Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா கருணாநிதிகளை கண்கொண்டு கொள்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய கருணாநிதியை திட்டும் நாங்கள் எங்களிடம் அன்றாடம் கதைத்து பழகும் சுயநல கருணாநிதிகளை கண்டு கொள்ளவேண்டும்.

எமது நண்பர்கள் உறவினர்கள் போராட்டத்தில் மாவீரர் ஆனபோது நாட்டு பற்றாளர் ஆனபோது நாம் கனடா வந்தோம்

சுயநலமாக வந்தோம் சரியான ஆளாக இருந்தால் நாமாக வந்தவுடனேயே ஏதாவது செய்திருப்போம்

இல்லாவிட்டால் வீடு தேடி வந்த தொண்டர்களிட்கு சிரமம் ஏதும் இல்லாமல் எமது கடமையினை செய்து இருப்போம்

ஆனால் நாம் எதுவுமே செய்யாமல் கருணாநிதி போல் காரணம் சொன்னோம்

1994: case accept பண்ணட்டும் எதாவது செய்வோம்

1996: நல்ல வேலை கிடைக்கட்டும் பார்ப்பம்

1997: படிப்பு முடியட்டும் பார்ப்பம்

1998: citizen கிடைக்கட்டும் பார்ப்பம்

அம்மா அப்பா தம்பிட sponcer முடியட்டும் பார்ப்பம்

தங்கை கலியாணம் கட்டின பிறகு பார்ப்பம்

என்ர கலியாணம் முடிய பார்ப்பம்

பிறகு .. தெரியும் தானே இப்பதான் கலியாணம் செய்தது

300 பேர் பெரிய செலவு - இப்ப ஏலாது பிறகு பார்ப்பம்

பிறகு .. மனுசீண்ட sponcer முடியட்டும் பார்ப்பம்

2003 இப்பதானே சமாதானம் இப்ப என்ன செய்ய இருக்கு??

2006-2009 இப்ப தெரியும் தானே சடப்படி ஒன்றும் செய்யாக்கூடாது .. கோவிக்காதை.. பிறகு பார்ப்பம்

பிறகு பார்ப்பம் .. பிறகு பார்ப்பம் .. பிறகு பார்ப்பம் .. பிறகு பார்ப்பம்

இப்படி நல்ல காரணங்கள் நிறைய சொல்லும் கருணாநிதிகள் இதுவரை போராட்டத்துக்கு செய்த பங்களிப்பை அவர்களிகே சொல்ல சொல்லாடும்...

அவர்கள் மனசாட்சியே அவர்களை கொல்லும்...

எமது சகோதரர்கள் அங்கு மடிய நாம் இங்கு party போட்டோம்

Armyக்கு அடித்தால் உடனேயே Party..

உங்கள் party இல் சமைத்த ஆட்டுகறியிலும் போராளிகளின் தியாகம் தித்தித்தது

என்ன அருமை....

மாவீரர்களின் சதையில் கறி வைக்காததுதான் குறை

இராணுவ ஆய்வில் விட்பனரானோம்

Iqpal Athaas உம் Tharaki உம் உங்களிடம் பிச்சை எடுக்கவேணும்

அரசியல் கதைப்போம்

விடிய விடிய முழித்திருந்து கதைப்போம்

அடுத்தநாள் போன் அடித்து அதில் சிறு சிறு குறை கூறுவோம்

தலைவர் செய்வார் மச்சான்

நீ ஒன்றும் செய்யாமல் சுயநலமா வீட்டில் இருக்க தலைவரும் போராளிகளும் எதாவது செய்ய வேணும்

இன்று தமிழர் படை அங்கு தோற்பது போல் ஒரு பயம் வந்ததும் முழிக்கிறோம் அழுகிறோம்

நெஞ்சு நோகுது வலிக்குது என்கிறோம்

ஆனால் பிரயோசனமாக என்ன செய்கிறோம்

இன்றும் கதை மட்டும் தான்.. கதை கதை கதை..

கடந்த மாதம் ஒட்டாவாவிக்கு உங்களுடன் வந்த நண்பர்கள் எந்தனை பேர்?

நீங்கள் ஒரு "பார்ட்டி" போட்டால் வருவது எத்தனை பேர்???

வராத நண்பர்களிடம் காரணம் கேளுங்கள்

University/ College Assignment வேலை மச்சான்

முக்கிய Meeting கட்டாயம் நிக்க வேணும்

அரசாங்க வேலை மச்சான் தெரியும் தானே

மதியம் வந்தனான் உன்னை கண்டனான் மச்சான் கதைக்க முடியல

புது வேலை மச்சான்

இப்பதான் vacation எடுத்தனான்

பிள்ளைக்கு வருத்தம் மச்சான் light fever

வரத்தான் day off எடுத்தனான் ஒருத்தரும் சேர்ந்து வர இல்லை

மனுசியோட பெரிய பிரச்சினை மச்சான்

சரி இப்படி கவன ஈர்ப்புக்கு வராததும் பருவாய் இல்லை வீட்டில் இருந்து எத்தனை கடிதம் எழுதினாய் என்று கேளுங்கள் ...

ஒரு கடிதம் எழுத நேரம் இருக்காது ஆனால் எல்லா websites உம் போய் எல்லா செய்திகளையும் பார்க்க நேரம் இருக்கும்

டைம் இல்லை மச்சான்

வேலை களைப்பு மச்சான்

இப்படி நல்ல காரணங்கள் நிறைய சொல்லும் கருணாநிதிகள் இதுவரை போராட்டத்துக்கு செய்த பங்களிப்பை அவர்களிகே சொல்ல சொல்லாடும்...

அவர்கள் மனசாட்சியே அவர்களை கொல்லும்...

இந்த கருணாநிதிகளை முதலில் அடையாளம் காணுங்கள்

சுயநலவாதிகளை அடையாளம் காண்போம்

எதிரியிலும் சுயநலநண்பன் கெட்டவன்

இன்றைய அவலத்தில் மனம் மாறாதவன் என்றும் தானாக மனம் மாற மாட்டான்

ஒரு நாட்டின் அவலத்தில் பங்கு எடுக்காதவன் உங்கள் நண்பனாக இருந்தால் - அவன் உங்களிடம் சுயநலத்துடன் தான் பழகுகிறான்

ஆனால் நீங்கள் அவர்களை ஒதுக்கினால் மட்டும் திருந்துவான்

நீங்கள் திருந்துங்கள்... அனைவரையும் திருத்துங்கள்

உங்கள் பங்களிப்பை இன்றிலிருந்து 100 வீதம் செய்யுங்கள்

தலைமையினை பலப்படுத்துங்கள்

எமது நாட்டினை நாமே கட்டி எழுப்புவோம்

வெள்ளை வந்து எமக்கு நாடு எடுத்து தர மாட்டான்

நாமே எமது பலத்தினை பலபடுத்துவோம்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் கருணானிதிகளின் கூத்தைப் பற்றி இதை விட தெளிவாக யாரும் சொல்லி நான் கேள்விப் பட்டதில்லை. இது இவர்களைக் கோபமூட்டாமல் உள்நோக்கிச் சிந்தித்து மாற வைக்கும் என நம்புவோம். நன்றி செழியன்!

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ந்த ........உண்மையை எழுதிய உங்களுக்கு நன்றி ..........நம்ம சனம் திருந்தாதுகள். ஆனால் ஆத்மார்த்தமாக முன்னுக்கு நிற்கும் இளையர்களும் அவர்களின் பெறாரும் ...........உண்மை தமிழ் உணர்வுள்ளவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். அதுவும் கனடாவில் ஆர்ப்பாடம் செய்ய போனால் கால நிலையும் பனியாக கொட்டும் அல்லது மழை வந்து கெடுக்கும் இருந்தாலும் சளைக்காது முன் நிற்கும் என்இளையோருக்கு என் பாராட்டுக்கள். ஈழ தமிழின் எதிர் காலம் உங்கள் கையில் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாட்டிலும் இப்படியான கருணாநிதிகள் இருப்பது வேதனை .

எல்லோருக்கும் இப்படியான சாட்டுக்களை , ஒரே பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்திருப்பார்களோ ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரையும் ஒரே குடையின் கீழ் நிறுத்தி கருத்து வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். எம் இளையவர்களின் அர்பணிப்பை உங்களின் பலர் குறைத்தே மதிப்பிடுகின்றீர்கள். இளையவர்களை சுயமாக இயங்க அனுமதிப்பது பற்றி எமது சமூகமும் தலைமையின் பெயரில் இங்கு இயங்குவோரும் முடிவெடுக்க வேண்டும்.

இவர்களால் ஒதுங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மக்களினதும்இ நாட்டினதும் நலனை மட்டும் முன்னிறுத்தி ஓரணியில் திரளவேண்டும் என்பது எனத ஆசை!

ஒரு சிலருக்காக அல்ல இந்த போராட்டம். இங்கு எம்மை நெறிப்படுத்த தவறும் அல்லது எமது போராட்டங்களில் குழறுபடிகளை உண்டு பண்ணும் நபர்களை வேண்டுமானால் கருணாநிதி களுக்குள் உள்ளடக்கி கொள்ளலாம்!

சிலவேளை வயது போனதாய் உளறல்கள் கருணாநிதியை போலவே இங்கு இருப்போருக்கும் வந்திருப்பது நியாயம் தானே

வணக்கம் செழியன், நீங்கள் பிரித்தானியாவில் இருப்பதாய் உங்கள் profileஇல் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். நீங்கள் எப்படி பிரித்தானியாவில் இருந்து கொண்டு இப்படி எழுதினீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

தவிர, நீங்கள் கனடாவில் உள்ள தமிழர்களை மட்டும் சாடி இருக்கின்றீர்கள். அப்படியானால் இதர நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோரும் சீமான் மாதிரியாகவா செயற்பட்டார்கள்? செயற்படுகின்றார்கள்?

நான் அறிந்தவரையில் தற்போது கனடாவில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தாயக மக்கள், தாயக போராட்டம் இவற்றுக்காக அதிக ஆதரவு கொடுத்து வருகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் இதை நான் எழுதவில்லை... கனடாவிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் ஈமெயில் செய்தது....

நான்றாக இருந்ததால் இங்கே இணைத்தேன்

கனடா கருணாநிதிகளை பற்றி எழுதி இருந்தாலும் கூட இது எல்லா புலம்பெயர் நாடுகளில் உள்ள கருணாநிதிகளுக்கும் பொருந்தும்..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செழியன், நீங்கள் பிரித்தானியாவில் இருப்பதாய் உங்கள் profileஇல் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். நீங்கள் எப்படி பிரித்தானியாவில் இருந்து கொண்டு இப்படி எழுதினீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

தவிர, நீங்கள் கனடாவில் உள்ள தமிழர்களை மட்டும் சாடி இருக்கின்றீர்கள். அப்படியானால் இதர நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோரும் சீமான் மாதிரியாகவா செயற்பட்டார்கள்? செயற்படுகின்றார்கள்?

நான் அறிந்தவரையில் தற்போது கனடாவில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தாயக மக்கள், தாயக போராட்டம் இவற்றுக்காக அதிக ஆதரவு கொடுத்து வருகின்றார்கள்.

Defensive ஆகாம உள் நோக்கிச் சிந்திப்பார்களா என்று கேட்டன். கலைஞனின் பதிலே அப்படி நடக்காது எண்டு காட்டுது. கலைஞன், இப்ப தொலைத் தொடர்பு வளர்ந்திருக்கிற மாதிரிக்கு பிரிட்டன் என்ன, நியூசிலாந்தில இருக்கிற இன்னொரு தமிழனே கனடாவில என்ன நடக்குது எண்டு உடனுக்குடன் கண்டு பிடிச்சு விடலாம். இதில கனடாத் தமிழன், பிரிட்டிஷ் தமிழன் அமெரிக்கத் தமிழன் எண்டு பிரிச்சுப் பார்க்க ஒண்டுமில்லை. கருத்து உண்மையா எண்டது தான் முக்கியம். நான் அமெரிக்காவில இருக்கிறன், ஆனா கனேடிய வானொலிகளத் தான் தினமும் கேட்கிறன். அங்க நடக்கிற பல விஷயங்கள் அங்க இருந்து பார்க்காமலே எனக்குத் தெரியுது. இதைப் பற்றி யார் சொல்லுகிறார் என்று பார்க்காமல் சொன்னது சரியா எண்டு தேடி நிவர்த்திக்க முயல்வதே எங்களுக்கு ஒட்டு மொத்த நன்மை தரும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o காரணம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு தான் இருபார்கள். நமது தேசிய தலைவரின் தீர்கதரிசனம் என்றும் பொயயவதில்லை. கடந்த ஆண்டு மாவீரர் உரையின் போது இளையோர்களே போராட்டங்களை முன் எடுத்து செலவேண்டும் என்றும் சொல்லி இருந்தார். அதே போலவே நடக்குது. இவர்கள் தான் சுயநலம் இல்லாது நான் பெரிது நீ பெரிது என்று வாதாடாது நாடு பெரிதென்று செயல் படும் உறவுகள்.

இது சொல்லாமலே உங்களுக்கு விளங்கும் , போட்டோ எடுத்து போடும் பத்திரிகையின் சொந்தகாரர் தான் குரூப் போடோவிற்கு துணை நிற்கும் சிலருடன் தங்கள் எதோ சமாதான முயற்சியை தளங்களுக்கு தெரிந்த mp ஒருவரருடு முநிருதி பாடுபடுவதாக செய்திகள் பாத்தேன். இவர்களின் உண்மை முகங்களை பார்த்தவர்கள் பலர். இவர்களுக்கும் கரு நாய் நிதி என்று சொல்வதை விட வேறு பெயர் எதாவது வைக்க வேண்டும். கெட்ட கிருமிகள்.

இனி இளையோர் களம் அவர்கள் காலம். அவர்களை ஊக்குவிப்போம். நமக்கு தேவை நமது நாடு, நம் மக்களுக்கான சுக வாழவு.

தலைமைக்கு ஆசைப்பட்டு ஊளையிடும் நரிகளை கண்டு துரத்துங்கள். ஐயோ என் இனம் அழிகிறதே

Edited by eelini

நாங்கள் செய்யக்கூடியது எங்களை ஆதரிப்பவர்களின் தொகையை அதிகரிப்பது. இன்று ஆதரவு தராவிட்டாலும் என்றோ ஒருநாள் ஆதரவு தருவார்கள் என்கின்ற நம்பிக்கையுடன் எங்கள் போராட்டத்தை தொடர்வது. மற்றும்படி முத்திரைகள் குத்துவதற்கு இது உகந்த நேரம் இல்லை. அங்கு மனிதப்பேரவலம் நடந்துகொண்டு இருக்கின்றது.

இன்று கவனயீர்ப்புக்கு வரும்படி பலருக்கு தொலைபேசியில் அழைத்து சொன்னேன். ஒவ்வொருத்தரும் தாங்களும், தங்கள் மூதாதையரும் ஏதோ கனடாவில் பிறந்து வளர்ந்து வாழ்வதான நினைப்பில் நக்கல் பேச்சுக்களை சொன்னார்கள். சிலர் சிறீ லங்கா பயங்கரவாத அரசு செய்வது சரியென்றமாதிரியெல்லாம் கூட நடுவுநிலமை கதைத்தார்கள். இதற்காக அவர்களுக்கு முத்திரை குத்திக்கொண்டு இருக்கமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.