Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவமானத்தை வெற்றி கொள்ள.... பா.விஜயின் பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவமானத்தை வெற்றி கொள்ள.... பா.விஜயின் பாட்டு

35b5gsi.jpg

மனித வாழ்க்கை கவலை இல்லாமல் இல்லை அவன் பணக்காரனா அதானப்பா - கோடீஸ்வரனா இருந்தா என்ன, குடிசையில இருந்தா என்ன கவலை என்பதில்லாமல் இல்லை. இதனால யாருடைய வாழ்க்கையும் தினம் தினம் போராட்டம் நிறைஞ்சதாத் தான் இருக்கிறது.

வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான் என்பதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில அதாவது படிப்பிலோ. பதவியிலோ, அந்தஸ்திலோ,அறி்விலோ, சண்டித்தனத்திலோ அதானப்பா- வீ...ரம் என்பகிறாங்களே அதிலேயோ, ஒருத்தனை விட இன்னொருத்தன் குறைவாக கணிக்கப்படுகிறான் என்பதுதான்.

இதனால என்ன பாதிப்பு ஏற்படுகிறது? வலியோர் மெலியோரை ஏளனம் செய்வது, அவமானப் படுத்துவது சகசமாகிவிடுகிறது. வலியோனைப் போல தானும் முன்னுக்கு வவேண்டும் என்று முழு முனைப்போடு முயற்சி செய்வோருக்கு இப்படியாக அவமானங்கள் அடுத்தடுத்து வந்துவிடுகின்றன. இவை பலருக்கு, அவர்களின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டையாகி, படு தோல்வியில் முடிகின்றன.

இப்படியான நிலைமையயில் என்ன செய்ய வேண்டும்? படு தோல்வியிலே வி்ழுந்து கிடக்காமல், எழுந்து நி்மிர்ந்து நின்று, தொடர்ந்து முயன்று, வென்று காட்ட வேண்டும்.தன்னம்பிக்கையை எந்த நேரத்திலும் தளர விடக் கூடாது. " விழுந்தாலும் எழுந்து நின்று வெல்வது தான் உண்மையான வெற்றி" என்கிறார் சாள்ஸ் டிக்கின்சன்ஸ்.

இதற்கு மிகவும் அவசியமானது தன்னம்பிக்கைதான். அதைத் தரக் கூடிய புத்தகங்கள், மனிதர்கள், பேச்சுக்கள், பாடல்கள் எந்த வயதினருக்குமே கட்டாயம் தேவை.

அப்படிப்பட்ட பாடலை பா.விஜய் எழுதி உலகத் தமிழருக்குக் கொடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்டாமல் இருக்க முடியாது.இந்தப் பாடல் உதிக்க காரணம் என்னவென்று கேட்டதற்குந்தன் சந்தித்த அவமானங்கள்தான் என்கிறார்."அவமானங்களை சேகரித்து வை.அவைதான் உன்னை உசுப்பிவிடும் நெருப்பு" என்று சந்தித்த இளைஞர்கள் எல்லாருக்கும் சொல்லியிருக்கிறாராம்.

இந்தப் பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார்.

திருச்சியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இப் பாடல் கடவுள் வாழ்த்துப் பாடலாகப் பாடப்படுகிறது.

அதுமட்டுமல்ல,இப் பாடல் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக கூறி அந்தப் பாடலை தனது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

மேலும், அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சீன மாநாட்டில் இந்த பாடல் சீன மொழியில் மொழிபெயர்க்கப் பட்டுபாடப்பட்டதாம் எனவும் கூறப்படுகிறது.சகல மனங்களையும் இப் பாடலால் தொட்டுச் சென்ற இந்தக் கவிஞன் சகல விடயங்களையுமே பாடக்கூடியவர் என்பதால் இவர் ஒரு வித்தகக் கவிஞர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார். எனக்குப் பிடித்த இந்தப் பாடல் இதோ!

http://music.cooltoad.com/music/song.php?id=177325

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகலொன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்....நம் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே! ஓ மனமே!! நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது

என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்ற கூடாது

எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்

காலபோக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்

யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்

ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்

வாழ்த்து கவிதை வாசிப்போம் வானம் அளவை யோசிப்போம்

முயற்சியென்ற ஒன்றை மட்டும் மூச்சுபோல சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு

மனிதா! உன் மனதை கீறி விதை போடு மரமாகும்

அவமானம் படுதோல்வி எல்லாமே உருவாகும்

தோல்வியின்றி வரலாறா? துக்கம் இல்லை என் தோழா

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்

பாடலை ஒலிவடிவில் கேட்க: இப் பாடலை தரவிறக்கம் செய்து எப்பவுமே கேட்டு, மனதிற்கு உரமிடுங்கள்!

பாடல்- நன்றி:இசைத்தென்றல்

ஒவ்வொரு பூவுமே வா? இல்ல ஒவ்வொரு பூக்களுமேவா? ஒவ்வொரு+பூ என்றுதான் வரவேண்டும்."கவிஞனும் பொய் அவன் கவிதையும் பொய்" என்று எங்கேயோ படித்த ஞாபகம்.இருந்தாலும், இருக்கும் இலக்கணப்பிழையை விட்டுத் தள்ளுங்கள். இப் பாடல் எந்த(படித்த, பாமர) மனசையும்தொடும்படியாக அழகாய் இருக்குதல்லவா! அழகை ரசிப்போமே!

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு:

In English, it would be:

Every flower tells us

that life is a battle on a battlefield

Every new dawn tells us

When there is night, day will come too

One needs belief in one's life

Goals will definitely succeed one day

Mind! O Mind! Change yourself

Even if it's a mountain, or snow, face it and fight

One's mind should never falter

One should never think 'What kind of life is this?'

Is there a human mind

In which there are no wounds

As time passes wounds are

tricks of magic that disappear

Only strong stones

Can become statues on soil

Only the mind that pains

Can see permanent joy

Who doesn't have battles

What is this water in your eyes

If you see a dream

And attempt it well

It will materialise in a day

Let us recite a poem of wishing

Let us think of the height of the sky

Let us breathe hard work

Like our life breath

A hundred thousand dreams in your eyes

All your goals in your heart

There is no one to win you

Fight with determination

Human! If one wounds your heart

And puts it in the soil, a tree will sprout

And humiliation and failure

Will all come about

Is there a history without failure?

Do not fret my friend

If you have a destination

And it has clarity

You can even claim the sky

நன்றி:விக்கிப் பீடியா

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பாடல்.

நம்மவர்கள தினம் தினம் கேட்க வேண்டும்.

என்றைக்குமே சலிக்காத, உள்ளங்களை ஊக்குவிக்கும் பாடல். பாடல் வரிகளுக்கு நன்றி.

இந்தப்பாடலை இந்தியாவில் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணத்தை கரைத்துக்குடித்தவர்களின் பாடல்களைவிட இதயங்களை பா.விஜய்யின் பாடல் கவர்ந்ததுதான் அவரது பாடலின் வெற்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பாடலின் வரிகள் எனது தினக்குறிப்பேட்டில் முதல் பக்கத்தில் உள்ளது.மனது சோர்ந்துபோகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எடுத்து வாசிப்பேன்.எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் காட்சியை காண-கேட்க இங்கே சொடுக்கவும்.

http://videos.emule.com/play/ovarupookkalu...ph-(Dvc4XvJSpGQ

வரிகள்: பா. விஜய்

குரல்: சித்ரா

இசை: பரத்வாஜ்

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்றைக்குமே சலிக்காத, உள்ளங்களை ஊக்குவிக்கும் பாடல். பாடல் வரிகளுக்கு நன்றி.

இந்தப்பாடலை இந்தியாவில் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம்.

அதுமட்டுமல்ல,இப் பாடல் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக கூறி அந்தப் பாடலை தனது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.