Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் கவிதை - ஈழ தமிழனுக்காய் கலங்குகிறாராம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடினோம்

உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடினோம்

செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்

சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று சித்ரவதை கண்டு வாடினோம்

ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர்

இந்தியாவில் மலைமுகடு, வன வனாந்தரங்களில் பாசறை அமைத்து

இடையறாப் பயிற்சியும் வழங்கி ஈழ விடுதலைப் போராளிகளாக்கினர் அந்த

விடுதலைத் தளகர்த்தர்க்கிடையே விரிசல் விரிசல் என்று வேறுபட்டு நின்று;

ஆளுக்கொரு ஆயுதம் ஏந்தி அவர்களை அவர்களே அழித்துக் கொண்டனர்

பிரித்தாளும் சூழ்ச்சியிலே பிரிட்டிஷாரையும் வெல்லுகின்ற

சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா

சிங்கத் தமிழினத்தின் ஒற்றுமை

அதனாலே அங்கும் சகோதர யுத்தம்

அவர்களை ஆதரிக்கும் இங்கும் அந்தோ; அதே யுத்தம்

இரு தரப்பிலும் இக்குற்றம் சுமத்தி

இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்

இனத்தால் தமிழர் புல் பூண்டும் அறவே செதுக்கப்படாமல் காப்பதற்கே

இன்றோர் வேலை நிறுத்த அறப்போரில் ஈடுபட அனைவரையும் அழைத்தோம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போர் நிறுத்த தீர்மானமுடன்

இந்திய அரசின் அமைச்சரவையும் கூடி அதே கருத்தை அறிவித்தமை கண்டோம்

இன்னும் இன்னும் வேகமாக நம் குரலை உயர்த்தி நடுவணரசை

முன்னுக்குத் தள்ளி முடிப்போம் இலங்கைப் போரை என்றால்

இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணனுக்கு தம்பியாக

இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? இந்தத்

துரோகிகளின் சேட்டையினால் தூய தமிழினம் தோற்கலாமா?

கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா?

அதனாலே

அன்றும் என்றும் இன உணர்வு மிகுந்த தமிழரெல்லாம்

ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம்.

---------

**** பதில் கவிதை எழுந்துங்கள் தோழர்களே இவனுக்கு இங்கே ****

எனது பதில்,

உன் நரித்தந்திரதால் சீரழிந்து போனதய்யா தமிழினம்

ஈழத்தில் சகோதர யுத்தம் மூட்ட கொள்ளி குடுத்தவன் நீ

சோனியாவின் சேலை அள்ளிப் பிடித்தவன் நீ

நீயும் அம்மாவும் பிடிப்பது என்ன யுத்தம்

கவிதை எழுதி கவிதை எழுதி உடன் பிறப்பை கொன்றுவிடு

நீயும் உன் மனைவி மாரும் மானாட மயிலாடட்டும்

துரோகிகளின் சேட்டையினால் தூய தமிழினம் தோற்கலாமா?

சரியாக சொன்னாய், உன் பெயரையும் அதிலே சேர்க்கலாமே

அன்றும் என்றும் தமிழன் இரத்தத்தில் பணம் சேர்த்த தமிழரெல்லாம்

ஒன்றாய்க் கூடுவோம்!

ஒன்றுக்கு ரெண்டாய் டிவி நடத்துவோம்

Edited by Cheliyan

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள செழியன்,

தெருநாயின் ஊளைக்குப் பதில் சொல்வதை விடவும் முக்கியமான பணிகள் எங்களுக்கு இருப்பதால் இந்தத் திரியை நீக்கி விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் நேரம் இந்த ஊளையிடும் சதைக்கூளத்திடம் வீணாணது போதும். பேசிப் பேசியே இந்தப் புழுவுக்கு நாங்கள் கொடுத்த விளம்பரம் போதும். நீக்கி விடுங்கள் தயை கூர்ந்து!

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஜஸ்ரின் , உங்கள் கருத்தே எனதும் .

நாம் நிலவை பார்த்து குரைக்கப்படாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நாயே வாயில வருகுது இங்க எழுதிப்போடுவன் என்ன செய்யுறது வெட்டல் மன்னர்கள் கோடாரியோட திரியினம் தறிச்சுப்போடிவினம் என்டதால தப்பிற்றாயடா நாயே என்ன ஒப்பாரியாட வைக்கிறாய் நக்கி நாயே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

_1.jpg

வவ்.......வவ்வவ்.............வவ்.....ஊஊஊஊஊஊ

  • கருத்துக்கள உறவுகள்

டைம் வேஸ்ட்

கலைஞரை தூற்றி என்ன பலன். எதிரியுடன் கூட்டுச்சேர்ந்த எட்டப்பர்கள் தான் எல்லாவற்றிக்கும் காரணம். அவர்கள் இணையங்களை போய் பாருங்கள். எவ்வளவு கேவலமான வேலை செய்கிறார்கள் என்று தெரியும். தாடிக்காரன் செய்யும் செயல்களை பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது குப்பிழான் ஈழஜோதி அவர்களின் வேண்டுகோளுக்காக எழுதப்பட்டது ஆனாலும்

ஆதங்கத்தினால் இதனை எழுதும் சந்தர்ப்பம் ஏற்பட்டது இதனால் மனதைப் புண்படுத்தவோ அன்றி வேண்டுமென்றோ இதனை நான் எழுதவில்லை காலத்தின் கட்டாயம் மற்றவர்களின் துயரங்களையறியாது வதந்திகளைக் கேட்டு உண்ணா நோன்பைத் துறந்தமை கண்டு அனைத்து உள்ளங்களின் வேதனையால் வெளியிடுகிறேன். மன்னிக்கவும்.

தரணியெங்கும் வாழ்கின்ற தமிழினத் தலைவனென்றே

மரணிக்குமீழ மக்களுக்கு முழுத்துரொக மீய்பவரே

முத்தமிழால் கவிபாடி மூதறிஞர் எனும்பெயரை

வித்தாக்கி விஷமதனை வழங்குமொரு வல்லமையே

அண்ணாவைச் சாடியொரு அவர்வழியில் புகழ்பாடி

கண்ணெதிரே சாக்காணும் இனவழிப்பைக் கேள்வியுற்றும்

வசனநடை கைவந்த வல்லாளனாகி நின்று

அசனமிடுவார்கள் தங்கள் அரசசபை தன்னில்நின்று

ஆசனத்தை இழப்பதற்கும் அறைகூவல் செய்வார்போல்

போசனத்தை நிறுத்தியங்கே புதுமையாய் நடித்தங்கே

தமிழனங்கள் அழிவதனால் மனமது துடிப்பார்போல்

விழிநீரை வரவழைத்து வாய்நிறையப் பொய்யுரைத்து

தமிழர்களேதன்னைக் கட்டிக் கடலோடு போட்டாலும்

தெப்பமாய் மிதப்பாராம் மெனுங் குறளால்

நம்மினத்தை யேமாற்ற நாணயமாய்க் கருத்துரைத்து

தனவான்கள் தர்மத்தால் சேர்த்தங்கே வைத்திருந்து

மனமிரங்கி அளித்த பொருள் மக்களாலொ ருங்கமைத்து

பொதிகளிலே அடைத்துமொரு பெருமைகொள் நிவாரணமாய்

மதிகெட்ட சிங்களர்க்கு மானத்தோடனுப்பி வைத்தீர்

விதிவசத்தால் பாதியது பயன்படவே செய்ததனால்

படமெடுத்துப் பத்திரிகையும் பாரெங்கும் பரப்பியதே

நாளுமொரு கதைபேசும் நாவன்மை கொண்டவராய்

கூலிப்படை உயிர்குடிக்கையிலே கூடுவிட்டுப் பாய்வது போல்

வேலியேறும் ஓணானாய் வேசமிடும் கயமையிலே

நடுவண் அரசாங்க நயந்துரைக்கு மகிந்தனை

தடுக்காது போரதனைத் தட்டிக் கொடுப்பார்க்கு

மறைமுகமாய் பயிற்சிகளும் மதிமிகுத்த யோசனையும்

குறைவிலா ஆயதமும் காலாட் படையுடனே

அழித்தொழிக்கு இரசாயனக் குண்டுகளும் மிகுவாக

நேயமிலா நெஞ்சார்ந்து நீட்டுகின்ற உதவிக்கு

பலவமைச்சர் குழாஞ்சூழ்ந்து பயனற்ற பேச்சுறுத்தி

கலைந்த கனவாகி கேலிபண்ண வைத்துநின்று

பதவியொரு கேடாகி பலமுறை திறப்பதற்கு

மாதமொரு அறிக்கையிலே மகிழ்ந்து பலகவிபாடி

கூடிநிற்கும் அரசவையில் கூவிடுவீர் அந்நேரம்

ஆடியடங் குமொரு ஆண்டைநீர் தாண்டியதை

நாடி ஜோதிடத்தால் நீருமறிந் திலையோ

மனிதச் சங்கிலியும் மாபெரும் பேரணியும்

மனித நேயமென மதித்தே நீர் செய்திருந்தால்

ஒருவார்த்தை போதுமன்றோ ஓய்வுபெறும் போரங்கே!

கருவிலிருப் பதெல்லாம் கதிரையது இழக்காத கடமை

இறையாண்மை என்றுசொல்லி ஈவிரக்க மில்லாது

மறத்தமிழன் குரலையங்கே மறியலிலே போடுகின்றீர்

நயவுரைகள் வரித்தெழுதி நல்லவனாய் அகிலத்தில்

திமுக நாமத்தால் திகழுமொரு தீந்தமிழே!

அல்லறு தமிழர்க்காய்; உணவருந்தா விரதத்தை

ஏற்றநல் போராட்டம் எடுத்துமே செய்தங்கே

அரசாங்கம் காக்கின்ற ஆருயிரின் தமிழ்தாத்தா

முத்துவேல் பெற்றெடுத்த தமிழினத்தின் கருணைநிதி

சாதலிலும் தமிழருள்ளே உம்நாமம் மனத்திருப்ப

சாற்றுகிறோம் கண்ணீரால் எமதினமழிவது தானறிந்து

நாவாலும் எழுத்தாலும் நாம்வழங்கும் கவிக்கண்ணீர்

நீர்வாழ நாம்வழங்கும் நல்வாழ்த்து இதுவன்று

காவுகொண்ட தமிழனத்தின் கடைசியொரு சாபமே!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்தத்தில் ஊறிவிட்ட நாடகத்தை

எப்படித்தான் பிரித்தெடுப்பது?

நாயின் வாலை நிமிர்த்த முடியுமா?

நாமெல்லாம் முட்டாள்கள்

என்பது தான்

அவர் நினைப்பு

படிக்காத பாமரர்

என்று நினைத்தாரோ, இல்லை

இலிச்சவாயர்கள் என்று தான் நினைத்தாரோ

இல்லை இல்லை மனிதனுக்கு

வயது போனதால்

வந்த வினை

இடித்துரைக்க யாருமில்லை

இஷ்டத்துக்கு நடிக்கின்றார்

நடிக்கட்டுமே...நமக்கென்ன

நகர்த்தலாம் பொழுதை வேடிக்கை பார்த்து

இப்போது நாமுள்ள நிலையில்

இப்படியும் ஜொள்ளு சபா தேவைதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.