Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ღ♥ ஈழவனின் காதல் கடிதம்♥ღ♥


Recommended Posts

ღ♥அன்புள்ள காதலிக்கு ♥ღ♥

பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து

விடலையாய் ஆன பின் என்

கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை

உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை

மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை

நண்பனை கண்டவுடன் இதயத்தின்

ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம்

ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள்

ஆயிரம் பூக்கள் பூக்கின்றன,

நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில்

அது உடலை உருக்கி உயிரை

அல்லவா கொல்கின்றது

முத்து பற்களும் முறுகிய சுருள் மயிரும்

பிராகச மின்னலை உதிரும் விழிகளும்

தேன்வடியும் பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்..!!

உன அழகை என்னவென்று சொல்வேன்!!

அழகு என்ற வார்த்தைக்கு அகராதியில்

பொருள் தேடியும் பயனில்லை நடமாடும் அகராதி நூல்

நீமட்டும் தான் பெண்ணே..

உள்ளத்தில் ஒரு வகை காச்சல் அதனுடன்

என்னால் போராடமுடியவில்லை எதிர் நீச்சல்

உன்னை தேடியே விழியின் மேச்சல்

அதை சொல்லத்தயங்குகின்றேன் என் பேச்சில்

உனக்கதை புரியவைக்கத்தான் இந்த அலைச்சல்

வயது வந்து மேடையிட்டு ஆடுதா கூத்து இல்லை

மாயை என்னை வீழ்த்த வரும் வலையா..?

உன் பேச்சில் மயங்கும் மனதை கட்டிவைக்க முயல்கிறேன்

உன்னை கண்டவுடன் கண்மூடி திரும்பினால்

மனத்திரையில் புன்னகைத்து ஏளனம் செய்கிறாய்

பட்டு உடுத்தி கொஞ்சும் தமிழ் பேசி உருகிறாய்

பிஞ்சு மனம் எனதை ஏன் மருகிறாய்.?

பூமியில் நான் மனிதனய் பிறந்தது தவறா....?

அல்லது அந்த ஆண்டவன் தவறா..?

முடிவின்றி தொடர்கின்றது என் ஆராட்சி

ஆனாலும் தவறுகள் வர்க்கத்தில் விரிகின்றது.

அதிகார முள்ளில் கரைந்தோடும் நாட்கள் கண்டு

என் இதயம் கொதிக்கின்றது அதனால்

விழியாலே பேசும் வித்தக பதுமையே உன்னை

பொறுமைக்குள் திணிக்கும் காலம் இது

பரந்து விரியும் உன் ஆசையை தூக்கில் இடு

அடங்க மறுக்கும் உன் உணர்வுகளை சிறையில் இடு

என்னை தேடும் உன் விழிகளுக்கு சில காலம் ஓய்வு கொடு

பிறவி கடமைக்கு நான் புறப்படும் காலம் இது

எல்லையில் எதிரியின் எச்சங்கள் எக்காளம் இட்டு

எம் நிலத்தை ஏப்பம் இட திட்டங்கள் தீட்டி அணிவகுத்து வருகின்றதாம்

அவர்களை கண்டதுண்டமாய் கருவாடு ஆக்கி

தாய் நிலத்தை காத்து உன்னை கரம் பிடிக்க வருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ღ♥அன்புள்ள காதலிக்கு ♥ღ♥

-----

-----

பரந்து விரியும் உன் ஆசையை தூக்கில் இடு

அடங்க மறுக்கும் உன் உணர்வுகளை சிறையில் இடு

என்னை தேடும் உன் விழிகளுக்கு சில காலம் ஓய்வு கொடு

பிறவி கடமைக்கு நான் புறப்படும் காலம் இது

எல்லையில் எதிரியின் எச்சங்கள் எக்காளம் இட்டு

எம் நிலத்தை ஏப்பம் இட திட்டங்கள் தீட்டி அணிவகுத்து வருகின்றதாம்

அவர்களை கண்டதுண்டமாய் கருவாடு ஆக்கி

தாய் நிலத்தை காத்து உன்னை கரம் பிடிக்க வருவேன்.

ரகசியா சுகி , நீங்கள் ஈழத்தின் மேல் காதல் கொண்ட கவிதை அழகு .

அதற்கு போட்ட தலைப்பு தான் , கொஞ்சம் தடுமாற வைத்து விட்டது . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவி வரிகள் பாராட்டுக்கள். .......போர்க்காலத்தின் ஆரம்ப நிலை போல இருக்கிறது ......தற்போது ரத்தமும் சதை யுமாகி விட்ட காலம்.......காதலை சிந்திக்க காலமிலாத காலம் .பிறக்கும் ..................ஒரு விடிவு காலம் .

Link to comment
Share on other sites

  • 2 months later...

தங்கச்சி, உங்கள் இந்தக்கவிதை (ஓர் பெண் ஆணாக தன்னை நினைத்து எழுதிய) ) மிகவும் நன்றாக அழகாக இருக்கின்றது. உங்கள் இதர ஆக்கங்களையும் உங்கள் வலைத்தளத்தையும் பார்வையிட்டேன். உங்கள் படைப்புக்கள் தொடர இதயபூர்வமான வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.