Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் ஆட்கள் காணாமல் போவதற்கு புதிய விளக்கம் கொடுக்கின்ற கனடா சிறீ லங்கா தூதுவர்..

Featured Replies

image009.jpg

மேலே படத்தில காணப்படுபவர் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத். இவர் 2006ம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போய் இருந்தார். இவர் போல் பல ஆயிரம் பேர்.. இது எத்தனை ஆயிரம் என்று கடத்தியவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் இப்படி கடத்தப்பட்டு காணாமல் போவதற்கு புது வியாக்கியானம் கொடுத்து இருக்கிறார் டொரண்டோவில் இருக்கும் இனவாத சிறீ லங்கா தூதுவர் பந்துல செயசேகர.

இவர் கூறுகின்றார் இப்படி காணாமல் போனவர்களில் ஒருவர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதை தாம் கண்டு பிடித்து இருக்கின்றோமாம். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கொழும்பில் எந்த தற்கொலை தாக்குதலில் இடுப்பில் குண்டைக் கட்டிக்கொண்டு இறங்கினார் என்பது பற்றி எதுவித தகவலும் அவர் தெரிவிக்கவில்லை.

கனடாவில் இருக்கின்ற தமிழர்கள் இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு Starbucks மற்றும் ரிம்கோர்டன் கோப்பிகளை தினம் நான்கு தடவைகள் வயித்தினுள் ஊத்திவிட்டு கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

தெய்விக நம்பிக்கை இந்தக்காலத்து மக்களுக்கு குறைவாகே இருப்பதே தமிழர்கள் உலகெங்கும் இப்படி கேவலப்படுத்தப்படுவதற்கு காரணம் என்று பிரபல அரசியல் வித்துவான் கு.போ கருத்து தெரிவித்துள்ளார். கனடாவில் அதிரடியாக நூறு அம்மா மற்றும் ஐயா பகவான் ஆச்சிரமங்களை அமைத்தல், பெருந்தெரு 401 இல் ஒரு ஓரமாக நீளமாக பாய் விரித்து அதில் போய் வருவர்களுக்கு வாழை இலை போட்டு அன்னதானம் கொடுத்தல், ரிச் மண்ட் மற்றும் கனடா கந்தசாமி கோயில்களுக்கு சோடி சோடியாக ஒருவர் பின் ஒருவராக தூக்குகாவடி எடுத்தல் இவ்வாறான இன்னோரன்ன முயற்சிகள் தமிழ் மக்கள் இருப்பை கனடாவில் பாதுகாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

தூதுவரின் வியாக்கியானம்:

Sri Lankan Consul General responds

National Post Published: Tuesday, October 28, 2008

Re: Finding Sri Lankas Disappeared, Oct. 27.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) are known to be the masters of propaganda. So it is not surprising that David Poopilapillai, spokesman for the Canadian Tamil Congress is calling for a UN monitoring mission, and is even blaming the Canadian High Commission in Colombo for problems there.

Sri Lanka is a democracy. The Sri Lankan Security Forces has no hand whatsoever in abducting its citizens, contrary to the reports of various interested parties. I challenge people like Mr. Poopilapillai to arrange a visit to the torture chambers and the prisons of the Tamil Tigers.

Recently, it was proved that one disappeared person turned out to be a suicide bomber. Keep in mind that Sri Lanka is fighting one of the most ruthless terrorist organizations in the world.

Tamil Tiger supporters in Canada continue to raise funds and harass innocent Sri Lankans. Visitors to the Sri Lankan Festival at the Harbourfront Centre in Toronto were recently harassed, as were members of a visiting Sri Lankan cricket team.

It is time for the Sri Lankan diaspora to stand up against the Tamil Tigers and exert pressure on them to stop the violence.

Bandula Jayasekara, Consul General for Sri Lanka, Toronto.

http://www.nationalpost.com/story.html?id=914168

பழைய செய்தி:

தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர்: "நசனல் போஸ்ட்"

[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:42 பி.ப ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் என்று கனடாவில் இருந்து வெளிவரும் "நசனல் போஸ்ட்" ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாலினி தம்பிப்பிள்ளையின் நான்கு வயது மகள் தொடர்ந்து ஒரே கேள்வியை தனது தாயாரிடம் கேட்டு வருகின்றார். எல்லா குழந்தைகளுக்கும் தந்தை உள்ள போதும் எனது தந்தை எங்கே? என்பது தான் அந்த கேள்வி.

சிறிலங்காவில் பலவந்தமாக காணாமல் போன பல நூறு பேர்களில் (ஏன் பல ஆயிரமாக கூட இருக்கலாம்) உனது தந்தையும் ஒருவர் என்ற பதிலை இந்த பாலர் பாடசாலைக்கு செல்லும் குழந்தைக்கு புரிய வைப்பது கடினமானது.

கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள நப்கின் தொழிற்சாலையில் தொழில் புரிந்து வரும் திருமதி தம்பிப்பிள்ளை, தனது கணவர் காணாமல் போன நாள் தொடக்கம் பலரிடமும் உதவிகளை கேட்டு தபால்களை அனுப்பியவாறு உள்ளார். அவரது கணவர் கடந்த மாதம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்.

எனக்கு எனது கணவர் வேண்டும், எனது குழந்தைக்கு அவரின் தந்தையார் வேண்டும் என ஸ்காபரோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வழங்கிய நேர்காணலின் போது அவர் தெரிவித்திருந்தார். அங்கு அவரின் கணவரின் புகைப்படம் காணப்பட்டது.

திருமதி தம்பிப்பிள்ளை ரொறன்ரோ நகருக்கு 1998 ஆம் ஆண்டு வந்திருந்தார். சிறிலங்காவில் 25 வருடங்களாக இடம்பெற்று வரும் போரில் இருந்து தப்பிப்பதற்காக கனடாவில் அடைக்கலம் புகுந்த பல ஆயிரம் தமிழ் மக்களில் இவரும் ஒருவர்.

இவர் 2003 ஆம் ஆண்டு சிறீதரன் சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவரும் ஏற்கனவே கனடாவிற்கு குடிபெயர்ந்திருந்தவர். ஆனால் அவர் கனேடிய குடிமகனாக தன்னை ஆவணப்படுத்தி கொள்ள முனைந்த சமயத்தில் அவரின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

சிறிலங்காவுக்கு திரும்பிய அவர் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததுடன், அவரை மீண்டும் கனடாவுக்கு வரவழைப்பதற்கான விண்ணப்பத்தை அவரின் மனைவி மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவுக்கான கனடிய தூதரகம் அவரை நேர்காணலுக்கு அழைத்திருந்த போதும் அவரின் விண்ணப்பம் தொடர்பான முடிவுகள் எதனையும் கனடிய தூதரகம் தெரிவிக்கவில்லை.

கடந்த செப்ரம்பர் மாதம் 19 ஆம் நாள் காலை 10:20 நிமிடமளவில் சுப்பிரமணியமும் அவரது நண்பர் ஒருவரும் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

இதே போன்ற ஏராளமான கதைகளை நாம் கேட்டுக்கொண்டிருந்கின்றோம் என கனடா தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரு சுயாதீனமான விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் சபை அமைத்து காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை.

சுப்பிரமணியத்தின் விண்ணப்பம் மீதான முடிவை எடுப்பதற்கு கனடா அரசு அதிக காலம் எடுத்ததும் கடத்தப்படுவதற்கு துணை போய் உள்ளதாகவும், இதில் கனடா நாட்டின் செயற்பாடுகள் தோல்வி கட்டுள்ளதாகவும் பூபாலப்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியத்துடன் கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுள்ள போதும், சுப்பிரமணியம் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை.

கொழும்பில் உள்ள அவரின் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும், தமது தடுப்புக்காவலில் சுப்பிரமணியம் இல்லை எனவும், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாது எனவும் காவல்துறையினர் கைவிரித்துள்ளனர்.

அவர் கடத்தப்பட்டதற்கான காரணங்களை என்னால் அனுமானிக்க முடியாது உள்ளது, எனது கணவர் சட்டத்திற்கு புறம்பாக செயற்படுவதில்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் அல்ல என திருமதி தம்பிப்பிள்ளை தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுவதாக முறைப்பாடுகள் உண்டு.

சிறிலங்காவில் உள்நாட்டு போர் ஆரம்பித்ததில் இருந்து பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை கண்ணாணிப்பகம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,500-க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சிறிலங்காவின் மனித உரிமை குழுக்களில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலனவை அரச படையினரின் தொடர்புக்கான ஆதாரங்களை தெளிவுபடுத்தியுள்ளன.

கடத்தப்பட்டவர்களில் சிலர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், மேலதிக விசாரணைகள் எதுவுமின்றி அவர்களை மறைவான இடங்களில் தடுத்து வைப்பதை நியாயப்படுத்த முடியாது.

அண்மைக்காலமாக சிறிலங்காவின் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. விடுதலைப் புலிகளை கனடா அரசும் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கடந்த மாதம் "நசனல் போஸ்ட்" ஏடு நேர்காணல் கண்ட போது, காணாமல் போனவர்களில் பலர் மேற்குலக நாடுகளுக்கு சென்றுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னக்கு ஒன்று தோன்றுது, "நசனல் போஸ்ட்"எங்களுடைய போராட்டதிக்கு எதிராகவே எப்பொழுதும் எழுதி வந்துகொண்டிருதது ,திடீரென இப்படி எழுதுவதை பார்த்து பிரமித்து போனேன் ஆனால் அந்த கனடா சிறீ லங்கா தூதுவர்.. கருத்தை போடவேண்டிய தேவைஇல்லை, அவரின் புலிகளுக்கு எதிரான கருத்தை போட வேண்டும் என்பதற்க்காக, தமிழரின் ஒரு துயர் கதைய போடிருக்கினம்

எங்கட ஆக்கள் தான் நசனல் போஸ்ட் paper delivary செய்கினம், போட வேண்டாம் என்று சொன்னால் , அவன் எழுதிற தா எழுதி போட்டு போகட்டும், இந்த தொழில நல்ல காசு என்று சொல்லுவினம்.

இப்படி தன்ற இனத்துக்கு துரோகம் செய்றதிலும் பார்க்க ரோட்டில இருந்து பிச்சை எடுக்கலாம்

  • தொடங்கியவர்

சீலன்,

நசனல் போஸ்ட் பத்திரிகையை தவிர்ப்பதால் நாங்கள் இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. Globe & Mail, Toronto Star, Sun எண்டு எல்லாத்திலையும் தான் சிங்கள இனவாதிகள் விசமத்தனமான கருத்துக்களை சொல்லிவருகின்றார்கள். இங்கு தவறு எங்கு நடக்கிது எண்டால் எங்கட ஆக்கள் ஆங்கில பத்திரிகைகளுக்கு கருத்து எழுதுவதில்லை. ஆனால் சிங்களவர்கள் கனடாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை செய்திக்கு வேறு நாடுகளில் இருந்து மிகவும் துவேசத்துடன் பதில் கருத்து எழுதுகின்றார்கள். விமர்சனம் செய்கின்றார்கள். கீழே பிரித்தானியாவில் இருந்து எழுதப்பட்ட ஒரு இனவாத கருத்து காணப்படுகின்றது. வாசிச்சு பாருங்கள். அங்க லண்டனில இருந்து இஞ்ச கனடாவில எழுதப்பட்ட விடயத்துக்கு வக்காளத்து வாங்குகின்றார்.

ஆனால் நாங்கள்? கனடாவில இருந்துகொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறம். தவறு எங்களுடையதே! நசனல் போஸ்ட் பத்திரிகையினுடையது அல்ல. நசனல் போஸ்ட், Globe & Mail, Toronto Star, Sun எண்டு எதுக்க போனாலும் சிறீ லங்கா பற்றிய செய்திக்கு அடியில சிங்கள இனவாதிகளின் கருத்துக்களை காணலாம். கடையில நடப்பது என்ன? பிரதான ஊடகங்களில் தாயக போராட்டம் பற்றிய பிழையான கருத்து வேற்று இனத்தவர்களிடம் மிகவும் சாணக்கியமான முறையில் விதைக்கப்படுகின்றது.

இதுக்கு நாங்கள் செய்யக்கூடியது என்ன? நாங்கள் ஆங்கில ஊடகங்களினுள் எமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும். பெரிய பந்திகளாக எழுத தேவை இல்லை. ஒரு லிங்க் - தொடுப்பு ஒன்றை அல்லது எமது பக்க நியாயத்தை கூறும் TamilNation, Tamilnet போன்ற ஊடகங்களில வருகின்ற செய்திகளை பிரதி செய்தால் கூட போதுமானது.

நான் நேரம் கிடைக்கும்போது இவ்வாறு செய்து வருகின்றேன். இப்போது உள்ள இந்த துர்ப்ப்பாக்கிய நிலையை கனடாவில் வாழும் தமிழர்களாகிய எங்களால் மூலமே மாற்றி அமைக்க முடியும். ஊடகங்களில் கருத்து பரிமாறல்களில் நாங்கள் பங்குபற்ற வேண்டும். சும்மா எடுத்ததுக்கெல்லாம் கனேடிய ஊடகங்களை திட்டுவதால் மாற்றம் வரப்போவதில்லை.

ஆனால் நம்மவர்கள்? கனேடிய வானொலிகளில் வாய்கிழிய கத்துவதிலேயே நேரத்தை செலவளிக்கின்றார்கள். எங்களுக்க வாய்கிழிய கத்தி பயன் இல்லை.

False disappearances reported

Robert Brown

Stewart Bell's story on the National Post of Canada titled "Sri Lanka's 'disappeared' population" on October 27, 2008 could be totally false and just terror propaganda.

These missing persons could be fighting for the LTTE or living in the west funding the terror war under aliases.

Let's look at a typical scenario: If you need to commit mass murder and also falsely accuse the government of Sri Lanka, you would join the LTTE as a suicide bomber, kill yourself and may other innocent civilians and be considered 'disappeared'. Then you can get a relative to talk to a journalist like Stewart Bell at the National Post of Canada to 'report' on this. Remember, the Tamils are the masters of fraud and have a wide network of criminal enterprises in Canada and UK. Some politicians in Canada, UK and even in the US are in the pockets of the pro-terrorist Tamil extremists. Therefore false disappearances are a great way to help the LTTE and discredit the GOSL. So many birds with one stone.

This is just one example we know of: 'Missing person' turned LTTE suicide bomber

http://www.defence.lk/new.asp?fname=20080809_05

How can we get journalists to report the truth and not just LTTE/Tamil extremist propaganda?

Recently, a Toronto-area man was accused of raising funds for Tamil terror organization, disguised as a legitimate humanitarian! This incident is typical of Tamil Terrorists living in Canada, US, UK and Australia. These Tamils form bogus humanitarian organizations. Some even get recognized as such thanks to Tamil Terrorists working inside the United Nations and for governments in Canada and Britain. Then these terrorists go onto raise funds for their terror operations in Sri Lanka, killing thousands of innocent civilians. When Tamil extremists get arrested, they falsely claim to work for aid/ humanitarian organizations that are just fronts for the LTTE. Canadian authorities consider the World Tamil Movement to be a front for the LTTE. Terror-supporting Tamils are masters of such fraud. The TRO continues to raise funds for the LTTE in Europe.

The bottom line here is that you can be a world-class criminal, live comfortably in the west and successfully commit genocide in Sri Lanka to create a Tamil homeland. Where is justice?

Sincerely,

Robert Brown

London, UK

மூலம்: http://www.lankaweb.com/news/items08/281008-2.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்துக்கள் முரளி.

அதர்மத்துக்கு முண்டுகொடுத்து உலகெல்லாம் இருக்கும் சிங்களவன் குரல் கொடுக்கிறான்.

விடுதலை வேண்டி நிற்கும் நாம் தர்மம் எம் பக்கம் இருந்தும் சும்மாய் இருக்கின்றோம்.

வேதனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆங்கிலம் தெரிஞ்ச ஆக்கள் தான் இப்படியான கட்தங்களுக்கு பதில் எழுதலாம். அண்டைக்கும் ஒரு மூட்டு சிங்களவன் இலங்கை கிரிக்கெட் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா ஆகலை பத்தி ரொரண்டோ காவல்துறை அதிகாரிக்கு எழுதின கடிதத்தை பாத்தா சிரிப்புதான் வருகுதான்...அனால் அப்படி ஒரு கடிதம் எழுத எங்கடை ஆக்கள் எத்தினை பேருக்கு நேரம் இருக்கு/ அறிவு இருக்கு... இங்க பிறந்த/சின்னனில வந்து தாய் மண்ணில அக்கறை உள்ள மாணவர்கள் கொஞ்சபெயரும்.. அங்கை கொஞ்சம் ஆங்கில அறிவு கூடின அஆகளும் தான் இப்படியான பிரசாரங்களை மீர்கொண்டு உள்ளார்கள்...

முதலாவது நாங்கள் யாழில மாத்திரம் எழுதிக்கொண்டு சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் நமக்குள்ள விவதிக்கிறதால் ஒரு நன்மையும் வரபோரதில்லை... எங்கள் எல்லாருக்கும் தெரியும் ஏன் பிரச்சினை நடக்குது/எப்படி நடக்குது/ முழு விவரமும் தெரியும்... இனியாவது..இங்க நாகள் கதைச்சு பேசி ஒரு ஒன்றுபட்ட பிரசார நடவடிக்கையில ஈடுபட்டால் கொஞ்சமாவது தேசியத்துக்கு உதவுற மாதிரி இருக்கும்..

யாழில ஆங்கிலம் நல்ல தெரிச்ச ஆக்கள் இதுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொஞ்சபேர் கூட்டா சேர்ந்து தீவிர பிரச்சாரத்தில இறங்கலாம்...ஒவொருவரும் கொஞ்ச நேரம் ஒதுகினாலே பொதும...என்ன முரளி நான் சொல்லுறது சரியா?

Edited by லோயர்

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: கணடா, ஈழத்துக்கு அடுத்தபடியாக ஈழத்தமிழர் அதிகம் வாழும் நாடு. ஆகவே சிங்களப் பேரினவாதம் கணடாவில் இருக்கும் இந்த ஈழத்து மக்கள் குழுவினரால் தமக்கெதிரான பிராச்சாரங்களோ அல்லது போராட்டங்களோ அதிகளவில் நடைபெற்றுவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறை எடுத்துச் செயல்படுகிறது. குறைந்தது அவ்வாறான தமிழர்களின் நடவடிக்கைகளை புலிச்சாயம் பூசவாவது அது முற்படுகிறது.

குறிப்பாக தமிழர்களை வைத்தே இவ்வாறான நடவடிக்கைகளை அது செய்துவருகிறது. உதாரணத்துக்கு முன்னாள் கணடாவுக்கான சிங்களத்தின் தூதர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர். இவர் தூதுவராக இருந்த காலத்தில் இவரின் கருத்துக்கள் மிகப் பிரபலம். தொடர்ச்சியான தமிழர் விரோதக் கசப்புணர்வைக் கக்கி வந்த இந்தத் தமிழர், இடையிடையே தமிழர்களாகப் பிறந்த கோடரிக் கம்புகளான சங்கரி, மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சிங்களப் பேரினவாத அரசின் நிழல்க் குழுக்களை அரசியல் களம், மாநாடு என்ற பெயரில் அங்கு வரவழைத்து தமிழர் விரோத கருத்துக்களை கக்க வைத்ததோடு, அவற்றை உள்ளூர் பத்திரிக்கைகளிலும் வரும்வாறு கவனமாக பார்த்துக்கொண்டார்.இவரின் இந்த மகத்தான சேவையைப் பாராட்டி சிங்கள அரசு இவருக்கு கொழும்பு நகரில் பல் வசதி கொண்ட மனை ஒன்றைக் கொடுத்திருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பலர் இங்கு வந்ததும் தமது நாட்டை மறந்துவிடுவது வேதனை. எப்போதாவது கடையிலோ அல்லது கோவிலிலோ யாரையும் காணும்போது " எப்படி ஊர் நிலமை?" என்று கேட்பதோடு அவர்களின் இனத்துக்கான கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். 25,000 முதல் 30,000 வரை தமிழர்கள் வாழும் சிட்னியில் பொங்கு தமிழ் நிகழ்வுக்கு வந்த தமிழர்கள் வெறும் 2000 பேர் என்று நினைக்கும்போது கவலப்படுவதை விட என்ன செய்வது ? எனது நண்பர் ஒருவர், பொங்கு தமிழுக்கு தனது இரு பிள்ளைகளையும் கூட்டி வந்திருந்தார். ஆனால் தான் மட்டும் எட்டே நின்று மரநிழலில் இருந்து தூரத்தில் நடப்பதை பார்ர்துக்கொண்டிருந்தார். அவரிடம் நான்," ஏன் இங்கேயே நின்று விட்டீர்கள், உள்ளுக்க வாங்கோ" என்று கேட்டதற்கு " இங்க இருந்து நல்லாத் தெரியுது", அடுத்தது ரோட்டில போர வாற சனம் எல்லோ எங்களைப் பாத்துக்கொண்டு போகப்போகுது ?! என்று சொன்னாரே பார்க்கலாம். அவரின் அவுஸ்த்திரேலியப் பிள்ளைகளுக்கு உள்ள இனமானம் கூட அவருக்கில்லை.

கன்பராவில் பாராளுமன்ற முன்றலில் நடத்தும் தமிழர் போராட்டங்களுக்குச் சேரும் எம்மவர்களின் எண்ணிக்கை வெறும் நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே. இது கன்பராவில் மட்டுமே உள்ள தமிழர்களை விட மிக மிகக் குறைவு.

இங்கும் சிங்களவன் தனது கைங்கரியத்தைச் செய்யாமல் விடுவதில்லை. உதாரணத்திற்கு இங்கு நடந்த பொங்குதமிழ் நிகழ்வைப் பற்றி உள்ளூர்ப் பத்திரிக்கை ஒன்றில் அதைப் புலிப் பயங்கரவாதிகளினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் நிகழ்வு என்று செய்தி போட்டிருந்தார்கள். இதற்கு சிங்களவர்களிடமிருந்து மிகுந்த ஆதரவும் பாராட்டுதலும் கிடைத்தது. தமிழர்கள் சிலரும் தமது கண்டணங்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் எமது எதிர்ப்பை விட சிங்களவனின் பாராட்டுதலால் மகிழ்வுற்ற அந்தப் பத்திரிக்கையும் தனது செய்தியை மாற்ற விரும்பவில்லை.இப்படியிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

லோயர்,

உங்களின் நோக்கத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எனது ஆங்கிலப் புலமை உங்களினளவுக்கு இல்லாவிட்டாலும் எனது பங்களிப்பைச் செய்ய நான் விரும்புகிறேன்.

  • தொடங்கியவர்

உங்கட ஊக்கமான கருத்துக்களுக்கு நன்றி. நான் இதுபற்றி இன்னும் சில தகவல்களை உங்களுக்கு சொல்லலாம் எண்டு நினைக்கிறன்.

1. உங்களுக்கு தெரியும் Lankanewspapers.com எண்டு ஒரு இணைய தளம் இருக்கிது. இதுல எங்கட பல ஆக்கள் கருத்து எழுதிக்கொண்டு இருக்கிறீனம். அதுக்க போய் பார்த்தால் எத்தின மனவியாதிகள் உள்ள இனவாதிகள் இருக்கிறீனம் எண்டு அறிஞ்சு கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரையில இப்படியான சிங்கள ஊடகங்களுக்க போய் நாங்கள் அடிபட்டு கருத்து எழுதுறதில துளிகூட பயன் இல்லை. ஏன் எண்டால் உதுக்க கருத்து எழுதி செலவளிக்கிற நேரத்தை ஏனைய சர்வதேச ஆங்கில ஊடகங்களில எழுதினால் அது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இஞ்ச யாழில இருக்கிற ஆக்களும் உதுக்கபோய் மினக்கட்டுக்கொண்டு இருக்கக்கூடும். அதான் சொல்லிறன்.

2. நான் வழமையாக பாவிக்கிற முறை என்ன எண்டால்... கூகிழுக்கு போய் நியூஸ் Linkஐ அழுத்திவிட்டு பிறகு தேடலில Sri Lanka Canada, Canada Tamil, Torono Tamil, Canada LTTE இப்பிடி வித்தியாசம் வித்தியாசமான சொல்லுகளப்போட்டு பிறகு தேடல் செய்யுறது. அப்பிடி தேடல் செய்யேக்க Sorted by relevance, Sorted by date எண்டு இருக்கிறதில Sorted by date எண்டு தெரிவு செய்தால் மிகவும் அண்மையில வந்த செய்திகளை பார்க்கலாம். பிறகு அதுக்க இருக்கிற ஒவ்வொரு லிங்காக கிளிக் பண்ணி செய்திகளை அலசி ஆராயலாம்.

எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துறது என்ன எண்டால்.. நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஏராளமான பல ஆங்கில ஊடகங்கள் எல்லாம் இருக்கிது. அதுகளுக்கு எதுக்க போனாலும் சிங்களவனுகளிண்ட இனவாத கருத்துக்களை பார்க்ககூடியதாக இருக்கிது விமர்சனம் - Comments பகுதியில. நமக்கு சார்பான கருத்துக்களை மிகவும் அரிதாகவே காணக்கூடியதாக இருக்கிது. அப்ப நீங்கள் என்ன செய்யலாம் எண்டால் இப்பிடி கூகிழுக்கபோய் பிறகு தேடல் செய்து பிறகு செய்திகளை வாசிக்கும் போது அங்க Comments எழுத வசதி இருந்தால் ஒரு சின்ன விமர்சனத்தை இல்லாட்டிகு ஒரு தொடுப்பை இணைச்சு விடுங்கோ அதில.

3. அண்மையில நான் வாசிச்சு மிகவும் கவலை அடைஞ்ச செய்தி என்ன எண்டால் கனடாவில மீண்டும் 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயற்சித்தார்கள் எண்டுற குற்றச்சாட்டில கைது செய்யப்பட்ட Waterloo பல்கலைக்கழக மாணவர்கள் பற்றிய செய்தி மீண்டும் கனேடிய ஊடகங்களில அடிபடத்துவங்கி இருக்கிது. இதில சம்மந்தப்பட்ட ரெண்டுபேரை அமெரிக்காவுக்கு மேலதிக விசாரணைக்காக ஒப்புக்கொடுக்க போகிற விசயம் நீதிமன்றத்துக்கு வந்து இருக்கிது. அப்ப அதில இது சம்மந்தமாக எழுதப்பட்ட விமர்சனங்களை வாசிச்சேன். மிகவும் கேவலமான முறையில கனடா தமிழர் பற்றி எழுதி இருந்தார்கள்.

நாங்கள் எல்லாரும் அகதி எண்டு வாறமாம். பிறகு அகதிக்காசில படிக்கிறமாம். பிறகு social welfare இல திண்டு வளந்துபோட்டு கனடாவில் பயங்கரவாத செயல்கள் செய்யுறமாம். எங்கள் எல்லாரையும் நாட்டைவிட்டு கலைக்கவேணுமாம் எண்டு எல்லாம் கண்டபடி எழுதி இருந்தார்கள். அங்கு எல்லாம் கனேடிய தமிழர், தாயகம் சம்மந்தமான உண்மையான விமர்சனங்கள் வைக்கப்படுவதில்லை. எங்கட ஆக்கள் இதுகள ஏன் கண்டுகொள்ளுறது இல்லை எண்டு தெரிய இல்ல.

4. கடைசியா இப்ப என்ன நடக்கிது எண்டால் இணையத்தில விமர்சனம் - கருத்துக்கள் எழுதுற சிங்கள இனவாதிகள் சிங்கள பெயரில எழுதாமல் வேற ஆங்கிலேயர்களிண்ட பெயரில இல்லாட்டிகு வேற நாட்டு காரரிண்ட பெயரில பதிஞ்சு விமர்சனம் எழுதுறாஙகள். இதால இஞ்ச கூறப்படுற கருத்து இன்னும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிது. ஒரு வெள்ளையிண்ட பெயரப்பாத்துப்போட்டு இன்னொரு வெள்ளை ஆவேசப்படுறதுக்கு, அத ஆமோதிச்சு தானும் இன்னும் நாலைஞ்சு பந்திய எமக்கு எதிராக எழுதுறதுக்கு சந்தர்ப்பம் ஏற்படுது. இதுகள எல்லாம் பாத்துக்கொண்டு நாங்கள் கொட்டாவி விடத்தான் லாயக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் சொல்லுரமதிரிதான் நானும் தேடி தேடி பாக்கிறனான் . சில சிங்கள இனவாத இணையத்தளங்களை பற்றி கவலைப்படவே தேவை இல்லை..அது தனியே சிங்களவர்கள்ளல் வாசிக்க படுகின்ற தளங்கள். இங்க கனடாவில டோரண்டோ ஸ்டார் , நசனல் போஸ்ட் , குளோபல் மெயில் போன்றவற்றைதான் முக்கியமாக கவனிக்க வேண்டும்.. சும்மாவே இனவாத கருத்துக்களை கக்கிற ஊடகங்கள் எங்கடை பிர்ச்சினை பத்தி ஓதி தள்ளுவாகள்.. கனடிய தமிழ் காங்கிரசிண்ட மினஞ்சல் கூட்டத்தில் சேர்த்தால் இப்படியான செய்திகளை உடனுக்குடன் அனுப்பி என்ன எண்டு பதில் போடலாம் ஆண்டும் ஐடியா குடுக்கிறவை... நேற்று கூட சிங்கல தூதர்ரின் கருத்துக்கு டேவிட் பூபால பிள்ளை வடிவா விளக்கம் குடத்து இருந்தவர்... இதை மாதிரி 1000 பேர் செய்தாதான் இங்க இருகிரவனுக்கு விளங்கும் என்ன நடக்குது எண்டு.....

எனக்கு இன்னும் ஒரு அதிசம் என்னேடா.. கனடாவில பிறந்து வளர்ந்த அல்லது சிறுவயதில் இங்கு வந்த எத்தனையோ பேர் தேசியத்துக்கு ஆதரவா கணக்கா செய்யேக்க... இடையிள்ள வந்த அல்லது இப்ப வந்தா ஆக்கள் எல்லாம் ஒ.. பிரச்சினையோ அப்படியோ...நான் அதுகளை ஒண்டும் போலோ பன்னுறேள்ள எண்டு கதை விடேக்க இடிக்க வேணும் போல இருக்கிறது...

அதைவிட எத்தினை பிரசாரம் செய்தும், எஸ் எம் எஸ் அனுப்பியும் எங்கட ஆக்கள் ஏகன் பார்க்க போனதை தியேட்டருக்கு பக்கத்தில நிண்டு பார்த்த எனக்குதான் தெர்யும்...நான் நினைச்சனான் இளம்பெடியள் மட்டும்தான் படம்பார்க்க வருவாங்கள்..குடும்பகார அக்காளுக்கு பிரச்சனை விலங்கை வரமாட்டினம் எண்டு....ஆனா நடந்தது தலை கீழ்..அந்த படத்துக்கு வந்த முக்கவசிபேர் குழந்தை குட்டியோட வருகினம்...

இப்படி எங்கடை ஆக்களின்ட வண்டவாளங்களை சொல்லிக்கொண்டே போகலாம்./.

தயவு செய்து கனடாவாழ்/புலம்பெயர்தவர் மக்கள் ஒண்டை மட்டும் விளங்கி கொள்ளவேணும்.. முந்தி எத்தனையோ இடபெயர்வுகள் நடந்தது..அப்ப மக்களுக்கு போரதக்கு இடம் இருந்தது. கொஞ்சம்மவது சாப்பாடு இருந்து.. ஐசிஆர்சி அல்லது ஐ.நா.அகதிகள் நிறுவனம் இருந்தது..இப்ப நிலமை சொல்லவே இல்லாத அளவுக்கு மாறி உள்ளது.. எல்லாரும் நினைக்கலாம் நெடுகலும் கதிரமாதிரி இப்பவும் கத்திரான்கள் எண்டு.. ஆனால் அந்த மக்களை காப்பார்த்த இப்ப யாருமே முன்வர போறதில்லை...

போனகிழமை எண்ட அம்மா விசுவமடுவில இடம்பெயர்ந்து இருந்து போன் அடிச்சு அழுதவா..டேய் குடை பிடிச்கிகொண்டு சமைகிறான் எண்டு..அப்பத்தான் ஒண்டு விளங்கினது... ஓரளவு வசதியான குடும்பத்துக்கே இப்படி நிலைமை என்றால்.. மக்களிண்ட கஷ்டத்தை பற்றி கொஞ்சம் கூட நினைச்சு பாக்க எழாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்விக நம்பிக்கை இந்தக்காலத்து மக்களுக்கு குறைவாகே இருப்பதே தமிழர்கள் உலகெங்கும் இப்படி கேவலப்படுத்தப்படுவதற்கு காரணம் என்று பிரபல அரசியல் வித்துவான் கு.போ கருத்து தெரிவித்துள்ளார். கனடாவில் அதிரடியாக நூறு அம்மா மற்றும் ஐயா பகவான் ஆச்சிரமங்களை அமைத்தல், பெருந்தெரு 401 இல் ஒரு ஓரமாக நீளமாக பாய் விரித்து அதில் போய் வருவர்களுக்கு வாழை இலை போட்டு அன்னதானம் கொடுத்தல், ரிச் மண்ட் மற்றும் கனடா கந்தசாமி கோயில்களுக்கு சோடி சோடியாக ஒருவர் பின் ஒருவராக தூக்குகாவடி எடுத்தல் இவ்வாறான இன்னோரன்ன முயற்சிகள் தமிழ் மக்கள் இருப்பை கனடாவில் பாதுகாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

உடனுக்குடன் வேலைகளில் இறங்கவேண்டியதுதான

இது Scotland பத்திரிகையில் வந்த கட்டுரை

http://www.sundayherald.com/international/...2463258.0.0.php

சிலர் தமிழ் பெயரில் எவ்வாறான பின்னூட்டல்கள் இட்டுள்ளார்கள் எண்டு கவனிக்கவும்

  • தொடங்கியவர்

லோயர் நீங்கள் சொல்லிற இடம்பெயர்வு பிரச்சனையில நியாயம் இருக்கிது. நாங்களும் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்த காலம் இருக்கிது. ஆனா எங்கட ஆக்கள் வன்னியுக்கு உணவு அனுப்பிறதெண்டாலும் உணவு வேண்டாமாம் எண்டு அறிக்கைவிடுறீனமே? மற்றவன் பசி தீர்க்கிறதுக்கு யார் எப்படி உதவி செய்தாலும் நாங்கள் கொஞ்சம் பேசாமல் இருக்கலாம்தானே?

பல்லவன், நீங்கள் குறிப்பிட்ட விசயத்தை சுட்டிக்காட்டியதற்கு நன்றி! இது இன்னொரு பெரிய பிரச்சனை. ஆங்கில சர்வதேச ஊடகங்களில எழுதுற சிங்கள இனவாதிகள் சிங்கள பெயரில எழுதாமல் தமிழ் பெயரிலயும் எழுதுறாங்கள். அவையளிண்ட எழுத்தையும், கருத்தையும் பார்க்கவே தெரியுது. உது தமிழ் இல்லை எண்டு. அவங்கள் எழுதுறதுகள வாசிக்கிற வேற்று இனத்தவர்களை இது இன்னும் பிழையான முறையில சிந்திக்க தூண்டும். இப்பிடி நிறையச் சிக்கலுகள் இருக்கிது.

மகிந்த சகோதரர்களின் தயாரிப்பில் பிசாசுப்படை - நெறியாள்கை பிரிகேடியர் ஜயநாத் பெரேரா - படப்பிடிப்பு கம்பஹா - கடத்தப்படுபவர்களுக்கு நேரும் கொடூரம்!!!

ஆட்கடத்தல் காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் மஹஷோன் பலகாய (பிசாசுப்படை) எனும் அமைப்பு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக க்கிய தேசியக் கட்சியினர் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர் அல்லவா? இது தொடர்பாக கிடைத்த இராணுவ உயர்வட்டார இரகசிய தகவல் வெளியே கசியத்தொடங்கியுள்ளது.

தென்னிலங்கையில் சந்தேகத்தின் பேரில் கடத்தப்படும் தமிழர்கள் தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக நீடிக்கும் மர்மம் மெல்லமெல்ல பாராளுமன்றம் வரைக்கும் கசியத்தொடங்கியுள்ளது.இது இப்போது பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் அதிலும் குறிப்பாக அரசை எதிர்ப்பவர்களுக்கும் விமர்சிப்பவர்களுக்கும் எதிராக மகிந்தவின் சகோதரர்களின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட பிசாசுப்படை ஏவிவிடப்பட்டுள்ளது.இந்த இரகசிய படையின் உருவாக்கத்தில் கோத்தபாய பிதாமகனாக கருதப்படுகிறார்.இவர்களுக்கு மிக நம்பிக்கையான இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜயநாத் பெரேரா இதற்கு தலைமை வகித்து வருகிறார்.தென்னிலங்கையில் கொல்லப்பட்ட பலரது சடலங்கள் உருக்குலைந்த நிலையில் ஆங்காங்கே வீசப்பட்டு வந்தது தெரிந்ததே.இது சென்ற வருடத்தில் அதிகமாக இருந்தது.இந்த நடவடிக்கை தென்னிலங்கையில் பயப்பீதியை தமிழர்களுக்கு ஏற்படுத்தி புலிகளுக்குஆதரவளிப்பவர்களை அச்சம் கொள்ள வைப்பதே கோத்தபாயவின் உளவியலாக இருந்தது.ஆனால் இந்த பீதி கொள்ளும் நடவடிக்கை சர்வதேச பார்வையாளர்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.எனவே இதற்கு மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டது மகிந்த அரசு.இப்போது அது பிசாசு படை பிரிவின் பெயரில் செயற்பட தொடங்கியது.அதன் பெயருக்கு ஏற்றபடி மிக இரகசியமாக பெரும்பான்மை சிங்களவர்கள் வசிக்கும் கம்பஹா மாவட்டத்திலுள்ள இரகசிய இடம் தெரிவு செய்யப்பட்டு கடத்தப்படுபவர்கள் அங்கு கொண்டு செல்லப்படுவர்.இங்கு இரண்டு கூடங்கள் உள்ளது.முதலாவது வாயு அறை.இரண்டாவது இரசாயன அறை.முதலில் கடத்திச் செல்லப்படுபவர்கள் பல விதமான சித்திரவதைகள் செய்யப்பட்டு இங்கு வாயு அறையில்(காஸ் சேம்பர்) போட்டு சித்திரவதை செய்யப்படுவார்கள்.இதில் சந்தேக நபர் கொல்லப்பட வேண்டியவராகவோ அல்லது வழமையான சித்திரவதையில் பாதிக்கப்பட்டு வெளியே விட்டால் இதன் சூத்திரதாரிகளை அடையாளம் காட்டிவிடும் எனக்கருதினால் இரண்டாவதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இரசாயன அறையில் (லிக்குவிட் சேம்பர்)போடப்படுவார்.இது ஒரு வகையில் எச்சமில்லாத பிரேத அறை.இதன் பின்னர் தார்(வீதிக்கு போடும் தார்) போன்ற எச்சமே மிஞ்சுமாம்.இது தான் பிசாசு படையின் கதையின் இறுதி முடிவு.இது கதையல்ல நிஜம்.இந்த வருடத்தில் மட்டும் கடத்தப்பட்ட 159 பேரின் நிலமை இதுவரை தெரியவில்லையென தெரிகிறது. இந்த 159 பேரும் எந்த அடையாளமுமின்றி இந்த பிசாசு படையால் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகமாகவுள்ளது.இந்த பிசாசுப்படையின் சேவையில் முன்னாள் ஓய்வு பெற்ற முப்படைகளின் அதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் எல்லோரையும் நெறிப்படுத்துபவராக பிரிகேடியர் ஜயநாத் பெரேரா உள்ளார்.

http://www.nitharsanam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.