Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியா இன்று சென்னை வருகை: தீவுத் திடலில் தீவிர கண்காணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா இன்று சென்னை வருகை: தீவுத் திடலில் தீவிர கண்காணிப்பு

First Published : 10 May 2009 12:38:46 PM IST

Last Updated : 10 May 2009 12:48:20 PM IST

சென்னை, மே 10: தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.

தமிழகம், புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னைக்கு கடந்த 6-ம் தேதி சோனியா காந்தி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவரது வருகை மற்றும் பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

எனினும், சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள, குண்டு துளைக்காத பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை, நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் காணும் வகையில் அமைக்கப்பட்ட எலக்ட்ரானிக் திரைகள் மற்றும் இதர ஏற்பாடுகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சோனியா, சென்னைக்கு இன்று மாலை வருகிறார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சோனியாவின் பிரசார நிகழ்ச்சி: தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு பிற்பகல் 4 மணிக்கு சோனியா வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில், தீவுத் திடல் அருகே உள்ள கடலோரக் காவல்படையின் இறங்கு தளத்துக்கு வருகிறார்.

மாலை 4.30 மணியளவில் தீவுத் திடலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூடத்தில் சோனியா உரையாற்றுகிறார்.

அவருடன் தமிழக முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார். பொதுக்கூட்டம் நிறைவடைந்தபின் மாலை 5 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்துக்குச் செல்லும் அவர் 5.30 மணிக்கு தனி விமானத்தில் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

புதுச்சேரி பயனம் ரத்து: முன்னதாக சோனியா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், தற்போது சோனியாவின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சோனியா வருகைக்காக தீவுத் திடல் பகுதியில் மட்டும் 5,000 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

ரகசிய பாதுகாப்பு ஏற்பாடுகள்: விமான நிலையத்தில் இருந்து தீவுத்திடல் வரை சாலை வழிநெடுகிலும் போலீஸôர் குவிக்கப்பட உள்ளனர்.

எனினும், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காத வகையில் ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடலுக்குச் செல்ல வசதியாக அவரது பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஹெலிபேடில் இருந்து தீவுத்திடலுக்குச் செல்ல வசதியாக குண்டு துளைக்காத 5 கார்கள் ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தீவுத் திடல் பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ரகசிய கேமிராக்கள் நிறுவப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமானம் பறக்கத் தடை: சோனியாவின் சென்னை வருகை மற்றும் பிரசார நிகழ்ச்சிகள் முடிந்து அவர் தில்லிக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை விமானக் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மெரீனா கடற்பகுதியிலும் கடலோரக் காவல் படையின் கப்பல், படகுகளில் கடலோரக் காவல் படையினர் ரோந்து செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டார்னியர் ரக விமானங்களிலும் கிழக்கு கடலோரப் பகுதி கண்காணிக்கப்படுகிறது.

தீவுத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேல் விமானம் எதுவும் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Email PrintDelicious Digg Facebook கருத்துக்கள் Breaking News ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம் [ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009, 10:16 மு.ப] முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். THANK YOU VERY MUCH SONIA.

By Eelavan

5/10/2009 2:23:00 PM If கண்ணகி fired Madurai was justified then Sonia had the justification in 1991 when she was offered the PMship to fire nuclear agni on the Lanka, but she did not. So blaming too much on her is unjust. Instead of blaming the widow please talk with your president and the father of your nation Prabhakaran to give up their ego.

By A Tamilan

5/10/2009 2:15:00 PM தமிழரும் சிங்களரும் சேர்ந்து வாழவே முடியாத நிலை இருக்கும்போதிலும் கொலைகார சிங்கள ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு அமைப்பையே தீர்வாக வட இந்திய அரசியல்வாதிகள் முன் வைக்கிறார்கள். எதிர்கால பாதுகாப்பு குறித்த சிந்தனையுள்ள எவருமே இதை ஏற்க மாட்டார்கள். தமிழ் ஈழ பிரச்சனையில் இந்திய அரசின் துரோகம் தமிழர்களை இந்திய அரசுக்கு எதிராக மாற்றிகொண்டிருக்கிறது என்பதே உண்மை. செய்திகளை திரித்து கூறி திசை திருப்ப முயன்றாலும் இதுதான் உண்மை. தமிழர்கள் இந்திய அரசிடம் இருந்து மனதளவில் பிரிந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோருடைய மனங்களிலும் இந்திய அரசு பற்ற வைத்த நெருப்பு கனலாக கனன்று கொண்டிருக்கிறது. புயல் ஒன்று வரும்போது பெரும் தீ பரவும். அது இந்திய அரசால் அணைக்க முடியாத தீயாகவே இருக்கும். இன்று ஈழத்தில் நடப்பது நாளை தமிழகத்தில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாம் அனைவருமே அரசியல் அனதைகளாக்கப்பட்டிருகிறோம். எவ்வித அரசியல் பாதுகாப்பும் தமிழனுக்கு இல்லை என்பதே கசப்பான மெய். தமிழனுக்கு என்று ஒரு நாடு அமையாதவரை தமிழனுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

By maravanpandian

5/10/2009 2:09:00 PM only less people know indian goverment and tamil nadu goverment particularly congress and dmk somuch help for ltte , but now most of people blame dmk and congress

By shahabudeen dubai

5/10/2009 2:06:00 PM This Much Security Arange ment for this lady.. Wheather She is prime minister are a President of india.. After all a Political Leader ( NON INDIAN ) DEAR INDIANS ANY INDIAN CAN GO TO ITALY AND IF U R RESPECTED LIKE THIS I WILL APPRECATE YOU GAYS (ANY ONE OF FROM CONGRESS ) PLS IGNORE CONGRESS A NON INDIAN LEADER

By S.Palanivelu

5/10/2009 1:54:00 PM Indiscriminate barrage of shelling by the Sri Lanka Army (SLA) on the 'safety zone' starting from Saturday night to Sunday morning slaughtered more than 2,000 civilians including large number of women and children, medical sources in Vanni said quoting the injured who managed to reach the makeshift hospital. Dead bodies are scattered everywhere and 814 wounded managed to reach the makeshift hospital up to 9:25 a.m., doctors said. Every kind of lethal weapon such as the internationally banned cluster shells and shells fired from Multi Barrel Rocket Launchers and Cannons were used turning the so-called safety zone into a killing field. The SLA usually chooses weekends for its massacres to minimise international attention.

By naan

5/10/2009 1:54:00 PM JUST WANT TO LET YOU KNOW BROTHERS AND SISTERS!! Sonia want kill Tamil people. doesn't matter Indian tamil or eela tamils. She thinked Tamils are cheap peple. BUT the world knows who are we. Sonia not even from Indian.

By Dr S Ram U.S.A

5/10/2009 1:36:00 PM வருக!! வருக!! தாங்கள் ஜெயிக்க வேண்டி 2000 தமிழர்களை கொன்று நரபலி பூஜை நடத்தி இருக்குறான் உங்கள் அன்பு நண்பன் சிங்கள ராஜபக்சே இன்று (மே 10 2010). எத்தினை பெரிய மனம் அவனுக்கு!!! அன்பு உள்ளம் உங்களுக்கு !!! உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குரோம் தலைவி. எமது அன்பு தமிழ் ஈழ மக்களை குழந்தைகள் வயோதிபர் கற்பிணி பெண்கள் என்று எல்லாம் பார்க்காமல் கொலை செய்கும் உங்களுக்கே எமது ஓட்டுக்கள்.என்ன செய்வது நமது தமிழக தமிழர் எல்லோரும் ஈனப் பிறவிகள் வேறு என்ன செய்வோம்.

By Mrs.K.S.Rajaram Kovai

5/10/2009 1:24:00 PM See, Sonia comes to tamilnadu after she has killed 2000 tamilians in SriLanks. Karunanidhi already showed his cruel mind. See this is today's news (9-10 May-2009). Karunandih and congress told SL accepted for ceasfire. See the casulalities below. How much karanunidhi and congress are lying. முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்றிரவு (சனி) தொடக்கம் நடத்திய உச்சகட்ட தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் எறிகணைகள், ஆட்லறி எறிகணைகள், கனோன் ரக பீரங்கிகள் மற்றும் பல்குழல் ரொக்கட் லோஞ்சர் ஆகிய கனரக நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

By A tamil slave from India

5/10/2009 1:05:00 PM "ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்" Sonia you are happy now!

By Annu

cnuqvw9c0axsmall.jpg

shoesiaec1060805.jpg

பழைய செருப்புக் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனுக்கு இது தகுமா?

ஆனாலும் சரியான பரிசுதான்

இருப்பினும் மனம் ஆறுதலடையவில்லை.....??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.