Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் வார்த்தையில் இறந்திருக்கலாம் - வாழ்க்கையில் மரணம் அடைய மாட்டார்: சீமான்

Featured Replies

  • தொடங்கியவர்

எனவே இதற்கெல்லாம் மூளை பலம் ஆள் பலம் செயல் பலம் தேவை...வெறுமனே நானும் நீங்களும் யாரிடமும் குறை படாது முதலில் கருத்துக்களை பகிர்ந்து செயலாற்றுவோம்.

நான் தயார்...நீங்கள் தயாரா?

நான் தயார் ஐயா

ஏனெனில் எனக்கு என் மண்வேண்டும்

அதை யாருக்கும்..................

எந்தக்காரணத்துக்காகவும்...........

.......

எவருக்காகவும்............................

எந்தக்காலத்திலும்.............

இழக்க மாட்டேன்

இழக்கவும்கூடாது

தமிழர் சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் சர்வதேசம் ஏற்க வேண்டும்- உலகத் தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும்- தொடர்ந்து போராடுவோம்: தமிழீழ தேசியத் தலைவர்.!! இதை 2007 மாவீரர் நாள் உரையில் அறிவித்தார்.மேலும் வாசிக்க மாவீரர் உரை 2007

உண்மையில் நாம் தற்போது எடுக்கும் செயற்பாடுகளை அக்கணமே எடுத்திருந்தால்?

தற்போது அந்தந்த நாடுகளில் உள்ள நாம் வேற்றின மக்களை அரசியல் கள போராட்டத்தில் இணைத்து பங்குபற்ற வைக்கவேண்டும், பாராளுமன்ற உறுப்பினர்களை மாதத்தில் 2 முறையாவது சந்த்தித்து இலங்கை அரசாங்கத்தின் வன்செயல்களை முறையிடவேண்டும்.

வன்முறையற்ற போராட்டத்தின் மூலம் இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்வோமாயின் வெற்றி நம் பக்கம் சாயத்துவங்கும்.

  • Replies 57
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஜயா முதல் செய்யவேணும் பிறகு சொல்லவேண்டும்.போதும் ஜயா நாங்கள் இழந்த உயிர்கள் இனிமேலும் இழக்க எம்மிடம் ஒன்றுமில்லை ...தயவு செய்து வன்னிமக்களை மீள் குடியமர்த்த எதாவது உதவிகள் செய்ய முடிந்தால் செய்யவும் தாழ்மையாக கேட்டு கொள்கிறோம்

சிங்கம் சீமானும் சிறுத்தை திருமாவும் பேசாமல் இருங்கோ.

Visit My Website

//இதுவரை நடந்தது முன்னோட்டம்தான். இனி தாண்டா போர் நடக்கப் போகிறது. 5ஆம் கட்டப் போரில் பிரபாகரன் கடைப்பிடித்த மரபுகளை நாங்கள் கடைப்பிடிக்கப் போவதில்லை. ஒரு சிங்களவன் கூட நிம்மதியாக உறங்க முடியாத அளவிற்கு தாக்குவோம். கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம். மானமுள்ள கடைசி ஒரு தமிழன் இருக்கும்வரை சிங்களவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.//

இப்படிச் சீறியிருப்பவர் இயக்குனர் சீமான். இதைப் பார்த்து அழுவதா ? அனுதாபப்படுவதா ? எதைச் செய்ய ?

இறுதிக்கட்டப்போரென்று சிங்களவன் நடத்திய போரில் நாங்கள் இழந்தது ஐ.நா கணக்கெடுப்பின்படியே 20ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஐ.நாவின் பதிவைத் தாண்டி 50ஆயிரம் வரையில் இறுதி யுத்தம் கொன்று குவித்துத் தின்ற உயிக்கள் , மிஞ்சிய 3லட்சம் பேரின் எதிர்காலத்தின் கதியையெண்ணிச் சாகாத பிணங்களாகத் தமிழர் துடிக்கிறோம்.

இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இழந்த உயிர்களின் தொகை லட்சத்தைத் தாண்டி நிற்கிறது. எங்கள் இலட்சியங்களை விட்டுவிட்டு எங்கள் மக்களின் ஏதிலியான நிலைமை மாற ஏது செய்வோமென்று உலகையும் உள்நாட்டில் உள்ளவர்களையும் நம்பி ஏமாந்து போயிருக்கிறோம். மே17…18..19…வரையில் நந்திக்கடல் முனைவரை சிந்திய குருதியின் நெடில் ஆறாமல் நொந்து போயிருக்கிறோம். ஏன் ? எப்படி ? எதற்காக ? இப்படியாக்கப்பட்டோம் என்றெல்லாம் ஆலோசிக்க அவகாசமின்றி அந்தரிக்கிறோம்.

கோட்டையைத் தகர்ப்போம் கொடுங்கோலை முறிப்போமென்ற கோசங்களை மறந்து கொள்ளைபோன எம்மவரின் நினைவுகளில் தினமும் சாகிறோம். யுத்தத்தின் கோரம் எதுவென்பதை வீரம்பேசிய யாவரும் எங்களுக்காய் இறுதிவரை களமாடிச் சரிந்தவர்களையும் இழந்து போய் இனியேது என்ற துயரில் ஓடிந்து போயிருக்கிறோம்.

எங்களுக்காகக் குரல் கொடுத்துச் சிறைசென்று வந்த தோழர் சீமானின் சீற்றத்தை எத்தனையோ தரம் மீளமீளக் கேட்டு வியந்து போயிருந்த நாம் இப்போது நிரந்தரமான அமைதியொன்றுக்கான கதவுகளைத் திறக்க திறவுகோல்களைத் தேடிக் கொண்டிருக்க.., இப்போது சிங்களவனை விடோம் , கொழும்புக்குள் புகுந்து தாக்குவோம் , மானமுள்ளவர்கள் சிங்களவரோடு போராடுவோம் என்று கர்ச்சித்து என்னத்தை வாங்கித் தரப்போகிறீர்கள் சீமான் ?

இது சினிமாவில் வந்து ஒருவர் நூறுபேரை அடித்து வீழ்த்தி வெற்றிபெறும் களமென்று நினைக்கிறீர்களா சீமான் ? மேடையில் ஏறி உணர்ச்சி சொட்டப்பேசிக் கைதட்டல் வாங்கும் கைங்கரியமென்றா கனவுகாண்கிறீர்கள் ? இது தமிழக அரசியலில் தேர்தல் வாக்குறுதிகள் போல் வார்த்தைகளால் வசியம் பண்ணும் விசித்திரமா ? சொல்லுங்கள் சீமானே ?

எங்களுக்கென்றொரு தலைவன் இருந்தான். எங்களுக்கு எல்லாமுமாக அவன் இருந்தான். சூரியனாய் எங்களில் சுடர்விட்டெரிந்தான். வாழும்வரை போராடுவேனென்றபடி வாழ்ந்து முடியும் வரை எங்களுக்காகவே போராடி மடிந்தான் அல்லது மறைந்தான். எங்கள் தலைவனின் பின்னே ஆயிரமாய் ஆயிரமாய் அணிசேர்ந்த தோழரும் தோழியரும் கொத்துக்கொத்தாய் செத்துமடிய நாங்கள் எதுவுமே செய்ய இயலாதோராய் அழுதோம்.

அதற்கடுத்து இந்த உலகத்தை ஊரெங்கும் கூடி நின்று உலுப்பியும் எவருமே கண்ணெடுத்தும் காணாமல் கண்மூடியிருந்தார்கள். கடைசி நிமிடம் வரை நம்மைநாமே சமாதானப்படுத்திச் சர்வதேச அரங்கையும் அசைத்துக் கடைசியில் கண்ணீரஞ்சலி கூடச் செலுத்த முடியாமல் எங்களுக்கு எல்லாமுமானவர்களை இழந்து போனோம். உங்கள் உணர்ச்சிமிகு பேச்சுக்கள் எங்கள் தளபதிகளை தலைவனைக் காப்பாற்றவுமில்லை. கரை சேர்க்கவுமில்லை. நட்டாற்றில எங்களை நாதியற்றுப் போகும் நிலையில் விட்டுள்ளது.

இப்போதெல்லாம் நாங்கள் விரும்புவது எங்கள் சூரியதேவனும் அவனைச் சுற்றிவந்த சுதந்திரப் போராளிகளும் நேசித்த மக்களின் ஒரு நிம்மதியான வாழ்வு மட்டுமே. அதிகபட்ச உரிமையாக அவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய ஒரு தீர்வையே. அதற்கும் அப்பால் எதையும் எங்களால் எண்ணிப்பார்க்க எதுவுமில்லை. போதும் எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.

நேதாஜியைத் தொலைத்துவிட்டு இந்திய தேசம் சத்தியாக்கிரகம் என்று சுற்றிய காந்தியால் சுதந்திரம் பெற்றதாய்க் காட்டி இந்திய சுதந்திரப்போராளியை வெள்ளையன் விழுங்கினான். அதுபோல் எங்கள் வல்லமைத் தலைவனைத் தளபதிகளை வஞ்சத்தால் அழித்தது வல்லரசுக்கூட்டம்.போராடும் இனங்களுக்குப் பரிசாய்க் கிடைப்பது எதுவென்பதை வரலாறுகள் தந்த பாடங்களிலிருந்து புரிந்து கொள்கிறோம். எங்களை விட்டுவிடுங்கள்.

அயலில் களக்கொலை நடக்க உங்கள் ஊரில் கள்ள மெளனம் சாதித்து எங்கள் காவியங்களைக் கொன்ற கள்வர்களுக்கெல்லாம் சாட்சியாய் இருந்தவர்களைத் திருத்துங்கள். அவர்களது நிம்திமதியைத் தட்டி எங்கள் அழிவுக்கு நீதி கோருங்கள். அதுவே எங்கள் தலைவனுக்கும் தளபதிகளுக்கும் ஆயிரமாயிரம் போராளிகளுக்கும் , அழிந்து போன மக்களுக்கும் நீங்கள் செய்யும் கடைமையாகும். எங்களுக்காய் குரல் கொடுக்கும் உங்களை உதாசீனம் செய்வதாய் எண்ண வேண்டாம். இழந்து போன வலி தீர இன்னும் சில தசாப்தங்கள் தேவையெங்களுக்கு. பசித்தவனுக்கு பசிமாற முதலில் உணவழித்துவிட்டுச் சுதந்திரத்தைப் பற்றிச் சுவையாக உரைக்காலம் என்பதை அனுபவத்தால் பட்டறிந்துள்ளோம். ஆக அனல் கக்கும் பேச்சுகள் கேட்கவும் கைகொட்டிக் கூச்சலிடவும்தான் பயன் மற்றப்படி ஏதுமில்லை.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ! சீமானுக்கு ஓர் படிமேலே போய் `´நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்ட போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும்`´ எனச் சிறுத்தை போர்வெடிக்கும் நாளை பேராவேசத்துடன் பேசியுள்ளார்.

திருமாவின் தலைவரும் தலைவரின் மகளும் முள்ளிவாய்க்காலில் களக்கொலை நடைபெறும்வரை டில்லியுடன் என்னத்தைக் கதைத்தார்களென்ற மர்மம் திருமாவே உங்களுக்கும் தெரியாதா ? உங்கள் அரசியல் எழுச்சிகளுக்காக எங்களின் உயிர்களோடு இனியும் இறுமாப்புக் கதைகள் பேசாதீர்கள். நீங்கள் செய்திகளில் சாவைப் பார்ப்பவர்கள் ,சினிமாவில் சண்டியர்களைத் தோற்கடிப்பவர்கள். களநிலையும் தமிழர் கடந்த நாட்களின் கடைசி நிலையும் அனுபவித்து அழிந்தோர் தமிழர். அண்ணே ! பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்.

இதுவரை எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவுகளுக்கு நன்றிகள். நாங்கள் செத்துப்போகும் வரை காத்திருந்து மீண்டும் சாகடிக்க உங்கள் தலைவர் காத்திருக்கிறார். உங்கள் அன்பும் ஆதரவும் இனி உங்கள் ஊரிலுள்ள பொய்களைக் கிழிக்கட்டும் எங்களை உசுப்ப வேண்டாம். எங்களை வாழவிடுங்கள். இனிச்சாகவோ சண்டித்தனம் பண்ணவோ சக்தியில்லை.. எந்தச்சனியின் காலில் வீழ்ந்தாயினும் எங்கள் மக்களுக்கான நிம்மதியை நாங்கள் பெற்றிடுவோம். இனிமேல் உங்கள் ஈழ ஆதரவு உணர்ச்சிகள் நிறைந்தாய் இல்லாமல் உணர்வோடு வளரட்டும்.

31.05.09

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான். பேசிப்பேசியே காலத்தினை தள்ளுகிறார்கள்

திருமாவளவனைப்பற்றி பேச நான் தயாராக இல்லை. ஆனால் சீமான்... ஒரு தமிழுணர்வாளன். ஈழக்கோரிக்கைக்கான முழு ஆதரவாளன். அதை ஒரு தடவையல்ல, பல தடவைகள் நிரூபித்திருக்கின்றார்.

இந்தியாவில் இருந்துகொண்டு அவர் அதை செய்வதே பெரிய விடயம். அவர் தன்னால் முடிந்ததைச் செய்கின்றார். ஆனால்... நாம் நம்மால் முடிந்ததைச் செய்கின்றோமா???

ஒரு உண்மையான ஆதரவாளனை விமர்சிப்பதிலேயே முன்னிற்கின்றோம்.

இப்படிப்பட்ட மனப்பாங்குதான்.. நமது இன்றைய நிலைமைக்கு காரணம்.

நம்மால் இயன்றதை செய்வோம், நமது தாய்மண்ணுக்காக.....!

சாந்தி அக்கா, தமிழ்நாட்டில ஓர் சீமான் இருக்கிறது சரி. ஆனால்... இப்ப இதர நாடுகளிலும் அல்லோ பல சீமான்கள் முளைச்சுக்கொண்டு வருகிறீனம். உணர்வு (உரு) ஏற்றுறம் என்று சொல்லிக்கொண்டு கடைசியில யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள முடியாத, சுயமாக சிந்திக்கத் தெரியாத மக்களை (கு.போ அண்ணாவின் மொழியில் மந்தைக்கூட்டங்களை) இந்த புலம்பெயர் நாடுகளில் உள்ள சீமான்கள் உருவாக்காமல் இருந்தால் புண்ணியம்.

  • தொடங்கியவர்

சாந்தி அக்கா, தமிழ்நாட்டில ஓர் சீமான் இருக்கிறது சரி. ஆனால்... இப்ப இதர நாடுகளிலும் அல்லோ பல சீமான்கள் முளைச்சுக்கொண்டு வருகிறீனம். உணர்வு (உரு) ஏற்றுறம் என்று சொல்லிக்கொண்டு கடைசியில யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள முடியாத, சுயமாக சிந்திக்கத் தெரியாத மக்களை (கு.போ அண்ணாவின் மொழியில் மந்தைக்கூட்டங்களை) இந்த புலம்பெயர் நாடுகளில் உள்ள சீமான்கள் உருவாக்காமல் இருந்தால் புண்ணியம்.

உலகத் தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும்- தொடர்ந்து போராடுவோம்: என்று தமிழீழ தேசியத் தலைவர் கூறியதை மையப்படுத்தி யார் உண்மையாகவும் நேர்மையாகவும் வழிகாட்டினாலும் நாம் போராட தயங்ககூடாது அது சீமானென்றாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி. தற்சமயம் விவாதத்தை விட விவேகம் அதுவும் அரசியல் விவேகம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டினால் அழிந்த ஜப்பான் எவ்வாறு இன்றுள்ள நிலையை அடைந்தது?உலகம் சேர்ந்து நின்று செய்த நியாமற்ற செயல் எவ்வாறு அவர்களினுள் ஓர் உந்து சக்தியை ஏற்படுத்தியது அவர்கள் ஜெயித்துக்காட்டினார்கள் தமிழர்களாலும் முடியும்!

எமது மக்களுக்கு ஆதரவையும் அவர்களுக்கு நம்பிக்கையும் கொடுக்க முயற்சிக்கும் சீமானின் கருத்திற்கு நன்றி!

மக்கள் சக்தி மாபெரும் சக்தி அப்படியொரு சக்தி உருவாகி வருவது சிங்களத்திற்கு பெரும் கவலை அளிக்கின்ற விடயமாக இருப்பதனாலேயே சிங்களம் புலம் பெயர் நாடுகளில் அதன் செயற்பாட்டினை பல வடிவங்களில் ஆரம்பித்துள்ளது அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ துணை போகக்கூடாது.

  • தொடங்கியவர்

சிங்கம் சீமானும் சிறுத்தை திருமாவும் பேசாமல் இருங்கோ.

....................................

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ! சீமானுக்கு ஓர் படிமேலே போய் `´நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்ட போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும்`´ எனச் சிறுத்தை போர்வெடிக்கும் நாளை பேராவேசத்துடன் பேசியுள்ளார்.

திருமாவின் தலைவரும் தலைவரின் மகளும் முள்ளிவாய்க்காலில் களக்கொலை நடைபெறும்வரை டில்லியுடன் என்னத்தைக் கதைத்தார்களென்ற மர்மம் திருமாவே உங்களுக்கும் தெரியாதா ? உங்கள் அரசியல் எழுச்சிகளுக்காக எங்களின் உயிர்களோடு இனியும் இறுமாப்புக் கதைகள் பேசாதீர்கள். நீங்கள் செய்திகளில் சாவைப் பார்ப்பவர்கள் ,சினிமாவில் சண்டியர்களைத் தோற்கடிப்பவர்கள். களநிலையும் தமிழர் கடந்த நாட்களின் கடைசி நிலையும் அனுபவித்து அழிந்தோர் தமிழர். அண்ணே ! பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்.

இதுவரை எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவுகளுக்கு நன்றிகள். நாங்கள் செத்துப்போகும் வரை காத்திருந்து மீண்டும் சாகடிக்க உங்கள் தலைவர் காத்திருக்கிறார். உங்கள் அன்பும் ஆதரவும் இனி உங்கள் ஊரிலுள்ள பொய்களைக் கிழிக்கட்டும் எங்களை உசுப்ப வேண்டாம். எங்களை வாழவிடுங்கள். இனிச்சாகவோ சண்டித்தனம் பண்ணவோ சக்தியில்லை.. எந்தச்சனியின் காலில் வீழ்ந்தாயினும் எங்கள் மக்களுக்கான நிம்மதியை நாங்கள் பெற்றிடுவோம். இனிமேல் உங்கள் ஈழ ஆதரவு உணர்ச்சிகள் நிறைந்தாய் இல்லாமல் உணர்வோடு வளரட்டும்.

31.05.09

மிகவும் ஆழமான ரணத்தின் வலிகள்தான் இந்த வார்த்தைகள்.....

நிச்சயமாக தமிழ்நாட்டிலிருந்து ஒரு திருப்புமுனை என்பது இதுவரை நம் மனக்கண்ணுக்கு தென்படவேயில்லை. அய்யா நெடுமாறன் வேறுமாதிரி கூறுகின்றார்....

எனக்கு யதார்த்தத்தில் மட்டுமே நம்பிக்கை.

நம்மால் முடியும் தலைவன் நமகுள்ளே இருக்கின்றான் அவன் வாழ்ந்துகாட்டிய வழியிலும் அவன் சிந்தனையிலும் வெல்வோம் தமிழீழம் அமைப்போம் அரசியல் பலத்துடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.