Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தீரே உறைக்கிறதா உமக்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vasampu

படத்தின் வெற்றி தோல்வி இந்தியாவில் படம் ஓடுவதை வைத்துத்தான் என்று குழந்தை களுக்குக் கூடத்தெரியுமே...! ஆனால் உங்களுக்கு ஓர் அடிப்படை உண்மை விளங்கவில்லை என்பது மட்டும் எனக்கு விளங்குகிறது. சாதாரண நடிகர்களின் படத்துக்கு £5.00 ம், ரஜனி, கமல் போன்றோரின் படத்துக்கும் £ 15.00 என்று கொடுக்கும் காரணம் தயாரிப்பாளரிடமிருந்து உயர்ந்த விலைக்கு அந்தப் படங்களின் உரிமையை வாங்கி அதைத் திரையிடுவதற்கு வளமையான வினையோகஸ்தரின் இரத செலவுகள் போக லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.எனவே ஏற்கனவே பெரிய நடிகர்களின் படங்களை உயர்ந்த விலை கொடுத்து வாங்கிவிட்ட படியால் தான் அதன் செலவைச் சரிக்கட்டி லாபம் ஈட்டுமெண்ணத்துடன் தான் £15.00 க்கு எங்களுக்கு விற்கிறார்கள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவும்.

மற்றும் வேளி நாடுகளில் பெருமளவில் தமிழ் திரைப் படங்கள் ஓட தொடங்கிய பின்னர் தான் நடிகர்களின் சம்பளங்களும் லட்சங்களிலிருந்து கோடிக்கு மாறியதென்பதும் மறுக்கப் பட முடியாத உண்மை.

இளங்கவி

  • Replies 66
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபாவளி, தைப் பொங்கல், எங்கள் புது வருடம் போன்ற எங்கள் சமய, கலாச்சார நிகழ்வுகளைச் சொல்லிக் கொடுக்கும் வீடுகளில் தான் எங்கள் தாய் நாட்டைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்கள். பிள்ளைகளுக்கும் அந்த நிகழ்வுகளின் பின்னணி என்று தெரிய வரும் என்பதை மறை முகமாகச் சொல்லியிருந்தேன் உங்களால் அதை விளங்கிக் கொள்ளமுடியாதது வருத்தமே..!

இந்த நாட்டில் பிறந்த பிள்ளைகள் மற்றும் சிறுவயதிலேயே இங்கே வந்த பிள்ளைகள் எத்தனையோ பேர்கள் எத்தனை படைப்புக்கள், ஆக்கங்களை தந்து எங்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போரடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா...!

உங்களைப் போலவே ஒரு உதாரணம் கூறுகிறேன்:

நீங்களும் உங்கள் உறவினரில் ஒரு பையனும் வெளி நாட்டில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பையனுக்கு திடீரென காசுப் பிரச்சனை வந்து ஏலாத சமயம் நீங்கள் உதவி செய்து அவரைக் கைகொடுத்து தூக்கி விட்டீர்கள் அவரும் கஸ்ரத்தில் இருந்து மீண்டு பின்னர் எப்படியோ பணக்காரராக மாறி விட்டார் என வைத்துக்கொள்வோம். அதே நேரம் உங்கள் நிலமை தலைகீழாக மாறி மீளாத கஸ்ரத்தில் இருக்கும் போது உங்களைத் திரும்பியும் பார்க்காமல் இவனை என்னக்குத் தெரியாது என்று சொன்னால் உங்களின் மன நிலை எப்படி இருக்கும்....? அது துரோகம் இல்லையா....?

சினிமா நடிகர்கள் எங்கடை காசில மட்டும் வளர்ந்தவர்கள் என்று சொல்ல வரவில்லை..! எங்கடை காசும் அவர்களை பெரியவர்களாக்க உதவியது என்பது மறுக்கப் படமுடியாத உண்மை...!

vasampu

படத்தின் வெற்றி தோல்வி இந்தியாவில் படம் ஓடுவதை வைத்துத்தான் என்று குழந்தை களுக்குக் கூடத்தெரியுமே...! ஆனால் உங்களுக்கு ஓர் அடிப்படை உண்மை விளங்கவில்லை என்பது மட்டும் எனக்கு விளங்குகிறது. சாதாரண நடிகர்களின் படத்துக்கு £5.00 ம், ரஜனி, கமல் போன்றோரின் படத்துக்கும் £ 15.00 என்று கொடுக்கும் காரணம் தயாரிப்பாளரிடமிருந்து உயர்ந்த விலைக்கு அந்தப் படங்களின் உரிமையை வாங்கி அதைத் திரையிடுவதற்கு வளமையான வினையோகஸ்தரின் இரத செலவுகள் போக லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.எனவே ஏற்கனவே பெரிய நடிகர்களின் படங்களை உயர்ந்த விலை கொடுத்து வாங்கிவிட்ட படியால் தான் அதன் செலவைச் சரிக்கட்டி லாபம் ஈட்டுமெண்ணத்துடன் தான் £15.00 க்கு எங்களுக்கு விற்கிறார்கள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவும்.

மற்றும் வேளி நாடுகளில் பெருமளவில் தமிழ் திரைப் படங்கள் ஓட தொடங்கிய பின்னர் தான் நடிகர்களின் சம்பளங்களும் லட்சங்களிலிருந்து கோடிக்கு மாறியதென்பதும் மறுக்கப் பட முடியாத உண்மை.

இளங்கவி

இளங்கவி

கே.பி.சுந்தராம்பாள் என்றொரு நடிகைக்கு இன்றைக்கல்ல இற்றைக்கு 55 வருடங்களுக்கு முன்னரே ஒளவையார் என்ற திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பளம் 1 இலட்சம் ரூபாவாம். அப்போ தற்போது அது எத்தனை கோடிக்குச் சமன் என்பதாவது புரிந்து கொள்ள முடிகின்றது தானே. சத்தியமாய் அப்போ புலத்தில் நம்மவர்கள் இருந்து அவர்கள் படங்களை வாங்கித் திரையிட்டதாக நான் அறியவில்லை. அடுத்து ரி.ராஜேந்தர் தனது படங்களை இலங்கை, சிங்கப்பூர் தவிர மற்றைய வெளிநாடுகளுக்கு விற்றது கிடையாது. ஆனாலும் அவரின் சம்பளம் கோடிகளில் தான் உயர்ந்தது. அதற்கு எந்தக் கேடிகளும் காரணம் அல்ல. அடுத்து தமிழில் நடிகை அசின் நடித்த போது அவர் அதிகமாக பெற்ற சம்பளம் 80 .இலட்சம் ரூபா. இப்போது வட இந்தியா சென்று நடிக்கத் தொடங்கிய பின் அவரின் சம்பளம் 2 கோடி ரூபா. இதற்கும் நம்மவர்க்கும் ஏதாவது தொடர்புண்டா. சாதாரண நடிகர்களின் படங்களுக்கு ஏற்படும் செலவுகளை விட உச்ச நடிகர்களின் படங்களுக்கு ஏற்படும் செலவு பலமடங்கு. அதனால் அவர்களின் படங்களின் விலையும் அதிகம் தான். உங்கள் வாதப்படி எம்மவர்களால்த் தான் நடிகர்களின் சம்பளம் உயர்ந்ததென்றால். எனி உச்ச நடிகர்களின் படங்களை புறக்கணித்து சாதாரண நடிகர்களின் படங்களை மட்டும் வாங்கி வெளியிட்டுப் பார்ப்போம். அதன் பின் அவர்கள் உச்ச நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்குகின்றார்களா என்று பார்க்கலாமா??

வாதம் செய்பவர்களுக்குப் புரிய வைக்கலாம். விதண்டா வாதங்களுக்கு முடியாது. அதுசரி எம்மவர் ஊடகங்கள் பிழைப்பைப் பற்றியும் எழுதியிருந்தேனே. அதை கவனிக்கவில்லையா?? அல்லது அது புரியவில்லையா?? :lol:

:lol: 2 இலட்சம் செலவழித்து ஒருவர் நடாத்தும் திருமணத்திற்கு சென்று நீங்கள் 50 ரூபா மொய் எழுதிவிடடு வந்து உங்களது பணத்திலே தான் திருமணமே நடந்ததென்று கூறினால் எப்படியிருக்குமோ?? அப்படித்தான் இருக்கின்றது உங்கள் வாதம். :lol:

Edited by Vasampu

வசம்புவும், குளக்காட்டானும் முக்கியமான ஒரு விசயத்தை சுட்டிக்காட்டி இருக்கிறீங்கள். அதாவது நம்மவர்கள் தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு காசு கொடுக்கின்றார்கள். இதில உண்மையான லாபம் அடையுறது யார் என்பது பற்றியது.

1. கனடாவில நான் அறிஞ்சு தமிழ் சினிமா படம் பார்க்கிற பலர் எப்பிடி படம் பார்க்கிறீனம் எண்டால் திருட்டு வீசீடி தான். கனடாவில ஒரு தமிழ் சாமான்கள் விக்கிற கடைக்கு போனால் புதுப்படம் ஒண்டை $1.00 - ஒரு டொலருக்கு வாங்க முடியும். இப்படி ஒரு டொலருக்கு வாங்கித்தான் பலர் பார்க்கின்றார்கள். இதுவே அதிகம் என்று சொல்கின்றார்கள். சரி இனி அந்த ஒரு டொலர் பட பிரதி எங்கிருந்து வருகின்றது? திருட்டு பிரதி. நீங்களே மிகுதியை அனுமானிச்சு கொள்ளுங்கோ.

எனக்கு ஒருவர் சொன்னார் Quality இல $10 அல்லது $15க்கு ஐங்கரன் வீடியோவில படம் எடுத்து பார்க்கிறதுக்கும், ------(பெயரை சொல்லி வம்பில மாட்ட விரும்ப இல்ல... உங்கள் எல்லாருக்கும் தெரியும் எங்க வாங்கலாம் எண்டு..) அங்க $1 - ஒரு டொலருக்கு திருட்டு பிரதிய வாங்கி பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இல்லையாம். அதாவது....

உண்மையில புறக்கணிப்பு அது இது எண்டு வெளிக்கிட்டால் எங்கட ஆக்களிண்ட பிழைப்புக்கு - எங்கட ஆக்களிண்ட வயித்திலதான் நீங்கள் மண் அள்ளிப் போடுறீங்கள்.

மேலும்.. இனி ஒன்லைன் மூலம் திருட்டுத்தனமாக பார்ப்பது. இன்றைய இளைய சமுதாயம் - அதாவது இண்டர்நெட் பற்றி அறிந்தவர்கள் ஒன்லைனில எங்க படம் பார்க்கலாம். ஒன்லைனில இலசமாக எங்க படங்கள தரவிறக்கம் செய்யலாம் எண்டு எல்லாம் அறிஞ்சு இருக்கிறார்கள். இது மட்டும் அல்ல... தாங்கள் இலவசமாக பார்ப்பதோடு மட்டும் அல்லாது தமது நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் எண்டு எல்லாருக்கும் இலவசமாக டீவீடீயில் சுட்டு கொடுக்கின்றார்கள்... தவிர...

Peer-To-Peer Network உதாரணமாக Limewire, Torrent போன்றவற்றினூடாக உலகெங்கும் இலவசமாக தமிழ் சினிமா பாடல்களை படங்களை பெற்றுக்கொள்கின்றார்கள், பரப்புகின்றார்கள்.. எங்கட ஆக்களிண்ட பதினைஞ்சு வயசு பெடியனிண்ட, பெட்டையிண்ட iPod Nano இல சிவாஜி துடக்கம்... ஏகன் - மேகன் வரை எல்லாவிதமான பாடல்கள் - Tamil Music Videos, மற்றும் படங்கள் - விரல் நுனியில - திரையில பார்க்கிற திரைப்படங்களாக இருக்கிது. இவற்றை எல்லாம் இவர்கள் இலவசமாக இண்டர்நெட்டின் ஊடாக பெற்றுக்கொள்கின்றார்கள்.

அதாவது சுருங்க கூறின். எங்கட ஆக்கள் தற்போது நீங்கள் சிலர் சொல்லுறபடி நேர்மையான முறையில தமிழ் சினிமாவுக்கு கொடுக்கின்ற ஆதரவு மூலம் உண்மையில எத்தனை மில்லியன் டொலர் இழப்பு தமிழ் சினிமா துறைக்கு ஏற்படுகின்றது என்று நீங்கள் சரியாக கணக்கு போட்டு அறிந்தால் அந்த முடிவை பார்க்க உங்கள் எல்லாருக்கும் மிகவும் கசப்பாகத்தான் இருக்கும்.

யாராவது இந்தக்காலத்தில காசு கொடுத்து தமிழ் சினிமா பாடல், படம் சீடி, டீவீடி - ஒரிஜினல் வாங்குகின்றார்களா? எல்லாமே திருட்டு பிரதிகள். திருட்டு பிரதிகளில ஒரு சதம் காசு கூட அதை கஸ்டப்பட்டு தயாரித்த கலைஞர்களுக்கு போய்ச்சேர்வதில்லை. எல்லாம் எங்கட ஆக்களிண்ட பொக்கற்றுக்கதான் போகிது.. எங்கட ஆக்களிண்ட திருட்டு செயல்கள் மூலம் எத்தனை மில்லியன் டாலர்கள் நட்டம் தமிழ் சினிமா துறைக்கு ஏற்படுகின்றது என்று யாருக்காவது தெரியுமா?

அண்மையில யாழ் கள கவிஞர் ஒருவர் தனது புலம்பலை தெரிவித்து இருந்தார். பல ஆயிரம்பேர் தனது பாடல்களை யாழ் மூலமாக இலவசமாக தரவிறக்கம் செய்தபின்னர் அதற்கான காசை தனக்கு தரவில்லை என்று. இப்போது தான் கடன் தொல்லையில் இருப்பதாக. எங்கட ஆக்களிண்ட நேர்மைக்கு இது ஒன்றே உதாரணம்.

இதுக்கு மேல கதைத்தால் எங்கட இனத்துக்குத்தான் வெட்கக்கேடு. எண்டபடியால இத்தோட நிப்பாட்டிறன். யாராவது மேலும் ஏதாவது என்னிடம் விளக்கம் கேட்டால் தொடர்ந்து எனது கருத்துக்களை இதுக்க முன்வைக்கிறன்.

நன்றி! வணக்கம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இப்ப முரளி -வசம்பு- குளக்காட்டன் எங்க வந்து நிக்கிறீங்க?

அஜித்துக்கும் அர்ச்ஜீனுக்கும் வக்காலத்து வாங்கி கடைசியில முரளி கள்ள டிவிடி ஒழிப் போராட்டத்து போயிடுவார் போலிருக்கே!

அண்ணா நீங்கள் எல்லாரும் மூச்சு வாங்க எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஈழத்தமிழினம் தான் தமிழ் சினிமா வளத்ததுண்டு அவங்க தான் சொல்லுறாங்க சத்தியமாய் நான் சொல்லல!

அதை போன கிழமை பாரதிராஜா கூட சொல்லியிருந்தார். படத்தை விடுவம், இங்க அவையள் வந்து அந்த நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி என்று நடத்தி யாரின்ர காசை புடுங்கினம் என்றா சத்தியமாய் முரளி, வசம்பு, குளக்காட்டன்ரைய இல்லை ஆனால் அவையளின்ர ரசிகர்களிட்ட!

உண்ணாவிரதத்துக்கு போறதும் போகாததும் அவங்கட உரிமை! அதை போல ஈழத்தமிழர் படத்தை புறக்கணிப்பினம் விடுவினம் அது எங்கட உரிமை! உங்களுக்கு எவ்வளவுக்கு நாங்கள் பறக்கணிக்கிறது தப்பு அது உணர்வு பூர்வமான முடிவு அதனால பிரயொசனம் இல்லை என்று சொல்ல உரிமை இருக்கோ அதேயளவு அந்த உணர்வு பூர்வமான முடிவை தமிழர்களிடம் சொல்லும் உரிமை எங்களுக்குமுண்டு!

நாங்கள் கள்ள சீடில படம் பாக்கிறனாங்கள் தான்! இல்லை என்று செல்லல ஆனால் அதனால படம் தயாரிப்பாளர்கள் நட்டமடைவார்கள் என்றால் அது பொய்! எனக்கு தெரிஞ்சு குறிப்பிட்ட ஒருநிறுவனம் படத்தை வெளியிட்டால், அல்லது அதற்கான உரிமை கிடைத்தால் கள்ள சீடீ உடன வராது. ஆனால் சில சின்ன ஆக்களுக்கு உரிமம் கிடைச்சால் உடன அடுத்தனால் அந்த பெரிய கொம்பனியின்ர நிழல் பெயரில டிவிடி வரும் இப்ப யார் அந்த படத்தால நட்டப்படுறது?

அதையும் விடுவம் என்ற தமிழ் சினிமாவில் 10 படங்களை ஒரே தடையில புரடீயூஸ் பண்ணிற ஒரு நிறுவனம் ஈழத்தமிழ் நிறுவனம். அந்த நிறுவனத்தை வளர்த்தது தமிழக மக்கள் இல்லை புலத்து தமிழர்கள். அதோட புலத்து தமிழர்கள் என்றால், சிங்கப+ர், மலேசியாச்சதமிழர்களும் அடங்குவர் என்பது பொதுவான கருத்து ஆனால் நீங்கள் அவர்கள் புலம்பெயராமல் பறந்து வந்ததர்கள் என்று சொல்ல வாறீங்கள் போல இருக்கு!

அடுத்து தமிழ் ஊடகங்களை பற்றி விமர்சிக்கிற உரிமையோ! அல்லது அதற்கான தகுதியோ இருக்கு என்று உங்களில யாரையும் என்னால சொல்ல முடியாது. செய்தியாhளர்களை வைத்து செய்திகளை சேகரிக்கும் பல ஈழத்தமிழ் இணையங்கள் இயங்குகின்றமை உங்களுக்கு தெரியாமல் போனது துரதிஸ்டமே! அப்படி செய்தியாளர் இல்லாது போனால் காற்றோடு வரும் காற்றலையா இந்த இணையங்களுக்கு செய்தியை வழங்குகின்றது? புரியாத புதிர் தான்!

தமிழ்வின் பற்றிய விமர்சனம் அவசியமற்றது.

அடுத்து குளக்காட்டன் அவர்கள் எழுதிய மனம் வருந்தத்தக்கது. போராட்டத்திலிருந்து பலர் ஒதங்கியிருக்கின்ற போதும் பல இனவுணர்வுமிக்கவர்கள் ஒன்றாகவே வருகின்றனர். ஈழத்தமிழர்கள் பலர் கனடாவைப் பொறுத்தவரை தவறான வழிநடத்தல்களினால் ஒதுங்கியிருந்தாலும் அவர்கள் முற்றாக தாயகத்தை வெறுத்து போராட்டத்த ஆதரவு தராமல் இல்லை.

இரவு பகல் கடின உழைப்பு மத்தியில் நாட்டுக்கான பணியை ஆற்றும் பல்லாயிரம் இளைஞர்களுக்கு உங்களின் கணினிக்கு முன்னிருந்து தட்டும் விசைப்பலகையின் கருத்து மனதுக்கு துக்கத்தை கொடுக்கும். அவர்களின் உற்சாகத்தை மழுப்பும். என்னதான் செய்தாலும் இந்த சமூகம் எம்மை இகழ்ந்தே தீரும் என்ற எண்ணம் வருகையில் நீங்கள் ஒற்றுயாய் வரும்படி மற்றவர்களை அழைக்கும் அதேவளை எழுந்து கூட்டம் விலகிவிடும்!

ஊடகங்களை விமர்சிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி ஒரு முறை அவர்களாய் இருந்து பாருங்கள். கணனிக்கு முன்னிருந் கருத்து சொல்வது கடினமானதல்ல! அதே போல உங்களில் எத்தனை பேர் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்து கல்வி பயில்கின்றீர்கள் என்ற பலமான, உரமான கேள்வியை, இன்ஜினியறிங், மற்றும் ஏணைய துறைகளில் கல்வி கற்க்கும் நீங்கள் உங்களை பார்த்து கேளுங்கள்!

அதே போல மற்றவர்களை ஒற்றுமைப்பட அழைக்கும் நீங்கள் இணையத்துக்கு வெளியே செயற்பாட வாருங்கள் என அன்போடு அழைக்கின்றேன்! முடிந்தால் வாருங்கள் உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களை முன் வையுங்கள் படிப்பும் வேலையும் வீடும் என்று நீங்கள் இருந்த படியே மற்றவர்களை விமர்சனம் செய்வதும். முட்டாள்தனமான முடிவுகள் என்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை பற்றி சற்று சிந்தியுங்கள்!

அட அட பறவைகள் அண்ணா திருட்டுத்தனமா படம் பார்க்கிறதுக்கும் அழகான விளக்கம் வேற குடுத்து இருக்கிறார். தூரத்தில இருந்து பார்கேக்க எல்லாம் சின்ன புள்ளியா தெரியுது. அதுக்கு கிட்டக் கிட்டப்போய் அதபார்க்கேக்க அது எந்தளவு பெரிய பிரமாண்டமான மலை எண்டு தெரியுது. இந்த கருத்தாடல் மூலம் எதேச்சையாக ஒண்ட துவங்கிறதுக்கு பின்னால எத்தின விதமான கோணங்களில எத்தின விதமான விசயங்கள் இருக்கிது எண்டு இந்தக்கருத்தாடலை முழுமையாக வாசிச்ச வாசகர்கள் விளங்கி இருப்பார்கள்.

தவிர.. இப்ப இருக்கிற இப்ப எம்மை பிடிச்சு இருக்கிற சனியனே போதும். எங்களால முடிஞ்சததான் நாங்கள் செய்யமுடியும். இஞ்ச இதுக்க சுயமாக கருத்து சொல்லியே இத்தின பிரச்சனைகள். சந்திக்கு வந்து சொன்னால் எமது நிலை? எம்மவர்கள் அப்படிப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு மண்டையில போடுவதை ஒரு பொழுதுபோக்காக கொண்டவர்கள். கருத்தாடல் தளத்திலேயே குரல்வளையை நெரிக்க முற்படுபவர்கள் முன்னால் எப்படி நேரில் நின்று காரியங்கள் செய்ய முடியும்?

ஆகவே.. நீங்கள் ஏற்கனவே வெளியில நிக்கிற ஆக்கள் உங்களால முடியுமான உதவியை தாயக மக்களுக்கு செய்யுங்கோ. நாங்கள் இணையத்துக்க நிக்கிற ஆக்கள் இணையம் மூலமாக எம்மால் ஏதாவது பயனுள்ள முறையில தாயக மக்களுக்கு ஏதாவது உதவிகளை செய்கின்றோம்.

இங்கு நாம் தமிழக சினிமாவுக்கு வக்காளத்து வாங்க இல்லை. தவறான கருத்துக்களை சுட்டிகாட்டி இருக்கின்றோம். எம்மவர்களுக்கு உண்மையில் தமிழக சினிமா மோகத்தில் இருந்து விடுபட்டு தனித்துவமாக இயங்கக்கூடிய மனப்பக்குவம் வந்தால் அது வரவேற்கத்தக்கதே.

தமிழ் ஊடகங்கள் பற்றி கதைக்க எமக்கு உரிமை இல்லை? யாழ் இணையம் ஒரு ஊடகம் இல்லை? நாங்கள் தமிழர் இல்லை? அட நீங்களே சொல்லிப்போட்டீங்கள். அப்பிடி எண்டால் சிங்கள அரசு போடுற ஊடகம் சம்மந்தமான எதேச்சையான சட்டதிட்டங்களும் பிழை இல்லப்போல இருக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vasampu

வெளி நாடுகளில், ஏன் இப்போது எல்லா உலக நாடுகளிலும் தான் வேலை செய்யும் எந்த ஸ்தாபனங்களில் எடுத்தாலும் குழுவினராய் இருக்கும் ஒரு ஸ்தாபனத்தின் ஊளியர்கள் வேலை சம்மந்தமான ஒரு குறிப்பிட்ட ஓர் இலக்கை அடைவதற்கு ''ரீம் வேக் '' தான் முக்கியம் என்று சொல்வார்கள், அது இல்லாவிட்டால் இலக்கை அடைய முடியாது என்பது101% உண்ணை. தமிழ் திரைப்பட வளர்ச்சியில் ரீம் வேக் காகச் செயற்படுவதில் நாங்களும் ஒர் அங்கம். அப்படி இருக்கும் போது எங்களை தள்ள்வைத்து விட்டு அவர்கள் மாத்திரமே அவர்களின் வளர்ச்சியில் உரிமை கொண்டாடுவது முட்டாள்தனம்...!

உங்கள் திருமண உதாரணம் இதற்கு முற்றிலும் எதிரான உதாரணமும் கூட..., பல ஐம்பது ரூபாய்கள் தான் லட்சமாக மாறுவது புரியவில்லையா....!

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ள டிவிடி பார்க்கிறதுக்கு நான் விளக்கம் தரவில்லை. கள்ள டிவிடி எமக்குள் எப்படி நுழைகின்றது என்றதே எனது விளக்கம்! அதை விடுவோம், நீங்கள் உங்கள் கருத்து சொல்லும் உரிமையை இங்கு சொன்னால் என்ன வெளியில் சொன்னால் என்ன எல்லாம் ஒன்று தான் நீங்கள் சொல்லும் கருத்தை பார்த்து துரோகி பட்டம் கட்டிவிடுவார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களா?

உரசல்களுக்கும், வாக்குவாதங்களுக்கு மத்தியிலும் நல்ல தீர்க்கமான முடிவை எடுக்க முடியும் என நீ;ங்கள் நம்பினால், உங்களால் உங்கள் கருத்தை நிலை நிறுத்த முடியும் என்று கருதினால் (அது யதார்த்தமானதாக இருந்து) நீங்கள் யாருக்கும் அஞ்சவேண்டிய தேவை இல்லை!

நாம் வெளியில் நின்று செயற்படுகின்றோம் என்று சொல்வில்லை. எம்மால் முடியாதவற்றை மற்றவர்கள் செய்யும் போது குறுக்Pடும் செய்யவில்லை. ஒருவர் செய்வது பிழை அல்லது தவறு எனில் அதை மாற்றுங்கள் என்று சொல்லும் போது நாமும் அதன் பங்காளிகளாக இருந்து சொல்வது வரவேற்பை பெறும்.

அதையே செய்யும் படி உங்களை கேட்டுக்கொண்டேனே தவிர, உங்கள் கருத்தை உடைத்து அல்லது வேண்டுமென்று உங்களை வம்புக்கு இழுக்கவில்லை!

நாம் குறிப்பிட்டது ஊடகங்களை பற்றி விமர்சனமாகும். 10 டொலருக்கு இணையம் பதிவு செய்து இலவசமாய் இருக்கிற CMS போட்டிட்டு Copy and paste பண்ணுற ஆக்களை எல்லாம் ஊடகமாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை!

பறைவைகள்

நாங்கள் எவருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய தேவையுமில்லை. எங்கள் வக்காலத்து நடிகநடிகையருக்கு தேவையுமில்லை. உண்மைகளைத் தான் சுட்டிக் காட்டுகின்றோம். உணண்மைகள் உங்களுக்குச் சுடத்தான் செய்யும்.

நீங்கள் படத்திலை தொடங்கி இப்ப நடிக நடிகைகளை வைச்சு நடத்திற நிகழ்ச்சிககளில் வந்து நிக்கிறியள். தெரியாமல் தான் கேட்கிறன் எங்களுக்கும் இலாபம் வராமலேயா அவங்களை கூப்பிட்டு நிகழ்ச்சிகள் நடத்திறம். தாராளமாய் எம்மவர் நிகழ்ச்சிகளை நடாத்தி அவர்கள் நிகழ்ச்சிக்கு வரும் வருமானத்தை பெற்றுக் காட்டுங்களேன். முடியுமா உங்களாால். சும்மா வாய்ச் சவடாலில் ஒன்றும் சாதித்து விட முடியாது. பாரதிராசா எம்மவர்களில் கொண்ட அன்பினால் கொஞ்சம கூடுதலாகவே சொன்னார் என்பதற்கா உண்மைகள் பொய்யாகி விடுமா. முதலில் உங்கள் வாதங்கள் சரிப்பட்டு வராததால் இப்ப அவரை உதவிக்கு அழைக்கின்றீர்களோ??

தமிழ் சினிமாவில் 10 படங்களை ஒரே தடைவையில புரடீயூஸ் பண்ணிற ஒரு நிறுவனம் ஈழத்தமிழ் நிறுவனம். அந்த நிறுவனத்தை வளர்த்தது தமிழக மக்கள் இல்லை புலத்து தமிழர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த நிறுவனம் என்ன தொழில் செய்து வளர்ந்ததுங்க. அதன் மூலத்தனம் என்னங்க?? அந்நிறுவனம் தற்போது ஒரே தடவையில் பல படங்கள் தயாரிப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு. அது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதை நானும் இங்கே எழுதி கருத்தின் போக்கை தேவையில்லாது திசை திருப்ப விரும்பவில்லை. அதுபோல் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நாக் ரவி போன்ற இந்தியத் தமிழர்கள் தான் படங்களைத் திரையிடுகின்றார்கள் என்ற உண்மை கூட உங்களுக்குத் தெரியவில்லை.

புலத்தில் செய்தியாளர்களை வைத்து இணையத்தளம் நடாத்தும் எம்மவர் இணையத்தளங்களை எனக்குத் தெரியாதென்று தானே ஏற்கனவே நான் கூறியுமுள்ளேன். உங்களுக்குத் தெரிந்திருந்தால் எடுத்த விடுறது நாங்களும்அறிந்து கொள்வோமில்ல.

"உண்ணாவிரதத்துக்கு போறதும் போகாததும் அவங்கட உரிமை! அதை போல ஈழத்தமிழர் படத்தை புறக்கணிப்பினம் விடுவினம் அது எங்கட உரிமை"! உண்மை தான். ஆனால் உங்கடை பறக்கணிப்புப் போராட்டங்கள் எத்தனை வெற்றியடைஞ்சவை என்றதையும் எடுத்து விடுறது. அவை ஏன் தோல்வியில் முடிந்தன என்ற அடிப்படைகளை ஆராய்ந்து அவற்றைத் திருத்திக் கொள்ளாமல் மேலும் மேலும் அதே தவறுகளைத் தான் சேய்வேனென்று பிடிவாதம் பிடித்ததால் யாருக்கு நட்டம்.

vasampu

வெளி நாடுகளில், ஏன் இப்போது எல்லா உலக நாடுகளிலும் தான் வேலை செய்யும் எந்த ஸ்தாபனங்களில் எடுத்தாலும் குழுவினராய் இருக்கும் ஒரு ஸ்தாபனத்தின் ஊளியர்கள் வேலை சம்மந்தமான ஒரு குறிப்பிட்ட ஓர் இலக்கை அடைவதற்கு ''ரீம் வேக் '' தான் முக்கியம் என்று சொல்வார்கள், அது இல்லாவிட்டால் இலக்கை அடைய முடியாது என்பது101% உண்ணை. தமிழ் திரைப்பட வளர்ச்சியில் ரீம் வேக் காகச் செயற்படுவதில் நாங்களும் ஒர் அங்கம். அப்படி இருக்கும் போது எங்களை தள்ள்வைத்து விட்டு அவர்கள் மாத்திரமே அவர்களின் வளர்ச்சியில் உரிமை கொண்டாடுவது முட்டாள்தனம்...!

உங்கள் திருமண உதாரணம் இதற்கு முற்றிலும் எதிரான உதாரணமும் கூட..., பல ஐம்பது ரூபாய்கள் தான் லட்சமாக மாறுவது புரியவில்லையா....!

இளங்கவி

இதிலை எங்கை Team work வருதென்று எனக்கு புரியவில்லை. உப்படிப் பார்த்தால் எல்லாவற்றையும் அப்படித் தான் சொல்ல வேண்டிவரும். நான் காட்டிய திருமண உதாரரணத்தில் இலட்சம் சேருவதற்கு 50 ரூபா மொய்யும் உதவுகின்றதே தவிர இந்த 50 ரூபா மொய்யால் தான் திருமணமே நடந்ததாக சொல்வதல்லல. நீங்கள் எம்மவர் கொடுக்கும் பணத்தினால்த் தான் நடிகர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது என்று எழுதியது தவறென்று ஒத்துக் கொள்கின்றீர்களா? தமிழ்த் திரைப்படத்ததின் வியாபாரத்தில் குறைந்தது 60-65 வீத வியாபாரம் எம்மால் நடந்தால் உங்கள் கூற்றுச் சரி. ஆனால் 5 வீதம் கூட எம்மால் நடைபெறாத ஒரு விடயம் நம்மால் தான் தீர்மானிக்கப்படுகின்றது என்பது எவ்வளவு அபத்தம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களைப் பொறுத்தவவரை உண்மைகள் தெரிந்தாலும் நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்பது தான் உங்கள் (விதண்டா) வாதம். நன்றி வணக்கம்.

Edited by Vasampu

தீபாவளி, தைப் பொங்கல், எங்கள் புது வருடம் போன்ற எங்கள் சமய, கலாச்சார நிகழ்வுகளைச் சொல்லிக் கொடுக்கும் வீடுகளில் தான் எங்கள் தாய் நாட்டைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்கள். பிள்ளைகளுக்கும் அந்த நிகழ்வுகளின் பின்னணி என்று தெரிய வரும் என்பதை மறை முகமாகச் சொல்லியிருந்தேன் உங்களால் அதை விளங்கிக் கொள்ளமுடியாதது வருத்தமே..!

இந்த நாட்டில் பிறந்த பிள்ளைகள் மற்றும் சிறுவயதிலேயே இங்கே வந்த பிள்ளைகள் எத்தனையோ பேர்கள் எத்தனை படைப்புக்கள், ஆக்கங்களை தந்து எங்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போரடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா...!

தீபாவளி,தைப்போங்கல் கொண்டாடும் குடும்பங்கள் எல்லாம் தமது பிள்ளைகளூக்கு ஈழத்தையும், பிரச்சனைகளையும் சொல்லி குடுக்கிறார்கள் என்பது சும்மா இங்கு கதைக்கு வேணும் எண்டால் நீங்கள் சொல்லலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நானும் ஈழத்தில் இருந்து தான் வந்தவன். ஈழ தமிழ் குடும்பங்களின் நிகழ்வுகாளில் அல்லது அவர்களால் ஒழுங்கு செய்யப்படும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். அவளின் குழந்தைகள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். சிறு குழந்தைகளை விட 15- 23 வயதுகுட்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமது பெற்றோர் சிறிலங்காவில் இருந்து வந்தவர்கள் என்று தெரிந்திருக்கிறது. அங்கு சண்டை நடைபெறுக்கிறது என்று தெரியும். ஆனால் அதற்கு மேல் எதுகும் தெரியாது, பிரச்சனையின் ஒரு மேலோட்டமான அடிப்படை தன்னும் தெரியாது. ஆனால் அவார்களுக்கு நவராத்திரி தெரியும், சிவராத்திரி தெரியும், தீபாவளி தெரியும், தைப்போங்கல் தெரியும்.

பறவைகள், இளங்கவி,

இங்கு நடிகார்களுக்கு யாரும் வக்காலத்து வாங்கவில்லை. எமது போராட்டம் இக்கட்டான கால கட்டத்தில் இருக்கும் போது எழுந்தமானமான/ சரியான திட்டமிடல்கள் இல்லாத புறகணிப்புக்கள், எமக்கு சாதகமாக முடிவதிலும், பாதகமாக முடியவே சந்தர்ப்பங்கள் அதிகம். கடந்தகாலத்தில் நடந்தவற்றில் இருந்து எதையும் கிரகித்து எதிர்காலத்திட்டமிடல் இல்லை என்றால்??/ மேலும் பேசி பிரயோசனம் இல்லை.

உண்மையில் புறக்கணிக்க அழைப்பு விடுத்தாலும் ஒரு சிலர் தான் அதை செவிமடுப்பர். ஏனையவர்கள் கவனிக்கவே மாட்டார்கள். அப்படியாயின் அந்த புறக்கணிப்பு வெற்றி பெறாது. இங்குள்ள பெரும்பான்மை இளம் சந்ததிக்கு ஏன் இவ்வாறு செய்யவேண்டும், எமது பிரச்சனை என்ன என்ற பல அடிப்படைகள் தெரியாத போது சும்மா புறக்கணியுங்கள் என்று சொன்னால் கேட்டு உங்கள் அழைப்புக்கு செவி சாய்க்க அவர்கள் ஈழத்தில் இருந்து 10 வயதிலோ இல்லை 20- 30 வயதிலோ வந்தவர்கள் அல்ல ஈழப்பிரச்ச்சனை பற்றி தெரிய. ஏன் பல பெரியவர்களே அதை பற்றி எந்த கவனமும் இல்லாது இருக்கும் போது???

இங்கு புறக்கணிப்புஎன்று சொல்வது அண்மைய உதாரணத்துக்கு தான். பிறக்கு நான் அதிலேயே தொங்கி கொண்டிருக்கிறேன் எண்டு நீங்கள் பிரதான விடய கருத்தை விட்டிட்டு வாலிலை தொங்கி கொண்டிருக்க வேண்டாம்.

கனடாவில இருக்கிற 3.5 .... 4 லட்சம் சனத்தில 1 லட்சம் சனம் தியேடரில போய் படம் பாக்குமா?

1 டிக்கற்றுக்கு 10 கனடிய வெள்ளிப் படி போட்டால் 1 மில்லியன் வரும். அந்த 1 மில்லியனில் தியேட்டர் வாடகை இதர செலவுகள் கனடாவில் உரிமை வேண்டியவர் இலாபம் எல்லாமாக 60 வீதத்தை ஒதுக்கினால் மிகுதி 40 வீதம் தயாரித்தவரிற்கு தானே போகுது. அதாவது 4 லட்சம் கனேடிய வெள்ளிகள்?

இப்படி ஒரு கணக்கை (60 +40) பிரித்தானியாவிலும் தமிழர்கள் அதிகமாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளிற்கும் போடலாம்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை நம்பி கோடம்பாக்கம் இயங்கவில்லை என்பது சரி. இந்திய சந்தை மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் சந்தை என்பவையே படங்கள் இலாபமாக முடிய போதும் என்றதும் நியாயமானது தான். இந்த நிலையில் அதே படைப்பை மேலதிகமா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிற்கு சந்தைப்படுத்துவதால் கிடைப்பது அனைத்தும் மேலதிக இலாபம். அதாவது மேல போட்ட உதாரணமான அண்ணளவான 4 லட்சம் கனடிய வெள்ளிகளும் மேலதிகமாக கிடைக்கும் இலாபம்.

இங்கு கவனிக்க வேண்டியது புலம்பெயர்ந்த தமிழர்களை நம்பி கோடம்பாக்கம் இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் அல்ல. எமது மொத்த திரைப்பட நுகர்வுப் பலம் (spending power) என்ன? அது ஏலவே இந்தியர்களை நம்பி தயாரித்த படைப்பை எமக்கும் சந்தைப்படுத்தி economy of scale மூலம் எப்படி கோடம்பாக்கத்திற்கு இலாப்பத்தை அதிகரிக்கிறது என்பதையே.

படத்தயாரிப்பளார்கள் காப்புரிமைகாறர்கள் ஐரோப்பா கனடாவில் இயங்கும் தமிழர் தொலைக்காட்சிகள் வானொலிகள் திரைப்பட பாடல்களை ஒலி ஒளிபரப்புவதற்கு அனுமதி பெறாது செய்கிறார்கள் (அதாவது தனியாரின் வீட்டுப்பாவனைக்கு (domestic use) என வேண்டிய இறுவெட்டுகள் அல்லது கள்ளப் பிரதிகள்?). இதை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெருந்தன்மையுடன் கவனம் எடுக்காது இருக்கிறார்கள்? எமது வானொலிகளும் தொலைக்காட்சிகளும் அவர்களுது பெருந்தன்மையில் லட்சம் லட்சமாக இலாபம் எடுக்கிறார்கள்? :unsure:

எமது புலம்பெயர்ந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் பாரிய அளவில் இலாபத்தோடு (fat profit margin) இயங்கினால் நிச்சையமாக இப்படிப்பட்ட திருட்டுகளிற்கு சம்பந்தப்பட்ட படைப்புகளின் காப்புரிமையுடையவர்களின் முயற்சியால் சட்டத்தை எதிர்கொள்ளுவார்கள். ஆனால் அப்படி நடக்காது இருப்பதற்கு காரணம்

-1- எமது வானொலிகளும் தொலைக்காட்சிகளின் இலாபமீட்டல் என்பது கவலைக்குரிய நிலையில் உள்ளது. இப்படிப்பட்டவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று நேரம் பொருளாதாரத்தை செலவளித்த அளவிற்கு ஏற்ப பெரிதாக பொருளாதார ரீதியில் எதையும் மீளப்பெற முடியாது.

-2- இப்படி களவெடுத்து ஒலி ஒளிபரப்பப்படும் படைப்புகள் தயாரிப்பாளர்களிற்கு இலவச விளம்பரத்தை கொடுக்கிறது கலைஞர்கள் மற்றும் படைப்புகள் பற்றி.

எமது தொலைக்காட்சிகளும் வானொலிகளும் களவெடுத்து ஊட்டுவது தயாரிப்பாளர்களும் வினியோகித்தர்களும் திரையரங்குகளிற்கு வரவழைக்க வேண்டிய அதே மக்கள் கூட்டத்தை நோக்கித்தான். அதனால் தான் அவர்கள் இறுதியில் இலாபம் யாருக்கு என்று கணக்குப் போட்டுவிட்டு கண்டும் காணாமலும் இருக்கிறார்கள் அன்றி பெருந்தன்மையால் அல்ல. :unsure:

Edited by kurukaalapoovan

தனியே படங்களை திரையிட்டு கிடைக்கு வருமானம் மாத்திரமல்ல.

கலைஞர்களை எம்மவர்கள் கூப்பிட்டு நடத்தும் நிகழச்சிகள் எல்லாம் அவர்களால் இலவசமாகவா செய்து கொடுக்கப்படுகிறது? அதில் அவர்கள் 1...2 நாள் நிகழ்ச்சிக்கு அறவிடும் தொகை என்ன (அதுவும் வரமான வரி எதுவும் இன்றி)?

எமது வானொலிகளும் தொலைக்காட்சிகளும் இலசவசமாக (களவெடுத்து) எமக்கு வருடத்தில் 365 நாட்களும் இரவு பகலாக இந்தக் கலைஞர்களின் படைப்பை திணிக்காவிட்டால் எமக்கு அவர்கள் பற்றி ஆர்வம் இருக்குமா? அவர்களமு நிகழ்ச்சி என்று 50 வெள்ளிகள் 100 வெள்ளிகள் என்று செலவளித்து போய் பார்ப்போமா?

எமது நுகர்வுப் பலத்தை எப்படி எமது தேசியத்திற்கு ஆதரவாக பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். புலம்பெயர்ந்துள்ள கிட்டத்தட்ட 1 மில்லியன் ஈழத்தமிழரின் நுகர்வு (பொருட்களாக இருக்கட்டும் சேவைகளாக இருக்கட்டும்) பலத்தை குறைத்து மதிப்பிடத் கூடாது.

தாயக சந்தையில் (home market) இலாபத்தோடு இயங்க முடிந்த நிறுவனங்கள் தான் அதே பொருட்களை சேவைகளை ஏனைய சந்தைகளிற்கும் வியாபாரம் செய்து economy of scale மூலம் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கோடு விரிவாக்கம் செய்கிறார்கள் வெற்றி பெற்றால் பல் தேசிய நிறுவனங்களாக மாறுகிறார்கள்.

Edited by kurukaalapoovan

கனடாவில இருக்கிற 3.5 .... 4 லட்சம் சனத்தில 1 லட்சம் சனம் தியேடரில போய் படம் பாக்குமா?

1 டிக்கற்றுக்கு 10 கனடிய வெள்ளிப் படி போட்டால் 1 மில்லியன் வரும். அந்த 1 மில்லியனில் தியேட்டர் வாடகை இதர செலவுகள் கனடாவில் உரிமை வேண்டியவர் இலாபம் எல்லாமாக 60 வீதத்தை ஒதுக்கினால் மிகுதி 40 வீதம் தயாரித்தவரிற்கு தானே போகுது. அதாவது 4 லட்சம் கனேடிய வெள்ளிகள்?

நீங்கள்கொடுத்த விளக்கம் தவறானது. வெளிநாட்டு உரிமம் குறிப்பிட்ட விலைக்கு ஒருவர் வாங்கும் போது அதனால் வரும்் இலாபம், நட்டம் அனைத்தும் வாங்கி வெளியிட்டவருக்கே போகின்றது. வெளிநாட்டு உரிமையை விற்று வரும் பணம் மட்டுமே தயாரிப்பாாளருக்குப் போகின்றது. பிறகு எப்படி உங்கள் கணக்கு சரியாகும்.

யாராவது நட்டப்படப் போறம் எண்டு கணக்கு போட்டுக் கொண்டு எதிலாவது செலவளிப்பார்களா முயற்சிப்பார்களா? தயாரித்தவருக்கும் குறித்த சந்தைக்கான உரிமை பெறுபவருக்கும் இடையிலான விலை உடன்பாடு market potential ( அதாவது எமது நுகர்வுப் பலத்தைப் பொறுத்துத்தான்) இல்தான் தீர்மானிக்கப்படும்.

உதாரணத்திற்கு

ஒருவர் 5 லட்சம் கனடிய வெள்ளி கொடுத்து உரிமையை பெறுகிறார்

1 லட்சம் தியேட்டர் வாடகை உட்பட்ட இதர செலவுகள்

என்றால் 6 லட்சத்தை முதலீடு செய்து எடுக்கப்படும் முயற்சியில் 7 லட்சம் வருமானம் - 1 லட்சம் இலாபம் என்று இயங்க முடியுமா?

6 லட்சம் முதலிற்கு எந்தவித risks உம் அற்ற சாதாரண வங்கி வட்டி என்ன? அல்லது ஏனைய குறைந்த risks வியாபார முயற்கிளின் இலாபம் profit margin என்ன?

இவற்றை விட இந்த முயற்சிக்கு அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் ஒருதரால் இந்த தொழில்துறையில் நிலைக்க முடியாது.

நீங்கள் குழம்பிக் கொள்வது ஒரு வியாபார கொடுக்கல் வாங்கலில் எப்படி risks & liabilities அய் மட்டுப்படுத்துவது என்பதில்?

நீங்கள் தான் குழம்பிப் போய் பதலளிக்கின்றீர்கள். நீங்கள் சொல்லும் முறை முன்பு நடைமுறையில் தமிழகத்தில் மட்டுமே (வெளிநாடுகளுக்கு அல்ல) இருந்தது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஒரு படம் எவ்வளவு இலாபம் சம்பாதித்தது என்பதை தயாரிப்பாளர் எதை வைத்து அறிந்து கொள்ள முடியும். விநியோகிப்பவர் சொல்லும் கணக்கை அவர் ஏற்றுக் கொள்ள முடியுமா?? அதனால் குறிப்பிட்ட விலையைத் தீர்மானித்து அது விற்கப்படுகின்றது. சில வேளைகளில் விநியோகித்தவருக்கு நட்டம் வந்தது என்று ஆதார பூர்வமாக தெரிந்தால் அந்த தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை விநியோகத்தருக்கு குறைந்த விலையில் கொடுத்திருப்பதும் நடந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் கூட ஒரு நடிகரின் மார்கட்டை வைத்தே படத்தின் விலை தீர்மானிக்கப் படுகின்றது. சமீபத்தில் குசேலன் படத்தால் தங்களுக்கு நட்டம் என்று விநியோகித்தவர்கள் ஒரு பகுதி பணத்தை திரும்பிக் கேட்டதை நீங்கள் அறியவில்லையா?? ஆனால் தற்போது நீங்கள் சொல்லும் முறை வெளிநாடுகளில் இல்லவேயில்லை. உங்களுக்குத் தெரிந்த படத்தை வாங்கி்த் திரையிடுபவர்கள் யாராவது இருந்தால் அதனைத் தாராளமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

தனியே படங்களை திரையிட்டு கிடைக்கு வருமானம் மாத்திரமல்ல.

கலைஞர்களை எம்மவர்கள் கூப்பிட்டு நடத்தும் நிகழச்சிகள் எல்லாம் அவர்களால் இலவசமாகவா செய்து கொடுக்கப்படுகிறது? அதில் அவர்கள் 1...2 நாள் நிகழ்ச்சிக்கு அறவிடும் தொகை என்ன (அதுவும் வரமான வரி எதுவும் இன்றி)?

எமது வானொலிகளும் தொலைக்காட்சிகளும் இலசவசமாக (களவெடுத்து) எமக்கு வருடத்தில் 365 நாட்களும் இரவு பகலாக இந்தக் கலைஞர்களின் படைப்பை திணிக்காவிட்டால் எமக்கு அவர்கள் பற்றி ஆர்வம் இருக்குமா? அவர்களமு நிகழ்ச்சி என்று 50 வெள்ளிகள் 100 வெள்ளிகள் என்று செலவளித்து போய் பார்ப்போமா?

எமது நுகர்வுப் பலத்தை எப்படி எமது தேசியத்திற்கு ஆதரவாக பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். புலம்பெயர்ந்துள்ள கிட்டத்தட்ட 1 மில்லியன் ஈழத்தமிழரின் நுகர்வு (பொருட்களாக இருக்கட்டும் சேவைகளாக இருக்கட்டும்) பலத்தை குறைத்து மதிப்பிடத் கூடாது.

தாயக சந்தையில் (home market) இலாபத்தோடு இயங்க முடிந்த நிறுவனங்கள் தான் அதே பொருட்களை சேவைகளை ஏனைய சந்தைகளிற்கும் வியாபாரம் செய்து economy of scale மூலம் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கோடு விரிவாக்கம் செய்கிறார்கள் வெற்றி பெற்றால் பல் தேசிய நிறுவனங்களாக மாறுகிறார்கள்.

இந்தியக் கலைஞர்கள் யாராவது தம்மை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துங்கள் என்றோ அல்லது தமது படங்களை வாங்கி வெளியிடுங்கள் என்றோ எம்மைக் கேட்டார்களா?? நாங்களாகத் தானே இவ்வளைவையும் செய்கின்றோம். ஏன் பணம் கிடைப்பதால்த் தானே?? எங்களால் அவர்களுக்குக் கிடைப்பது உபரி வருமானமே. ஆனால் நாங்கள் அவர்களை வைத்து எவ்வளவு சம்பாதிக்கின்றோமென்பது உங்களுக்்குத் தெரியவில்லையா?? அவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தும் போது அவர்களுக்கும் அதற்குரிய பணத்தை கொடுக்கத் தானே வேண்டும். அவர்கள் வருமான வரி அதற்கு கட்டுகின்றார்களோ இல்லையோ நாம் கட்டுகின்றோமா?? இவ்வளவு பேசுபவர்கள் எமது தாயகக் கலைஞர்களை அழைத்து பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடாத்தலாமே?? ஏன் முடியவில்லை. எம்மால் இந்தியக் கலைஞர்கள் உயருகின்றார்கள் என்றால் ஏன் எமது கலைஞர்களை எம்மால் உயர்த்த முடியவில்லை. சற்று விளங்க வைப்பீர்களா??

கனடாவிலுள்ள அநேகமான வானொலிகள் விளம்பரதாரர்களால் இலாபத்திலேயே நடக்கின்றது. அவர்கள் பாடல் ஒலிபரப்புவதற்கரரிய காசை தயாரிப்பாளருக்கு கொடுக்கின்றார்களா??

பங்கு மார்கட் வியாபாரத்தையும் திரைப்படத் தொழிலையும் போட்டு நீங்களும் குளம்பி மற்றவர்களையும் குளப்புகின்றீர்கள்.

இன்று எமது விடுதலை கீதங்களை உணர்ச்சியோடு பாடுவதற்கே தேனிசை செல்லப்பா என்ற ஒரு இந்தியக் கலைஞன் தான் தேவைப்படுகின்றார். இந்த இலட்சணத்தில் எம்மால் தான் இந்திய சினிமா வாழ்கின்றது என்பது போல் சிலர் எழுதுவது உங்களுக்கே ரொம்ப அதிகமாகத் தெரியவில்லையா??

அண்ணா நீங்கள் எல்லாரும் மூச்சு வாங்க எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஈழத்தமிழினம் தான் தமிழ் சினிமா வளத்ததுண்டு அவங்க தான் சொல்லுறாங்க சத்தியமாய் நான் சொல்லல!

அதை போன கிழமை பாரதிராஜா கூட சொல்லியிருந்தார். படத்தை விடுவம்,

இதை என்னடா யாரும் சொல்லேல்லையே எண்டு பாத்தான் நீங்கள் சொல்லி போட்டியள். :unsure:

கொஞ்சம் ஆற அமர இருந்து யோசியுங்கோ எல்லாம் விளங்கும். உண்மையை எதிர்கொள்ள தைரியம் இல்லை எண்டதுக்காக இல்லததை இருக்குது எண்டு சொல்ல கூடாது.

இங்க யாரும் எங்களால் தமிழ் சினிமா துறைக்கு வருமானம் கிடைகேல்லை எண்டு சொல்ல இல்லை.

ஆனால் நாங்கள் தான் தமிழ் சினிமாவை, மற்றும் நடிகர் மாரை வளர்த்து விட்டம் எண்டுறது அதிக பிரசங்கிதனம்.

சொல்ல போனா இஞ்சை (புலம் பெயர் தமிழர்) எல்லாரும் வெண்ட குதிரையிலை (தமிழ் நாட்டு ரசிகரால பிரபலமான நடிகரின் படம்) பந்தயம் கட்டுற ஆக்கள் தான்.

பிறகு எப்பிடி நீங்கள் தான் வளர்த்தியள் எண்டு சொல்லுற??

ஏன் ஆணிவேரிலை நடிச்ச நந்தா இன்னும் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா எண்ட நிலையிலை தான் இருக்கிறார் எண்டதையாவது பாக்க விளங்கேல்லையோ? யார் யாரை வளக்கிற எண்டு.

குறுக்காலபோவான் புலம் பெயர் தமிழரின் நுகரும் திறன் குறைந்தது அல்ல. அதை நான் குறைத்து மதிப்பிட வில்லை

( இது உடனடியான பிரச்சனை இல்லை. ஆனால் தொலை நோக்கில் சிந்திக்க வேண்டியது : புலம் பெயர் தமிழரின் முதலாம் சந்ததியின் (ஈழத்தில் இருந்து நேரே வந்தவர்கள் அல்ல, இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்) பின் அந்த நுகரும் திறன் இருக்குமா? இங்கு பிறந்த முதல் சந்ததியின் ஒரு பகுதி தான் எங்கள் பிரச்சனையை தெரிந்து இருக்குது. அப்ப இரண்டாம் சந்ததி எப்பிடி இருக்கும்?? குறைந்தது இங்கு பிறந்த முதலாம் சந்ததியில் பெரும் பகுதியை ஈழ தமிழர் எண்ட பகுதிக்கை கொண்டு வந்தால் தான் 2 ஆம் சந்ததிலை ஒரு சிறு பகுதியை ஆவது கொண்டு வரலாம்)

நடிகர்கள் - தயாரிப்பாளர் - வினியோகித்தர்(கள்) - குறித்த சந்தை உரிமையாளார்கள் - அந்த சந்தையில் உள்ள ரசிகர்களின் நுகர்வுப் பலம் என்பது தான் பெறுமதிச் சங்கிலி.

குறித்த நடிகர் தமிழ்நாட்டில் பிரபல்யமாக இருப்பதற்காக கனடாவில் யாரும் படம் பார்க்க போக மாட்டார்கள். தமிழ்நாட்டில் பிரபல்யமாக இருப்பவரை கனடாவிலும் சந்தைப்படுத்தி பிரபல்யப்படுத்தி கனடா மக்கள் தூண்டப்பட்டு ஒரு market potential இருந்தால் தான் கனடாவில் திரையிடும் உரிமையை பணம் கொடுத்து வேண்டியவருக்கு வருமானம். கனடா சந்தையில் பெற்றுக் கொள்ள முடியாத வருமானத்திற்கும் அந்த வியாபார முயற்சியில் ஈடுபடுவர் எதிர்பார்க்கும் இலாபத்திற்கும் பொருத்தமற்ற ஒரு விலையில் எந்த வினியோகித்தரும் ஒன்றையும் விற்க முடியாது. அப்படி வித்தாலும் அதை வேண்டியவர் அடுத்த படம் வேண்டுவதற்கு அவரிடம் முதல் இருக்காது. நட்டத்தோடு ஒருவராலும் எந்த வியாபார முயற்சியிலும் நிலைக்க முடியாது. இந்த அடிப்படைதான் நடிகரின் விலை முதல் ஒரு குறித்த சந்தையின் ஒரு காட்சிக்கான விலை முதல் (ரசிகர்களின் சராசரி வருமானத்திற்கு ஏற்றதாக) தீர்மானிக்கப்படுகிறது.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகித்தர்கள், குறித்த சந்தை உரிமையாளர்கள் எல்லோரும் ஏற்கனவே ஓடிய படங்கள் மூலம் எவ்வளவு வருமான ஒவ்வொரு சந்தையிலும் பெறப்பட்டது என்று கணக்குப் போட்டுத்தான் தத்தமது விலைகளை தீர்மானிக்கிறார்கள். எவரும் எந்தவித வியாபார மூலதன இலாப நட்ட அடிப்படை இன்றி எதேர்ச்சையாக ஒரு தொகையை இன்னொருவர் கேட்டுவிட்டார் என்பதற்காக கொடுக்கப் போவதில்லை. முன்னைய படங்களின் வியாபார வெற்றி தான் அடுத்ததற்கான விலையை தீர்மானிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் விவாதம் சுவார்ஷியமாக போகின்றது. தமிழ் திரைபடங்கள் புலத்தில் வாழும் பிள்ளைகளுக்கு நமது மொழி,கலை கலாச்சார விழுமியங்களை காப்பாற்ற உதவுகின்றது என்று நான் நினைக்கின்றேன். இதில் உங்கள் கருத்து என்ன??

எங்களால் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்பது தவறு மிகைப்படுத்தப்பட்டது. அவர்களிற்கு எமது நுகர்வுப் பலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் உபரியாக இருந்தாலும் கணிசமானது. இந்த உரிமையில் நாம்மவர்கள் தமது நலன் சார்ந்த விடையங்களில் அவர்கள் நிலைப்பாடு என்ன அது பற்றி என்ன செய்கிறார்கள் என்பது பற்றி எதிர்பார்ப்புகளை கொள்வது தவறு அல்ல.

எமது கலைஞர்களை ஊக்குவிக்காது இருக்கும் எம்மவர் நடத்தை பற்றிய ஆதங்கம் தான் எனதும்.

Edited by kurukaalapoovan

எவரும் எந்தவித வியாபார மூலதன இலாப நட்ட அடிப்படை இன்றி எதேர்ச்சையாக ஒரு தொகையை இன்னொருவர் கேட்டுவிட்டார் என்பதற்காக கொடுக்கப் போவதில்லை.

வாஸ்தவம் தான். நீங்கள் மேசைக்கு மேலால இப்பிடி இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு நினைச்சு கணக்கு போடுறீங்கள் கனேடியன் வெள்ளியில... மேசைக்கு கீழால என்ன நடக்கிது எண்டு ஒருவருக்குமே தெரியாது. எங்கட பெடியங்கள் தமிழ் விசன் தொலைக்காட்சியை இரண்டு Semester களுக்கு Case Study செய்ய - படிக்கிறதுக்கு கேட்டாங்கள். கிட்ட அணுகவும் முடிய இல்ல.

மேலும், நீங்கள் சொல்லிற Regulations ஐ கொண்டுவாறது எல்லாம் கனேடிய மற்றும் இதர நாடுகளின் தனித்தனி சட்ட சரத்துக்களுக்கு ஏற்ப வரும்போது... அது தமிழ்த்தேசியம் எண்டுற ரீதியாக Collective ஆக சாதகமான பலன்களை கொண்டுவரும் எண்டு இல்லை.

லட்டக்கணக்கில சனத்தொகை சொல்லுறீங்கள். இதில எத்தின லட்சம் active ஆக தாயகபிரச்சனை பற்றி ஏதாவது தெரிஞ்சு இருக்கிது எண்டுறதே கேள்விக்குறி. இஞ்ச தமிழ்விசன் மாதிரி ஏ.ரீ.என். - அம்மா ரீவியும் அந்த மாதிரி ஓடுது. அப்ப பின்ன பண்ணிப்பாருங்கோவன்.

நடிகர்கள் - தயாரிப்பாளர் - வினியோகித்தர்(கள்) - குறித்த சந்தை உரிமையாளார்கள் - அந்த சந்தையில் உள்ள ரசிகர்களின் நுகர்வுப் பலம் என்பது தான் பெறுமதிச் சங்கிலி.

குறித்த நடிகர் தமிழ்நாட்டில் பிரபல்யமாக இருப்பதற்காக கனடாவில் யாரும் படம் பார்க்க போக மாட்டார்கள். தமிழ்நாட்டில் பிரபல்யமாக இருப்பவரை கனடாவிலும் சந்தைப்படுத்தி பிரபல்யப்படுத்தி கனடா மக்கள் தூண்டப்பட்டு ஒரு market potential இருந்தால் தான் கனடாவில் திரையிடும் உரிமையை பணம் கொடுத்து வேண்டியவருக்கு வருமானம். கனடா சந்தையில் பெற்றுக் கொள்ள முடியாத வருமானத்திற்கும் அந்த வியாபார முயற்சியில் ஈடுபடுவர் எதிர்பார்க்கும் இலாபத்திற்கும் பொருத்தமற்ற ஒரு விலையில் எந்த வினியோகித்தரும் ஒன்றையும் விற்க முடியாது. அப்படி வித்தாலும் அதை வேண்டியவர் அடுத்த படம் வேண்டுவதற்கு அவரிடம் முதல் இருக்காது. நட்டத்தோடு ஒருவராலும் எந்த வியாபார முயற்சியிலும் நிலைக்க முடியாது. இந்த அடிப்படைதான் நடிகரின் விலை முதல் ஒரு குறித்த சந்தையின் ஒரு காட்சிக்கான விலை முதல் (ரசிகர்களின் சராசரி வருமானத்திற்கு ஏற்றதாக) தீர்மானிக்கப்படுகிறது.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகித்தர்கள், குறித்த சந்தை உரிமையாளர்கள் எல்லோரும் ஏற்கனவே ஓடிய படங்கள் மூலம் எவ்வளவு வருமான ஒவ்வொரு சந்தையிலும் பெறப்பட்டது என்று கணக்குப் போட்டுத்தான் தத்தமது விலைகளை தீர்மானிக்கிறார்கள். எவரும் எந்தவித வியாபார மூலதன இலாப நட்ட அடிப்படை இன்றி எதேர்ச்சையாக ஒரு தொகையை இன்னொருவர் கேட்டுவிட்டார் என்பதற்காக கொடுக்கப் போவதில்லை. முன்னைய படங்களின் வியாபார வெற்றி தான் அடுத்ததற்கான விலையை தீர்மானிக்கிறது.

நான் ஒரு நடிகரின் மார்கெட் நிலவரத்தை வைத்தே படத்தின் விலை தீர்மானிகப்படுகின்றதென்று நேராகத் தொட்ட மூக்கை நீங்கள் சுற்றி வந்து தொடுகின்றீர்கள். ஓடுற குதிரையை நம்பித் தான் எம்மவர் காசைப் போடுவினமே தவிர ஓடாத குதிரையிலில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. ஆனால் வெளிநாட்டு உரிமை விற்பனையின் பின் வேறெந்தப் பணமும் தயாரிப்பாளருக்குப் போவதில்லை. இது தான் உண்மை முதலில் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் எமது கலைஞர்கள் பற்றியும் சில விடயங்ககளையும் உங்களிடம் கேட்டிருந்தேனே. ஏன் அதைப் பற்றி ஒன்றையும் நீங்கள் சொல்லவில்லை.

அடுத்தது எனக்கொரு சந்தேகம் முன்பு நான் சிறுவனாக இலங்கையில் இருந்த போது "சங்கராபரணம்" என்ற ஒரு தெலுங்குப் படம் யாழ்ப்பாண சிறிதர் தியேட்டரிலை வந்து ஓடியது. அப்போ எங்கடை வீட்டாரும் நல்ல படமென்று எலல்லோரையும் கூட்டிக் கொண்டு போய் பார்த்தனாங்கள். இதற்கு முதல் தெலுங்குப் படங்களை எனது வீட்டுக்காரரோ உறவினரோ பார்த்தும் இல்லை. தெலுங்கு புரிவதும் இல்லை. படமும் நல்லாய் ஒரு மாதத்திற்கு மேல் ஓடியது. இப்ப நான் என்ன சொல்ல வாறன் என்பதும் புரிந்திருக்குமெண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் விவாதம் சுவார்ஷியமாக போகின்றது. தமிழ் திரைபடங்கள் புலத்தில் வாழும் பிள்ளைகளுக்கு நமது மொழி,கலை கலாச்சார விழுமியங்களை காப்பாற்ற உதவுகின்றது என்று நான் நினைக்கின்றேன். இதில் உங்கள் கருத்து என்ன??

நீங்கள் காமடி, கீமடி ஓண்ணும் பண்ணலைத்தானே!

குத்தாட்டம் போடுவதும், சுத்தி சுத்தி ஏர்ல பறந்து பறந்து அடிப்பதும் தமிழர்களின் கலாச்சார, விழுமியங்களில் இரிக்கு எண்ணு தெரியாமப் போச்சு!

நான் regulation பற்றிக் கதைக்கவில்லை. market forces பற்றித்தான் கதைக்கிறன். black, grey white என எப்படிப்பட்ட தரத்திலான வியாபார முயற்சிகளா இருந்தாலும் அதில் ஈடுபடுபவரிற்கு இலாபம் இருக்க வேண்டும். இலாபம் இன்றி ஒருவரும் ஒன்றிலும் ஈடுபடப் போவதில்லை.

புலம்பெயர்ந்த மக்களின் பொருளாதார நுகர்வுப் பலத்தை regulation மூலம் தேசியத்திற்கு திருப்ப முடியாது. ஒரு நாட்டின் பொருளாதார தேசிய நலனிற்காக இன்னொரு நாடு தனது நாட்டில் இருக்கும் மற்ற நாட்டவரை நோக்கி regulation pass பண்ணப் போவதில்லை. இந்த நிலையில் அங்கீகாரம் அற்ற போராட்ட நிலையில் இருப்பவர்களிற்கு பயன்பட என்று கனடாவில் regulation எல்லாம் pass பண்ண முடியது.

கருத்தியல் ரீதியில் மக்களை தெளிவு படுத்தி அறிவூட்ட வேண்டும். எமது பொருளாதார பலம் என்ன அதில் எந்தளவு எப்படி விரையமாகிறது. எமது நுகர்வு தேவைகளை (அத்தியாவசியமானது முதல் ஆடம்பரமானது வரை) பூர்த்தி செய்து தமிழர் அல்லாத வேறுயார் எப்படி எந்தளவில் பயன் அடைகிறார்கள். அதை எப்படி எமது நலன்களிற்கான திறவுகோலாக நெம்புகோலாக பயன்படுத்த முடியும் என்று நாம் தான் தேட வேண்டும் சிந்திக்க வேண்டும் முடிவுகள் எடுக்க வேண்டும்.

எமது நலன்களிற்கு சார்பாக வேறு நாடுகள் யாரும் சட்டங்கள் இயற்றப் போவதில்லை. எமது மக்களை கருத்துக்களால் வென்று தான் நலனை அறுவடை செய்ய முயற்சிக்கலாம். அதற்கு ஊடகங்களில் விவதாங்கள் கருத்துப்பகிர்வுகள் முயற்சிகள் இருக்க வேண்டும். ஆரம்ப முயற்சிகள் சிறிதாகவும் தோல்வியடைந்தவையாகவும் இருக்கலாம்.

1990 களில் மாவீரர் தினம் தற்பொழுது நடப்பது போன்ற அளவிலான பங்குபற்றலுடன் நடக்க வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. சினிமாக்காரரைப் பற்றியும், புலத்தில் அவர்களது பொருண்மியத் தாக்கத்தைப் பற்றியும் ஆய்வு செய்வது இருக்கட்டும்.. மூத்திரம் முட்டினாலும் பரவாயில்லை, நாளுக்கு ஒரு டொலர் மிச்சம் பிடித்து தாயகத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவலாம் என்று யாராவது முடிவு எடுத்திருக்கிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.