Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா அதிர்ந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுவிசின் ஜெனிவா நகரில் என்றும் இல்லாதவாறு தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக கூடி தமது அதங்கங்களை தெரிவித்துள்ளனர்.

im000477gm9.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்டைக்கு 4 ம் திகதி அண்ணே

நன்றி உறவுகளே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக்காடடியமைக்கு நன்றி வில்லன்.எனது புகைப்படக்கருவியில் திகதி சரி செய்யவில்லை.தவறுக்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டிக்காடடியமைக்கு நன்றி வில்லன்.எனது புகைப்படக்கருவியில் திகதி சரி செய்யவில்லை.தவறுக்கு மன்னிக்கவும்.

பெரிதாய் ஒண்டும் நினைக்கவேண்டாம் இப்படித்தான் நண்பரோட விட்ட பிறந்த நாளுக்கு போட்டோ எடுத்தனான் நான் வருடத்தை மாற்றவில்லை மறந்துவிட்டென் போட்டோவை பார்க்கவே சிரிப்புத்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Über 10 000 Tamilen demonstrieren vor UNO-Sitz

Mehr als 10 000 Tamilen haben am Mittwoch vor dem UNO-Sitz in Genf für den «Stopp des Völkermordes» in Sri Lanka demonstriert. Sie forderten die Vereinten Nationen auf, entschieden einzugreifen.

«Die UNO ist unsere letzte Chance. Helft uns», stand auf einem weissen Banner, das die Demonstranten trugen. Zu der Kundgebung aufgerufen hatte die Vereinigung junger Tamilen in der Schweiz.

Rund 200 Autobusse aus der ganzen Schweiz und aus Frankreich brachten die Demonstranten nach Genf. Das Eingangstor zum UNO-Gelände wurde geschlossen und die Sicherheitsvorkehrungen verstärkt.

Nach Angaben der Vereinigung junger Tamilen in der Schweiz sind rund 470 000 Zivilisten in der Region Mullaitivu von den Kämpfen zwischen der srilankischen Armee und den tamilischen Rebellen betroffen.

«In naher Zukunft werden viele tausend Menschen ihr Leben verlieren, wenn wir nicht sofort reagieren», hiess es auf einem Flugblatt in Bezug auf den Beschuss von Spitälern und öffentlichen Gebäuden.

60074775a1bb144c6caabeejz5.jpg

60074734567ac16a69667b8ri9.jpg

6007479665f43b315bc21b7vo4.jpg

6007459b4d8e54cc34314cfjo5.jpg

6007458eae1ef1ff7bca2f4za8.jpg

6007461d48b6d4ea94ee16enq9.jpg

6007475fc75d04af1f2a707jt6.jpg

மூலம்: 20min.ch

Edited by Tigerblade

  • கருத்துக்கள உறவுகள்

இது போலவே மாவீரன் முத்துக்குமாரின் மரண ஊர்வலத்திலும் சில படங்கள் பிழையான திகதியுடன் வெளியிடப்பட்டிருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவன ஈர்ப்பு நிகழ்வில் மட்டும் புலிக்கொடி பறக்குது.

பாராட்டுக்கள்!

ஐநாதான் எமது கடைசி நம்பிக்கை : ஜெனீவா ஐநா முன் இளையோர் கூட்டிய மக்கள் வெள்ளம்

சுவிஸின் பல பகுதிகளிலிருந்தும் பிரான்ஸ் , ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் கலந்து கொண்ட 10 000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட பெரும் ஆர்பாட்ட பேரணி ஒன்றை தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் எனும் கோரிக்கைகளை முன் வைத்து சுவிஸ் ஜெனீவா ஐநா முற்றத்தில் சுவிஸ் இளையோர் அமைப்பு நடத்தியது.

சிறீலங்காவுக்கு சுதந்திர தினம் , எமக்கோ துக்க தினம் என நேற்று (04) மாலை 2 மணியளவிலிருந்து அலை அலையாக திரண்ட கூட்டம் மாலை 3 மணியாகும் போது 10 ஆயிரம் பேரையும் தாண்டி நின்றது.

தமிழர்களை கொல்வதை நிறுத்துங்கள் : எம்மை பாருங்கள் , எம் குரலை கேளுங்கள் , ஐநாவே நீதான் எமது இறுதி நம்பிக்கை போன்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளோடு இளைஞர்களும் பெரியோர்களும் குழந்தைகளும் என்றுமில்லதவாறு திரண்டு கண்டன பேரணியை நடத்தினார்கள்.

இலங்கையில் தமிழர் படும் இன்னல்களையும் ஒடுக்கு முறைகளையும் தமது தாயகம் ஆக்கிரமிக்கப்படுவதையும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதையும் குறிப்பிட்டு பேசிய இளையோர் எமது தாயம் சிறீலங்காவல்ல தமிழீழமே என்று கோஸமிட்டனர்.

தவிரவும் விடுதலைப் புலிகளே எமது பாதுகாவலர்கள், விடுதலைப் புலிகளின் தலைவரே உலக தமிழரது தலைவர் என கோஸமிட்ட இளையோர் இந்திய - இலங்கை மற்றும் தமிழன அழிப்புக்கு உடைந்தையாக இருக்கும் நாடுகளை கண்டித்ததோடு சிறீலங்கா ஜனதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கொடும்பாவிகளையும் , சிறீலங்கா தேசிய கொடியையும் எரித்தனர்.

சுவிஸ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பெரும் திரளான இளையோர் கலந்து கொண்டனர். குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவில்லாத மக்களும் கலந்து கொண்டது இங்கே விசேட அம்சமாகக் குறிப்பிடலாம். அதேபோல் வெளிநாட்டு ஊடகங்களும் முன்னெப்போதும் இல்லாதவாறு நிறைந்தே காணப்பட்டனர்.

ஜெர்மன், பிரெஞ்சு , இத்தாலி , தமிழ் ஆகிய மொழிகளில் தமிழீழத்தில் இடம்பெறும் கொடிய நிகழ்வுகளை குறிப்பிட்ட இளைஞர்கள் ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமரன் குறித்தும் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவது குறித்தும் கருத்துகளை முன்வைத்து பேசினர்.

இறுதியில் ஐநா எமக்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என கட்டுக் கடுங்காமல் பலர் , ஐநாவுக்குள் நுழைய முற்பட்ட போது ஏற்பாடாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று. இறுதியில் ஏற்பாட்டாளர்கள் தலைவர் பிரபாகரனின் பேராலும் மரணித்த மாவீரர்களின் பேராலும் குறிப்பிட்ட பகுதிக்குள் வாருங்கள் என்ற பலமுறை வேண்டுதல் செய்து கேட்டுக் கொண்ட பின்னரே அமைதி காத்து திரும்பினார்கள்.

காவல்துறையினர் பாதைகளை மூடி வாகனங்களை மாற்றுப் பாதைகளால் போக வழி செய்ததோடு , பேரணிக்கு வந்தவர்களுக்கு எதுவித இடையூறும் கொடுக்காது அவதானமாக நின்றனர். ஏற்பாட்டளர்களே மக்களை ஒழுங்குபடுத்துவதில் மும்முரமாக நின்றனர். வாழும் தேசத்தின் சட்டம் ஒழுங்கை மனதில் கொண்டு நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொண்ட ஏற்பாட்டளர்கள் இறுதிவரை தமது கடமையை நிறைவாக செய்ததோடு, அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் உலக தொலைக் காட்சிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

http://www.ajeevan.ch/content/view/8526/1/

Edited by AJeevan

நேற்று ஐநா முற்றத்தில் இடம்பெற்ற பேரணியின் முக்கிய ஒளிப்பதிவு பகுதிகளை

இங்கே காணலாம்

http://www.eurotvlive.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.