Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் ஆங்கிலமும் தெரிஞ்சவர்களிடம் கொஞ்சம் உதவி

Featured Replies

வணக்கம்,

எனக்கு ஓர் சிறுமி தனக்கு கீழ்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உடனடியாக தெரியவேணுமாம் ஏதோ பள்ளிக்கூட projectஐ செய்து முடிக்கவாம் என்று சொல்லி ஓர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறா. எனக்கு கொஞ்ச சொற்கள் தெரியும். எல்லாம் தெரியாது. யாராவது தெரிஞ்ச ஆட்கள் உதவி செய்தால் புண்ணியமாய் போகும்.

1.polygon

2.edge

3.tetrahedron

4.rectangular prism

5.vertex

6.hexagonal prism

7.pyramid

8.triangular pyramid

9.triangular prism

10.face

11.trapezoid

12.octagonal prism

13.polyhedron

14.symmetry

15.pentagonal prism

16.prism

17Cylinder

18.cube

19. hexahedron

உங்கள் உதவிக்கு நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

edge - ஓரம் , விளிம்பு , எல்லை

tetrahedron- கூம்பகம்

rectangular prism - சதுரமுகி

vertex - சிகரம், உயர்ந்த ஸ்தானம்

  • கருத்துக்கள உறவுகள்

Prism ---- அரியம்

triangular prism ---- முக்கோணப்பட்டகம்

poligon -- பலகோணம், பல்கோணி

tetrhedron --- நான்முகி

hexagonal prism ___ அறுகோண அரியம்

pyramid --- கூம்பகம்

polyhedron -- பன்முகி, பன்முகம்

symmetry -- சமச்சீர்

Cylinder ____ உருளை

cube ___ கனசதுரம்

trapezoid --சரிவகத் திண்மம்

octagonal prism ---- எண்முகி அரியம்

pentagonal prism --- ஐங்கோண அரியம்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

எனக்கு ஓர் சிறுமி தனக்கு கீழ்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உடனடியாக தெரியவேணுமாம் ஏதோ பள்ளிக்கூட projectஐ செய்து முடிக்கவாம் என்று சொல்லி ஓர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறா. எனக்கு கொஞ்ச சொற்கள் தெரியும். எல்லாம் தெரியாது. யாராவது தெரிஞ்ச ஆட்கள் உதவி செய்தால் புண்ணியமாய் போகும்.

1.polygon - பல்கோணி

2.edge - விளிம்பு

3.tetrahedron - நான்முகி

4.rectangular prism - செவ்வகமுகி

5.vertex - உச்சி

6.hexagonal prism - அறுகோண அரியம்.

7.pyramid - பிரமிடு /கூம்பகம்.

8.triangular pyramid - முக்கோண கூம்பகம்.

9.triangular prism - முக்கோண அரியம்

10.face -பக்கம்

11.trapezoid - சரிவகம்

12.octagonal prism - எண்கோண அரியம்

13.polyhedron - பன்முகி

14.symmetry - சமச்சீர்

15.pentagonal prism - ஐங்கோண அரியம்.

16.prism - அரியம்

17Cylinder - உருளை

18.cube - சதுரமுகி

19. hexahedron - அறுமுகி

உங்கள் உதவிக்கு நன்றி!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

மிக்க நன்றி லோயர், நுணாவிலான், நெடுக்காலபோவான். சிறுமிக்கு இதை அனுப்பியுள்ளேன். உதுகளை வாசிக்க முந்தி பள்ளிக்கூடத்தில இருந்த பழைய விசயங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிது. நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. polygon - பொலிகோணம்1, பலகோணம் - tamilvu.org(கலைச் சொற்கள் > பொதுத்தேடல்)

பொலிகோணம்1 : பொலி என்றால் பெருகு, மிகு போன்ற பொருள் தரும். பொலிவு -என்ற சொல்லிற்கு அதிகம் என்ற பொருள் உண்டு. ஈழத்தவர் வழக்கில் "நல்ல பொலிவாக இருக்கு" என்ற வசனத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். சுவையாரமான(சுவாரஸ்யம்; interesting) செய்தி என்னவென்றால் இலத்தீனிலும் இதை 'பொலிகோணம்' என்று அழைத்துள்ளனர்! இலத்தீன் வேரில் இருந்து வந்ததுதான் ஆங���கிலப் பொலிகோண் (ஆங்கிலத்தில் 'ணம்' என்று முடியாமல் 'ண்' என்று முடிகிறது அவ்வளவுதான்).

பொலி (p. 749) [ poli ] , II. v. i. enlarge, extend, பெருகு; 2. increase, மிகு; 3. flourish, prosper, bloom, செழி; 4. cover (as a bull or ram); 5. be high or great or celebrated, எழுச்சியாகு.

பொலி கடா, a ram or he-goat kept for covering.

பொலிவு, பொலிதல், v. n. abundance, prosperity, covering (as animals).

பொலி வழிய, to lose lustre or splendour.

பொலிவான முகம், a blooming cheerful countenance.

பொலிவானவன், a corpulent, portly man.

தமிழ் இணைய அகரமுதலி

இதோடு தொடர்புடைய பொலினோமியல்(polynomial) என்பதைப் பலனம், பலன வகை என்று அழைக்கலாம் என ஐயா இராமகி பரிந்துரைத்துள்ளார். நாங்கள் polynomial - பொலினம், பொலின வகை என்று அழைக்கலாம் என நினைக்கிறேன். [ பார்க்க கணிதச் சொற்கள்

Polygon:

1571, from L. polygonum :icon_mrgreen: , from Gk. polygon "polygon," from neut. of polygonos "many-angled," from polys "many" + gonia "angle" (see knee).

http://www.etymonline.com/index.php?search...searchmode=none

2. edge - விளிம்பு,

edge - A thin, sharpened side, as of the blade of a cutting instrument.

brim - The rim or uppermost edge of a hollow container or natural basin.

'edge' என்பதை விளிம்பு என்றுதான் அழைக்கின்றனர். ஆனால் பிறிம்(brim) என்ற சொல்லிற்கு என்ன பாவிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

3. tetrahedron - நால்பக்கம்

வடிவியலில், ஆங்கிலத்தில் 'face' என்பது தமிழில் பக்கத்தையே குறிப்பதாக நினைக்கிறேன். சிலநேரத்தில் பொலிகோணங்களில் உள்ள முக்கோணம், சதுரம் போன்��� வடிவங்களையும் 'face' என்று அழைப்பர்.

காட்டு(example):

ஐங்கோணப் புறமேடு - pentagonal pyramid

Hexahedron2.GIF

* Faces(பக்கங்கள்): 5,3,3,3,3,3

* 6 vertices(சிமயங்கள்)

* 10 edges(விளிம்புகள்

solid figure contained by four triangular surfaces, 1570, from Late Gk. tetraedron, originally neuter of tetraedros (adj.) "four-sided," from tetra- "four" + hedra "seat, base, chair, face of a geometric solid," from PIE base *sed- "to sit" (see sedentary).

4. rectangular prism - செவ்வக அரியம், செவ்வகப் பட்டகம் (prism - அரியம், பட்டகம்)

5. vertex - சிமயம்(மலைய��ச்சி), சிகரம், உச்சி

6. hexagonal prism - அறுகோண அரியம், அறுகோணப் பட்டகம், சடுகோண அரியம், சடுகோணப் பட்டகம் (சடு - six, அறு - six). ஆறுபக்கம் உடைய பொலிகோணம்(polygon).

hexagon - அறுகோணம், அறுங்கோணம்

7. pyramid - புறமேடு, பட்டைக்கூம்பு; புறமேடு என்ற சொல்லில் இருந்துதான் பிரமிட்(pyramid) என்ற சொல் உருவாகியதாகக் காந்தி வாண்டையார் குறிப்பிடுவார்.

8. triangular pyramid - முக்கோணப் புறமேடு. 'tetrahedron' ஐ முக்கோணப் புறமேடு(triangular pyramid) என்றும் அழைப்பர்

9. triangular prism - முக்கோண அரியம், முக்கோணப் பட்டகம்

10. face - பக்கம், வடிவம் (வடிவியல் - geometry )

11. trapezoid - சாய்வகம், சரிவகம்

12. octagonal prism - எண்கோண அரியம், எண்கோணப் பட்டகம்

13. polyhedron - பொலிபக்கம், பலபக்கம்

14. symmetry - சமச்சீர்

15. pentagonal prism - ஐங்கோண அரியம்

16. prism - அரியம், பட்டகம்

17. cylinder - உருளை

18. cube - கனசதுரம்

19. hexahedron - அறுபக்கம்

குறிப்பு: polyhedron - பொலிமுகி , hexahedron - அறுமுகி , tetrahedron - நான்முகி என்று அழைக்கலாமா தெரியவில்லை

Edited by vengaayam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதையம் > museum

மூசி > mouse

அக்கம் > aqua (water)

பழ(மை) > paleo > paleontology (பழவூற்றியல்)

தொலை > tele > telephone (தொலைபேசி)

பரவளை > parabola

தச்சு> tech (technology - நுட்பியல் என்று அழைக்கப்பட்டாலும் தச்சுடன் சம்பந்தமான சொல் ஒன்று உருவாக்க வேண்டும். )

தரை > terra > terracotta doll (சுடுமண் பொம்மை)

மேலுள்ள சொற்கள் போன்றே பொலிகோணமும்(polygon) புறமேடும்(pyramid) இலத்தீன், கிரேக்கம் மற்றும் நடுவக்கிழக்கு(middle-eastern), இரோப்பிய மொழிகளிற்குத் தமிழில் இருந்து சென்றிருக்கிறது. இவை போன்று எண்ணுக்கணக்கற்ற சொற்கள் இரோப்பிய மொழிகளிற்கும் தமிழிற்குமான தொடர்புகளை வலியுறுத்துகின்றன. :(

மூதையத்தை அருங்காட்சியகம் என்று நீட்டுவதும் மூசியை எலி என்று அழைப்பதும் நுட்பியலைத் தொழில் நுட்பம் என்று நீளமாக்குவதும் தமிழை நோஞ்சான் மொழியாக்கும். தமிழை வளப்படுத்த நாம் சொற்களை நீட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கணினி என்று அழைக்காமல் கணி என அழைப்பது உயிர்தரிப்பை(உச்சரிப்பை) எளிமையாக்கிறது. அங்கனம், நாம் கணித்திரை என்றே அழைக்க உந்தப்படுகிறோம் அன்றி, கணினித்திரை என்றல்ல. அதிகாரம் தம்கையில் உள்ளதால் தமிழை சாகடிக்கும் கூட்டம் தமிழைப்பற்றிக் கவலைப்படுவதில்லை போலும். :lol:

பொதிசுமக்கப் பஞ்சிப்பட்ட கழுதை அங்கிருந்து கடற்கரைக்குப்போய் கடைசியில் பொதியைவிடப் பாரமான உப்புமூட்டைகளை சுமந்தகதையாக தமிழ்சொற்களை விரும்பி ஏற்காது பிறமொழிகளில் உள்ள சொற்களிற்கு தமிழில் தரப்படும் விளக்கங்களை தமிழ் சொற்களாகக் கையாள நாம் முன்வரல் கூடவேகூடாது.

யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :D

Edited by vengaayam

  • தொடங்கியவர்

தகவல்களிற்கு மிக்க நன்றி வெங்காயம். நீங்கள் சொன்னமாதிரி Computerஐ கணி என்று சொல்வது இலகுவாக இருக்கும்தான். ஆனால்... அது கடைசியில் Calculatorஐ சொல்லுவதாய் முடியுமோ என்று குழப்பமாய் இருக்கிறது. கணி || கணிப்பு என்றால் Calculatorதானே பொருத்தமாக இருக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களிற்கு மிக்க நன்றி வெங்காயம். நீங்கள் சொன்னமாதிரி Computerஐ கணி என்று சொல்வது இலகுவாக இருக்கும்தான். ஆனால்... அது கடைசியில் Calculatorஐ சொல்லுவதாய் முடியுமோ என்று குழப்பமாய் இருக்கிறது. கணி || கணிப்பு என்றால் Calculatorதானே பொருத்தமாக இருக்கும்?

நன்றி மாப்பிள்ளை, இராமகி எழுதிய 'கணி' என்ற இடுகையை முதலில் படிக்கவும்.

"கணினி, கணிணி, கணிப்பொறி" எனப் பல காலம் குழம்பிக் கொண்டே இருக்க வேண்டாம் என்பது என் கருத்து. சொல்ல எளிதாய்க் "கணி" என்றே சொல்லலாம்.

தமிழிணையம் 99 - கருத்தரங்கில், அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தார், தங்களின் "கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி"யை வெளியிட்டனர். நல்ல முயற்சி; அதில் இருந்து எடுத்துக் காட்டாக ஒரு 10 சொற்களை இங்கே கொடுத்திருக்கிறேன்

computer jargon - கணிப்பொறிக் குழுமொழி

computer network -கணிப்பொறி வலையமைப்பு

computer operations -கணிப்பொறிசார் செயல்பாடுகள்

computer program -கணிப்பொறி நிரல்

computer security -கணிப்பொறிக் காப்பு

computer simulation -கணிப்பொறிப் பாவனை

computer utility -கணிப்பொறிப் பயனமைப்பு

computer aided design -கணிப்பொறிவய வடிவமைப்பு

computerisation -கணிப்பொறிமயமாக்கல்

computer phobia -கணிப்பொறி அச்சம்

இந்தக் கூட்டுச் சொற்களில், "ப்பொறி" என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டுப் படியுங்கள்; உடனே, இந்தக் கூட்டுச் சொற்கள் சொல்வதற்கும் எளிதாக இருக்கும்; பொருளும் மாறு படாது. (நான் மேலே உள்ள சொற் தொகுதிகளில் கணிப்பொறி என்ற சொல்லிற்கு அப்புறம் அடுத்து வரும் சொற்களைப் பற்றி இங்கு முன்னிகை - comment - அளிக்கவில்லை.) [பொதுவாகத் தமிழில் ஈரசைச் சொற்களே மேலோங்கும். ஓரசைச் சொற்கள் கூட்டுச் சொற்களுக்கு முன்னொட்டாய்ப் புழங்கத் தொடங்கும். மூவசைச் சொற்கள் ஓரோ வழி நிற்கும். மூவசைக்கும் மேற்பட்ட சொற்கள் தமிழில் மிக மிக மிக அரிதாகவே இருக்கும். யாப்பில் கூடத் "தேமாநறுநிழல்" போன்ற நாலசை வாய்ப்பாடுகள் அரிதிலும் அரிது.]

http://valavu.blogspot.com/2006/03/blog-post_21.html

வளவில் கல்குலேட்டருக்கு என்ன சொல்ல பாவிக்கலாம் எனப் பரிந்துரைக்கவில்லை. விக்கிப்பீடியாவில் தேடியபோது கணிப்பான் என்பது வந்தது.

cal⋅cu⋅la⋅tor

   /ˈkælkyəˌleɪtər/ Show Spelled Pronunciation [kal-kyuh-ley-ter] Show IPA

–noun

1. a person who calculates or computes.

2. Also called calculating machine. a small electronic or mechanical device that performs calculations, requiring manual action for each individual opertion.

3. a person who operates such a machine.

4. a set of tables that facilitates calculation.

Origin:

1375–1425; late ME < L; see calculate, -tor

http://dictionary.reference.com/dic?q=calc...p;search=search

-tor

a suffix found in loanwords from Latin, forming personal agent nouns from verbs and, less commonly, from nouns: dictator; genitor; janitor; orator; victor.

Origin:

< L -tor (s. -tōr-), c. Gk -tōr (s. -tor-), Skt -tar-

http://dictionary.reference.com/search?q=-tor&db=luna

-or ஈறு சங்கத(சமக்கிருதம்) 'தர்' என்பதிலிருந்து வந்தது என ஆங்கில அகரமுதலி சுட்டுகிறது. சங்கதம் தமிழுடன் நெருங்கிய மொழி. தமிழ் வேர் உடைய மொழி, அங்கனம் கணி(தர்) என்ற சொல்லும் தமிழில் வழக்கில் உள்ளது. 'கல்குலேட்டர்' என்பதுகணக்கிடும், கணிக்கும் மனிதரைக் குறித்து எழுந்து. அதன்பின்னரே மாகனை(machine) கொண்டு கணிப்பதைக் குறித்தது.

கணக்கு - கணக்கன் = கணக்குப் பார்ப்பவன், கணக்கத் தொழிற் குலத்தான். வடவர் காட்டும் கண் (ப) என்னும் மூலம் இதற்குரியதன்று.

கணம் - கண (g) இ.வே. இது மேல் விளக்கப்பெற்றது.

கணி - கண் (g)

கண் - கணி. கணித்தல் = புறக்கண்ணாற் காணுதல், அகக் கண்ணாற் காணுதல், மதித்தல், அளவிடுதல், கணக்கிட்டு வகுத்தல். கடைக்கணித்தல், சிறக்கணித்தல், புறக்கணித்தல் என்பன புறக்கண்ணாற் காண்டலைக் குறித்தல் காண்க.

கணிதம் - கணித (g)

கணி - கணிதம் = கணிப்பு, பல்வகைக் கணக்கு.

கணிதம் - கணிசம் = மதிப்பு (உத்தேசம்). கணிசம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. குழம்பிற்குக் கணிசமாய் உப்புப் போடு என்னும் வழக்கை நோக்குக.

கணிதம் - கணிதன் = கணியன், கணக்கறிஞன்.

கணி - கணி (g)

கணி = கணிப்பவன், கணியன் (சோதிடன்). கணிகன், கணியன், கணிவன் என்னும் வடிவங்கள் வடமொழியில் இல்லை.

கணிகை - கணிகா (g)

கணி - கணிகை = தாளங்கணித்து ஆடுபவள்

http://www.tamilvu.org:8080/slet/lA46I/lA4...no=105&wrd=

calculation:

1393, from L.L. calculationem, from calculare, from L. calculus "reckoning, account," originally "pebble used in counting," dim. of calx (gen. calcis) "limestone." Calculating "shrewd, selfish" is from 1809. Calculator "adding machine" is from 1784; application to the electronic form is from 1946.

ஆதியில் "கணிப்பான்" என்பது கணிதர் ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக எண்சட்டம் போன்ற பல்வேறு பொறிமுறை கணிப்பு சாதனங்களின் உதவியுடன் பணிபுரிந்தார்.

http://www.tamilos.com/index.php?option=co...=1&Itemid=2

கணியம், கணிப்பு - calculation

கணி, கணித்தல் - to calculate

கணியன், கணக்கன் - calculator (person - ஆள்)

கணிப்பான் - calculator (machine - மாகனம்)

கணிதம் - mathematics

கணிதன், கணிதர், கணக்காளி - mathematician

கணக்கு - account

கணக்கர் - accountant

தானக் கணக்கர் - donation accountant ( valavu.blogspot.com/2007/01/2_23.html)

கணியம், கணிப்பு, கணக்கு ஆகிய சொற்கள் கல்குலேசன்(calculation) என்ற பொருள் தரும். இவற்றுள் கணியன் கணக்கன் என்பவை கணக்குப் பார்க்கும் ஆட்களையும் கணிப்பான் என்பது கணக்குப் பார்க்கும் மாகனையைக் குறிக்கின்றது. இருப்பினும் கல்குலேட்டர் என்னும்போது கணியன், கணக்கன் ஆகியவற்றைக் கணிப்பானோடு சேர்த்து நாம் பாவிக்கலாம் என்று கருதுகிறேன். :lol:

Edited by vengaayam

மிக்க நன்றி லோயர், நுணாவிலான், நெடுக்காலபோவான். சிறுமிக்கு இதை அனுப்பியுள்ளேன். உதுகளை வாசிக்க முந்தி பள்ளிக்கூடத்தில இருந்த பழைய விசயங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிது. நன்றி!

என்ன மாப்பிள்ளையண்ணா பொய்தானே சொல்லுறியள்? :lol::lol: பள்ளிக்கூடத்திலை இருந்த நினைவுஎன்பது பொய்தானே? :lol::lol::)

  • தொடங்கியவர்

Computerஐ கணிப்பொறி என்று சொல்வது எப்படி பொருத்தமாக இருக்கும் என்று விளங்கவில்லை வெங்காயம். வேண்டுமானால் Calculatorஐ அப்படி சொல்லலாம். ஏன் என்றால் Computer கணிப்புக்கள் செய்யப்படுவதற்கு மட்டும் பாவிக்கப்படும் ஓர் சாதனம் இல்லை. இதனால்.. கீழ்வருமாறு இப்படி சொல்வது எவ்வளவுதூரம் சரியானது என்று தெரியவில்லை. தமிழ் கலைச்சொற்களை உருவாக்குபவர்கள் இந்த விடயத்தில் அதிக சிரத்தை எடுக்கவேண்டும்.

computer jargon - கணிப்பொறிக் குழுமொழி ?

computer network - கணிப்பொறி வலையமைப்பு ?

computer operations -கணிப்பொறிசார் செயல்பாடுகள் ?

computer program - கணிப்பொறி நிரல் ?

computer security - கணிப்பொறிக் காப்பு ?

computer simulation - கணிப்பொறிப் பாவனை ?

computer utility - கணிப்பொறிப் பயனமைப்பு ?

computer aided design - கணிப்பொறி வய வடிவமைப்பு ?

computerisation - கணிப்பொறிமயமாக்கல் ?

computer phobia - கணிப்பொறி அச்சம் ?

என்ன மாப்பிள்ளையண்ணா பொய்தானே சொல்லுறியள்? :icon_mrgreen::lol: பள்ளிக்கூடத்திலை இருந்த நினைவுஎன்பது பொய்தானே? :D:o:lol:

உண்மையை சொன்னாலும் நம்பமாட்டீங்கள். சரி என்னமோ சொல்லுங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

கணி என்பது வினைச் சொல்லாக வருவதால் கணினி என்பதே பொருத்தமாக இருக்கும்.கல்குலேட்டரை கணக்கி என்று அழைத்தால் என்ன?

  • தொடங்கியவர்

கணினி எப்படி கணி என்று மாறியது என்று தெரிய இல்லை புலவர். Calculatorஐ கணிப்பான் என்று சொல்வார்கள் என்று யாழில் முன்பு வாசித்து அறிந்தேன். கணினி கூட Computerக்கு சரியான பதமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கணிப்பை மையப்படுத்தியே கணினி என்று பெயர் வைத்த்து இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால்... Computer கணிப்புக்கு மாத்திரம் பாவிக்கப்படும் ஓர் சாதனம் இல்லையே.

  • 3 weeks later...

ஒங்களுக்கு வேற வேல இல்லப்போல... சும்மா கொம்பியூட்டர் எண்டே கூப்பிடலாம்..

உது கடசியில் தமிழை தமாஷ் ஆக்கினகதைமாரித்தான்.

Tamil = Tamil--Tamiz--Tamizh--Thamiz--Thamil--Thamul. and more......

Sinhala = Sinhala

:unsure:

  • 1 year later...
  • தொடங்கியவர்

கீழ்வரும் சொற்களுக்கும் இணையான அல்லது புழக்கத்தில் உள்ள தமிழ்ச்சொற்கள் காணப்பட்டால் அறியத்தாருங்கள், நன்றி.

Trans-fat - ?

Food-Label - ?

Bone-Health - ?

Multivitamin - ?

Margarine - ?

Foods-to-limit - ?

Shortening - ?

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Shortening குறுக்கல்; குறுநினைவு; நீளக்குறைப்பு

Margarine செயற்கை வெண்ணெய்

Multivitamin பல்உயிர்ச்சத்து :D

Edited by ஆண்டவன்

  • தொடங்கியவர்

நன்றி, வேறு ஒருவருக்கு தேவைப்பட்டது. வலைத்தளத்தில் தமிழ் ஆங்கில அகராதி மூலம் சொற்களை அறிந்துகொண்டதாக சொன்னார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.