Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தேர்தல் களம் பற்றி ஒரு பைத்தியத்தின் கணிப்பும் ஆராய்வும்

இந்த கட்டுரை சரியா ? 16 members have voted

  1. 1. இந்த கட்டுரை சரியா ?

    • சரி
      8
    • ஓரளவு
      6
    • பிதற்றல்
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம்,

ரத்தக்களறி நடந்து கொண்டு இருக்கும் போது ஆராய்வும் கணிப்பும் எழுத சரியாக படவில்லை .எனினும் இதுவும் நம் தேவைகளில் ஒன்று என்பதாலும் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்றால் மட்டுமே ஆராய்வும் கணிப்பும் சாத்தியம் என்பதாலும் இதை எழுதுகிறேன்.

முன்னுரை

மேலும் இதில் சரளமாக பிற மொழி சொற்கள் கலந்து உள்ளது . தமிழ் பற்றாளர்கள் கோபம் வேண்டாம் . (வாக்கு = ஒட்டு) . இது எங்கிருந்து வெட்டி ஒட்டப்பட்டது இல்லை . எனவே மீள்பிரசுரத்தின் போது பைத்தியத்தையும் யாழையும் மறவாதீர் .

பக்க சார்பின்றி ஆராயப்பட்டது.

ஏற்கனவே வந்த தேர்தல் கணிப்புகள் என கூறிக்கொண்டு ஆங்கில இதழ்களும் இணையங்களும் எதோ பாதி இங்கே பாதி அங்கே என்ற கணக்கில் அதே நேரம் விகடன் கூட ஒத்த கருத்தையே சொல்கிறது. காரணம் பல அவற்றில் சில இங்கே.

# யார் வென்றாலும் சம்மந்தப்பட்ட தரப்புக்கு பாதகமில்லை

# பல கால நட்புக்காக திமுக , காங்கிரஸ் இரண்டையும் கொஞ்சமாவது காப்பாற்றலாமே என்ற நப்பாசை.

# ஆங்கில ஊடக கணிப்பு தமிழ் நாட்டிற்கு உதவாது. அதிகம் யாருக்கும் தெரியாது .

# உணர்வுக்கு அதிக மதிப்பில்லாத இடங்களில் மற்றும் இழுத்துக்கொண்டு வந்து எடுக்கப்பட்ட சர்வே ( டீக்கடைகளும் / நகர புறங்களிலும் எதோ ஒன்னுக்கு போடுங்க என எதிர்பாராத சமயங்களில் எடுக்கப்படுவது . தேர்தல் ஒன்றும் எதிர்பாராமல் வருவது அல்ல . மேலும் சிந்திக்காமல் எவரும் ஒட்டு போடுவதும் இல்லை . இது போன்ற கணிப்புகளில் விளையாட்டு தனமே மேலோங்கி இருக்கும்.

இப்போது எனது கணிப்புக்கு வாருங்கள்

பெரும்பாலும், ஏன் இன்னும் சொல்ல போனால் முழுவதுமே அதிமுக வெல்ல வாய்ப்பு அதிகம் . காரணங்களும் ஆய்வுகளும் கீழே .

# எதிர்பார்த்ததை விட 8-12 விழுக்காடு ( 68% - 72%) வாக்குபதிவு அதிகம் . பொதுவாகவே தமிழகம் 60% மட்டுமே பதிவாகும் . எதோ சிறப்பான உந்துதல் இருந்தால் மட்டுமே அதைவிட அதிகம் பதிவாகும் . பதிமூன்று வருடங்களுக்கு முன் ஜெயா அம்மாவுக்கு எதிராக ரஜினியின் வாய்ஸ் வந்த போது இப்படிதான் 60% மேல் பதிவானது . இப்போது சிறப்பு உந்துதல் ஈழம் தவிர வேறொன்றுமில்லை . எனவே இதில் குறைந்தது 5% லாபம் பெறுவது அதிமுக . மீதியை விஜயகாந்தும் பாஜக இரண்டும் சேர்ந்து கெடுத்து விடும் . ஏனெனில் இது பெரும்பாலும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஓட்டுக்களே ஆகும் .

# ஒட்டு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் சராசரியாக 10% புது வாக்காளர்கள் சேர்வார்கள் . இவர்கள் அனைவருமே இள வயதினர் ( 18- 23 ). இதை கவர்வதில் வெற்றி பெற்று இருப்பது மணியரசனும் , பெதிகவும் சீமானும் தானே தவிர கலைஞர் அல்ல . இதில் கூட 6% அதிகமாக அதிமுக லாபம் பெரும்.

# கட்சிகளுக்குரிய நிரந்தர ஓட்டுகள் மற்றும் விளக்கங்கள்

திமுக 26% ( அதிருப்தி இழப்பு அதிகபட்சம் 6% ) இங்கு 32% இருந்தது . வைகோ பிரியும் போது 15% இங்கிருந்து இழுத்து கொண்டுபோயி 5% புதிதாக ஈர்த்து 20% ஆகி

வருடா வருடம் தவணை முறையில் ஏறத்தாழ 0.5% - ௦.0.75 இழந்து கொண்டே வந்து இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் நிற்கிறார் .9%

அதிமுக 17% (அதிருப்தி இழப்பு அதிகபட்சம் 11%) இங்கு 27% இருந்தது . MGR போன பின் இரண்டாகி மூன்றாகி எத்தனையோ ஆகி பின்னர் செய்கூலி சேதாரம் போக ஒன்றாகி நிற்கிறது.

மதிமுக 6% - 12% (அதிருப்தி 2% ). இந்த கட்சி இன்னும் உயிரோடு இருக்க காரணமே வைகோவும் தன்னலமற்ற அடிப்படை உறுப்பினர்களும் தான் . எல்லா தலைவர்களும் போனால் கூட இந்த வாக்கு வங்கி அப்படியே இருக்கும் . ஆனால் திமுக கூட்டணிக்கு சென்றால் சிறிது குறைகிறது . காரணம் இதன் தாய் கழகம் என்ற பெயரை திமுக இன்னும் இழக்காதது.

மேலும் தமிழகத்தின் முதல் மதிப்பெண் பெரும் மேடை பேச்சாளர்கள் ( வைகோ / நாஞ்சில் ) கரை படியாத கரங்கள் .அனைத்து கட்சி ஆட்களையும் ஈர்க்கும் தகுதி கொண்ட கட்சி . திமுக அதிமுக எதுவானாலும் சரி . விலகி இதில் சேர்ந்தபின் தான்

பிற கட்சிக்கு தாவுவர்.

பாமக 6% - 8 % ( அதிருப்தி 0% ) உண்மையில் சொல்லபோனால் உட்கட்சி ஜனநாயகம் சுத்தமாக இல்லாத கட்சி இது . அம்மாவை விட உட்கட்டமைப்பு மிக மோசமானது . இதில் எதிர்த்து கட்சிக்காரகள் குரல் எழுப்பினால் கூட நீக்கம் மட்டுமின்றி மிரட்டலும் அடியும் இலவச இணைப்பாக கிடைக்கும். இதன் ஒட்டு வங்கியை எல்லா கட்சியின் அப்பன்கள் சேர்ந்து கலைக்க நினைத்தால் கூட முடியாது . ஜாதி ஒட்டு அதிகம் . பிரிக்க முயன்று திமுக அதிமுக இரண்டுமே மூக்கு உடைபட்டு இருக்கிறது . ஆனால் மதிமுகவை விட குறைவு என்பது 100% உண்மை . ஏனெனில் மதிமுக மொத்த தமிழ் நாட்டிலும் உள்ளது . ஆனால் பாமக வட தமிழகம் மட்டுமே.

தேதிமுக ( விஜய காந்த் ) 9% - 12% ( தெரியாது ஏனெனில் இது புது மாடு )

இந்த தேர்தலில் உண்மையில் தமிழர்கள் பாராட்டப்பட வேண்டிய தெய்வம் இவர்தான் . இவர்மட்டும் திமுக கூட்டணியில் போயிருந்தால் ஈழ கதி அதோ கதி .

(26+6+9=41% எல்லாவற்றையும் தள்ளிவிட்டு திமுக கூட்டணி வெற்றி பெற்று இருக்கும் )மேலும் பலர் கூறுவது போல ஓட்டை பிரிப்பவர்தான் . ஆனால் அதிகமாக திமுக கூட்டணியின் ஓட்டுகள் . எல்லா தொகுதியிலும் தனி பெரும்பான்மையோடு வர வேண்டிய திமுகவின் எண்ணத்தில் மண்ணை தூவி காங்கிரஸ் தயவு கண்டிப்பாக தேவை என்ற நிலைக்கு கலைஞரை தள்ளி கலைஞர் ஆட்சி பற்றாளரே தவிர தமிழின பற்றாளர் அல்ல என உலகுக்கு தோலுரித்து காட்டிய மறைமுக புண்ணியவான் இவர் . இதற்கு காரணம் இவர் அடிப்படையில் திமுக மற்றும் தமாக அனுதாபி . இவர் கட்சிக்கு போனவர்கள் எல்லாம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் தான் . மற்ற கட்சியிலிருந்து போனோர் எல்லாம் ஏற்கனவே ஓரங்கட்ட பட்டவர்களே. எனவே ஈழபற்றாளர்கள் இவருக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம்.

மேலும் காங்கிரஸ் 6% itharke , கம்யூனிஸ்ட் 3.5 % , விடுதலை சிறுத்தைகள் - 1.25 % , பாஜக 3.5 - 6% . இதில் எந்த கட்சியும் தனித்து நின்று ஒரு இடம் கூட வெல்ல முடியாதவர்களே அதிகம் . மேலும் மதிமுக , பாமக இதில் தான் வரும் . ஆனாலும் சட்டமன்ற தேர்தலில் பலம் உள்ள கட்சிகள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச வாக்கு வங்கி கணக்கு என்பது பிற கட்சியிலிருந்து வருமே தவிர பொது மக்களிடம் இருந்து அல்ல .

கணக்கு போடலாமா ??? மொத்த வாக்குகளின் மதிப்பீடு

திமுக - 26%

அதிமுக - 17%

மதிமுக - 6%

பாமக - 8%

தேதிமுக - 9%

காங்கிரஸ் - 6%

கம்யூனிஸ்ட் - 3.5%

விசி - 1.5%

பாஜக - 3.5%

மொத்தம் - 71.5% இது கூட்டினால் 80.5% என வரும். ஆனால் தேதிமுக வின் 9% பிற கட்சிகளிடம் இருந்து வந்ததே ஒழிய புதிதல்ல.

மீதியுள்ள 28.5% ஓட்டுக்களே கருத்துக்கணிப்புகளையும் ஆராய்வுகளையும் பொய்யாகும் ஓட்டுகள். இதில் கூட

# முதன் முறையாக ஒட்டு போடுபவர்களும் ( இதில் கூட கட்சிக்கென பிரிவது உண்டு )

#உறவு சார்பு ஓட்டுக்களும் ( குடும்பத்தினர் போட சொல்லும் கட்சிக்கு வாக்களிப்பவர்கள்.

#பிரசார மயக்க ஓட்டுக்களும்

#உள்ளூர் பிரமுகர் பலம் சார்பு ஓட்டுகளும் ( இதில் கள்ள ஓட்டுக்களும் அடக்கம் )

#அலையின் பக்கம் சாயும் ஓட்டுக்களும்

# ஒருமுறை இங்கே , ஒரு முறை அங்கே ஓட்டுக்களும்

# கடைசி வரை முடிவெடுக்காமல் கடைசியில் கண்ணை மூடிக்கொண்டு ஒட்டு போடுபவர்களும்

# சரியான ஆவணம் இல்லையென்று ஓட்டுரிமை மறுக்க பட்டவர்களும்

# வாக்காளர் பதிவில் பெயர் இல்லாதவர்களும் அடக்கம்.

முதல் கணிப்பு ( உள்ளது உள்ளபடி )

அதிமுக கூட்டணி

17+6+8+3.5= 34.5% - 3% = 30.5%

திமுக கூட்டணி

26+ 6 + 1 = 33.5% - 6% = 27.5%

விஜய காந்த்

9% ( திமுக, அதிமுக விடம் இருந்து லாவியது)

பிறர் - 4.5%

இரண்டாம் கணிப்பு ( புதிய வாக்காளர்கள் மற்றும் வழக்கத்திற்கு அதிகமான விழுக்காட்டினர்)

இதில் மீண்டும் அரைத்த மாவை அரைக்க தேவையில்லை. இதில் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே லாபம் (11 to 15%) . மீதி போவது விஜய காந்த் மற்றும் பாஜக .

மூன்றாம் கணிப்பு

மீதியுள்ள வாக்காளர்கள் 18.5% இவர்களையே சார்ந்து வெற்றி தோல்வி இருக்கிறது. ( மொத்தம் - 28.5% புதியவர்கள் - 10% மீதி = 18.5%)

18.5% இவர்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் மட்டுமே கணக்குகள் மாற வாய்ப்புள்ளது. 2% to 4% அதிக வாக்குகள் பெற்று திமுக கூட்டணி வெல்லும்.

ஈழ ஆதரவாக மாறினால் திமுக கூட்டணி படு தோல்வி அடையும் . ஆனால் அதற்கும் உத்திரவாதம் இல்லை . ஏனெனில் இன்னும் ஒரு சில கிராமங்கள் முன்னேற்றம் இன்றி வாழ்க்கை போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறது. அவர்கள் மத்தியில் அவ்வளவாக ஈழம் சென்றடைய வில்லை. மேலும் கலர் டிவி , ஒரு ரூபாய் அரிசி எல்லாம் ஓரளவு பலன் கொடுக்கும் விடயங்கள் .

என்னை பொறுத்த அளவில் இந்த வாக்குகள் யாருக்கு போகும் என எவரும் ஊகிக்க முடியாது. ஊகிப்பது முட்டாள்தனம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி . சரி பாதியாக பிரிந்தால் கூட திமுக கூட்டணி வெல்வது கடினம் .

எவனாயிருந்தா எனக்கென்ன ???

கருத்து கணிப்பின் படியும் ஒரு சில தொகுதிகள் தனி மனித ஆளுகை கொண்ட தொகுதிகளாக இருக்கிறது . அதிமுக கூட்டணி தோல்வி அடைய கீழ்க்கண்ட தொகுதிகளில் வாய்ப்பு உள்ளது .

மதுரை - அழகிரி

அசைக்க முடியாத தனி செல்வாக்கு கொண்ட மனிதர். மேலும் பத்திரிக்கைகளும் , எதிர் கட்சிகளும் தான் என்னென்னமோ சொல்லுதே தவிர மதுரை மக்களிடம் ஒன்றும் இவருக்கு அந்த அளவாக பெயர் கேட்டெல்லாம் இல்லை .

ப . சிதம்பரம் - சிவ கங்கை

ஈழம் ஒன்றை தவிர வேறு எந்த குற்ற சாட்டும் இல்லாதவர் . தொகுதியை நன்றாகவே வைத்து உள்ளார். தனியாக நின்று தோற்ற போது கூட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றுள்ளார். மேலும் இவரின் மென்மையான நாகரீகமான அணுகுமுறை சரியோ தவறோ எதிரியையும் வசப்படுத்த வாய்ப்புண்டு

பொன் . ராதாகிருஷ்ணன் - கன்னியாகுமரி

உண்மையில் இங்கு நடப்பதென்னவோ மும்முனை போட்டிதான் . இங்கு இவர் வெல்வார் . இல்லையேல் அதிமுக கூட்டணியின் வெற்றியை தடுத்து விடுவார் .

திருநாவுக்கரசர் - ராமநாத புரம்

இவரைப்பற்றியும் சொல்ல வேண்டுமா என்ன ???

சதீஷ் - தேதிமுக

இங்கும் கன்னியாகுமரி கதைதான்.

என்னை பொறுத்த அளவில் பெரும்பாலும் முப்பதிற்கு மேற்பட்ட தொகுதிகளை அதிமுக கூட்டணியே வெல்லும் . மேலும் தெளிவாக கூறினால் 35 தொகுதி வரை வெல்லும் .

பண பலம , அராஜகம், கள்ள ஒட்டு , அதிகார அழுத்தங்கள், இவையெல்லாம் தேர்தல் முடிவை மாற்றும் என்பது என்னால் ஏற்க முடியாது . ஏனெனில் இதையெல்லாம் இதைவிட அதிகமாகவே தமிழக மக்கள் பார்த்தவர்கள்தான் . ( அம்மா முதன் முதல் முதல்வரான போது). மேலும் மேற்குறிப்பிட்ட விடயங்களில் எந்த கட்சியும் சளைத்தது இல்லை .

இதைப்பற்றி உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன் . மேலும் முடிந்தால் இந்த ஆய்வை முதல் பக்கத்திலேயே பதினாறாம் தேதி வரை விட்டு வைக்க கள பொறுப்பாளர்களை வேண்டுகிறேன். ஏனெனில் அம்மா வென்றவுடன் என்ன வெல்லாம் செய்வார் என்பது பற்றிய ஒரு ஊக அடிப்படையிலான ஆய்வும் பதினாறாம் தேதி இணைக்க விரும்புகிறேன்

நன்றி

Edited by tamil paithiyam

சவாலுடன் கூடிய தன்னம்பிக்கை. பாராட்டுக்கள் நண்பரே!

நீங்கள் சொல்வதுபோல் அமைந்தால் எங்களுக்கு மிக்க சந்தோசமே!

பார்க்கலாம்............

முடிவுகள் வரட்டும். காத்திருக்கின்றோம்.....

மீண்டும் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக இருக்கலாம்..! :lol:

அதுசரி, தேசிய அளவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

தேர்தல் வெற்றி பற்றிய கணிப்பீடுகள் சரியாக இருக்குமானால், மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன். அது சிறுபான்மை அரசாகவும் பாஜக கூட்டணியின் ஆதரவில் அமைவதாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். காங்கிரசின் குதிரை வியாபாரத்தின் காரணமாக பின்னர் இரண்டு வருடங்களுக்குள் மறுபடியும் ஒரு தேர்தல் வரலாம்..! :(

வணக்கம் தமிழ்பைத்தியம் நீங்கள் தமிழ்பைத்தியமா அல்லது அரசியல்பைத்தியமா? நீங்கள் பைத்தியம் என்று சொல்லிவிட்டு மற்றவர்களை பைத்தியம் ஆக்கிப்போடாதிங்கோ.

மேலுள்ள உங்கள் கருத்துக்கணிப்பு பற்றி சொல்வது என்றால் அதில் நான் பங்குபற்ற இல்லை. ஏன் என்றால் அதில் எனது பதில் மேலுள்ள தெரிவுகளில் இல்லை. இந்தக்கட்டுரை சரியா என்று கேள்வி கேட்கப்பட்டது எனக்கு தவறாகத் தெரிகின்றது.

உங்கள் கட்டுரைபற்றி சொன்னால்... ஆழமாக சில விடயங்களை உள்வாங்கி, சிந்தித்து, எண்ணங்களை பகிர்ந்து இருக்கிறீங்கள். நீங்கள் கூறியுள்ள பல கருத்துக்கள் உண்மையானதே // யதார்த்தமானதே!

நன்றி!

கன்யாகுமரியில் திமுக பெண் வேட்பாளராக "ஹெலன் டேவிட்சன்" அல்லவா நிண்றார்... அதுவும் CPI வேட்ப்பாளர் பெலார்மினை எதிர்த்து....

இந்த கணிப்பு போன தடவை நிகழ்ந்த சட்ட சபை தேர்தலில் வாக்களித்த கட்ச்சி அபிமானிகளை அடிப்படையாக கொண்டது... கட்ச்சிகள் மீது அபிமானம் கொண்ட 47% பேர் போன சட்டசபை தேர்தலில் வாக்களித்தனர்... ஆனால் இந்த தடவை 65% த்துக்கும் மேலாக மக்கள் வாக்களித்து உள்ளனர்... ஆகவே கட்ச்சி களின் மீது அபிமானம் கொண்ட மக்களை விடவும் அதிகமான வாக்குக்கள் அதுவும் 23% மேலாக போடப்பட்டு இருக்கிறது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ப . சிதம்பரம் - சிவ கங்கை

ஈழம் ஒன்றை தவிர வேறு எந்த குற்ற சாட்டும் இல்லாதவர் . தொகுதியை நன்றாகவே வைத்து உள்ளார். தனியாக நின்று தோற்ற போது கூட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றுள்ளார். மேலும் இவரின் மென்மையான நாகரீகமான அணுகுமுறை சரியோ தவறோ எதிரியையும் வசப்படுத்த வாய்ப்புண்டு

இம்முறை அ.தி .மு.கவின் ராஜ. கண்ணப்பன் சிவகாசியில் வென்று , சிதம்பரத்தின் 7ஆவது முறை வெல்லும் சாத்தியத்தை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். பலத்த போட்டியை இம்முறை சிதம்பரம் எதிர்கொள்கிறார். இவரால் வாங்கப்பட்ட செருப்பு எறி இவரின் புகழை கீழிறக்கியுள்ளது. என்றாலும் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

சரியாக இருக்கலாம்..! :(

அதுசரி, தேசிய அளவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

தேர்தல் வெற்றி பற்றிய கணிப்பீடுகள் சரியாக இருக்குமானால், மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன். அது சிறுபான்மை அரசாகவும் பாஜக கூட்டணியின் ஆதரவில் அமைவதாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். காங்கிரசின் குதிரை வியாபாரத்தின் காரணமாக பின்னர் இரண்டு வருடங்களுக்குள் மறுபடியும் ஒரு தேர்தல் வரலாம்..! :)

உங்கள் கருத்து மிகவும் சரி . எனினும் இரண்டு வருடங்கள் என்பது மிக அதிகம் .

எனினும் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனாலும் போகலாம் . என்னை பொறுத்த அளவில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு மிக மிக குறைவு. ஏனெனில் ஏற்கனவே இழுப்பும், பரிப்பும் வியாபாரமும் ஆரம்பமாகி விட்டது . நீங்கள் கூறுவது போல காங்கிரஸ் முதலிடத்தில்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி பருதியன் அவர்களே

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி மதிப்புமிகு கலைஞன் அவர்களே .

இது முடிவல்ல ஆரம்பம்!

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.