Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜித்,அர்ஜூன் திரைப்படங்களை நாம் புறக்கணிப்போம்;ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள்!

Featured Replies

இன்று முதல் அஜித் மற்றும் அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம் என ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களினால் விடப்பட்ட முழுமையான வேண்டுகோள்....

அன்பான தமிழ் மக்களே...

இன்று முதல் அஜித்,அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம். எமது மக்கள் படும் இன்னல்களையும் துன்பங்களையும் அவர்கள் அலட்சிய படுத்தி உண்ணா நிலை போராட்டமெல்லாம் எதற்காக என்று கூறியுள்ளார்கள். இப்படி பட்டவர்களுக்கு நாம் இனியும் ஆதரவு வளங்க கூடாது. அன்பார்ந்த ரசிகர்களே,இனியாவது நீங்கள் கொஞ்சம் சிந்தித்து செயல் படுங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழீழம்.

இப்படிக்கு

ஜெனீவா வாழ் தமிழ் மக்கள்

http://www.tamilseythi.com/tamilar/ajith-a...2008-10-24.html

இங்கு திரைப்படங்களை இறக்குமதி செய்யும் ஐங்கரன் போன்றோர்களுக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.

ஐங்கரனின் பிழைப்பும் இருப்பும் சாதாரண ரசிகர்களை நம்பித்தான். எனவே உங்கள் ஒவ்வொருவரும் தீர்வை கைய்யில் வைத்துக் கொண்டு ஐங்கரனுக்கு முறைப்பாடு செய்வது நகைப்பிற்குரியது.

சாதாரணமானவர்களிடம் தெளிவு ஏற்பட்டுவிட்டால் ஐங்கரன் விரும்பினாலும் இறக்குமதி செய்தால் நட்டத்தில் தான் போகும்.

சாதாரணமானவர்கள் தெளிவு இன்றி இருந்தால் ஐங்கரன் இறக்குமதி செய்யாவிட்டால் வேறு ஒருவர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இறக்குமதி செய்து உங்கள் அறியாமையில் உணர்வற்ற நடத்தையில் இலாபமீட்டிக் கொள்வார்.

எனவே மாற்றம் வரவேண்டியது நுகர்வோரிடம் - சாதாரண மக்கள் இடம்.

ஐங்கரனில் குறை பிடிப்பது யாரோ பெலிடோல் வித்தாங்களாம் வேண்டிக் குடிச்சிட்டம் என்று குறைப்படுவது போல கிடக்கு.

Edited by kurukaalapoovan

இதை உண்ணாவிரத நிகழ்வு இடம்பெற்ற பிறகு வெளியிட்டிருக்கலாம். குறுக்காலபோவான் சொன்னது போல படங்கள் ஓடவேண்டும் என்ற வற்புறுத்தல்களால் அவர்கள் மேடையில் வந்து அமரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படங்கள் எல்லாத்தையுமே புறக்கணித்தால்் நல்லம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரைப்படங்கள் எல்லாத்தையுமே புறக்கணித்தால்் நல்லம்.

கறுப்பி அக்கா உது நடக்கிற காரியமே சும்மாடைப் பன்னி உங்கட கை தான் வலிக்கப்போகுது பாரும் புலத்தில இப்ப கதைப்பாங்கள் நாலைக்கே ரஜனியோ விஜயின்ர படமோ போட்டால் சும்மா திரையயரங்கில கூட்டம் அலைமோதும்

அன்பான தமிழ் மக்களே...

தொடர்ந்து நாங்கள் எங்களையே நாங்கள் பேக்காட்டுவோம். எங்களைப்போல சில முட்டாள்கள் இப்படி பியர் அடித்துவிட்டு அறிக்கைகள் விடுவோம். போதை இறங்கும் வரை இப்படி குசியாக கதைத்துவிட்டு பின்னர் இதைவிட நல்ல படங்கள் பார்ப்போம்.. இன்று இணையம் வந்துவிட்டதால், மற்றும் நவீன தகவல் தொழில்நுட்பம் காரணமாக எம்மைப்போன்ற விசுக்கோத்துக்கள் காலத்துக்கு காலம் வெளிவிடும் அறிக்கைகள் உடனுக்குடன் மக்களை சென்றடைந்து விடுகின்றது.

எமது புலனாய்வாளர்கள் தமது பூதக்கண்ணாடியை பாவித்து தமிழின துரோகிகள் யார் யார் என்று கண்டுபிடித்து தொடர்ந்து உங்களுக்கு பிந்திய புறக்கணிப்பு பட்டியல் மற்றும் புறக்கணிப்புக்கள் பற்றிய விபரணத்தை தருவார்கள்..

இப்படிக்கு,

***

------------------------------------

கருத்துக்களம் > அரும்பாலை [இளைப்பாறுங்களம்] > வண்ணத் திரை

32 Pages V 1 2 3 > »

New Posts

Goto first unread உலக கண்ணழகி ஐஸ்!

0 கறுப்பி 2 Today, 07:27 PM

New Posts

Goto first unread தமிழ் சினிமாவின் பரிணாமம்: வளர்ச்சியா? வீழ்ச்சியா?

0 nunavilan 6 Today, 07:01 PM

--------------------------------------

உபதேசம் ஊருக்கடி... எங்களுக்கு இல்லை...

பேக்காட்டுறோம் பேக்காட்டுறோம் என்ற எல்லோரையும் பேய்க்காட்டவேண்டாம்

திரைப்படங்கள் எல்லாத்தையுமே புறக்கணித்தால்் நல்லம்.

எங்களுக்காக குரல் கொடுப்பவர்களை புறக்கணிப்பது நல்லதா?

கறுப்பி அக்கா உது நடக்கிற காரியமே சும்மாடைப் பன்னி உங்கட கை தான் வலிக்கப்போகுது பாரும் புலத்தில இப்ப கதைப்பாங்கள் நாலைக்கே ரஜனியோ விஜயின்ர படமோ போட்டால் சும்மா திரையயரங்கில கூட்டம் அலைமோதும்

அப்படி கூறிக்கொண்டு இருக்காமல் முயற்சி செய்வோம், நம்மில் பலர் வேலை பளு காரணமாகவோ , அல்லது வாழ்க்கை முறை காரணமாகவோ, செய்திகளை அறிவது குறைவு, அவர்களை குறை கூற முடியாது, இணையதளங்களுக்கு செல்லாத பலர் இருக்கிறார்கள்,

மிக சிறந்த வழி மின்னஞ்சல் , இந்த செய்தியயும் , முன் இணைப்பில் கொடுக்கப்பட்ட படத்தயும் இணைத்து எம் நண்பர்களுக்கு அனுப்பி வைப்போம், எல்லோரிடமும் செல்ல வாய்ப்பிருக்குறது

acid.jpg

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படங்கள் எல்லாத்தையுமே புறக்கணித்தால்் நல்லம்.

என்ன கறுப்பி அக்கா இப்படி சொல்லி போட்டியல் :( ..இங்கத்த பொன்னுங்க பஸ்சங்கள் கலன்டற பாத்து நாள் என்னி கொன்டு இருப்பாங்கள் எப்ப சிம்புட புது படம் வெளிய வரும் பாக்கிறதுக்கு என்று

அதே நெரம் மாவீர நாள் இல்லாட்டி நினைவு நாள் வாங்க போவம் வாங்கா என்று குப்பிட்டா வர மாட்டாங்கள் :wub::)

எங்கடையள பனை மரத்தொடை கட்டி வச்சுட்டு அடிச்சாளும் திருந்தாதுவள் :(:)

முரளி புறக்கணி என்ற செய்தி என்றவுடன் உங்களுக்கு ஏன் இப்படி கோபம் வருகிறது. தமிழன் என்ன சொன்னாலும் திருந்தமாட்டான் என்ற கோபமா? என்ன செய்ய சினிமாவும் கிட்டத்தட்ட ஒரு போதை போலத்தானே.. பழகிவிட்டது மீளுவது கொஞ்சம் கடினம்தான். ஆனாலும் முயற்சி செய்யலாம் தானே? ஒரு சிலர் உணர்வார்கள் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி கூறிக்கொண்டு இருக்காமல் முயற்சி செய்வோம், நம்மில் பலர் வேலை பளு காரணமாகவோ , அல்லது வாழ்க்கை முறை காரணமாகவோ, செய்திகளை அறிவது குறைவு, அவர்களை குறை கூற முடியாது, இணையதளங்களுக்கு செல்லாத பலர் இருக்கிறார்கள்,

மிக சிறந்த வழி மின்னஞ்சல் , இந்த செய்தியயும் , முன் இணைப்பில் கொடுக்கப்பட்ட படத்தயும் இணைத்து எம் நண்பர்களுக்கு அனுப்பி வைப்போம், எல்லோரிடமும் செல்ல வாய்ப்பிருக்குறது

acid.jpg

:wub::)

***தீபாவளி ரிலீஸ்!***

உங்கள் திருட்டுப்பிரதிகள், டவுன்லோடுகள், ரிக்கற்றுக்களுக்கு முந்திக்கொள்ளுங்கள்... தீபாவளி தினம் அன்று சோத்து இறைச்சியை மூக்குமுட்ட ஒரு பிடி பிடிச்சுவிட்டு, பியரும் அடிச்சுக்கொண்டு, சோபாவில படுத்து இருந்து விசய், அசித்திண்ட படம் பார்த்தால் சொல்லி வேலை இல்லை..

உங்களுக்காக மேலதிக தகவல்கள்...

இப்படிக்கு செனீவா பியர் அடிப்போர் சங்கம்

பி/கு: விரைவில் அமெரிக்கா பயங்கரவாத பட்டியலில் புதிய புதிய அமைப்புக்களை இணைத்ததுபோல் எமது புலனாய்வாளர்களும் புதிதாக சேர்க்கப்படவேண்டிய, சேர்க்கப்பட்ட தமிழின துரோகிகள் பட்டியலை உங்களுக்கு விரைவில் அறியத்தருவார்கள்.

மின்னஞ்சல்: புனலாய்வு@பூதக்கண்ணாடி.கொம்

img1081023069_1_2.jpg

தீபாவளி என்றால் ஒரு டஜன் படங்கள் கணக்கு. அதற்கு மேல் இருந்தாலும் ஆச்ச‌ரியமில்லை. பன்னிரெண்டுக்கு ஆறாவது பழுதில்லாமல் இருக்கும்.

இதெல்லாம் அந்த காலம். பாஸ்ட்ஃபுட் யுகத்தில் அனைத்திற்கும் அவசரம். படம் நூறு நாள் ஓடும் அளவுக்கு யாருக்கும் பொறுமையில்லை. போட்ட காசு பத்தே நாளில் திரும்பினால் ஷேமம்.

பத்து திரையரங்கில் ஓட வேணடிய படத்தை ஒரே நேரத்தில் நூறு திரையரங்கில் வெளியிட்டால், விளைவு? பன்னிரெண்டு படம் வெளியான இடத்தில் நான்கிற்கே வழியில்லை. இந்த தீபாவளிக்கு இதுவரை உறுதியாக வெளியாகும் என்ற கேரண்டியுடன் இருக்கும் படங்கள் நான்கு.

முதலில் ஏகன். பில்லா என்ற சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு அ‌ஜித் நடித்திருக்கும் படம். தமிழில் கதை பஞ்சம். இதுவும் ‌‌ரீமேக்தான். இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த மேன் ஹுன் னா படத்தின் தழுவல்.

ராணுவ அதிகா‌ரியான அ‌‌ஜித், கொலை மிரட்டலுக்கு ஆளாகும் உயர் அதிகா‌ரியின் மகளின் பாதுகாப்புக்காக அவள் படிக்கும் கல்லூ‌ரியில் ஸ்டூடண்டாக வந்து சேர்கிறார். அங்குதான் அ‌ஜித்தின் அப்பாவின் இன்னொரு மனைவியின் மகன் சந்தீப் படிக்கிறார். நயன்தாரா கல்லூ‌ரி பேராசி‌ரியை.

ஆ‌க்சனுடன் ஆரம்பித்து கலகலப்பாக செல்லும் படத்தில் கல்லூரி முதல்வராக வரும் ஜெயராமின் காமெடி சம்திங் ஸ்பெஷல். ராஜு சுந்தரம் நடன இயக்குனராக இருந்து இயக்குனராக ப்ரமோஷன் ஆகியிருக்கும் படம். இழைத்து இழைத்து எடுத்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகள்.

இசை யுவன் ஷங்கர் ராஜா. நவ்தீப்பின் அம்மாவாக வருகிறார் சுஹாசினி. நயன்தாரா பில்லா கிளாமரை இதில் ‌ரிப்பீட் செய்திருப்பது பாடல் காட்சிகளின் தனி அட்ரா‌க்சன்.

ஆக, நிச்சய வெற்றி கோஷத்துடன் களம் இறங்குகிறது ஏகன்.

மூலம்: http://tamil.webdunia.com/miscellaneous/we...081023069_1.htm

கீழே இருக்கும் படத்தில் படலைக்கு படலையை சேர்ந்த சில நபர்கள் அசித்துடன் சேர்ந்து படம் எடுத்து இருப்பதால் இவர்களையும் துரோகிகள் பட்டியலில் சேர்க்கலாமா என்று ஆராய்ந்து வருகின்றோம். படலைக்கு படலையை புறக்கணிக்கலாமா அல்லது இல்லையா என்று பின்பு அறியத்தருவோம்..

இப்படிக்கு,

பூதக்கண்ணாடி டாட் கொம் குழுவினர்

dsc00459th3.jpg

நிச்சையமாக எமது கலைஞர்களும் அரசியல் தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

படத்தை இணைத்த முரளிக்கு நன்றி!

பட்டம் கொடுக்கிறவங்க(ன்ர) தொல்லை தாங்க முடியல, என்ன பிரச்சினயோ யாருக்கு தெரியும்

உப்பிடி எத்தினய பாத்தம்

கறுப்பி அக்கா உது நடக்கிற காரியமே சும்மாடைப் பன்னி உங்கட கை தான் வலிக்கப்போகுது பாரும் புலத்தில இப்ப கதைப்பாங்கள் நாலைக்கே ரஜனியோ விஜயின்ர படமோ போட்டால் சும்மா திரையயரங்கில கூட்டம் அலைமோதும்

இதோடா

அண்ணாத்தை சரியாத்தான் பீல் பன்றீங்கோ!

உங்க இணையத்தளத்தை பாத்தாத்தெரியுது :)

என்ன கொடுமைசார் :wub:

Click Here http://www.puspaviji.net/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.

உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது

source:www.lankasri.com

பிரித்தானியாவிலை புறக்கணிச்சாலே போதும்

  • கருத்துக்கள உறவுகள்
:( அஜீத்தினதும், அர்ஜூனினதும் படங்களைப் புறக்கணித்துத்தான் அவர்கள் உண்ணாவிரதத்தில் வந்து அமர வேண்டுமென்றால் அப்படியான ஆதரவு நமக்கு எதற்கு ? அவரகளின் விருப்பமில்லாமல் பலவந்தப்படுத்தி எமக்கு ஆதரவு தருவதாகக் காட்டுவதால் எமக்கு எந்தப் பயனும் வந்துவிடப்போவதில்லை. இது நம்மை நாமே ஏமாற்றும் வேலை. விருப்பமென்றால் அவர்களின் படங்களைப் புறக்கணிக்கலாம், ஆனால் அது அவர்களின் ஆதரவைத்தேடித்தரும் என்று நினைக்க முடியாது !

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

sankathi.com

இந்த செய்தியின் மூலம் தமிழக ஊடகங்களில்தான் முதலில் வெளியாகி இருக்க வேண்டும். அதனைத்தான் எமது புலம்பெயர் ஊடகங்களும் பிரதி பண்ணி செய்தியாக போட்டிருப்பார்கள்.யாராவது அந்த மூல ஊடகங்களின் நேரடி பதிவுகளை அல்லது அவைகளின் இணைய இணைப்புகளை இங்கு தர முடியுமா?

பி.கு நக்கீரன் தவிர்ந்த வேறு ஊடகங்களை கேட்கிறேன்.ஏனெனில் இதுவும் அண்மையில் நக்கீரனில் வந்த தலைப்புத்தான்.

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

:(:):D

நீங்கள் வேற மறுத்தான்.. ஹாஹா.. உதுக்கெல்லாம் விளக்கம் கேட்டுக்கொண்டு. பேசாமல் உதுகள கண்டும் காணாதபடி இருக்கிறதுதான் உங்களுக்கு நல்லது. இல்லாட்டிக்கு ஏதாவது இசகு பிசகாக கதைச்சால் துரோகி பட்டம் வாங்கவேண்டியதுதான்.

தராக்கி என்பவர் ஒரு மாமனிதர். அவர் ஒருபோதும் பிறர் ஆக்கங்களை களவாக திருடி தனது ஆக்கம் போல் வெட்டி ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. ஆனால்..

யாழ் இணையத்தில அவரது பெயரைப்பாவிச்சு இங்குள்ள சில சுயமாக சிந்திக்கத்தெரியாத எருமைமாடுகளுக்கு போதை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார். அவரது பெயரை களங்கப்படுத்துவது எல்லாம் யாழ் நிருவாகத்துக்கும் இப்போது பிரச்சனை இல்லை. ஏன் எண்டால் அவர்களுக்கு யாராவது செய்தியை கொண்டுவந்து ஒட்டி இங்குள்ளவர்களை குசியாக வைத்து இருந்தால் போதும் என்கின்ற நிலமை.

வலைஞன் அவர்கள் முன்பு ஐசூர்யா என்பவருக்கு எச்சரிக்கை கொடுத்து இருந்தார். இதன்பின்னர் அதே ஐசூர்யா தராக்கியாக மாறி முன்பை விட வித்தியாசமான பாணியில் திருட்டுத்தனமாக மூலங்களை சரியாக குறிப்பிடாது செய்திகளை ஒட்டி குசி ஏத்திக்கொண்டு இருக்கிறார்.

இந்தக்கேவலத்தில இவர் ஒட்டுற செய்திகளிண்ட அடிப்படையில இஞ்ச பல ஆராய்ச்சிகள் வேற நடந்துகொண்டு இருக்கிது. மற்றவர்களை துரோகி.. என்று கூறுபவர்கள் இவர்பற்றி அக்கறை செலுத்தாது இருப்பது ஆச்சரியம் தருகின்றது. அஜீவன் அவர்களின் பின்னணி பற்றி கவலைப்படுபவர்கள் இவர் பற்றியும் கொஞச்ம் கவனம் எடுத்தால் நல்லது. நீங்கள் அப்பாவித்தனமாக ஒரு தளத்துக்க போகேக்க உங்கட ஐபி முகவரி தொடக்கம் பல விசயங்களை கண்காணிக்க முடியும். தேவை ஏற்பட்டால் இந்த ஐபி முகவரிகளை யாருக்காவது விற்பனை கூட செய்ய முடியும்.

யாழ் இணையத்துக்கு வருபவர்களை கண்டுபிடிக்கக்கூட இப்படி யாராவது செய்ய முடியும். அஜீவன் அவர்களுக்காவது பரவாயில்லை. அவர் முகவரி தொலைபேசி இலக்கம் தெரியும். ஆள் ஆர் எண்டு தெரியும். ஆனால் இப்படியான முகமூடி போட்ட கொள்ளைக்காரர்கள் பற்றி யாழ் கள உறவுகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

புலி பற்றி ஆதரவாக கதைப்பவன் எல்லாம் உண்மையான ஆதரவாளன் அல்ல. எதிராக கதைப்பவன் எல்லாம் உண்மையான எதிரி அல்ல எண்டுற விசயம் எங்கட ஆக்களுக்கு விளங்கினால் சரி. எம்மத்தியில பசுத்தோல் போர்த்த புலியும் இருக்கலாம். புலித்தோல் போர்த்த சிங்கமும் இருக்கலாம்.

அஜீவன் அவர்களிண்ட தனிப்பட்ட வாழ்வு பற்றி ஆராய்ச்சி செய்த யாழ் கள பெருமான்கள் தராக்கி எனப்படும் ஐசூர்யா எந்த நாட்டில் இருக்கிறார். என்ன செய்கிறார் எண்டு எப்போதாவது கவலைப்பட்டது உண்டா? புலி ஆதரவான செய்திகளை திருடி இணைக்கிறார் என்பதற்காக இவரது செய்தித்தளம் சிறப்பானது என்று சொல்வதற்கு இல்லை. எந்தப்புற்றுக்க எந்தப்பாம்பும் இருக்கலாம். நான் இவரது இணையத் தளத்தினுள் போவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அப்பாவித்தனமாக ஒரு தளத்துக்க போகேக்க உங்கட ஐபி முகவரி தொடக்கம் பல விசயங்களை கண்காணிக்க முடியும். தேவை ஏற்பட்டால் இந்த ஐபி முகவரிகளை யாருக்காவது விற்பனை கூட செய்ய முடியும்.

இப்படியும் செய்வார்களா .......... :(

இவர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவது தமிழக தமிழரும், ஈழத்தமிழரும் தான். இவர்களின் படங்கள் இவர்கள் பிறந்த பிராந்தியங்களில் ஓடுகிறதோ இல்லையோ பாலபிஷேகத்துடன் ஆரம்பித்து கற்பூர தீபாரதனைகளுடன் ஓகோ என்று தமிழனின் காதுகளில் பூச்சுற்றிக் கொண்டு தமிழா வாழும் இடங்களில் ஓடுகின்றது. இவர்களின் இந்த எழுச்சிகள் தமிழாகளினாலானது. அவர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை. இனி தமிழன் யார் என்பதை நாம் இவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இவர்களின் படங்களை நாம் புறக்கணிப்பதன் மூலம் அதை செய்ய முயல்வோம். முக்கியமாக புலம் பெயர் தமிழர்கள். அதை விடுத்து வம்புச் சண்டைகள் நமக்குள் ஏன்?

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.