Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களிடம் ஓர் அவசர அழைப்பு

Featured Replies

உங்களுக்கு தெரிந்த மொழிகளில் எமது பிரச்சனையை முன்பைவிட வேகமாக முன்னெடுக்கவும் எதிரியானவன் தனது பரப்புரையை ஆர்முடுக்க எத்தனிக்கின்றான்.

நாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமல்லாது சீனம்,ஹிந்தி,மலையாளம் தெலுங்கு,ஜப்பான் இன்னும் அறியாத பல மொழிகளிலும் குறிப்பாக அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் இணையத்தளங்கள் ஆரம்பிக்கவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை அரசு ஐரோப்பிய மொழிகளில் புதிய செய்தி இணைய தளங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைள் குறித்து தவறான முறையில் ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று தற்போது ஐரோப்பா விஜயம் செய்துள்ளது.

சுவீடன் மற்றும் ஜெர்மனிய ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு இலங்கையின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டதாக துறைமுக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் ஆதரவு அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பாவில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை முறியடிக்கும் வகையில் அரசாங்கம் ஐரோப்பாவில் பயன்படுத்தும் அனைத்து மொழிகளிலும் செய்தி இணையதளங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைள் குறித்து ஐரோப்பிய தலைவர்களுக்கும், அந்நாடுகளது மக்களுக்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படவில்லை எனவும், அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே மிகவும் பொருத்தமானதெனவும் அமைச்சர் டிலான் பெரேரா ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்திற்கு

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தானே காலம் பூராவும் செய்யிறியள். என்ன கண்டியள்...? :wub::wub:

வெளிநாட்டவர்களை நோக்கிய பரப்புரைகளை கொஞ்சக் காலம் நிறுத்தி விட்டு, எமது மக்கள் மத்தியில் பெரும் எடுப்பில் பரப்புரை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் தட்டி எழுப்பி, உலக வல்லரசுகள் எமக்கு எதிராக தொடுத்துள்ள போரை விளக்கி, நாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை கூற வேண்டிய நேரம் இது.

எமது பலம் ஒன்றாகும் வரை, நாம் ஆயிரம் மொழிகளில் பரப்புரை செய்தும் எந்தப் பயனும் வரப் போவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே காலம் பூராவும் செய்யிறியள். என்ன கண்டியள்...? :wub::wub:

வெளிநாட்டவர்களை நோக்கிய பரப்புரைகளை கொஞ்சக் காலம் நிறுத்தி விட்டு, எமது மக்கள் மத்தியில் பெரும் எடுப்பில் பரப்புரை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் தட்டி எழுப்பி, உலக வல்லரசுகள் எமக்கு எதிராக தொடுத்துள்ள போரை விளக்கி, நாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை கூற வேண்டிய நேரம் இது.

எமது பலம் ஒன்றாகும் வரை, நாம் ஆயிரம் மொழிகளில் பரப்புரை செய்தும் எந்தப் பயனும் வரப் போவது இல்லை.

பரப்புரை என்பது எந்தக்காலத்திலும் தொடர்ந்து செய்யப்படவேண்டியது

அதை நிறுத்தச்சொல்கின்றீர்கள்

புரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை உது உப்ப தேவையோ...? இந்தியாவில என்ன நடக்குது தெரியும்தானே...?

எங்கட சனம் சாகுது வெளிநாட்டு ராணுவம் அங்கோ போயு அவங்களுக்கு பயிற்சி ஆலோசனை கொடுக்குது..இப்ப தேவை புலிகள் நல்லாய் எழும்பி அடிக்க

வேண்டும்... அதுக்குபிறகு உந்த ஒப்பாரியை வைப்பம்... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது, அந்த அந்த நாடுகளில் வசிக்கும் யாழ்கள உறவுகளோ, அல்லது தமிழ் ஆர்வலர்களோ, ஒரு வெப்சைட்டையோ, அல்லது அந்த மொழிகளில் இயங்கும் பிளாக்கர்களையோ, அல்லது வீடியோக்களை இணைக்கக்கூடிய யூடீயூப் கணக்குகளையோ, இலவசமாகவும் சிறிய பணத்தொகையிலும் தொடங்க முடியும். இதைத்னியாகவோ அல்லது கூட்டாகவோ தொடங்கமுடியும். அவர் செய்வார் இவர் செய்வார் என காத்திராமல் நாமே உடனே செய்யதொடங்கவேண்டும். முக்கியசெய்திகளை இன்னரநெற் எக்ஸ்புளோர் 8பீற்றா உங்களுக்கு தேவையான மொழிகளில் மொழிபெயர்த்து தருகிறது, நீங்கள் செய்ய வேண்டியது அவற்றை சரி பார்பதும், அதிகமாக உங்கள்நாட்டவர் வாசிக்கும் ,குழுக்களில் அங்கத்தவராக பதிந்து உங்கள் பதிவுகளை இணைப்பதும், வீடியோக்களுக்கு அந்த அந்த நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து போடுவதுமே, இப்போது யூரியூப்பில் அதிகளவு இளையோரைகாணமுடிகிறது, ஒரேவீடியோக்களுக்கு அவர்களது நாட்டு மொழிகளில் தலைப்பிடுகிறார்கள் இதன் மூலாம் கூடுதலான பார்வையாளை பெறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
இதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது, அந்த அந்த நாடுகளில் வசிக்கும் யாழ்கள உறவுகளோ, அல்லது தமிழ் ஆர்வலர்களோ, ஒரு வெப்சைட்டையோ, அல்லது அந்த மொழிகளில் இயங்கும் பிளாக்கர்களையோ, அல்லது வீடியோக்களை இணைக்கக்கூடிய யூடீயூப் கணக்குகளையோ, இலவசமாகவும் சிறிய பணத்தொகையிலும் தொடங்க முடியும். இதைத்னியாகவோ அல்லது கூட்டாகவோ தொடங்கமுடியும். அவர் செய்வார் இவர் செய்வார் என காத்திராமல் நாமே உடனே செய்யதொடங்கவேண்டும். முக்கியசெய்திகளை இன்னரநெற் எக்ஸ்புளோர் 8பீற்றா உங்களுக்கு தேவையான மொழிகளில் மொழிபெயர்த்து தருகிறது, நீங்கள் செய்ய வேண்டியது அவற்றை சரி பார்பதும், அதிகமாக உங்கள்நாட்டவர் வாசிக்கும் ,குழுக்களில் அங்கத்தவராக பதிந்து உங்கள் பதிவுகளை இணைப்பதும், வீடியோக்களுக்கு அந்த அந்த நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து போடுவதுமே, இப்போது யூரியூப்பில் அதிகளவு இளையோரைகாணமுடிகிறது, ஒரேவீடியோக்களுக்கு அவர்களது நாட்டு மொழிகளில் தலைப்பிடுகிறார்கள் இதன் மூலாம் கூடுதலான பார்வையாளை பெறுகிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

எமது இளையதலைமுறையினர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே Skyblog என்றும் யூரியூப்புக்கள் என்றும் வைத்திருக்கின்றனர்

எனவே அவர்கள் மூலமாக அந்தந்த நாட்டு மொழிகளில் அந்தந்த நாட்டவரிடம் எமது செய்திகளை கொண்டுசெல்வது எழிது.

எனவே நாம் செய்யவேண்டியது எமது இளைஞர்களது முகவரிகளுடன் இணைப்புகளை ஏற்படுத்திவிடுவதே.

ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள்ளேயே அவை உலகமயமாகிவிடும்

யாராவது உடனே செய்வீர்களா...

எனது மக்களும் இவற்றை வைத்திருக்கின்றனர்

ஆனால் அவர்கள் சிறியவர்கள்

ஆனால் ஆயிரக்கணக்கானவர்களின் உடன் தொடர்பிலுள்ளனர்

எனவே விசயம் தெரிந்தவர்கள் தொடங்கிவிட்டால் நான் அவர்களையும் இணைத்துவிடுவேன்

;

என்னைப்பொறுத்தவரையில் முதலில் நாங்கள் இலங்கையரசின் கொடுமைகளில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்றி இலங்கையின் பொய்பிரச்சாரங்களையும் முறியடித்து போராளிகளையும் பலப்படுத்தவேண்டும். இவை எல்லாம் சமகாலத்தில் செய்ய வேண்டும்..

நமக்குள் பொதுவாக நல்லது செய்யவேண்டும் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு உண்டு.

அதனை எப்படி செய்வது என்பதில் சரியான வழிகாட்டல் இன்றி எமது சக்தி பலவழிகளிலும் பிரிக்கப்பட்டு சரியான பலனை அல்லது சிறிய பலனைமட்டும் வழங்கியுள்ளது..

நமது மக்கள் மிக அறிவானவர்கள். ஆனால் ஒருங்குபடுத்தப்பட்ட, சரியான ஆலோசனைகளுடன், ஒற்றுமையான செயல்பாடு மிகப்பெரிய பலனைக்கொடுக்கும்...

ஒவ்வொருவரிலும் பல ஆளுமைகள், அல்லது சில விடையங்களில் திறமை இருக்கும் அதனை

அறிந்து சரியாகப்பயன்படுத்தப்படல் வேண்டும்...மற்றவர்களை அறியாமையை நாங்கள் சிறுமைபடுத்தாமல் அவர்களிடம் உள்ள திறமைகளை பயன்படுத்த வேண்டும்.. வார்த்தைகளால் அரவணைத்து எல்லோரும் ஒரு இலசியத்திற்கு எமது இனத்தின் விடிவிற்காக இப்போது தொடக்கம் பாடுபடுவோம்...தராகி, சித்தன்,சபெசன் குகதாசன் நியு மான் எல்லோரும் ஒரு கருத்திற்கு வந்து உங்களால் முடிந்ததை கூட்ட்டகவோ தனியாகவோ திட்டமிட்டு செயல் பட்டு நோக்கத்தை நிறைவேற்றுங்கள்...

இதுவரைக்கும் வெளினாடுகளில் நடத்தப்பட்ட ஆர்பாட்டஙல், கூடஙள் மறியல்கள் போரட்டங்கள் எண் இதுவரைக்கும் bbc cnn போண்ற சர்வதேச செய்தி நிருவனகளில் அல்லது அந்தந்த நாடுகலின் உடன் வருவதில்லை? என்ன் என்று சிந்தித்து இருகிறிறிகளா?

இதறு இலங்கையரசின் பொய்யான தகவல்களே..இதற்கு எடுபட்டு தமிழர் போரட்டங்கள் அலசியப்படுத்தப்படுகின்றன? இதனை நிவர்த்தி செய்ய என்ன செய்திருக்கிறோம் நாம்? எமது சரியான அணுகு முறை இல்லை? சரியான அணுமுறையில் நாம் அணுக வேண்டும் அவர்கள் தேடிவந்து செய்திகள் சேகரித்து பரபுவார்கள் இது உலகம் முழுவதும் ஒரு நொடியுள் செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பிரான்சில் என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய நான் தயாராகவே இருக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தானே காலம் பூராவும் செய்யிறியள். என்ன கண்டியள்...? :wub::rolleyes:

உம்முடைய பதில் எனக்கு விளங்கவில்லை காலம் புறாவும் என்டால்? எப்பையாவது ஒருநாள் விடிவு கிடைக்கும் என நம்பித்தான் எல்லாப்போராட்டமும் செய்யுறம் குழப்புறதுமாதிரி தயவுசெய்து செய்யாதீர்கள் கதைக்காதீர்கள் முடடியுமானவர்கள் செய்யட்டும்

இதுவரைக்கும் வெளினாடுகளில் நடத்தப்பட்ட ஆர்பாட்டஙல், கூடஙள் மறியல்கள் போரட்டங்கள் எண் இதுவரைக்கும் bbc cnn போண்ற சர்வதேச செய்தி நிருவனகளில் அல்லது அந்தந்த நாடுகலின் உடன் வருவதில்லை? என்ன் என்று சிந்தித்து இருகிறிறிகளா?

இதறு இலங்கையரசின் பொய்யான தகவல்களே..இதற்கு எடுபட்டு தமிழர் போரட்டங்கள் அலசியப்படுத்தப்படுகின்றன? இதனை நிவர்த்தி செய்ய என்ன செய்திருக்கிறோம் நாம்? எமது சரியான அணுகு முறை இல்லை? சரியான அணுமுறையில் நாம் அணுக வேண்டும் அவர்கள் தேடிவந்து செய்திகள் சேகரித்து பரபுவார்கள் இது உலகம் முழுவதும் ஒரு நொடியுள் செல்லும்.

உங்களுடைய கரத்தைநான் வரவேற்கிறேன்

வெளிநாடுகளை நோக்கிய எமது பரப்புரையால் மாற்றம் எதாவது உருவாவதற்கு நாம் பலமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையாக இருக்கின்றது.

எம்மை விட பரப்புரையில் தீபெத்தியர்கள், பாலஸ்தீனர்கள் போன்றவர்கள் வெளிநாடுகளை நோக்கிய பரப்புரையில் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை.

நாம் எத்தனை பேர் ஊhவலம் நடத்தினாலும், எத்தனை துண்டுப் பிரசுரங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தினாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.

எதை தமது நாட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் சர்வதேச ஊடகங்கள் ஒரு கொள்கைமுடிவோடு செயற்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் இருந்து கனடா வரை அந்தந்த நாட்டு பாராளுமன்றங்களுக்கு முன்பால் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஒரு நூறு பேர் தமது நாட்டுப் பாராளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினாலே அதை ஒரு முக்கிய செய்தியாக்குவது ஊடகங்களின் நடைமுறை. ஆனால் ஏற்கனவே பேசி வைத்தது போன்று எமது ஆர்ப்பாட்டம் பற்றி செய்தியை உள்நாட்டு, சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்தன.

உலக வல்லரசுகள் ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலோடு எம் மீது போர் தொடுத்திருக்கின்றன. ஆனால் நாம் எதிரி யார், நண்பன் யார் என்ற குழப்பத்தில் இன்னும் இருக்கின்றோம்.

எமது எதிரிகள் தம்மை தெளிவாக இனம் காட்டியும், அவர்களுக்கு நாம் எமது போராட்டத்தை புரிய வைக்கின்றோம் என்று நேரத்தையும் வலுவையும் வீணடித்துக் கொண்டிருக்கி;ன்றோம்.

உண்மையில் இந்த சர்வதேச நாடுகளுக்கு எமது போராட்டத்தின் நியாயம் புரியவில்லை என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகின்றீர்களா?

அவர்களுக்கு எமது போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்கின்றது. ஆனால் குறிப்பிட்டளவு தமிழர்களுக்கு இந்த போராட்டத்தின் நியாயம் புரியவில்லை. அல்லது புரிந்தும் வெறும் பார்வையாளர்களாக இருக்கின்றார்கள். இந்தத் தமிழர்களை ஒன்று திரட்டுவதுதான் எமது முக்கிய வேலையாக இருக்க வேண்டும்.

நாம் ஒன்றுபட்டு பெரும் பலத்தோடு உலக நாடுகள் எம் மீது தொடுத்துள்ள போரை முறியடிக்க வேண்டும். அதன் பிறகு சர்வதேசத்தின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காகப் பேசாமல் இருக்கச் சொல்கின்றீர்களா? நாம் பலமடைவதும், பிரச்சாரங்களைச் செய்வதும் ஒரு சேர நடத்தக் கூடியதே. பலப்படுத்தலை ஒருபக்கமாகவும், மறுபக்கம் பிரச்சாரங்களையும் செய்யலாம்.

தவிர, நிறைய இளையதலைமுறையினர் செய்து கொண்டிருக்கின்றார். அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுங்கள். அதை விட்டு விட்டு, இதனால் பலன் ஏதுமில்லை என்று அவர்களின் முயற்சியைக் குழப்பி விடாதீர்கள்..

தூயவன்,

செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றை விட்டு விட்டு, மற்றவற்றை நாம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு.

எமக்கு எதிரான அணியில் இந்தியா, அமெரிக்கா என்று உலகின் வல்லரசுகள் நின்று யுத்தம் செய்கின்றன. நாம் இந்த நாடுகளிடமே போய் வழிந்து கொண்டு நிற்கின்றோம். இத்தனைக்கும் இந்த நாடுகளை எம்மை நோக்கி வரச் செய்கின்ற பலம் எம்மிடம் இருக்கின்றது. அதை அறியாமல் நிற்கின்றோம். அந்தப் பலத்தை ஒன்று திரட்டுவதற்கு நாம் போதுமான செயற்பாட்டில் இறங்கவில்லை.

இலங்கைக்கான வரிச் சலுகையை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றோம். சிறிலங்கா அரசு பலமாக இருக்கின்ற நிலையில் அதை பலவீனப்படுத்துவது போன்ற ஒரு செயற்பாட்டை இந்த மேற்குலக நாடுகள் செய்யாது.

tamilsforobama என்று வழிந்து குழைந்து வாக்கெடுப்பு நடத்துகின்றோம்.

எல்லாம் எதற்கு? நாம் பெரும் பலமாய் ஒன்று படுவோம். அவர்கள் தானாக எம்மிடம் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

இந்த நாடுகளுக்கு எம் போராட்டத்தை எத்தனை பங்கு நீங்கள் தெளிவுபடுத்தினீங்கள் சொல்லுங்கள்... 10 வீதம் கூட வேண்டாம்... 1 வீதம்?? இங்கே வழிவது, வழியாது என்பது பிரச்சனையல்ல. வெறும் 40 இலட்சம் மக்கள் கொண்ட தமிழ்மக்களில் களத்தில் நிற்பவர்கள் ஒரு 50 ஆயிரம் வருமா? அவ்வளவு பேரை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களிடம் வெட்கம் பார்ப்பது என்ன வகை??

இந்தியா ஒரு காலத்தில் தமிழ்ப் போராளிகளுக்குப் பயிற்சி கொடுத்தது. இலங்கையரசு அங்கே வழிந்தும், தன்னுடைய இராசதந்திரத்தாலும் அதைத் தன் பக்கம் திருப்பியது. இது தான் வழியலின் பலன்.

பலத்தை உருவாக்கவில்லை... என்பது எல்லாம் வெறும்வாயை மெல்லவே போதுமானது. அப்படி ஒரு நோக்கம் இருந்திருந்தால் யாருமே வெளிநாடு வராமல், தமிழீழத்தைப் பெற்றிருக்கலாம்.

இன்றைக்கு மேலை நாடுகளிடம் வழிவது என்பது அவர்கள் கருணை காட்டுவா்கள் என்று நம்பிக்கையில் அல்ல. அவர்கள் தாங்கள் மனித உரிமைவாாதிகள் என்று காட்டிக் கொள்வதைத் தட்டி எழுப்புவதற்காக.... தவிர புலம்பெயர் மக்கள் செய்கின்ற பிரச்சாரங்கள் என்பது, அந்தந்த நாட்டு மக்களை மையப்படுத்தித் தான் செய்யப்படுகின்றன. அது அந்த நாட்டு அரசாங்கங்களை மூலமப்படுத்தியல்ல. மக்களில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள், அந்த நாட்டு அரசின் கவனத்திற்குச் செல்லும் என்பதால்.

தவிர, என்னுமொரு விடயம். அப்படி வழியல் ஒன்றை இலங்கையரசு செய்யத் தொடங்கியுள்ளதை நீங்கள் ஏன் அவதானிக்கவில்லை. அவர்களும் தங்கள் நாடு நல்ல நாடு, பொருளாதாரத் தடை விதிக்காதீர்கள் என்று தான் கெஞ்சுகின்றது...

இந்த மக்களின் படுகொலையில் ஏதோ ஒரு வகையில், எப்படியாவது மனித அவலங்களைத் தடுக்க வேண்டும் என்று சில உள்ளங்கள் விரும்புகின்றார்கள். தங்களால் ஆனதை முயற்சிக்கின்றார்கள். அதை ஏன் தடுக்கப் பார்க்கின்றீர்கள்...

பலமடைவோம், பலமடைவோம் என்று வாய் நிறையப் பேசி எவ்வித பலனுமில்லை. அதற்குச் சேவைக்கு ஆட்கள் தேவை.

உலகம் ஒன்றும் உயர்ந்த தட்டில் வைத்திருக்கவில்லை. எம் போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கி வைத்துள்ளது. அதில் இருந்து விடுபட பிரச்சாங்கள் அவசியம்... உங்கள் பாசையில் வழியத் தான் வேண்டும்.

நல்லவனோ.. கெட்டவனோ.. புகழ்விரும்பியோ.. கோவணகுண்டியோ.. எமக்கு தேவை மக்கள் பிரதிநிதிகள்...... வருபவர்களை எல்லம் விழுந்து விழுந்து வரவேற்காமல் 'கடமை' 'கண்ணியம்' 'கட்டுப்பாடு' எண்டு வியாக்கியானம் கதைத்தால் இன்னும் முப்பது வருசத்துக்கு கூட்டு வல்லுறவில் சேடம் இழுக்கலம்................. :rolleyes:

  • தொடங்கியவர்

முதலில் வலைப்பதிவுகளில் இருந்து தொடங்குவோம் ஏனெனில் வலைப்பதிவுகள் குறிப்பிடத்தக்களவு தாகக்த்தை ஏற்படுத்தும் . நாம் தமிழ்நெற் செய்திகளை 40 மொழிகளில் மொழிமாற்ற இலகுவாக கூகில் மென் பொருளை பயன்படுத்தலாம்

படி 1:வலைப்பதிவு ஒன்றை தொடங்குங்கள்.

படி 2:தமிழ் நெற்றில் இருந்து ஒரு செய்தியை கிழிக்பண்ணுங்கள்.உதாரணமாக

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27809

படி3:மேலேஉள்ள செய்தியை கீழ்வரும் மொழிமாற்றியில் இட்டு வரும் வெளியீடை உங்கள் தழத்தில் வெட்டி ஒட்டி முதலில் ஆரம்பிப்போம்.

http://translate.google.com/translate_t#

இது பின்வருமாறு காணப்படும் உதாரணமக சீன மொழியில் மாற்றினால் இவ்வாறு வரும்

解放軍100死亡, 250人受傷,激烈的戰鬥中Ki'linochchi -猛虎解放組織

[泰米爾星期一12月22日, 2008年,格林尼治標準時間14:28 ]

100多名斯里蘭卡軍(解放軍)士兵被打死,至少250名解放軍

கூகிள் மொழிபெயர்ப்பை சரியான முறையில் செய்வது இல்லை. உதாரணமாக ஆங்கிலத்தில் இருந்து யேர்மனுக்கு மாற்றுகின்ற பொழுது, பல தவறுகள் நிகழ்கின்றன.

இப்பொழுது நான் சொல்கின்ற மற்ற விடயத்திற்கு வருவோம்.

உதாரணமாக ஒரு ஐரோப்பிய நாடு விடுதலைப் புலிகளை தடை செய்கின்றது என்றால், அதற்கு முன் அது தன்னுடைய உள்நாட்டு புலனாய்வுத் துறையுடன் அது குறித்துப் பேசும். தமது நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இந்த தடைக்கு எந்த விதமான பிரதிபலிப்பைக் காட்டுவார்கள் என்று விசாரிக்கும்.

இந்தக் கேள்விக்கு அந்த நாட்டின் புலனாய்வுத்துறை என்ன பதிலைக் கொடுக்கும் என்று நினைக்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்

கூகிள் மொழிபெயர்ப்பை சரியான முறையில் செய்வது இல்லை. உதாரணமாக ஆங்கிலத்தில் இருந்து யேர்மனுக்கு மாற்றுகின்ற பொழுது, பல தவறுகள் நிகழ்கின்றன.

இப்பொழுது நான் சொல்கின்ற மற்ற விடயத்திற்கு வருவோம்.

உதாரணமாக ஒரு ஐரோப்பிய நாடு விடுதலைப் புலிகளை தடை செய்கின்றது என்றால், அதற்கு முன் அது தன்னுடைய உள்நாட்டு புலனாய்வுத் துறையுடன் அது குறித்துப் பேசும். தமது நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இந்த தடைக்கு எந்த விதமான பிரதிபலிப்பைக் காட்டுவார்கள் என்று விசாரிக்கும்.

இந்தக் கேள்விக்கு அந்த நாட்டின் புலனாய்வுத்துறை என்ன பதிலைக் கொடுக்கும் என்று நினைக்கின்றீர்கள்?

அது நமது பரப்புரையின் வீரியத்தில் தங்கி உள்ளது சபேசன் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

15. September 2008 இற்குப் பிறகு french/deutsch மொழிகளில் செய்தி வெளியிடுவதை Tamilnet நிறுத்திவிட்டது

தமிழ்நெற் உட்பட எல்லா தளங்களும் எல்லா முக்கியமொழிகளிலும் செய்திகளை வெளியிடத்தொடங்கினால் நல்லது.....

மகிந்த குறூப் பொய்ப்பிரச்சாரத்துக்கு வந்திருப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று... நாங்கள் தமிழ்ச்சனத்தைக் கண்போல பார்க்கிறம்..புலிதான் தமிழரைக் கொல்லுது எண்டெல்லாம் பொய்யடிக்க யுறோப்காரன் விருதும் குடுத்தெல்லோ அனுப்பபோறான் உவங்களுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானக் காலத்தில யோசித்துச் செய்திருக்கவேண்டியதை இப்ப யோசிக்கிறியள். வெள்ளம் தலைக்கொமேலை நிக்குது நீங்கள் என்னடா எண்டால் அணை கட்டுறதைப் பற்றி யோசிக்கிறியள்.

  • தொடங்கியவர்

15. September 2008 இற்குப் பிறகு french/deutsch மொழிகளில் செய்தி வெளியிடுவதை Tamilnet நிறுத்திவிட்டது

இதி கவலைக்குரிய விடயம், நான் ஒரு ஐடியா சொல்கிறேன், தாயகத்திலிருந்து வளிநாட்டு அரசஉதவிகளை பெற்று வீடுகளில் ஓய்வாக இருக்கும் படித்த ஐயா மார்களிடம் இந்த மொழிபெயர்ப்பு வேலைகளை கொடுத்துவிட்டு நம் இளையோர்கள் அவற்றை கணனியில் தரவேற்றலாமே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைக்கு மேலை தண்ணி நிக்கும்போது தேவைப்படுவது ஒட்சிசன். அதை எப்படி வழங்குவது பற்றி அனைத்து தமிழர்களும் தம்மைத் தாமே கேள்வி கேட்கும் காலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.