Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா? கருத்துப்படம் !

Featured Replies

நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும் ஈழத்திற்கு தனி மவுசு ! பேசுவதற்கும், நடிப்பதற்கும், உணர்ச்சிகளை அள்ளி வீசுவதற்கும் வேறு எதுவும் இல்லையென்பதால் ஓட்டுக் கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் ஈழப்போராட்டம்.

ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் உண்மையாகப் போராடும் புரட்சிகர அமைப்புகள், தமிழின இயக்கங்கள், போராடுவது போல காட்டிக் கொள்ளும் சமரச சக்திகள், துரோகிகள், எல்லாரும் உண்டு. ஆனால் ஈழத்தின் மூச்சு நெறிக்கப்படவேண்டுமென துடிக்கும் எதிரிகளே தமது கொடூரக் கைகளால் ஈழத்தை கட்டியணைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

போரென்றால் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள், புலிகளை ஒடுக்கவேண்டும், சீமான், திருமாவளவனைக் கைது செய்யவேண்டும், புலி ஆதரவாளரான கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றெல்லாம் ஊளையிட்ட ஜெயலலிதா என்ற கோட்டான் ஈழத்தின் மீதான போர் நிறுத்தப் படவேண்டுமென எட்டுமணிநேரம் உண்ணாவிரதம் இருந்து உலகத்தையே வியக்க வைத்திருக்கிறதாம். இரண்டு தடவைகள் தமிழகத்தை ஆண்டு ஒட்டச்சுரண்டி பல ஆயிரம் கோடி கொள்ளையடித்த ஜெயா சசி கும்பல் தனிப்பட்ட முறையில் ஐந்து இலட்சமும், கட்சி சார்பாக ஒரு கோடியும் ஈழத்து மக்களுக்காக பிச்சையிடுகிறதாம். இந்த கலெக்ஷன் கல்லா செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கொடுக்கப்படுமாம்.

ஏற்கனவே முல்லைத்தீவிலும், வன்னியிலும் செஞ்சிலுவைச் சங்கத்தை சிங்கள அரசு விரட்டிவிட்டது. இனி அம்மா கொடுத்தபணத்தை வைத்து செஞ்சிலுவைச் சங்கம் என்ன செய்யும்? செத்து மடியும் மக்களின் ஈமச்சடங்கு செய்வதற்குத்தான் அந்தப் பணம் பயன்படும். ஈழத்தின் கருமாதிச் செலவுக்கு புரட்சித்தலைவி ஸ்பான்சர்! அதற்கு ஜெயா டி.வி லைவ் டெலிகாஸ்ட்!

அப்புறம் இந்த உண்ணாவிரத நாடகத்தில் பேசிய புரட்சித் தலைவி இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, இறையாண்மை கெடாமல் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும், இதைவிடுத்து திசைமாறிய ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றெல்லாம் உளறியிருக்கிறார். இதைத்தானே ராஜபக்சேவும் பேசி இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்குத்தான் போர் என்று ஈழத் தமிழர்களை கொன்று குவித்து அமல்படுத்தி வருகிறார். இந்திய அரசும் இந்த இறையாண்மை புனிதத்தை வைத்துத்தான் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறது. தற்போது மருத்துவக்குழுவை அனுப்பி அடிபட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப் போகிறதாம். ஒரே நடவடிக்கை, ஒரே பேச்சு, ஒரே கருத்து இருவேறு பொருள்களில் பேசமுடியுமென்றால் ஈழத் தமிழர்கள் செய்த பாவம்தான் என்ன? ஒருவேளை இப்படியிருக்கலாமோ? ஈழத்தமிழ் மக்களை கொல்வது ராஜபக்சேவின் பணி, கருமாதி காரியம் செய்வது ஜெயலலிதாவின் பணி?

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான் கைது செய்யப்பட்டது போல அதே கருத்துக்ளை வைத்திருக்கும் கருணாநிதியும் கைது செய்யப்படவேண்டுமென புரட்சித் தலைவி முழங்கிய போது அருகில் இருந்த புரட்சிப் புயல் வைகோ நெளிந்தார். நல்லவேளையாக அந்தப் பட்டியலில் வைகோவைச் சேர்க்காமல் அருள்பாலித்தார் அம்மா.

ஈழத்தின் கருமாதிக்கான உண்டியலில் ஐந்து இலட்சத்தைப் போட்ட வைகோ, அம்மாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்துவைக்கும் பேறு கிடைத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஈழத்திற்கு துரோகம் செய்ததாக கருணாநிதியைத் திட்டிய வாய் கூச்சநாச்சமின்றி ஈழத்தமிழர்களின் வில்லியை மனதாரப் பாராட்டிய காட்சிக்கு இணையான ஆபாசம் இந்த உலகில் எதுவுமில்லை.

அடுத்த ஆபாசம் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன். இந்த உலகில் யாரும் செய்யமுடியாத இந்த எட்டுமணிநேர உண்ணாவிரதத்தை செய்யத் துணிந்த அம்மாவின் தியாகத்தை வாய்வலிக்கப் பாராட்டிய அவர் இந்தப் போராட்டத்தைப்பார்த்து உலகெங்கும் சிதறிக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்கள் தமழிகமே தம் பக்கம் அணிவகுத்து நிற்கிறது என மகிழ்ச்சியடைந்து நிம்மதி அடைந்திருக்கிறார்களாம். எல்லாம் ஈழத்தமிழன் இளிச்சவாயன் என்ற நம்பிக்கையில் தா.பாண்டியன் வைத்திருக்கும் துணிச்சல்தான்.

அம்மா அளவுக்குக்கூட ஈழத்தின் போராட்டத்திற்காக எதுவும் பேசாத இடது கம்யூனிஸ்ட் கட்சியின் என்.வரதராஜன் இலங்கையின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் வராமல் வெகு ஜாக்கிரதையாக ஒரு விளங்காத அறிக்கையை விளக்கெண்ணை போல அதுவும் எழுதி வைத்துப் படித்தார். எல்லாம் அம்மாவின் தயவில் இரண்டு சீட்டுக்களைப் பெற்று வெற்றிபெறவேண்டும் என்ற அடிமைத்தனம்தான்.

அதற்கப்புறம் தலித் மக்களுக்கு புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமி, குடியரசுக் கட்சியின் வை.பாலசுந்தரம், முசுலீம்களுக்கு லீக் பிரதிநிதிகள், தேவர் சங்க நாட்டாமைகள் எல்லாரும் புரட்சித் தலைவின் உற்சவ உலாவிற்கு மந்திரம் ஓதி புண்ணியம் செய்தார்கள்.

மற்றபடி உண்ணாவிரதத்திற்கு வரவில்லையென்றாலும் அம்மா இந்த அளவிற்கு இறங்கி வந்து சேப்பாக்கத்தில் குந்தியிருந்ததற்கு நன்றி தெரிவித்து உருகியவர்களில் திருமாவளவனும், பழ.நெடுமாறனும், மருத்துவர் ராமதாஸூம் அடக்கம். வில்லியை வில்லி என்று கூட சொல்லமுடியாத அந்த துரதிர்ஷடசாலிகளை உண்மையில் வழிநடத்திய விசயமென்னவென்றால் இன்னமும் நாடாளுமன்றத்திற்கான கூட்டணி சேர்க்கைகள் முற்றுப் பெறாமல் இருப்பதுதான். டெல்லியின் அதிகாரமையத்திற்கான ஆட்டத்தில் முல்லைத் தீவின் மரண ஓலம் கேட்குமா என்ன?

இதெல்லாவற்றையம் விட கொடுமையான விசயம் என்னவென்றால் அம்மாவின் உண்ணாவிரதத்தைப் பாராட்டி சுப்பிரமணிய சாமி அறிக்கை விட்டதுதான். இனி புரட்சித் தலைவியைப் பாராட்டவேண்டியதில் விடுபட்ட தலைவர் ராஜபக்சே மட்டும்தான். அவரையும் ஒரு அறிக்கை விடுமாறு இந்து ராம் கேட்டுக் கொண்டால் இந்த நாடகம் நேர்த்தியாக முடிக்கப்படும்.

கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/03/10/eelam28/

வினவு தளத்திலிருந்து http://vinavu.wordpress.com/2009/03/10/eelam28/

இதன் மறுமொழிகள் http://vinavu.wordpress.com/2009/03/10/eelam28/#respond

தொடர்புடைய பதிவுகள்:

ஈழம்: “அம்மாவும்” பக்தர்களும் ! கருத்துப்படம் !!

ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

பிற ஈழம் தொடர்பான கட்டுரைகள்

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். மற்றப்படி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு உங்களது கருத்துப்படம் தற்காலத்து உண்மையை தெட்டத்தெளிவாய் முன்வைக்கின்றன ஈழத்தழர்களின் உயிர்களில் அரசியல் நடத்தும் நாய்கள் இவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும் ஈழத்திற்கு தனி மவுசு ! பேசுவதற்கும், நடிப்பதற்கும், உணர்ச்சிகளை அள்ளி வீசுவதற்கும் வேறு எதுவும் இல்லையென்பதால் ஓட்டுக் கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் ஈழப்போராட்டம்.

ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் உண்மையாகப் போராடும் புரட்சிகர அமைப்புகள், தமிழின இயக்கங்கள், போராடுவது போல காட்டிக் கொள்ளும் சமரச சக்திகள், துரோகிகள், எல்லாரும் உண்டு. ஆனால் ஈழத்தின் மூச்சு நெறிக்கப்படவேண்டுமென துடிக்கும் எதிரிகளே தமது கொடூரக் கைகளால் ஈழத்தை கட்டியணைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளுக்கு,

தமிழ்த் தேசியத்தின் அழிவிலே ஆரியக் கூட்டணி தெளிவாக இருக்கிறது. அது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சேர்ந்தும் தனித்துமாகப் பல கழுத்தறுப்புகளை செய்து வருகிறது. இதனை சரியாக அளவிடாத அல்லது தமது சுயநலப் பதவி ஆசை கொண்ட, தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுறிதியற்;ற போக்குக் காரணமாக கதிரைகளுக்காகத் தமிழினம் காவு கொடுக்கப்படுகின்ற நிகழ்வு தொடர்கிறது. இந்தப் பின்னணியில் இருந்து தமிழக அரசியல்வாதிகளை, தொப்புள்கொடி உறவுகள் இனங்கண்டு தமது வாக்குச்சீட்டினூடாக உரிய தண்டனையை வழங்க முன்வரும்போது மட்டுமே இது சாத்தியமானதாக மாறும். தமிழினத்தினது ஆத்ம உணர்வை எந்த ஒரு அரசியல்வாதியும் சரியாக மதிக்கவோ, கௌரவப்படுத்தவோ முன்வரவில்லை என்பது கண்கூடு. அப்படி மதித்திருப்பின், தமிழினத்தினது ஆத்ம உணர்வை மதிக்காத கட்சிகளை விட்டு வெளியேறி அரசியலுக்கப்பால் தமிழ் இனத்தினது விடிவுக்காக சிந்திக்கத் தமிழகத்தினது அரசியல் தலைமைகள் முன்வந்திருக்கும்.தமிழினம் அழிவினுள் நிற்கும் இவ் வேளையிலும், சுயநல அரசியலுக்கப்பால் சிந்திக்க முன்வராமை என்பது, முத்துக்குமார் தொடக்கம் சிறீதர் வரையான " ஈகப்பேரொளி "„ களின் ஈகத்தைக் கீழ்மைப்படுத்தவதாகவே அமையுமேயன்றி வேறில்லை. இவர்கள் விட்டுச் சென்ற பணியை நாம் முன்னெடுத்து தமிழ்த் தேசியத்தை மலரச் செய்ய வேண்டியது எமது வரலாற்றுக் கடமையென்பதற்கப்பால் கதிரைகள் பற்றியல்லவா சிந்திக்கிறார்கள் என்பது எத்துணை வேதனையானது. எனவே இது தொடர்பாகத் தொப்புள் கொடி உறவுகள் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். 2009ம் ஆண்டினது தேர்தலென்பது தமிழினத்தின் தன்மானத்தை தீர்மானிக்கும் தேர்தலாக மாற்ற வேண்டும்.

இதற்காக இரண்டில் ஒரு விடயம் நடந்தாக வேண்டும்.

1) தமிழினத்தை, தமிழ்த் தேசியத்தை காக்கும் வல்லமை கொண்ட துணிச்சலான அணியொன்று உருவாக்கப்பட்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும்.

2) முதலாவது சாத்தியப்படாவிடில் சுயேட்சையாக தமிழுணர்வாளர்கள் நின்று சாதிக்க வேண்டும். அல்லது வாக்குகள் செல்லுபடியற்றதாக மாற்றப்பட்டு, இன அழிப்பிற்குத் துணைபோகும் சனநாயகம் நிராகரிக்கப்படவேண்டும்.

இப்படியான வலுவான விளைவுகள் நிகழும்போது மட்டுமே தமிழகத்தினது மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் நிலை வரும். இல்லையேல் தாங்களும் கோமாளிகளாவதோடு, தொப்புள் கொடி உறவுகளே உங்களையும் கோமாளிகளாக்கிவிடுவார்கள் இந்த மக்கள் நலன்சார் இலக்கற்ற அரசியல் கோமாளிகள் என்பதே உண்மையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நலமே நடக்கும். நமக்கு எதுவும் பலன் தராது. இது அமெரிக்கவில் நடக்கும் தேர்தல் அல்ல. ஆசியாவில் உள்ள பெரிய ஜன நாயக நாட்டில் நடைபெறும் ஜன நாயகமற்ற தேர்தல்.

தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு எமக்குண்டு

தேசியத் தலைவரை , விடுதலைப் புலி வீரர்களை வன்னிக்குச் சென்று கண்டு, புலிவீரர்களுக்கு தமிழகத்தில் சோறுபோட்டேன் ,மருத்துவம்பார்த்தேன் , ஆறுமாதம் வீட்டில்வைத்து அடைக்கலம் கொடுத்தேன் என்று வைகோ சொன்ன போது எமது நெஞ்சங்களிலெல்லாம் நன்றி பெருக்கெடுத்தோடியது.ஆனால் இன்று கொள்ளைக்காரியின் முந்தானையில் முடிச்சாக இருக்கின்ற வைகோவை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.

சிறீலங்கா சட்டங்களுக்கமைய தனிநாட்டுக்கு ஆதரவு என்று பேசிய ஜெயாவுக்கு பழரசம் கொடுக்கிறது வைகோவின் கை! ஜெயாவுக்கு சிறீலங்காவையும் சந்திரிகாவையும், மகிந்தவையும் தான் தெரியும். ஈழம் பற்றி அறியாத, அறிய அக்கறையே கொள்ளாத தமிழின விரோதி ஜெயாவுக்கு பழரரசம் கொடுத்து தன்கையை களங்கப்படுத்திவிட்டார் வைகோ.ஈழழப்போராட்டத்தின் அனைத்து படிநிலைகளையும் துல்லியமாக அறிந்திருக்கும் வைகோ , அபத்தமாக அறிவுகெட்ட பெண்ணொருத்தி பேசுகின்றாளென அரங்கைவிட்டு இறங்கியிருக்க வேண்டாமா?

செல்வியென்று சொல்லிக்கொள்ளும் ஜெயா என்ற கொள்ளைக்காரியை, ஓட்டுப் பொறுக்கிகளுள் முதலாமிடம் பிடிக்க முனையும் மருத்துவர் சொல்கிறார் தமிழகத்தின் அதியுயர்ந்த அரசியல் சக்தியாம் , . தேர்தலுக்குத் தேர்தல் கொள்கைமாறும் இந்த கோமான் சான்றிதழ் கொடுக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்களில் வைகோ , இராமதாசு இருவரைத் தவிர அனைவரையும் கைதுசெய்யவேண்டுமென கொக்கரித்த கொடுநாகம் இன்று சிறிலங்கா சட்டங்களுக்கு உட்பட்ட தனிநாட்டுக்கு ஆதரவாம்.

புலிகளில்லாமல் கன்னடத்து குஞ்சியப்பனா தமிழீழம் கொண்டுவந்து தருவான். சிறீலங்காவின் அரசியல் சாசனம், யாரால் எப்போது எழுதப்பட்டது? அதில் என்னென்ன நஞ்சுகளெல்லாம் தமிழருக் கதிராக இருக்கிறது என்பது பற்றி , செல்வியெனத் தன்னைக் கூறும் இந்த பதிவிரதைக்குத் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் பெற்றோர் இந்தியாவில் இருக்கும் போது வைகோவின் வீட்டில் ஒரு விழா நடந்ததாகவும் அவ் விழாவிற்கு தலைவரின் பெற்றோரையும் அழைத்திருந்ததாகவும் விழா நடந்து கொண்டு இருக்கும் போது காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் வந்ததாகவும் அவர்கள் வந்த உடன் வைகோ அவர்கள் தலைவரின் பெற்றோரை கொண்டு போய் வீட்டுக்கு பின் புறம் ஒளீத்ததாகவும் விசயம் தெரிந்த ஒருவர் ஒரு இனையத்தில் எழுதியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், இந்தியக்கம்னியூஸ்ட் போன்ற ஈழ ஆதரவுக் கட்சிகள் கூட்டாகப் போட்டியிட வேண்டும் என்பது தான் பல ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் திமுக, அதிமுகவிடம் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதன் மூலம் தான் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியைத்தவிர மேலே குறிப்பிட்ட 3 கட்சிகளும் தனித்தனியே அதிகபட்சம் சட்டசபைத்தேர்தலில் 10 இடங்களைக் கூட பெற முடியாமல் முந்தைய தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. நாடாளுமன்றத்தேர்தலில் இவை குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் கூட வெல்ல முடியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி சென்ற சட்டசபைத் தேர்தலி 35 இடங்களில் திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு 18 இடங்களைத் தான் பெற முடிந்தது. திமுக, அதிமுக கூட்டணியைத் தவிர்த்து தனியாக நின்று போட்டியிடும் போது ஒரு தொகுதியிலும் இக்கட்சிகளினால் வெல்லமுடியவில்லை. இதனால் தான் இவை திமுக, அதிமுகவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுகின்றன. அப்படிக் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவதினால் இவர்களுக்கு சில இடங்கள் கிடைக்கின்றன. இதற்காகவே விருப்பமில்லாவிட்டாலும் கூட்டுக்காக சில நடிப்புக்கள் செய்யவேண்டி இருக்கிறது. ஆனால் இவர்கள் எக்கூட்டணியில் இருந்தாலும் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் இவர்கள் எக்கூட்டணியில் இருந்தாலும் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதிக இடங்களில் ஈழ ஆதரவுக் கட்சிகள் வெற்றி பெறுவதுதான் தமிழ் உணர்வாளர்களின் விருப்பமும் .

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.