Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலியும் பிரபாகரனும் அழிச்சு முடிஞ்சுது: அடுத்தது என்ன..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போன்ற நாடுகளினதும் ஈழத்துக்குள்ளேயே இருக்கும் புலி எதிர்பார்ப்பாளர்களினதும் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்று ஈடேறப் போகின்ற இந்த வேளையில்.. அவர்களால் எதிரிகளாக பாசிசவாதிகளாக பயங்கரவாதிகளாக பார்க்கப்பட்ட புலிகளும் அதன் தலைமையும் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டாயிற்று என்ற செய்தியை சிறீலங்கா சிங்கள அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சவும் சிங்கள இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும் அறிவிக்கவுள்ளனர்.

தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியில் இருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட அனைவரின் கருத்தையும் கவனத்தையும் கவர்ந்தவர் பிரபாகரன். அதுமட்டுமன்றி இனமானமுள்ள தமிழ் மக்களின் இதயங்களில் வாழும் சூரியத் தேவன் அவர் என்பது ஒரு புறம் இருக்க.. உலகின் முன் பயங்கரவாதியாக, பாசிசவாதியாக சித்தரிக்கப்பட்ட அல்லது காட்டப்பட்ட பிரபாகரன் இன்னும் சில மணி நேரங்களின் பின் அழிக்கப்பட்டு விடுவார் என்ற தகவல்களை இந்திய, சிறீலங்கா ஊடகங்களும் IPL கிரிக்கெட் போட்டி நேரடி வர்ணனை போல் பரபரப்பாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் பிரபாகரனாலும் புலிகளாலும் தான் தமிழ் மக்களுக்கு அழிவு, அதனால் தான் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; புலிகளின் பாசிசத் தலைமை எம்மை அதற்கு அனுமதிக்கவில்லை என்று புலிகள் அமைப்பு உருவான நாளில் இருந்து ஒரு கூட்டம் கத்திக்கிட்டே வருகுது. அந்தக் கூட்டத்தினருக்கு அவர்கள் விரும்பும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் வழிமுறையில் தமிழீழம் அமைத்துக் கொடுக்க இன்று நல்லதொரு வாய்ப்பு அமைந்திருக்கிறது என்றால் அது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான கருத்தல்ல என்பதை சாதாரண குழந்தை கூட இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளும் அந்தளவுக்கு ஊடகப் பரப்புரை வலிந்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (இப்படிப் புலிப் பாசிசம் பேசிப் பேசியே சிங்களவன் தமிழர்களைக் இனப்படுகொலை செய்வதை கண்டு அதில் புலி அழிப்பு நிகழ்வதாகவும் புலியால் அழிவதாகவும் கூறி சொந்த இன அழிப்பில் அரசியல் செய்த இந்த எட்டப்ப ஓநாய்களும் அவர்களுக்கு தீனிபோட்ட அதிகார, ஆதிக்க, வல்லாதிக்க வெறிபிடித்த சன நாய் அகம் பேசும் பாசிசவாதிகளும் அரசுகளும் எனி என்ன செய்யப் போகிறார்கள். யாரைச் சொல்லி தமிழின அழிப்பை நியாயப்படுத்தப் போகின்றனர். எப்படி தமது எட்டப்ப கோலத்தை மறைக்கப் போகின்றனர்..??! எவ்வாறு புலிப் பாசிசம் கடைப்பிடித்த ஆனால் இவர்கள் என்றுமே கையிலெடுக்காத இரத்தக் கறை படியாத துப்பாகிகள் ரவைகள் குண்டுகள் அழிவுகள் இறப்புக்கள் இன்றிய வழிமுறைகளைப் பயன்படுத்தி தமது எஜமானர்களிடம் கூலி வாங்கிக் கற்றுக் கொண்ட தாரக மந்திரங்களால் தமிழீழம் அமைக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பே இன்று தமிழ் மக்கள் மத்தியில் விஞ்சி நிற்கிறது..!)

சாதாரண மனிதனாக வாழ்ந்த ஒருவரை புரட்சியாளனாக்கி இராணுவ வீரனாக்கி ராஜதந்திரியாக்கி தனக்கான ஏஜெண்டாக்கி பின்னர் கொலையாளாக்கி பயங்கரவாதியாக்கி தானே உருவாக்கிய சதாம் குசைனை தானே படையெடுத்து கைது செய்து தூக்கிட்டுக் கொன்றது அமெரிக்கா. இதற்காக அமெரிக்காவால் செலவிடப்பட்ட டொலர்கள் பல மில்லியன்களாக இருக்கின்றன. பலியிடப்பட்ட உயிர்கள் பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. ஆனால் உலகம் சதாம் குசைனை பயங்கரவாதிகாக சாகடித்த போது அவரை பயங்கரவாதியாக உச்சரித்துக் கொண்ட அளவுக்கு அவரை உருவாக்கிய அமெரிக்காவை தண்டிக்கவோ கண்டிக்கவோ பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்தவோ தற்துணிவின்றி இருந்துவிட்டது. காரணம் அமெரிக்கா அணு ஆயுத வல்லமை கொண்ட உலக வல்லரசு. அது நினைப்பதை அது செய்யலாம். அது நினைத்தால் மனிதர்களைக் கொல்லலாம் குளோனிங்கும் செய்யலாம் ஆனால்.. மற்றவர்கள் செய்யக் கூடாது.

இந்தியாவுக்கும் இது பொருந்தும். தனது சொந்த இன மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகள் கண்டு பொங்கிய ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தான் பிரபாகரன். தன் கண் முன்னாலேயே தன் தாய் தந்தையரை ஒத்த ஆண்களும் பெண்களும் சிங்களப் படைகளால் கொடுமைப்படுத்தப்பட்டதைக் கண்டு அதற்காக நீதி கேட்க தீர்வு கேட்கப் புறப்பட்டவனே பிரபாகரன்.

பிரபாகரன் பிறக்க முதலே ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்யும் சிங்களவர்களின் இனக்கலவரங்கள் பிறந்துவிட்டன. நூற்றுக்கணக்கில் தமிழர்களைப் பலியிடுவது தொடங்கிவிட்டது. தமிழர்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிப்பது தொடங்கிவிட்டது. ஆனால் அதற்குள்ளும் அடங்கி சிங்களவர்களின் காலடியில் படுத்துறங்கி உயிர்ப் பிச்சை வாங்கி அரசியல் செய்த தமிழர்கள் மத்தியில் தந்தை செல்வா போன்ற ஒரு சிலரே தமிழ் மக்களிற்கு சம அரசியல் உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அதிலும் பல குரல்கள் போலிக் குரல்கள் என்பது பின்னர் தான் தெரிய வந்தன. ஆனாலும் தனது இறப்பு வரை கொள்கை மாறாது குரல் கொடுத்து இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு தமிழீழத் தனியரசுக்கான தேவைப்பாட்டை உறுதி செய்தவர் தந்தை செல்வா.

தந்தை செல்வா காட்டிய அந்த இலட்சியத்தை நோக்கித் தான் பிரபாகரன் ஆயுத வழிப் போராட்டத்தை ஆரம்பித்தார். பிரபாகரனின் ஆயுத வழிப் போராட்டம் என்பது தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற ஒன்று மட்டுமன்றி.. சிங்கள மக்களை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. சிங்களப் பேரினவாதத்தையும் சிங்கள இன வெறியையும் தூண்டிவிட்டு அதன் மூலம் தமிழினத்தையும் அதன் இருப்பையும் இலங்கைத் தீவில் அழிக்கவும் தமிழர்களின் நிலத்தை வன்பறிப்புச் செய்யத் தூண்டியவர்களையும் அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற தமிழர்களின் தாயக மண்ணில் ஆயுத பலத்துடன் நுழைந்து கொண்ட சிங்களப் படைகளையும் அதற்கு உதவும் எட்டப்ப தமிழ், முஸ்லீம் அருவருடிகளை எதிர்ப்பதையும் தமிழீழ விடுதலையையுமே நோக்காகக் கொண்டு இருந்தது.. இருந்து கொண்டும் இருக்கிறது.இன்று வரை இதுதான் உண்மையும் கூட.

பிரபாகரன் எனும் அந்த பதின்ம வயது சிறுவன்.. எப்படிப் போராளியானான். எப்படிப் பயங்கரவாதியானான். எப்படிப் பாசிசவாதியானான்.. எப்படி இனமானமுள்ள ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் வாழும் சூரியத் தேவனானான்.. தமிழீழத்தின் தேசிய தலைவனானான்.இவற்றுக்கான விடைகளை இந்த உலகம் இனங்காண நேரத்தைச் செலவிட தயார் இல்லை. ஆனால் இந்த உலகில் தமது ஆதிக்க அதிகார நோங்கள் நிறை வேற வேண்டும் என்று விரும்பும் பாசிசக் கொள்கைகள் கொண்ட சில நாடுகள் தங்களின் விருப்புக்கு ஏற்ப பிரபாகரன் செயற்படமாட்டார் என்பதற்காக தாமே போராளியாக இனங்காட்டிய அவரை பின்னர் பயங்கரவாதியாக சித்தரித்துக் காட்டி இன்று பிரபாகரனை தண்டிக்கின்றோம் என்ற போர்வையில் ஆண்டாண்டு கால தமிழர் பகைவனான சிங்களப் பேரினவாதத்தோடு சேர்ந்து ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழிப்பதன் மூலம் பிரபாகரனைத் தண்டிப்பதாக கூறிக் கொள்கின்றன.

1952ம் ஆண்டில் இருந்து இன்று வரை தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் தாக்குதலை ஒரு தடவை தானும் கண்டித்தறியாத சீனா அண்மையில் ஐநா சபையில் வைத்து புலிகளை பூண்டோடு அழிக்க சிறீலங்காவுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவேன் என்று கூறி இருக்கிறது.

சாதாரண பிரபாகரனை போராளியாக்கி தமது நோக்கங்களுக்காக ஆயுதம் வழங்கி வளர்த்தெடுத்த இந்தியாவோ பிரபாகரன் முன்னொரு காலத்தில் போராளி இப்போ பயங்கரவாதி எங்கிறது. பிரபாகரனையும் புலிகளையும் அழிக்க சிறீலங்காவுக்கு தாம் தேவையான ஒத்துழைப்புக்களை அளிப்பதாக பகிரங்கமாகவே இந்திய பாதுகாப்புச் செயலர் எம் கே நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

1980 களில் பிரபாகரனையும் புலிகளையும் வளர்க்க இந்தியாவுக்கு இருந்த தேவைப்பாடு இன்று இல்லாத நிலை தோன்றி இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை அன்றிருந்த நிலையை விட மோசமான நிலையை இந்தியா அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்திருக்கிறது. இதிலும் இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்திலேயே தலையீடு செய்யாத கொள்கையைக் கடைப்பிடித்திருக்கலாம். அப்படி இருந்திருப்பின் எமது போராட்டம் வேறு நட்புச் சக்திகளின் உதவியோடு இன்று வெற்றி பெறக் கூடிய நிலைக்கு வந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை 1983 இனக் கலவரத்தின் பின் சிறீலங்காவின் அன்றைய சிங்கள ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் அன்று 15 பேருடன் இருந்த புலிகள் அமைப்பை பூண்டோடு அழிப்பேன் என்று முழங்கிய போது அன்றைய அமெரிக்க அதிபர் ரெனோல்ட் ரேகன் சிறீலங்காவில் வாழும் மொத்தத் தமிழர்களையும் அழித்தால் தான் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்று ஜே ஆர் அரசுக்கு பகிரங்க புத்திமதி சொன்னதும் மட்டுமன்றி இஸ்ரேலிய மொசாட் மற்றும் பாகிஸ்தானிய உளவு அமைப்புக்களின் நேரடி உதவிகளையும் ஜே ஆர் அரசுக்குப் பெற்றுக் கொடுத்து அதன் வழியும் நேரடியாகவும் அமெரிக்க ஆயுத உதவிகளையும் வழங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் அன்று தொட்டு இன்று வரை இந்தக் கொள்கையில் இருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இவற்றின் பின்னணியில்.. மத்தியில் தான் பிரபாகரன் தன் சொந்த மக்களின் பலத்தைக் கொண்டு தான் நேசித்த மக்களின் விடுதலைக்காகப் போராடினார். போராடிக் கொண்டும் இருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகளின் போராட்டம் கடந்த காலங்களைப் போன்று இப்போதும் நயவஞ்சகம், சூழ்ச்சி, உலக ஒழுங்கு மாற்றம் என்ற சுழற்காற்றுகள் மத்தியில் சிக்கி தேசமாகி கொண்டிருப்பினும் மீளவும் அதனைப் பலப்படுத்த வேண்டிய கடமை இனமானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் வாழ்வுரிமைக் கடமை ஆகும். அதுமட்டுமன்றி எமது விடுதலைப் போராட்டம் அழிய அனுமதிப்பின் அதன் போதே தமிழின அழிவும் உலகில் ஆரம்பிப்பதை அனுமதிப்பதாகிவிடும்.

ஈழத் தமிழர்களின் குரல் இன்று சர்வதேச அரங்கில் ஒலிக்கிறது என்றால் அது பிரபாகரனால் தான். சீனாவாலோ இந்தியாவாலோ அமெரிக்காவாலோ அல்ல. ஏன் புலிப் பாசிசம் என்று கூவிக் கொண்டு இருப்பவர்களாலோ அல்ல. இவர்கள் தமிழ் மக்களாகிய எமக்குப் பெற்றுத் தந்தது பேரழிவுகளே அன்றி வேறல்ல. விடுதலைப்புலிகளை இக்கட்டுக்குள் தள்ளி எதிரிகளை எம்மீது போர் செய்யத் தூண்டி எம்மை ஏதிலிகளாக்கி எம்மை அழித்தது புலிப் பாசிசம் பேசும் காட்டிக் கொடுக்கும் காக்கவன்னியர்களும் எட்டப்பர்களும் அவர்களுக்கு தீனி போட்டு வளர்க்கும் எஜமானர்களுமே அன்றி விடுதலைப் புலிகள் அல்ல.

மரபு வழி இராணுவ பலத்தை தமிழர் சேனை இன்று சர்வதேச படைகளின் கூட்டு நடவடிக்கையான "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்பதன் கீழ் இழந்து நிற்பது போன்ற ஒரு தோற்றம் நிலவினும் எமக்கான அடிப்படைப் பலம் இன்னும் எம்மிடம் இருக்கிறது. எமது சூரியத் தலைவனை பாதுகாப்பதுடன் மாண்டு போன எமது மக்களினதும் மாவீரர்களினதும் நினைவு சுமந்து அவர்களின் இலட்சியக் கனவை ஒவ்வொரு இனமானமுள்ள தமிழனும் நனவாக்க பாடுபட இன்றே உழைக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவே தமிழினத்தின் உலக இருப்புக்கான அடிப்படையாகவும் அமையும்.

எமது போராட்டம் ஆயுத வழி மட்டுமன்றி சாத்தியமான அனைத்து வழிகளையும் பற்றி நிற்பது அவசியமாகின்றது. அதற்கான சகல வழிகளையும் நாம் ஆராய்ந்து தேர்வு செய்து பயன்படுத்தத் தவறக் கூடாது. எதிரிகளின் பலத்துக்கும் அதிகார பாசிச வெறிக்கும் எமது போராட்டம் இலக்காகிச் சீரழியின் அதுவே இந்த உலகில் விடுதலை வேண்டி நிற்கும் ஒட்டு மொத்த மக்களினதும் அடிமை வாழ்வுக்கான முதற்படியாகக் கூட அமையலாம். அதிலிருந்து எம்மையும் எமது தேசத்தையும் உலகையுக் காக்கும் மகோன்னதப் பொறுப்பு இனமானமுள்ள ஒவ்வொரு தமிழனிடமும் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற நிலையை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

எதிரிகளை அவர்களின் தந்திரங்களின்றும் வீழ்த்தி.. வித்தாகி வீழ்ந்த எம் மக்களினதும் மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்து தமிழர்களின் தாகமாம் தமிழீழத்தை தீர்க்கும் வகைக்கு வாழும் வரை போராட உறுதி எடுத்து சத்தியம் செய்வோமாக.

மூலம்: http://www.kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சந்தர்ப்பத்தில் பிரபாகரனாலும் புலிகளாலும் தான் தமிழ் மக்களுக்கு அழிவு, அதனால் தான் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை புலிகளின் பாசிசத் தலைமை எம்மை அதற்கு அனுமதிக்கவில்லை என்று புலிகள் அமைப்பு உருவான நாளில் இருந்து ஒரு கூட்டம் கத்திக்கிட்டே வருகுது. அந்தக் கூட்டத்தினருக்கு அவர்கள் விரும்பும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் வழிமுறையில் தமிழீழம் அமைத்துக் கொடுக்க இன்று நல்லதொரு வாய்ப்பு அமைந்திருக்கிறது என்றால் அது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான கருத்தல்ல என்பதை சாதாரண குழந்தை கூட இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளும் அந்தளவுக்கு ஊடகப் பரப்புரை வலிந்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (இப்படிப் புலிப் பாசிசம் பேசிப் பேசியே சிங்களவன் தமிழர்களைக் இனப்படுகொலை செய்வதை கண்டு அதில் புலி அழிப்பு நிகழ்வதாகவும் புலியால் அழிவதாகவும் சொந்த இன அழிப்பில் அரசியல் செய்த இந்த எட்டப்ப ஓநாய்களும் அவர்களுக்கு தீனிபோட்ட அதிகார, ஆதிக்க, வல்லாதிக்க வெறிபிடித்த சன நாய் அகம் பேசும் பாசிசவாதிகளும் அரசுகளும் எனி என்ன செய்யப் போகிறார்கள்
.

எங்களது கைவிலங்கு உடைக்கப்பட வேண்டும், தங்கத்தால் ஆன கைவிலங்கு வேண்டாம் ........என்று 30 வருடத்துக்கு முதல் சொன்னதையே இப்பவும் சொல்லிகொண்டு திரியுதுகள் இந்த புலி காச்சல் கோஸ்டி

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சந்தர்ப்பத்தில் பிரபாகரனாலும் புலிகளாலும் தான் தமிழ் மக்களுக்கு அழிவு, அதனால் தான் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை புலிகளின் பாசிசத் தலைமை எம்மை அதற்கு அனுமதிக்கவில்லை என்று புலிகள் அமைப்பு உருவான நாளில் இருந்து ஒரு கூட்டம் கத்திக்கிட்டே வருகுது. அந்தக் கூட்டத்தினருக்கு அவர்கள் விரும்பும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் வழிமுறையில் தமிழீழம் அமைத்துக் கொடுக்க இன்று நல்லதொரு வாய்ப்பு அமைந்திருக்கிறது என்றால் அது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான கருத்தல்ல என்பதை சாதாரண குழந்தை கூட இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளும் அந்தளவுக்கு ஊடகப் பரப்புரை வலிந்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (இப்படிப் புலிப் பாசிசம் பேசிப் பேசியே சிங்களவன் தமிழர்களைக் இனப்படுகொலை செய்வதை கண்டு அதில் புலி அழிப்பு நிகழ்வதாகவும் புலியால் அழிவதாகவும் சொந்த இன அழிப்பில் அரசியல் செய்த இந்த எட்டப்ப ஓநாய்களும் அவர்களுக்கு தீனிபோட்ட அதிகார, ஆதிக்க, வல்லாதிக்க வெறிபிடித்த சன நாய் அகம் பேசும் பாசிசவாதிகளும் அரசுகளும் எனி என்ன செய்யப் போகிறார்கள். யாரைச் சொல்லி தமிழின அழிப்பை நியாயப்படுத்தப் போகின்றனர். எப்படி தமது எட்டப்ப கோலத்தை மறைக்கப் போகின்றனர்..??! எவ்வாறு புலிப் பாசிசம் கடைப்பிடித்த ஆனால் இவர்கள் என்றுமே கையிலெடுக்காத இரத்தக் கறை படியாத துப்பாகிகள் ரவைகள் குண்டுகள் அழிவுகள் இறப்புக்கள் இன்றிய வழிமுறைகளைப் பயன்படுத்தி தமது எஜமானர்களிடம் கூலி வாங்கிக் கற்றுக் கொண்ட தாரக மந்திரங்களால் தமிழீழம் அமைக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பே இன்று தமிழ் மக்கள் மத்தியில் விஞ்சி நிற்கிறது..!)

நல்ல ஒரு கட்டுரை நெடுக்ஸ் . இனி அந்த கோஷ்டி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி செய்கின்றோம் என்று சொல்லி வெளிநாட்டில் கடன் வாங்கி

அதில் .......... கொள்ளையடிக்கும் ,

சிங்கள பகுதிகளை அபிவிருத்தி செய்யும் , ( சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழன் , அபிவிருத்தி பெற்றதோ சிங்களவன் )

கிளிநொச்சி , புது மாத்தளன் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடக்கும் ,

தமிழ் பகுதிகளில் புதிய புத்த விகாரைகள் கட்டப்படும் .

ஒட்டுக்குழுக்கள் அப்பவும் மிஞ்சிய தமிழரை சுட்டுக்கொல்லும் . :lol::rolleyes::blink:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதும் நயவஞ்சகம், சூழ்ச்சி, உலக ஒழுங்கு மாற்றம் என்ற சுழற்காற்றுகள் மத்தியில் சிக்கி தேசமாகி கொண்டிருப்பினும் // சேதமாகி?!!

நெடுக்ஸ் அண்ணை மிக விரிவான விளக்கமான கட்டுரை. சத்தியப்போரும் இலட்சியமும் தோற்றதில்லை என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம்...அது வழிதவறாது என்கின்ற உறுதியோடு!...

எந்த நிலையிலும் தளராத போராளிகள் போல் நாமும் புறப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.