Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:செ.பத்மநாதன் சேனல் 4 சற்றுமுன்-செவ்வி video

Featured Replies

சிங்களவன் அருமையான திட்டமிடலுடன் காய் நகர்த்துகிறான். அவனுக்கு தேவை தற்போது தலைவர் இருக்கும் இடம்!

ஆனால் இங்கு பல உறவுகள் கதறிக்கொண்டிருக்கிறார்கள் வீடீயோவை பார்த்து.

அவர்களை சமாதானப்படுத் முடியவில்லை.

  • Replies 65
  • Views 9.9k
  • Created
  • Last Reply

எங்கே இருந்து இவன்கள் DNA மூலத்தை எடுக்கப்போகிறான்கள்? எதனுடன் ஒப்பிட்டு இவர் தலைவர் தான் என்று உறுதி செய்வான்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஓஓஓ..... இவங்கள் இப்பிடி தலைவர கொண்டிட்டம் கொணு்டிட்டம் எண்டு சொல்லுறதுக்கு நிறைய காரணங்கள் கிடக்கு....

- வசியண்ணா சொல்லுற மாதிரி தலைவர் எங்க இருக்கிறார் எண்டு கண்டுபிடிக்கிறதுக்கு

- இந்தியாக்கு பதில் சொல்லவேண்டிக் கிடக்கு

- சர்வதேசத்துக்கு நாங்கள் புலியள ஒட்டுமொத்தமா அழிச்சு யுத்தத்த முடிச்சிட்டம் எண்டு உதவியத் தொகையள வாங்குறதுக்கு

- தமிழ்ச்சனத்த குழப்பத்தில வைச்சிருந்து வெளிநாடுகளில நடக்கிற போராட்டங்கள இல்லாமலாக்குறதுக்கு

தலைவர நிறையத் தரம் கொண்டிட்டாங்கள்..... இந்தமுறையே இதோட மூண்டு தரம் கொண்டிட்டாங்கள்.......

- முந்தநாள் தலைவர் தற்கொலை செய்து செத்திட்டார் எண்டாங்கள்

- நேற்று வானில தப்பிப்போகேக்க சுட்டு கொண்டிட்டம் எண்டாங்கள்

- இண்டைக்கு வேற இடத்தில இறந்துகிடந்தார் எண்டுறாங்கள்

முதல் ரண்டும் பொய்யெண்டு ஆச்சு..... பத்மநாதன் அண்ணாவும் தலைவர் பாதுகாப்பா உயிரோட இருக்கிறார் எண்டிட்டார். நெடுமாறன் ஐயாவும் அப்பிடித்தான் சொன்னவர்........ இப்ப உவை எங்களுக்கு தலைவர் எண்டு வீடியோ காட்டுகினம்............. வீடியோ காட்டினா நாங்கள் நம்புவமெண்டு.............. எங்கட மக்களுமு் குழம்பித்தான் போயிருக்கினம்...... சிங்கள சனம் போதை தலைக்கேறி வெடிவெடிச்சு கொண்டாடுதுகள்............... ஆனா உந்த வீடீயோவும் பொய்யெண்டு சொல்ல எங்களிட்ட நிறைய காரணங்கள் கிடக்கு.......... சிலதுகள நாங்கள் வெளில சொல்லேலாது..... அது புலியளுக்கே உரிய அடையாளங்கள்..... அதுகள சொல்லி சிங்களவன உசார்ப்படுத்த நானும் விரும்பேல.............. இதைக்கூட இப்ப எழுதவேண்டிய அவசியமில்ல..... ஆனா எங்கட மக்கள் குழம்பக்கூடாது எண்டுறதுக்காகத் தான் இதுகள இங்க எழுதுறன்...........

1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........

2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......

3. உவை சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டு தான் செத்தவரோ?

4. உவை காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......

5. உவைன்ர உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............

6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....

7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....

8. உவை dna test பண்ண முதல் சாம்பிள் தேவை.... சாம்பிள் எங்க இருந்து எடுத்தவையாம்????????????

9. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........

அதால மக்களே................ ஒருத்தரும் குழம்பவேண்டாம்.............. சிங்கள பயங்கரவாதிகளின்ர பொய்கள நம்பி கவலைப்படவேண்டாம்............ தொடர்ந்து நாங்கள் முந்திய விடவும் பலமா வெளிநாடுகளில போராடவேணும்.............. தலைவர் பாதுகாப்பா இருக்கிறதும் அவரின்ர காலத்தில நாங்கள் தமிழீழத்த வெண்டெடுக்கிறதும் எங்கட கையில தான் இருக்கு..........

Edited by poonai_kuddy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பட்டமான செயற்கை முகம்.

கவலையை விடுத்து,போர்குற்றங்களை பரப்புரை செய்யுங்கள்,மனித அவலங்களை வெளிகொணர்வோம்.

சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கவேண்டிய தருணம் இது.

காடையர்களின் பொய் பரப்புரையை நம்ப வேண்டாம்.

போராட்டம் தொடரட்டும்.

பொம்மைக்கு தாடி வைத்திருந்தாலாவது பிளாஸ்டிக் என்னும் உண்மை கொஞ்சம் மறைந்திருக்கும்!

பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா என்று விவாதம் நடத்திக் கொண்டிராமால், ஒரு பிரபாகரனை கடந்தும் தமிழர் விடுதலை போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்று நாம் சர்வதேசத்திற்கு நிருபித்தால் எமது விடுதலை நிச்சயம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு பொய்பிரச்சாரம் என்பது கைவந்த கலை நாம் அதனைப்பொருட்படுத்தாமல் எமது போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தவேண்டுமே தவிர இவனுடைய பரப்புரையை பார்த்து மனம் சோரக்கூடாது

தலைவரின் மாவீரர் நாள் உரையை மீண்டும் கேட்டு பாருங்கள்

2008 ம் ஆண்டின் மாவீரர் நாள் உரையில் இருந்து

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://www.votradio.com/index.php?option=c...17&Itemid=5

Edited by தயா

கடந்த 3 நாட்களில் பாரிய இன அழிப்பை சிறீலங்கா அரசு மேற்கொண்டுள்ளது. 150 ஆயிரம் மக்கள் இருந்த பிரதேசத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் மக்களே வந்துள்ளார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. ஆக மிகுதி 100 ஆயிரம் மக்களிற்கும் என்ன நடந்தது . அதை மூடி மறைப்பதற்காக தலைவர் கொல்லப்பட்டார் என்ற பிரச்சாரப் பீரங்கியை ஏவியுள்ளது. இதனை நம்பி அனைத்துலகமும் ஊடகங்களும் அந்த வெற்றி மமதையில் குளிர்காய்ந்துகொண்டிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, பத்மநாதன் ஐயாவில எங்களுக்கு நம்பிக்கை இல்லை..! அரசாங்கம் சொல்லுறதைத்தான் நம்புவம்..! சிங்களவன் கூட அரசின் பிரச்சாரங்களை இந்த அளவுக்கு நம்ப மாட்டான்..! :mellow:

ஆக, பத்மநாதன் ஐயாவில எங்களுக்கு நம்பிக்கை இல்லை..! அரசாங்கம் சொல்லுறதைத்தான் நம்புவம்..! சிங்களவன் கூட அரசின் பிரச்சாரங்களை இந்த அளவுக்கு நம்ப மாட்டான்..! :mellow:

ஒரே நாளில் நடந்த டி.என்.ஏ சோதனை!:

இறந்தது பிரபாகரன் தான் என்றும், டி.என்.ஏ. சோதனைகள் அதை உறுதி செய்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் டி.என்.ஏ. சோதனைகள் எப்படி நடத்தப்பட்டன என்பதற்கு விடை இல்லை.

அதே போல பிரபாகரன் ஏன் புலிகள் உடையில் இருந்தார்?, தப்பியோட முயல்பவர் சாதாரண உடையில் இருந்திருக்க மாட்டாரா? என்ற கேள்விகளும், அவரது முகம் சேவ் செய்யப்பட்டுள்ளதே, கடந்த 3 நாட்களாக 500 மீட்டர் தூரத்தில் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர் சேவ் செய்து கொண்டிருப்பாரா? போன்ற கேள்விகளும் எழுகின்றன.

மொத்தத்தில் பிரபாகரனின் மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Get Flash to see this player.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 3 நாட்களில் மட்டும் பலமுறை, பலவிதங்களில் பிரபாகரனை கொலை செய்ததாக செய்திகளை வெளியிட்டது சிறீலங்கா மற்றும் இந்திய ஊடகங்கள்.

அவை எவற்றிலும் உண்மையில்லை. பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிய போது சுட்டுக்கொன்றதாக பொய்யை சொன்னது. 2 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டதாக சொன்னார்கள். அடுத்தது டிஎன்ஏ பரிசோதனை நடப்பதாக நேற்று சொன்னார்கள். இன்று செய்தியில் நந்திக்கடலில் கொன்றதாகவும், இன்று உடல் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள். அதற்காக ஒரு படம், ஒரு ஒளிக்காட்சி!

2 நாட்களுக்கு முன்னர் இறப்புக்குள்ளான உடல்கள் எப்படியிருக்கும் பார்த்திருக்கிறீர்களா? படங்களில் இருக்கும் முகம் அப்படி 2 நாளான உடல் மாதிரியா இருக்கிறது?

பிரபாகரனின் 2008 மாவீரர் உரை படங்களை விடவும் இந்த படத்தில் இருக்கும் முகம் இளமையாக இருப்பது தெரியவில்லையா?

நேற்று டி.என்.ஏ பரிசோதனை செய்த உடலை, இன்று கண்டுபிடித்தார்கள்?

எந்த 'டி.என்.ஏ.மாதிரிகளை' வைத்து பிரபாகரன் என்று டி.என்.ஏயை உறுதிப்படுத்தினார்கள்?

சார்லஸ் ஆன்றனி என்று வந்த படமும் இன்னொரு போராளியுடையது. பிரபாகரன் பற்றி வெளியாகிற இப்போதைய படங்களும், செய்திகளும் பொய்.

நண்பர்களே,

தொழில்நுட்ப உலகின் யுத்தம் உளவியலை பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. பலியாகிவிடாதீர்கள். தமிழர்களின் ஈழத்திற்காக போராட களத்தில் வருவான் பிரபாகரன். இப்போதைக்கு பாதுகாப்பான தளத்தில் தனது முக்கிய தளபதிகளுடன் அவர் இருப்பதை நம்புங்கள்.

சிறீலங்கா செய்துள்ள போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மறைக்கவும், அழிக்கவும் உளவு அமைப்புகளும், அரசுகளும் நடத்துகிற நாடகங்களுக்கு பலியாகிவிடாதீர்கள். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு நீதி பெற கவனம் செலுத்துங்கள்.

ஈழம் ஒரு போதும் கனவாக முடியாது. நம்புங்கள்! தமிழ் மக்களின் சுதந்திர வேட்கை இன்றைய இழப்புகளால் கலைந்து போகாது.

ஒரு தமிழ்நாட்டு உறவு கூறியது இது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
imageo.jpg

Edited by சேகுவாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே எங்கடை தமிழ்ச்சனத்தை நினைச்சா மிகவும் பரிதாபமா இருக்கு

சிங்களவன் சொல்றதையெல்லாம் இப்பிடி மாய்ந்து மாய்ந்து நம்புறீனம்

எல்லாரும் மிக மிக நல்லவர்களப்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எங்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பணி புலம்பெயர்ந்த நாடுகளிலை எங்கடை போராட்டம்

எங்கடை சுயாட்சி உரிமை கிடைக்கும் வரைக்கும் நாங்கள் கட்டாயம் போராடுவோம் என்பதை நாங்கள் இப்ப முக்கியமா நிரூபிச்சுக்காட்ட வேணும்

சர்வதேசத்தையும் சிங்களத்தையும் அவைந்தை கொள்கைகளையும் நாங்கள் மிகவும் கேவலமா தோற்க வைக்கவேணும்

அதுக்கு நாங்கள் எல்லாரும் இப்ப வீதியிலை இறங்க வேணும்

இது பயங்கரவாதம் இல்லை உரிமைப்போராட்டம் எண்டு நாங்கள் மக்கள் நிரூபிக்க வேணும் (அவைக்கு ஏற்கனவே தெரியும் ஆனால் நடிக்கினம்)

புலிகளை அழிச்சாலும் கூட உங்களால இந்த போராட்டத்தை நிப்பாட்ட ஏலாது எண்டு

(முக்கிய விடயம் தமிழர்கள் இருக்கும் வரை புலிகளை அழிக்க இயலாது புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள்) என்பதையும் நாங்கள் இப்ப நிரூபிக்க வேணும்

இதுக்கு எல்லாத்துக்கும் நாங்கள் இப்ப வீதிக்கு இறங்கி போராட வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.