Jump to content

சிறை கூண்டில் நான்..


Recommended Posts

பதியப்பட்டது

எனக்கு ஏன் இந்த வாழக்கை என தன்னோட கடந்த கால பசுமையான நிகழ்வுகளை இலக்கியா ஜோசிக்க தொடங்கினாள்

எனக்கு கிடைத்த மாதிரி குடும்பம் யாருக்கும் கிடைக்குமா?.. எல்லாருக்கும் குடும்பம் கிடைக்கும்… ஆனால் அழகிய சந்தோசமான குடும்பம் கிடக்குமா?..

பாசத்தை காட்ட அம்மா வாணி.. வாணிக்கு ஏற்ற பெயர் போல அவளும் அழகிலும் சரி அறிவிலும் சரி அம்மா கெட்டிகாரிதான்..இல்லை என்றால் எங்கள் குடும்பம் இவ்வளவு கஸ்ரத்திலையும் சந்தோசமாய் இருக்க முடியுமா..

கண்டிப்பையும் பாசத்தையும் ஒரு இடத்தில் பாக்கலாம் அதுதான் என் அப்பா தவம்.. ஆமாம் எனது அம்மம்மா தவம் செய்து எடுத்த பிள்ளைதான் என் அப்பா.. பாசத்திலும் சரி கண்டிபிலும் சரி அப்பாவை குறை சொல்ல முடியாது.. . அப்பா எங்களை கண்டிப்பார்.. பாவம் அம்மா ஒரு நாள் பிள்ளைகளை குறை சொன்னாலும் அப்பாவுக்கு பொறுக்காது.. ஏன்டி என் பிள்ளைகளை திட்டுறாய் என்றுதான் கேட்பார்..

அடுத்த எனது இரு தம்பிகள் மூத்தவன் வருண் அடுத்தவன் எங்கள் கடை குட்டி தருண்.. எவ்வளவு சந்தோசமாய் இருந்தம் ஏன் கடவுளே எங்கள் நாட்டில் மட்டும் இப்படி.. நமக்கு ஒரு விடியல் ஒன்று வரதா.. என்று ஜோசித்து விட்டு திரும்பவும் இலக்கியா தன் அப்பாவோட இருந்த கலைத்தை ஜோசிக்க தொடங்கினாள்..

அப்பா எப்ப நாங்கள் நல்ல வர போறம்.. அப்ப வெளியில் போடுறதுக்கு கூட ஒரு நல்ல உடுப்பு இல்லை.. என்னப்பா வாழ்க்கை தம்பியவை பாருங்கள் படிக்க போறங்கள் ஆனால் கசங்கிய உடையுடன்.. கஸ்ரமாய் இருக்கு அப்பா.. நான் வேணும் என்னால் என் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போகட்டுமா அப்பா..

அம்மா இலக்கியா இருக்குறதை வைத்து சந்தோசப்படணும் அம்மா.. இப்ப என்னம்மா எங்களுக்கு குறை.. சாப்பிட சாப்பாடு இல்லையா ..உடுக்க உடைதான் இல்லையா.. நம்மளை விட எவ்வளவு பேர் கஸ்ர படுறாங்கள்.. இதுவே கடவுள் குடுத்தான் என்று சந்தோசப்படணும் இலக்கியா அம்மா.. சரியா..

என்ன அப்பாவும் மகளும் பேசிட்டு இருக்குறியள்.. என்ன இலக்கியா ஏன் கஸ்ர படுத்துறாய் இதை எல்லாம் கேட்டு?

அம்மா நான் அப்பாவை ஒன்றும் கேட்க வில்லை அப்பாவுக்கு உதவியா வரட்டுமா என்றுதான் கேட்டன்..

என்னடி என் மகளை குறை சொல்லுறாய்.. என் மகள் சொக்க தங்கம்.. உன் மகன்கள் மாதிரி இல்லை.. எங்க அவங்கள் இரண்டு பேரும் கண்ணிலயே பட வில்லை..

இல்லங்க வெளியிலை போயு இருக்காங்கள்.. வந்து விடுவாங்கள்..

நல்ல செல்லம் குடுக்குறாய்.. அவங்கள் சொல்லு கேட்கமால் போயு விட போறார்கள்..

ஆமாம் என்னை மட்டும் சொல்லுங்கள் அவங்கள் வந்தால் செல்லம் குட்டி என்று சொல்லுங்கள்..

என்னடி பண்ணுறது என் பிள்ளைகளை பார்த்ததும் எனக்கு திட்டவே மனசு வராது.. என் பிள்ளைகள் மூவரும் சொக்க தங்கம்.. பாரன் இந்த இலக்கியா பெண்ணை இப்ப பிறந்த மாதிரி இருக்கு அதுக்கு இடையில் வழந்து விட்டாள்.. படிப்பை நிறுத்தி விட்டு என்னுடன் வேலைக்கு வாறளாம் எனக்கு உதவியாய்...

எனது செல்ல ஒரே மகள் அவளுக்கு 24 வயது அகுதும் வாணி நம்மளும் கல்யாணம் பண்ணி வக்கனும் அவளுக்கு.. எங்களுடன் இருந்த கஸ்ர படுற மாதிரி இல்லாமல் நல்ல மப்பிள்ளை குணம் உள்ளவனாய் பார்த்து கல்யாணம் பண்ணி வக்கணும்.. நம்மளுக்கு கஸ்ரம் என்று ஒன்று இருக்கும்தான் ஆனால் அதுக்காக அவளை கல்யாணம் பண்ணி வக்காமல் வைத்து இருக்க முடியுமா?

ஆமாங்க அதுகும் சரிதான்.. ஏங்க நீங்கதான் சொன்னிங்களே உங்க அக்கா மகனை கேக்கலாம் என்று..மாப்பிளையும் வெளி நாட்டில்தானே இருக்குறார்.. நம்ம பொண்ணும் சந்தோசமாய் இருப்பாள் இல்லையா?

அதே நேரம் உள்ள வந்த மகன்கள் இருவரும் ஆமாம் அப்பா அக்காவை குமார் அத்தானுக்கு பண்ணி வக்கலாம் .. அக்கா ஆவாது சந்தோசமாய் இருக்கட்டும் வெளி நாட்டில்..

சரி உங்கள் விருப்பம் போல அக்கவை நாளைக்கு போயு கேட்குறன் .. இப்ப எல்லாரும் தூங்க போகலாம் நேரம் ஆயுட்டுது.. நாளைக்கு உங்கள் இருவருக்கும் பள்ளி கூடம்தானே போயு படுங்கள்..

அதே நேரம் உள்ள இலக்கியா சந்தோசத்தில் மிதக்க தொடங்கினாள்... அத்தான் உன்னை எவ்வளவு சின்ன வயதில் பார்த்தன் .. இப்ப நீ எப்படி வழந்து அழகா இருக்காய்.. அத்தான் நான் உன் படத்தை அத்தைக்கு தெரியாமால் எடுத்து வந்தன்.. நீ என்னை நினைக்குறியோ இல்லையோ தெரியாது அத்தான் நான் உன்னைதான் நினைத்து கொண்டு இருக்குறன்.. அவனை பற்றிய இனிய கனவுகளுடன் உறங்கி போனாள் இலக்கியா.. அடுத்த நாள் அவளுக்கு இடிக்கு மேல் இடியாய் வரும் என்று தெரியாமல்..

அம்மா இலக்கியா அப்பா அத்தை வீடு வரை போயுட்டு வாறன்..உங்க அம்மா கோவிலுக்கு போயு இருக்கா வந்தால் சொல்லு சரியா..அப்ப மத்தியான சாப்பாட்டுக்கு இங்கதான் வருவன் என்று சொல்லு..என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..

அக்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா அப்பா ஏன் அத்தை விட்ட போறார் என்று.. இலக்கியாவுக்கு தெரியாது என்று நினைத்து இவர்கள் இருவரும் அவளை கேட்டார்கள்

இலக்கியாவுக்கு சிரிப்பு வந்தது அதை காட்டமல் ஏன்டா அப்பா அங்க போறார் என்று இரு தம்பிமரையும் கேட்டாள்

அக்கா உனக்கு விஷயம் தெரியாதா அப்பா உனக்கு குமார் அத்தானை கல்யாணம் பண்ண கேட்க போறாங்கள்..

]

அப்படியா எனக்கு அப்பா சொல்லவே இல்லையே என்று இலக்கியா சிரித்து கொண்டே கேட்டாள் ..

அண்ணா இந்த அக்கா சிரிக்குறதை பார்த்தால் அக்காவுக்கு தெரிந்து இருக்கும் போல.. பார் அக்கா இல்லை என்றால் ஏன் சிரிக்கணும்..

ஆமடா எங்க கடை குட்டி தருண் என்று காதை திரிகி கொண்டே சொன்னால் அப்பா பேசினதை நானும் இரவு கேட்டன்..

அக்கா நீ சரியான கேடி என்று இரு தம்பி மாரும் சண்டை போட்டார்கள். திடிர் என பார்த்தால் தருண் அழ தொடங்கினான் அக்கா நீ குமார் அத்தனை கல்யாணம் பண்ணி போனால் உன்னை பாக்க முடியாத.. நீ வரவே மாட்டிய அக்கா..

என் செல்ல இரு தம்பிகளும் நல்ல கேளுங்கடா.. நான் மற்றவர்கள் மாதிரி இல்லை.. நான் குமார் அத்தனை கல்யாணம் பண்ணி போயுட்டு அத்தானட்ட சொல்லி உங்கள் இருவரையும் நான் குப்புடுறேன் சரியா.. அப்புறம் அப்பா அம்மாவையும் நீங்கள் இருவரும் கூப்பிடுங்கள்.. அப்புறம் நம்ம இங்க இருந்த மாதிரியே அங்கையும் இருக்கலாம்.. என்று மூவரும் சிரித்து பேசினார்கள்..

அதே நேரம் பெரிய சத்தம் என்னடா இது என்று மூவரும் வெளியில் வந்து பார்த்தாள்.. பொம்மர் மேல சுத்தி இட்டு இருந்தது

அக்கா எனக்கு பயமாய் இருக்கு அப்பாவும் அம்மாவும் வெளியில் போயு இருக்குறார்கள்... இவனை பார்த்தல் குண்டு போட போறான் போல இருக்கு.. இல்லை தம்பி அப்படி இருக்காது நல்லதையே நினைப்பம் என்று அவள் பேசி வாய் மூட வில்லை பெரிய குண்டு சத்தம் கேட்டது..பக்கத்து இடத்தில்..

ஐயோஓஓஓஓ அக்கா இங்க எங்கையோ குண்டு போட்டு விட்டான் அடுத்து எங்க போட போறானோ தெரியலை வாங்கோ வங்கருக்கு உள்ள போயு இருக்கலாம் என்று மூவரும் ஒடி போயு இருந்தார்கள்..

எல்லாம் சத்தம் முடிய மூவரும் வெளியில் வந்தார்கள்.. அக்கா ஏதேனும் சேதமாய் இருக்குமோ.. நான் போயு பார்த்துட்டு வரட்டுமா?

வருண் அப்பா அம்மா வரும் வரை நீ எங்கையும் போக வேண்டாம்

ஆமாம் வருண் அண்ணா அக்கா சொல்லுறதை கேளுங்கள் .. அவன் போனவன் திரும்பி வரலாம்..

பார் நம்ம கடை குட்டிக்கு இருக்குற முளை கூட உனக்கு இல்லை..

அக்கா என்னை மன்னித்து விடு நான் எங்கையும் போகலை..ஜோசிக்காமல் பேசி விட்டன்..

இல்லைடா மன்னிப்பு எதுக்கு.. நான் நம்ம நன்மைக்குதானே சொன்னன்

அதுகும் சரிதான் அக்கா..

அக்கா அங்க அம்மா வாறாங்கள்.. அம்மா என்று மூவரும் ஒடி போனார்கள்..அம்மா நீங்கள் அப்பாவை பார்க்க வில்லையா அத்தை வீட்ட போனவர் இன்னும் வரலை..

அப்பா எப்ப போனவர் இலக்கியா.. றொம்ப நேரமோ.. வருவார் பிள்ளை விடு

அப்போது பக்கத்து வீட்டு சனம் வந்து சொல்லி போட்டு போனது தவத்துக்கு காயமாம் உங்களை பொம்மர் அடித்த இடத்துக்கு வர சொல்லி..பொம்மர் அடித்த இடம் பள்ளி கூடாமாம் என்று சனம் கதைத்து கொண்டே போனது...

இலக்கியா பள்ளி கூடம் நோக்கி ஓடினாள்..அம்மா இதுலை அப்பாவை எப்படி கண்டு புடிப்பது.. கை காலும்தானே இருக்குது ஐயோ அப்பா என்று கதறினாள்..

மகளே என்னால அவரை இந்த கொடுமையில் பாக்க முடியாது என்று தாய் மயங்கி விழுந்தாள்..

வருண் தருண் அம்மாவை பாருங்கள்.. நானே அப்பாவை தேடி எடுக்குறன்..

கை காலுமாய்தான் பொறுக்கி எடுத்தால் இலக்கியா பாசமான அப்பாவை.. நடந்து ஒரு ஆண்டு ஆகுது..இன்னும் அப்பாவின் நினைவுகள் அழியாத சோகம்..

அம்மா தம்பியவை படிக்கட்டும் நான் கூலி வேலைக்கு போகுறேன்..

இல்லை இலக்கியா அப்பாவோட ஆசை உன்னை அவரோட அக்கா மகனுக்கு கல்யாணம் பண்ணி வக்கணும் என்று நான் அவர்களை கேட்டு உன்னை கல்யாணம் பண்ணி வக்க வேணும்..

அம்மா நாம் இருக்கும் நிலைமையிலையா?

அதுக்காக உன்னை அப்படியே விட முடியுமா? அப்பா ஆசையும் நிறை வேற வேண்டாமா? தம்பியவை வழந்து விட்டாங்கள்தானே அவர்கள் உழைப்பார்கள்.. நீ கவலை படதா சரியா?

சரிம்மா என்றாள் இலக்கியா?

அம்மா அங்க பாருங்கோ அத்தை வாறங்கள்...

என்ன மச்சாள் இந்த நேரம்.. அவர் போனதுக்கு வந்தியள் அதுக்கு அப்புறம் வர வில்லை..

வாங்கோ வந்து இருங்கோ..

இல்லை இல்லை நான் இருப்பதர்க்கு வர வில்லை.. குமாருக்கு அடுத்த மாதம் கல்யாணம் இந்தியாவில் வைத்து இருக்குறம் அது சொல்லி போட்டு போகதான் வந்தன்..

மச்சாள் அவர் உங்களிடம் ஒன்று சொல்ல வில்லையா? அவர் சாகுற அன்று உங்கள் வீட்டுக்குதானே வந்தார்..

அவன் சொன்னன் அவன் ஆசை பட்டால் போதுமா நான் என்னோட மகனும் நினைக்க வேண்டமா?என் மகனுக்கு இலக்கியாவை புடிக்க வில்லை.. அவள் கறுப்பாம்.. அதனால் அவனுக்கு வெள்ளையா ஒரு பொண்ணு பார்த்து இருக்கன் மருமகள் நல்ல அழகு..

இல்லை மச்சாள் என்று ஏதோ சொல்ல எடுத்த தாயை இலக்கியா தடுத்தாள் அம்மா வேண்டாம்.. அத்தை சொல்லுறது சரிதான் அத்தானுக்கு நான் பொருத்தம் இல்லைதான்.. அத்தான் விருப்பம் போலவே நடக்கட்டும்..அத்தை நீங்கள் போயுட்டு வாங்கள்..அத்தானுக்கு என் வாழ்த்தை சொல்லி விடுங்கோ..

இந்த கவலையில் இருந்த இலக்கியாவின் தாய் புருசன் கவலை மகள் கவலை என்று தாங்க முடியாமல் போயு சேர்ந்தார்..

அக்கா நான் சொல்லுறதை கேள்.. நீ தம்பியை கூட்டி கொண்டு வவுனியா போயு அங்கு இருந்து இந்தியா போ...அங்கு இரு காம்பில்.. பிர்ச்சனை எல்லாம் முடிய இங்கு வரலாம்..

வருண் அப்ப நீ? உன்னை விட்டு நாங்கள் போறதா?

இல்லை அக்கா நீ முதலில் போ அப்புறம் நானும் வாறன்..

இலக்கியா முதலில் சம்மதம் சொல்ல வில்லை.. வருண் சம்மதிக்க வைத்தான்..

ஒரு வழியாய் அனுப்பியாசு என்று பெரு மூச்சு விட்டான் வருண்.. நம்ம நினைத்தது நடக்க போகுது என்று நினைத்தான்.. போரடா போக முதல் அக்காவுக்கு ஒரு கடிதம் எழுதுவம் என்று எழுத தொடங்கினான்..

என் அன்புள்ள அக்காவுக்கு..

முதலில் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்குறன்.. அக்கா நான் இங்கு இருந்து கொண்டு சொன்னால் நீங்கள் இருவரும் போயு இருக்க மாட்டியள்.. அதனால்தான் கடிதம் முலமாய் சொல்லுறன்.. அக்கா நாளை மலரும் நம் தமிழ்ழத்துக்காக நான் போராட போகுறேன்.... நீ இதை படித்து கவலை பட கூடாது..அக்கா நீயே ஜோசித்து பார் இன்று நம்ம அப்பா அம்மா நாளை வேறு ஒருவர்.. நம்மளை மாதிரி எத்தினை குடும்பம் சிதைவுண்டு போயுட்டு இருக்கு.. நம்மில் ஒருவர் ஆவாது நம் நாட்டுக்காக போராட போக வேணாமா? நம்ம அப்பா அம்மாவது பறுவாய் இல்லை ஆனால் எவ்வளவு சின்ன சிறுசுகள் இவர்களை எல்லாம் அழித்த சிங்கள நாய்களை நாம் அழிக்க வேணாமா? அக்கா நம்மளை மாதிரி இளையர்கள் எல்லாம் ஒடி போயுட்டால் நம்ம நாட்டை காப்பற்ற யார் வருவார்..

அக்கா நானும் படித்துக்கு முன்னுக்கு வர வேண்டும் என்றுதான் ஆசை பட்டன்..என் அக்கா தம்பியை நல்லா வைத்து இருக்கனும் என்றுதான் ஆசை கொண்டேன்.. நம்ம விதி நம்மளை இப்படியான நிலமைக்கு கொண்டு வந்து விட்டுது.. நம்மளுக்கு வேறு நாடுகளாலும் உதவி கிடைக்காது.. நாம்தான் நம் விடுதலை தேடி எடுக்கணும்... நான் இன்று நாட்டுக்காக போரடினால் நீயும் தம்பியும் நாளை நம் மக்களுக்காகவும் நம் நாட்டுக்காகவும் உழைக்கணும்..அக்கா உன் தம்பி போரட போயுட்டான் என்று கவலை கொள்ளாதை.. என்னை மாதிரி எத்தினை உனக்கு தம்பிமார் இன்று களத்தில் போராடி கொண்டு இருக்குறார்கள்.. நம்மளுக்காக உயிரை விட்ட மாவீரை நினைத்து பார்க்க வேண்டாமா?

அக்கா நீயே சொல்லு அவர்கள் யாருக்காக உயிரை விட்டார்கள்..அவர்கள் வாழ்வதுக்கா இல்லையே நம் நாடு நல்லா இருக்கணும் நம் மக்கள் நல்லா இருக்கணும் என்றுதானே அவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்குறார்கள்.. அக்கா நம் மக்கள் அழிந்து போக நாம் பார்த்துட்டு இருக்கலாமா? அப்படி இருந்தால் நாம் தமிழனா? ஏதாவது ஒரு விதத்தில் நாம் ஒவருவரும் உதவி பண்ண வேண்டாமா? அக்கா நாளை மலரும் தமிழ் ஈழத்துக்கு உன் தம்பியும் காரணம் என்று சந்தோசப்படு.. தம்பி தருணை கவனமாய் பார்.. என்றும் உங்கள் இனிய கனவுகளுடன் உன் தம்பி வருண்..

உன் அன்புள்ள தம்பி

வருண்..

இதை இலக்கியா வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவங்கள் அவளிடம் கடிதத்தை குடுத்தார்கள். . இலக்கியா படித்து விட்டு அழ தொடங்கினாள்.. தம்பி நீ தப்பு பண்ணி விட்டாய்.. உன்னுடன் என்னையும் கூட்டி சென்று இருக்கலாம்.. நான் சிங்கத்தின் கூண்டில் அக பட்டு விட்டடேன்.. நம்ம கடை குட்டி தருண் எங்க இந்த நாய்கள் கொண்டு போனர்கள் என்று தெரிய வில்லை... ஒரு நாள் தமிழ்ழம் மலரும் அப்ப நானும் தம்பி தருணும் இருப்பமோ தெரியாது..ஆனால் நாங்கள்தான் அக பட்டு விட்டோம்... நீயாவது நாட்டுக்காக போராடுறாய் என்று நினைத்து சந்தோசமாய் இருக்கு ..என்று எண்ணினாள்....

Posted

சுஜி

நமது வாழ்க்கையை படம்பிடித்து காட்டிய கதை .பாத்திரப்படைப்பு , கதை நகர்ந்தவிதம் அழகு.வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி உங்களால்

இப்படி எல்லாம் எழுத முடிகிறது. வெளிநாட்டில் உள்ள பல பிள்ளைகளுக்கு

தமிழில் பேசவே தெரியவில்லை அனால் நீங்கள் அழகாக எழுதுகிறீர்களே......

பாராட்டுக்கள் :icon_idea::blink::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சுஜி ......கதையின் கரு மிக அருமை காலத்துக்கேற்ற கதை . சில எழுத்து பிழைகள். நன்றாக தொகுத்து வழங்கினால்

மிக மிக அருமை மேலும் முனேற வாழ்த்துக்கள். ...

Posted

சம்பவம் கதை ஆகும் போது அதன் ஆழம் அதிகம் ஆகிறது. முயற்சிக்கு பாராட்டுக்கள் சுஜி.

Posted

சுஜி

நமது வாழ்க்கையை படம்பிடித்து காட்டிய கதை .பாத்திரப்படைப்பு , கதை நகர்ந்தவிதம் அழகு.வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி உங்களால்

இப்படி எல்லாம் எழுத முடிகிறது. வெளிநாட்டில் உள்ள பல பிள்ளைகளுக்கு

தமிழில் பேசவே தெரியவில்லை அனால் நீங்கள் அழகாக எழுதுகிறீர்களே......

பாராட்டுக்கள் :icon_idea::blink::lol:

நிகே நன்றி உங்கள் கருத்துக்கு.. நான் றொம்ப கஸ்ர பட்டுதான் எழுதினன்.. யாரும் ஏதும் குறை சொல்ல போறார்களே என்று பயந்து போயு இருந்தன்..இதில் ஒரு சில உண்மைகளும் இருக்கு.. எல்லாமாய் தொகுத்துதான் குடுத்தன்.. நன்றி நிகே.. என் கதையும் படித்து கருத்து சொன்னதுக்கு..

நன்றி சுஜி ......கதையின் கரு மிக அருமை காலத்துக்கேற்ற கதை . சில எழுத்து பிழைகள். நன்றாக தொகுத்து வழங்கினால்

மிக மிக அருமை மேலும் முனேற வாழ்த்துக்கள். ...

அக்கா நன்றி இன்னுமா எழுத்து பிழை இருக்கு.. ஐயோ நான் திருத்துறன் அக்கா என்னால் முடிந்த வரை.. நன்றி உங்கள் கருத்துக்கு அக்கா..

சம்பவம் கதை ஆகும் போது அதன் ஆழம் அதிகம் ஆகிறது. முயற்சிக்கு பாராட்டுக்கள் சுஜி.

சுகானி நன்றி உங்கள் பாரட்டுக்கு.. நான் நன்றாக என் தமிழை வழத்து கொண்டு கதைய விரிவாய் குடுப்பன்..

Posted

வணக்கம்.

நன்றி சுஜி அக்கா. எம்மினத்தின் இன்றைய அவலத்தைப் படம்பிடித்துக்காட்டும் அருமையான கதை பாராட்டுக்கள்.

Posted

வணக்கம்.

நன்றி சுஜி அக்கா. எம்மினத்தின் இன்றைய அவலத்தைப் படம்பிடித்துக்காட்டும் அருமையான கதை பாராட்டுக்கள்.

நன்றி அருஸ் உங்கள் கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக மிக அருமை மேலும் முனேற வாழ்த்துக்கள். ...

Posted

மிக மிக அருமை மேலும் முனேற வாழ்த்துக்கள். ...

புத்தன் நன்றி உங்கள் கருத்துக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.