Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நக்கீரனை மிரட்டும் இலங்கை தூதரக 'அம்சா'

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால்

கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.நா.சபை என அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டாலும் அத்தனையையும் புறக்கணித்துவிட்டு கொடூர யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் தாய்த்தமிழகத்தினர். வரலாற்று வழியாகவும், புவியியல் ரீதியாகவும் தங்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக தாய்த்தமிழகத்தினரால் செய்ய முடிந்ததெல்லாம் ஆதரவுக்குரல் எழுப்புவது மட்டும்தான். அந்தக் குரலைப் பதிவுசெய்வது பத்திரி கைகளின் தார்மீக கடமை. தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நக்கீரன் அந்தக் கடமையிலிருந்து இம்மியளவும் விலகாமல் தனது பணியைச் செய்துவருகிறது. அதன் சிறு பகுதிதான் பிப்ரவரி 11 -2009 தேதியிட்ட இதழின் அட்டையில் இடம்பெற்றிருந்த, "ராஜபக்சே நாசமா போவான்-சபிக்கும் தமிழகம்' என்ற செய்திக் கட்டுரை.

nakchallenge1ct6.jpg

சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தமிழக மக்கள் வெளிப்படுத்திய அடிமனதின் குரல்தான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. ராஜபக்சே தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ள இன்னும் பல தீவிரமான கருத்துகளை பிரசுரிப்புத்தன்மை கருதித் தவிர்த்திருந்தோம். ராஜபக்சேவை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதன் அடையாளமாக அட் டைப்படமும் (காண்க) வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், சென்னையில் உள்ள ஜனநாயக சோஷலிச (!) ஸ்ரீலங்கா குடியரசின் துணை உயர் ஸ்தானிகர் பி.எம். அம்சா நமது நக்கீர னுக்கு ஓர் ஓலை அனுப்பியிருக்கிறார்.

பிப்ரவரி 11 தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், "அதிமேதகு ராஜபக்சே அவர்களை தரக்குறைவாக உருவகப்படுத்தி பிரசுரித்ததன் மூலம் தங்களுடைய இதழ் இலங்கை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் வகிக்கும் உயர் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது' என தெரிவித்திருப்பதுடன், "இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்றும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இவ்விஷயத்தை அணுகப்போவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகரான அம்சா, இந்திய பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருக்கும் மிரட்டலாகவே இந்தக் கடிதம் அமைந்துள்ளது. இருநாடுகளின் நட்புறவுக்கான பணியில் ஈடுபடவேண்டிய துணைத்தூதர், தனது அதிகாரவரம்பை மீறி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதும் மிரட்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அதிகாரத்தின் மிரட்டலுக்கு நக்கீரன் ஒருபோதும் பணிந்ததில்லை என்பதே அதன் 21 ஆண்டுகால வரலாறு. துணை தூதரின் மிரட்டல் எமக்கு கால்தூசு. சட்டரீதியான நடவடிக்கை என்கிறாரே, எங்கே வழக் குத் தொடரப் போகிறார்? உள்ளூர் நீதிமன்றத்திலா? உலக நீதிமன்றத் திலா? எங்கே இருந்தாலும் "வழக்கே வா' என வரவேற்கிறது நக்கீரன்.

nakchallenge2cp8.jpg

போரை நிறுத்தச் சொன்ன ஒரே பாவத்திற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபேண்டையும் விடுதலைப்புலிகள் போல சித்தரித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததே, அது அவர்களின் பதவிக்கு செய்யப்பட்ட மரியாதையா? அவமரியாதையா? அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த சிங்கள அரசை எந்த நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றுவது? எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள்! அவர்களின் உணர்வைத்தான் நக்கீரன் வெளிப்படுத்தியிருக் கிறது.

நாங்கள் வெளியிட்ட செய்தியும் அட்டைப் படமும் ராஜபக்சேவின் பதவிக்கு இழுக்கு என நினைத்தால் ராஜபக் சேவின் அரசாங்கம் வழக்குத் தொடுக்கட் டும். எதிர்கொள் கிறோம். தூதருக்கு ஏன் இந்த மிரட்டல் வேலை? இதே பாணி யில் அவர் யாரை, யாரையெல்லாம் மிரட்டியிருக்கிறார் என்பதை அறிவோம். இப்போது நக்கீரனை நோக்கிப் பாய்ந்திருக்கிறார்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தனது வரம்புக்குமீறி என்னென்ன செயல்பாடுகளை செய்து வருகிறது, என்னென்ன மாதிரியான ரகசிய வேலைகளையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதையெல்லாம் சர்வதேச சமுதாயத்தின் முன் அம்பலப்படுத்து வதற்கு இந்த வழக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே நக்கீரன் கருதுகிறது. தமிழினத்தைக் கொன்றொழிக்கும் இலங்கை அதிபரை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் என அறைகூவல் விடுக்கிறோம்.

தூதரா, ஒற்றரா என இனம் பிரிக்க முடியாதவகையில் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் அம்சாவின் நடவடிக் கைகள் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இருப்பதை அரசியல் தலைவர்கள், பொதுநல அமைப் பினர், மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மை யான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே நக்கீரனின் வேண்டுகோளாகும்.

-ஆசிரியர்

நக்கீரன்

Edited by pepsi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் அந்தக் கட்டுரை.................

peoplesj1.jpg

இதுக்கு மேலே ஒரு அநியாயம் உலகத்திலேயே இருக்க முடியாதுங்க. எத்தனை குழந்தைங்களை குண்டு போட்டுக் கொல்லுறாங்க. எத்தனை பொம்பளைங்களை சீரழிக்கிறாங்க. வீட்டையும் இழந்து, காட்டிலும் இருக்க முடியாம செத்து மடியுது தமிழ் சனம். தினம் தினம் இதை டி.வி.யில பார்க்குறப்ப நமக்கே ரத்தமெல்லாம் கொதிக்குது. இந்தியாவை ஆட்சி பண்ணுறவங்க என்னத்த பண்ணிக்கிட்டிருக்காங்க?

-மக்கள் ஆய்வகத்தின் சார்பில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்திய கருத்தாய்வில் மக்கள் வெளிப்படுத்திய கருத்துகளின் சாராம்சம் இதுதான். சென்னை லயோலா கல்லூரியின் கீழ் இயங்கும் மக்கள் ஆய்வகம் நடத் திய இந்த ஆய் வில் இலங்கைத் தமிழர் பிரச் சினை தமிழக அரசியல் களத் திலும் தேர்தலி லும் எத்தகைய தாக்கத்தை ஏற் படுத்தும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

-ஒவ்வொரு கட்சி யும் தன்னிச்சையாகச் செயல்படாமல் முதல் வர் தலைமையில் ஒன்றிணைந்து செயல் படவேண்டுமென 86 சதவீதத்தினர் தெரிவித் துள்ளனர். தி.மு.க. தலைவர் துணிச்சலாக செயல்படவேண்டும் என 71 சதவீதம் பேர் தெரிவிப்பதுடன், இப்பிரச்சினையை முன்னிட்டு தி.மு.க. ஆட்சியை இழக்க நேரிட்டால் அடுத்து வரும் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் தி.மு.க.வே ஆட்சிக்கு வரமுடியும் என 58.5 சதவீதத்தினர் தெரிவிக்கின்றனர். 20 சதவீதம்பேர் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்கின்றனர்.

86_1.jpg

-இலங்கைத் தமிழர் பிரச்சினை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும், இதில் காங்கிரசுக்கு 39 சதவீத பாதிப்பும், மத்திய அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு 24.5 சதவீத பாதிப்பும் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு 21 சதவீத பாதிப்பும் ஏற்படுமென கள ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கள ஆய்வுகள் குறித்து நம்மிடம் பேசிய மக்கள் ஆய்வகத்தின் பேராசிரியரான டாக்டர் ராஜநாயகம், ""இலங்கைத் தமிழர் பிரச் சினை என்பது மிக முக்கியமான பிரச்சினை யாக இருப்பதால் இதுபற்றி தமிழக மக்க ளின் மனநிலையைத் தெரிந்துகொள் வதற்காக இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தினோம். ஜனவரி 13 முதல் 18-ந் தேதி வரை முதல் கட்ட ஆய்வு. ஜனவரி 25 முதல் 31 வரை இரண்டாவது கட்ட ஆய்வு.

இதை சர்வே என்று சொல்வதை விட கள ஆய்வு என்பதுதான் பொ ருத்தமாக இருக்கும். ஏனென்றால் இது எண் களின் அடிப்படையில் எடுக்கப்படாமல் எண்ணங் களின் அடிப்படையில் எடுக் கப்பட்டுள்ளது. முத்துக் குமார் தீக்குளிப்பின் போது களஆய்வின் கடைசி கட்டத்தில் இருந்தோம். அதனால் அதன் முழுமையான தாக்க மும், தி.மு.க. செயற்குழு தீர்மானங்கள், கடையடைப்பு ஆகியவையும் இதில் பிரதிபலித்திருக்காது. அவற்றையும் கணக்கில்கொண்டால் இந்த எண்ணங் கள் இன்னும் அதிக வீச்சுடன் இருக்கும்'' என்கிறார்.

people3dw7.jpg

மக்களின் எண்ணங்களை 14 மணி நேர வீடியோ வாக பதிவு செய்துள் ளார்கள் கள ஆய் வில் ஈடுபட்ட மாண வர்கள். அவர்கள் தங்களின் அனுபவங் களை நம்முடன் பகிர்ந்துகொண்ட போது, இதற்கு முன் பல சர்வேக்களுக் காக மக்களைச் சந் தித்திருந்தாலும் இது எங்களுக்கு புது அனுபவமாக இருந்தது. மக்களிடம் இந்தளவுக்கு தமிழின உணர்வு இருக் கும் என்பது சென்னைவாசிகளான எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந் தது. வடமாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் ஏறத்தாழ 100 சதவீதம் மக்களும் இலங்கைத் தமிழர் நலனில் முழுமையான அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் இதே உணர்ச்சி யலையைப் பார்க்க முடிகிறது.

பொதுவாக, அரசியல் கட்சிகள் அனைத்துமே இப்பிரச்சினையில் உண்மையான அக்கறை செலுத்த வில்லை என்று சொல்லும் மக்கள், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது கடுங்கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். இப்பிரச்சினை இப்படியே நீடித்தால் நிச்சயம் எம்.பி.தேர்தலில் விளைவுகள் தெரியும் என்ற மாணவர்கள், மக்களின் எண்ணங் களை பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகளைப் போட்டுக் காட்டினர்.

people2az9.jpg

""கொழந்தைங்களெல்லாம் பாலுக்கு ஏங்கி ஏங்கியே மூச்சு திணறி செத்துப் போகிற கொடுமை வேற எங்கேயாவது உண்டா?''

""பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாம ஆடு, மாடு மாதிரி பசங்களெல்லாம் ஓடிக்கிட்டே இருக்கிறதைப் பார்த்தா நெஞ்சு பதறுது''.

""வயசானவங்களெல்லாம் குண்டுவீச்சுக்கு தப்பிக்க முடியாம, செத்தே போயிடலாம்னு குண்டு விழுகிற இடமா பார்த்து உட்காருகிற நிலைமை இருக்கே! இதை யார்கிட்டே போய் சொல்றது?''.

""தமிழன் அடிபட்டா கேட்க நாதியே இல்லையா?''

""அங்கே நடக்குற கொடுமைகளை டி.வி.யில பார்க்கும்போது சோறு தண்ணி இறங்க மாட்டேங்கு துங்க''.

""நம்ம தொப்புள்கொடி உறவு களை குண்டு போட்டுக் கொல் லும் ராஜபக்சே நாசமா போவான்''.

-உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படுகின்றன மக்களின் எண்ணங்கள்.

-சகா

http://www.nakkheeran.in

Edited by pepsi

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்சா

கனநாளா வெருட்டுரார்

கொஞ்சம் நலன் விரும்பிகள் கவனிப்பார்களாக......

கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார்

இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.நா.சபை என அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டாலும் அத்தனையையும் புறக்கணித்துவிட்டு கொடூர யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் தாய்த்தமிழகத்தினர். வரலாற்று வழியாகவும், புவியியல் ரீதியாகவும் தங்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக தாய்த்தமிழகத்தினரால் செய்ய முடிந்ததெல்லாம் ஆதரவுக்குரல் எழுப்புவது மட்டும்தான். அந்தக் குரலைப் பதிவுசெய்வது பத்திரி கைகளின் தார்மீக கடமை. தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நக்கீரன் அந்தக் கடமையிலிருந்து இம்மியளவும் விலகாமல் தனது பணியைச் செய்துவருகிறது. அதன் சிறு பகுதிதான் பிப்ரவரி 11 -2009 தேதியிட்ட இதழின் அட்டையில் இடம்பெற்றிருந்த, "ராஜபக்சே நாசமா போவான்-சபிக்கும் தமிழகம்' என்ற செய்திக் கட்டுரை.

சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தமிழக மக்கள் வெளிப்படுத்திய அடிமனதின் குரல்தான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. ராஜபக்சே தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ள இன்னும் பல தீவிரமான கருத்துகளை பிரசுரிப்புத்தன்மை கருதித் தவிர்த்திருந்தோம். ராஜபக்சேவை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதன் அடையாளமாக அட் டைப்படமும் (காண்க) வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், சென்னையில் உள்ள ஜனநாயக சோஷலிச (!) ஸ்ரீலங்கா குடியரசின் துணை உயர் ஸ்தானிகர் பி.எம். அம்சா நமது நக்கீர னுக்கு ஓர் ஓலை அனுப்பியிருக்கிறார்.

பிப்ரவரி 11 தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், "அதிமேதகு ராஜபக்சே அவர்களை தரக்குறைவாக உருவகப்படுத்தி பிரசுரித்ததன் மூலம் தங்களுடைய இதழ் இலங்கை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் வகிக்கும் உயர் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது' என தெரிவித்திருப்பதுடன், "இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்றும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இவ்விஷயத்தை அணுகப்போவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகரான அம்சா, இந்திய பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருக்கும் மிரட்டலாகவே இந்தக் கடிதம் அமைந்துள்ளது.

இருநாடுகளின் நட்புறவுக்கான பணியில் ஈடுபடவேண்டிய துணைத்தூதர், தனது அதிகாரவரம்பை மீறி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதும் மிரட்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அதிகாரத்தின் மிரட்டலுக்கு நக்கீரன் ஒருபோதும் பணிந்ததில்லை என்பதே அதன் 21 ஆண்டுகால வரலாறு. துணை தூதரின் மிரட்டல் எமக்கு கால்தூசு.

சட்டரீதியான நடவடிக்கை என்கிறாரே, எங்கே வழக் குத் தொடரப் போகிறார்? உள்ளூர் நீதிமன்றத்திலா? உலக நீதிமன்றத் திலா? எங்கே இருந்தாலும் "வழக்கே வா' என வரவேற்கிறது நக்கீரன்.

போரை நிறுத்தச் சொன்ன ஒரே பாவத்திற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபேண்டையும் விடுதலைப்புலிகள் போல சித்தரித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததே, அது அவர்களின் பதவிக்கு செய்யப்பட்ட மரியாதையா? அவமரியாதையா? அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த சிங்கள அரசை எந்த நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றுவது? எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள்! அவர்களின் உணர்வைத்தான் நக்கீரன் வெளிப்படுத்தியிருக் கிறது.

நாங்கள் வெளியிட்ட செய்தியும் அட்டைப் படமும் ராஜபக்சேவின் பதவிக்கு இழுக்கு என நினைத்தால் ராஜபக் சேவின் அரசாங்கம் வழக்குத் தொடுக்கட் டும். எதிர்கொள் கிறோம். தூதருக்கு ஏன் இந்த மிரட்டல் வேலை? இதே பாணி யில் அவர் யாரை, யாரையெல்லாம் மிரட்டியிருக்கிறார் என்பதை அறிவோம். இப்போது நக்கீரனை நோக்கிப் பாய்ந்திருக்கிறார்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தனது வரம்புக்குமீறி என்னென்ன செயல்பாடுகளை செய்து வருகிறது, என்னென்ன மாதிரியான ரகசிய வேலைகளையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதையெல்லாம் சர்வதேச சமுதாயத்தின் முன் அம்பலப்படுத்து வதற்கு இந்த வழக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே நக்கீரன் கருதுகிறது. தமிழினத்தைக் கொன்றொழிக்கும் இலங்கை அதிபரை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் என அறைகூவல் விடுக்கிறோம்.

தூதரா, ஒற்றரா என இனம் பிரிக்க முடியாதவகையில் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் அம்சாவின் நடவடிக் கைகள் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இருப்பதை அரசியல் தலைவர்கள், பொதுநல அமைப் பினர், மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மை யான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே நக்கீரனின் வேண்டுகோளாகும்.

-ஆசிரியர்

நக்கீரன்

86_1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சா நெஞ்சன் நக்கிரனுக்கு பாராட்டுக்கள் தமிழரின் அவலங்களை உலகிற்கு வெளிக்காட்டும் ஊடகம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களையும் ஆயுததாரிகளாக மாற்ற முயற்சிக்கின்றார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் மக்களுக்காக குரல் கொடுத்து இலங்கை அரசின் கொலை வெறியாட்டங்களை வெளிக்கொணரும் நக்கீரனுக்கு எமது நன்றிகள்.

"நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே!" என்ற நக்கீரனையெல்லாம் இந்த நொள்ளைக் கண்ணர்களால் ஒண்ணும் பண்ணமுடியாது.

நக்கீரன் சபாஸ் உங்களது பதிலடிக்கு..

இதே போன்று உலக நாடுகள் எங்கும் பதிலடி கிடைக்க புலம் பெயர்மக்கள் தேவையான தகவல்களை கொடுங்கள்.. இலங்கையின் முகமூடி கிழியும் வெகு விரைவில்.

மீண்டும் நக்கீரனின் துணிச்சலுக்கு வாழ்த்துகள் அத்துடன் மற்றைய பத்திரிகையாளர்களும் இதே துணிச்சலுடன் செயல்பட்டு வெளி உலகத்திற்கு இலங்கையின் ரவுடி தனத்தை கொண்டுவரவேண்டும்,..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[url="IMG2566-1234650878.jpg"]

எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள்! அவர்களின் உணர்வைத்தான் நக்கீரன் வெளிப்படுத்தியிருக் கிறது.

நன்றி நக்கீரன்..

உந்த வெருட்டல் சிரட்டையெல்லாம் சிறிலங்காவொட வைச்சுகொள்ளுங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் கோபால் , இதனைப்போல் எத்தனையோ சவால்களை சந்த்தித்தவர் .

இந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.