Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

4ஆம் கட்ட ஈழப்போர்

Featured Replies

அன்பான புலம்பெயர் உறவுகளே!

இன்று நாம் நின்றுகொண்டு இருப்பது 4ஆம் கட்ட ஈழப்போர். இன்னமும் சிங்களமும் சரி, தமிழ் மக்களில் சிலரும் சரி உண்மையான போரினை, போரின் தன்மையை உணரத் தவறிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நான்காம் கட்ட ஈழப்போர் எது? எதனைச் சார்ந்தது என்பதை நீங்கள் உற்று நோக்கினால் இப்போரின் தன்மை மிகத் தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.

இதுவரை நடந்த போர்கள் இராணுவச் சமநிலையை பேணுவதற்கும், இராணுவப் பலத்தினைக் காட்டுவதற்குமே நடாத்தப்பட்ட போர்களாகும், ஆனால் இம்முறை நடைபெறும் இந்தப் போரானது இராணுவ பலத்திலோ, இராணுவச் சமநிலையை நிலைநாட்டவோ அவசியமற்றது, அதனை விடுதலைப் புலிகள் ஏற்கனவே போர்களின் மூலம் நிரூபித்திருக்கின்றார்கள். அப்படியானால் இம்முறை போராட்டம் எதிலே தங்கியுள்ளது? இந்தப் போராட்டத்தின் வெற்றி எதிலே தங்கி உள்ளது என்று உற்று நோக்கினீர்களானால் இந்தப் போரானது அரசியல் பொருளாதாரப் போர் என்றே சொல்லவேண்டும்.

சமூக விழுமியங்களுக்கான மதிப்புக்கள் வழங்கப்பட்டு, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற ஓர் போர் என்ற உண்மையை தமிழர்களாகிய நாங்கள் எல்லோரும் உணர்ந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். ஆயுதப் போராட்டம் என்பது நாம் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, நம்மீது திணிக்கப்பட்டது. இதனையே விடுதலைப் புலிகள் அடிக்கடி சொல்லி வருகின்றார்கள். ஆயுதப் போராட்டத்தை விரும்புபவர்களும் அவர்களே அல்ல. இதுதான் உண்மை.

நிலங்கள் இழக்கப்படுவதன் மூலமோ, அல்லது இராணுவச் சமநிலையை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டத் தவறுவதன் மூலமோ போரின் வெற்றி என்பது தீர்மானிக்கப்படப்போவதல்ல. இன்னொரு முறை இராணுவச் சமநிலையை நிரூபிப்பதன் மூலம் என்ன சாதிக்க முடியும்? மீண்டும் சிங்களம் சமாதானம் ஏற்படுத்தும், ஆட்சி மாறும், தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும், மீண்டும் ஒருமுறை சமாதான ஒப்பந்தத்தை மீறிப் போர் தொடுக்கும், அப்பாவித் தமிழரைக் கொன்றொழிக்கும் இதுவே நடக்கப் போவது.

இம்முறை போரானது முடிவடையவேண்டும், எமக்கான தனித் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்றால் இராணுவ வழித் தீர்வின் மூலம் சாதிக்கமுடியாது என்றில்லை ஆனால் அப்போராட்டம் மீண்டும் நீண்டு செல்லும். எமது அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்படும். இதனால் இழப்பு யாருக்கு ஏற்படப்போகின்றது? தமிழர்களான எமக்குத்தான். சிங்களதேசம் ஒட்டு மொத்தமாகப் போரை வெறுக்கவேண்டும். சிங்களதேசம் தானாகப் போரை நிறுத்தவேண்டும். வெற்றி மாயையில் இருக்கும் சிங்களம் தோல்வியாற் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்றால் ஒரே வழி சிங்களத்தின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தினையும் வீழ்த்துதல். அரசியல் வழியில் எம்மைப் பலப்படுத்துதல்.

இதனை உணர்ந்துகொண்ட சிங்களதேசம் இப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் அரசியற் பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வனைக் கொன்றது. காரணம் அவர் இருந்திருந்தால் அரசியல் வழியில் போராட்டத்தை நகர்த்திவிடுவார் என்பதற்குப் பயந்துதான் அவரைக் கொன்றது. அதனை இப்போது திரு.நடேசன் அவர்கள் திறம்பட முன்னெடுத்து வருகின்றார்.

போராட்டத்தின் ஆயுத பலத்தின் மூலம் கிடைக்கும் வெற்றியானது என்றுமே நீண்டு செல்லும் போராட்டங்கள். உதாரணமாகப் பார்த்தால் பாக்கிஸ்தான் -இந்தியா, ஸ்ரேல்- பாலஸ்தீனம் இன்னும் எத்தனையோ சொல்லலாம். ஏன் அமெரிக்கா ஈராக் மீது மேற்கொண்டது கூட நீண்டு செல்லும் போராட்டமாகவே காணப்படுகின்றது. இன்று இலங்கை அரசினை எடுத்துக்கொண்டால் வாங்கப்பட்ட கடன் தொகை மிகவும் அதிகரித்துவிட்டது. கையிருப்பில் பணமின்றி, சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியும், ஏற்றுமதி வர்த்தகத்தின் ஓரளவு நிலையிலுமேயே தங்கியுள்ளது.

வெற்றுக்காரணங்கள் கூறிக்கொண்டு மீண்டும் தமிழினத்தின் விடிவை மந்தமாக்காது ஒட்டுமொத்த சிங்கள தேசத்தின் தயாரிப்புக்களையும் புறக்கணிப்பதன் மூலம் சிங்களதேசத்தை பாரிய நெருக்கடிக்குள் தள்ளமுடியும். இப்போது விமானசேவை, தேயிலை, மற்றும் சில உற்பத்திப் பொருட்களுக்கான எதிர்ப்பையே காட்டிவருகின்றீர்கள். உண்மையிற் பார்த்தால் இன்று சிங்கள அரசை பெருமளவு தக்கவைத்துக்கொண்டு இருக்கும் ஆடைக் கைத்தொழில் என்பதில் எம்மவர்கள் இன்னமும் அக்கறை காட்டவில்லை. அமெரிக்காவின் வீழ்ந்த பொருளாதாரத்தினால் அமெரிக்க ஆடை உற்பத்தி பாரியளவு வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து பல நாட்டுக்கும் உடனடியாக அதிகரிக்கப்பட்டது சிங்களத்தின் ஆடைக் கைத்தொழில்.

இதனை புலம்பெயர் நாடுகளில் இறக்குமதி செய்துகொண்டு இருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே, அத்தோடு அதனை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதுவும் ஓர் பாரிய சிக்கலானது ஆகும் ஏனெனில் அங்கே குறிப்பிடப்படும் உற்பத்தி நாட்டின் பெயர் வேறாக இருப்பது காரணம் தயாரிக்கும் நிறுவனம் நிறுவப்படும் இடம் வேறு, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக தயாரிக்கும் இடமே இலங்கையாக உள்ளது.

அடுத்து எமது அரசியல் ரீதியிலான போராட்டம். இதுவே இன்று வெற்றிகரமாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள். இவற்றை இன்னமும் தீவிரப்படுத்தவேண்டும், முதல்முறையாக விடுதலைப்புலிகள் என்ற பெயர் ஐ.நா சபையில் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றது என்றால் நீங்கள் எல்லோரும் செய்துகொண்டுவந்த தொடர்ச்சியான போராட்டங்கள்தான் காரணம். இன்னமும் ஓங்கி ஒலிக்கவேண்டும், எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளும் ஆதரிக்கவேண்டும் என்றால் எம்மவர்களால் மேற்கொள்ளப்படக்கூடிய போராட்டங்கள் இன்னமும் விரிவுபடுத்தப்படவேண்டும்.

சிங்களதேசத்தின் இக்கட்டு நிலை என்பது பாரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். இன்று சர்வதேசம் எங்கும் கடன்வாங்கி போர்நடாத்தும் சிங்களதேசம் பாதிக்கும் மேற்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தவேண்டிய ஓர் இக்கட்டு நிலைக்குள்ளேயே உள்ளது. அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிகூட போருக்கு செலவிடப்பட்டது. இதனால் அபிவிருத்தி மந்தமடைந்தது. இன்று தனிநபர் கடன்சுமை என்பது ஒவ்வொரு இலங்கையின் குடிமக்களும் செலுத்தி முடிக்கமுடியாத நிலையை அடைந்துவிட்டது. இதிலே தமிழீழம் என்று ஒருநாடு உருவாக்கப்பட்டால் தமிழர்கள் இலங்கை அரசிடமிருந்து பிரிந்துசெல்லும் பட்சத்தில் இலங்கை அரசினால் அதாவது சிங்களவர்களினால் இரட்டிப்புச் சுமை தாங்கவேண்டி ஏற்படும் நிலைக்குள் சிங்களதேசம் தள்ளப்படும்.

இதன்மூலம் சிங்களதேசம் மீண்டும் மீளமுடியாத கடன்சுமைக்கு ஆளாகி ஆட்சி அதிகாரம் இழந்து, சட்டம் நீதி சீர்குலைந்து சிங்களமே சிங்களத்தினை அழிக்கும் நிலை உருவாகும். தமிழர்களே, இனியும் காத்திருக்கவேண்டாம், ஒட்டுமொத்தமாக சிங்களதேசத்திடமிருந்து எமது தமிழீழத்தின் விடிவு என்பது புலம்பெயர் மக்களின் கைகளில்தான் உள்ளது. உங்கள் போராட்டங்களின் மூலமே இவை தீவிரப்படுத்தப்படும். இதை உணரத்தொடங்கியுள்ள சிங்கள நாளேடுகள் அண்மைக்காலமாகச் சொல்லிவருவது 5ஆம் கட்ட ஈழப்போருக்காக விடுதலைப்புலிகள் புலம்பெயர்நாடுகளில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றார்கள் என்று, 5ஆம் கட்ட ஈழப்போர் என்பது இருக்கவே கூடாது. 4ஆம் கட்ட ஈழப்போரில் நாம் தமிழர் அனைவரும் சேர்ந்தாற்போதும் தமிழீழம் வென்றெடுக்கப்படும். இதுதான் இன்றைய காலத்தில் தேவைப்படும் போராட்டம்.

நிலங்கள் இழக்கப்படுகின்றன, என்ற கவலையை விடுங்கள் அவை மீண்டும் எமக்கு தமிழீழ அங்கீகாரத்தோடு, எமது நிலம் என்ற உரிமையோடு கிடைக்கும். கிடைக்கும் காலம் உங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் தங்கியுள்ளது. நீங்கள் முன்னெடுக்கப்போகும் போராட்டத்திலே தங்கியுள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோதுவோம். சிங்களதேசம் தானாக போர் நிறுத்தம் மேற்கொள்ளும். இதுவரை விடுதலைப்புலிகளை எடுத்துக்கொண்டால் எந்த ஒரு ஒப்பந்தங்களையும் மீறியதாக இல்லை, ஆனால் சிங்களதேசம் எப்போதும் மீறிவருவதிலிருந்து அது எப்போதும் ஆயுதத் தீர்வையே விரும்புகின்றது என்பதும் விடுதலைப்புலிகள் சமாதானவழியையே விரும்புகின்றார்கள் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

இன்று சிங்களதேசம் ஓர் உண்மையை உணரத் தவறுகின்றது, தமிழனை அழிப்பதற்கு, அதாவது இன்றுவரை இலங்கையின் பிரஜைகளை அழிப்பதற்கு தனது அரசின் பணம் செலவழிக்கப் படுகின்றதே, என்பதனை. தனித் தமிழீழம் கிடைத்தால் சிங்கள அரசு உணரும் தமிழரின் பொருளாதார ஆதரவு என்பது எவ்வாறு இருந்தது என்பதனை. இன்றைய இலங்கை அரசின் 50%ற்கும் மேலான பொருளாதார ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் உல்லாசப் பயணத்துறை என்று எதனை எடுத்தாலும் தமிழர்கள் சிங்களவர்களைக் காட்டிலும் அதிகமுதலீடு செய்து இலங்கை அரசிற்கு இலாபமீட்டிக்கொடுத்துக்கொண்

இணையவனின் கருத்துக்களை நான் மிக வரவேற்கிறேன்..

தமிழ்மக்களைப்பொருத்தமட்டில

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை போரானது முடிவடையவேண்டும், எமக்கான தனித் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்றால் இராணுவ வழித் தீர்வின் மூலம் சாதிக்கமுடியாது என்றில்லை ஆனால் அப்போராட்டம் மீண்டும் நீண்டு செல்லும். எமது அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்படும். இதனால் இழப்பு யாருக்கு ஏற்படப்போகின்றது? தமிழர்களான எமக்குத்தான். சிங்களதேசம் ஒட்டு மொத்தமாகப் போரை வெறுக்கவேண்டும். சிங்களதேசம் தானாகப் போரை நிறுத்தவேண்டும். வெற்றி மாயையில் இருக்கும் சிங்களம் தோல்வியாற் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்றால் ஒரே வழி சிங்களத்தின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தினையும் வீழ்த்துதல். அரசியல் வழியில் எம்மைப் பலப்படுத்துதல்.

:(

புலம்பெயர்ந்த மக்களால் நிச்சயமாக முடியும்.

  • 2 months later...
  • தொடங்கியவர்

இம்முறை போரானது முடிவடையவேண்டும், எமக்கான தனித் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்றால் இராணுவ வழித் தீர்வின் மூலம் சாதிக்கமுடியாது என்றில்லை ஆனால் அப்போராட்டம் மீண்டும் நீண்டு செல்லும். எமது அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்படும். இதனால் இழப்பு யாருக்கு ஏற்படப்போகின்றது? தமிழர்களான எமக்குத்தான். சிங்களதேசம் ஒட்டு மொத்தமாகப் போரை வெறுக்கவேண்டும். சிங்களதேசம் தானாகப் போரை நிறுத்தவேண்டும். வெற்றி மாயையில் இருக்கும் சிங்களம் தோல்வியாற் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்றால் ஒரே வழி சிங்களத்தின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தினையும் வீழ்த்துதல். அரசியல் வழியில் எம்மைப் பலப்படுத்துதல்.

நான் அன்று சொன்னபோது பலர் இன்னமும் ஆயுதப்போரில் நாட்டமிட்டு நின்றார்கள்... இன்றாவது யதார்த்த நிலையினை உணர்ந்து புலம்பெயர் தமிழ் மக்கள் வேற்று இனத்தவரையும் உள்ளடக்கி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். எழுச்சிப்போராட்டம் மட்டுமன்றி அரசியல்வழி நகர்வுகள், சட்டவழி நகர்வுகளையும் முன்னெடுக்கவேண்டும். இதன்மூலம் எமது ஈழத்தின் விடிவு சாத்தியமாகும்...

  • தொடங்கியவர்

இனியாவது புலம்பெயர்வாழ் மக்களே, எமது உறவுகளே, 4ஆம் ஈழப்போர் என்ன என்பதன் யதார்த்ததினை புரிந்துகொண்டு போராடுங்கள். சட்டத்துறையில் உள்ளவர்களும் பொருளியல் வல்லுனர்களும் இலங்கை அரசிற்கான எவ்வாறான பொருளாதாரப்பாதிப்பை ஏற்படுத்தமுடியும், எமது உறவுகளுக்கு எவ்வாறு சர்வதேச அமைப்புக்கள் மூலம் உதவுதல் என்பதற்கான செயற்திடங்களை முன்னெடுக்கமுடியும், இலங்கை அரசிற்கான பணத்தினை வழங்கும் நாடுகளிடமிருந்து எவ்வாறு அந்தப்பணம் இலங்கை அரசிற்கு வழங்கப்படுவதைத் தவிர்க்கமுடியும் என யோசித்து, ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் வல்லுனர்கள் தங்களால் இயன்ற பங்களிபை நல்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பல நாட்களின் பின்னர் யாழ் நிலவன்... யுத்த புயல் எம்மக்களை சின்னாபின்னப்படுத்தி மிகுதி மக்களை மிக மன உலைச்சல் உள, உடல் ரீதியான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது..

புலம் பெயர்மக்கள் கடைசிக்காலங்களில் பெரும் பங்களிப்புகளை செய்து உலக கவனத்தை ஈர்த்து பெரும் நெருக்கடிகளை இலங்கையரசிற்கு கொடுத்த போதும் இனவெறியரசு உலகத்தை சாட்டை பண்ணாது இந்திய சீன பாகிஸ்தான் உதவிகளுடன் பெரும் நாடுகளுக்கு இடையில் நடக்க்கும் ஆய்தங்களையும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களயும் பயன்படுத்தி போர்முறைகளை மீறி 50,000 மக்களுக்கு மேல் படுகொலை செய்து இலட்சக்கணக்கான மக்களை உள, உடல் இழப்புக்களை ஏற்படுத்தி மிகுதிமக்களை திறந்த சிறைகளில் அடைத்து சிங்கள இனவாதிகளிற்கு விரும்பியவைகளை நிறைவேற்றி மிகுதி சிங்கள் குடியேற்றங்களை நிறைவேற்றி தமிழர் தாயக கோட்பாடை அழிக்க தயாராகியுள்ளது.

உலக நாடுகள் தொடக்கிய பயங்கரவாத அழிப்பு நடவடிக்க்கைகளை இலங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது..

அடுத்து வெளி நாடுகளிலும் தனது நடவடிக்கைகளை ஏவி விட்டுள்ளது..

தற்போதைய நிலையில் புலம் பெயர் தமிழ்மக்கள் உடனடியாக ஒரு அமைப்பை உறுதியாக வெளி நாட்டு அமைப்புகளுடன் நல்ல உறவை பேணியவாறு நல்ல புரிந்துணர்வுடன், தகவல் தொடர்புகளை பேணியவாறு கொண்டு நடத்துவதன் மூலம் எம்மக்களை புலம் பெயர்மண்ணில் இலங்கை அன்னியப்படுத்த முடி யாத நிலை தோற்றுவிக்க வேண்டும்..

புலம் பெயர்மக்கள் ஒன்று கூடி ஒரு உறுதியாக செயல்பட்டால் தான் மிகுதி.. பலவிடையஙள் அவசரமாக செய வேண்டும்...

பல புதிதியீவிகளின் ஒன்றுபட்ட செயல் திட்டங்கள், முடிவுகளிள் தான் மிகுதி...

இவ்வளவு எம்மக்கள் கொலைகளுக்கு பிறகும் இலங்கை அரசை நம்பும் ஏமாறும் எம்மினம் சரியாக

கையாளப்படவேண்டும்...

4ஆம் கட்ட ஈழப்போர்... இதிலிருந்து என்ன சொல்ல வாறீங்கள்??? smiley-confused013.gif மானமுள்ள தமிழன் ஒருவனும், இலங்கை அரசை நம்புவதாகத் தெரியவில்லை....

  • தொடங்கியவர்

4ஆம் கட்ட ஈழப்போர்... இதிலிருந்து என்ன சொல்ல வாறீங்கள்???

தற்போதைய நிலையில் புலம் பெயர் தமிழ்மக்கள் உடனடியாக ஒரு அமைப்பை உறுதியாக வெளி நாட்டு அமைப்புகளுடன் நல்ல உறவை பேணியவாறு நல்ல புரிந்துணர்வுடன், தகவல் தொடர்புகளை பேணியவாறு கொண்டு நடத்துவதன் மூலம் எம்மக்களை புலம் பெயர்மண்ணில் இலங்கை அன்னியப்படுத்த முடி யாத நிலை தோற்றுவிக்க வேண்டும்..

புலம் பெயர்மக்கள் ஒன்று கூடி ஒரு உறுதியாக செயல்பட்டால் தான் மிகுதி.. பலவிடையஙள் அவசரமாக செய வேண்டும்...

பல புதிதியீவிகளின் ஒன்றுபட்ட செயல் திட்டங்கள், முடிவுகளிள் தான் மிகுதி...

இவ்வளவு எம்மக்கள் கொலைகளுக்கு பிறகும் இலங்கை அரசை நம்பும் ஏமாறும் எம்மினம் சரியாக

கையாளப்படவேண்டும்...

:) :) :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.