Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

90 நிமிடங்கள் மகிந்தவுடன் பேசியதையடுத்து மேனன், நாராயணன் உடனடியாகவே டில்லி திரும்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரமான பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றைரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திவிட்டு உடனடியாகவே புதுடில்லி திரும்பியுள்ளனர்.

menan

வன்னியின் தற்போதைய போர் நிலை தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களுடைய பராமரிப்பு தொடர்பாகவுமே இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாகப் பேசப்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாகத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

புதுடில்லியில் இருந்து இந்தியாவின் சிறப்பு வானூர்தி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை வந்தடைந்த இந்த இருவரும் உடனடியாகவே அங்கிருந்து உலங்குவானூர்த்தி ஒன்றின் மூலம் அரச தலைவரின் செயலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனை முன்னிட்டு இள்று காலை முதல் கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அரச தலைவரின் செயலகத்தில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்கள் மிகவும் நட்புறவுடன் இருந்ததாகத் தெரிவித்த சிறிலங்கா அரச தலைவர் செயலக வட்டாரங்கள், தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவே இரு தரப்பினரும் ஆராய்ந்ததாகவும் தெரிவித்தன.

இருந்தபோதிலும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தத்தை இந்தியா கொடுத்ததா என்பதையிட்டு எந்தத் தகவல்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

இதேவேளையில் இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்தியத் தரப்பில் இருந்து இதுவரையில் கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இன்று இரவு கொழும்பு திரும்பும் சிவ்சங்கர் மேனனும், நாராயணனும் தமது பேச்சுக்கள் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு விளக்குவார்கள் எனத் தெரிகின்றது.

இன்றைய பேச்சுக்களில் சிறிலங்காவுக்கான இந்தியாவின் தூதுவர் அலோக் பிரசாத், அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

http://www.nankooram.com/indian-delegation-meets-the-mahinda

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை பத்தி கதைச்சிருக்கப் போகினம்

  • கருத்துக்கள உறவுகள்

எதனை கதைத்தாலும் தமிழருக்கு சாதகமானது இல்லை என்பது மட்டும் உறுதி.

தமிழருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் சிறிய சாதகமான நிலையை எப்படி மாற்றியமைப்பது என்று கதைத்திருப்பார்கள். அவர்களுக்கும் விழிபிதுங்கும் காலம் வெகு தூரத்திலில்லை.

ஐ.நா. அலுவலகர்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்வதற்கான அனுமதியை வழங்க சிறிலங்கா 'கொள்கையளவில்' இணக்கம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் இடம்பெறும் பாதுகாப்பு வலயப் பகுதிக்குச் செல்வதற்குக் கொள்கையளவில் தாம் இணங்குவதாக சிறிலங்கா அரசாங்கம் இன்று அறிவித்திருக்கின்றது.

பாதுகாப்பு வலயப் பகுதியில் பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவது தொடர்பாகக் கவலை வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்தப் பகுதிக்கு ஐ.நா.வின் மனிதாபிமானப் பணியாளர்களின் குழு ஒன்றை அனுப்பிவைக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் விவகார அமைச்சர், "கொழும்பில் பணிபுரியும் ஐ.நா. அலுவலர்கள் பாதுகாப்பு வலயத்துக்குச் செல்வதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் கொள்கையளவில் இணங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள ஐ.நா. அலுவலர்கள் இங்கு செல்வதற்கான நடைமுறை ஏற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள போதிலும், அந்தப் பகுதியில் போர் நடைபெற்றுக்கொண்டிருப்பது இதனைச் சாத்தியமற்றதாக்கி விடலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

"பாதுகாப்பு வலயத்துக்குச் செல்லவிருக்கும் குழுவில் யார் இடம்பெறுவார்கள், எவ்வளவு காலத்துக்கு அவர்கள் அங்கு தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளார்கள், அங்கு அவர்கள் எவ்வாறான பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள் என்பன போன்ற விடயங்களை முதலில் எமக்குத் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, "அதன் பின்னரே அதற்கான இறுதி அனுமதி எம்மால் வழங்கப்படும்" எனவும் குறிப்பிட்டார்.

http://www.puthinam.com/

இதற்குத்தான் வந்திருப்பார்கள் அந்த இரு கள்வர்களும்.

கொழும்பில் மேனன்-நாராயணன்: பயன் இருக்குமா?

இலங்கைக்கு மறுபடியும் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை மத்திய அரசு அனுப்பியுள்ளது. உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இலங்கை அரசை இவர்கள் இருவரும் வலியுறுத்துவார்களாம்.

முன்னதாக இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மேனன், நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்பட்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். உடனடியான சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இலங்கை நிலவரத்தை மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் இந்திய அரசு கவனித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போர் பகுதிகளில் அப்பாவித் தமிழர்களின் நிலை பெரும் கவலை அளிக்கிறது.

பாதுகாப்பு வளையப் பகுதியிலிருந்து 1 லட்சம் தமிழர்கள் அரசுப் பகுதிகளுக்கு வந்திருப்பதாக அறிகிறோம். இருப்பினும் இன்னும் பல்லாயிரக்ணக்கான அப்பாவிகளின் நிலை கவலைக்குரியதாகவே உள்ளது.

எனவே எங்களது கவலைகளை இலங்கைக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய அரசு இரண்டு தூதர்களை இலங்கைக்கு அனுப்புகிறது என்று கூறியிருந்தார்.

உடனே கருணாநிதி வரவேற்பு...

கூட்டத்தில் இரு தூதர்களை அனுப்ப எடுக்கப்பட்டமுடிவை ப.சிதம்பரம், கருணாநிதிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

அதற்கு கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்த கருணாநிதி, இந்த முடிவை பெரிதும் வரவேற்பதாகவும், போர் நிறுத்தம் செய்வதற்கு அவர்கள் எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு போய் சேர்ந்தனர்..

இந் நிலையில் நாராயணும் மேனனும் இன்று கொழும்பு போய் சேர்ந்தனர். அதிபர் ராஜபக்சேவை அவரது வீட்டில் இருவரும் சந்தித்துப் பேசுவர்.

இலங்கை விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்படிகள் செய்தவர்கள் இந்த இரு அதிகாரிளே என்று தமிழகத்தில் பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில் மீண்டும் இவர்களை அனுப்பி என்ன தீர்வு கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை.

இலங்கை விவகாரத்தில் ஜே.என்.தீட்சித்துக்குப் அடுத்தபடியாக மகா குழப்படி செய்ததில் இந்த இருவருக்கும் முழுப் பொறுப்புண்டு.

தீட்சித் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது தான் அமைதி காப்புப் படையை அனுப்பி 1300 இந்திய வீரர்கள் பலியாகவும், இலங்கையில் யாருடைய ஆதரவும் இல்லாத வரதராஜ பெருமாளை முதல்வராக்கியும், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் என்ற மாபெரும் தவறையும் செய்தார். அன்றைய பிரதமர் ராஜி்வ் காந்தியை தவறாக வழி நடத்தினார்.

அதே போல நாராயணனும் மேனனும் இப்போது குழப்பியடித்ததில் அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் உயிர்கள் பலியாகிவிட்டன.முன்னாள் வெளியுறவுத்துச் செயலாளர்களான முச்குந்த் துபே, ஜி.பார்த்தசாரதி போன்ற இந்த விவகாரத்தை முழுமையாக உணர்ந்த அதிகாரிகளிடம் யோசனை கேட்டு நடந்திருந்தால் பெரும் தவறுகளை மத்திய அரசு தவி்ர்த்திருக்கலாம், ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரையும் காத்திருக்கலாம்.

போருக்குப் பின்..யோசிக்க ஆரம்பித்த இந்தியா!

இந் நிலையில் போருக்குப் பிந்தைய நிலையை எப்படி சமாளிப்பது, என்ன மாதிரியான திட்டங்களை அங்கு அமல்படுத்துவது என்பது குறித்து இந்திய அரசு, இலங்கையுடன் சேர்ந்து யோசித்து வருகிறதாம். இதுதொடர்பாக விவாதிக்கவே மேனனும், நாராயணனும் கொழும்பு போயிருப்பதாகவும் தெரிகிறது.

அதிபர் ராஜபக்சேவுடன் இதுகுறித்துதான் பேசப் போவதாகவும் தெரிகிறது. போர் நிறுத்தம் குறித்து இவ்வளவு எவ்வளவு தூரம் அதிபர் ராஜபக்சேவிடம் அழுத்தம் தருவார்கள் என்று தெரியவில்லை.

பிரிட்டன் அமைச்சரும் பிரணாப் பேச்சு...

இதற்கிடையே, இலங்கையில் போருக்குப் பிந்தைய சூழ்நிலை குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டை போனில் பிடித்து பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் சமீபத்தில் இந்திய டாக்டர்கள் குழுவால் பலமோடை பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனை, வவுனியாவுக்கு மாற்றப்படுகிறதாம்.

இதற்கிடையே செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் சரசாய் விஜயரத்னே கூறுகையில், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் சிகிச்சைக்கு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை உடனடியாக நல்ல மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.

தற்போது போர்க்களப் பகுதியில் இரண்டே இரண்டு மருத்துவமனைகள்தான், அதுவும் கூட மிகச் சிறியவை உள்ளன என்கிறார் கவலையுடன்.

http://thatstamil.oneindia.in/

என்னத்தை பத்தி கதைச்சிருக்கப் போகினம்

மிச்சமிருக்கிற சனத்தை எப்படி அடக்கம் செய்யலாமெண்டுதானாக்கும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சி மிஞ்சிப் போனால் கருணாநிதியை எப்படிக் காப்பாற்றலாம் என்று கதைத்திருப்பினம், காங்கிரஸின் தோல்வியை எப்படித் தடுக்கலாம் என்று கதைத்திருப்பினம். அதுக்காக 2 நாள் மோதல் நிறுத்தம் கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.