Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறி லங்கா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராகிவருகின்றது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடயங்களில் இருந்து இடம்பெயர்வது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் ரொபேட் வூட் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், யுத்த சூனிய வலையத்தினுள் குண்டுத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களின் அவலங்களும் அதிகரித்து செல்வதாக நம்பகமான தகவல்கள் எமக்கு நாளாந்தம் கிடைத்துவருகின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தை யுத்த சூனியப்பிரதேசத்தினுள் மக்களின் நலன்கருதி குண்டுத்தாக்கதல்களை மேற்கொள்ளவேண்டாம் என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிக்கின்றோம். அதேவேளை பொதுமக்களை யுத்தசூனியப்பிரதேசத்தில் இருந்து வெளியேற தமிழீழ விடுதலைப் புலிகள் தடைகள் எதையும் விதிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஐ.நா.முகவர்களை அனுமதிக்கவேண்டும் என்ற ஐ.நா.செயலாளரின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் வலியுறுத்துகின்றது. அதை நாம் பலமாக ஆதரிக்கின்றோம்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா நிலவரம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார். வேறு பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த விடயம்குறித்து விவாதித்துள்ளார்.

அவர் இந்த விடயம் குறித்து யார் யார் உடன் எல்லாம் விவாதித்துள்ளார் என்பது குறித்து என்னால் எந்த தகவல்களையும் வழங்கமுடியாது. அவர் சிறிலங்கா தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும் அக்கறை கொண்டவராக இருக்கின்றார்.

சிறிலங்கா பிரச்சினைகள் குறிதது நாம் தொடர்ந்தும் நெருக்குதல்களை கொடுத்துவருகின்றோம். நாம் செயற்பட்டே அகவேண்டிய மிகவும் முக்கியமான வெளிநாட்டுக்கொள்கை இது. நாம் தொடர்வோம்.

சிறிலங்கா அரசின் மீது கடினமான ஒரு நிலைபாட்டை அமெரிக்கா எடுக்கவுள்ளது என்பதை இந்த கருததுக்கள் கோடிட்டு காட்டுகின்றது. கடந்தாரம் அமெரிக்க வெளியுறவு தொடர்பான குழுவின் முன் கருத்து வெளியட்டபோது, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிக் குறிப்பட்டபோது அவர்களை கிளாச்சியாளர்கள், என்ற பதத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மாறாக பயங்கரவாதிகள் என்று குறிப்பிடவில்லை. இதிலிருந்து ஒபாமாவுடைய நிர்வாகம் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான கொள்கையினை புஸ் நிர்வாகத்தைப்போலன்றி அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள உத்தேசித்திருப்பதும் இதிலிருந்து தெரியவருகின்றது.

இதுகுறித்து நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா அரசாங்கத்தின் எறிகணை வீச்சுக்களை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது. உதவி வழங்கும் அமைப்புக்கள் அங்கு சென்று மக்களுக்கு உதவுவதை சிறி லங்கா அரசாங்கம் தடுக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டது.

இதற்கு முந்திய தினம் வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கையில் முல்லைத்தீவு பிரதேசத்தின் செய்மதி நிழற்படத்தினை அமெரிக்கா மிகத் தெளிவாக காட்டக்கூடியவாறு வெளியிட்டுள்ளது.

சர்வதேச நிறுவனங்களையும், ஊடகங்களையும் அப்பிரதேசங்களுக்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுத்தாலும், அங்கே என்ன நடக்கின்றது என்பதை அமெரிக்காவால் கூறமுடியும் என்பதை சிறிலங்கா அரசாங்கத்திற்கு உணர்த்தவே இவ்வாறு இந்த செய்மதிப்படங்கள் அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ளது எனக் கருதமுடியும். பொது மக்களின் வாழ் விடங்களைக் காடடுவதாக மிகத் தெளிவாக, மிக நெருக்கமான படங்கள் உள்ளன.

நன்றி பதிவு

:huh:

தச்சல அமரிக்கா ஒரு நடவடிகையும் எடுக்காமல் அப்பிடியே கைவிட்டா என்ன ஆகிறது.

அய்யோ நினைக்கவே பயமாக இருக்கிறது.

மூண்றாம் தரப்பிடம் ஆயுதங்களை புலிகள் எனும் போதே அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவாகி இருக்கிறது...

அதை விட முக்கியமாக RAW வின் கையாள் கலைஞர் ஈழ மக்களுக்காக திடீர் எண்று உண்ணாவிரதம் இருந்தது சந்தேகத்தை இன்னும் வலுவாக்குகிறது...

ஒண்று மட்டும் தெளிவாக இருக்கிறது... கலைஞர் போராட்டம் நடத்தும் போதெல்லாம் ரஜபக்ஸ்ச சதகமாக நடக்கிறார்... கலைஞரும் ராஜபக்ஸவும் சேர்ந்துதான் நாடகமாடி திட்டம் போட்டு தமிழர்களை முட்டாள் ஆக்குவதாக நினைக்கிறார்கள்...

சீனா, ரஷ்யா எமக்கு அதரவாக உள்ளது, அமெரிக்கா தலையிட நினைத்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்குமாம் - ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

வேலுப்பிள்ளை பிரபாகரனையும் சகாக்களையும் பாதுகாப்பதற்காகவே மூன்றாம் தரப்பினரிடம் விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இக்கோரிக்கைக்கு எதிராக மக்களை அணிதிரட்டி இவ்வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளோம் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் விடுதலைப் புலிகளின் சரித்திரம் முற்று முழுதாக அழிக்கப்பட்டு விடும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் முன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபட் வூட்ஸ் தெரிவித்துள்ளமை தொடர்பாக கேட்ட போதே ஹெல உறுமயவின் வெளிவிவகார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சிறிலங்கா, அமெரிக்காவின் காலனித்துவ நாடல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எமது பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை. அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே தான் பிரச்சினை இருக்கின்றது. எனவே, நாம் தீர்த்துக் கொள்வேம்.

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளின் தலைவர் பிரபாகரனையும் சகாக்களையும் ஏன் அமெரிக்கா பாதுகாக்க முயல்கிறது. இதன் பின்னணியில் யார் உள்ளனர். ஜனாதிபதி ஒபாமாவையும் அமெரிக்க அரசாங்கத்தையும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளே ஆட்டுவிக்கின்றனர். எனவே, அந்த அடிப்படைவாதிகளின் முகவர்களான விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர், அமைச்சரவை அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கது. அத்தோடு, அமெரிக்காவின் இந்த பலாத்காரத் தலையீட்டை எதிர்த்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.

இதனையும் மீறி இராணுவ ரீதியில் அமெரிக்கா தலையிட முனைந்தால் இலங்கையர்கள் அனைவரையும் வீதியில் இறக்கி தொடர் போராட்டங்களை நடத்தவும் பின்நிற்கமாட்டோம். சிறிலங்காவுக்கு சீனாவினதும் ரஷ்யாவினதும் ஆதரவு உண்டு. எனவே, எமக்கெதிராக செயற்பட்டால் விளைவுகள் விபரிதமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர், அமைச்சரவை அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கது. அத்தோடு, அமெரிக்காவின் இந்த பலாத்காரத் தலையீட்டை எதிர்த்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.

இதனையும் மீறி இராணுவ ரீதியில் அமெரிக்கா தலையிட முனைந்தால் இலங்கையர்கள் அனைவரையும் வீதியில் இறக்கி தொடர் போராட்டங்களை நடத்தவும் பின்நிற்கமாட்டோம். சிறிலங்காவுக்கு சீனாவினதும் ரஷ்யாவினதும் ஆதரவு உண்டு. எனவே, எமக்கெதிராக செயற்பட்டால் விளைவுகள் விபரிதமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

http://www.pathivu.com/

சிங்களவன் உறுதியுடன் தான் இருக்கிறான் இந்தியனை நம்பக்கூடாது என்பதில். இது அந்த இந்தியக் கொலைகாரக் கூட்டத்திற்கு விளங்காது. ரஸ்யாவும் சீனாவும் தான் தங்களின் ஆதரவு நாடுகள் அவங்கள் வைப்பாங்க ஆப்பு

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்கா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராகிவருகின்றது !

கண்டனம் தெரிவிக்கவோ :huh::unsure: ???

  • கருத்துக்கள உறவுகள்

மூண்றாம் தரப்பிடம் ஆயுதங்களை புலிகள் எனும் போதே அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவாகி இருக்கிறது...

அதை விட முக்கியமாக RAW வின் கையாள் கலைஞர் ஈழ மக்களுக்காக திடீர் எண்று உண்ணாவிரதம் இருந்தது சந்தேகத்தை இன்னும் வலுவாக்குகிறது...

ஒண்று மட்டும் தெளிவாக இருக்கிறது... கலைஞர் போராட்டம் நடத்தும் போதெல்லாம் ரஜபக்ஸ்ச சதகமாக நடக்கிறார்... கலைஞரும் ராஜபக்ஸவும் சேர்ந்துதான் நாடகமாடி திட்டம் போட்டு தமிழர்களை முட்டாள் ஆக்குவதாக நினைக்கிறார்கள்...

தயாவின் கருத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டிய பல விடயங்கள் உள்ளன!

இந்த நேரத்தில் அமெரிக்க துணை தூதரகம் முன் போராடும் நாம் மிக உறுதியுடனும் அமைதியுடனும் போராட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார சந்தை யாரிடம் என்ற போட்டிதான் திரைமறைவில் நடக்கின்றது. இப்போது அழிவு தமிழர்களுக்கு என்றாலும்.

பின்பு ஒருவரிடம் போய்சேர்ந்த சந்தையை குளப்ப மற்றவர் செய்யும் முயற்சியில் பாதிக்கபட போவது சிங்கள ஏழைமக்களே. மொத்தத்தில் ஸ்ரீலங்காவில் ஒரு முழுமையான அமைதியென்பது இப்போதைக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

இலங்கை சிங்கள அரசு தன்னை நம்பி புலிகளுடன் ஒரு சாதக சூழலை ஏற்படுத்தினால் மட்டுமே உண்டு. தவறின் விபச்சாரியின் நிலை விபச்சாரம் செய்யும் ஸ்ரீலங்காவிற்கு வருவதில் எந்த வியப்பும் இல்லை. இளமையும் அழகும் இருக்கும்போது ஏராளமாக அள்ளி கொடுப்பார்கள் பின்பு தமது உத்தம பாத்திரத்தை தக்கவைக்க அவர்களே கல்லால் எறிவார்கள்.

இவ்வளவு நாளும் அமைதியாக இருந்துவந்த அமெரிக்கா தற்போது வாய்திறக்க ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் அமெரிக்காவிடம் மிகத் துரிதமானதும் நியாயமானதுமான நடவடிக்கைகளைத்தான் தமிழினம் எதிர்பார்க்கின்றது. அவ்வகையில் அமெரிக்காவின் செயற்பாடுகள் மிக மெதுவாகவே இருப்பது கவலை அளிக்கின்றது.

இணைப்பு:

அமெரிக்காவை நோக்கி திசைதிரும்பும் தமிழ்மக்களின் கோரிக்கைகள்

உலகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சர்வதேசத்தினை நோக்கி போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்நிலையில், அவர்களுடைய பார்வை தற்பொழுது அமெரிக்காவை நோக்கித் திரும்புவதை உணரமுடிகிறது.

இதுவரை காலமும், இந்தியாவை பிரதானமாக வைத்து எழுப்பப்பட்ட குரல்களும் ஐரோப்பிய நாடுகளை நோக்கியதான கோரிக்கைகளும் இன்றைவரைக்கும் எதுவித பலனையும் தராத நிலையில்,உலகின் நீதிபதி என தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவை நோக்கி தமது நீதிக்கான கோரிக்கைகளை உலகத்தமிழ்மக்கள் முன்வைக்க முனைந்துள்ளனர்.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டிய இந்தியாவே ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள இனவழிப்புப் போருக்கு சகல வழிகளும் துணைநிற்கின்றது. இந்திய மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழக மற்றும் உலகத் தமிழ்மக்களனைவரும் ஒருசேர வேண்டுகோள் விடுத்தும் கெஞ்சி மன்றாடியும் அது தமிழ்மக்கள் மீது இரக்கங் காட்டவேயில்லை.போரை நிறுத்தி வன்னி மக்களை காப்பாற்றுவதற்கான அடிப்படை மனிதாபிமான காரியத்தையேனும் செய்யவில்லை என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்ததுடன் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளும் தம்பங்கிற்கு ஒருசில அறிக்கைகளை மாத்திரம் தெரிவித்துவிட்டு பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.இலங்கையரசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.