Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுக்கு வழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா

  • Replies 358
  • Views 138.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

E.Thevaguru, பயன்தரும் விடயங்கள் தரும் உங்களுக்கு நன்றி

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 87

Error Reporting to Microsoft

காரணம் என்ன என்று என்னால் சரியாக சொல்லத தெரியாது. அல்லது காரணம் பலவாறாக இருக்கலாம். னால் தவறு நடந்துவிட்டது. இந்த தவற்றை மைக்கிறோசொவ்ற்றிக்கு அறிவிக்கவா? என கேட்டு செய்தி பெட்டி திரையில் தோன்றுவது சகஜம். இந்த செய்தி நண்பர்கள் கொடுத்த விலைக்குவாங்காத இயங்குதள பிரதியை தங்கள் கம்பியூட்டரில் நிறுவியுள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும். அந்த பிரதி வைத்திருப்பவர்களின் IE திரையில் Help மெனுவை கிளிக்பண்ண Is your copy of windows legal? என்ற செய்தியும் சில வேளைகளில் தோன்றி அதிர்ச்சி கொடுப்பதுண்டு. இந்த தொல்லையை நிறுத்தலாம் எப்படி?

Start --> Control Panel -->Double click System --> Advanced Tab --> Error Reporting --> click to disable Error Repoting.

இது எக்ஸ்பி க்கு பொருந்தும். இனிமேல் இந்த செய்தி வரவே வராது

Edited by E.Thevaguru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா.. ஆனால் அந்த புறோக்கிறாம் மூடுப்படுவது நிறுத்தப்படாது தானே. மூடிய பின் வாற இந்த எறர் மெசேச் மட்டும் தான் நிறுத்தப்படும் அப்படியா...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி செய்த பின்னரும் இறர் மெசேஜ் வருதே ஏன்..?? புரோகிராமும் மு}டுப்படுது.. :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணனியிலா.? தேவகுரு அண்ணா தான் வரணும் :lol:

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 88

Internet Explorer has encountered a problem and needs to close if you are in the middle of something you may loose the information that is not saved. Restart Internet Explorer. Close

புறோகிறாம் மூடப்படுவதை தடுப்பதற்கு அதற்குரிய காரணத்தை கண்டுபிடித்து அதற்கு வைத்தியம் செய்யவேண்டும். மூடப்படுவதை அறிவிக்கட்டா? என கேட்டு தொந்தரவு செய்யாமலிருக்கவே நாம் Disable Error Reporting என்பதையும் But notify me when critical error occurs என்பதையும் தேர்வு செய்கிறோம். இவைகளை தேர்வு செய்தபின்பும் தமிழினியின் கம்பியூட்டரில் error message ஐ அறிவிக்கட்டா? என கேட்டு செய்தி வருகிறதென்றால் ஏன் அப்படி என யோசிக்கவேண்டும்தான். மற்றவர்களுக்கும் அப்படி நடக்கிறதா என அறிவித்தால் ராய்ந்து அறிவிக்கின்றேன்.

Internet Explorer has encountered a problem and needs to close if you are in the middle of something you may loose the information that is not saved. Restart Internet Explorer. Close. என்ற செய்தி அடிக்கடி நாம் இன்ரர்நெட்டில் உலா வரும்போது சந்திப்பதுண்டு. இது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு பலகாரணங்கள் கூறப்படுகிறது. Microsoft ஒரு காரணத்தை கூறுகிறது. இந்த நோய்க்கு பலர் வெவ்வேறு வைத்தியம் செய்து தாங்கள் சுகப்படுத்தியதாக சொல்கிறார்கள். ஒருவர் இப்படி கூறுகின்றார்:-

Go to Control Panel, Internet options. Next, go to Advance Tab.

Uncheck "Enable third party browser extension" Click OK

இன்னொருவர் தான் இப்படி சீர்செய்ததாக எழுதுகின்றார்:-

After much suffering, I finally resolved the infamous problem of IE6 shutting down (msvcrt.dll message):

It seems the problem is caused by some programs removing the file msvcrt.dll in the Windows system and replacing it with a different, older version of that file with the same name. I solved my problem completely by simply re-installing the correct dll file. The file causing the problem was msvcrt.dll version 6.10.8293.0. I replaced it with msvcrt.dll version 6.00.8397.0. .dll files may be obtained from such sites as www.dll-files.com

எனவே வெவ்வேறு காரணங்களுக்காக இச்செய்தி தோன்றுவதாக நான் நினைக்கின்றேன்.

Edited by E.Thevaguru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது இறர் றிபோர்ட் அனுப்பவா என்று கேக்கவில்லை. நன்றி ஆனால் Debug Cancel என்று இரண்டு தெரிவுகள் வருகிறது. இன்ரர் நெற் எக்புலோரர் மூடப்படுகிறது. :? :shock:

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 89

Windows Tips - Short cuts to erase a word

மிகவும் வேகமாக ஒரு சொல்லை அழிக்கவேண்டுமெனில் cursor ஐ அதனருகில் விட்டுவிட்டு, சொல் இடப்பக்கமிருந்தால் Ctrl+Backspace ஐயும் வலப்பக்கமிருந்தால் Ctrl+Delete அழுத்தவும்.

இது போல் நூற்றுக்கணக்கான் Tips உள்ள ஒரு வெப்தளத்தை பார்வையிடவிரும்பினால் கீழே உள்ள லிங்கை அழுததவும். இவர் தான் பலகாலம் சேகரித்தவைகளை மற்றவர்களின் பிரயோசனத்துக்காக இத்தளத்தில் போட்டுவைத்துள்ளார்.

http://members.amaonline.com/tjw/wintips.html

Edited by E.Thevaguru

தேவகுரு அவர்களின் சேவை பயனுள்ளது. நான் சேமித்து வைத்திருக்கிறேன். சகோதரி சண்முகி அவர்களும் பலருக்கும் அறியத் தருகிறார்கள். தொடரட்டும் தங்கள் சேவை.

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் -90

Domain Name என்பது என்ன?

கற்பனை செய்து பாருங்கள். நாம் எல்லோரும் நமது பெயரை விடுத்து எமது Social Security Number ஐ அல்லது எமது தொலைபேசி எண்ணை எமது பெயராக பாவித்து ஒருவரையொருவர் அழைப்போமானால் நிலைமை எப்படி இருக்குமென்று. வழியில் காணுபவர்களை தற்போதைக்கு விடுங்கள். நண்பர்களின் இலக்கங்களாவது ஞாபகத்தில் நிற்குமா என்பது சந்தேகமே. குழப்ப நிலைதான் தோன்றும்.

இதேபோல்தான் இலக்கங்களால் ன IP Adress களை வைத்துக்கொண்டு காரியங்கள் ற்றுவோமானால் குழப்ப நிலைதான் காணப்படும். IP Adressess ஐ பார்த்து அது எந்த நாட்டுக்குரியது என்றோ அல்லது எந்த வகையை சேர்ந்ததென்றோ கூறமுடியாது. வெப்தளங்கள் ஞாபகத்தில் இராது. ரெலிபோன் இலக்கங்களை நாம் எழுதி வைத்துக்கொள்வதுபோல் ஒரு Notebook ஐ காவித்திரியவேண்டிவரும். இதை தவிர்ப்பதற்காகத்தான் Domain Names கொடுக்கப்படுதிறது. IP Address ஐ அல்லது Domain Name ஐ எமது உலாவியின் Address Bar ல் ரைப் செய்தால் அதற்குரிய வெப்தளத்திற்கு உலாவி போய்ச்சேரும் என்பதும் உண்மையே. Domainn Name முழுவதையும் ரைப் செய்ய வேண்டியதில்லை. Sub Domain பெயராகிய yarl அல்லது யாஹ¥ வை மாத்திரம் ரைப் செய்துவிட்டு control ஐ அழுத்திக்கொண்டு Enter ஐ தட்டினால் விலாசத்தின் மிகுதியாகிய http:www,.com தானாகவே போடப்படும்.

yarl.com என்ற டொமையின் பெயரை எடுத்துக்கொள்வோம். இதில் com என்பதை Top Domain என்பார்கள். Top Domain பல வகைப்படும். com, net, org, ed, gov உலகளாவிய ரீதியில் பொதுவானவை. lk, fr, uk, ca, என்ற ரொப் டொமையின்கள் அந்தந்த நாட்டோடு மட்டுப்படுத்தவை. yarl, yahoo, Hotmail , என்பவை Sub Domain என்று அழைக்கப்படும். yarl.com என்பதுதான் இத்தளத்தின் டொமையின் பெயர். இப்பெயரை நாம் web hosting கம்பனியிடம் பணம் கட்டி பதிவு செய்து வருடாவருடம் புதுப்பிக்கவும் வேண்டும். இப்படி செய்தால் இப்பெயர் உலகத்தில் எமக்கு மட்டும் சொந்தம். வேறு யாரும் இப்பெயரை பாவிக்கமுடியாது,

உலகம் முழுவதும் உள்ள பெரிய கம்பியூட்டர்களில் இந்த தகவல்கள் பதியப்பட்டு இந்த கம்பியூட்டர்களை மத்திய தகவல் நிலையங்கள் என அழைக்கப்படும். இந்த நிலையங்களை பராமரிப்பது InterNic என்ற கம்பனியாகும். இத்தகவல் நிலையங்களில் உங்கள் பெயர், உங்கள் கம்பனி பெயர், விலாசம், புதுப்பிக்கவேண்டிய திகதி, என்ற சகல விபரங்களும் பதியப்படும். இந்த பதிவுகளை நீங்கள் மத்திய நிலையங்களின் ஏஜண்டுகளான் web hosting கம்பனிகளிடம் பதிந்துகொள்ளலாம்.

Domain Name servers என்கிற யிரக்கணக்கான கம்பியூட்டர்கள் உலகம் பூராவும் பரவிக்கிடக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. மைக்கிறோசொவ்ற் பல இலட்சம் கம்பியூட்டர்களை வைத்துள்ளது. அது தனக்கென ஒரு DNS ஐ வைத்துள்ளது. பிரிட்டன் தன் கட்டுப்பாட்டில் UK என்ற டொமையினை வைத்து நிர்வகிக்க விரும்புகின்றது. அதுபோல் அவுஸ்திரேலியா AU என்ற டொமைனை வைத்துக்கொண்டுள்ளது. இப்படி இந்த DNS முறைமை உலகம் பூராவும் உள்ள பல இலட்சம் கம்பியூட்டர்களில் பரவிக்கிடந்தாலும் இவை ஒரு தனி அலகாக செயற்படுகிறது. உலகிலே பல கோடிக்கணக்கான Internet Protocol Addresses கள் உள்ளன. கோடிக்கணக்கான கம்பியூட்டர்கள் உள்ளன. ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 25 வெப்தளங்களையாவது பார்வையிடுகிறார் எனில் Domain Name Server களுக்கு எவ்வளவு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என சிந்தித்து பாருங்கள். நாம் மேலே கூறியது போல எமது Domain Name ஐ பதியும்போது எமக்குரிய Primary Domain Name Server மற்றும் Secondary Domain Name Server களின் பெயரையும் கொடுக்கவேண்டும். முதலில் நாம் ஒரு வெப்தளத்தின் பெயரை உலாவில் கொடுத்தவுடன் எமது வேண்டுகோள் அயலில் உள்ள Primary DNS க்கு போகும். அங்கே அந்த தளத்தின் IP Address மாற்றிக்கொடுக்கப்படும். அதன்பின் அந்த IP Address க்குரிய வெப்தளம் உலகம் பூராவும் தேடப்பட்டு கண்டுபிடிக்கப்படும். முக்கியமாக நாம் எண்ணவேண்டியது என்னவெனில் DNS என்பது Domain பெயரை Ip Address க மாற்றிக்கொடுக்கும் கம்பியூட்டர் என்றும் இது உலகம் பூராவும் பரந்துள்ளது எனவும். Com. Org. Net போன்ற பல டொமையிகளுக்கும் வெவ்வேறு DNS உள்ளனவென்றும்.

ஒரு DNS சேர்வரிடம் ஐபி விலாசத்தைக்கேட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டவுடன் அந்த விபரம் தன்னிடம் இருந்தால் கொடுக்கும். அல்லது இன்னொரு சேர்வரிடம் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் அல்லது எனக்குத்தெரியாது இன்னாருக்கு தெரியக்கூடும் அவரிடம் கேள் என இன்னொரு சேர்வரின் விலாசத்தைக்கொடுக்கும் அல்லது நீங்க தந்த விலாசம் பிழை அப்படி ஒரு தளம் கிடையாது என்று பிழைச்செய்தியைக்காட்டும்.

உங்கள் கம்பியூட்டரை நீங்கள் இணையத்துடன் பிணைக்கும்போது உனக்குரிய Domain Name Server இதுதான் என்று சொல்லிவைக்கவேண்டும்.பல கம்பியூட்டர்களில் இச்செயல் Internet Service Provider உடன் தொடர்பேற்படுத்திக்கொள்ளும்

Edited by E.Thevaguru

அருமையான விளக்கம். நன்றிகள் தேவகுரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தேவகுரு :P

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 91

மாங்காய்ப்பூட்டு

1. உங்கள் டெஸ்க்ரொப்பில் உள்ள My Network Places ஐ வலது கிளிக்பண்ணினால் வரும் மெனுவில் Properties ஐ கிளிக்பண்ண வருவது Network connections என்ற டயலக்பொக்ஸ். அதில் காணப்படும் கமபியூட்டர் படம் போட்ட ஐகொன் இல் வலது பக்க மூலையில் ஒரு மஞ்சள் நிற பூட்டு பூட்டிய நிலையில் காணப்படும். இந்த ஐக்கொன் ஐ பலதடவைகள் மேலோட்டமாக பார்த்ததன்றி ஊன்றி கவனிக்காததிபனால் பூட்டு கவனத்தை ஈர்க்கவில்லை. அன்று ஒருநாள் broad band connection தற்காலிகமாக நின்றுபோன நிலையில் Trouble-shooting செய்யும் போதுதான் இது எனது கவனத்தை ஈர்ததது. கனெக்ஷன் அற்று உள்ளதைத்தான் இது பிரதிபலிக்கிறதா? என ஆராய்ந்ததில் அப்படியில்லை என்றும் Firewall On இல் இருந்தால் பூட்டு காணப்படும் Off இல் இருந்தால் பூட்டு இருக்காது எனவும் ஆராய்ந்து அறிந்துகொண்டேன்.

2. நூற்றுக்கணக்கான வகைப்படுத்தப்பட்ட அழகிய வண்ணவண்ண படங்களை கொண்ட தளத்தின் லிங் கீழே உள்ளது. Sreen Saver அல்ல என்பதால் வைரஸ், மல்வெயர் பயம் ஏதும் இல்லை. படம் ஒன்றை தேர்ந்தெடுத்து பெருப்பித்தபின் அதை வலது கிளிக் செய்து பின் Set as Background என்பதை கிளிக்பண்ணினால் டெஸ்க்ரொப் திரையில் வந்து அமர்ந்து கொள்ளும்.

http://www.pdphoto.org/

நன்றிகள் தேவகுரு. உங்களுக்கு எப்படி கணணியில் இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது மற்றும் உங்களை பற்றிய தகவல்களை எங்களுடன் இன்னொரு தலைப்பில் பகிர்ந்து கொள்ளுங்களேன். உங்களை வேறு தலைப்புகளின் நான் பார்த்தது குறைவு. இவ்வளவு நல்ல அரிய தகவல்களை யாழ் களத்துக்கு தரும் ஒருவரையும் கணணி குறித்த உங்கள் ஆர்வத்தையும் அறிய ஆர்வமாக இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் தேவகுரு

  • தொடங்கியவர்

மதன்! இதோ கேளுங்கள்

அரசாங்க வேலை. 1990 ல் 48 வயதில் இளைப்பாறுதல்.! சனசமூக நிலையத்தில் தலைவர் பதவி!

நூல்கள் இரவல் கொடுத்தல். கைபட்டுபட்டு சிதைந்து கிழிந்து வருதல். புதியன வாங்க பணத்தட்டுப்பாடு. புதிய அட்டை கட்ட ஆர்வம். இதற்கென பருத்தித்துறையில் ஓர் அச்சகத்தில் எனக்கு பயிற்சி. நூல்களுக்கு அட்டை போட்டு செலோ ரேப் ஒட்டுவதில் திருப்தி. ஷெல் விழுதல். கதவு ஜன்னல் பறத்தல். நிலையதிற்கு உயிர் போதல்.

மரம் நடுகையில் ஆர்வம். வேம்பு ஆல் அரசு புரட்டடி வீதியோரங்களில் நடுதல். இப்போது அவை தெரு ஓரங்களில் விருட்சம்; ஊரில் எனது பெயரில். கைவண்டிலில் பனங்கொட்டை,ஆஸ்பத்திரி வளவில் நடுகை நானும் நண்பனும். இராணுவம்! இளைஞர்கள் கைது. பெற்றோர் முகாம் படை எடுப்பு. இருவருகிடையில் சிங்களத்தில் மொழிபெயர்க்க எனக்கு அழைப்பு. சமாதான நீதிவான் பதவியொன்று வலிந்து வந்தது.

அன்பளித்தவர் கேணல் ஒருவர் என்பதால் ஏற்க மறுத்தேன்

மகளை உலகின் இரண்டாம் பெரிய நாட்டுக்கு அனுப்ப கொழும்பு விரைவு. இது 1998 ல். விசாவிற்கு விண்ணப்பம். கொழும்பில் செலவு அதிகம். எனவே திருமலையில் கஸ்டம்ஸ் தெருவில் அறை எடுத்து காத்திருப்பு. கோணேசரை பார்த்த வாசகசாலையில் பகலில் தஞ்சம். அயலில் கம்பியூட்டர் நிலையம்.

அங்கே கற்க ஆசை. எக்ஸல் 97 ஐ கரைத்து குடித்தேன். போதாக்குறைக்கு திருமலை பெரிய வாசகசாலை கம்பியூட்டர் நூல்கள் எனக்கு உதவி.

விசா கிடைத்து. மகள் பறந்து போனாள். நான் மிதந்து ஊர் திரும்பினேன். மகன் ஒருவன் இந்தியாவில். தங்கை அழைக்க அவனும் பறந்து போய் ஒன்றினைந்தான். நானும் துணையும் சொந்த வீட்டில். பிள்ளைகள் உடனில்லை. கலகலப்பு மறைந்தது. இரண்டாண்டுகள்! காலையில் வீடு மாலையில் தெருவோர குந்தில் அரட்டை. பொழுது வீண் போனது. சுற்றாடலில் மக்கள் பத்துவீதம் மாத்திரம். வன்னி இடம் பெயர்வால் உறவுகளின் வெற்று வீடுகளை காக்கும் பொறுப்பும் என்மேல்.

ஸ்பொன்சர் அழைப்பு வந்த்து. மிதந்து திருமலை வந்து ஊர்ந்து வவுனியா வந்தோம். வவுனியாவில் கம்பியூட்டர் நிலயங்கள் அதிகம். விட்டதை மீண்டும் தொட்டுக்கொள்ள ஆசை வந்தது. இம்முறை ஹாட்வெயர் படிக்க. முறையான ஹாட்வெயர் கல்வி அப்போது வவுனியாவில் இல்லை. நிலையமொன்றில் ஹாட்வெயர் ஆரம்பம்: 500 கட்டி அதில் சேர்ந்தேன்.

தொடரும்......

Edited by E.Thevaguru

நன்றி தேவகுரு ஐயா. உங்கள் கணினி ஆர்வம் மகிழ்வளிக்கிறது. எமக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.

திருமலையில் கஸ்டம்ஸ் தெருவில் அறை எடுத்து காத்திருப்பு.

கோணேசரை பார்த்த வாசகசாலையில் பகலில் தஞ்சம்

ஜயா நானும் திருமலை Sri Lanka Telecomல் வேலை செய்யும் போது நீங்கள் இருந்த தெருவுக்கு அடுத்த தெருவான சினேக் லேனில் அறையில் தங்கியிருந்தேன் உங்களை சந்தித்திருப்பேனோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் சம்பந்தர் வீதியிலை என்னை காணேல்லையோ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தேவகுரு ஜயா உங்களை பற்றி கூறியதற்கு .

  • தொடங்கியவர்

மதன்! இதோ கேளுங்கள்

(தொடர்ச்சி)

வெறுப்படைந்து ஒரு மாதத்தில் வெளியேறினேன். காரணம் அந்த ஆசிரியர் ஆங்கிலத்தில் நோட்ஸ் தருவது 75 வீதம்; 15 வீதம் விளக்கம் 10 வீதம்தான் கைமுறைப்பயிற்சி. இதிலும்பார்க்க புத்தகத்தை வாங்கி நாமே வாசிக்கலாமே? அப்போது தமிழ் கம்பியூட்டர் ச்ஞ்சிகையில் ஹாட்வெயர் தொடர் இரண்டு வருடங்களாக வெளிவந்து முடிந்துவிட்டிருந்தது. 63 அத்தியாயங்கள். நிலையங்கள், தனியார், என பலரிடம் தேடியலைந்து 58 அத்தியாயங்களை போட்டோ பிரதியெடுத்துக்கொண்டேன். நான்கு அத்தியாயங்கள் வவுனியா எங்கிலும் இல்லை. காரணம் அது வெளிவந்த காலத்தில் வவுனியா மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள்.

திருமலையிலிருந்து அந்த 4 அத்தியாயத்தையும் தருவித்து முழுமையாக்கிக்கொண்டேன். அதன் இரு பிரதியை இரு நிலையங்கள் பெற்றுக்கொண்டது. மேலும் பிரதிகளுக்கு வேண்டுகோள் வந்தது. வுனியாவை விட்டு வெளியேறும்போது நான் கோர்த்த புத்தகத்தின் பிரதி வவுனியாவில் எத்தனையோ? யாம் அறியோம். இதேபோல் Visual Basic என்ற தொடரையும் சேகரித்து தரும்படி வேண்டுகோள் விட்டார்கள். எனக்கு விசா வந்துவிட்டது. புறப்பட்டுவிட்டேன்.

வெளிநாடு வந்தேன். வீட்டில் இரண்டு கம்பியூட்டர் கிடந்தது. வீட்டிலே உள்ள ஒரு உறவினர். கம்பியூட்டர் புறோகிறாம் செய்பவர். அவர் A+Certificate கற்பிப்பவர். அந்த வகுப்புகளில் கடைசியில் இருந்து நோட்டம் விடுவேன். வயலுக்கு பாய்ந்த நீர் விழலுக்கும் பாய்ந்தது. பயனடைந்தேன். வேலைக்கு போக வீட்டார் விடவில்லை. வேலை என்றால் வீட்டில்தான். வீட்டில் கிடந்த பழைய pentium II கம்பியூட்டர் கழற்றி பூட்டி பாடம் கற்றேன். காலையில் கோப்பியுடன் கம்பியூட்டரின் முன் உட்கார்ந்து 10 மணிவரை இணையத்தில் உலாவுவேன்.

இதுதான் பொழுதுபோக்கு. இதுதான் எனது உலகம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக எம் தமிழ் மாணவர்கள் என யாழ்.காம் இல் எழுதிக்கொண்டுள்ளேன். நான் வவுனியாவில் கம்பயில் செய்த புத்தகபிரதியையும் கையுடன் கொண்டுவந்துள்ளேன். அது 110 பக்கங்களை கொண்டது. இதன் பிரதி உங்களுக்கு தேவையெனில் ம்கிழ்ச்சியுடன் தரமுடியும். இவ்வருட முடிவில் சொந்த ஊர் திரும்ப உத்தேசம். நிறைய புத்தகங்கள் கையில் கிடக்கு. போக முடிந்தால் எனது பணிகள் அங்கே தொடரும். மரம் நடுவதிலும் கம்பியூட்டர் சொல்ல்லிகொடுப்பதிலும் இன்பம் காண்பேன். ஒன்றை உங்களுக்கு சொல்கின்றேன். இணையத்தில் கிடையாதது எதுவுமில்லை; ஆங்கில அறிவு இருந்தால்.

மறந்துவிட்டேன். தமிழ் கம்பியூட்டர் என்னும் சஞ்சிகையில் தற்போது "நெட்வேர்க்கிங்" என்று ஒரு தொடர் வெளிவந்துகொண்டுள்ளது. அதையும் அங்கே போய் கம்பையில் பண்ணி ஆங்கில அறிவு குறைந்த யாழ் மாணவரிடையே விநியோகிக்க எண்ணம் கொண்டுள்ளேன்.

ஊரில் உள்ள உங்கள் நண்பர்களிடம் விருட்சங்கள் நடும்படி கூறுங்கள். நீங்கல் ஊர் சென்றால் ஞாபகார்த்தமாக ஒருமரமேனும் அல்லது பத்து பனம் விதையேனும் நட்டு விட்டு வாருங்கள்

நன்றி

  • 2 weeks later...

தேவகுரு அண்ணா வணக்கம் !!!!

நான் உங்கள் பக்கங்களை மிகவும் சந்தோசத்தோடு படிப்பேன் மிக மிக பயனுள்ளதும் அதுவும் ஆங்கில அறிவு குறைந்த என் போன்றவர்கட்கு மிக மிக உதவியாகவும் உள்ளது அண்ணா மிகவும் நன்றி உங்கள் உதவிக்கு ....

மேலும் எங்களுக்காக உதவுங்கள்

உங்கள் போன்றவர்களின் உதவியால் என் போன்ற பல ஆங்கிலம் தெரியாதவர்கள் பலனடைந்துள்ளோம் ....

என்றும் அன்புடன் சி5

ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது

பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலன்விரும்பி நீ வழங்கும் செல்வம் ..பிறர் உழைப்பினிலே உனக்கிருக்கும் இன்பம்....

இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் ::::::

இதே எந்தன் ..................

:(:lol::lol::lol::D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 92

Logon Screen

விண்டோஸ் 98, விண்டோஸ் 2000, ஆகிய கம்பியூட்டர்களை இயக்கி நாம் உட்புக முயற்சிக்கும்போது ஒரு சிறிய நீள்சதுர பெட்டியொன்று (Classic Windows Logon Screen) தோன்றும். அந்த கம்பியூட்டரில் எத்தனை கணக்குகள் இருந்தாலும் ஒவ்வொரு கணக்கிற்கும் உரிய username மற்றும் password ஐ அப்பெட்டியில் அடித்தவுடன் அக்கணக்கிற்குரிய personal settings உடன் இயங்கு தளம் லோட் ஆகும்.

ஆனால் XP யில் அப்படியில்லை. Welcome திரையிலேயே இயல்பாக கணக்குகளின் பெயர்பட்டியல்கள் காணப்படும். அதில் எமக்குரிய username ஐ கிளிக்செய்தவுடன் அக்கணக்குக்குரிய password ஐ கேட்கும். கொடுத்தவுடன் எமக்குரிய personal settings உடன் இயங்கு தளம் லோட் ஆகும். விரைவாக உட்புகுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வசதி இது. தனி கம்பியூட்டரில் தனி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான். எம்மில் பலருக்கு இது பழக்கம் காரணமாக திருப்தியைத்தரவில்லை. சரி XP வைத்திருப்பவர்கள் Classic Windows Logon Screen ஐ பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் செய்யவேண்டியது இதுதான். (விண்டோஸ் 2000 த்தில் தோன்றுவது போன்ற பெட்டியில் username மற்றும் password ஐ அடித்து உட்புகவேண்டுமெனில்)

Control Panel க்கு போய் User Accounts என்பதை இரட்டை கிளிக்செய்தால் வரும் திரையில் காணப்படும் Change the way users log on or off என்ற வாசகத்தை கிளிக்செய்தவுடன் வரும் திரையில் காணப்படும்

Use the welcome screen

Use the fast user switching

என்ற வாசகங்களின் முன் உள்ள பெட்டியில் Tick அடையாளமிருந்தால் அதை எடுத்துவிடவும். இனிமேல் கம்பியூட்டரை ஆரம்பிக்கும்போது username மற்றும் password ஐ கேட்கும் பெட்டியொன்று தோன்றும்.

மீண்டும் பழைய நிலைக்கு போகவிரும்பின் அதே வழியில் வந்து Tick அடையாளத்தை போட்டால் போதுமானது

நன்றிகள் தேவகுரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.