காகப் பல களங்களைக் கண்டு, வெற்றிகளைக் குவித்தவர்.

இலங்கை ராணுவம், புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி-யைப் பிடிக்க இப்போது இடையூறாக நின்று கொண்டிருப்பவர் தளபதி பானு. ஈழப்போர் முனையில் இருந்த அவரை மிகுந்த சிரமத்திற்குப் பின் நாம் பேட்டி கண்டோம். தமிழக இதழ் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவே.

இலங்கைப் போரில் புலிகள் பின்-வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையா?

``நாங்கள் கூறினால் நம்பவா போகிறீர்கள்? பன்னாட்டு ஊடகவிய-லாளர்கள் எல்லாம் இங்கே வந்து பார்க்கட்டுமே. பார்த்தால் உண்மை தெரியும். இன்று வரை இலங்கை ராணுவம் எங்கள்மேல் போர் தொடுக்கவில்லை. அப்பாவி தமிழ்மக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்துகிறார்கள். சில இடங்களில் நாங்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்குகிறோம். அவர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். இங்கே பாரிய (பெரிய) யுத்தம் நடப்பதாகக் கூறும் அவர்கள் வரைபடத்தை வைத்து அதை உறுதி செய்யட்டுமே.!''

தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு இலங்கை அரசு அழைக்கிறதே? அதை தமிழ் மக்கள் ஏற்கிறார்களா?

``அப்படிப் போகத் துணியாமல்தான் அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்தை நம்பிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களா நம் மக்கள்? அங்கே ராணுவச் சித்திரவதை தொடர்கிறது. ஒட்டுப்படைகள் (ராணுவத்துக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்க்குழுக்கள்) கையில் துவக்குகளோடு ஆள் கடத்தல், அழித்தொழிப்பு வேலைகளை ராணுவத்துடன் சேர்ந்து செய்கிறார்கள்.

அதனால்தான் வீடின்றி, உணவு, மருந்து கிடைக்காத நிலையிலும் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கி நகர்கிறார்கள். அந்த மூன்றே முக்கால் லட்சம் மக்களும் யார்? 22 ஆயிரம் போராளிகளைப் பலி கொடுத்துள்ள குடும்பத்தினர்தானே? அதில் இருப்பது என் தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனன் தானே? அவர்கள் எப்படி அறுத்துக்கொண்டு போவார்கள்? அதனால்தான் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் இங்கேயே நிற்கிறார்கள்.''

`பிரபாகரன் சரணடைய வேண்டும். தன்னையும் இயக்கத்தவர்களையும் அவர் காப்பாற்றிக் கொள்ள இதுதான் கடைசி வாய்ப்பு' என்று மகிந்த ராஜபக்சே பேசியிருக்கிறாரே?

``இதைக் கேட்டு நாங்களும், எங்கட மக்களும் மட்டுமல்ல. சிங்கள ராணுவமே கூட சிரித்துக் கதைக்கிறது. ஒவ்வொரு அதிபருமே இப்படித்தான். பதவிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் பாரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்கள். அடிவாங்கி ஓடுவார்கள். தேர்தல் நெருங்கினால் `சமரசப் பேச்சு வார்த்தை, சமரசத் தீர்வு' என்பார்கள். தேர்தலில் வென்றால் மீண்டும் மூன்றாண்டுகளுக்கு சண்டை பிடிப்பார்கள். வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே, அதற்காகத்தான் `இதோ நெருங்கிட்டோம். பிடிச்சிட்டோம். சரணடைங்க' என்கிறார்கள்.''

புலிகளை முற்றாக அழித்தொழிக்காமல் ஓயப் போவதில்லை. புலிகளின் நாட்கள் எண்ணப்-படுகின்றன என்கிறார்களே சிலர்?

``நாங்களே நினைத்தாலும் இனி இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. `சரி போதும்' என்று நாங்களே முடிவெடுத்தாலும் இனிமேல் இந்த இயக்கம் இலக்கை அடையாமல் ஓயாது. கரும்புலிகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடுமே தவிர குறையாது. எமது இயக்கத்தின் பலம் ஆயுதமல்ல. மனஉறுதியும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள எங்கள் தமிழ் உறவுகளும்தான். அதனால் ராஜபக்சே அப்படிக் கதைக்கிறார் என்றால், அவர் கடைசிவரை கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.''

அமெரிக்கா, சீனா, கொரியா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவில் இலங்கை அரசு ஆயுதம் வாங்கிக் குவிக்கிறதே? அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் ஆயுத பலம் இருக்கிறதா?

(சிரிக்கிறார்) ``அதுபற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்கள்தான் பிரேமதாசா காலத்திலிருந்தே வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார்களே? அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கி பாதுகாப்பாகக் கொண்டு வந்து கடைசியில் எங்கட காலடியில் போட்டுவிட்டுத்தானே ஓடுவார்கள்? எங்களுக்கு எப்போதும் ஆயுதம் வாங்க வேண்டிய அவசியம் வந்ததே இல்லை. அவர்களது ஆயுதத்தைப் பிடுங்கித்தான் அவர்களை அடிக்கிறோம்.

ஆனையிறவு சண்டையில் அவர்களிடம் இருந்து 152 மி.மீ. ஆட்லரி பீரங்கியைப் பிடுங்கினோம். பிறகு 122 மி.மீ. பீரங்கி. அவற்றை வைத்துத்தான் அவர்களை அடிக்கிறோம். ஒவ்வொரு பீரங்கிக்கும் இதுவரை இரண்டாயிரம் பேர்வரை மடிந்திருப்பான்கள். இப்படிப் பறித்த ஆயுதம் நிறைய இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்.''

தடுப்பு நடவடிக்கை முடிந்து எப்போது தான் நீங்கள் சண்டை பிடிப்பீர்கள்?

``சிங்கள ராணுவத்தின் கை ஓங்கி விட்டது என்பது பொய்ப்பிரசாரம். நாங்கள் தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கட தரப்பில் ஆயிரம் குண்டுகள் செலவானால் அவர்களிடமிருந்த பத்தாயிரம் குண்டுகளை நாங்கள் பறிக்க வேண்டும்.

இப்போது மழைக்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். பலத்த மழையில் அவர்களை அடித்தால்தான் சரிப்படும். தப்பி ஓடமுடியாமல் தண்ணீரில் விழுந்து அவர்கள் சாக வேணும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். எவ்வளவு மழை வெள்ளம் எண்டாலும் நாங்கள் களத்தில் நிற்போம். எங்கள் பயிற்சி அப்படி.''

கடந்த ஒரு மாதத்தில் `கொத்துக் கொத்தாகப் புலிகள் பலி' என்ற செய்திகள்....?

``உண்மை ராஜபக்சேவுக்கே தெரியும். எங்கட தரப்பு வீரச்சாவுகளை நாங்கள் மறைக்க மாட்டோம். அவர்கள் கூறும் கணக்குப்படி பார்த்தால் எங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. ம். வேடிக்கைதான்.... ஸீ

Kumudam.com

தமிழ்த்தேசியத்தின் தலைவனை மட்டுமல்ல, தமிழினத்தின் தலைவனின் இராஜதந்திரங்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

காலம், நேரம் பார்த்து காய்களை நகர்த்தி இறுதி வேட்டு விட்ட கலைஞரின் இராஜதந்திரம். ஈழ விடுதலையை முளையிலேயே எம்.ஜி.ஆர் எனும் ஒப்பற்ற தலைவன் உரமிட்டு வளர்க உதவி புரிந்தாரோ, இன்று விருட்சமாகி கனிய முற்படுகையில் கலைஞரெனும் காவலன் துணையாகிறான்.

தூரம் அதிகமில்லை

தயவு செய்து யாராவது அந்த இறுவட்டை செயலலிதாவிற்கு அனுப்பி வைப்பீர்களா. அத்துடன் ஒரு பிரதி வைகோவுக்கும்.

ஜானா

தூரம் அதிக இல்லை உண்மைதான் நெல்லியான்..

ஈழத்தமிழரை மூடிய இருள் இப்படியான குறுந்தகடுகள் ஆதாரங்கள் மூலம் தான் தீரும்.தீரப்போகிறது.. நான் பல முறை இப்படியான முறையில் எமது உண்மைகளை வெளிக்கொண்டு வந்து வெளி உலகிற்கு கொண்டு செல்லுங்கள் என பல முறை இக்களத்தில் கூறியுள்ளேன். இப்போது தான் சரியான முறையில் நடந்துள்ளது . இப்படியான குருந்தட்டுகள்

மேலும் பல ஆங்கில மொழிபெயர்ப்புடன் அல்லது எழுத்துக்கள் பதியப்பட்டதாக உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். உடனுக்குடன் நிலைமைகளுடன் முன்னைய நிலைமைகளும்.

எமது இனவிடுதலை அதிக தூரமில்லை...சிங்களத்தின் முகமூடிகள் கிழியட்டும்..

ஈழத்தின் கதவை திறக்கும் சாவி தமிழகத்தில்தான் இருப்பதாக எங்கோ வாசித்த ஞாபகம்....

"என்ன தான் நடக்கிறது இலங்கையில்?" - கண்முன் காட்டிய சி.டி., கண் கலங்கிய கலைஞர்

pg1.jpg

இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி.

வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரும்.

முப்பத்திரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய அக் குறுந்தகடு முடிவதற்கு முன்பாக கலைஞரின் முகத்தில் பலவித மாற்றங்கள். இடையிடையே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி இருந்திருக்கிறார் அவர். சி.டி. ஓடி முடிந்த பின்னர், கண்கள் குளமான நிலையில் நீண்டநேரம் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.

``இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?'' என்று புலம்பியிருக்கிறார் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், `இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டுவார கெடுவும், தவறினால் தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவும்.'

கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட முக்கியஸ்தர்களுக்குப் போய்ச் சேர இருக்கிறதாம். கலைஞரை மனம் குலைய வைத்த அந்தக் குறுந்தகட்டில் அப்படி என்னதான் இருந்தது என்று நாம் ஆராய முனைந்தோம். நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்த அந்த சி.டி.யை லேப் டாப்பில் சுழல விட்டோம்....

வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளில் ஓடிப்போய் விழுகிறார்கள்.

இப்போது குண்டுகள் வெடித்து வானில் செம்மண் புழுதிப்படலம். அங்கங்கே அலறலும் கதறலுமான சத்தங்கள். அந்தப் பகுதி முழுக்க பற்றி எரிந்தபடி இருக்க, வீடுகள் பல தரைமட்டமாகிக் கிடக்கின்றன. பதுங்கு குழி ஒன்றில் வெள்ளை முயல்கள் போல பதுங்கிக்கிடந்த பள்ளிச்சிறுமிகள் சிலர் வெளியே வருகிறார்கள். ஒரு சிறுமி பித்துப் பிடித்தவள் போல வெளியே வர மறுத்துக் கதறுகிறாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்து வருகிறார்கள் தோழிகள்.

இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்‌க் கிடக்க, `தண்ணீர், தண்ணீர்' என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் `ஓ'வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.

அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு `ஐயோ' என்று கதறுகிறார்கள்.

ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். `இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?' என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். ``இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே'' என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.

மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். `என்னடா உங்கள் போர் தர்மம்?' என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.

அதன்பின் வேறொரு காட்சி. தொடரும் சிங்கள குண்டுவீச்சுகளால் டிரக் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக கிளிநொச்சியை நோக்கி நகரும் தமிழ் மக்கள், வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்களும் `ஒரு பொருளாக` பயணிக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு நாய்கள் ஒரு வண்டியில் வருகின்றன. அதற்குக் கூட வசதியில்லாத மற்ற நாய்கள் எஜமான விசுவாசத்தில் வாகனங்களைப் பின்தொடர்ந்து ஓடிவருகின்றன.

வழியில் ஒருவரது டிரக் வண்டி (டயர்கள் பஞ்சர் போலும்) இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டு அப்படியே ரோட்டில் நிற்கிறது. அதில் வந்தவர்கள் பயணக் களைப்பால் மரநிழலில் படுத்துறங்க, அந்த சாலையில் அகதிகளின் வாகன வரிசை அணிஅணியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அடுத்த காட்சி. காடு, கழனி, சாலையோரங்களில் அகதி மக்கள் தொண்டுநிறுவனங்கள் தந்த தென்னை ஓலைக்கீற்றுகளால் குருவிக்கூடுகளைப் போல சிறுசிறு வீடுகளைக் கட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். அதற்கும் கூட வழியில்லாதவர்கள் துணிகளால் கூடாரம் அமைக்கிறார்கள். இடிந்து சிதறிக் கிடக்கும் வீடுகளிலிருந்து அட்டை, தகடுகளை எடுத்து வந்தும் `கூடு' கட்டுகிறார்கள். நேற்று வரை மாளிகை, மாடி வீடுகளில் தூங்கிய குழந்தைகள் இன்று மரங்களில் கட்டிய தூளிகளில் உறங்குகிறார்கள்.

இன்னொரு காட்சி. பன்னாட்டுத் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு கதறுகிறார்கள் தமிழ் அகதிகள். அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டதல்லவா சிங்கள அரசு? இனி அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை, பதற்றம் தமிழ் அகதிகளுக்கு.

``கவலைப்படாதீர்கள். நாங்கள் மீண்டும் வருவோம். உதவிகள் செய்வோம்'' என்கிறார் அந்த வெள்ளை அதிகாரி. அடுத்த காட்சி. உணவுப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் வரிசையாக நிற்கின்றன. தடுப்பணையைத் தாண்டி வரும் அதிகாரியைப் பார்த்து அகதிகள் ஓவென அலறியபடி கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பிறிதொரு காட்சியில் யூனிசெஃப் தொண்டு நிறுவன அலுவலக வாசலில் யாராவது வந்து உதவ மாட்டார்களா? என்று காத்துக் கிடக்கிறார்கள் அகதிகள். ஒருவேளை உணவுக்காவது வழி பிறக்காதா என்ற கவலை அவர்களுக்கு. அந்தக் காத்திருப்பில் காலம்தான் கரைகிறது. கடைசி வரை யாரும் வந்தபாடில்லை.

இந்தக் குறுந்தகட்டில் இடையிடையே அகதிகள் பேசுகிறார்கள். ``ராணுவம் குண்டுவீச்சு நடத்துற தெல்லாம் எங்கட மேல்தான். ஏற்கெனவே யாழில் இருந்து வன்னிக்கு அகதியா வந்து நின்ன நாங்கள் இப்போ கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போறோம். இலங்கை அரசை நம்பி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக முடியாது. போனால் சித்திரவதைப் படுவதோடு அங்கே போய் அடிமையாய்த்தான் நிற்கணும். அங்கே ஒட்டுக்குழு (கருணாபிரிவு) போராளிகள் எங்கட பிள்ளைகளை துப்பாக்கி முனையில் கடத்திப் போய்விடுவினம்'' என்கிறார்கள் அந்த மக்கள்.

வன்னிப்பகுதிக்குள் பள்ளிக்கூட வேன் ஒன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உபயம் சிங்கள விமானக் குண்டுவீச்சுதான். அந்த வேனுக்குள் உருக்குலைந்து கிடக்கும் பள்ளிச்சிறார்களை சிலர் அள்ளியெடுத்தபடி ஓடிவருகிறார்கள். இறந்து விட்ட சிறுமிகளைக் கீழே கிடத்திவிட்டு குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். யாருக்கும் கதறி அழக்கூட நேரமில்லை. இந்த அவலங்களைப் பார்க்கும் நம் கண்கள் குளமாகிப் போகின்றன. இதயத்தின் ஒரு மூலையில் `ஓ'வென்ற அழுகுரல் எதிரொலித்தபடியே இருக்கிறது.

காட்சிகள் இருளாகி மறைகின்றன. `உலகத் தமிழினமே, எங்களுக்காகவும் பேசுங்களேன்' என்ற டைட்டில் விழுந்து நம்மை உலுக்கிப் போடுகிறது.

``எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக் கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. `இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே'' என்ற குரல் பதிவுகள் நம் நெற்றிப் பொட்டில் சம்மட்டியாக விழுகின்றன.

கடைசியாக முடியும்போது, `எம் தமிழினமே! தான் ஆடாவிட்டாலும், தம் சதை ஆட...' என்ற டைட்டிலோடு நிலைகுத்தி நின்று முடிகிறது. அலை அலையாய் அதிர்ச்சிகள் நம் நெஞ்சுக்குள் மோதிய படி இருக்கிறது நீண்ட நேரமாய்..

தமிழக முதல்வர் கலைஞர், இந்த வயதிலும் இப்படியொரு காட்சியைப் பார்ப்பதற்கு என்ன மன உறுதியைப் பெற்றிருந்தாரோ?

பா. ஏகலைவன்

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருப்பவர் கேனல் பானு. புலிகளுக்காகப் பல களங்களைக் கண்டு, வெற்றிகளைக் குவித்தவர்.

pg1b.jpg

இலங்கை ராணுவம், புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி-யைப் பிடிக்க இப்போது இடையூறாக நின்று கொண்டிருப்பவர் தளபதி பானு. ஈழப்போர் முனையில் இருந்த அவரை மிகுந்த சிரமத்திற்குப் பின் நாம் பேட்டி கண்டோம். தமிழக இதழ் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவே.

இலங்கைப் போரில் புலிகள் பின்-வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையா?

``நாங்கள் கூறினால் நம்பவா போகிறீர்கள்? பன்னாட்டு ஊடகவிய-லாளர்கள் எல்லாம் இங்கே வந்து பார்க்கட்டுமே. பார்த்தால் உண்மை தெரியும். இன்று வரை இலங்கை ராணுவம் எங்கள்மேல் போர் தொடுக்கவில்லை. அப்பாவி தமிழ்மக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்துகிறார்கள். சில இடங்களில் நாங்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்குகிறோம். அவர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். இங்கே பாரிய (பெரிய) யுத்தம் நடப்பதாகக் கூறும் அவர்கள் வரைபடத்தை வைத்து அதை உறுதி செய்யட்டுமே.!''

தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு இலங்கை அரசு அழைக்கிறதே? அதை தமிழ் மக்கள் ஏற்கிறார்களா?

``அப்படிப் போகத் துணியாமல்தான் அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்தை நம்பிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களா நம் மக்கள்? அங்கே ராணுவச் சித்திரவதை தொடர்கிறது. ஒட்டுப்படைகள் (ராணுவத்துக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்க்குழுக்கள்) கையில் துவக்குகளோடு ஆள் கடத்தல், அழித்தொழிப்பு வேலைகளை ராணுவத்துடன் சேர்ந்து செய்கிறார்கள்.

அதனால்தான் வீடின்றி, உணவு, மருந்து கிடைக்காத நிலையிலும் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கி நகர்கிறார்கள். அந்த மூன்றே முக்கால் லட்சம் மக்களும் யார்? 22 ஆயிரம் போராளிகளைப் பலி கொடுத்துள்ள குடும்பத்தினர்தானே? அதில் இருப்பது என் தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனன் தானே? அவர்கள் எப்படி அறுத்துக்கொண்டு போவார்கள்? அதனால்தான் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் இங்கேயே நிற்கிறார்கள்.''

`பிரபாகரன் சரணடைய வேண்டும். தன்னையும் இயக்கத்தவர்களையும் அவர் காப்பாற்றிக் கொள்ள இதுதான் கடைசி வாய்ப்பு' என்று மகிந்த ராஜபக்சே பேசியிருக்கிறாரே?

``இதைக் கேட்டு நாங்களும், எங்கட மக்களும் மட்டுமல்ல. சிங்கள ராணுவமே கூட சிரித்துக் கதைக்கிறது. ஒவ்வொரு அதிபருமே இப்படித்தான். பதவிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் பாரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்கள். அடிவாங்கி ஓடுவார்கள். தேர்தல் நெருங்கினால் `சமரசப் பேச்சு வார்த்தை, சமரசத் தீர்வு' என்பார்கள். தேர்தலில் வென்றால் மீண்டும் மூன்றாண்டுகளுக்கு சண்டை பிடிப்பார்கள். வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே, அதற்காகத்தான் `இதோ நெருங்கிட்டோம். பிடிச்சிட்டோம். சரணடைங்க' என்கிறார்கள்.''

புலிகளை முற்றாக அழித்தொழிக்காமல் ஓயப் போவதில்லை. புலிகளின் நாட்கள் எண்ணப்-படுகின்றன என்கிறார்களே சிலர்?

``நாங்களே நினைத்தாலும் இனி இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. `சரி போதும்' என்று நாங்களே முடிவெடுத்தாலும் இனிமேல் இந்த இயக்கம் இலக்கை அடையாமல் ஓயாது. கரும்புலிகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடுமே தவிர குறையாது. எமது இயக்கத்தின் பலம் ஆயுதமல்ல. மனஉறுதியும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள எங்கள் தமிழ் உறவுகளும்தான். அதனால் ராஜபக்சே அப்படிக் கதைக்கிறார் என்றால், அவர் கடைசிவரை கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.''

அமெரிக்கா, சீனா, கொரியா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவில் இலங்கை அரசு ஆயுதம் வாங்கிக் குவிக்கிறதே? அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் ஆயுத பலம் இருக்கிறதா?

(சிரிக்கிறார்) ``அதுபற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்கள்தான் பிரேமதாசா காலத்திலிருந்தே வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார்களே? அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கி பாதுகாப்பாகக் கொண்டு வந்து கடைசியில் எங்கட காலடியில் போட்டுவிட்டுத்தானே ஓடுவார்கள்? எங்களுக்கு எப்போதும் ஆயுதம் வாங்க வேண்டிய அவசியம் வந்ததே இல்லை. அவர்களது ஆயுதத்தைப் பிடுங்கித்தான் அவர்களை அடிக்கிறோம்.

ஆனையிறவு சண்டையில் அவர்களிடம் இருந்து 152 மி.மீ. ஆட்லரி பீரங்கியைப் பிடுங்கினோம். பிறகு 122 மி.மீ. பீரங்கி. அவற்றை வைத்துத்தான் அவர்களை அடிக்கிறோம். ஒவ்வொரு பீரங்கிக்கும் இதுவரை இரண்டாயிரம் பேர்வரை மடிந்திருப்பான்கள். இப்படிப் பறித்த ஆயுதம் நிறைய இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்.''

தடுப்பு நடவடிக்கை முடிந்து எப்போது தான் நீங்கள் சண்டை பிடிப்பீர்கள்?

``சிங்கள ராணுவத்தின் கை ஓங்கி விட்டது என்பது பொய்ப்பிரசாரம். நாங்கள் தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கட தரப்பில் ஆயிரம் குண்டுகள் செலவானால் அவர்களிடமிருந்த பத்தாயிரம் குண்டுகளை நாங்கள் பறிக்க வேண்டும்.

இப்போது மழைக்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். பலத்த மழையில் அவர்களை அடித்தால்தான் சரிப்படும். தப்பி ஓடமுடியாமல் தண்ணீரில் விழுந்து அவர்கள் சாக வேணும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். எவ்வளவு மழை வெள்ளம் எண்டாலும் நாங்கள் களத்தில் நிற்போம். எங்கள் பயிற்சி அப்படி.''

கடந்த ஒரு மாதத்தில் `கொத்துக் கொத்தாகப் புலிகள் பலி' என்ற செய்திகள்....?

``உண்மை ராஜபக்சேவுக்கே தெரியும். எங்கட தரப்பு வீரச்சாவுகளை நாங்கள் மறைக்க மாட்டோம். அவர்கள் கூறும் கணக்குப்படி பார்த்தால் எங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. ம். வேடிக்கைதான்....

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், Oct 19, 2008

Edited by Tamilmagan

ஈழத் தமிழர்கள் படும் துன்ப துயரங்களை வெளிக்கொணரும் இறுவட்டு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக உலாவி வருகின்றது.

தொடர்ந்து வாசிக்க

மக்கள் தொலைக்காட்சி செய்தியில் நேற்றுமுந்தினம் தமிழீழத்தில் தமிழர்களின் அவல நிலை, அதிர்ச்சியூட்டும் காட்சிகள் என்று அந்த சி.டியில் இருந்து சில காட்சிகளை காட்டினார்கள்

விகடன் இணையதளத்தில் அந்த குறுவட்டு வீடியோவை இணைத்துள்ளனர்!!! :(

மிகவும் உணர்ச்சிபூர்வமாக தமிழர்கள் பின்னூட்டங்கள் இட்டுள்ளனர் :icon_mrgreen:

என்னால் உறங்கமுடியவில்லை :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காணொளியை பார்த்து கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது என்ன செய்வது

அழுத்துக http://puspaviji.net/page162.html

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நடந்த ஒரு குண்டுவீச்சு தொடர்பான செய்தி:

தயவு செய்து யாராவது அந்த இறுவட்டை செயலலிதாவிற்கு அனுப்பி வைப்பீர்களா. அத்துடன் ஒரு பிரதி வைகோவுக்கும்.

ஜானா

ஈழத்தமிழர் படும் இன்னல்கள் தொடர்பில் கலைஞர் ஜெயலலிதா ஆகியோருக்கே காணொளி இறுவெட்டுக்கள் தேவை. எப்போதுமே ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டுள்ள வைகோ போன்றவர்கள் அந்த மக்களிற்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுகின்ற போது துடிக்கின்ற அவர்களிற்கு காணொளியைக் காட்டித்தான் ஈழத்தமிழரின் அவலத்தைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூரம் அதிக இல்லை உண்மைதான் நெல்லியான்..

ஈழத்தமிழரை மூடிய இருள் இப்படியான குறுந்தகடுகள் ஆதாரங்கள் மூலம் தான் தீரும்.தீரப்போகிறது.. நான் பல முறை இப்படியான முறையில் எமது உண்மைகளை வெளிக்கொண்டு வந்து வெளி உலகிற்கு கொண்டு செல்லுங்கள் என பல முறை இக்களத்தில் கூறியுள்ளேன். இப்போது தான் சரியான முறையில் நடந்துள்ளது . இப்படியான குருந்தட்டுகள்

மேலும் பல ஆங்கில மொழிபெயர்ப்புடன் அல்லது எழுத்துக்கள் பதியப்பட்டதாக உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். உடனுக்குடன் நிலைமைகளுடன் முன்னைய நிலைமைகளும்.

எமது இனவிடுதலை அதிக தூரமில்லை...சிங்களத்தின் முகமூடிகள் கிழியட்டும்..

<<<

அண்ணா,

அந்தப் பணியைத்தான் நான் தற்போது செய்துகொண்டிருக்கின்றேன் ஆனால் நான் அனுப்பி வைத்தது'ஆணிவேர்' என்கின்ற படம் தான்..எங்கள் மக்களின் அவல நிலையை அப்படியே வெளிக்கொணரும் குறுந்தட்டுகளை எங்கு பெறலாம்? இல்லை இணையத்தில் வெளியிடுவதென்றால் அதை எப்படிச் செய்யலாம்? தயவு செய்து அறியத் தாருங்கோவன்..

மிக்க நன்றி..

இந்த காணொளியை பார்த்து கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது என்ன செய்வது

அழுத்துக http://puspaviji.net/page162.html

புஷ்பாவிஜி அவர்களே,

இந்த சுட்டி வேலை செய்யவில்லையே:....!!

தமிழினமே எங்களுக்காகவும் பேசுங்களேன்- வீடியோ

எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக் கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. `இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே…

நன்றி : விகடன்

Edited by Tamilmagan

தமிழகத்த்து உறவுகள் இவ்வளவு காலத்த மௌனத்தையும் நீறு புத்த நெருப்பா வெளியிட்டு செய்கின்ற வேலைகளிற்கு நாங்கள் எவ்வளவு நன்றி சொல்லக்க கடமைமைப்பட்;டிருக்கின்றோம் ! தொடர்க பணி ! எம் மக்கள் இன்னல்கள் நீங்கி ! தமிழீழம் வென்றிட !

பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே - வீடியோ

இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்‌க் கிடக்க, ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் ‘ஓ’ வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.

அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ‘ஐயோ’ என்று கதறுகிறார்கள்.

ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். ‘இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?’ என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். “இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே” என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.

மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். ‘என்னடா உங்கள் போர் தர்மம்?’ என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.

நன்றி - குமுதம்

Edited by Tamilmagan

மிகவும் நல்ல ஒளிப்பதிவு.

Video http://kelvi.net/?p=636

ஈழத் தமிழர் அவலம் தொடர்பில் தமிழகத்தில் பரபரப்பாக உலாவும் இறுவட்டு

[சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 08:07 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]

ஈழத் தமிழர்கள் படும் துன்ப துயரங்களை வெளிக்கொணரும் இறுவட்டு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக உலாவி வருகின்றது.

இது தொடர்பில் தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த கட்டுரை:

இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி.

வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. 'சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13 ஆம் நாள் முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்த நாள் (14 ஆம் நாள்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்து கட்சிக்கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரும்.

முப்பத்திரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய அக் குறுந்தகடு முடிவதற்கு முன்பாக கலைஞரின் முகத்தில் பலவித மாற்றங்கள். இடையிடையே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி இருந்திருக்கிறார் அவர். சி.டி. ஓடி முடிந்த பின்னர், கண்கள் குளமான நிலையில் நீண்டநேரம் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.

"இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?" என்று புலம்பியிருக்கிறார் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் அனைத்து கட்சிக்கூட்டத்தில், 'இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டுவார கெடுவும், தவறினால் தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவும்.'

கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட முக்கியஸ்தர்களுக்குப் போய்ச் சேர இருக்கிறதாம். கலைஞரை மனம் குலைய வைத்த அந்தக் குறுந்தகட்டில் அப்படி என்னதான் இருந்தது என்று நாம் ஆராய முனைந்தோம். நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்த அந்த சி.டி.யை லேப் டாப்பில் சுழல விட்டோம்.

வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் 'கிபீர்' போர் விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளில் ஓடிப்போய் விழுகிறார்கள்.

இப்போது குண்டுகள் வெடித்து வானில் செம்மண் புழுதிப்படலம். அங்கங்கே அலறலும் கதறலுமான சத்தங்கள். அந்தப் பகுதி முழுக்க பற்றி எரிந்தபடி இருக்க, வீடுகள் பல தரைமட்டமாகிக் கிடக்கின்றன. பதுங்கு குழி ஒன்றில் வெள்ளை முயல்கள் போல பதுங்கிக்கிடந்த பள்ளிச்சிறுமிகள் சிலர் வெளியே வருகிறார்கள். ஒரு சிறுமி பித்துப் பிடித்தவள் போல வெளியே வர மறுத்துக் கதறுகிறாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்து வருகிறார்கள் தோழிகள்.

இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்‌க் கிடக்க, 'தண்ணீர், தண்ணீர்' என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் 'ஓ' வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.

அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு 'ஐயோ' என்று கதறுகிறார்கள்.

ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். 'இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?' என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். "இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே" என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.

மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். 'என்னடா உங்கள் போர் தர்மம்?' என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.

அதன்பின் வேறொரு காட்சி. தொடரும் சிங்கள குண்டுவீச்சுகளால் டிரக் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக கிளிநொச்சியை நோக்கி நகரும் தமிழ் மக்கள், வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்களும் 'ஒரு பொருளாக' பயணிக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு நாய்கள் ஒரு வண்டியில் வருகின்றன. அதற்குக் கூட வசதியில்லாத மற்ற நாய்கள் எஜமான விசுவாசத்தில் வாகனங்களைப் பின்தொடர்ந்து ஓடிவருகின்றன.

வழியில் ஒருவரது டிரக் வண்டி (டயர்கள் பஞ்சர் போலும்) இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டு அப்படியே ரோட்டில் நிற்கிறது. அதில் வந்தவர்கள் பயணக் களைப்பால் மரநிழலில் படுத்துறங்க, அந்த சாலையில் அகதிகளின் வாகன வரிசை அணி அணியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அடுத்த காட்சி. காடு, கழனி, சாலையோரங்களில் அகதி மக்கள் தொண்டு நிறுவனங்கள் தந்த தென்னை ஓலைக்கீற்றுகளால் குருவிக்கூடுகளைப் போல சிறுசிறு வீடுகளைக் கட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். அதற்கும் கூட வழியில்லாதவர்கள் துணிகளால் கூடாரம் அமைக்கிறார்கள். இடிந்து சிதறிக் கிடக்கும் வீடுகளிலிருந்து அட்டை, தகடுகளை எடுத்து வந்தும் 'கூடு' கட்டுகிறார்கள். நேற்று வரை மாளிகை, மாடி வீடுகளில் தூங்கிய குழந்தைகள் இன்று மரங்களில் கட்டிய தூளிகளில் உறங்குகிறார்கள்.

இன்னொரு காட்சி. பன்னாட்டுத் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு கதறுகிறார்கள் தமிழ் அகதிகள். அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டதல்லவா சிங்கள அரசு? இனி அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை, பதற்றம் தமிழ் அகதிகளுக்கு.

"கவலைப்படாதீர்கள். நாங்கள் மீண்டும் வருவோம். உதவிகள் செய்வோம்" என்கிறார் அந்த வெள்ளை அதிகாரி. அடுத்த காட்சி. உணவுப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் வரிசையாக நிற்கின்றன. தடுப்பணையைத் தாண்டி வரும் அதிகாரியைப் பார்த்து அகதிகள் ஓவென அலறியபடி கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பிறிதொரு காட்சியில் யூனிசெஃப் தொண்டு நிறுவன அலுவலக வாசலில் யாராவது வந்து உதவ மாட்டார்களா? என்று காத்துக் கிடக்கிறார்கள் அகதிகள். ஒருவேளை உணவுக்காவது வழி பிறக்காதா என்ற கவலை அவர்களுக்கு. அந்தக் காத்திருப்பில் காலம்தான் கரைகிறது. கடைசி வரை யாரும் வந்தபாடில்லை.

இந்தக் குறுந்தகட்டில் இடையிடையே அகதிகள் பேசுகிறார்கள். "ராணுவம் குண்டுவீச்சு நடத்துற தெல்லாம் எங்கட மேல்தான். ஏற்கெனவே யாழில் இருந்து வன்னிக்கு அகதியா வந்து நின்ன நாங்கள் இப்போ கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போறோம். இலங்கை அரசை நம்பி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக முடியாது. போனால் சித்திரவதைப் படுவதோடு அங்கே போய் அடிமையாய்த்தான் நிற்கணும். அங்கே ஒட்டுக்குழு (கருணாபிரிவு) போராளிகள் எங்கட பிள்ளைகளை துப்பாக்கி முனையில் கடத்திப் போய்விடுவினம்" என்கிறார்கள் அந்த மக்கள்.

வன்னிப்பகுதிக்குள் பள்ளிக்கூட வேன் ஒன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உபயம் சிங்கள விமானக் குண்டுவீச்சுதான். அந்த வேனுக்குள் உருக்குலைந்து கிடக்கும் பள்ளிச்சிறார்களை சிலர் அள்ளியெடுத்தபடி ஓடிவருகிறார்கள். இறந்து விட்ட சிறுமிகளைக் கீழே கிடத்திவிட்டு குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். யாருக்கும் கதறி அழக்கூட நேரமில்லை. இந்த அவலங்களைப் பார்க்கும் நம் கண்கள் குளமாகிப் போகின்றன. இதயத்தின் ஒரு மூலையில் 'ஓ' வென்ற அழுகுரல் எதிரொலித்தபடியே இருக்கிறது.

காட்சிகள் இருளாகி மறைகின்றன. 'உலகத் தமிழினமே, எங்களுக்காகவும் பேசுங்களேன்' என்ற டைட்டில் விழுந்து நம்மை உலுக்கிப் போடுகிறது.

"எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக்கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. "இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்" என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே" என்ற குரல் பதிவுகள் நம் நெற்றிப் பொட்டில் சம்மட்டியாக விழுகின்றன.

கடைசியாக முடியும்போது, 'எம் தமிழினமே! தான் ஆடாவிட்டாலும், தம் சதை ஆட...' என்ற டைட்டிலோடு நிலைகுத்தி நின்று முடிகிறது. அலை அலையாய் அதிர்ச்சிகள் நம் நெஞ்சுக்குள் மோதிய படி இருக்கிறது நீண்ட நேரமாய்..

தமிழக முதல்வர் கலைஞர், இந்த வயதிலும் இப்படியொரு காட்சியைப் பார்ப்பதற்கு என்ன மன உறுதியைப் பெற்றிருந்தாரோ?.

இவ்வாறு குமுதம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam.com

எம் உறவுகளின் நாளாந்த அவலவாழ்வு....

தமிழ் திரைப்பட உறவுகளின் ராமேஸ்வரம் நிகள்வுகளும் இணைக்கப்பட்டுள்ளன.. VIDEO

http://vaththirayan.blogspot.com/

Edited by jaalavan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.