Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சம் மறக்குமா

Featured Replies

எம் மண்ணில் எதிரிகள் அடியொட்ட சுவடா?

தமிழ் மக்கள் அறிவென்ன சாலவே குருடா?

(2)

தன் தாயை விற்றிட்ட கொடியோர்கள் வாழவா?

தலைவனின் ஆணை கொள் புலியே நீ ஆளவா . .

(2)

போடு போடு வீரநடை போடு

வெல்வோம் வெல்வோம் வீரநடை போடு

(2)

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

மானம் இருந்தால் தானே வாழ்வு

(2)

சங்கத் தமிழ் கண்டோன் தமிழ் வீரன் அல்லனா?

இமயத்தில் புலி நட்டோன் தமிழ் வீரன் அல்லனா?

(2)

ஈழத்தை மீட்பவன் தமிழ் வீரன் அல்லனா?

இனி வேறு புறம் ஒன்று நான் இங்கு சொல்லவா?

(2)

போடு போடு வீரநடை போடு

வெல்வோம் வெல்வோம் வீரநடை போடு

போடு போடு வீரநடை போடு . . . போடு போடு வீரநடை போடு . . .

இசைத்தட்டு: புதியதோர் புறம்.

வெளியீடு: பாடுமீன் கலை மன்றம் (மட்டக்களப்பு)

http://www.eelasongs.com/songs/puthiyathor...orpuram/02.smil

  • Replies 112
  • Views 29.6k
  • Created
  • Last Reply

சிங்களம் எங்களை கொன்று குவிக்கும்

தமிழர் சிந்திய குருதியில் எம் மண் சிவக்கும்

இங்கிவர் தீமையை தேசம் பொறுக்கும் - கொடும்

எதிரியை குதறிட புலிகள் கறுக்கும்.

(சிங்களம்)

பெற்றவள் வயிற்றினை குத்தி கிழிக்கும்

கையில் பிள்ளை கீழிட்டு காலில் மிதிக்கும்

பற்றிய இளைஞரை வெட்டிக் கொல்லும்

கண்ணில் பட்டவர் தங்களை சுட்டுத் தள்ளும்

(சிங்களம்)

கட்டிய மனைவியை கண்முன் கெடுக்கும்

பெண்கள் கற்பினை பெற்றவர் காண பறிக்கும்

மட்டில்லா உடைமையை கொள்ளை அடிக்கும்

வாழும் மனைகளை தீயிட்டு பாழில் எரிக்கும்

(சிங்களம்)

தாயகம் கலங்கிட தலைமை கொதிக்கும்

போரில் தன்மானம் காத்திட ஆணை கொடுக்கும்

தீயென வேங்கைகள் சீறிக் குதிக்கும்

பகைவர் செய்திடும் தீமையை மண்ணில் புதைக்கும்

(சிங்களம்)

படுகொலை பாவியர் எலும்பை நொறுக்கும்

புலி பாய்ந்துமே தமிழன்னை விலங்கை அறுக்கும்

விடுதலை முரசினி விண்ணில் ஒலிக்கும்

பட்ட வேதனை அகன்றிட ஈழம் சிரிக்கும்.

(சிங்களம்)

இசைத்தட்டு: புதியதோர் புறம்.

வெளியீடு: பாடுமீன் கலை மன்றம் (மட்டக்களப்பு)

http://www.eelasongs.com/songs/puthiyathor...orpuram/03.smil

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே

மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

மங்களம் தங்கிடும் நேரத்திலே

எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)

பாசத்தில் எங்களின் தாயானான்

கவி பாடிடும் மாபெரும் பேரானான்

தேசத்தில் எங்கணும் நிலையானான்

விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்

பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்

தன்னின மானத்தை தான் மதித்தான்

பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)

இங்கொரு தாயகம் மூச்சென்றான்

தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்

வந்திடும் படைகளை வீச்சென்றான்

புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)

விடுதலைபுலிகளின் பலமானான்

தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்

படுகளம் மீதிலோர் புலியானான்

பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)

என்றுமே எங்களின் தளபதியே

நீ எங்களின் வானத்து வளர்மதியே

இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்

தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)

இசைத்தட்டு - களத்தில் கேட்கும் கானங்கள்

  • தொடங்கியவர்

இந்த பாட்டு என்னட்ட இருக்கே :lol:

வரிகளுக்கு நன்றி சிறீ...எனக்கு மனப்பாடம்...:lol:

இந்த பாட்டு என்னட்ட இருக்கே :lol:

வரிகளுக்கு நன்றி சிறீ...எனக்கு மனப்பாடம்...:lol:

ஓர் யாழ்கள உறவு இந்தபாடலின் வரிகளை தருமாறு கேட்டு இருந்தார் அவரின் விருப்பத்தின் பெயரிலே இந்தபாடலை தந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடலை எங்கு கேட்கலாம்?

நெய்தலில் கேக்கலாம். அதில் உள்ள 9 பாடல்கள். விபரம். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்"

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் யாழ்கள உறவு இந்தபாடலின் வரிகளை தருமாறு கேட்டு இருந்தார் அவரின் விருப்பத்தின் பெயரிலே இந்தபாடலை தந்தேன்

இப்பாடல் எனக்குத் தெரிந்தாலும், எனக்குப்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்றென்பதினால் சிறியிடம் எனக்குப்பிடித்த பாடல்கள் சிலவற்றினை பெயர்கள் குறிப்பிட்டு எழுதும் படி தனிமடலில் கேட்டிருந்தேன். நன்றிகள் சிறி

நெய்தலில் கேக்கலாம். அதில் உள்ள 9 பாடல்கள். விபரம். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்"

முன்பு 1993 இல் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் எங்கள்தேசம் என்னும் பெயரில் எங்கள்தேசம் மற்றும் நெய்தல் இரண்டும் ஒன்றாக சேர்த்து வெளியிடப்பட்ட ஒலித்தட்டு(இதுதான் தமிழீழ பாடல்களை கொண்ட முதலாவது (CD)ஒலித்தட்டு) 2005களில் நெய்தல் தனித்து மீள்வெளியீடு செய்யப்பட்டது.

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த

பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்

பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

முருகனுக்கே அவன் நிகரானவன் (எங்கள்)

வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்

வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்

வேல் எடுத்தே அவன் பகை முடித்தான்

தமிழ் பகை முடித்தான்

பழம் தமிழ் பகை முடித்தான்

துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்

துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்

துவக் எடுத்தே இவன் துவக்கி வைத்தான்

படை துவக்கி வைத்தான்

புலிப்படை துவக்கி வைத்தான் (எங்கள்)

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக

அடிமையின் அடிமைக்கும் அடிமைகளாக

வாழ்ந்தவர் வேதனை முடிக்க வந்தான்

நம் தமிழின எழுச்சியை முடுக்க வந்தான்

மேடையில் பேச ஏறியதில்லை

தேர்தல் சீற்றிலும் இறங்கியதில்லை (மேடையில்)

தாயை அதிகம் பார்த்தவன் இல்லை

தாயை அதிகம் பார்த்தவன் இல்லை

தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை

தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த

முருகனுக்கே அவன் நிகரானவன்

முருகனுக்கே அவன் நிகரானவன்

இசைத்தட்டு - ஒளி முகம் தோறும் புலி முகம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா

நீ நாசவேலை செய்த பின்னர் வருந்துவாயடா] (2)

அடர்ந் காட்டில் எரியும் தியாக நெருப்புத்தானடா (2)

உனை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும் தானடா (2)

[எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய்

தமிழீழ மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய்] (2)

கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் (2)

நம் களத்து வீரர் போகும் போது தலையுமாட்டினாய் தலையுமாட்டினாய்

[தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய்

உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூடினாய்] (2)

நம்பி நின்ற எங்களிற்கு நஞ்சை ஊட்டினாய் (2)

புலிக் காளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் கம்பி நீட்டுவாய்

[வீதி எங்கும் சாவினோடு மக்கள் ஓடுறார்

புலி வீரர் நின்று எதிரியோடு யுத்தமாடுறார்] (2)

நீதியற்ற பகைவனோடு கூட்டம் போடுறாய் (2)

அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய் ஆட்டமாடுறாய்

[பெற்றதாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி

நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி] (2)

அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் (2)

எம் அண்ணன் வந்து உங்களிற்குத் தீர்ப்புக் கூறுவார் தீர்ப்புக் கூறுவார்

பாடல் ஒலிவடிவில்

நன்றி தமிழர்இணைப்பகம்.

நெய்தலில் கேக்கலாம். அதில் உள்ள 9 பாடல்கள். விபரம். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்"

ஆகா... இந்த பாடல்களை கேட்டு எத்தனை வருடங்கள் ஆகி விட்டன... நன்றி கந்தப்பு மீண்டும் நினைவு படுத்தியமைக்காக...

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்

எங்கள் தலைவன் பிறந்தான்

எங்கள் பகைவன் ஓடிப் பறந்தான் (ஒரு தலைவன்)

மண்ணை மறவா என் தலைவன் அவன் எங்கள்

தலைவன் மண்ணில் வேரூன்றி நின்ற பனை

அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில்

அவன் அனலைப் பொழிகின்ற ஏயுகணை (மண்)

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன்

பிறந்தான் பிறந்தது புலிகள் படை (2) (ஒரு தலைவன்)

நெஞ்சு நெருப்பாகி நிமிர்ந்த தமிழீழம்

நிலத்தை உருவாக்கிக் காட்டியவன்

பிஞ்சு மழலைக்கும் பகைவர் நஞ்சுடல்

பிழக்கும் தமிழ் வீரம் ஊட்டியவன் (நெஞ்)

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன்

பிறந்தான் பிறந்தது புலிகள் படை (2) (ஒரு தலைவன்)

வாழத் துடித்த தமிழ் இனத்தின் வதை தீர்த்து

வரலாறு படைத்த வழி காட்டி

ஈழத் தமிழ் மண்ணின் தலைவன் அவன் எங்கள்

இனத்தை கரை சேர்த்த படகோட்டி (வாழ)

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன்

பிறந்தான் பிறந்தது புலிகள் படை (2) (ஒரு தலைவன்)

மானத் தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில்

வான் படை கண்ட முதல் தமிழன்

தானைத் தலைவன் உலகெங்கும் வாழ்தமிழர்

தாகம் தீர்க்க வந்த தனித்தலைவன் (மான)

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன்

பிறந்தான் பிறந்தது புலிகள் படை (2) (ஒரு தலைவன்)

இசைத்தட்டு - "ஒரு தலைவனின் வரவு"

http://www.eelasongs.com/songs/oruthalaiva...nvaravu/01.smil

  • 2 weeks later...

இது தாண்டா கடைசி அடி

எதிரி கதையை இன்றே முடி

பிடியடா தம்பி ஒரு பிடி

பிறக்கும் தமிழீழம் பறக்கும் புலிக்கொடி (இதுதாண்டா)

வலிமை உடைய படை புலிகள் படைதாண்டா

வாடா பகைவனை நொருக்குவோம்

கொலைஞர் படை சிதற தலைகள் விழ வாடா

கொடியர் உடல் தேடிப் பொறுக்குவோம் (இதுதாண்டா)

சீறு புயலாகி வீறு கொண் எழடா

சிங்களம் அதிர தாக்கடா

நூறு படை வரலாம் நூறு தடை வரலாம்

நொடியில் பகை தூள் தூள் ஆக்கடா (இதுதாண்டா)

உரிமை இழப்போமா தமிழர் உயிர் ஈழம்

ஒருபோதும் ஒடுங்கிக் கிடக்காது

நரிகள் விளையாட்டு புலிகள் தமிழ் மண்ணில்

நடக்குமா இங்கு நடக்காது (இதுதாண்டா)

அடியடா ஓங்கி அடியடா - நமது

அன்னை மண் உயிரில் மேலன்றோ

இடியும் எடி எழடா விடியல் எழ எழடா

வெற்றித் தோழ் தமிழன் தோளன்றோ (இதுதாண்டா)

இசைத்தட்டு - "ஒரு தலைவனின் வரவு"

  • 3 weeks later...

eelam01100001.jpg

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்

ஆஆஆஆஆஆ.........

[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2

எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்

[மறைந்திடுமோ உம் நினைவு

அழிந்திடுமோ உம் கனவு] 2

விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்

விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்

ஆஆஆஆ........

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்

தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2

விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்

[எரிமலையாய் நாம் எழுவோம்

விடுதலைக்காய் தலை தருவோம்] 2

விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்

விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்

ஆஆஆஆ.........

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்

புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்] 2

பூகம்பப் பொறியாய் எம் மனதினில் பதிந்தீர்

[கடமையினை நாம் மறவோம்

பயிற்சியினை நாம் பெறுவோம்] 2

தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்

தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்

ஆஆஆஆ.......

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்.....

http://www.eelasongs.com/songs/maveerarpuk...aaduvom/04.smil

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

காற்றும் ஒருகணம் வீச மறந்தது

கடலும் ஒரு நொடி அமைதியாய் கிடந்தது

தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது

தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது

தீயினில் எரியாத தீபங்களே - எம்

தேசத்தில் நிலையான வேதங்களே

மண்ணினில் விதையான முத்துக்களே - நாம்

மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் - புலி

நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

கடலினில் கடல்புறா பயணங்கள் போனது

சிறி லங்கா இராணுவம் பொறிவைக்க லானது

குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்

கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்

இளமையில் சருகாகிப் போனவரே - எம்

இதயத்தில் உருவான கோவில்களே

அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ்

அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார்

ஆகிய வேங்கைகள் அனலிடை போயினர்

காவிய நாயகர் களப்பலி ஆகினர்

மக்களுக்காக கடல் சென்றீரே - மண

மாலைகள் வாட முன்னர் போனீரே

எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது

எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது

இந்திய அரசது ஏன் துணை போனது

இடியுடன் பெருமழை ஏன் உருவானது

கண்களில் நீர் சுமந்து நிற்கின்றோம் - நீர்

காட்டிய பாதையிலே செல்கின்றோம்

இளமையில் சருகாகிப் போனவரே - எம்

இதயத்தில் உருவான கோவில்களே

முடிசூடும் தலைவாசல்

வாடா பகையே வாடா - அட

இன்னும் என்ன திமிராடா

போராட்டம் போராட்டம்

உன்னை முடிப்போம் - ஈழம்

உந்தன் வீட - அட

இன்னும் குந்தியிருப்பாயா - எங்கெங்கும்

எங்கேங்கும் சொல்லியடிப்போம்.

நீ எங்களிடம் தந்திரமாய் நடிக்காதே

நீ எண்ணுவது எள்ளளவும் நடக்காதே - புலி

சொல்லுவது எப்போழுதும் தவறாதே - அதை

செய்கையிலே இன்னும இன்னும் அறிவாயே!

வாடா பகையே வாடா - அட

இன்னும் என்ன திமிராடா

போராட்டம் போராட்டம்

உன்னை முடிப்போம் - ஈழம்

உந்தன் வீட - அட

இன்னும் குந்தியிருப்பாயா - எங்கெங்கும்

எங்கெங்கும் சொல்லியடிப்போம்.

நீ வா வா வா இன்னும்

வாங்கிக்கட்ட வா - அட

ஏன் ஏன் ஏன் வாழ ஆசையில்லையா - நீ

பார் பார் பார் எங்கள் வீரம் சொல்ல வா - அட

தீ தீ தீ வாழும் தேசம் அல்லவா - கடல்

நீரில் பெரும் பலமென கடல் புலி

படகுகள் விரைந்து வரும் - நெடு

வானில் இனி தழிழரின் வான் கலம்

அதிசயம் நடத்தி வரும்

விடுதலை எம்மைச் சேராமல்

வெடிகளின் ஓசை நிற்காது

தமிழரின் கையில் சிக்காமல்

எந்தக் குறியும் தப்பாது - (2)

வாடா பகையே.....

நீ போ போ போ வேறு வேலையில்லையா -அட

உன் உன் உன் சொந்தம் தேவையில்லையா- அட

யார் யார் யார் புலி என்று கூறடா- அது

எம் எம் எம் தமிழ் மக்கள் தானடா

களம் யாவும் பல முனைகளில்

புலிகளின் படையணி தடையுடைக்கும்

தமிழீழம் தன் இலக்கினை

அடைந்திடும் வரையினில் அடி கொடுக்கும்

தமிழரின் மண்ணைத் துரோகத்தால்

எதுவும் செய்திட முடியாது - எங்கே

எப்படி நின்றாலும் உயிரும் உடலில் மிஞ்சாது

தமிழரின் மண்ணைத் துரோகத்தால்

எதுவும் செய்திட முடியாது - எங்கே

எப்படி நின்றாலும் உயிரும் உடலில் மிஞ்சாது

வாடா பகையே வாடா -அட

இன்னும் என்ன திமிராடா

போராட்டம் போராட்டம்

உன்னை முடிப்போம் - ஈழம்

உந்தன் வீட - அட

இன்னும் குந்தியிருப்பாயா - எங்கெங்கும்

எங்கேங்கும் சொல்லியடிப்போம்.

நீ எங்களிடம் தந்திரமாய் நடிக்காதே

நீ எண்ணுவது எள்ளளவும் நடக்காதே - புலி

சொல்லுவது எப்போழுதும் தவறாதே - அதை

செய்கையிலே இன்னும இன்னும் அறிவாயே!

வாடா பகையே வாடா -அட

இன்னும் என்ன திமிராடா

போராட்டம் போராட்டம்

உன்னை முடிப்போம் - ஈழம்

உந்தன் வீட - அட

இன்னும் குந்தியிருப்பாயா - எங்கெங்கும்

எங்கேங்கும் சொல்லியடிப்போம் - நாம்

எங்கேங்கும் எங்கேங்கும் சொல்லி அடிப்போம்!

எங்கேங்கும் எங்கேங்கும் சொல்லி அடிப்போம்!!

இன்று தான் இந்தக் களத்தைக் கண்டேன். ஹ_ம்..... அருமையாயுள்ளது தொடரட்டும். அசிங்க சினிமாப் படல்களை விட்டு தேடித் தேடி கேட்போம் எமது ஈழகானங்களை.

ஈழத்திலிருந்து

ஐhனா

பாடல்களை தரும் போது, படியவர்,இயற்றியவர், இசைதொகுப்பு போன்றவற்றை தந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் எமது மாவீரர் கலைஞர்களான சிட்டு போன்றவர்களுக்கு தனியான ஒரு Website, அவர்களின் பாடல்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் படங்களுடன் உருவாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீண்ட நாட்களாக ஒரு பாடலை தேடுகிறேன் .ஆனால் கிடைக்குதில்லை யாருக்கும் தெரிந்தால் இணைப்பீர்களா?

புதுவை அண்ணனின் வரிகள்

நாயே உனக்குமொரு நாடா எச்சில் நாடும் உனது வரலாறா?

காட்டிக் கொடுப்பதும் தொண்டா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புரட்சியாளர்கள் என்றும் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்"

"கண்ணீரில் காவியங்கள், செந்நீரில் ஓவியங்கள்" என்ற சிட்டுவின் பாடல் யாருக்காவது நினைவிருக்கா? எங்கே தரயிறக்கலாம்?

தூக்கு மரத்து கயிறும் துச்சம்

துப்பாக்கி முனையும் இவர்க்கு அச்சம்

காக்கும் கரங்கள் இவர்கள் கரங்களே

கரும் புலிகள் விடுதலை உரங்கள்!

கரும் புலிகள் விடுதலை உரங்கள்!!

தூக்கு மரத்து......

மழையடித்த ஓய்ந்த பின்னும்

தூறல் ஓயவில்லை

மலை நிகர்த்த உங்கள் தியாகம்

மகிமை போக வில்லை

மழையடித்து ஓய்ந்த பின்னும்

தூறல் ஓயவில்லை

மலை நிகர்த்த உங்கள் தியாகம்

மகிமை போக வில்லை

நிலை இல்லாத வீர வேள்வி தியாகி யாகினீர்

நிலை இல்லாத வீர வேள்வி தியாகி யாகினீர்

அலைகடலால் அன்னை மடியில் அமைதியாகினீர்

அலைகடலால் அன்னை மடியில் அமைதியாகினீர்

தூக்கு மரத்து.....

உதய திசையில் உயர்ந்த கரிய மேகம் கண்டவர்

உதைத்து விரட்ட உபகரணம் காவிச் சென்றவர்

உதய திசையில் உயர்ந்த கரிய மேகம் கண்டவர்

உதைத்து விரட்ட உபகரணம் காவிச் சென்றவர்

இதயத் திரையில் ஈழம் என்னும் இலக்கைக் கொண்டவர்

இதயத் திரையில் ஈழம் என்னும் இலக்கைக் கொண்டவர்

இமயத்தையும் விஞ்சி உயர்ந்து எரியும் விளக்குகள்

இமயத்தையும் விஞ்சி உயர்ந்து எரியும் விளக்குகள

தூக்கு மரத்து....

இவர் மறைந்த செய்தி தாங்கி அலை ஒலிக்குது

இவர் உறைந்த இதயங்களோ பரிதவிக்குது

இவர் மறைந்த செய்தி தாங்கி அலை ஒலிக்குது

இவர் உறைந்த இதயங்களோ பரிதவிக்குது

இவர் நடந்த பாதைகளில் தடம் இருக்குது

இவர் நடந்த பாதைகளில் தடம் இருக்குது

இவர் பெயர்கள் சொல்லிக் புலி கொடி பறக்குது

இவர் பெயர்கள் சொல்லிப் புலி கொடி பறக்குது.

தூக்கு மரத்து கயிரும் துச்சம்

துப்பாக்கி முனையும் இவர்க்கு அச்சம்

காக்கும் கரங்கள் இவர்கள் கரங்களே

கரும் புலிகள் விடுதலை உரங்கள்!

color=cyan]www.supinthan.tku

ஈழத்திலிருந்து

ஐானா

  • 1 month later...

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்

பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்

தடை நீக்கி வழி காட்டும் தலைவன்

வந்த பகை வென்று முடிகொண்ட தலைவன். (ராஜ கோபுரம்)

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு

ஆஆ...ஆஆ....ஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு (ராஜ கோபுரம்)

கண்ணென தமிழரை காக்கும் காப்பரனே

கன்னித்தமிழுக்கு வாய்த்த கதிரவனே

கோடை காலத்து குளிர்விக்கும் நிலவே

கொட்டும் மழை நாளில் குடையான அழகே (ராஜ கோபுரம்)

குளிரான இளம் காலை என நினைந்தவனே

நெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே

ஓயாது உழைத்திடும் அலைஆகும் கடலே

தமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே. (ராஜ கோபுரம்)

இசைத்தட்டு - "தாய்நிலத்து வேலி"

மீண்டும் இந்தப் பகுதியை தொடரலாமே யாழ்கள உறவுகளே.

Edited by sri

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவரின் பிறந்த நாள் அன்று எனக்குப்பிடித்த பாடல்களில் ஒன்றான ராஜ கோபுரம் எங்கள் தலைவன் என்றபாடலினை யாழில் இணைத்த சிறிக்கு எனது பாராட்டுக்கள்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.