Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் இசை விழா....!!!!

Featured Replies

வசம்பர் விடயங்களைப் படித்தாரா ..? இல்லை வம்படியாகக் கருத்துக் கூறுகின்றாரா..? தெரியவில்லை...

உள்வீட்டு குத்து வெட்டுகள் அல்ல இங்கு ....தலைப்பு.... வெளிநாட்டவரின் பார்வையில் இப்படியான நேரத்தில் கொண்டுவரக்கூடிய பாதகமான எண்ணக்கருத்து பற்றிய கவலை தான் இந்நிகழ்வு இந்த நேரத்த்தில் நடப்பதற்கான எதிர்ப்பாக இங்கு பதியப் படுகின்றது..

இன்றைய அவலம் சுமந்த காலகட்டமும் நிகழ்வும் தான்...

இன்று மேற்குலக நாடுகள் எமது போராட்டத்தினை ஒரு சாதாரண விடயமாக நோக்குவதற்கு காரணம் நாம் தான். எமது தவறுகள் தான்.

நாங்கள் கொழும்பில் களியாட்டங்கள் நடத்துகின்றோம். புலம் பெயர் நாடுகளிலும் களியாட்டங்கள் நடத்துகின்றோம். எமது தாயக உறவுகள் துன்பப்படுவதை எண்ணாமல் எமது கேளிக்கைகள் கொண்டாட்டங்களை தடையின்றி நடத்துகின்றோம். அதனை பார்க்கும் மேற்குலகம் என்ன நினைக்கும். இவர்களுக்கு நாட்டில் பிரச்சனையில்லை. பயங்கரவாத பிரச்சனையே உள்ளது. எனவே புலிகளை அழித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற நோக்கில் அவர்கள் சிங்களத்திற்கு உதவுகின்றார்கள். பின்னர் நாம் மேற்குலகை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றோம். குற்றஞ்சாட்டுகின்றோம்.

எமது தவறுகளை நாம் திருத்தாமல் மற்றவர்களை பிழை சொல்வது எவ்வாறு?

ஈழத்தில் தமிழன் சாகின்றான் என்று அங்கே உண்ணா விரதமிருக்கின்றான் ஒருவன்... சும்மாவேனும் ..இந்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றான் இன்னொருவன்....

எல்லாம் இப்படியிருக்க... அவர்களைக் கூப்பிட்டு கனடாவில அந்த அகதித் தமிழனே பாட்டும் கூத்துமாக சந்தோஷமாக இருக்கிறான்... உனக்கென்ன கேடு என்று இந்திய ஆட்ட்சித்தரப்போ.... இல்லை மேற்குலகின் இராஜதந்திரிகளோ கேட்டால்...

இவர்கள் எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள்....

இதையுணர முடியாத இவர் ..மேசை வைத்துக் கலக்ஷன் செய்வாராம்.... கொள்ளையடிக்கும் பாட்டுக்காரனோ .. ல்ட்சம் ல்ட்சமாய்க்கூலி கொண்டு போவான்...

இதெல்லாம் யார் வீட்டுப்பணம்.....

இதில் சில ஆயிரங்கள் அதுவும் வேண்டாம் சில நூறுகளைக் கிள்ளிக் கொடுத்தாலும் ...

யாராவது நல்லதைச் சொன்னால் உடனேயும் ....உடனேயும் கருங்காலிப் பட்டம்.... உங்களை மாதிரி ஆட்களாலேதானே... மக்கள் எல்லாம் தூ......ரே......ரே.......யே தள்ளி நிற்கின்றார்கள்.....

செல்லம்

விடயங்களை இன்று மட்டுமல்ல பல வருடங்களாக களத்தில் படித்துத் தான் எனது கருத்தை பதிந்துள்ளேன். ஒரு நிகழ்ச்சி நடத்துவது களியாட்டமென்றால் அதை யார் நடத்தினாலும் அது களியாட்டம் தான். இங்கே உங்கள் விமர்சனங்கள் நிகழ்ச்சியை யார் நடாத்துகின்றார்கள் என்பதைப் பொறுத்தே வைக்கப்படுகின்றதே தவிர வன்னியில் மக்கள் அல்லல் படுகின்றார்களே என்ற ஆதங்கத்திலில்லை.

வெளிநாட்டு மக்கள் நாம் நடாத்தும் விழாக்களை வைத்து எம்மை மதிப்பிடுகின்றார்கள் என்பது நொண்டிச் சாட்டு. உண்மையில் புலம் பெயர்ந்து வந்த எம்மவர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எதையும் செய்யலாம். ஆனால் அங்கு எம்மவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்களால் தான் எம்மவர்கள் பற்றிய நிலைப்பாட்டை வெளிநாட்டினர் புரிந்து கொள்கின்றார்கள். இன்று எம்மவர்கள் ஏதாவது ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்லது பேரணி நடாத்த அனுமதி கேட்டால் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றது. ஆனால் இதே அனுமதியை சிங்கள மக்கள் கேட்டால் உடன் வழங்கப்படுகின்றது. இதற்கு என்ன காரணம் என்று என்றாவது சிந்தித்தீர்களா ?? எடுத்ததற்கெல்லாம் அடுத்தவர்கள் மேல் பழியைப் போட்டு உங்களது தவறுகளை திருத்தாமல் மேலும் மேலும் தவறுகள் செய்வதிலேயே முன்னிற்கின்றீர்கள்.

உங்களைப் பொறுத்தவரை எவரேனும் சும்மாவேனும் ஏதாவது செய்தால்ப் போதும் என்ற நிலைப்பாடுகளிலேயே இன்றுமிருக்கின்றீர்கள். உணர்வுபூர்வமாக எதையாவது முயற்சிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதளவும் கிடையாது.

"எமது தவறுகளை நாம் திருத்தாமல் மற்றவர்களை பிழை சொல்வது எவ்வாறு"? என்று எழுதிவிட்டால் மட்டும் போதுமா அதை நீங்களும் கைக்கொள்ள வேண்டாமா ??

இன்று எமக்காக குரல் கொடுக்கும் தமிழக மக்கள் எமது களியாட்ட நிகழ்வால் எம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேள்வி கேட்கின்றீர்கள். அதே தமிழக மக்கள் பல நூறு கோடிகளைக் கொட்டி எம்மவர் எடுக்கும் சினிமாக்களினாலும் தமது இரத்த உறவுகளின் திருமணங்களை கோடிகளை கொட்டி 5 நட்சத்திரவிடுதிகளில் களியாட்டம் போல் நடாத்தும் போது மட்டும் என்ன இலங்கைத்தமிழன் கோடிகளில் புரள்கின்றான் என்று சந்தோசப்பட்டு விடுவார்களா ?? அப்போ மட்டும் இது யார் பணமுங்கோ ??

ஐரொப்பாவில் வெளிவரும் அனைத்துத் தமிழ்த் திரைப்படங்களும் 4 காட்சிகள் 5 காட்சிகள் என்று புரட்சி பண்ணுகின்றனவே. இதனை என்ன வெளிநாட்டினரா பார்க்கின்றார்கள் ?? ஊருக்கல்லோ உபதேசம் உனக்கல்ல மகனே என்பது இது தானோ ??

தவறுகள் என்று சுட்டிக்காட்ட முயலும் போது அதை பக்கச்சார்பில்லாமல் நேர்மையாக சுட்டிக்காட்டப் பாருங்கள். அதைவிட்டு அடுத்தவனை பழிவாங்க மட்டும் பாவிக்கப்படும் உங்கள் தேசியக் கொள்கைகளினால்த் தான் புலம் பெயர்ந்த பல தமிழ்மக்கள் உவற்றை கண்டு கொள்ளாமலிருக்கின்றார்கள்.

"யாராவது ஒரு நிகழ்ச்சியை செய்ய முனைந்தால் உடனேயும் ....உடனேயும் கருங்காலிப் பட்டம்.... உங்களை மாதிரி ஆட்களாலேதானே... மக்கள் எல்லாம் தூ......ரே......ரே.......யே தள்ளி நிற்கின்றார்கள்"..... இப்படியும் சிந்தித்துப் பாருங்கள். அப்போதாவது உண்மைகள் புரியுமா உங்களைப் போன்றவர்களுக்கு ???

யாழ் களம் தொடங்கிய காலம் தொடங்கி ஒரே தோடி ராகம் தானே நான் கேட்கிறேன்.

:rolleyes:கல்யாணியையும், காம்போதியையும், சிந்துபைரவியையும் நாம் கேட்டு இரசித்துக் கொண்டு அடுத்தவனை முகாரியை மட்டும் கேள் என்று புத்தி சொன்னால் போதுமென்கிறீர்களா ?? :rolleyes:

Edited by Vasampu

  • Replies 57
  • Views 5.1k
  • Created
  • Last Reply

செல்லம்

விடயங்களை இன்று மட்டுமல்ல பல வருடங்களாக களத்தில் படித்துத் தான் எனது கருத்தை பதிந்துள்ளேன்.

இதிலிருந்தே சரியான கருத்தை விளங்கிக்கொள்ளவில்லை என்று தெரிகின்றது.... நாம் சொன்னது இவ்வாறான நிகழ்வுகள் நடாத்துவதற்கு இது காலம் அல்ல... இதனால் போராட்டம் பற்றிய உணர்வுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்...

ஒரு நிகழ்ச்சி நடத்துவது களியாட்டமென்றால் அதை யார் நடத்தினாலும் அது களியாட்டம் தான். இங்கே உங்கள் விமர்சனங்கள் நிகழ்ச்சியை யார் நடாத்துகின்றார்கள் என்பதைப் பொறுத்தே வைக்கப்படுகின்றதே தவிர வன்னியில் மக்கள் அல்லல் படுகின்றார்களே என்ற ஆதங்கத்திலில்லை.

மிகவும் தவறான அனுமானம்... இவர் ஒவ்வொரு வருடமும் இதே போன்ற நிகழ்ச்சிகளை நடாத்துவதுண்டு..... அப்போதெல்லாம் நாம் எந்த விமர்சனத்தையும் வைத்ததில்லை...

வெளிநாட்டு மக்கள் நாம் நடாத்தும் விழாக்களை வைத்து எம்மை மதிப்பிடுகின்றார்கள் என்பது நொண்டிச் சாட்டு.

உண்மை அதுவல்ல... ஈழத்துப்பிரச்சினையில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளும் தமிழ மக்களின் ஆதரவும் என்றும் கணக்கிலெடுக்கப்ப்ட்டே காய் நகர்த்தப்படுகின்றது என்பதே உண்மை.... அரசியல் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். தனி ஒரு தலைவனைப்பார்த்து யாரும் பயப்படுவதில்லை. அவனுக்கிருக்கும் மக்களின் ஆதரவே கணக்கெடுக்கப்படுகின்றது.... உ+ம்: கியூபா- அடக்கமுடியாது கையைப்பிசையும் அமெரிக்கா

உண்மையில் புலம் பெயர்ந்து வந்த எம்மவர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எதையும் செய்யலாம்.

உண்மை

ஆனால் அங்கு எம்மவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்களால் தான் எம்மவர்கள் பற்றிய நிலைப்பாட்டை வெளிநாட்டினர் புரிந்து கொள்கின்றார்கள். இன்று எம்மவர்கள் ஏதாவது ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்லது பேரணி நடாத்த அனுமதி கேட்டால் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றது.

ஒரு இனத்தின் மறு பக்கம் ...எம்மினத்திற்கு மட்டுமல்ல...எல்லா இனத்திடமும் இருக்கின்றது..ஆனால் அமுக்கி வாசிக்கப்படுகின்றது....உ+ம்: மொன்ரியல் கல்லூரி...சைக்கோ கொலைகள்... செய்தது இந்தியர்... இந்திய அரசின் தலையீடு எவ்வளவு இருந்தது என்றால்... அவர் ஒரு இந்திய வம்சாவளி என்பதையே தினசரிகளில் போடவிடாத அளவு...

ஆனால் இதே அனுமதியை சிங்கள மக்கள் கேட்டால் உடன் வழங்கப்படுகின்றது. இதற்கு என்ன காரணம் என்று என்றாவது சிந்தித்தீர்களா ??

ஆள் அரசியல் அதிகாரம்... தனியமைப்புகளை விட அரசின் பிரதிநிதுத்துவத்திற்கு அதிக ஒலிப்பு இருக்கின்றது

எடுத்ததற்கெல்லாம் அடுத்தவர்கள் மேல் பழியைப் போட்டு உங்களது தவறுகளை திருத்தாமல் மேலும் மேலும் தவறுகள் செய்வதிலேயே முன்னிற்கின்றீர்கள்.

இப்போ நீங்கள் செய்வது மட்டும் என்னவாம்...

உங்களைப் பொறுத்தவரை எவரேனும் சும்மாவேனும் ஏதாவது செய்தால்ப் போதும் என்ற நிலைப்பாடுகளிலேயே இன்றுமிருக்கின்றீர்கள். உணர்வுபூர்வமாக எதையாவது முயற்சிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதளவும் கிடையாது.

அடேங்கப்பா... உணர்ச்சி பொங்கும் வசம்பர் என்ன செய்கின்றீர்கள் என்று சொல்லவேண்டும்.... உணர்ச்சி வசப்படுவது இராஜதந்திரத்தின் முதல் எதிரி... இராஜதந்திரம் என்றால் என்ன..? நீங்கள் சாதித்தது என்ன..? என்று இடக்குமுடக்கு கேள்வியுடன் கிளம்பாதீர்கள்... உலகத்தில் என் இடத்தை உங்களால் நிரப்பமுடியாது... அதேபோல உங்கள் இடத்தையும் ...என்னாலும் முடியாது...-இது வாழ்க்கையின் நியதி

"எமது தவறுகளை நாம் திருத்தாமல் மற்றவர்களை பிழை சொல்வது எவ்வாறு"? என்று எழுதிவிட்டால் மட்டும் போதுமா அதை நீங்களும் கைக்கொள்ள வேண்டாமா ??

நான் கைக்கொள்ளவில்லை என்று அறிந்து கொள்ளுமளவு பின்னால் ஒளிவட்டம் உடையவரா நீங்கள்..?

இன்று எமக்காக குரல் கொடுக்கும் தமிழக மக்கள் எமது களியாட்ட நிகழ்வால் எம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேள்வி கேட்கின்றீர்கள். அதே தமிழக மக்கள் பல நூறு கோடிகளைக் கொட்டி எம்மவர் எடுக்கும் சினிமாக்களினாலும் தமது இரத்த உறவுகளின் திருமணங்களை கோடிகளை கொட்டி 5 நட்சத்திரவிடுதிகளில் களியாட்டம் போல் நடாத்தும் போது மட்டும் என்ன இலங்கைத்தமிழன் கோடிகளில் புரள்கின்றான் என்று சந்தோசப்பட்டு விடுவார்களா ?? அப்போ மட்டும் இது யார் பணமுங்கோ ??

அப்போ என்ன செய்யலாம்...? ஈழத்தில் இறப்பவர்களைப் பற்றி எமக்கென் என்று... இருப்போமா..?

ஐரொப்பாவில் வெளிவரும் அனைத்துத் தமிழ்த் திரைப்படங்களும் 4 காட்சிகள் 5 காட்சிகள் என்று புரட்சி பண்ணுகின்றனவே. இதனை என்ன வெளிநாட்டினரா பார்க்கின்றார்கள் ?? ஊருக்கல்லோ உபதேசம் உனக்கல்ல மகனே என்பது இது தானோ ??

நான் தியேட்டரில் படம் பார்ப்பதில்லை... நீங்கள் எப்படி..?

தவறுகள் என்று சுட்டிக்காட்ட முயலும் போது அதை பக்கச்சார்பில்லாமல் நேர்மையாக சுட்டிக்காட்டப் பாருங்கள். அதைவிட்டு அடுத்தவனை பழிவாங்க மட்டும் பாவிக்கப்படும் உங்கள் தேசியக் கொள்கைகளினால்த் தான் புலம் பெயர்ந்த பல தமிழ்மக்கள் உவற்றை கண்டு கொள்ளாமலிருக்கின்றார்கள்.

எனக்கு எந்த தேசியக் கொல்கையும் இல்லை..அவ்வகையில் முத்திரை குத்தாதீர்கள்.. என்னிடம் இருப்பது மனிதாபிமானமே..? என் இனம் அழிவது பற்றிய வேதனையே..? உங்களைப்போல வாழ்க ஒழிக கோஷம் போடும் ஆள் அல்ல....

"யாராவது ஒரு நிகழ்ச்சியை செய்ய முனைந்தால் உடனேயும் ....உடனேயும் கருங்காலிப் பட்டம்.... உங்களை மாதிரி ஆட்களாலேதானே... மக்கள் எல்லாம் தூ......ரே......ரே.......யே தள்ளி நிற்கின்றார்கள்"..... இப்படியும் சிந்தித்துப் பாருங்கள். அப்போதாவது உண்மைகள் புரியுமா உங்களைப் போன்றவர்களுக்கு ???

பதில் ஏற்கனவே சொல்லியாகி விட்டது...

:rolleyes:கல்யாணியையும், காம்போதியையும், சிந்துபைரவியையும் நாம் கேட்டு இரசித்துக் கொண்டு அடுத்தவனை முகாரியை மட்டும் கேள் என்று புத்தி சொன்னால் போதுமென்கிறீர்களா ?? :rolleyes:

வாழ்க்கை எல்லாம் கலந்தது தான்.... தனியே மேதாவிலாசம் காட்டுவது மட்டுமல்ல...

வாழ்க்கை எல்லாம் கலந்தது தான்.... தனியே மேதாவிலாசம் காட்டுவது மட்டுமல்ல...

உங்க மேதாவிலாசத்திற்கு நன்றியுங்கோ !!!! உண்மையில் செய்பவர்கள் பலர் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவே பலவற்றை செய்கின்றார்கள். ஆனால் இங்கு களத்தில் உங்களைப் போன்ற சிலர் ஆர்ப்பாட்டம் பண்ணி படம் காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றீர்கள். :rolleyes: காட்டுங்க காட்டுங்க நன்றாகப் படம் காட்டுங்கோ..கோ....கோ..... :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழருக்காக புலம்பெயர்நாடுகளில் கோமணத்துடனும் சாப்பாடுதண்ணியில்லாமல் வேலைசெய்தும் கோழிக்கூடு போன்ற வீடுகளிலும் வசித்து தியாகம் செய்யும் எம்மவரை கேவலம் செய்யாதீர்கள்.

யாரும் யாருக்கும் இங்கு வக்காலத்து வேண்டவில்லை.

அத்துடன் இவ்நிகழ்ச்சியை நடாத்துபவர் யார் என்று எனக்கு தெரியாது. தனிப்பட்ட ரீதியில் அவரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கமும் எனக்கு இல்லை.

எமது வீட்டில் பிணம் கிடக்கும்போது பக்கத்து வீட்டில் களியாட்டம் நடந்தால் எப்படியிருக்கும். அந்த ஆதங்கத்தில் தான் எழுதுகின்றேன்.

மீண்டும் கூறுகின்றேன். பொதுப்படையாக அனைவரையும் குற்றஞ்சாட்டாதீர்கள். தாயகத்திலும் சரி புலம்பெயர்நாடுகளிலும் சரி எத்தனையோ தமிழர்கள் கேளிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் பிறந்தநாள் கொண்டாடாமல் ஏன் சிலர் திருமணம் கூட முடிக்காமல் இருந்திருக்கிறார்கள்.இருக்க

ஈழத்தமிழருக்காக புலம்பெயர்நாடுகளில் கோமணத்துடனும் சாப்பாடுதண்ணியில்லாமல் வேலைசெய்தும் கோழிக்கூடு போன்ற வீடுகளிலும் வசித்து தியாகம் செய்யும் எம்மவரை கேவலம் செய்யாதீர்கள்.

கு.சா

:o எனக்கு உதை வாசிக்க கண்ணில தண்ணி தண்ணியா வருது. மகராசன் போல வாழ்ந்ததுகள் எல்லாம் இப்ப இப்படி வாழுதே எண்ணுதான். :o

  • கருத்துக்கள உறவுகள்

பிரஸ்மீட்டுக்கு நடுவே சீரியசாக ஒரு கேள்வி பாய்ந்து வந்தது.

"இலங்கையில் இவ்வளவு உக்கிரமாக போர் நடந்து வரும் வேளையில், புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பி நடத்தப்படும் இந்த கொண்டாட்டங்கள் முறையானதுதானா?"

"நீங்கள் கேட்பது நியாயம்தான். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இப்படி ஒரு நிகழ்ச்சிக்கான வேலைகளை துவங்கிவிட்டோம். கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டோம். இப்போது நிகழ்ச்சியை நடத்தாமல் நிறுத்தினால் பல கோடி நஷ்டம் ஏற்படும். இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது இலங்கையில் அமைதி திரும்பிவிடும் என்று நம்புகிறோம். இறைவன் அதற்கு துணை நிற்பான் என்றார் ஸ்ரீ கவலையாக! அதே கவலையோடு "எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்" என்றார் யுவனும்

அவர்கள் , ஒரு வருடத்திற்கு முன்பே இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ள படியால் இதனை விமர்சிப்பது நல்லதல்ல .

Edited by தமிழ் சிறி

கை தட்டத்தானா உன் கை - தமிழா

கை தட்டத்தானா உன் கை.

http://www.esnips.com/doc/4f4e6822-231b-4e...thaddaththaanaa

:o :o :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.