Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

BBC யின் இரட்டை அணுகுமுறை

Featured Replies

நடு நிலமை யாக இருக்கலாமல்லோ? துரையப்பாவுக்கு வெடி விழுந்த நாள் முதலாய் பெடியள் எதாவது செய்வாங்கள் என்ற ஆசையும் ,தேவையும் வந்திட்டுது.அதற்காக நான் கொடுத்த விலையிலும் பார்க்க சக உறவுகள் கொடுத்த விலை அதிகம் தான். ஆசைப்படுவதில் தப்பில்லைத்தானே.

பி. பி.சி தமிழ் ஒசையை பொறுத்தவரை இலங்கையை ஒரு சர்வதேச நடாக கண்டு கொள்வதில்லை ஏன்?இந்தியா வை சூழவுள்ள பாகிஸ்தான் ,பங்காளதேஷ், மாலைதீவு, நேபாளம் எல்லாம் சர்வதேச கண்ணொட்டத்திற்க்குள் வரும் ,.செய்தி வாசிப்பவர்கள் அதிகமாக இலங்கை செய்திகள், இந்தியா செய்திகளென்று சொன்னபின்பு இனி சர்வதேச செய்திகள் என்று வாசிப்பார்கள். தமிழர்கள் இருப்பதால் தான் என்று சொல்லமுடியாது காரணம் மலேசியாவிலும் தமிழர்கள் இருக்கினம் ஆனால் மலேசியாவை சர்வதேசம் என்றுதான் சொல்வார்கள்.

கருத்து விலங்கிட்டு மனித மனங்களை சிறை கொள்வது ஒரு நுட்பமான அடக்குமுறை யுக்தி.உலகெங்கும் அடக்குறையாளர்கள் இந்த்க் கருத்தாதிக்க யுக்தியையே கடைபிடிகின்றார்கள்.மனிதர்கள?? விழித்தெழச் செய்யாது அவர்களை அறியாமை உறக்கத்தில் ஆழ்த்துவதற்க்கு ஏகாத்பத்தியவாதிகளும், பேரினவாதிகளும் சரி,இந்த கருத்துப் போதையையே பாவித்து வருகின்றனர்.அடிமை கொண்ட மக்களின் கிளர்ச்சியை நசுக்க,புரட்சியை முறியடிக்க,விடுதலை உணர்வைக் கொன்றுவிட கருத்தாதிக்கமானது ஒரு கனரக ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது

உப்படி கனக்கா நான் புலம்பலாம் ......ஆனால் வன்னியில் இல்லைலை.......முல்லையில்

ஓம்மண்ணை நீங்கள் நல்லா ஆசைப்படுங்கோ கனவு காணுங்கோ. ஆனால் அந்த ஆசைகள் பற்றிய பறைசாற்றல் தவறான எதிர்பார்ப்புகளை மற்றவர்களிற்கு விதைக்காது பாத்துக் கொள்வது இன்றை காலகட்டத்தில் ஒரு சமூக சேவை.

நடுநிலை என்பது subjective ஆனது. உங்களது நிலைப்பாட்டில் நடுநிலையாக இருப்பது இன்னொருவர் நிலைப்பாட்டில் நடு நிலையாக இருக்காது. பிபிசியின் நடுநிலையில் திருப்த்தி இல்லை என்றால் அதை பிபிசியோடு நேரடியாக எதிர்கொண்டு உறவாடி கருத்துப் பரிமாறி விவாதித்து தான் மாத்தலாம். எங்களுக்கை அய்யோ எல்லாரும் எங்களை அழிக்க நிக்கிறாங்கள் முழு உலகமும் தமிழரை அழிக்க நிக்குது எண்டா மிச்சத் தமிழரின் மனநிலையை பாதிப்பது தான் நடக்கும் வேறு ஒன்றும் அல்ல. பிபிசியினதோ உலகத்தினதோ நிலைப்பாட்டில் எந்த மாற்றத்துக்கும் உரிய சிறு அழுத்தம் கூட ஏற்படாது.

பிபிசி தமிழ் ஓசை பிரித்தானியாவால் தமிழரின் தேசிய நலனை காப்பாற்ற முன்னெடுக்க நடத்தப்படவில்லை. கருத்து விலங்கிடாது அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற்று சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டுவதற்கு அடிமைப்பட்டிருக்கும் தமிழர்களை தயார்படுத்துவது பிபிசி தமிழ் ஓசை இன் நோக்கமல்லை. ஆனா படியால் பிபிசி தமிழ் ஓசை ஏதே தமிழ் தேசியத்தின் ஓசை என்று சுய விலங்கிட்டபடி பிபிசி தமிழ் ஓசை பற்றி முக்காடு போட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கும் நிலையில் இருந்து விடுதலை பெற முயற்சிக்கவும்.

ஓம் வன்னியில் இல்லை முல்லை...பூவில என்ன கள்ளுக் குடித்த வண்டாக வெறியில புலம்புவதாக நினைப்போ. :rolleyes:

ஏதாவது வயதுக்கு ஏற்றமாதிரி பிரியோசனமா முயற்சிக்கவும்.

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த பலர் இப்பொழுது ஒன்றாக ஒரே குரல் கொடுக்கவில்லையா?. புளட்டில் இருந்த மாமனிதர் தராக்கி, ஈபிஆர் எல் எவ்வைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோவில் சிறிகாந்தலிங்கம், அடைக்கலநாதன்... போன்றவர்கள் இப்பொழுது ஒன்றாகக் குரல் கொடுக்கிறார்கள் தானே. அவர்களை யார் வாய் கூசாமல் திட்டுகிறார்கள்.

வன்னியில் எமது மக்கள் கொடிய அரக்கன் இராசபக்சையினால் தினமும் கொல்லப்பட்டிருக்கும் போது, அது பற்றிக் கவலைப்படாமல் புலி அழிந்தால் நல்லது என்ற வகையில் சிங்களம் செய்வது சரி என்று சில ஈனப்பிறவிகள் இப்பொழுதும் கதைக்கிறார்களே. இதுவா மாற்றுக் கருத்து?

""இன்றைக்கு நம் முன்னால் இருக்கின்ற சவால்கள் அத்தனையும் நிஜம்.

நம்மை அச்சுறுத்தும் சவால்கள் பல.

அவைகளை ஒரு குறுகிய காலத்தில் வெல்லுவது கடினம்.

ஆனால், இது அமெரிக்கா. சவால்கள் தோற்கடிக்கப்படும்

"இந்த அரசு பெரியதா சிறியதா என்பது முக்கியமல்ல.

இந்த அரசு செயல் படுமா?

இதுதான் இன்று உள்ள மிக முக்கியமான கேள்வி.

இந்த அரசு நல்ல சம்பளத்துடன் வேலை தந்து குடும்பங்களை வாழ வைக்குமா?

வயதான காலத்தில் நல்ல ஓய்வூதியம் தருமா?"

இந்த கேள்விகளுக்கு விடைதருவதுதான் நமது செயல் திட்டம்

அமெரிக்காவை பொறுத்த வரையில் உலகிலுள்ள சகல நாடுகளுக்கும் நண்பன் என்பதுடன்

நாமும் அவர்களுக்கு துணையாகவே இருப்போம்"

நாங்கள் இதை எல்லாம் செய்து

தொடங்கி பலகாலமாயிற்று

ஆனால் ஏற்கமறுப்பவர்களை என்ன செய்வது?????

அதற்கெல்லாம் ............????

ஈபிஆர் எல் எவ்வைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன்இ டெலோவில் சிறிகாந்தலிங்கம் அடைக்கலநாதன்... போன்றவர்கள் இப்பொழுது ஒன்றாகக் குரல் கொடுக்கிறார்கள் தானே

இவ்வளவும் நடந்தபின்பும்

இவ்வளவு பின்வாங்கல்கள் தொடர்ந்தபின்பும்

இவர்களுக்கு இருக்கும் உறுதியைப்பார்த்து நான் அதிசயிப்பதுண்டு

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனைய இயக்கங்கள் மாற்றுக் கருத்துக் கொண்டதால்தானே கொல்லபட்டார்கள்?

வேறு என்ன காரணம் சொல்லுங்கள்?

துரோகி...... அது இது என்று சொன்னதை விடவா?

மாற்றுக்கருத்தின் நாள்பட்ட விழைச்சல்கள்தானே ஆனந்தசங்கரி, பிள்ளையான், கருணா, டக்ளஸ் இப்படி அரிவரியில இருந்துதான் பாடம் எடுக்க வேண்டும் இவருக்கு. ஏதோ தன் அறிவாழத்தைக் காட்டுவதாக நினைத்து.....................

:D இப்போ நீங்கள் சொல்ல வேனும், நாங்கள் கேட்க வேனும் அதுதான் விதி. :D

அது அப்படித்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

:

ஏதாவது வயதுக்கு ஏற்றமாதிரி பிரியோசனமா முயற்சிக்கவும்.

நன்றி வணக்கம்.

சரி ,சரி நீங்கள் சொல்லிட்டிங்கள்...நான் செய்யிறன் .என்ட வயசுக்கு எற்ற வேலை என்றால் கோயிலில் தேவாரம் திருவாசகம் தான் பாடலாம்.

அது சரி யாழில கருத்து எழுதுவதற்கு வயசு ஒரு தடையா?ஒருத்தன் எழுதிறதற்கே வயசை காரணம் காட்டி தடை போட நினைக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழ் ஓசை பிரித்தானியாவால் தமிழரின் தேசிய நலனை காப்பாற்ற முன்னெடுக்க நடத்தப்படவில்லை. கருத்து விலங்கிடாது அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற்று சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டுவதற்கு அடிமைப்பட்டிருக்கும் தமிழர்களை தயார்படுத்துவது பிபிசி தமிழ் ஓசை இன் நோக்கமல்லை. ஆனா படியால் பிபிசி தமிழ் ஓசை ஏதே தமிழ் தேசியத்தின் ஓசை என்று சுய விலங்கிட்டபடி பிபிசி தமிழ் ஓசை பற்றி முக்காடு போட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கும் நிலையில் இருந்து விடுதலை பெற முயற்சிக்கவும்.

நன்றி வணக்கம்.

பி.பி.சி தமிழ் ஒசை தமிழரின் நலனை முன் எடுத்து அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற்று சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டுவதற்கு தமிழ் மக்களுக்காக நிற்க தேவை இல்லை.ஆனால் குறைந்த பட்சம் இரு பக்க நியாயத்தை தெரிந்து கொண்டு செய்தி வெளியிடலாமே! இலங்கை அரசின் செய்தியை மட்டும் வெளியிட பி.பி.சி என்ன லங்கா புவத்தா?

professional journalism இல் நம்பகத் தன்மை ஆதாரங்கள் முக்கியம். பரபரப்பு அல்ல.

அதனால் தான் எந்த main-stream media வை எடுத்தாலும் அவர்கள் உத்தியோகபூர்வ மூலங்களில் இருந்து வரும் செய்திகளைத்தான் வெளியிடுகிறார்கள்.

முக்கியமாக ஒரு உத்தியோகபூர்வற்ற மூலம் ஒரு அரச தரப்பு பற்றி குற்றம் சாட்டும் பொழுது அதை அவர்கள் அதிக கவனம் எடுத்து விசாரணைகள் செய்தபின்னர் தான் வெளியிடுகிறார்கள். நீங்கள் வன்னியில் இருக்கும் ஒருவருடன் தொலைபேசியில் கதைத்துவிட்டு எழுந்தமானத்திற்கு ஒரு குடிசைக் கைத்தொழில் கிசுகிசு எழுதுவதைப் போல் அவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

புலிகள் ஒரு non-state actor ஆக இருந்தும் அவர்களது தரப்பு செய்திகள் main-stream media இல் வந்திருக்கிறது. அதற்கு காரணம் புலிகள் significant stakeholders என்று உணரப்பட்டதால்.

Part 1: http://video.google.com/videoplay?docid=2151064219162771887

Part 2: http://video.google.com/videoplay?docid=-8359054759762167876

Part 3: http://video.google.com/videoplay?docid=8525097473807918744

செய்திகள் என்று வரும் பொழுது அதை நம்பகமான முறையில் ஆதாரங்களுடன் தரமாக வெளிட்டால் அதை தமிழர் தரப்பு நிலைப்பாடாகப் போடுவார்கள். அதற்குரிய அங்கீகாரம் main-stream media இல் தமிழர் தரப்பிற்கு இருக்கு. ஆனால் நாம் எமது மிகுதிப் பங்கை சரிவர செய்யவில்லை. குடிசைக் கைத்தொழில் கிசுகிசுவாக செய்தால் அதை அவர்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை. பேச்சாளர்கள் ஊடகங்களுடன் தொடர்ந்து உறவுகளைப் போணவேணும் தொடர்பில் இருக்க வேணும். மடு போனால் என்ன நாளை மதவாச்சியில் நிப்பம் எண்டுட்டு ஓடி ஒளிச்சால் அதை தமிழர்கள் பொறுப்பார்கள் ஆனால் சர்வதேச ஊடகங்கள் அதற்கு பிறகு உங்களை ஒரு significant stakeholders ஆக பார்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அன்றாட உடனடிச் செய்திகளைப் பொறுத்தவரை "உங்கடை (தமிழர்) தரப்பு" என்று நீங்கள் நம்புவது யாரை? அதற்கு நீங்கள் வைத்திருக்கும் security checks என்ன? காளான்கள் மாதிரி மாதம் ஒரு இணையத்தை 100 டொலருக்கு பதிந்து போட்டு "தினம் ஒரு தேசிய தலைவர் படம்" "தினம் ஒரு தேசிய தலைவர் சிந்தனை" எண்டு கூத்தாடுவதை தமிழர் தரப்பு செய்தியாக அவர்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. இவை பற்றி சர்வதேச ஊடகங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன என்று அறிந்து கொண்டீர்களா? சர்வதேச ஊடகங்களிற்கு பேச்சாளர்கள் என்று அறிமுகமானவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் இப்போ?

அண்ணா நான் உங்களை மாதிரி கணக்க படிக்க இல்லை ஆனாலும் மனதில் எழுந்த சில கேள்விகள்.

உண்மையோ,பொய்யோ அது யார் சொல்றது என்றது தான் முக்கியம் என்றால் இலங்கை அரசு வெளியிடும் தகவல்களை எந்த வித நம்பகத்தன்மையில் பி.பி.சி வெளியிடுகிறது?

கெகலியவோ,பொன்சேகராவோ உண்மைத் தான் சொல்கிறார்கள் என்று எந்த ஆதாரத்தை வைத்து நம்புகிறார்கள்?

யுத்த‌ம் ந‌டைபெறும் போது அதில் சிக்கி உள்ள மக்களை பற்றிக் க‌தைக்க புலியின் பிர‌திநிதிகள் தான் வேண்டும் என்று இல்லை.

அங்கு உள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அர‌சு துர‌த்திய பின்னர் கூட‌ புரிந்து கொள்ளாதா?

ஒவ்வொரு நாளும் வானிலிருந்து குண்டுகள் போட்டும்,செல் அடித்தும் புலிக‌ளை கொண்டு விட்டோம் என்று அர‌சு சொல்ல புலிகள் என்ன பீனீக்ஸ் பற‌வைக‌ளா? ஆமி கொல்ல,கொல்ல உயிர்த்து எழும்ப‌.

சுனாமியின் போது கூட‌ ஈழத்தில் நட‌ந்த‌ அழிவுகளை ஆதார‌த்துடன் ப‌திவு செய்த வீடியோ பதிவுக‌ளை கூட‌ பி.பி.சி வெளியிட‌வில்லையே ஏன்?

அண்ணா நான் உங்களை மாதிரி கணக்க படிக்க இல்லை ஆனாலும் மனதில் எழுந்த சில கேள்விகள்.

ஈழத்தமிழ் இனம் எண்ணிக்கையில் மிகவும் சிறிய இனம். போரினால் அதன் எண்ணிக்கை இன்னமும் குறைந்து வருகிறது. உயிரோடு இருப்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இயல்பு வாழ்க்கை வாழ்தபடி பல வசதி வாய்ப்புகளுடன் இருப்பவர்கள் நான் அதிகம் படிக்கவில்லை எனக்கு அது தெரியாது இது தெரியாது என்று அரட்டை அடித்து பொழுது போக்குவது தவறு. ஒரு தேசம் எப்படி யுத்தகாலத்தில் அவசர கால நிலமையில் அதன் குடிமக்களை வைத்திருந்து அவர்களின் அனைத்து திறமைகள் வளங்களையும் திரட்டி அந்த தேசத்தைக் காப்பற்ற முயல்கிறதோ அப்படித்தான் புலம்பெயர்ந்தவர்கள் உட்பட இன்றைய நிலையில் இயங்க வேண்டும். நல்லதொரு ஆரம்பம் யார் எம்மை தடை செய்து வாத்திருக்கிறார்களோ எமது போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கிறார்களோ அவர்களின் நிலைப்பாட்டை வரலாற்றை ஆழமாக நேரம் செலவளித்து படியுங்கள் தெளிவு பெறுங்கள். எமது நிலைப்பாட்டில் இருந்து ஒப்பாரி வைத்து அரட்டை அடித்து பெருமூச்சு விட்டு திருப்த்திப்படுவதை விட அவர்களது நிலைப்பாட்டில் இருந்து நாம் செய்தவற்றை செய்பவற்றை பாருங்கள் விளங்கிக் கொள்ள முயற்சியுங்கள். அரட்டை சினிமா என்பவற்றால் அறிவு வழராது. வயது போய்விட்டது ஆர்வம் இல்லை என்று விட்டுவிடவும் முடியாது. ஏன் என்றால் ஒரு சர்வதேச சவாலை எதிர்கொண்ட படி சிறு சனத்தொகையாக இருப்பவர்களிற்கு வேறு வழியில்லை. எமது இனத்தைப் பொறுத்தவரை எங்கு வாழ்ந்தாலும் இது அவசரகாலம்.

உண்மையோ,பொய்யோ அது யார் சொல்றது என்றது தான் முக்கியம் என்றால் இலங்கை அரசு வெளியிடும் தகவல்களை எந்த வித நம்பகத்தன்மையில் பி.பி.சி வெளியிடுகிறது?

கெகலியவோ,பொன்சேகராவோ உண்மைத் தான் சொல்கிறார்கள் என்று எந்த ஆதாரத்தை வைத்து நம்புகிறார்கள்?

இலங்கை அரசு என்ற நம்பகத்தன்மை இருக்கிறது. அது சர்வதேச அரங்கில் ஏனைய நாடுகள், மனித உரிமை அமைப்புகள் முதல் தனியார் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்ட அரசு. கெகலியவும் பொன்சேக்காவும் எப்படி பொய் சொன்னாலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசின் அமைச்சர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசின் இராணுவத்தின் தளபதி என்ற குறைந்த பட்ச நம்பகத்தன்மை அல்லது கனதி இருக்கும்.

வெளிநாட்டு ஊடகர்கள் தமக்கு போதிய ஆதாரம் கிடைக்கும் பொழுது சிறீலங்கா அமைச்சர்கள் இராணுவத்தளபதிகள் பேச்சாளர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி எழுதியிருக்கிறார்கள்.

உங்களிற்கு புலிகள் சொல்வது உண்மை என்று இருக்கும். சிங்களவருக்கு சிறீலங்கா சொல்வது உண்மை என்று இருக்கும். பிபிசி போன்ற ஒரு 3ஆம் தரப்பின் நிலையில் இருந்து பாருங்கள். சிறீலங்கா சொல்வதற்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற குறைந்த பட்ச நம்பகத்தன்மை எப்பவும் இருக்கும். புலிகள் சொல்வதற்கு ஒரு அங்கீகாரம் அற்ற தரப்பு (போராளிகள் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளாக சிறீலங்கா மாத்திரமல்ல ஏனைய நாடுகளாலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்) என்ற குறைந்த பட்ச கேள்விக்குறியிருக்கும். இந்த சமச்சீரற்ற நிலையை கருத்தில் கொண்டு நிலமையை சமனபடுத்த தமிழர் தரப்பு ஊடக உறவாடல் துடிப்பாக அணுகுமுறைகளில் நுட்பங்களில் கவனம் செலுத்தியதாக துறைசார் ரீதியில் சிறப்பாக இருக்க வேண்டும்.

யுத்த‌ம் ந‌டைபெறும் போது அதில் சிக்கி உள்ள மக்களை பற்றிக் க‌தைக்க புலியின் பிர‌திநிதிகள் தான் வேண்டும் என்று இல்லை.

அங்கு உள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அர‌சு துர‌த்திய பின்னர் கூட‌ புரிந்து கொள்ளாதா?

ஒவ்வொரு நாளும் வானிலிருந்து குண்டுகள் போட்டும்,செல் அடித்தும் புலிக‌ளை கொண்டு விட்டோம் என்று அர‌சு சொல்ல புலிகள் என்ன பீனீக்ஸ் பற‌வைக‌ளா? ஆமி கொல்ல,கொல்ல உயிர்த்து எழும்ப‌.

சுனாமியின் போது கூட‌ ஈழத்தில் நட‌ந்த‌ அழிவுகளை ஆதார‌த்துடன் ப‌திவு செய்த வீடியோ பதிவுக‌ளை கூட‌ பி.பி.சி வெளியிட‌வில்லையே ஏன்?

நல்லது புலிகள் வேண்டாம் தமிழர்களின் மனிதஉரிமை அமைப்பு பிரதிநிதிகள் தமிழர்களின் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் என்போர் ஊடகங்களிற்கு தமிழர் தரப்பு ங்கள் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லாம். சிறீலங்கா செய்யும் பிரச்சாரத்தை நம்பகமான முறையில் ஆதாரங்கள் புள்ளிவிபரங்களை படங்களை காணொளிகளை முன்வைத்து தர்க்கரீதியில் எதிர்கொண்டு தோலுரித்து காட்டுங்கள். அதற்கு அவர்கள் களம் அமைத்து தருகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

professional journalism இல் நம்பகத் தன்மை ஆதாரங்கள் முக்கியம். பரபரப்பு அல்ல.

அதனால் தான் எந்த main-stream media வை எடுத்தாலும் அவர்கள் உத்தியோகபூர்வ மூலங்களில் இருந்து வரும் செய்திகளைத்தான் வெளியிடுகிறார்கள்.

முக்கியமாக ஒரு உத்தியோகபூர்வற்ற மூலம் ஒரு அரச தரப்பு பற்றி குற்றம் சாட்டும் பொழுது அதை அவர்கள் அதிக கவனம் எடுத்து விசாரணைகள் செய்தபின்னர் தான் வெளியிடுகிறார்கள். நீங்கள் வன்னியில் இருக்கும் ஒருவருடன் தொலைபேசியில் கதைத்துவிட்டு எழுந்தமானத்திற்கு ஒரு குடிசைக் கைத்தொழில் கிசுகிசு எழுதுவதைப் போல் அவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

புலிகள் ஒரு non-state actor ஆக இருந்தும் அவர்களது தரப்பு செய்திகள் main-stream media இல் வந்திருக்கிறது. அதற்கு காரணம் புலிகள் significant stakeholders என்று உணரப்பட்டதால்.

Part 1: http://video.google.com/videoplay?docid=2151064219162771887

Part 2: http://video.google.com/videoplay?docid=-8359054759762167876

Part 3: http://video.google.com/videoplay?docid=8525097473807918744

செய்திகள் என்று வரும் பொழுது அதை நம்பகமான முறையில் ஆதாரங்களுடன் தரமாக வெளிட்டால் அதை தமிழர் தரப்பு நிலைப்பாடாகப் போடுவார்கள். அதற்குரிய அங்கீகாரம் main-stream media இல் தமிழர் தரப்பிற்கு இருக்கு. ஆனால் நாம் எமது மிகுதிப் பங்கை சரிவர செய்யவில்லை. குடிசைக் கைத்தொழில் கிசுகிசுவாக செய்தால் அதை அவர்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை. பேச்சாளர்கள் ஊடகங்களுடன் தொடர்ந்து உறவுகளைப் போணவேணும் தொடர்பில் இருக்க வேணும். மடு போனால் என்ன நாளை மதவாச்சியில் நிப்பம் எண்டுட்டு ஓடி ஒளிச்சால் அதை தமிழர்கள் பொறுப்பார்கள் ஆனால் சர்வதேச ஊடகங்கள் அதற்கு பிறகு உங்களை ஒரு significant stakeholders ஆக பார்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அன்றாட உடனடிச் செய்திகளைப் பொறுத்தவரை "உங்கடை (தமிழர்) தரப்பு" என்று நீங்கள் நம்புவது யாரை? அதற்கு நீங்கள் வைத்திருக்கும் security checks என்ன? காளான்கள் மாதிரி மாதம் ஒரு இணையத்தை 100 டொலருக்கு பதிந்து போட்டு "தினம் ஒரு தேசிய தலைவர் படம்" "தினம் ஒரு தேசிய தலைவர் சிந்தனை" எண்டு கூத்தாடுவதை தமிழர் தரப்பு செய்தியாக அவர்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. இவை பற்றி சர்வதேச ஊடகங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன என்று அறிந்து கொண்டீர்களா? சர்வதேச ஊடகங்களிற்கு பேச்சாளர்கள் என்று அறிமுகமானவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் இப்போ?

உங்கள் அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பிரித்தானியாவில் நிகழந்த மாவிர்நாள் நினைவிருக்கும் என்று நம்புகின்றேன். ஒரு மேடை நிகழ்ச்சி நான்கு நிகழ்வாக உடைத்து செய்யப்பட்டிருந்தது. அதற்கு காரணம் சிங்கள அரசின் வெளிவிவகார நிர்வாகத்து உழைப்பின் பலாபலன்கள் அது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதற்கு காரணமான அந்த முட்டுக்கட்டை சக்தி தனது சாதனைகளில் மிகவும் பெறுமதி வாய்ததாக கருதியது இதற்கான பொறுப்பை அந்த நிகழ்ச்சி நடத்துனர்களிலன் செயற்பாடுகளின் தரத்தில் பழியை பொறுப்பிப்பதே. இதன் வாயிலாக மக்களின் உற்சாக உணர்வை அவித்துவிடலாம் என்பதே.

இது போன்றதே இங்கு எமது செயற்பாடுகளில் இயலாமை உடையவையாக காட்ட முயற்சிக்கின்ற முயற்சிகளும் ஆகும்.

பிரித்தானியாவில் புலிசார்புடைய நிகழ்வுகளில் மக்கள் கடல் போல் திரழ்கின்றது BBC ஒரு வார்தை தன் நிகழ்சியில் உரைத்தது கிடையாது. பத்து விரலுக்கு சனம் இல்லாத ஒட்டுக்குழு கூட்டம் எங்கே நடந்தாலும், பெட்டகம் தயாரித்து தமது தளத்தில் ஒட்டுகின்றது BBC. இதற்கு பொறுப்பான பதிலை யாராவது தருவார்களா?

ஈழத்தில் மக்கள்தான் புலிகள் என்பது ஈழத்தவர்கள் அறித்ததைவிட தெளிவாக தெரிந்தவர்கள் அந்தந்த நாடுகளின் புலநாய்வுப் பிரிவு,

இன்றய இந்திய அரசின் ஈழம் சார்ந்த கவலை மக்களின் உண்மையான பிரதிநிதித்துவம் புலிகள் அல்ல என்பது, அமைதிப் படை காலத்தில் எமக்கு பிரதிநிதித்துவம் செய்ய யாரை உபயோகித்தார்கள்? துண்டு பீடிக்கு எதையுமே செய்ய காத்திருந்த மனிதப் புளுக்களை.

ஒரு அநாதைப் போராட்டத்திற்கு தோள் தரவருகின்றவனுக்கு அங்கே தன் தேச நலனிற்கு அரசியல் செய்யும் நோக்கம்தான் இருக்கும், நீதி நியாயம் வெறும் உச்சரிப்பிற்கு மட்டும்தான்.

எம்முடைய போதாத காலம் எம் எதிரியின் தேசத்தில்தான் அனைத்து தேசங்களுக்கும் பச்சை இருக்கின்றது, ஆதலால் எமது எதிர்ப்பின் சுமை சாதாரண அளவைவிட மிக அதிகமாகவே இருக்கின்றது, இதன் காரணம் எமது இயலாமை என்று எம் செயற்பாடுகளுக்கு குட்டு போடாமல், துரும்பளவு உபயோகத்துக்காவது எழுதுதல் பாராட்டத்தக்கது அதை விட்டு அடிச்ச பியறின் கிக்கில ஒரு பதிவைப் போட்டுட்டு, மீதி நேரம் எல்லாம் குரைத்துக் கொண்டிருத்தல் ஒரு சதத்துக்கு உபயோகம் இல்லாச் செயல்!

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.