Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்வாணி ஞானகுமார் பற்றிய விபரங்கள் தேவை...

Featured Replies

தமிழ்வாணி ஞானகுமார் பற்றிய விபரங்கள் தேவை...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59491

தயவுசெய்து.. இங்கே அறியத்தரவும்..

நண்றி...

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது வேறு உறவினர்கள் .நண்பர்கள் யாராவது தற்சமயம் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகமோ..அல்லது உறுதியாகவோ தெரிந்திருப்பின்.. அவர்கள் பற்றிய விபரங்களை தொடர்புகளை பெறுவதற்கு தற்சமயம் வவுனியாவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள் மூலம் பெற்றுத் தருவதற்கு என்னாலான சிறு முயற்சிகள் செய்து தரலாம்.உங்கள் உறவுகளின்.; பெயர் மற்றும் விபரங்களை யாழில் பகிரங்கமாக இடாமல்..எனக்கு தனிமடலில் அல்லது எனது தொ.பே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்..நன்றி.. எனது. தொ.பே.. இலக்கம்..0033 611149470

முக்கிய குறிப்பு.. இது என்னுடைய முயற்சிதான் இந்த முயற்சியில் சிலரை கண்டுபிடிக்கமுடிந்துள்ளது.. எனவே யாராவது பெயர் விபரத்தினை தந்துவிட்டு சிலசமயம் அவர்களை கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டால் தயவு செய்து என்னை திட்டாதீர்கள்...

இங்கு முயற்சித்து பாருங்கள் பனங்காய். சாத்திரியார் உதவி செய்யக்கூடும்.

பிரித்தானிய மருத்துவ பணியாளரின் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேச்சு

இலங்கையில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த லண்டன் கிழக்கு சிங்போர்ட் பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ பணியாளரான தமிழ்வாணி ஞானகுமார் என்பவர் வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பிரித்தானிய மருத்துவ பணியாளரின் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரஜை வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாமில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். .

தமிழ்வாணியை விடுவித்து அவரை பிரித்தானியாவுக்கு அனுப்புவது குறித்து தாம் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் தொடர்பான தகவல்களின் முன்னேற்றம் குறித்தும் தாம் தமிழ்வாணியின் குடும்பத்தினருக்கு அறிவித்து வருவதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்வாணி கடந்த 19 ஆம் திகதி தன்னுடன் தொலைபேசியில் உரையாடியாதாக அவரது சகோதரியான 29வயதான சுபா மோகனதாஸ் தெரிவித்துள்ளார். தான் இந்த முகாமில் இருப்பதாகவும் தன்மை வெளியில் எடுக்குமாறு கோரியதுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டதாக சுபா கார்டியன் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/

பனங்காய் உங்களுக்கு என்ன விபரம் இவர்களை பற்றி தெரியணும்..... என்ன விபரம் என்று சொன்னால் அறிய தர முயற்சி பண்ணலாம்?

Edited by சுஜி

  • தொடங்கியவர்

விஷயத்தை பெரிசாக்கல்லாம் எண்டு பாக்கிறேன்...

அப்படியாவது இவவுக்கு உதவலாம் எண்டு...

நன்றி...

தி டைம்ஸ் பத்திரிகையில் (Saturday 30 May 2009 ) வெளியானது...

http://www.guardian.co.uk/world/2009/may/3...-medic-detained

அத்துடன், இன்று (01.06.2009) thelondonnews பத்திரிகையில் பக்கம் 9 இல் சிறு செய்தியாக வெளியிட்டு இருந்தார்கள்.

Sri Lanka set to release doctor

Sri Lanka's government is considering the release of a London medic held in and interment camp after she fled the recent fighting against Tamil Tiger rebels. Damilvany Gnanakumar, of Chingford, east London, was detained at the Menik Farm camp while working in the country to treat civilians during the war.

http://img19.imageshack.us/img19/5645/90841999.jpg

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka 'to send Briton home'

A British woman who is being held in one of the displacement camps in northern Sri Lanka has been traced and may soon be released, officials say

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8077874.stm

  • கருத்துக்கள உறவுகள்

vaani.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிய மருத்துவமனையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ்வாணி ஞானகுமார் என்ற தமிழ் பெண்ணை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் சர்வதேச ஊடகமொன்றில் வெளியான செய்தியாவது:பிரித்தானியாவைச

பிரித்தானிய தமிழ் பெண்ணை நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை.

வவுனியா நிவாரண கிராமமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தமிழ் பெண் விரைவில் விடுவிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் மோதல் வலயத்திலுள்ள தற்காலிக மருத்துவமனையொன்றில் பிரித்தானிய தமிழ் பெண்ணான தமிழ்வானி ஞானகுமார்(வயது 26) பணியாற்றியுள்ளார்.

மோதல்கள் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுத்யிலிருந்து வெளியேறிய மக்களுடன் தமிழ்வாணி தற்போது வவுனியாவிலுள்ள நிவாரண கிராமங்களில் ஒன்றான ராமநாதன் கிராமத்தில் உள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சாள்ஸ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

தமிழினி ஞானகுமார் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிற்கு தாம் சென்றதாகவும், அங்கே அவருடைய ஆவணங்களை சரிபார்த்ததாகவும் தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், அங்கே தமிழினி நலமாக நண்பர்கள், உறவினர்களுடன் இருப்பதாகவும் , அவரிற்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழினி ஞானகுமாரை விடுவிப்பது குறித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடனும் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID...egory=TamilNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.