Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 மணிநேர போர் நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில் மோதல்களின் போது அகப்பட்டு காயமடைந்தவர்களையும் மற்றும் வைத்தியசாலைகளிலுள்ள நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அழைத்து வர வழி செய்யும் வகையில் இன்று 6 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தனக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மென்டிஸ் கூறுகின்றார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வன்னிப் பகுதியிலுள்ள நோயாளர்களும் காயமடைந்தவர்களும் வவுனியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கும் கவனிப்பதற்கும் என மருத்துவ மனையில் தனிப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வல்லுனர்கள், விசேட மருத்துவர்கள் சேவையாற்றுவதோடு இரத்தம் உட்பட அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதோடு தேவையான மருத்துவ பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவைப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து எடுத்துள்ளதோடு இது பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார்.

http://www.paristamil.com/tamilnews/?p=26616

  • கருத்துக்கள உறவுகள்

வாரகிழமைமையும் இப்படி கொஞ்சபேரை அங்கிருந்து எடுத்து உலகத்துக்கு கண்கட்டிவித்தை காட்டுவதென்றால். 6மணி முடிந்த உடனேயே மக்கள் வசிக்கும் இடம் நோக்கி செல்களை ஆயிரகணக்கில் வீசவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெல்லாம் பிச்சையெடுத்துப் பிழைக்கும் சிறீலங்காவுக்கு இஸ்ரேல் என்ற நினைப்பு..!

ஐ சி ஆர் சி.. பாப்பரசர்.. ஐநா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. தென்னாபிரிக்கா.. என்று எல்லோரும் கேட்டுக் கொண்டதன் பின்னர் 6 மணி நேர செல்லடி ஓய்வு. எமக்குத் தேவை நிரந்தர செல்லடி ஓய்வு. அதற்கு சிங்களவனை எங்கட மண்ணை விட்டு துரத்தனும். அடுத்தவை கேட்டு நாங்க உயிர் வாழுற தகவைப் பெறனும் என்ற நிலை எனியும் நீடிக்கக் கூடாது.

உலகத்தில தமிழனையும் பலஸ்தீனத்தானையும் தவிர மற்ற எந்த உயிரியும்.. அடுத்தவன் கேட்டு தாம் வாழும் உரிமை பெற்றதில்லை. அவையவையே தமக்கான வாழும் உரிமையை தீர்மானித்துக் கொள்கின்றன. தமிழனுக்கு.. இந்த இயற்கையில் சராசரி உயிரினத்துக்குரிய இயல்பான உரிமை கூட கிடையாது. மற்றவர் கேட்டு.. மாற்றான் நிறுத்தினால் தான் நமக்குப் பிழைப்பு என்ற நிலை..! இந்த இழிநிலையில்.. நாம் உலகில் உயிரினமாக வாழத்தான் வேண்டுமா..??! கூட்டுக்குள்ள அடைபட்டுள்ள கிளி கூட சுதந்திரமாப் பறக்க போராடும்.. அது ஓய்ஞ்சதே இல்லை. ஆனால் நாங்கள்..????! :):(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka rejects dialogue appeal

The Sri Lankan military has vowed to crush the rebels

The Sri Lankan government has rejected a call by international donors for it to begin negotiating with the Tamil Tiger rebels.

Defence Secretary Gotabhaya Rajapaksa told the BBC that the government would only accept an "unconditional surrender" by the rebels.

The donors - the US, Japan, Norway and the European Union - have also called on the Tigers to lay down their arms.

The government has ruled out a ceasefire and vowed to crush them.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7871258.stm

சிங்களவனின் பேரினவாத வெறியும்.. இறுமாப்பும்.. ஆணவமும்.. தமிழனை அடிமையாக்கி.. தனக்கு.. எடுபிடியாக்கி.. தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் வைச்சிருக்கனும் என்று நினைக்க வைக்குது. இந்த நிலையை அழிக்க உலகத்தில உள்ள ஒவ்வொரு தமிழனும். சாதாரண உயிரினமாக எண்ணி தமது உரிமைக்காகக் போராடனும்..!

எறும்பு கூட.. தனி வளை வைச்சிருக்குது. காரணம்.. அதன் ஒற்றுமை. ஆனால் எமக்கு..???! தமிழன் இந்த உலகில் புதிய மனித வரலாற்றுக்கான அத்தியாயத்தை எழுத தியாகம் செய்து போராட முன்வரனும். எல்லோருக்கும் ஒரு நாள் சாவு உண்டு. எவரும்.. இந்த உலகில் நிரந்தரமாக வாழப் போவதில்லை. வாழும் வரை எமது உரிமையோடு.. இயற்கை தந்த உரிமையோடாவது வாழ வேண்டும். அடிமையாக மற்றவன் விதிக்க அதற்குள் வாழும் நிலை எமக்கு வேண்டாம். காக்கா குருவிக்குள்ள சுதந்திரமாவது எமக்கு வேண்டும்..! :)

------------

எதிரி பேசக் கூட தயார் இல்லையாம்.. ஆனால் தமிழனை மட்டும் ஆயுதத்தைக் கீழ வைச்சிட்டு சரணடைஞ்சு.. சாகட்டாம்.. அல்லது அடிமயா வாழட்டாம்.

ஐ ஆர் ஏ கூட.. சமாதானப் பேச்சின் பின் தான் ஆயுதங்களை கையளித்தது. நேபாள.. மாவோ கிளர்ச்சியாளர்கள்.. ஐநா கண்காணிப்பின் கீழ் ஆயுதங்களை வைக்க பேச்சு வார்த்தை மூலமே தீர்மானம் எட்டப்பட்டது. உலகில் எங்கும்.. ஆயுத முனையில் அதிகாரம் செய்பவனிடம். ஆயுதத்தைக் கொடுத்திட்டு.. சாக எவனும் தயாராக இருக்கமாட்டான்..! :(

அமெரிக்காவும் பிரிட்டனும்... ஈராக்கிலோ.. ஆப்கானிஸ்தானிலோ.. இவ்வளவு இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட பின்னும்.. யுத்தத்தில் கொள்கைகளில் தோற்ற பின்னும்..போராளிகளிடம் சரரணடையத் தயார் இல்லையாம். ஏனென்றால் அது அவர்களின் உலக அதிகாரத்தனத்துக்கு களங்கமாகிடுமாம். ஆக அவை கெளரமிக்க மனிதர்களாக வாழனும்.. தமிழன் அடிமையாக போடுறதை பெற்றுக் கொண்டு.. பிச்சையெடுத்து வாழனும். ஏன் இவர்களின் பார்வைக்கு தமிழன் என்ன.. கேணையனாவா தெரியுறான்..! :rolleyes::o:(

Edited by nedukkalapoovan

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு நிலையத்தையும் மற்றும் பிரதேச தலைவரின் கட்டளை நிலையத்தையும் விமானப்படையின் தாரை விமானங்கள் இன்று காலை தாக்கியழித்துள்ளன.

அததெரண.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு நிலையத்தையும் மற்றும் பிரதேச தலைவரின் கட்டளை நிலையத்தையும் விமானப்படையின் தாரை விமானங்கள் இன்று காலை தாக்கியழித்துள்ளன.

அததெரண.

20 - 30 கிலோமீற்றர்கள் தாக்க வீச்சுல்ல.. ஆட்லறிகளும் மல்ரி பரல்களும் இருக்குது.

புலிகளிடம் இருப்பது 15 x 20 கிலோமீற்றர்கள் பரப்பளவுள்ள இடம்.

இந்தப் பக்கத்தில இருந்து ஆட்லறியால அடிச்சாலே..அங்கால பக்கத்தை தாண்டிப் போயிடும்.

தினமும் 5000 ஆட்லறிகள் அடிக்கினம். அப்படி இருந்தும்.. இன்னும் தாரை விமானங்களால.. தாக்க.. புலிகளின் தொலைதொடர்பு கோபுரங்களும். கட்டளை மையங்களும் நிமிர்த்தா நிற்கின்றன..??! இதில விமானப்படையை பாவிக்க வேண்டிய அவசியமே இல்லை..! அந்தளவுக்கு போர் குறுகிய களத்தில நடக்குது. இது பொதுமக்கள் இலக்குளை தேர்வு செய்து கொத்தணிக் குண்டுகளால் அழிக்கவே பாவிக்கப்பட்டிருக்குது.

ஐநாவுக்கும் ஐ சி ஆர் சிக்கும்.. டவுட்டாம் எங்கால பக்கத்தால செல் வருகுதென்று. பிபிசிக்கு இன்னும் டவுட்டாம். புலிகள் அடிச்சிருப்பினமோ ஆஸ்பத்திரி மேல என்று. புலிகள்.. அரசாங்கம் சொல்லிறது போல.. புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில்.. ஆட்லறியை நிப்பாட்டிட்டு.. அதனைக் கொண்டே அதனை அடிச்சுத்தான் இருப்பினம். இப்ப பாருங்க உலகத்தின்ர மூளையில.. ஒரு தொழில்நுட்ப அறிவும்.. வேலை செய்யாது. ஏன்னா உண்மையை மறைச்சு.. புலிகளை குற்றவாளி ஆக்கனுமே..! சப்போஸ் புலிகள் தாக்கி இருந்தா ஸ்கொட்லட் ஜாட் .. எவ் பி ஐ.. ஆக்கள் வந்து பகுத்தாஞ்சு அறிக்கை விட்டிருப்பினம்..! :rolleyes::(

சிங்களவன்.. ஒரு காலத்தில் முட்டாள் என்பதற்காக.. சிங்களவனே சிங்களவனை இப்பவும் முட்டாள் ஆக்கக் கூடாது. இதைக் கேட்கிற தமிழன் கேணயன் தான்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்லடிச்சுப்போட்டு பேந்து அவையல வெளியால எடுத்துப்போட்டு பேந்து செல்லடிக்கிறது இப்படி எல்லாரையும் கொண்று காயப்படுத்தி தான் எடுக்கப்போறான்

  • கருத்துக்கள உறவுகள்

செல்லடிச்சுப்போட்டு பேந்து அவையல வெளியால எடுத்துப்போட்டு பேந்து செல்லடிக்கிறது இப்படி எல்லாரையும் கொண்று காயப்படுத்தி தான் எடுக்கப்போறான்

அதுதான் நடக்குது. அடிக்கிறது.. சாகிறது சாக... மிச்சத்துக்கு உலகுக்கு காட்ட தான் மனிதாபிமானப் போர் செய்யுறன் என்று சொல்ல.. அழுத்தங்கள்... சர்வதேச அறிக்கைகள் வந்தாப் பிறகு.. பெரிய விளம்பரத்தோட காயப்பட்ட ஆக்களை கூட்டிக் கொண்டு வந்து.. அதுவும் அவையை வவுனியாவில வரவேற்கிறது சீருடைய அணிந்த சிங்களச் சிப்பாய்கள்.

பிறகு.. கூட வாறவையை.. அப்படியே.. தடை முகாமுக்கு அனுப்பிட்டு.. இவையை ஆஸ்பத்திரியில விட்டிட்டு.. அதைச் சுற்றி.. ஒட்டுக்குழுக்களையும்.. இராணுவ உளவாளிகளையும்.. உலவ விடுறது. போதாக்குறைக்கு வைத்தியசாலைகளைச் சுற்றி ஆயுத முனையில காவல் நிற்கிறது.

நோயாளிகளுக்கு உதுகளை பார்த்தாலே.. இருக்கிற நோய் இரண்டு மடங்காகிடும். உடன செத்திடுங்கள். செல்லடிச்சும் கொல்லலாம். இப்படி உளவியல் ரீதியில் அழுத்தம் கொடுத்தும் கொல்லலாம். இதுகளைப் பற்றி ஆராய ஸ்கொட்லண்ட் யாட்... எவ் பி ஐ வரவா போகுது. ஆனால்.. சிங்கள இராணுவம் செத்தால் தான்.. அவை வருவினம். குண்டு வெடிப்புக்களால் நிகழும்.. ஒவ்வொரு விடயத்தையும் நுணுக்கமாய் ஆராய்வினம். தீர்வுக்கு வழியும் சொல்லி.. தேவையான உதவியும் செய்வினம்..!

அனுராதபுரம் அடிச்ச உடன அமெரிக்க பகுப்பாய்வுக்குழு.. ஓடோடி வந்தது. இன்னும் பலரும் வந்தவை..! ஞாபகம் இருக்கும் எல்லாருக்கும் என்று நினைக்கிறன். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் நடக்குது. அடிக்கிறது.. சாகிறது சாக... மிச்சத்துக்கு உலகுக்கு காட்ட தான் மனிதாபிமானப் போர் செய்யுறன் என்று சொல்ல.. அழுத்தங்கள்... சர்வதேச அறிக்கைகள் வந்தாப் பிறகு.. பெரிய விளம்பரத்தோட காயப்பட்ட ஆக்களை கூட்டிக் கொண்டு வந்து.. அதுவும் அவையை வவுனியாவில வரவேற்கிறது சீருடைய அணிந்த சிங்களச் சிப்பாய்கள்.

பிறகு.. கூட வாறவையே.. அப்படியே.. தடை முகாமுக்கு அனுப்பிட்டு.. இவையை ஆஸ்பத்திரியில விட்டிட்டு.. அதைச் சுற்றி.. ஒட்டுக்குழுக்களையும்.. இராணுவ உளவாளிகளையும்.. உலவ விடுறது. போதாக்குறைக்கு வைத்தியசாலைகளைச் சுற்றி ஆயுத முனையில காவல் நிற்கிறது.

நோயாளிகளுக்கு உதுகளை பார்த்தாலே.. இருக்கிற நோய் இரண்டு மடங்காகிடும். உடன செத்திடுங்கள். செல்லடிச்சும் கொல்லலாம். இப்படி உளவியல் ரீதியில் அழுத்தம் கொடுத்தும் கொல்லலாம். இதுகளைப் பற்றி ஆராய ஸ்கொட்லண்ட் யாட்... எவ் பி ஐ வரவா போகுது. ஆனால்.. சிங்கள இராணுவம் செத்தால் தான்.. அவை வருவினம். குண்டு வெடிப்புக்களால் நிகழும்.. ஒவ்வொரு விடயத்தையும் நுணுக்கமாய் ஆராய்வினம். தீர்வுக்கு வழியும் சொல்லி.. தேவையான உதவியும் செய்வினம்..!

அனுராதபுரம் அடிச்ச உடன அமெரிக்க பகுப்பாய்வுக்குழு.. ஓடோடி வந்தது. இன்னும் பலரும் வந்தவை..! ஞாபகம் இருக்கும் எல்லாருக்கும் என்று நினைக்கிறன். :)

நெடுக்ஸ் எனக்குத்தெரியும் தமழன்ர உயிரை யாருமே மதிக்கறானில்ல. இதுக்கெல்லாம் வெகுசீக்கிரத்தில பதிலிருக்கு. நான் தனியே போரை மட்டும் சொல்லவில்லை

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு நிலையத்தையும் மற்றும் பிரதேச தலைவரின் கட்டளை நிலையத்தையும் விமானப்படையின் தாரை விமானங்கள் இன்று காலை தாக்கியழித்துள்ளன.

அததெரண.

போர் நிறுத்தம் செய்து விமானதாக்குதலும் நடத்துகின்றான் சிங்களவன் பிறகு என்ன --------- போர் நிறுத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்துக்கு நல்லபிள்ளையாக நடிக்க முயற்சி செய்யிறாங்கள் :) .......நீங்கள் என்ன செய்தலும் உங்களை உலகம் அச்சா பிள்ளை என்று சொல்லாது நீங்கள் கக்கா பிள்ளைகள்தான்

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு நிலையத்தையும் மற்றும் பிரதேச தலைவரின் கட்டளை நிலையத்தையும் விமானப்படையின் தாரை விமானங்கள் இன்று காலை தாக்கியழித்துள்ளன.

அததெரண.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் இதுகளை இங்க அள்ளிவிதைக்கிறதுக்கு காரணம் எல்லாத்தையும் போட்டுட்டு வந்து சிங்களவன்ர காலில விழுங்கோ என்பதற்காக.....

நெடுக் அவரை கேணயன் என்று விமர்சிக்கிறார்

ஆனால் அவரைச்சொல்லி குற்றமில்லை

அவர் இருக்கும் இடத்திற்கு விசுவாசியாக உள்ளார்

உண்மையில் துன்பம் வரும போதே நண்பனைத்தெரியுமென்பர்

பலருடைய சுயமுகங்களைத்தரிசிக்க முடிகிறது

இவர்களை இனம்காட்டியதும் தலைவர்தான்

நன்றி

இப்படி நண்பர்களையும் தோழர்களையும் வைத்துக்கொண்டு தமிழீழம் எடுத்துத்தான் என்ன பயன் .

மீண்டும் அவனிடம் தானாக போய்விடும்

பொய்களின் சிகரமான இலங்கை, தமிழின அழிப்பை செய்து, மண் ஆக்கிரமிப்புசெய்யும் முடியாவிட்டால் இந்தியா, உலக நாடுகளை நுழையவிடும் ...தொப்பியை அப்படியே திருப்பி விடும்..

இதன் தொடச்சி 48மணி, 8மணி போர்னிருத்தம் எல்லாம் ஒரு பேய்காட்டல்.. எதனையும் தனக்கு சாதகமாக மாற்றும் ஒரு தந்திரம்...

தொண்டர் அமைப்புகளின் அழுத்தமாக கூட இருக்கலாம்... ஆனால் புலம் பெயர்தமிழ்மக்கல் மிக உசாராக இருந்து செய்ய வேண்டிய வேலைகளை செய்து வாருங்கள்...

ஒவ்வொரு தமிழ்மக்களும் தனிப்பட்ட பரப்புரை பீரங்கிகளாக மாறுங்கள்...

எந்த நாடும் அனாதைத்தமிழ்மக்களுக்கு உதவி செய்யப்போவதில்லை...

சோழியன் குடுமி சும்மா ஆடாது! சில பகுதியிலை எதிர்பாராத எண்ணிக்கையில் இராணுவ வீரர்கள் நித்திரையா போச்சினமாம். அதை நிவர்த்தி செய்ய வேறை ஆட்களை அனுப்ப வேண்டியிருக்காம்! அதாலை தான் இந்த ஆறு மணி நேர இடைவெளி! மலிந்தால் எல்லாம் வெகுவிரைவில் சந்தைக்கு வரும் தானே!

தமிழனுக்கு சிங்களவன் போடும் பிச்சை இது...

ஆனந்தசங்கரி, டக்கிளஸ், கருணா, போண்றவர்களையும் கருணாநிதி , அன்பழகன், இளங்கோவன் போண்ற "சோனியா காங்கிரஸ்" காரர்களை மட்டும் மகிழ்விக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அவரை கேணயன் என்று விமர்சிக்கிறார்.

நான் அவரை கேணயன் என்று சொல்லவில்லை. சிங்களவன் சொல்லுறதை செவிமடுத்து.. அதை நம்பிற தமிழர்களைச் சொல்லுறன்..! :)

உலகத்துக்கு நல்லபிள்ளையாக நடிக்க முயற்சி செய்யிறாங்கள் :) .......நீங்கள் என்ன செய்தலும் உங்களை உலகம் அச்சா பிள்ளை என்று சொல்லாது நீங்கள் கக்கா பிள்ளைகள்தான்

அடப் பாவி .....நாங்கள் பொறுமையும் நல்லெண்ண வியாபாரமும் செய்யுது தெரியவில்லையேயா????? எங்களிற்கு எங்கு மக்கள் படும் துன்பத்தை பார்க்க .....பொமையின் விளிம்பில்....விசர்......பு...ம...ள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.