Jump to content

குட்டிக்கதை

Recommended Posts

Posted

நான் கைவைச்சதிலையோ தெரியேல்லை. கதை அப்படியே நிண்டிட்டுது. :)

அன்புடன்

மணிவாசகன்

அப்படி இல்லை அங்கிள் கொஞ்சம் குழப்பாமா இருக்குது பொறுங்கோ வாசிச்சு என்ன எழுதுவம் என்று யோசிக்கிறன், :oops:

  • Replies 313
  • Created
  • Last Reply
Posted

பாகம் - 8

"முடிவும் கடசியுமா சொல்லுறனம்மா; என்னால் இலங்கைக்கு வரவே முடியாது"

"உனக்கு வரமுடியாட்டி, உன்னோட நான் தான் இங்க இருக்க வேண்டும். அப்பா மட்டும் போயிற்று வரட்டும்"

" நோ நோ அப்பாவும் போறதில்லை! அங்க யாரும் போறதில்லை.

" என்னடா நீ சின்னக்குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறாய், பத்து வருடங்களுக்கு பிறகு அவர் தன் தாயாருக்கு சுகமில்லையெண்டு நாட்டுக்கு போய் வர கூப்புட்டா நீயும் வரமாட்டன் அப்பாவையும் போக விடமாட்டன் என்று அடம்பிடிக்கிறாயே??

அங்கை நாட்டு நிலமை உங்களுக்குத் தெரியுந்தானே. அங்கை போன இடத்திலை இவருக்கு ஒண்டு எண்டால் ஆர் என்ன செய்யிறது?"

அவனது வாதத்தில் உண்மை இருப்பது போல் பட்டாலும் கணவனின் ஆசையை தட்டிக்கழிக்க செல்லம்மாவால் முடியவில்லை.

"அங்கை சனம் இல்லையே. பாவம் தாயைப் பற்றின யோசினையிலை அவர் ரெண்டு மூண்டு நாளாச் சரியாச் சாப்பிடவும் இல்லை"

அவள் முடிக்கவில்லை . அதற்குஅவன் சன்னதங் கொள்கிறான்.

"அம்மா பேக்கதை கதையாதையணை. இலங்கைக்குப் பொயிட்டு வாறதெண்டால் இப்ப ஆயிரம் டொலருக்கு மேலை வேணும். நானும் தேவியும் இஞ்சை குளிருக்குள்ளை கிடந்து மாரடிக்கிறம்.உங்களுக்கு புளிப்பு மெத்திப்போச்சுது... .. .

தொடரும் :arrow:

Posted

"ஓஒ அப்படியா விசயம்" என்றா அம்மா "நானும் நினைத்தேன் ஏதோ அப்பாவில் உள்ள பாசத்தினால் தான் அங்கு போய் பிரச்சனைக்குள் மாட்ட வேண்டாம் என்று சொல்கிறாய் ஆக்கும் என்று கொஞ்ச நேரம் உள்ளம் குளிர்ந்து விட்டேன். நீயும் உன்ரை மனிசியும் கஸ்டப்பட்டு உழைத்த காசில் அனுப்ப வேண்டாம். 10 வருடமாக எமக்கு வந்த வெல்பேயர் காசு இருக்குத்தானே. செலவுக்கு கொஞ்ச காசை எடுத்து விட்டு மிகுதி உங்களிடம் தானே தாருகின்றோம். அதி்ல் கொஞ்சத்தை எடுத்து அப்பாவை அனுப்பி விடு என்று பட பட என பேசினாள் அம்மா.

அம்மாவின் பேச்சு வித்தியாசமாக போவதை கண்டு "அம்மா" என்று கத்தி இடைமறித்தான்.

தொடருங்கள் :arrow:

Posted

:!: :!: :!: :!: :!: :!: :!:

:? :? :? :? :? :P :lol:

Posted

:!: :!: :!: :!: :!: :!: :!:

:? :? :? :? :? :P :lol:

என்ன இத்தனை குறிகள் போடுறியள். தொடர்ந்து கதையை எழுதுறது.???

Posted

அதற்குள் கோலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதால் அவசரமாய்ச் சென்று கதவைத் திறக்கிறான்.

அங்கே சுந்தரம் நின்று கொண்டிருக்கிறார்.

சுந்தரமும் அவனைப் போலவே ஊரிலே பெரும் புள்ளி.

அவன் தலைவராகக் கடமையாற்றும் புலம் பெயர் முதியோர் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர். கையிலே பேப்பர் கட்டொன்றுடன் வந்திருந்தார்...

Posted

என்ன சுந்தரம் பேப்பர் கட்டுடன் இந்தப் பக்கம்.

இல்லையடாப்பா உங்க உந்த தமிழ் கடைக்கு வந்தன்

அதுதான் ஓசிப் பேப்பர் எடுத்துட்டு வாறன்.

என்ன ஊருல நடக்குது என்று பார்ப்பம் எண்டு.

ஓ சரியடா, ஆமா ஊர் நிலவரம் என்னமாதிரி??

ஊர் நிலவரம் இருக்கட்டுமடா நான் வரும் போது என்ன ஒரே சத்தமாக இருந்தது...

தொடரும்.. :arrow:

  • 3 weeks later...
Posted

என்ன குட்டிக்கதை தூங்கிட்டுது யாரவது தொடருங்கப்பா. :roll: :oops:

Posted

"அதொண்டுமில்லையண்ணை, அப்பா இலங்கைக்குப் போகவேணுமெண்டு நாண்டு கொண்டு நிக்கிறார். எங்கடை கஸ்ரம் அவையளுக்கு விளங்குதில்லை. அதுதான் கொஞ்சம் சத்தம் போட்டிட்டன்"

"ஓமடா தம்பி, சரியாய்ச் சொன்னாய், எங்கடை வீட்டிலையும் அம்மா ஒரே ஆக்கினை. இலங்கைக்குப் போக வேணுமாம். அப்பரும் இடைக்கிடை போன எடுத்து இவவைக் கிளறி விடுறார் வரச் சொல்லி.

இவ உடனை வெளிக்கிட்டுப் போனா சின்னனுகளை ஆர் பாக்கிறது."

அலுத்துக் கொள்கிறார் சுந்தரம். ..................

  • 1 month later...

என்ன குட்டிக்கதை அப்படியே நிக்குது. யாராவது தொடருங்கப்பா.. ??????

  • 5 months later...
Posted

ம்ம் தொடரலாம் அக்கா..

எங்கே நீங்களே வருவது குறைவே அப்போ எப்பிடி? ;)

எனக்கு கதை பெருசா வராது..கேட்க தான் பிடிக்கும்..:

சரி எடுத்து விடுகிறேன்..வேறு உறவுகள் கற்பனை உள்ளவர்கள் மேலெ உள்ள

கதைகளை வாசித்து விட்டு...தொடர்வார்கள் என்ற

நம்பிக்கையில்.... :o

Posted

அவர்களிருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அவனது தகப்பனார் அங்கே வருகிறார்

சுந்தரத்தைப் பார்த்து சொல்கிறார் "இப்பத்தையாண் பிள்ளையளுக்கு எங்கே பாசமெல்லாம் புரியா போகுது" குறுக்கிட்ட அவன் "அப்பா நாங்க உங்கள பாத்துக்கலியா......?" "நீ எங்கள பாத்துக்குற, அதே போல நான் என் அம்மாவ பாக்க கூடாதா....?" என்கிறார் தகப்பன்

Posted

ஆகா நன்றி வானவில்..தொடருங்கள்...பரீட்சை முடிய நானும் வந்து முயற்சிக்கிறேன்

  • 4 weeks later...
Posted

அக்கா தொடருவமா?

இந்தக்கதையை முடிச்சுட்டு புதுசா தொடங்குவம் வாறன் பொறுங்கோ இதை முடிச்சுட்டு

Posted

முடியுங்கள்

நான் நாலி சந்திக்கின்றேன்

ஊர் சுத்த கிளம்புறேன்

Posted

பாகம் - 8

"முடிவும் கடசியுமா சொல்லுறனம்மா; என்னால் இலங்கைக்கு வரவே முடியாது"

"உனக்கு வரமுடியாட்டி, உன்னோட நான் தான் இங்க இருக்க வேண்டும். அப்பா மட்டும் போயிற்று வரட்டும்"

" நோ நோ அப்பாவும் போறதில்லை! அங்க யாரும் போறதில்லை.

" என்னடா நீ சின்னக்குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறாய், பத்து வருடங்களுக்கு பிறகு அவர் தன் தாயாருக்கு சுகமில்லையெண்டு நாட்டுக்கு போய் வர கூப்புட்டா நீயும் வரமாட்டன் அப்பாவையும் போக விடமாட்டன் என்று அடம்பிடிக்கிறாயே??

அங்கை நாட்டு நிலமை உங்களுக்குத் தெரியுந்தானே. அங்கை போன இடத்திலை இவருக்கு ஒண்டு எண்டால் ஆர் என்ன செய்யிறது?"

அவனது வாதத்தில் உண்மை இருப்பது போல் பட்டாலும் கணவனின் ஆசையை தட்டிக்கழிக்க செல்லம்மாவால் முடியவில்லை.

"அங்கை சனம் இல்லையே. பாவம் தாயைப் பற்றின யோசினையிலை அவர் ரெண்டு மூண்டு நாளாச் சரியாச் சாப்பிடவும் இல்லை"

அவள் முடிக்கவில்லை . அதற்குஅவன் சன்னதங் கொள்கிறான்.

"அம்மா பேக்கதை கதையாதையணை. இலங்கைக்குப் பொயிட்டு வாறதெண்டால் இப்ப ஆயிரம் டொலருக்கு மேலை வேணும். நானும் தேவியும் இஞ்சை குளிருக்குள்ளை கிடந்து மாரடிக்கிறம்.உங்களுக்கு புளிப்பு மெத்திப்போச்சுது... ..

"ஓஒ அப்படியா விசயம்" என்றா அம்மா "நானும் நினைத்தேன் ஏதோ அப்பாவில் உள்ள பாசத்தினால் தான் அங்கு போய் பிரச்சனைக்குள் மாட்ட வேண்டாம் என்று சொல்கிறாய் ஆக்கும் என்று கொஞ்ச நேரம் உள்ளம் குளிர்ந்து விட்டேன். நீயும் உன்ரை மனிசியும் கஸ்டப்பட்டு உழைத்த காசில் அனுப்ப வேண்டாம். 10 வருடமாக எமக்கு வந்த வெல்பேயர் காசு இருக்குத்தானே. செலவுக்கு கொஞ்ச காசை எடுத்து விட்டு மிகுதி உங்களிடம் தானே தாருகின்றோம். அதி்ல் கொஞ்சத்தை எடுத்து அப்பாவை அனுப்பி விடு என்று பட பட என பேசினாள் அம்மா.

அம்மாவின் பேச்சு வித்தியாசமாக போவதை கண்டு "அம்மா" என்று கத்தி இடைமறித்தான்.

அதற்குள் கோலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதால் அவசரமாய்ச் சென்று கதவைத் திறக்கிறான்.

அங்கே சுந்தரம் நின்று கொண்டிருக்கிறார்.

சுந்தரமும் அவனைப் போலவே ஊரிலே பெரும் புள்ளி.

அவன் தலைவராகக் கடமையாற்றும் புலம் பெயர் முதியோர் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர். கையிலே பேப்பர் கட்டொன்றுடன் வந்திருந்தார்

என்ன சுந்தரம் பேப்பர் கட்டுடன் இந்தப் பக்கம்.

இல்லையடாப்பா உங்க உந்த தமிழ் கடைக்கு வந்தன்

அதுதான் ஓசிப் பேப்பர் எடுத்துட்டு வாறன்.

என்ன ஊருல நடக்குது என்று பார்ப்பம் எண்டு.

ஓ சரியடா, ஆமா ஊர் நிலவரம் என்னமாதிரி??

ஊர் நிலவரம் இருக்கட்டுமடா நான் வரும் போது என்ன ஒரே சத்தமாக இருந்தது... அதொண்டுமில்லையண்ணை, அப்பா இலங்கைக்குப் போகவேணுமெண்டு நாண்டு கொண்டு நிக்கிறார். எங்கடை கஸ்ரம் அவையளுக்கு விளங்குதில்லை. அதுதான் கொஞ்சம் சத்தம் போட்டிட்டன்"

"ஓமடா தம்பி, சரியாய்ச் சொன்னாய், எங்கடை வீட்டிலையும் அம்மா ஒரே ஆக்கினை. இலங்கைக்குப் போக வேணுமாம். அப்பரும் இடைக்கிடை போன எடுத்து இவவைக் கிளறி விடுறார் வரச் சொல்லி.

இவ உடனை வெளிக்கிட்டுப் போனா சின்னனுகளை ஆர் பாக்கிறது."

அலுத்துக் கொள்கிறார் சுந்தரம்.

அவர்களிருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அவனது தகப்பனார் அங்கே வருகிறார்

சுந்தரத்தைப் பார்த்து சொல்கிறார் "இப்பத்தையாண் பிள்ளையளுக்கு எங்கே பாசமெல்லாம் புரியா போகுது" குறுக்கிட்ட அவன் "அப்பா நாங்க உங்கள பாத்துக்கலியா......?" "நீ எங்கள பாத்துக்குற, அதே போல நான் என் அம்மாவ பாக்க கூடாதா....?" என்கிறார் தகப்பன்

நிஜம் உறைக்க அப்பாவை நிமிர்ந்து பார்க்கிறான் அவரின் விழிகளில் கண்ட தவிப்பில் அந்த நிமிடமே தனது சம்மத்தைக் கூறி அவனும் அவருடன் அவரின் தாயரைப் பார்க்க முழுமனதுடன் செல்கிறான்.

முற்றும்..

ம்ம் எப்படி முடிக்கிற எண்டு தெரியலை கதை அப்படி இப்படி போய் ஒரு மாதிரி முடிச்சுட்டன் இனி யாராவது புதுக் கதையை தொடங்குங்க

முடியுங்கள்

நான் நாலி சந்திக்கின்றேன்

ஊர் சுத்த கிளம்புறேன்

ஒகே காவ் பண்

நாளைக்கு வந்து புதுக்கதையை நீர் தொடங்கும்

Posted

சரி நான் ஒரு புதிய கதையை தொடங்குகின்றேன்...

ஒரு ஊரில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள். நான்கு பேரும் ஒரே ஊரில் வாழ்ந்தாலும் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி பயின்றார்கள். இதில் முதலாமவன் பெயர் சங்கர், இரண்டாவது நண்பனின் பெயர் பானு, மூன்றாவது நண்பனின் பெயர் கார்த்திக், நான்காவது நண்பனின் பெயர் ஜோ.

ஒருநாள் நான்கு பேரும் வழமைபோல் கிரிக்கட் விளையாடுவதற்காக ஊரில் இருந்த ஒரு ஒதுக்குப்புறமான வெளியிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது....

சங்கர் திடீரென்று தனக்கு தலை சுற்றுவதாய் கூறி அலர சங்கரை வைத்து துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு போன ஜோ தடார் என்று கால் பிரேக் அடிச்சு கிரீச் என்ற சத்தத்துடன் சைக்கிளை நிற்பாட்டினான். பக்கத்தில் இன்னுமொரு சைக்கிளில் கார்த்திக்கை ஏற்றிவந்த பானுவும் உடனடியாக தனது சைக்கிளையும் கால் பிரேக் அடித்து நிற்பாட்ட முயன்ற போது, அவனுக்கு கால் பிரேக் போடுவதில் அவ்வளவு அனுபவம் இல்லாததனால் அவன் தனது குதிக்காலில் தேயல் காயத்தை தேடிக்கொண்டான். அவனது காலில் வெளித்தோல் சிறுபகுதி உரிந்து இரத்தம் சொட்டியது. இப்போது சங்கருக்கு தலைசுற்றல், பானுவுக்கு காலில் காயம் என நான்கு நண்பர்களும் விளையாடப் போகும் வழியில் ஏற்பட்ட விபரீதம் காரணமாக நிலைகுலைந்து நின்றார்கள். இந்நிலையில்...

அருகில் இருந்த சிறு குடிசை வீட்டில் இருந்து வந்த நாய் இவர்களை பார்த்துப் பார்த்து சத்தமிட்டு குரைக்கத் தொடங்கியது. அந்த சிறிய அழகிய பனைஓலையினால் வேயப்பட்ட குடிசையினுள் இருந்து இந்த ஆரவாரங்களை கேட்ட ஒரு பெண் ஒருத்தி விரைவாக வெளியில் என்ன நடக்கின்றது என்று பார்க்க ஓடி வந்தாள். ஆனால், உள்ளே இருந்து "ஆமிக்காரங்கள் வாரங்களோ தெரியாது கவனம் பிள்ளை, வெளியில தலையை காட்டாதை!" என்று சொல்லும் ஒரு எச்சரிக்கைக் குரல் ஒன்று கேட்டது. சில கணங்களிலேயே குரலுக்கு சொந்தக்காரரான அந்த பெண்ணின் அம்மாவும் வெளியில் வந்துவிட்டார்.

"அம்மா யாரோ எங்கட வீட்டி வேலியோரம் சைக்கிளை விழுத்திப் போட்டு நிற்கிறீனம்!" இது மகளின் குரல். "அது யாரும் குடிகாரன்களா இருப்பாங்கள், நீ போகாதை, நான் யாரென்று பார்க்கிற பிள்ளை!" இது தாயின் மறுமொழி.

"மச்சான் இப்ப உனக்கு எப்பிடி இருக்கு?" என்று தலைசுற்றுவதாய் சொன்ன சங்கரிடம் பானு கேட்டான். "அது ஒன்றும் இல்லை மச்சான், நான் மத்தியானம் தோட்டத்தில பயிருக்கு தண்ணி இறைக்கேக்க கனநேரம் மண்ணெண்ணெய் மிசுனுக்கு பக்கத்தில நின்றனான். அதான் ஏதும் செய்திச்சோ தெரியாது. இப்ப எனக்கு எல்லாம் போட்டுது! நீதான் தேவையில்லாமல் அருமந்த காலை பிச்சுப்போட்டாய்!" இவ்வாறு சங்கர் பதிலளித்தான். "எட நாயே உனக்கு நான் எத்தனை நாள் சொன்னனான், ஒழுங்கா கையில இருக்கிற பிரேக்கை போடு, காலால போடாதையென்று? இன்றைக்கு வீணா காலில காயத்தோட நிற்கிறாய்!" ஜோ சொன்னான். "சரி, சரி அவனைப் பேசுவதில ஒரு பிரியோசனமும் இல்ல, காலுக்கு அவனுக்கு ஏதாவது மருந்து போடவேணுமோ இல்லாட்டி ரத்தம் தன்பாட்டில இப்ப நின்றுடுமோ?" கார்த்திக் கேட்டான்.

"எட தம்பிமார், ஆமிக்காரன் வார நேரத்தில ஒழுங்கையுக்க நின்று என்னடா பிள்ளைகள் செய்யுறீங்கள்? நேரகாலத்துக்கு வீடுகளிக்கு போய் சேருங்கோ பிள்ளைகள்!" இவ்வாறு அன்புடனும், அதிகாரத்துடனும் ஓலைக்குடுசை தாய்க்காரி இவர்களிடம் சொன்னாள். திடீரென்று "இல்லையம்மா ஒரு அண்ணாக்கு காலில காயம் பட்டு இரத்தம் வருது போல இருக்கு, இந்தாங்கோ இந்த பிளாஸ்ட்ரை அவேளிடம் குடுங்கோ!" என்று மகள்காரி பதிலளித்தாள். நான்கு நண்பர்களின் சம்பாசணையை வேலிக்குப் பின்னால் நின்று கேட்ட அந்தப் பெண் சுதர்சினி உடனேயே குடிசையினுள் ஓடிச்சென்று அவரச தேவைக்காக தான் கடையில் 50 சதம் கொடுத்து வாங்கிவைத்திருந்த பிளாஸ்டரை கொண்டுவந்திருந்தாள்.

"மச்சான் இந்தப் பிளாஸ்டரை போடு, மெத்தப் பெரிய உபகாரம் தங்கச்சி!" இவ்வாறு புண்ணுக்கு போடும் பிளாஸ்டரை தாயிடம் வாங்கிய ஜோ கூறினான். "ம்ம்ம்... எல்லாம் குழம்பிப்போச்சு! இப்ப என்ன செய்வம்? போய் விளையாடுவமா? இல்லாட்டி வீட்ட போவமா?" கார்த்திக் கேட்டான். இப்போது தூரத்தில் இரண்டு ஒழுங்கைகள் தள்ளி பல நாய்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு குரைக்கும் சத்தம் கேட்டது.

Posted

ஜோவ் மாப்பி எப்போ இந்த கதைய ஆரம்பித்தீர்கள்.............? ஒருதடவை நீங்கள் எழுதினால் அடுத்த தடவை மற்றவர்தான் எழுதனும், சரி நீங்களே அதை எழுது முடித்திடுங்கள்

நாய்க்கூட்டம் கோரசாக ராகம் பாடுவதை கேட்ட அனைவரும் இராணுவம் ரோந்தில் வந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொண்டார்கள். உடனடியாகவே நண்பர்கள் சைக்கிள்களில் திரும்பவும் தமது வீடுகளிற்கு போக ஆயத்தமானார்கள். "தம்பிமார், நீங்கள் வந்தபாதையால் போகாதிங்கோ, எங்கள் வீட்டுக்கு பின்னால் வடலிப்பக்கமாக ஒரு குச்சி ஒழுங்கை இருக்கு அதால போங்கோ" என்று தாய்க்காரி கூற இவர்கள் உடனடியாகவே தாய்க்காரிக்கு நன்றிகூறிவிட்டு குடிசையின் பின்பக்கத்தால் திரும்பிப்போக வெளிக்கிட்டார்கள். திடீரென்று சுதர்சினியும் "அம்மா போன கிழமை ஆமிக்காரன் இங்க வரேக்க எங்கட வீட்டுக்க சோதனை செய்யப்போறன் என்று வந்தவன், எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு, நானும் அண்ணாமாருடன் பெரியம்மா வீட்ட போகப்போறன்.." என்று சொல்லிக்கொண்டு அவசர, அவசராமாக தனது பழைய லுமாலா சைக்கிளில் ஏறி அவர்களுடன் புறப்பட்டாள். அனைவரும் தாயிற்கு "போட்டு வாறம்" என்று சொல்லிவிட்டு வேகமாக பனைமரங்களினூடாக வளைந்து, வளைந்துபோன கையொழுங்கையூடாக சைக்கிளில் மிதித்தார்கள். சுதர்சினிக்கு இந்தப் பாதை அத்துபடி என்றபடியால் அவள் முன்னால் போக அவளுக்கு பின்னால் நண்பர்கள் சென்றார்கள். போகும் வழியெல்லாம் பனையோலைகளும், பனம்பழம், பிய்ந்துபோன கங்குமட்டைகள் பனங்கொட்டையெல்லாம் வழிநெடுகலும் தட்டுப்பட்டது.

"தங்கச்சி உங்களுக்கு என்ன பெயர்? எங்க படிக்கிறீங்கள்?" என்று ஜோ கேட்க, "எத்தனையாம் வகுப்பு படிக்கிறீங்கள்?" என்று பானு கேட்டான். "இது சரியான பெரிய பனை வளவா இருக்கு! இருநூறு பரப்பாவது வரும்" என்று சங்கர் தன்பாட்டில் கூறிக்கொண்டான். இந்தமுணுமுணுப்பை கேட்ட ஜோ "இஞ்ச பாருங்கடா இவன் இதுக்க நின்றும் பனங்காணி அளந்து கொண்டு இருக்கிறான். இவனுக்கு எங்கபோனாலும் இந்த தோட்ட புத்தி போகாது" என்று சொல்ல பானு "டேய் சங்கர், நல்ல பெரிய பனங்காணியா இருக்கு, நீ இந்தக்காணிக்காரனின்ற மகளையே கலியாணம் கட்டு" என்று சொன்னான்.

வடலியினூடாகச் சென்ற குச்சிப்பாதை முடிவடைந்து வயல்வெளி வரும்போது திடீரென்று "உஸ்.." என்ற சத்ததுடன் யாருடையதோ துவிச்சக்கரவண்டி பஞ்சராகி காற்றுப் போகும் சத்தம் கேட்கத் தொடங்கியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.