Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உப்பை விட்டால் தொப்பை குறையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உப்பை விட்டால் தொப்பை குறையும்’ : வெள்ளைச்சர்க்கரை வைட்டமின் திருடன்’

| தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் |

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 294வது கூட்டம் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது.துணைத்தலைவர் தர்மதுரை தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் 293ம் கூட்ட அறிக்கையும், 2007 நவம்பர் மாத வரவு, செலவு கணக்கையும் சமர்ப்பித்தார். இணை செயலாளர் உலகநாதன் வரவேற்றார். கூட்டத்தின் தலைவர் தர்மதுரை மூச்சுப்பயிற்சியுடன் கூடிய எளிய உடற்பயிற்சிகளைச் சொல்லித்தர கூட்டத்தினரும் செய்து மகிழ்ந்தனர்.

பின்னர் சிவகாசி இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் நிறுவனர் சித்தையன் “”ஒல்லி அழகு மேனியைப் பெற உகந்த வழிகள்” என்னும் தலைப்பில் பேசியதாவது.குண்டானால் உண்டாகும் நோய்கள் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு, அதுபோலவே அளவுக்கு அதிகமான உடற்பருமனும் எடையும் தீமையே. குண்டானால் நூறுவகை நோய் நொடிகள் தேடிவரும். அவற்றை அஜீரணம், மலச்சிக்கல், மூலம் சர்க்கரை, இரத்த அழுத்தம், இதநோய்கள், மன அழுத்தம், மூச்சுத்திணறல், சுவாச நோய்கள், சிறுநீரக நோய்கள் என்று நீண்ட பட்டியல்போடலாம்.

உடல் பருமனையும் எடையையும் குறைத்து அழகான ஒல்லி உடம்பைப் பெற 8 வழிகள் உண்டு. அவை. உள்ளத்தில் உறுதி, உடலைப் பேணுதல், உணவில் சீர்திருத்தம், உழைப்பு, உடற்பயிற்சி, உறவை மேம்படுத்துதல், உடையில் தூய்மை, உறக்கம் ஆகியவையாகும். உள்ளத்தில் உறுதி நாம் என்ன எண்ணுகிறோமோ அதுவாக ஆகிறோம். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முதலில் விரும்ப வேண்டும். மற்றவருக்காக அல்ல என் நலம் வேண்டி என் எடையைக் குறைத்தே தீருவேன் என்று தீர்மானம் செய்ய வேண்டும். உடலைப் பேணுதல் நம் உடல் ஓர் அருமையான கருவி. உடல் உயர்வானது என்று எண்ண வேண்டும். அதை துஷ்பிரயோகம் பண்ணக் கூடாது. தீய பழக்கங்களுக்கு ஆட்படுத்தக்கூடாது. நல்ல பழக்கவழக்கங்களுக்கு உட்படுத்த வேண்டும்.

வைகறையில் துயில்எழுதல், காலைக்கடன் முடித்தல், நீராடுதல், பசித்துப்புசித்தல், நிமிர்ந்து உட்கார்தல், நேராக நடத்தல், சோம்பலுக்கு இடம் கொடாமல் சிறு சிறு பணிகளைப் பிறரை ஏவாமல் தானே செய்தல், மென்று உண்ணுதல், சுவைத்து அருந்துதல், வாய்கொப்பளித்தல் முதலிய நல்ல பழக்கங்களைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வப்போது மலம், சிறுநீர் வியர்வை, அழுக்கு, காது குரும்பி, கண்பீளை, சளி, நாவின்மீதும், பற்களின் மீதும் படியும் கழிவுகள்,குறியின் மீது படியும் கழிவுகள், அபானவாயு முதலியவற்றை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும். தலைமயிர், நகம் இவற்றை அளவுடன் வெட்டி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வாந்தி, ஏப்பம், கொட்டாவி, தும்மல், இயற்கை அழைப்பு முதலியவற்றை அடக்கக் கூடாது. ஏனென்றால் அடக்க அடக்க ஆபத்து, வாரம் ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தால் கழிவுகள் வெளியேறும். உடம்பும் உப்பாது.உணவில்சீர்திருத்தம் பொருந்தும் உணவுகளை மருந்து போல் உண்ண வேண்டும். பொரித்த, வறுத்தல், எண்ணெயில் வேகவைத்த, பதப்படுத்திய உணவுகள் பொருந்தா உணவுகள். இவை உடம்பை உப்ப வைக்கின்றன. உப்பு, சீனி, பால், ஆட்டா, மைதா ஆகிய வெள்ளை உணவுப் பொருட்களை நம் உணவுப் பட்டியலிருந்து வெளியேற்ற வேண்டும். உப்பு அது ஒரு தப்பு, அது மெதுவாகக் கொல்லும் விஷம். உப்பை விட்டால் தொப்பை குறையும், சீனி அதாவது வெள்ளைச் சர்க்கரை வைட்டமின் திருடன். சர்க்கரையை வெளுப்பதற்காகச் சேர்க்கப்படும் நஞ்சுகள் செரிமானமாக நம் உடம்பிலுள்ள வைட்டமின்களை எடுத்துக்கொள்கின்றன.

பாலும், பால் பொருள்களும் மோகத்தை வளர்க்கும் மாய விஷங்கள். பால், பசுவின் கன்றுகளுக்கு உரியது. அதை உண்பதால் பல துன்பங்கள் மனிதனைப் பிடிக்கின்றன. உண்மை இது. உணர்ந்தால் துன்பத்தைத் தவிர்க்கலாம்.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. ஆடவர்க்கும் அதுவே அழகு. மீதூண்கொள்வதும் உடல் குண்டாவதற்குக் காரணமாகும். அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணலாம் பகிர்ந்துண்ண நண்பர்கள் கிடைக்காத போது பாதி உணவை ஏழைகளுக்குக்கொடுத்து விட வேண்டும். காற்று, சூரிய ஒளி முதலியவை நுண் உணவுகள். பிராணாயாமம் செய்து காற்றையும், காலையும் மாலையும் இளம் வெயிலில் தோய்ந்து சூரிய ஒளியையும் எடுத்துக்கொள்ளலாம். உழைப்பு மாடுபோல் உழைத்து மன்னர் போல் வாழ்க என்பது பழமொழி. இயன்றபோதெல்லாம் உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டும். கள்ளமில்லா உழைப்பு கஷ்டமில்லா வாழ்வைத்தரும். ஏனென்றால் உடலுழைப்பே சிறந்த உடற்பயிற்சி. உழைப்பு கழிவுகளை வெளியேற்றும். உழைக்காத உடம்பு உப்பும், உளுத்துப்போகும். உழைப்பே அறம். உடற்பயிற்சி

உடலுழைப்புக்கு வாய்ப்பு இல்லாதவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சிகளில் யோகாசனம் மிகச் சிறந்தது. யோகமுள்ளவர்கள் யோகா செய்வார்கள். யோகப் பயிற்சி செய்வதற்கான யோகம் இல்லாதவர்கள் வேறு உடற்பயிற்சிகள் செய்யலாம் அல்லது வியர்வை வரும்படி நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.உறவை மேம்படுத்துதல்

அன்பே உறவின் அடிப்படை, மனைவி, மக்களுடன் கொஞ்சியும் கெஞ்சியும் பேசி அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். பெற்றோரைப் பேணி அவர்களைச் சந்தோஷப் படுத்த வேண்டும். சுற்றத்தாருடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அண்டை அயலாருடன் அன்போடு பழகி அரவணைத்துச் செல்ல வேண்டும். நம் உடல் நலத்திற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளை அனைவரிடமும் கூறி இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

உடையில் தூய்மை உடுக்கை நம்பிக்கை தரும், நம்பிக்கை வாழ்க்கையைத் தரும். நாம் அணியும் உடை மிடுக்காக இருக்க வேண்டுமா எடுப்பாக இருக்க வேண்டுமா இது அவரவர் விருப்பம். ஆனால் தூய்மையாக இருக்க வேண்டும். கந்தையானாலும் கசக்கிக்கட்டு. இது நம் முன்னோரின் முதுமொழி அல்லவா? பருவகாலத்துக்கு ஏற்ற ஆடை அணிய வேண்டும். குண்டாய் இருந்தால் துணியும் அதிகமாய் வேண்டும். ஒல்லி உடம்புக்கு எந்த உடையும் எடுப்பாய் அமையும்.உறக்கம் உறக்கம் ஒரு பரிசு, உறக்கம்ஒரு மாமருந்து. உறக்கம் ஆரோக்கியம் தரும். உடலில் சக்தியைப் புதுப்பிக்க உறக்கம் தான் ஒரே வழி. வயதுக்கேற்ற உறக்கம் வேண்டும்.இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். முன் இரவில் தூங்க வேண்டும். தொலைக்காட்சி தூக்கத்தைத் கெடுக்கும். பகல்தூக்கம் உடம்பைக் குண்டாக்கும். இரவுத் தூக்கத்தையும் கெடுக்கும். கிழக்கே தலைவைத்துப் படுப்பது சிறந்தது. காப்பி, தேநீர், கவலை, ஏக்கம், காதல், நோய், ஆசை, துக்கம், முதலியவை தூக்கத்தைக் கெடுக்கும். அவற்றை விட்டொழிக்க வேண்டும்.புத்தகம்படித்தால் தூக்கம் வரும். மனதை ஒருமுகப்படுத்தினால் தூக்கம் வரும். நீர் அருந்திப்படுங்கள். தூக்கம் வரும். நீரில் தேன் கலந்து பருகிவிட்டுப்படுங்கள். தூக்கம் வரும். அப்படியும் வரவில்லையா?அடிவயிற்றிலும் கண்கள் மீதும் ஈரத்துணிப்பட்டி போட்டுக்கொள்ளுங்கள் நல்ல தூக்கம் வரும்.மேற்கூறிய 8 வழிகளையும் பின்பற்றி வந்தால் நாளடைவில் எடை குறையும். உடற்பருமன் மறையும். ஒல்லி உடம்பைப் பெறலாம். ஒல்லி மேனி என்றால் என்ன? கழிவுகள் தேங்காத ஆரோக்கியமான மேனி. உயரத்துக்கு ஏற்ற பருமனும் எடையும் உள்ள அடக்கமான மேனி இடுப்பு பெருக்காத தொப்பை இல்லாத கொடி இடை மேனி, நினைத்தவுடன் இயங்கும் மேனி.அன்பும் மகிழ்ச்சியும் ஊக்கமும் மிக்க உள்ளமே அழகு. மேனி என்பது என்ன ? தெய்வத்துக்குத் திருமேனி. மனிதனுக்கும் மேனி. மனித உடம்பின் தோல்தான் மேனி. அது சிவப்பாய் இருந்தால் என்ன? கருப்பாய் இருந்தால் என்ன? ஆராக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடம்பே ஆலயம். அதில் வாழும் சீவனே சிவலிங்கம். எனவே அளவாக உண்டு. நன்றாக உழைத்து உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு சீராக உடலைப் பராமரித்து உற்றாருடனும் சுற்றத்தாருடனும் நட்புறவைப் பேணி வளமாக வாழ்வோமாக என்று கூறினார். திருவிடைமருதூர் நல்லாசிரியர் சிவசுப்பிரமணியன் மூலிகை விளக்கமளித்தார். செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

www.dinamalar.com

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த தகவல்கள் அடங்கிய பதிவை தந்தமைக்கு நன்றிகள்

சுவாரசியமான எழுத்துநடையில் அமைந்த மிகபிரயோசனமான தகவல்கள். நன்றி நுணாவிலான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.