Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதலுக்குள்ளான இலங்கைத் தூதரகத்தின் சேதங்களுக்கு நட்டஈடு வழங்கத் தயார்: நோர்வே அரசாங்கம்

Featured Replies

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 01:21.34 PM GMT +05:30 ]

அண்மையில் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கத் தயார் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என நோர்வே அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதனைத் தொடர்ந்து தூதரகத்தை அண்டிய பிரதேசத்திற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள நோர்வேத் தூதரகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும் என நோர்வேத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே நோர்வேயின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க இலங்கையில் பெருக்கெடுத்து ஓடும் இரத்த வெள்ளம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2a26QVP4b...3g2hF2ccdvj0o0e

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கத் தயார் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேத்தண்ணி கடைக்கும் காப்புறுதி செய்யவேண்டும் என்கின்ற சட்டம் பல நாடுகளில் உள்ளது .

அப்போ ....... அது , தேத்தண்ணி கடைக்கும் கீழானதா ......?

என்ன பம்மாத்தோ .......

இந்த தூதரகத்தை தாக்கியதால் தமிழர்கள் அடைந்த ஆதாயம் என்ன?

இந்த தூதரகத்தை தாக்கியதால் தமிழர்கள் அடைந்த ஆதாயம் என்ன?

புலிகளைத் தடை செய்யாது, நேரடியாக இராஜதந்திர தொடர்புகளை மேற்கொள்ளக் கூடிய புலம் பெயர் மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றான நோர்வே யினை இலங்கை இந்திய அரசுகளின் நீண்ட நாள் கனவின் படி ஓரங்கட்ட உதவியமை !! நாங்கள் யார்...? அதி மேதாவிகள் அல்லவோ...

இது பற்றி ஒரு சிங்கள இனவாதி தம் இணையத் தளமான defencewire இல் குறிப்பிட்டு இருந்தது

கீழே தந்துள்ளேன்

Hi DW,

Thanks for update

the news of lack of Ammunition is well received and hope this bloody mess be over in no time

As of Norway culprits who attacked the embassy (there by providing us the oppurtunity to do what we were dreaming for so many years !!) why can't British and Canadian tamils to be more active !!

Suba Aluth Awruddak Weva !!

April 13, 2009 11:17 PM

புலிகளைத் தடை செய்யாது, நேரடியாக இராஜதந்திர தொடர்புகளை மேற்கொள்ளக் கூடிய புலம் பெயர் மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றான நோர்வே யினை இலங்கை இந்திய அரசுகளின் நீண்ட நாள் கனவின் படி ஓரங்கட்ட உதவியமை !! நாங்கள் யார்...? அதி மேதாவிகள் அல்லவோ...

இது பற்றி ஒரு சிங்கள இனவாதி தம் இணையத் தளமான defencewire இல் குறிப்பிட்டு இருந்தது

கீழே தந்துள்ளேன்

இது தான் சிங்களவனுக்கும் எங்களுக்கும் இடையே இருக்கிற வித்தியாசம்...அவன் எவ்வளவு அயோக்கியதனத்தையும் சாதூரியமா உலக நாடுகளின்ட உதவியோட செய்வான்....எங்கட ஆக்கள் எங்கள் தரப்பு நியாயத்தை புத்திசாலித்தனமா சொல்லாம இப்படி ஏதாவது செய்து என்னும் வெறுப்பை சம்பாதிப்பினம்.....இத பற்றி கதைச்சா துரோகி என்டு பட்டம் வெற.

Edited by நெப்போலியன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் நெப்போலியன்!

இது தான் சிங்களவனுக்கும் எங்களுக்கும் இடையே இருக்கிற வித்தியாசம்...அவன் எவ்வளவு அயோக்கியதனத்தையும் சாதூரியமா உலக நாடுகளின்ட உதவியோட செய்வான்....எங்கட ஆக்கள் எங்கள் தரப்பு நியாயத்தை புத்திசாலித்தனமா சொல்லாம இப்படி ஏதாவது செய்து என்னும் வெறுப்பை சம்பாதிப்பினம்.....இத பற்றி கதைச்சா துரோகி என்டு பட்டம் வெற.

துரோகத்தனமான கருத்துகளை முன்வைத்துவிட்டு அந்த பட்டம் மட்டும் வேண்டாம் என்றால் எப்படி? தகுதியுடையவர்களுக்கு அதை கொடுப்பதுதானே நியாயம்? அதற்காக உங்கள் கருத்து அப்படி பட்டதொன்றல்ல. ஆனால் பலரும் பல துரோகதனமான கருத்துக்கள் உயிர்வாழ கடைசியில் இதையும் எழுதிவிடுகிறார்கள் என்பதனாலேயே இதை எழுதுகின்றேன். ஆகவே நீங்கள் உங்கள் மனதிற்குள் என்ன நினைக்கின்றீர்கள் என்பது எமக்கு தெரியாது. உங்கள் கருத்துக்கள் என்ன சொல்ல முனைகின்றன என்பதே எமக்க தெரியும் ஆகவே உங்கள் கருத்துக்கள் தெளிவானதாக இருக்க வேண்டும் அதை விடுத்து ஒன்றை நினைத்துகொண்டு ஒண்றை எழுதினால் எமக்க எப்படி புரியும்?

உங்களுடைய முதலாவது கருத்து இந்த தலைப்பின் கீழ்....

இதனால் தமிழர்கழுக்கு என்ன லாபம்?

இந்த ஒரு கேள்வியின் உள் பல அர்த்தம் உள்ளது. இதில் இதை நினைத்துத்தான் நீங்கள் எழுதினீர்கள் என்பது எமக்கு எப்படி தெரியும்?

நோர்வேயில் ஸ்ரீலங்பா தூதரகத்தை தாக்குவதென்பது ஒட்டுமொத்த தமிழர்களின் முடிவா?

அந்த தாக்குதலை செய்த தமிழர்கள் அதை திட்டமிட்டு செய்தார்களா?

இதனால் பெரிய மாற்றம் ஒன்று வரும் என்று நினைத்து செய்தும் ஒரு பலனும் இன்றி போய்விட்டதா?"

"இதனால் தமிழர்களுக்கு" அப்போ நீங்கள் தழிழர்களுக்குள் உங்களை அடக்க விரும்பவில்லையா?

நீங்கள் தமிழில் எழுத தெரிந்த ஒரு பிற மொழிகாரனா?

தெளிவான கருத்துக்களை முன்வையுங்கள் நண்பர்களே. தவிர இங்கே துரோக பட்டம் தர யாரும் இல்லை.

இனிய நண்பரே மருதன்கென்றி நெப்போலியனுக்குக்கொடுத்த கருத்து மகத்தானது. மேலும் உங்களைப்போன்றவர்கள் இப்பொழுது இங்கு தேவை. நன்றி.

"அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான்" என்ற பொது மொழிதான் எனக்கு ஞாபகம் வருகின்றது. நீதியான நியாயமான போராட்டங்கள் பயனற்றவையாக போகும்போது போராட்டங்களின் பரிமாணங்கள் இப்படியும் மாற்றமடையும் என்று சொல்லாமல் செய்து காட்டியிருந்தார்கள் நோர்வேயில்.

இதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி!

ஆனாலும் கண்ணாடி உடைந்ததற்கெல்லாம் காசு வாங்கிற அளவுக்கு இலங்கை "பிச்சைகார நாடு" ஆகி விட்டது என்பதை நோர்வே மறைமுகமாக சொல்லியிருக்கின்றது.

வன்னியில் சிக்குண்ட பொதுமக்களின் பக்கம் சர்வதேச கவனம் திரும்ப வேண்டும்: நோர்வே கோரிக்கை

அனைத்து சர்வதேச சமுகத்தினரின் கவனமும் தற்போது வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் பக்கம் திரும்ப வேண்டும் என நோர்வே கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலமே இரத்தக்களரியை தடுக்கமுடியும் என நோர்வே குறிப்பிட்டுள்ளது.

நோர்வேயில் உள்ள தூதரகத்தின் மீது கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கண்டனம் வெளியிடுகையிலேயே இந்த கருத்தை நோர்வே தெரிவித்துள்ளது.

இலங்கையும் நோர்வேயும் நீண்ட உறவைக் கொண்டுள்ளன. எனவே நோர்வே ஐக்கிய இலங்கையின் சமாதானத்திற்காக தமது பங்களிப்பை செய்துள்ளதாக நோர்வே குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilwin.org/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வே சொல்லுது சர்வதேசம் கவனம் எடுக்கோணும் எண்டு..........................

பிரித்தானியா சொல்லுது சர்வதேசம் அக்கறை செலுத்தோணும் எண்டு.........................

பிரான்ஸ் சொல்லுது சர்வதேசம் தீர்த்துவைக்கோணுமெண்டு...........

.............

பக்கத்தில இருக்கிற இந்தியாவும் அதத்தான் சொல்லுது...................

போதாக்குறைக்கு ஐநாவும் அதத்தான் சொல்லுது போல..................

சர்வதேசம் சர்வதேசம் எண்டு சொல்லுறீங்களோ........................ அந்த சர்வதேசம் எண்டா என்ன????????????????

அந்த சர்வதேசத்துக்குள்ள மேல கருத்து சொன்ன ********* இல்லையோ?????????

அவை வேற கிரகத்தில இருக்கிறவையோ??????????????????????????????

ஒண்டுமே புரியல............ ^_^

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டி ,

தமிழன் இழிச்ச வாயன் என்பதை , சர்வதேசத்துக்கும் விளங்கிவிட்டதோ .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.