Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரி நட்சத்திரம் - கருணா நிதியின் பிறந்த நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரி நட்சத்திரம் - கருணாநிதியின் பிறந்த நாள்

கவிதை - இளங்கவி

கலைஞரே வாழ்க வாழ்க

தமிழின் காவியத்தலைவனே வாழ்க

எண்பத்தாறு வருடங்களை

தமிழருக்காய் அர்ப்பணித்த

தமிழ் நாட்டுச் சிங்கமாம்

நீ தமிழினத்தின் தங்கமாம்...?

விடிவெள்ளியாய் நினைத்து

விளக்கின்றிக் காத்திருந்தோம்

எரி நட்சத்திரமாய் விழுந்து

ஈழத்தின் குலையறுத்தாய்

குடும்பப் பாசத்துக்காய்

உன் குலத்துக்கே நெருப்பு வைத்தாய்

எங்கள் இனத்துக்கோர் சாபக்கேடாய்

இன்றுவரை உயிர் வாழ்வாய்....

ஈழத்தில் நிலத்தினிலே

குரும்பையெல்லாம் கருகிவிழ

வெற்றிக்கொடியோடு டெல்லி சென்றாய்

நீயோ வேண்டுமந்த பதவியென்றாய்

எதிரியின் தீயிலே நாமெரிய

நீ வேண்டிய பதவிபெற்றாய்

வேண்டியதை பெற்றதனால்

பிறந்த நாளும் கொண்டாடிடுவாய்

தமிழினத்தின் புல்லுருவி

உனக்குத் தெரியுமா...?

பிறக்கும் நாள் முன்னே

இறக்கும் நாள் வந்த

ஆயிரமாம் சிசுக்களின்

அவலக்குரல்கள் கேட்கலையா....?

அழுகுரலின் மத்தியிலும்

பிறந்த நாள் வேண்டும் தான் ;ஏன்

அது உன் ஆயுள்வரை வேண்டும் தான்...!

எங்கள் சவங்களின் மத்தியிலே

சாம்ராஜ்ஜம் அமைத்தவரே

எங்கள் சாவொலியின் மத்தியிலும்

அமைதியாய் தூங்கிடப்பா....

ஆனாலும் அந்த இரவின் நிசப்தத்தில்

இந்துமா கடலின் அலையோசை கேட்டுபார்

இன்னும் சில குரல்கள்

ஈழத்தில் உன் பேர் சொல்லி நிற்கும்

ஆம்..! கருணா நிதி பார்ப்பார்

எங்களை என்றும் காப்பார்...?

நீ வாழ்க்கையில் ஜெயித்தாலும்;தமிழன்

மனங்களிலே தோற்றுவிட்டாய்

மாறாத வடுவெல்லாம்; நம்

மனங்கலிலே விதைத்துவிட்டாய்....

இருந்தும்; வீரம் விழைந்து நிற்கும்

ஈழத் தமிழனாய் வாத்துகிறேன்

கோடி ஆயுள் பெற்று

கோழையாய் இருந்திடப்பா...

துரோகியெனும் பெயர் நீங்க

நல்லவராய் மறுபடியும் பிறந்திடப்பா..!

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி ...........ஈழத்தமிழரின் விடயத்தில் அவரின் "நடிப்பு " அழியாத ரணமாகி விட்டது .

If any body says on me like this

I'll sucide or I'll start eating the pig's shit

bcos I am a manamulla uppu pottu sapidukira tharsamayam oru kaiyakalatha thamilan

avar saga mattar, uppum pottu sapida mattar

nammala than sagadippar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

அவரின் துரோகத்தனத்தை தமிழினம் என்றைக்குமே மறக்காது. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா..

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ramathevan

உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பரே, என்ன செய்வது அவருக்கு குடும்பத்தில் இருக்கும் பாசம் சொந்த இனத்தில் இல்லை..

உதாரணத்துக்கு ஓர் உண்மைகதை கதை இவரைபற்றியது, எனது தாத்தா வயதிலிருக்கும் ஒருவர் சொன்னது. கலைஞரும் அவரது நண்பர் கூட்டமும் கட்சி சம்பந்தமான கூட்டங்களுக்கு காரில் செல்லும் போது கார் ரோட்டில் நிற்கும் சமயம் பிச்சை காரர்கள் வந்து பிச்சை கேட்க காரில் இருக்கும் எல்லோரும் பிச்சை போடுவார்களாம் ஆனால் இவர்மட்டும் போடவே மாட்டாராம் அந்தளவு கறார் பேர்வளியாம் அப்பவே தான் தன் குடும்பம் என்று தான் பேசுவாராம். இது தான் அறிந்த உண்மையான விடயமென்று அந்தப் பெரியவர் சொன்னார். இது பல காலத்துக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவமென்றார் தனக்கு தெரிய நடந்தது என்றார். அது எந்தளவுக்கு உண்மையென்று எனக்கு தெரியாது.

இதிலிருந்து அவர் எந்தளவுக்கு பொது நலத்தில் அக்கறைகொண்டவர் என காட்டுகிறது தானே...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரி நட்சத்திரம் - கருணாநிதியின் பிறந்த நாள்

கவிதை - இளங்கவி

கலைஞரே வாழ்க வாழ்க

..............................................

இளங்கவி

உடன் பிறப்பே,

கேட்டாயா செய்தியை! நான் இலங்கை தமிழர்களை காக்கவில்லையாம், துரோகியாம்,சுயநலம் மிக்கவனாம்.

நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் பழைய நினைவுகளை எண்ணிப்பார்க்கிறேன். இந்தியா வடிக்கும் கண்ணீர்போல் இந்துமாக்கடலில் தெரியும் சிறு தீவாம் இலங்கையிலே எம்மினத்தவர் எண்ணிலா துயருற்ற செய்தி கேட்டு, அன்று, என் தம்பி, நீ மட்டுமல்ல, நானும்தான் துடித்துப்போனேன். கணிகையரின் மடியிலே தலை சாய்ந்து,கையில் மது கோப்பை ஏந்தி எம்மின மக்களின் துயரை போக்க என்ன செய்யலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் வந்தது அந்த பாழாய் போன செய்தி.

நான் வளர்ந்தால், நீ வளர்வாய், நீ வளர்ந்தால் நாடே வளரும் என்றெண்ணி சில லட்சம் பணத்தை சேர்த்தான் இந்த அண்ணன். அது பொறுக்கமாட்டாமல் என்னை நாற்காலியிலிருந்து இறக்கி, ஒன்றல்ல இரண்டல்ல, பதின்மூன்று ஆண்டுகள், அந்த முதல்வர் நாற்காலியின் கதகதப்பை என்னை அனுபவிக்காமல் செய்திட்ட துரோகியாம் ராமச்சந்திரன், ஈழ போராளிகளை சந்தித்து உதவி செய்யப்போகிறார் என்ற செய்தி. இழவு வீடானால் பிணமாகவும், கல்யாண வீடானால் மாப்பிள்ளையாகவும் இருந்து தமிழுக்கும், தமிழனுக்கும் உழைக்க காத்திருக்கும் இந்த அண்ணன் அதை கேட்டு சும்மா இருப்பானா! தீட்டிட்டான் ஒரு திட்டம் எதிரிகளின் கொட்டம் அடங்கும்படியாக. எம்.ஜி. ராமச்சந்திரன் போராளிகளை சந்திப்பதுற்கு முன் நான் சந்தித்து அவர்களுக்கு உதவுவதே என் திட்டம்.

( ஈழ விடுதலை இயக்கங்கள் வளர ஆரம்பித்த புதிதில் எம்.ஜி.ஆர். அவர்கள் போராளிகளை சந்திக்கப்போகிறார் என்னும் செய்தி கிடைத்ததும், அந்த சந்திப்புக்கு ஒரு நாள் முன்னதாக போராளிகளை சந்திக்க முடிவெடுத்தது இந்த குள்ள நரி. எம்.ஜி.ஆறும், இவரும் எதிரெதிர் துருவம். ஈழ மக்களின் துயரில் குளிர் காய நினைத்தது இது, தனக்கே முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைத்தது.

தன் சந்திப்பு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பிடிக்காதே, அதனால் பாவப்பட்ட அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்காதே என்றெல்லாம் கவலைப்படவில்லை இந்த இழி பிறவி. ஆனால் தேசிய தலைவர் மட்டும் இந்த நரியின் சூழ்ச்சியை ஆரம்பத்திலேயே இனம் கண்டு அந்த சந்திப்பை கவனமுடன் தவிர்த்தார். எம்.ஜி.ஆர். அவர்களும், இந்த குள்ள நரியை சந்தித்த மற்ற போராளி இயக்கங்களை சற்று தள்ளியே வைத்திருந்தார் என்று கேள்விப்பட்டேன்.)

அய்யகோ, அன்று மட்டும் என் பாசத்திற்குரிய தம்பி பிரபாகரன் என்னை வந்து சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே! என் செய்வேன், தமிழ் தாயின் விருப்பப்படி பிரபாகரன் என்னை சந்திக்க வில்லை போலும்! அவர் அன்று வரவில்லை என்பதினால்தான் கழகம் புலிகளுடன் நெருக்கம் காட்டவில்லை, பன்னாட்டு சதி வலைகள் இறுகி பல்லாயிரம் உயிர்கள் பறிபோகும் நிலையிலும், அப்பாவி மக்களை காக்க நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது உண்மையில்லாத கூற்றடா என் கண்ணே! தள்ளாத வயதில் இந்த அண்ணன் பேனாவை எடுக்க முடியாமல் எடுத்து, கண்ணீர் கண்களை மறைக்க வரைந்திட்டேன் ஒரு கண்ணீர் காவியம். அனுப்பினேன் சொக்க தங்கத்திற்கு. என் செய்வேன், அந்த மடல் மிகவும் தாமதமாக கிடைத்ததினால் சொக்க தங்கம் உடன் செயல்படவில்லை.

நல்லவராம், நாலும் தெரிந்தவராம், சொக்கத்தங்கம் கிழித்த கோட்டை தாண்டி நடந்து பழகாதவராம், சீக்கியன் மயிர் சம்பந்தப்பட்ட விடயத்தில் மனம் துடித்து பொங்கி எழுந்தவராம் என்னுயிர் நண்பர் மன்மோகனுக்கு சளி தொந்திரவு அதிகம் இருந்த காரணத்தினால், அவராலும் உடனே செயல்பட முடியவில்லை. தொலைபேசியில் பேசி இருக்கலாமே என்று சொல்லுகிறார்கள் உண்மையறியாத சில புல்லர்கள். அன்று என் வீட்டு தொலை பேசி வேலை செய்யவில்லை என்பதை அறியாத பதர்கள்!

இப்போது ஈழத்தில் கிடைத்திருக்கும் அமைதி உன் அண்ணனின் அயராத உழைப்பினால்தான் வந்ததது என்பதை நாடே அறியும். நல்லறிஞர் போற்றுவர். மக்கள் அனைவரும் உழைக்க வேண்டிய தேவை இல்லாமல், இலங்கை அரசாங்கமே அவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற என் சாணக்கியத்தனம்தான் இப்போது அவர்களிருக்கும் இடங்கள். அவைகளை முகாம்கள் என்று அழைத்து கொச்சைப்படுத்துவர் தமிழின விரோதிகள்.. அதற்கெல்லாம் மதி மயங்கி விடாதே. ஈழ தமிழன் கண்ணீர் வடித்தால், உடனே சோமபானம் செய்வதற்கு போதுமான அளவில் கடைகளை இலங்கையிலும் திறக்க உடனே ஆவன செய்வான் உன் அண்ணன். அவர்தம் வீடுகள் அனைத்திலும் வண்ண தொலைகாட்சி பார்த்து, இனம், மொழி போன்ற வேண்டாத வேலைகளில் அவர்கள் இறங்காமளிருக்க அவர்களுக்கு வண்ண தொலைக்காட்சி பெட்டி கொடுக்க அழுத்தம் கொடுப்பான் இந்த அண்ணன். இவ்வாறு அல்லும் பகலும் தமிழன் வாழவே தன்னை அர்ப்பணித்த உன் அண்ணன் இன்னும் அயராது பாடுபடுவேன் .

புறநானூற்று போர்ப்படையே! சுமார் பத்து தலை முறைக்குத்தான் சொத்து சேர்த்திருக்கிறான் உன் அண்ணன் என்பதை அறியாதவனல்ல நீ! இன்னும் சுமார் இருபது தலைமுறைகளுக்கும் சொத்து சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுகொண்டிருக்கும்போது, நீயும் இந்தில் முழு மூச்சாக உன்னை ஈடுபடுத்திக்கோள். மறவர்குல திலகமே! வீறு கொண்டு எழு. நீ எங்கும் அலைந்து திரியாமல் அங்கங்கே சரக்கு வாங்க வேண்டும் என்று உனக்காகவே அண்ணன் திறந்திருக்கும் மது கடையில், குவார்டர் அடித்து விட்டு குப்புற படுத்துவிடாமல், செயலை துவங்கு. நீ உழைத்துக்கொண்டேயிருப்பதுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரு தமிழ்நாட்டு நண்பர் அடிக்கடி கூறுவார்........

இந்தப்படுபாவி தமிழ்நாட்டில் அரைவாசியைத்தன் குடும்பத்திற்கு எழுதியபின் தான் சாவான் என்று....

அது என்னவோ உண்மை என்றுதான் எண்ணவேண்டும்..............

எமது தலைவர் இவனை எப்போ அடையாளம் கண்டுவிட்டார்.

'விடிவெள்ளியாய் நினைத்து

விளக்கின்றிக் காத்திருந்தோம்

எரி நட்சத்திரமாய் விழுந்து

ஈழத்தின் குலையறுத்தாய்

குடும்பப் பாசத்துக்காய்

உன் குலத்துக்கே நெருப்பு வைத்தாய்

எங்கள் இனத்துக்கோர் சாபக்கேடாய்

இன்றுவரை உயிர் வாழ்வாய்...."

அருமையான வரிகள். வாழ்த்துக்கள் இளங்கவி உங்கள் கவிதைக்கு........உங்களது ஆக்கங்கள் ஆக்கபூர்வமானதாகவும் எளிதில் புரிந்து கொள்ள கூடியதாகவும் உள்ளது. நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

srinivasan chennappan

அண்ணா கலக்கிட்டீங்க

உண்மையை நகைச்சுவை இழையோட்டி சொல்லியிருக்கிரீர்கள், அந்த தொலைக்காட்சி சமாச்சாரம் சொன்னீர்களே அது மக்களை ஓர் மயக்க நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற ஓர் தந்திரம் தான்.. இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் ஒரு காலம் சினிமா பார்ப்பது புலிகளால் தடைசெய்யப் பட்டிருந்தது காரணம் தமிழ் நாட்டு சினிமா உலகில் வெறுப்பு அல்ல.. எங்கள் விடுதலை உணர்வு பொழுது போக்கு அம்சங்களினால் சிதைக்கப் படக்கூடாது என்பாதற்காக மட்டுமே... அப்படி வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டம் இன்று வல்லரசுகளின் துணைகொண்ட எதிரி/எதிரிகளாலும், துரோகிகளாலும் சிதைக்கப்பட்டு வழி தெரியாமல், மக்களின் மனங்களில் வலியைமட்டும் கொடுத்து நிற்கிறது... ஆனால் ஒன்று வலியைத்தந்தவர்கள் விடுதலை உணர்வை அழித்ததாக எண்ணி அதை முழுமூச்சுடன் பற்றி எரிய வைத்துள்ளார்கள் அது இனி ஓயாது விடுதலை கிடைக்கும் வரை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

srinivasan chennappan

உண்மையை நகைச்சுவை இழையோட்டி சொல்லியிருக்கிரீர்கள்

உண்மைதான் நண்பரே,

ஈழத்தில் இறுதிகட்ட போரில் நூற்றுகணக்கான அப்பாவி மக்கள் உணவின்றியும், மருந்தின்றியும், கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று இணையம் வாயிலாக அறிந்து,துடித்துகொண்டிருந்த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

srinivasan chennappan

நண்பரே தமிழ் உணர்வுள்ள உங்கலைப்போன்றோர் இன்னும் உள்ளதால் தான் தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, பிரபாகரன் எனும் தமிழன்னை கொடுத்த தவப்புதல்வனுடன் ஓப்பிடும் போது இவன் ஓர் சாக்கடைப் புழு....

அவனின் தந்திரம் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கே எப்படி வேலைசெய்கிறது என்று தெரியுமா பாருங்கள்...? உதாரணம்..

தொலைக்காட்சி கொடுத்ததற்கு பதிலாக வீட்டுக்கு ஓர் கணனி குடுத்திருந்தால், கணனித்துறையில் ஏற்கனவே கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டு இளைஞர்கள்களும் ஏன் வருங்காலச் அறிவாளிகளான குழந்தைகளும் எவ்வளவு முன்னெற்றம் அடைந்திருப்பார்கள் தெரியுமா...? தொலைக்காட்சி கொடுத்து வைத்தானேய்யா ஆப்பு.... அதுதான் அவனின் அசிங்கமான சிந்தனையின் சாணக்கியம்...இவனைப்பர்ரி எழுதப்போனால் பந்தி பந்தியாக எழுதவேண்டும் தோழா... நீங்கள் சொன்ன அத்தனையும் மறுக்க முடியாத உண்ணை. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Viduthalai Virumby

இவன் போனாலும் இவன் விட்டுச்செல்ல போகும் இவன் எச்சங்கள் தமிழ் சமூகத்தில் குப்பையாய் இருந்து நாறிக்கொண்டுதான் இருக்கப்போகிறது அது ஓர் துர்ப்பாக்கியம் தான் என்ன செய்வது, காலம் தான் பதி சொல்ல வேண்டும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

நன்றிகள் என் கவிதையையும் ரசித்து வாழ்த்துச் சொன்னதுக்கு.....

இந்த மனுசன் எந்தத் தமிழை வைத்து தமிழனை ஏமாற்றினாரோ, அதே தமிழைக் கொண்டு திட்டித்தீர்க்க வேண்டும் போல இருக்கிறது... ஆனால் ஓர் மரியாதைக்காக...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.