Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்மடுகுளம் அணைக்கட்டு தகர்ப்பு!

Featured Replies

pulikalwn7.jpg

பிரபாகரன் தப்பி ஓட்டம், மதிவதனி சுற்றிவளைப்பு, பொட்டு அம்மான் கருணாவுடன் சேர்ந்துவிட்டார்... என்றெல்லாம் தொடர்ச்சியாக செய்தி களை பரப்பிக்கொண்டிருந்த இலங்கை ராணுவ தளபதிகளுக்கு, கல்மடுகுளம் அணைக்கட்டினை உடைத்தெறிந்து அதனூடாக புலிகள் நடத்திய தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

""முல்லைத்தீவை கைப்பற்ற 8 இடங் களிலிருந்து முன்னேறி வருகிற ராணு வத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் ஆலோசித்த போது, கல்மடுகுளம் அணைக்கட்டினை தகர்ப்பதன் மூலம் ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தமுடியும் என்று புலிகளின் கடற்படை தளபதி சூசை யோசனை தெரிவித்துள்ளார். அணையை உடைப்பது மட்டுமல்லாமல் பாய்ந்தோடும் வெள்ளத்தில் படகுகளை செலுத்தி தாக்குதல் நடத்தலாம். இதில் தப்பிக்கும் ராணுவத்தினர் தர்மபுரம் நோக்கித்தான் ஓடி வரவேண்டும். அங்கேயும் அவர்களை வளைத்து தாக்குதல் நடத்தினால்... ராணுவத்திற்கு நிச்சயம் பெரிய இழப்புகள் ஏற்படுமென்றும் சூசை விவரித் துள்ளார். அதாவது படைபலத்தை இழக்காமல், ஆள் சேதமில்லாமல், அணைக்கட்டை உடைத்து எதிரிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதும் ஒருவகை போர் யுக்திதான் என்றும் முக்கிய தளபதிகள் விவாதித்துள்ளனர். இதனை பிரபாகரன் ஒப்புக்கொள்ளவே... அந்த யுக்தி தக்க நேரத்தில் கையாளப்பட்டுள்ளது!'' என்கின்றன வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

அதன்படியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி அறிவிப்பு செய்த இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா, ""விசுவமடு பகுதியில் உள்ள கல்மடு குளம்அணைக்கட்டை புலிகள் வெடிவைத்து தகர்த்துள்ளனர். அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 4 அடி உயரத்திற்கும் மேலாக சீறிப்பாய்ந்துள்ளது வெள்ளம். இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் படையணியினர் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் ராணுவத்திற்கு எவ்வளவு இழப்புகள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அப்பகுதியிலுள்ள படையணியினரோடு தொடர்பு கள் துண்டிக்கப்பட்டுள்ளது'' என்று வெளிப் படையாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு 24, 25 தேதிகள் வரை இலங் கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சம்பவம் குறித்த பரபரப்புகள் அடங்கவில்லை. இதற்கு காரணம்... இந்த சம்பவத்தில் 500-ல் ஆரம்பித்து 1000, 1200, 2000 என ராணுவத்தினர் பெரிய அளவில் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிற செய்தி பரவியதுதான்.

கல்மடுகுளம் அணைக்கட்டு பற்றி வன்னி பகுதியில் விசாரித்தபோது, ""முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ-35 நெடுஞ்சாலைக்கு தென் மேற்கு பகுதியில் இருக்கிறது விசுவமடுகுளம். இதன் அருகே உள்ளதுதான் கல்மடுகுளம் நீர்த்தேக்கம். ஏ-35 சாலை வழியாக ராமநாதபுரம், தர்மபுரம், விசுவமடுகுளம் ஆகிய பகுதிகளை சுற்றி ஓடுகிற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதுதான் இந்த நீர்த்தேக்கம். இது நாலரை கிலோமீட்டர் சதுர பரப்பளவு கொண்டது. கடந்த மாதம் இப்பகுதியில் பொழிந்த கனமழையால் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.

முல்லைத்தீவை முழுமையாக முற்றுகை யிட்டு பல வழிகளில் முன்னேறி வருகிற ராணுவம், கிளிநொச்சிக்கு அருகே உள்ள இரணைமடு விலிருந்து ராமநாதபுரம் வழியாக ஏ-35 நெடுஞ் சாலையை அடைவதற்காக முன்னேறியது. இந்த வழியில் ஏ-35 சாலையை அடையவேண்டுமானால் ராமநாதபுரம் அடுத்துள்ள விசுவமடுகுளத்தை கைப்பற்றி அதனை கடக்க வேண்டும். கடந்த ஒருவார மாக இந்த பகுதியில் சண்டை உக்கிர மாக இரு தரப்புக்கும் நடந்து வருகிறது.

இந்த சூழலில்தான் 24-ந்தேதி நள்ளிரவு விசுவமடுகுளத்தை நோக்கி ஆட்லெறி தாக்குதல் நடத்திக்கொண்டே ராணுவம் முன்னேற... நேரம் நள்ளிரவைத் தாண்டி கடந்தது. கல்மடுகுளத்தை கடந்துவிட்டால் விசுவமடு குளத்தை நெருங்கிவிடலாம். கல்மடுகுளம் அணைக்கட்டை நெருங்கத் துவங்கியது ராணுவம். அப்போது நேரம் 1.40. திடீரென்று பெருத்த சத்தத்துடன் அணைக்கட்டு வெடித்து சிதற... திடீரென உருவான சுனாமிபோல் நீர்த்தேக்கத்தின் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. கல்மடுகுளத்தை நெருங்கி வந்த ராணுவத்தினர் இதில் சிக்கிக்கொண்டு தத்தளித்துள்ளனர். அப்போது, நீர்த்தேக்கத்தில் தயாராக 5 படகுகளில் காத்திருந்த தற்கொலை கடற்புலிகள் வெள்ளத்தின் பாய்ச்சலோடு படகுகளை ஆக்ரோஷமாக செலுத்தினர். படகுகளில் வைத்திருந்த ஆட்லெறி ஆயுதங் களை கொண்டு சரமாரியாக தாக்குதலை நடத்தினர். புலிகளின் செயற்கை சுனாமியை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய ராணுவத் தினரால், எதிர்பாராத இந்த தாக்குதலையும் சமாளிக்கமுடியவில்லை. இரவு நேரமென்பதால் தாக்குதல் எங்கிருந்து வருகிறது என்பதை அவர்களால் அவதானிக்கமுடியவில்லை. வெள்ளத்திலும் தாக்குதலிலும் தப்பியவர்கள் கல்மடுகுளத்திற்கு மேலே உள்ள தர்மபுரம் பகுதிக்குள் நுழைய... அங்கு ஏற்கனவே சண்டை நடந்து வருவதால் இவர்களை எதிர் பார்த்திருந்ததுபோல அவர்களை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தி யுள்ளனர் புலிகள்.

இப்படி இயற்கை சீற்றத்தை உருவாக்கி யும் பாய்ந்து செல்லும் நீரிலே பயணித்து தாக்குதல் நடத்தியும், தப்பிப்பவர் களை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தியும் என ஒரே நிகழ்வில் 3 வித அட்டாக்குகளை நடத்தியிருப்பதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்'' என்று வன்னியிலிருந்து தகவல்கள் கிடைக் கின்றன.

புலிகளின் இந்த யுக்தியை ஒப்புகொள்கிற இலங்கை ராணுவத்தினர், ""எங்களுக்கு பெரியளவில் இழப்புகள் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் மருத்துவமனைகளில் கேஷுவாலிட்டி அதிகரித்திருக்கும்'' என்று மறுக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன், ""கல்மடு குளம் அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் ராணுவத்திற்கு பெரியஇழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததையடுத்து கொழும்பிலிருந்து வன்னி பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தது'' என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

கல்மடுகுளம் அணைக்கட்டு உடைக் கப்பட்டதில் ராணுவத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்குமோ என்று அதிர்ச்சியடைந்த அதிபர் ராஜபக்சே அவசரம் அவசரமாக சரத்பொன்சேகா உள்ளிட்ட ராணுவ தளபதிகளுடன் தீவிர ஆலோசணை நடத்தி னார். முதல் கட்ட ஆலோசனையில், "ஆணையிறவு பகுதியிலிருந்து 374 படைப் பிரிவுதான் விசுவமடு நோக்கி முன்னகர்வு தாக்குதல்களை நடத்தியது. அந்த படைப்பிரி வில் 3000 படையினர் இருந்துள்ளனர். தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வெள்ளம் அப்பகுதிகளை சூழ்ந்திருப்பதால் தண்ணீர் வடிந்தபிறகுதான் நமக்கான இழப்பு தெரியவரும்' என்று ராணுவத்தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது என்பதாக கொழும்பி லுள்ள ராணுவ வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.

இதற்கிடையே கல்மடுகுளம் அணைக் கட்டு உடைக்கப் பட்ட சம்பவத்தில் ராணுவத்திற்கு எதிராக செய்தி எழுதக்கூடாது என்று இலங்கை பத்திரி கைகளை எச்சரித் துள்ளார் அதிபர் ராஜபக்சே. அதனால் பல பத்திரிகைகள் யூகமாக கூட இதனைப்பற்றி எழுதவில்லை.

உண்மையில் என்னதான் நடந்தது? என்று புலிகள் வட்டாரத்தில் கேட்டபோது,

""அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 1000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 700 உடல்களிலிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தவர் களின் உடல்கள் ராணுவகட்டுப்பாட்டு பகுதிகளில் கிடக்கிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த அதிபர் ராஜபக்சே, இதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி 300 பேரை கொன்றுள்ளார். இத்தனைக்கும் ராஜபக்சே அறிவித்த பாதுகாப்பான பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை நடத்தி தனது பழிவாங்கும் உணர்ச்சியை தணித்துக்கொண்டிருக்கிறார்.

அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் ராணு வத்தின் இழப்புகள் பற்றி 26-ந்தேதி வெளிப் படையாக அறிவிக்க இருந்தோம். ஆனால் குழந்தைகள், முதியவர்கள், சிறுவர்கள் என 300 பேர் கொல்லப்பட்டிருப்பதால் இந்த மனித அவலம் வெளி உலகத்திற்கு தெரி யாமலே போய்விடுமென்பதால்தான் அணைக் கட்டு விவகாரத்தை அறிவிக்காமல் தவிர்த் துள்ளோம்'' என்று தெரிவிக்கிறது புலிகள் தரப்பு.

-கொழும்பிலிருந்து எழில்

http://www.nakkheeran.in

...முல்லைத்தீவை கைப்பற்ற 8 இடங் களிலிருந்து முன்னேறி வருகிற ராணு வத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் ஆலோசித்த போது, கல்மடுகுளம் அணைக்கட்டினை தகர்ப்பதன் மூலம் ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தமுடியும் என்று புலிகளின் கடற்படை தளபதி சூசை யோசனை தெரிவித்துள்ளார்.

..அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 1000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 700 உடல்களிலிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தவர் களின் உடல்கள் ராணுவகட்டுப்பாட்டு பகுதிகளில் கிடக்கிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த அதிபர் ராஜபக்சே...

அப்புறம்... 700 உடல்களா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//படகுகளில் வைத்திருந்த ஆட்லெறி ஆயுதங் களை கொண்டு சரமாரியாக தாக்குதலை நடத்தினர்.// யப்பா இப்பவே கண்ண கட்டுதே.....

  • தொடங்கியவர்

அங்கால திருமாவளவன் அண்ணா சொன்னதை வாசிக்கும்போது இது உண்மைபோலத்தான் இருக்கு...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51360&hl=

பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவது திரிலானது.

ஆனால்

உண்மைகளையும் அவை பொய்யாக்கி விடும்

அது மிக ஆபத்தானது.

ஆதாரமற்ற

உண்மைக்கு புறம்பான செய்திகள்

உடனடியாக உணர்ச்சி வசப்பட வைக்குமே தவிர

வேறு எந்த நலனையும் தராது.

ஆதரவாளர்களையும்

நிலைகுலைய மட்டுமல்ல

வெறுக்கவும் வைத்துவிடும்.

இதன் தாக்கம் உடனடியாக தெரியவராது

எதிர்காலத்தில்

நாம் சொல்லும் உண்மைகளைக் கூட

சந்தேகதத்தோடு பார்க்க வைத்திடும்

கவனம்

Edited by Thalaivan

  • தொடங்கியவர்

உண்மைதான் Thalaivan,

இதை நக்கீரனுக்கும் திருமாவனவன் அண்ணாவுக்கும் எழுதி அனுப்புங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.