Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சம் மறக்குமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுவெட்டு - இருப்பாய் தமிழா நெருப்பாய்

இயற்றியவர் - காசி ஆனந்தன்

தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத்தமிழ் வாயால் 'மம்மி' என்றழைத்தாய்

அழகுக்குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்

என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்

இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை

'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன் போக்கை

இறவை 'னைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை

இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?'

வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?'

துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?'

தொலையாதா நம் தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரெண்டு' என்பதா?

கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?

கண்டவனை எல்லாம் 'சார்' என்று சொல்வதா?

கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா?'

பாட்டி உதட்டுல என்ன 'லிப்ஸிடிக்கா?'

வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'

வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாடலைக் கேட்க இங்கே செல்லவும்

http://www.eelasongs.com/content/view/33/12/

Edited by கந்தப்பு

  • Replies 112
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடலினைப்பாடியவர் தேனிசை செல்லப்பா

  • தொடங்கியவர்

நல்ல வரிகள்..உறைக்குமா??

  • 4 months later...

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்

ஆனா எழுதிய மண்ணல்லவா

இன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள்

இசைக்கின்ற பண்ணல்லவா

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

எங்கு வாழ்ந்தாலும் எனது தமிழ் நெஞ்சம்

இயங்கும் என் தாயின் எண்ணத்திலே

அங்கு தமிழினம் துடிக்கும் பொழுதெல்லாம்

ஆறு பாயுமென் கன்னத்திலே

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

எதிரி எங்கள் தாய் மண்ணை அழித்ததாய்

இரவு பகல் நூறு கதை கட்டுவான்

அதிரும் புலிகளின் குண்டு வெடியோசை

அறிந்து தமிழ்பிள்ளை கை தட்டுவான்

அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

பகைவர் பாயலாம் உடல்கள் சாயலாம்

எனினும் தமிழ் ஈழம் பணியாது

அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என்

அன்னை மண் பாசம் தணியாது

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

பாடல் வரிகள்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

குரல்: தேனிசை செல்லப்பா

Edited by Norwegian

இந்த அழகிய பாடல் வந்த இசைத்தட்டின் பெயர் என்ன? இணைப்பிற்கு நன்றி! எங்கோ வானொலியில் இந்தப் பாடலை கேட்டது போல் உள்ளது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழக்கடல் எங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று இப்பாடல எங்கு கேட்கமுடியும்? இப்பாடல் எந்த இசை தட்டில் இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

தாயகப்பாடல்களை பின்வரும் இணைப்பில் எழுதுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=5444

வணக்கம்!

அழகான பனைமரம் பாடலை நான் வானொலியில் கேட்டுள்ளேன், அதை ஒன்லைனில் கேட்க விரும்புகின்றேன், ஆனால அதற்கு இசைத்தட்டின் பெயர் தெரிந்திருக்கவில்லை, உங்கள் மடலிற்கு, மற்றும் தகவலுக்கு நன்றி!

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!

அழகான பனைமரம் பாடலை நான் வானொலியில் கேட்டுள்ளேன், அதை ஒன்லைனில் கேட்க விரும்புகின்றேன், ஆனால அதற்கு இசைத்தட்டின் பெயர் தெரிந்திருக்கவில்லை, உங்கள் மடலிற்கு, மற்றும் தகவலுக்கு நன்றி!

http://www.eelasongs.com/content/view/36/12/

இணைப்பிற்கு மிக்க நன்றி! ஈழாசோங்ஸ்.கொம் மிக நன்றாக உள்ளது, இந்த இணையத்தை இவ்வளவு அழகாக பொறுப்புடன் நடாத்துவது யார்?

ஆழக்கடல் எங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று இப்பாடல எங்கு கேட்கமுடியும்? இப்பாடல் எந்த இசை தட்டில் இருக்கிறது?

ஏற்கனவே இது தொடர்பான இணைப்பை சென்றவருடம் இணைத்து இருந்தேன்.

கீழ்வரும் இணைப்பிற்கு செல்லவும்.

http://www.yarl.com/forum3/index.php?showt...=5444&st=60

  • 6 months later...

பார் பார் வானில் படையணி

தலைவன் உயிர்ப்பினில் பெரும்பணி

தமிழீழப் படைகளின் முன்னணி

போரினை வென்றிடும் புலியணி (பார் பார்)

தரைமேல் பறந்திடும் கடல்மேல் பறந்திடும்

தமிழீழ எல்லையை காத்திடும்

தரைமேல் பறந்திடும் கடல்மேல் பறந்திடும்

தமிழீழ எல்லையை காத்திடும்

எங்கள் தாயகபூமியை அழித்திட நினைக்கும்

அன்னிய படையினை விரட்டிடும் படையணி (பார் பார்)

திடீரென பறந்திடும் சிங்கள கிபீரினை

கிலிகொள்ள வைத்திடும் வான்புலி

திடீரென பறந்திடும் சிங்கள கிபீரினை

கிலிகொள்ள வைத்திடும் வான்புலி

தமிழ் உரிமையை பறித்திட உலவிடும்எதிரியை

உடைத்தே நொருக்கிடும் வான்அணி (பார் பார்)

வெற்றியும் எமதே வீரமும் எமதே

செந்தமிழ் ஈழமும் எம்மிடமே

வெற்றியும் எமதே வீரமும் எமதே

செந்தமிழ் ஈழமும் எம்மிடமே

யாழ் சுற்றிய சிங்கள கும்பலை

அழித்திட முப்படை படையணி புறப்படுமே (பார் பார்)

பாடல் "வானுயரும் புலி வீரம்" ஒலிப்பேளை

Edited by சிறி

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

தந்தானானே தாரேனானா தானா ஏய்

தந்தானானே தாரேனானா தானா....

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்

கவிதைகள் பொய் ஆகும்

அது இரும்பினிலில்லை அரும்பிய

முல்லை என்பதே மெய் ஆகும்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே

யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்

சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்

வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்

அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை

யாருக்கு இங்கே இது தெரியும்

கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென

தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்

இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர்

அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

பாடல் இசைத்தட்டு: கரும்புலிகள் பாகம் 2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.