Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓபமாவின் வெற்றி சொல்லும் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓபமாவின் வெற்றி சொல்லும் செய்தி

முதலில் ஓபமாவின் வெற்றியின் முன்னால் உள்ள செய்தி அல்லது உண்மை என்னவென்றால்

அவர் ஒரு கறுப்பின ஐனாதிபதியல்ல

அவர் ஒரு அமெரிக்க ஐனாதிபதிஇதில் எந்த சமரசமும் அவர் செய்யமாட்டார்

செய்யவும் முடியாது

அடுத்தது

உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப

  • கருத்துக்கள உறவுகள்

மக்களில் உண்மையான தலைவர் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செய்யலாம்?????

ஓ ............ குகதாசன் இது மில்லியன் டொலர் கேள்வி . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரையும் பார்த்தால் ஒபாமா ஒபமா என்று தேவையில்லாத ஆராய்ச்சிகளையும் பிரயோசனமில்லாத எதிர்பார்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றனர் என்றே தோன்றுகிறது. இவர்கள் (குகதாசன் உங்களை மட்டும் சொல்லவில்லை ஆய்வு செயும் எல்லோரையும் குறிப்பிடுகிறேன் ) ஆய்வு செய்யும் வேகத்தை பார்த்தல் ஸ்ரீலங்காவுக்கோ அல்லது அதன் அயல் நாடுகளுக்கோ தான் ஒபாமா அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் போன்று என்ன தோன்றும்.ஒபாமா வந்தவுடன் தமிழர்களுக்கு ஆதரவாக பேசி உடனே தமிழீழம் வாங்கித்தரவும் மாட்டார் அவர்கள் தங்கள் வெளியுறவுக்கொள்கைகளில் பெரியளவு மாற்றத்தையும் கொண்டு வரமாட்டார்கள் அவர் சுயமாக எடுக்கும் முடிவுகள் எவ்வளவு தூரம் செயற்திறன் வாய்ந்தது என்று உறுதியாகவும் கூறமுடியாது இவர் எடுக்கும் முடிவுகள் நிச்சயம் வெள்ளை இனத்தவர்களும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளினதும் விருப்புக்களை தாண்டமுடியாது சுருக்கமாக சொன்னால் இவர் அதிபர் என்ற பதவியில் அமர்ந்திருக்கும் அமெரிக்க ராணுவத்தினதும் உளவுப்பிரிவினதும் பொம்மை ஆகவே கனவு காணுவதை விடுத்து எமக்கு இருக்கும் கடமைகளை நாம் சரிவர செய்வோமாக :lol: .

  • தொடங்கியவர்

கறுப்பினத்தவரை வேட்பாளராக தெரிவு செய்தது ஏன்? கிளின்டனை மக்கள் தெரிவு செய்யாததற்கு என்ன காரணம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை

நான் எங்கே உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன்

நீங்கள் சொல்லவருவதைத்தானே நானும் சொன்னேன்

அதைவிட அப்படிச்செய்வார்

இப்படிச்செய்வார் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை

என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு அமெரிக்கஐனாதிபதி

அவ்வளவே

அவர் எமது நிறம் என்பதால்...............????

நீங்கள் கூறுவதுபோல்

இவர் எடுக்கும் முடிவுகள் நிச்சயம் வெள்ளை இனத்தவர்களும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளினதும் விருப்புக்களை தாண்டமுடியாது சுருக்கமாக சொன்னால் இவர் அதிபர் என்ற பதவியில் அமர்ந்திருக்கும் அமெரிக்க ராணுவத்தினதும் உளவுப்பிரிவினதும் பொம்மை

இல்லையென்றால் அவர் உயிருடன் இருப்பதே கேள்விக்குறியாகும்

இதுதான் இன்றைய யதார்த்தம்

கறுப்பினத்தவரை வேட்பாளராக தெரிவு செய்தது ஏன்? கிளின்டனை மக்கள் தெரிவு செய்யாததற்கு என்ன காரணம்?

அவரது ஆட்சியையும் மக்கள் ஏற்கனவே அவரது கணவர்மூலமாக அனுபவித்து விட்டனர்???????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஓபாமா என்ற தனிமனிதன் பற்றி எனக்கு உயர்ந்த கருத்துண்டு

அது

அவரது விடாமுயற்சி படிப்பு அறிவு..........................

ஒரு சாதாரண மனிதனால் ஒரு சிறுபான்மை இனத்தவனால்

ஒரு நிறவெறி தாண்டவமாடும் நாட்டில் ஒரு ஒடக்கப்படும் நிறத்தவன்..............என்று பல காரணங்களால்

அவற்றையெல்லாம் தாண்டி கடந்து...........

ஒரு ஓசாமா என்கின்ற தனிமனிதன்

இந்த அதி உயர்ந்த இடத்தை பிடித்திருப்பதை பாராட்டியே தீரவேண்டும்

இது எமது வருங்கால சந்ததிக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பது மிகமிகமுக்கியமாக நாம் உணரவேண்டியது

ஆனால் ஓசாமா வந்துவிட்டார்

எல்லாம் சரியாகிவிடும்..............????? என்பது அபத்தம்

வணக்கம்!

வரலாறு தெரியமால் வெறுமனே கருத்துக்களை எழுந்தமானமாக தெரிவிப்பது இன்று ஒரு வழமையாகிவிட்டது. 1870இல் கறுப்பின மக்கள் வாக்குரிமை பெற்ற போதும் அவர்கள் நியாயமாக வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு கிடைத்தது 1964இற்கு பிற்பாடே!

கறுப்பின மக்கள் அடமைகளாக அமரிக்கவிற்கு கொண்டு வரப்பட்டதும் பின்னர் அவர்கள் தம் உரிமைகளுக்காக கடந்த நூற்றண்டு முழுவதும் போராடி இன்னமும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த போராட்டத்தின் வெற்றியே ஒபாமாவின் வெற்றி!

ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக கறுப்பர்கள் வெள்ளையர்களுக்கு சமம் அற்றவர்களாகவே நடாத்தப்பட்டார்கள். இந்த வரலாற்றை முதலில் புரட்டிப்பாருங்கள். கறுப்பு இன மக்களுக்காக குரல் கொடுத்த மாட்டின் லூதர் கிங் வெள்ளை இன நிறவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான கறுப்பர்கள் அவர்களின் தோல் நிறத்திற்காகவே கொல்லப்படார்கள். இது நடந்து ஒரு 40 ஆண்டகள் தான் ஆகிறது!

இவ்வாறு ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதி இன்று அமரிக்க ஜனாதிபதி! அவர் முதலில் ஒரு கறுப்பர்! அதுவே வெள்ளையர்களுக்க புலப்படும் உண்மை! அதன் பின்னரே அமரிக்கர்!

அமரிக்க மக்கள் ஒபாமாவிற்கு வாக்களித்தது ஒரு மாற்றத்திற்காவே! ஒபாமா ஒரு இளைய சமுதாயத்தை சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த ஒரு கறுப்பு இனத்தவர். இவரின் வாழ்கை முன்னைய அமரிக்க தலைவர்களின் வாழ்க்கை போல் அல்லாதது. இவரின் சிந்தனை முன்னைய அமரிக்க தலைவர்களின் சிந்தனை போல் அல்லாதது.

அபிரகாம் லிங்கனுமம் ஒபாமா போல் ஒரு அனுபவம் இல்லாத இளைய தலைவர். அவரால் பல மாற்றங்களை கொண்டுவர முடியும் என்றால் ஓபாமாவாலும் நிச்சயமாக முடியும்! ஆனால் அனைத்து மாற்றங்களும் கணப்பொழுதில் நடைபெற்று விடப்போவதில்லை.

உலகின் ஒரு மூலையில் சிறுபாண்மையாக விளங்கும் எமது போராட்டத்தின் தன்மையையே இந்த மனிதரால் புரிந்து கொள்ள முடியும் என்றால் உலகின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாதா?

Obama: Sri Lanka afflicted with "problem of the other"

முடிந்தால் ஒரு மணிநேரம் செலவு செய்து இந்த இணைப்பை பாருங்கள். ஒபாமாவின் உண்மையான திறமை நிச்சயம் புரியும்!

உவரைத்தனே உந்த அமெரிக்ககாரங்கள் ஆயிரத்தெட்டு சற்ரளைட்டையும் விமானங்களையும் விட்டு இரவு பகலாக தேடிக்கொண்டிருக்கிறார்கள் உவர் எப்ப அமெரிக்க ஜனாதிபதியானவர் :lol::):):) ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓபாமா என்கின்ற தனிமனிதன்

இந்த அதி உயர்ந்த இடத்தை பிடித்திருப்பதை பாராட்டியே தீரவேண்டும்

இது எமது வருங்கால சந்ததிக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பது மிகமிகமுக்கியமாக நாம் உணரவேண்டியது

ஆனால் ஓபாமா வந்துவிட்டார்

எல்லாம் சரியாகிவிடும்..............????? என்பது அபத்தம்

மன்னிக்கவும் எழுத்துப்பிழை மட்டுமே

கருத்துப்பிழையல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுறது தமிழனின் வழக்கம் ஆனால் ஒருமுறை யாரவது பாரட்டிவிடுங்கோவன் அதுக்கேன் தொடர் நாடகம் மாதிரி எல்லோரும் ஒவ்வொரு பக்கமா குடையிறிங்கள். குகதாசன் நான் நீங்கள் ஒபாமா வந்துவிட்டார் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லவில்லை மற்றவர்கள் கூறியதை எடுத்துக்காட்டினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!

வரலாறு தெரியமால் வெறுமனே கருத்துக்களை எழுந்தமானமாக தெரிவிப்பது இன்று ஒரு வழமையாகிவிட்டது. 1870இல் கறுப்பின மக்கள் வாக்குரிமை பெற்ற போதும் அவர்கள் நியாயமாக வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு கிடைத்தது 1964இற்கு பிற்பாடே!

கறுப்பின மக்கள் அடமைகளாக அமரிக்கவிற்கு கொண்டு வரப்பட்டதும் பின்னர் அவர்கள் தம் உரிமைகளுக்காக கடந்த நூற்றண்டு முழுவதும் போராடி இன்னமும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த போராட்டத்தின் வெற்றியே ஒபாமாவின் வெற்றி!

ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக கறுப்பர்கள் வெள்ளையர்களுக்கு சமம் அற்றவர்களாகவே நடாத்தப்பட்டார்கள். இந்த வரலாற்றை முதலில் புரட்டிப்பாருங்கள். கறுப்பு இன மக்களுக்காக குரல் கொடுத்த மாட்டின் லூதர் கிங் வெள்ளை இன நிறவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான கறுப்பர்கள் அவர்களின் தோல் நிறத்திற்காகவே கொல்லப்படார்கள். இது நடந்து ஒரு 40 ஆண்டகள் தான் ஆகிறது!

இவ்வாறு ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதி இன்று அமரிக்க ஜனாதிபதி! அவர் முதலில் ஒரு கறுப்பர்! அதுவே வெள்ளையர்களுக்க புலப்படும் உண்மை! அதன் பின்னரே அமரிக்கர்!

அமரிக்க மக்கள் ஒபாமாவிற்கு வாக்களித்தது ஒரு மாற்றத்திற்காவே! ஒபாமா ஒரு இளைய சமுதாயத்தை சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த ஒரு கறுப்பு இனத்தவர். இவரின் வாழ்கை முன்னைய அமரிக்க தலைவர்களின் வாழ்க்கை போல் அல்லாதது. இவரின் சிந்தனை முன்னைய அமரிக்க தலைவர்களின் சிந்தனை போல் அல்லாதது.

அபிரகாம் லிங்கனுமம் ஒபாமா போல் ஒரு அனுபவம் இல்லாத இளைய தலைவர். அவரால் பல மாற்றங்களை கொண்டுவர முடியும் என்றால் ஓபாமாவாலும் நிச்சயமாக முடியும்! ஆனால் அனைத்து மாற்றங்களும் கணப்பொழுதில் நடைபெற்று விடப்போவதில்லை.

உலகின் ஒரு மூலையில் சிறுபாண்மையாக விளங்கும் எமது போராட்டத்தின் தன்மையையே இந்த மனிதரால் புரிந்து கொள்ள முடியும் என்றால் உலகின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாதா?

Obama: Sri Lanka afflicted with "problem of the other"

முடிந்தால் ஒரு மணிநேரம் செலவு செய்து இந்த இணைப்பை பாருங்கள். ஒபாமாவின் உண்மையான திறமை நிச்சயம் புரியும்!

இதற்கு பதில் ஏற்கனவே எழுதிவிட்டேன்

இதோஇங்கு ஓபாமா என்ற தனிமனிதன் பற்றி எனக்கு உயர்ந்த கருத்துண்டு

அது

அவரது விடாமுயற்சி படிப்பு அறிவு..........................

ஒரு சாதாரண மனிதனால் ஒரு சிறுபான்மை இனத்தவனால்

ஒரு நிறவெறி தாண்டவமாடும் நாட்டில் ஒரு ஒடக்கப்படும் நிறத்தவன்..............என்று பல காரணங்களால்

அவற்றையெல்லாம் தாண்டி கடந்து...........

ஒரு ஓபாமா என்கின்ற தனிமனிதன்

இந்த அதி உயர்ந்த இடத்தை பிடித்திருப்பதை பாராட்டியே தீரவேண்டும்

இது எமது வருங்கால சந்ததிக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பது மிகமிகமுக்கியமாக நாம் உணரவேண்டியது

ஆனால் ஓபாமா வந்துவிட்டார்

எல்லாம் சரியாகிவிடும்..............????? என்பது அபத்தம்

ஒபாமாவின் வெற்றி நமக்கு ஒரு பாடமே தவிர ஒரு தீர்வு அல்ல! மாற்றங்கள் பல வரவே போகிறது. ஆனால் அது நமக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்! அமரிக்காவைப் பொறுத்த வரை ஒரு மாற்றம் தேவை! இது அமரிக்க உளவுத்துறைக்கும் தெரியும்! ஈராக்கை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் அமரிக்க உளவுத்துறையின் இன்றைய தேவை! அதற்கான உபகரணம்தான் ஒபாமா! பொறுத்திருந்து பாருங்கள்!

ஆனால் நமது விடுதலைப் போராட்ட வெற்றி நிச்சயமாக நமது கைகளிலேயே உள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி

அனிதா பிரதாப் கூறிய

மாற்றங்களுக்காக தலைவர் காத்திருக்கிறார் என்பது...........???

நடந்துள்ளதா???

மாற்றங்கள் மட்டுமல் தக்க நேரமும்ம வரவேண்டும்! அதற்காவே அனைவரும் காத்திருக்கிறோம்!!!!!

மக்களில் உண்மையான தலைவர் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செய்யலாம்?????

ஆயுத போராட்டம், மக்கள் புரட்சி இவற்றை தவிர வேறு வழி இல்லை போல.

வரலாறு தான் இதை சொல்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போராட்டம், மக்கள் புரட்சி இவற்றை தவிர வேறு வழி இல்லை போல.

வரலாறு தான் இதை சொல்கிறது.

ஆனாலும் எல்லா மக்களாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறதா???

நியாயமான கேள்வி தான். ஆனாலும் வேறு வழி?

உலகில் எல்லோரையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதில் பொதுவான ஒரு வழிவகையை எட்டுவது சாத்தியமல்ல போல் தெரிகிறது. உலகில் ஒரு சாரார் ஆதரிக்கும் வழிவகை / கருத்து இன்னொரு சாராரால் எதிர்க்கப்பட்டு வருகிறது.

முதலாளித்துவத்தில் குளிர்காய்பவர்களுக்கு, சமவுடமை கசப்பாயிருக்கிறது. கறுப்பின ஒபாமா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை பல வெள்ளையின மக்களுக்கு பிடிக்கவில்லை. இந்த உதாரணங்கள் எல்லாம் வளர்ச்சியடைந்த நாட்டோடு தொடர்புபட்டதால், அவற்றால் அந்த நாடுகளில் பாதிப்பு குறைவு தான். ஆனாலும், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களின் கதி?

பிரெஞ்சுப்புரட்சி, சீனப்புரட்சி, 1917 ரஷ்யப்புரட்சி இவையெல்லாம் தான் அந்தந்த நாடுகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவைத் தந்தன.

இவற்றை வைத்து பார்க்கும்போது, எந்த ஒரு இனமோ, குழுவோ தமது உரிமைகள், அபிலாஷைகளை வெல்வதற்கு அந்த இனத்தை ஒன்றுபடுத்தவல்ல ஒரு தலைவன் தேவை. அது மட்டும் போதாது. அவ்வாறு ஒன்றுபட்ட பின்னர் அகிம்சை வழியில் தமது உரிமைகளை வென்றெடுகும் சாத்தியமும் தெரியவில்லை. ஜனநாயகம் என்ற பூமாலை பல நாடுகளின் தலைவர் பதவியில் இருக்கும் குரங்குகள் கைகளில் அகப்பட்டு சின்னாபின்னமாகிக்கொண்டு வரும் இந்த நேரத்தில், அகிம்சா வழி பொருத்தமானதக தெரியவில்லை. எனவே தான் மேற்குறித்தவாறு சொன்னேன்.

எல்லோரையும் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு பொதுவான கருத்தை எட்டுவதென்றால் வேறு என்ன வழிதான் இருக்கிறதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப

உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

எவரும் தனக்கு பிடித்த தலைவருக்கு மட்டுமே வாக்களிப்பது

அதாவது ஒருவருக்கு விழும் வாக்குகள் உண்மையில் அவருக்காக விழுந்த வாக்குகளாக இருக்கவேண்டுமே ஒழிய இன்னொருவருக்கு எதிராக இவருக்கு வாக்களிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது

அப்பொழுதுதான் இவரின் உண்மயான ஆதரவை கணிக்கமுடியும்

மிகவும் கடினமானது. வேறு யாராவது ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைத்தாள்களை பயன்படுத்தும் முறையொன்று சில தேர்தல்களில் கண்டேன்

அது இதற்கு சரிவருமா????

தெரியவில்லை

அதைக்கூட பலர் வெறுப்பார்கள்

ஏனெனில் தமக்குப்பிடிக்காதவர் வந்துவிடுவாரே என்ற அச்சம்?????

அப்போ வேறு வழி???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.