Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோமாலியக் கடற்கொள்ளைகளில் மறைந்துள்ள சில உண்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி வாரவெளியீடு - இந்த உலகம் விசித்திரமானது. பலவான்கள் சேர்ந்து ஒருவனை கள்வன் என்றால் அவன் தீயவன் ஆகின்றான். ஆனால், ஒருவன் தீயவனாக மாறக் காரணமாக இருந்தவர்கள் எவரோ, அவர்கள் தம்மை நல்ல பிள்ளைகளாகக் காட்டிக் கொள்வதுதான் விந்தை எனலாம்.

இன்று உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களை வில்லர்களாக சித்திரிக்கின்றன. இந்தப் பிரச்சினைக்குள் ஆழமாக மறைந்துள்ள யதார்த்தமும் நல்லவன் தீயவன் பற்றிய உதாரணத்தைப் போன்றது தான்.

சோமாலிய கடற்பரப்பில் இயங்கும் கடற்கொள்ளையர்கள் சர்வதேச கப்பல்கள் மீது தமது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். அந்தக் கடற்கொள்ளையர்களை ஒடுக்குவதற்காக உலக நாடுகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சின்ன விஷயத்திற்கும் முரண்படக்கூடிய உலக வல்லரசுகள், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் வெளிப்படுத்திய ஒற்றுமை ஆச்சரியமானது. இந்தத் தீர்மானம் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக சகல நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடிய அதிகாரத்தை அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கி, கடற்கொள்ளையர்களை பெருங் குற்றவாளிகளாக ஓரங்கட்ட முனைகிறது.

ஆனால், இந்த விவகாரத்தை ஆழமாக ஆராய்ந்தால் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டறியலாம். அத்துடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் போலித்தன்மையையும் அறிந்து கொள்ள முடியும்.

உண்மையில், கப்பல்களைக் கொள்ளையிட்டு, அதிலுள்ள பண்டங்களையும், பணத்தையும் அபகரித்தல் என்பது 17ஆம் நூற்றாண்டு முதல் நிலவி வரும் பிரச்சினை. இந்தக் கடற்கொள்ளைகள் உலகம் முழுவதிலும் நடந்திருக்கின்றன.

சோமாலிய கடற்பரப்பில், 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தான் கடற்கொள்ளை என்ற பிரச்சினை தீவிரமான முறையில் தலைதூக்கியதாகக் கருத முடியும். சோவியத் ஒன்றியத்தின் துணையுடன் சோமாலியாவை ஆட்சி செய்த சியாத் பாரே பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்தத் தேசத்தில் அராஜகம் தலைதுõக்கிய பின்னர் கடற்கொள்ளையர்களின் கைவரிசை தீவிரமடைந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

இந்தக் கடற்கொள்ளையர்கள் யாவரும் தாமாகவே தோன்றியவர்கள் அல்லர். சோமõலியாவின் அரசியல் ஸ்திரமற்ற நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்த தீயசக்திகளால் உருவானவர்கள். இல்லை, உருவாக்கப்பட்டவர்கள் என்பது சாலப்பொருந்தும்.

சோமாலியாவின் கடற்கரை மிகவும் நீளமானது. அங்கு மனித நடமாட்டம் குறைவு. அந்தத் தேசத்தின் கடல் மீன்வளம் நிறைந்தது. அதில் சிறிய வகையைச் சேர்ந்த மீனினங்களும், இறால் முதலான உயிரினங்களும் அதிகம்.

சோமாலிய கடற்கரையை குப்பைத் தொட்டியாக நோக்கிய பல நாடுகள், அங்கு குழுக்களுக்கு இடையிலான யுத்தம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, தமது கழிவுகளைக் கொட்டத் தொடங்கின. கழிவுகள் என்றால் குப்பைகூளங்கள் மாத்திரம் அல்ல. மனித குலத்திற்கு பெரும் சுகாதாரச் சீர்கேடுகளை விளைவிக்கக்கூடிய அணுசக்தி மூலகங்கள், கதிரியக்கப் பொருட்கள் போன்றவையும் கடற்கரையோரங்களில் குவிக்கப்பட்டன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து சமுத்திர கரையோர நாடுகளைத் தாக்கிய சுனாமிப் பேரலை தான், தீமை விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் எந்தளவுக்கு கொட்டப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை வெளிப்படுத்தியது. சோமாலிய கடற்கரையில் கழிவுகளைப் போடும் செயல் எதேச்சையாக மேற்கொள்ளப்பட்டதல்ல. மிகவும் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டதாகும். இரு நிறுவனங்கள் இதற்காக பணம் வழங்கியிருப்பதையும் பசுமை இயக்கமொன்று அம்பலப்படுத்தியுள்ளது.

1991ஆம் ஆண்டு பாரேயின் அரசாங்கம் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து, சோமாலியாவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை தோன்றியது. அந்நாட்டை ஆட்சி செய்ய திடமான ஆட்சியாளர்கள் எவரும் இருக்கவில்லை.

பாரேயின் ஆட்சிக்காலத்தில் கடலுக்கு சென்று மீன்பிடித்தவர்கள், கடற்றொழில் துறையின் வீழ்ச்சியின் காரணமாக மாற்று வழிகளை நாட நேர்ந்தது. இந்த சமயத்தில் தான், வெளிநாட்டுக் கப்பல்கள் சோமாலிய கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசிக்கத் தொடங்கின. அவை சட்டவிரோதமான முறைகளைக் கையாண்டு கடற்றொழிலில் ஈடுபட்டன.

இந்தக் கப்பல்களின் மாலுமிகளுக்கு சோமாலிய மீனவர்களின் நடமாட்டம் பிரச்சினையை ஏற்படுத்தியது. அந்தக் கப்பல்களைத் தாக்குவதைத் தவிர வேறு வழியேதும் சோமாலிய மீனவர்களுக்கு இருக்கவில்லை. கப்பல்களைக் கொள்ளையிடுவதன் மூலம் அவர்களுக்கு பெருமளவு செல்வம் கிடைத்தது.

கடத்துவதன் மூலம் பெருந்தொகைப் பணத்தை கப்பமாக அறவிட முடிந்தது. அவர்கள் படிப்படியாக கடற்கொள்ளையர்களாக மாறத் தொடங்கி னார்கள். தமது கரையோரத்தில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவது பற்றியும், தமது கடற்பரப்பில் தவறான முறையில் மீன் பிடிக்கப்படுவது பற்றியும் சர்வதேச அரங் குகளில் சோமாலிய மீனவர்கள் முறையிட்டபோதிலும், அதற்கு பலனேதும் கிடைக்க வில்லை.

கடைசியாக, சுயபாதுகாப்பிற்காக மீனவர்கள் வரித்துக் கொண்ட தந்திரோபாயம் நாளடைவில் முழு அளவிலான குற்றச்செயலாக பரிணமித்தது எனலாம். இந்தக் கடற்கொள்ளையர்கள் தமது தொழிலை பெருமளவிற்கு விஸ்தரித்துக் கொண்டார்கள். இந்தத் தொழிலில் வேறு பல சக்திகளும் இணைந்து கொண்டதõல், இது மாபெரும் வலைப்பின்னலாக மாறியது.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் என்ற பதத்திற்குள் ஒரு குழுவை மாத்திரம் உள்ளடக்கி விட முடியாது. இந்தக் கடற்கொள்ளையர்களில் தனித்தனி குழுக்களாக இயங்கும் மீனவர்களும் உள்ளனர். வெளிநாட்டுக் கப்பல்களைத் தாக்கும் நோக்கத்துடன் இயங்கும் கிளர்ச்சியாளர்களும், சோமாலிய யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட குழுக்களின் ஆயுதபாணிகளும் இருக்கின்றனர்.

திட்டமிட்ட வகையில் கடற்கொள்ளையில் ஈடுபடும் குழுக்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. அந்தக் குழுக்களிடம் அதிவேகப் படகுகள் உள்ளன. செய்மதிகளின் துணையுடன் தாம் இருக்குமிடத்தை அறியக்கூடிய ஜீ.பி.எஸ். கருவிகள் இருக்கின்றன. குழுக்களைச் சேர்ந்தவர்கள் பாரிய கப்பல்களை வாடகைக்கு அமர்த்திய சம்பவங்கள் பற்றியும் அறியக் கிடைத்திருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளைகளில் ஈடுபடும் நான்கு குழுக்கள் பட்டியலிடப்படுகின்றன. இவற்றில் சிறிய மீன்பிடிப் படகுகளை வழிமறிப்பதில் தேர்ச்சி பெற்ற குழு முதற்கொண்டு ஒரு இராணுவத்தைப் போன்றதொரு கட்டமைப்புடன் இயங்கும் குழுவும் அடங்கும்.

இதில் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட குழுவை புந்த்லாந்து பிரதேசத்தின் கரையோர நகரங்களைச் சேர்ந்த மக்கள் வரவேற்கிறார்கள். ஏனெனில், இந்தக் கடற்கொள்ளையர்கள் பெருமளவில் சம்பாதிக்கும் பணம் கரையோரப் பகுதிகளில் புழங்குகிறது.

இதன் காரணமாக, இந்தப் பிரதேசங்கள் வளமடைகின்றன. இதனால் பிரதேசவாசிகள் முறைகேடாக பணம் சம்பாதித்த செல்வந்தர்களை கொள்ளையடித்து, வறியவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கும் "ரொபின் ஹூட்' வீரனாக கடற்கொள்ளையர்களை நோக்குகிறார்கள்.

கடற்கொள்ளை என்பது உலகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்ற கருத்தில் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஏனெனில், உலகின் பெருமளவு பண்டங்கள் கடல் வழியாகவே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்தக் கடற்பயணம் தடுக்கப்படுமானõல் உணவு விநியோகம் பாதிக்கப்படும். அத்துடன், கப்பல் கட்டண அதிகரிப்பின் காரணமாக பொருளாதார தாக்கங்களும் ஏற்படுவது திண்ணம்.

எனவே, கடற்கொள்ளை என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு துரித நடவடிக்கைகள் அவசியம். அந்தக் காரியத்தைத்தான் ஐக்கிய நாடுகள் சபை செய்திருக்கிறது. சோமாலியா தேசத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய பல்தேசிய படையொன்றை அமைப்பதற்கு வளங்களை வழங்கி உதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை ஐம்பது நாடுகளைக் கேட்டிருக்கிறது.

ஆனால், சுமார் 20 நாடுகள் தான் உதவி செய்ய முன்வந்திருக்கின்றன. அந்த நாடுகளும் சோமாலிய கடற்பரப்பைக் கண்காணிப்பதற்காக கடற்படைக் கப்பல்களை வழங்குவதில் மாத்திரமே ஆர்வம் காட்டுகின்றன. கடற்கொள்ளை என்ற பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டறிந்து, அதற்குப் பரிகாரம் காணத் தேவையான மூலவளங்களை வழங்குவதில் எந்தவொரு தேசத்திற்கும் அக்கறையில்லை.

சமகால அரசியல், பொருளாதார யதார்த்தங்களின் பின்னணியில், சோமாலிய தேசத்து நெருக்கடியை இராணுவ ரீதியாக அணுகுவது அபõயகரமானது. அது மோசமான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, அமெரிக்க வணிகக் கப்பலைக் கடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சோமாலியாவில் முதலீடு செய்யும் கடற்கொள்ளையர்கள் அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் வீரர்களாக நோக்கப்படுவார்கள்.

இது கடும்போக்குவாதத் தைத் தூண்டும். இன்றைய நிலைமையில் எந்தவொரு பிரச்சினைக்கும் இராணுவ ரீதியாக முழு அளவிலான தீர்வைக் காண்பது என்பது சாத்தியமில்லை. பிரச்சினையை பல கோணங்களில் ஆராய்ந்து, பல்வேறு வடிவங்களில் தீர்வை வழங்குவது அவசியம். அந்தத் தீர்வு சர்வாம்சமானதாக இருப்பதும் முக்கியமானது.

சோமாலிய கடற்கொள்ளை என்ற பிரச்சினையைப் பொறுத்தவரையில், அந்நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்குவது முதற்கொண்டு ஊறு விளைவிக்கத்தக்க கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதை தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு முகங்கள் உள்ளன.

சமகால உலகில் போர் என்பது இரு தேசங்களுக்கு இடையிலானதாக மாத்திரம் இருக்கவில்லை. சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ள குழுக்கள், கிளர்ச்சி அமைப்புக்கள், வலைப்பின்னல்கள் போன்றவற்றுக்கு இடையிலõனதாகவும் காணப்படுகிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கு இராணுவத் தீர்வு மாத்திரம் சாத்தியமாக மாட்டாது. கடற்கொள்ளை வலைப்பின்னலில் சம்பந்தப்பட்ட குழுக்களைக் கண்டறிந்து, அவற்றிற்கு மக்கள் ஆதரவும், ஆயுதங்களும், பணமும் கிடைக்கும் வழிவகைகளை முடக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

அடுத்து, பூகோளமயமாக்கலின் விளைவாக ஒரு தரப்பிடம் வளம் சேர்வதும், மற்றைய தரப்பு ஏழையாவதும் சகஜமாக மாறியிருக்கிறது. பூகேõளமயமாக்கல் போக்கைப் பயன்படுத்திக் கொண்டு, சோமாலியாவின் சமுத்திர வளங்களை சூறையாட முனையும் தேசங்கள் இருக்கும்வரையில் கடற்கொள்ளை என்ற பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை. இந்தத் தேசங்கள் சர்வதேச அரங்கில் சோமாலிய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதை விடுத்து, தத்தமது சுயலாபத்திற்காக சோமாலிய கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்த விøளவது ஆபத்தான விடயமாகவே அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.