Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவில் ஏகபிரதிநிதிகளாக விளங்கிய சிங்கங்களே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

Featured Replies

கட்டுரைக்குள் போக முதல்…., எப்பவடா வருவாள் எனத் தருணம் பாத்துத் தாட்டுக் குத்தக் காத்திருக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் , தலைவனை இல்லையென்று சொல்வாயா உன்னை வந்து தறிப்பேன் துரோகி , விலைபோனாயோ ? என்று மிரட்டல் விடுக்கும் சீடர்களுக்கும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உங்கள் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற நல்லா தருணமிது.

இனி…,

ஐரோப்பாவின் ஏகபிரதிநிதிகளாக இதுவரை விளங்கிய சிங்கங்களே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். போதும் உங்கள் பரப்புரை , பாவுரைகள் நீங்கள் ஓய்வு அல்லது ஓதுங்கிக் கொள்ள வேண்டிய தருணமிது.

ஓர் உறை நிலையில் தமிழர்களின் உணர்வுகளைக் கட்டிப்போட்டுள்ள கடைசி நேர யுத்தமென நடாத்தி முடிக்கப்பட்ட களக்கொலைக்குக் காரணமான அனைவருக்குள் நீங்களும் அடங்குகிறீர்கள். நடந்து முடிந்த மர்மங்களின் மறைபொருளாக நீங்கள் தான் நின்றீர்கள். புலத்தில் புடுங்குகிறோம் , புடுங்குகிறோம் என்று நிலத்தில் நம்பி நின்ற எல்லோருக்கும் சவக்குழி தோண்டிப் புதைத்துவிட்டு இன்னும் தேசியம் , சுயநிர்ணயம் , தாயகம் , தலைவர் 30ஆயிரம் பேருடன் ஒளித்திருக்கிறார் , காலம் வரும்பேhது வந்து களத்தினில் நிற்பார் என்ற பம்மாத்துக்களை நிப்பாட்டீட்டு உங்கள் பதவிகளைப் போட்விட்டுப் பாவமன்னிப்புக் கேளுங்கள். இப்பாவங்களுக்கெல்லாம் நீங்களே காரணங்கள் என்பதை காலத்திற்குச் சொல்லுங்கள்.

கடைசிவரை புலத்து அரசியல் புண்ணியவான்களின் கதையை நம்பியே காட்டிக்கொடுத்தவன் எவன் களவு கொடுத்தவன் எவனென்று பிரித்தறிய முடியாமல் உங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டுக் களக்கொலையானவர்களும் , களமே வாழ்வென்று கடைசிவரை நின்று போராடியவர்களும் சரணடைந்தார் அல்லது சனத்துடன் போனோர் என்று சாவுமின்றி வாழ்வுமின்றி வதைபடும் நிலைமைக்கு முழுப்பொறுப்பும் நீங்களே.

களத்தில் நின்றவர்கள் போராடினார்கள் புலத்தில் நீங்கள் பரப்புரைத்து தமிழனின் உரிமைகளை உலகின் அங்கீகாரம் பெற்றுத்தருவீர்கள் என்று முழுமையாக உங்களையே நம்பினார்கள். நீங்களோ பரப்புரையென்ற பெயரிலும் பணியென்ற பெயரிலும் மாதாந்தச் சம்பளமும் மேடைகளுமென உங்களை விலாசப்படுத்தினீர்கள். உங்களை நம்பி உயிரைப்பணயம் வைத்து அவர்கள் கொத்துப்பட்டுக் குதறுப்பட்டுச் சாகும் நிமிடத்தையும் எதிரிக்குத் தேடிக்கொடுத்த பெருமை உங்களையே சார்கிறது.

செயற்கைக்கோள்களுடன் போர் சென்று கொண்டிருக்க செல்லிடப்பேசிகளில் செவ்விகள் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். ஒலிவாங்கிகளால் ஆட்லறியடித்துக் கொண்டிருந்தீர்கள். ஆய்வுகள் என்று ஊடகங்களில் உங்களை நாயகர்களாக்கி மகிழ்ந்தீர்கள். இதோ புலிவெல்லும் இதோ பலிகொள்ளுமென்று போதையில் கிடந்து புலிகளின் பலத்தையெல்லாம் பாடைகட்டிக் கொடுத்துவிட்டு உங்களைப் பற்றிப் புழுகிக்கொண்டிருந்தீர்கள். அவர்கள் போராளிகளாகத் தளபதிகளாகக் களத்தில் கருகிக்கருகி வீழக் கடைசியுத்தம் களக்கொலை முடித்துக் கூத்தாடினான் பகைவன்.

„‘அவன் இல்லையென்றால் அணுவும் அசையாது“ ஆயினும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாய் தன்னைத் தந்து நாங்கள் வாழத் தன்னைத் தனது குழந்தைகளைக் குடும்பத்தைப் பலிதந்து எங்களின் சூரியத்தேவன் மெளனமாகி…, *நந்திக்கடலோரம் நாதியற்றுக் கிடக்க நம்பமாட்டோம்* எங்கள் தலைவன் எழுந்து வருவான்* என்று மீளவும் பொய்சொல்லி எந்த மக்களுக்காய்த் தன்னை இழந்தானோ அந்த்தலைவனுக்கு ஒருதுளி கண்ணீர் ஒரு மெழுகுவர்த்தி ஒற்றைப்பூவேனும் போடாமல் அநாதையாக்கினீர்கள்.

போர்விதியை மீறி எங்கள் போராளிகள் கொத்தியும் குதறியும் கொலையுண்ட துரோகத்தை போர்க்குற்ற மீறல்களை உலகம் நீதி வழங்காமல் ´இருக்கிறார் அவர் வருவார்´ என்று கதைசொல்லி நடந்து முடிந்த கொலைகளுக்கு நீதி கிடைக்காமல் போக வைக்கும் தலைகளே ! எழுச்சியென்ற பெயரில் மக்களை ஓர் மாயையில் வைத்து இருப்போரையும் மண் மூடப்போகும் துரோகத்துக்கு நீங்களே முழுக்காரணமும்.

எது நடந்துவிடக்கூடாதென்று எண்ணினோமோ அத்தனையும் புலத்து ஏக பிரதிநிதிகள் புண்ணியத்தால் நடந்து முடிந்துவிட்டது. தமிழீழம் தனித்த ஆட்சி இவையெல்லாம் தமிழருக்கு இல்லையென்றாகி இருப்போரை மீட்பதே முதற்கடனென தலைவனின் நியமிப்பில் புலத்தில் அடுத்த நகர்வின் ஆக்கத்திற்கான வழிகள் திறபடும் தருணத்தில் அவசர அறிக்கைகளும் ஆய்வுகளும் விடும் ஐயாக்களே! போதும் விட்டிட்டுப் போங்கோ. உழைத்து உண்ணும் பழக்கத்தை இனியாவது தொடங்குங்கள். இதுவரை நீங்கள்தான் ராசாக்கள் என வைத்திருந்த கதிரைகள் அடிபட்டுத் தடாலென நீங்கள் விழுவதை நாமும் உணர்கிறோம்.

இந்தா இந்தாவென எதிரி எண்ணிக்கை சொல்லிச் சொல்லி வறுகிய நிலத்தையும் வளத்தையும் பொங்கிறோம் , படைக்கிறோம் , போராடுகிறோமென்றெல்லாம் பொய் சொல்லி எல்லாவற்றுக்கும் காரணமாயிருந்தவர்களே ! வரலாற்றுத் துரோகம் என்பதற்கு வரையறை சொல்ல நீங்களே தரமான சான்றுகள். இளைய சமூகம் எதிர்காலத் தமிழரின் விதியை நிர்ணயிக்க நிமிர்ந்துவிட்டது. கர்ச்சித்தது காணும் கதவைப்பூட்டிக்கொண்டு போங்கோ. காலம் இன்னும் உங்கள் கள்ளத்தனங்களைத் தட்டிக்கேட்கும் தைரியத்தைப் பெற்றுவிட்டது.

http://mullaimann.blogspot.com/

  • தொடங்கியவர்

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

நாங்கள் .....

போட்ட கணக்கெல்லாம் பிழைத்து/பொய்த்து விட்டன _ உண்மை

வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவற விட்டோம் - உண்மை

செய்வதறியாது திகைத்து நின்றோம் - உண்மை

சிங்களவனிடம் தோற்று விட்டோம் - உண்மை

வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது - உண்மை

ஓர் சந்ததியே அழிக்கப்பட்டது - உண்மை

இழிவான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளோம் - உண்மை

......

யார் இவைகளுக்கு பொறுப்பேற்பது?????????????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது கேட்போம் யார் பொறுப்பு?

யாரின் கேள்விகளும் நடந்து முடிந்த சோகச் சம்பவங்களை அழியச் செய்ய முடியாது. யாருக்கும் தண்டனைகள் வழங்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. ஒட்டுமெத்தமாக தமிழ் மக்கள் ஜடங்களாக ஆக்கி விட்டார்கள்.

இந்த கட்டுரையாளர் போல ஒரு சாராரும், கட்டுரையாளர்கள் சாடி நிற்போரும் நடுவில் மக்களும்!

தமிழினம் இனி ஒரு போதும் திருந்த போவதில்லை. இன்னும் அடிபட்டுக்கொண்டே இருக்கி;னறது. சிங்களவனுக்கு யாரும் உதவ தேவையில்லை. ஏன் சிங்களவன் இனி தமிழனை கொலை கூட செய்ய தேவையில்லை. பிணம் தின்னும் இனமாக தமிழினம் உருவெடுத்திடும். இன்னும் கொஞ்ச காலத்தில புலத்தில் செயற்பட்ட அனைத்து தமிழ் தேசிய வாதிகளும் அப்பலுக்கற்ற துரோகிகள் என்று நம் "மீடியா ரீம்" முத்திரை குத்தும். இன்றும் உள்ளேயும் வெளியேயும் விடுதலைப்புலிகள் பற்றிய அறிக்கை விடுவது இந்த ஊடக குழு தானே!

தலைவருக்கு தீபம் ஏற்றி, அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை....

ஆனால் நந்நதிக்கடல் ஓரத்தே தலைவன் நாதியற்று கிடந்ததை பார்த்த எழுத்தாளர் ஏன் விட்டு வந்தாரே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், தலைவரின் புகழுடலை இலங்கை அரசு காண்பித்த பின் ஏன் ஒரு புலத்து புண்ணியவான்களும் உரிமை கோரவில்லை!? இந்த ஊடக பேர்வழிகளாவது உரிமை கோரி உறுதி செய்திருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்கவே சந்தர்ப்பம் இல்லை.

தலைவர் வீரச்சாவு அடைந்திருக்க மாட்டார் என்று வாதாடுவது என் நோக்கமல்ல. போர் களத்தில் எதுகும் சாத்தியம் என்பது உண்மை! ஆனால் தலைவர் வீரச்சாவடைந்தார் என்று செல்லை பாவித்து தான் 'ஈழத்தை மீட்க வேண்டிய கட்டயம் இருப்பதாய் பலரும் உணர்கின்றனர்" அன்றும் தலைவர் இன்றும் வெட்கம்n கெட்ட தனமாய் தலைவர்... சொந்தமாய் எதையும் செய்யும் பழக்கம் யாருக்கும் இல்லை என்று புலனாகின்றது.

தலைவர் உண்மையில் வீரச்சாவடைந்து அவருக்கு உரிய மரியாதைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், அதனால் தலைவருக்கு அஞ்சலி செய்கின்றோம் என்ற 'படம்" மட்டுமே காட்டப்படுமேயன்றி உளமார்ந்து எந்த ஜாம்பவான்களும் அஞ்சலி செய்ய போவதில்லை;. ஏன் எனில் தலைவர் சொன்ன இறுதி மூச்சான தமிழீழத்தை பற்றிக் கூட கதைக் முடியாத சூழலை இவர்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கி விட்டார்கள். தமிழீழம் என்றால் ஆயுதப்போர் தான் என்று சமன்பாடு கொடுக்கிறது இந்த ஊடக குழாம்.

என்ன செய்ய முடியும்?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரை அவலை நினைத்து உரலை இடிக்குமாம்போல் உள்ளது.தமிழீழ விடுதலைப் போரின் தலைமை தற்போதல்ல எப்போதுமே தனது செயல்களையும் திட்டங்களையும் பொதுவாக எவருக்கும் அறியத்தருவதில்லை. களத்தில் என்ன நடக்கின்றது என்பது அக்களத்தில் மறுபுறத்தே இருக்கின்ற போராளிகளுக்கே தெரியாத சம்பவங்கள் நிறையவே கடந்த காலங்களில் இருந்திருக்கின்றன.

மேலும் புலம்பெயர் தேசத்தில் பிரச்சாரம் பணியாரம் என்றெல்லாம் புடுங்கிக் கொண்டிருந்தவர்களில் அனேகர் அதை பகுதிநேரமாகவும் பவிசுக்கும் செய்து கொண்டிருந்தவர்களே. இவர்கள் புலத்;திற்கு எப்படி அறிமுகமானார்கள் எனில் போர்நிறுத்த ஒப்பத்தம் நடைமுறையில் இருந்த காலத்திலேயே அதிகம்.

மேலும் இவர்கள் அனைவரும் தலைமை பற்றியோ அன்றேல் விடுதலை பற்றியோ சரியான மதிப்பீடுகளை வைத்திருந்தார்களா என்பதும் தெரியாது . அது தவிர இவர்களில் பலரை புலம் நம்பிக்கையுடன் நடாத்தியதா என்பதும் தெரியாது காரணம் பல அதை நீங்களே அறிந்திருக்கலாம்.

அப்போ களநிலைகள் மற்றும் விடையங்கள் பற்றிய விபரம் இவர்கட்கு தெரிந்து அவர்கள் மக்களுக்கு தெரிவிக்காது விட்டார்கள் மாயைநிலையைக்கட்டி வளத்தார்கள் என்று கூறுகிறீர்களே! இவை எல்லாம் தெரிந்திருந்தால் புலம்பெயர் தேசத்தில் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட இப்போதும் பங்கெடுக்கும் சொற்ப விகிதத்தில் உள்ள தமிழர்களுடன் பங்கெடுக்காத மிகுதி தமிழமக்களும் தெருவுக்கு வந்து போராடி இப்படுபொலைகளைத் தடுத்திருப்பார்களா?

முப்பது வருட காலமாக தனிமனிதனாக ஒரு ஞானியாக போரட்ட தவம் புரிகிறானே தவைவன் ! அவனையும் அவன் கட்டளையேற்று வீரகாவியமாகி விதையாகிப்போனார்களே பல்லாயிரக்கணக்கான மாவீரர் அந்த இருவரதும் உளத்தூய்மை ஒத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் அணிதிரளுக்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு. அதைவிடுத்து ஓனாயும் ஆட்டுக்குட்டியும் கதை கூறி பம்மாத்து விட்டுக்கொண்டிருப்போர் ஒதுங்கியிருங்கள் தேர் இழுங்கள் திருவிழாச்சொய்யுங்கள். நீங்கள் தற்போது வாழகின்ற, ஒரு வேளை உணவேனும் ஒரு உடுதுணியோனும் உண்டுறங்க ஓர் நிழளோனும் கிடைத்திட்டது தலைவராலும் மாவீரர்ச் செலவங்களாலும் என்பதை ஓர் கணம் உணருங்கள். இதை யாராவது மறுதலித்தீர்களாக இருந்தால் சண்டைதான் முடிந்து விட்டதே போங்கள் பார்;கலாம் செந்த ஊர்களுக்கு!

கட்டுரைக்குள் போக முதல்…., எப்பவடா வருவாள் எனத் தருணம் பாத்துத் தாட்டுக் குத்தக் காத்திருக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் , தலைவனை இல்லையென்று சொல்வாயா உன்னை வந்து தறிப்பேன் துரோகி , விலைபோனாயோ ? என்று மிரட்டல் விடுக்கும் சீடர்களுக்கும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உங்கள் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற நல்லா தருணமிது.

இனி…,

ஐரோப்பாவின் ஏகபிரதிநிதிகளாக இதுவரை விளங்கிய சிங்கங்களே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். போதும் உங்கள் பரப்புரை , பாவுரைகள் நீங்கள் ஓய்வு அல்லது ஓதுங்கிக் கொள்ள வேண்டிய தருணமிது.

ஓர் உறை நிலையில் தமிழர்களின் உணர்வுகளைக் கட்டிப்போட்டுள்ள கடைசி நேர யுத்தமென நடாத்தி முடிக்கப்பட்ட களக்கொலைக்குக் காரணமான அனைவருக்குள் நீங்களும் அடங்குகிறீர்கள். நடந்து முடிந்த மர்மங்களின் மறைபொருளாக நீங்கள் தான் நின்றீர்கள். புலத்தில் புடுங்குகிறோம் , புடுங்குகிறோம் என்று நிலத்தில் நம்பி நின்ற எல்லோருக்கும் சவக்குழி தோண்டிப் புதைத்துவிட்டு இன்னும் தேசியம் , சுயநிர்ணயம் , தாயகம் , தலைவர் 30ஆயிரம் பேருடன் ஒளித்திருக்கிறார் , காலம் வரும்பேhது வந்து களத்தினில் நிற்பார் என்ற பம்மாத்துக்களை நிப்பாட்டீட்டு உங்கள் பதவிகளைப் போட்விட்டுப் பாவமன்னிப்புக் கேளுங்கள். இப்பாவங்களுக்கெல்லாம் நீங்களே காரணங்கள் என்பதை காலத்திற்குச் சொல்லுங்கள்.

கடைசிவரை புலத்து அரசியல் புண்ணியவான்களின் கதையை நம்பியே காட்டிக்கொடுத்தவன் எவன் களவு கொடுத்தவன் எவனென்று பிரித்தறிய முடியாமல் உங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டுக் களக்கொலையானவர்களும் , களமே வாழ்வென்று கடைசிவரை நின்று போராடியவர்களும் சரணடைந்தார் அல்லது சனத்துடன் போனோர் என்று சாவுமின்றி வாழ்வுமின்றி வதைபடும் நிலைமைக்கு முழுப்பொறுப்பும் நீங்களே.

களத்தில் நின்றவர்கள் போராடினார்கள் புலத்தில் நீங்கள் பரப்புரைத்து தமிழனின் உரிமைகளை உலகின் அங்கீகாரம் பெற்றுத்தருவீர்கள் என்று முழுமையாக உங்களையே நம்பினார்கள். நீங்களோ பரப்புரையென்ற பெயரிலும் பணியென்ற பெயரிலும் மாதாந்தச் சம்பளமும் மேடைகளுமென உங்களை விலாசப்படுத்தினீர்கள். உங்களை நம்பி உயிரைப்பணயம் வைத்து அவர்கள் கொத்துப்பட்டுக் குதறுப்பட்டுச் சாகும் நிமிடத்தையும் எதிரிக்குத் தேடிக்கொடுத்த பெருமை உங்களையே சார்கிறது.

செயற்கைக்கோள்களுடன் போர் சென்று கொண்டிருக்க செல்லிடப்பேசிகளில் செவ்விகள் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். ஒலிவாங்கிகளால் ஆட்லறியடித்துக் கொண்டிருந்தீர்கள். ஆய்வுகள் என்று ஊடகங்களில் உங்களை நாயகர்களாக்கி மகிழ்ந்தீர்கள். இதோ புலிவெல்லும் இதோ பலிகொள்ளுமென்று போதையில் கிடந்து புலிகளின் பலத்தையெல்லாம் பாடைகட்டிக் கொடுத்துவிட்டு உங்களைப் பற்றிப் புழுகிக்கொண்டிருந்தீர்கள். அவர்கள் போராளிகளாகத் தளபதிகளாகக் களத்தில் கருகிக்கருகி வீழக் கடைசியுத்தம் களக்கொலை முடித்துக் கூத்தாடினான் பகைவன்.

„‘அவன் இல்லையென்றால் அணுவும் அசையாது“ ஆயினும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாய் தன்னைத் தந்து நாங்கள் வாழத் தன்னைத் தனது குழந்தைகளைக் குடும்பத்தைப் பலிதந்து எங்களின் சூரியத்தேவன் மெளனமாகி…, *நந்திக்கடலோரம் நாதியற்றுக் கிடக்க நம்பமாட்டோம்* எங்கள் தலைவன் எழுந்து வருவான்* என்று மீளவும் பொய்சொல்லி எந்த மக்களுக்காய்த் தன்னை இழந்தானோ அந்த்தலைவனுக்கு ஒருதுளி கண்ணீர் ஒரு மெழுகுவர்த்தி ஒற்றைப்பூவேனும் போடாமல் அநாதையாக்கினீர்கள்.

போர்விதியை மீறி எங்கள் போராளிகள் கொத்தியும் குதறியும் கொலையுண்ட துரோகத்தை போர்க்குற்ற மீறல்களை உலகம் நீதி வழங்காமல் ´இருக்கிறார் அவர் வருவார்´ என்று கதைசொல்லி நடந்து முடிந்த கொலைகளுக்கு நீதி கிடைக்காமல் போக வைக்கும் தலைகளே ! எழுச்சியென்ற பெயரில் மக்களை ஓர் மாயையில் வைத்து இருப்போரையும் மண் மூடப்போகும் துரோகத்துக்கு நீங்களே முழுக்காரணமும்.

எது நடந்துவிடக்கூடாதென்று எண்ணினோமோ அத்தனையும் புலத்து ஏக பிரதிநிதிகள் புண்ணியத்தால் நடந்து முடிந்துவிட்டது. தமிழீழம் தனித்த ஆட்சி இவையெல்லாம் தமிழருக்கு இல்லையென்றாகி இருப்போரை மீட்பதே முதற்கடனென தலைவனின் நியமிப்பில் புலத்தில் அடுத்த நகர்வின் ஆக்கத்திற்கான வழிகள் திறபடும் தருணத்தில் அவசர அறிக்கைகளும் ஆய்வுகளும் விடும் ஐயாக்களே! போதும் விட்டிட்டுப் போங்கோ. உழைத்து உண்ணும் பழக்கத்தை இனியாவது தொடங்குங்கள். இதுவரை நீங்கள்தான் ராசாக்கள் என வைத்திருந்த கதிரைகள் அடிபட்டுத் தடாலென நீங்கள் விழுவதை நாமும் உணர்கிறோம்.

இந்தா இந்தாவென எதிரி எண்ணிக்கை சொல்லிச் சொல்லி வறுகிய நிலத்தையும் வளத்தையும் பொங்கிறோம் , படைக்கிறோம் , போராடுகிறோமென்றெல்லாம் பொய் சொல்லி எல்லாவற்றுக்கும் காரணமாயிருந்தவர்களே ! வரலாற்றுத் துரோகம் என்பதற்கு வரையறை சொல்ல நீங்களே தரமான சான்றுகள். இளைய சமூகம் எதிர்காலத் தமிழரின் விதியை நிர்ணயிக்க நிமிர்ந்துவிட்டது. கர்ச்சித்தது காணும் கதவைப்பூட்டிக்கொண்டு போங்கோ. காலம் இன்னும் உங்கள் கள்ளத்தனங்களைத் தட்டிக்கேட்கும் தைரியத்தைப் பெற்றுவிட்டது.

http://mullaimann.blogspot.com/

நீங்கள் சொல்வது போல் இங்க ஒன்றும் மாயம் செய்து புலமும் களமும் வேலை செய்யவில்லை. விடுதலைக்காக இரு பக்கமும் சேர்ந்து தான் உழைத்தோம். எதிரியை பின்வாங்கசெய்து நிர்வாக கட்டமைப்புக்களை உருவாக்கி ஒரு சுதந்திரத்திற்கான அங்கீகாரத்துக்காக காத்திருந்தோம். எல்லா வல்லரசுகளும் கூட்டு சேர்ந்து அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து இவ்வளவு மக்களையும் கொன்று அழித்து விட்டார்கள்.

போர்நிறுத்த காலத்தில் தாயகம் சென்றவர்கள் அங்கு நடந்த ஒரு அரசு முறையை அறிவார்கள்.

இவ்வளவு காலமும் நடந்த விடுதலைக்கு பண உதவியோ ,தார்மீக உதவியோ செய்யாதோர் இனி எக்காலத்திலும் விடுதலைக்கு உதவ போவதில்லை

சும்மா குழப்பி அடிக்க இப்படி நாலு கட்டுரைகள் எழுத வருவார்கள்.

புலத்தில் இவ்வளவு காலமும் களத்தில் அவர்களோடு சேர்ந்து வேலை செய்தவர்களை குறை கூறி கொச்சை படுத்துவதை விட்டு விட்டு இனி ஏதாவது நல்லது செய்ய உங்களால் முடியுமா என்று முயன்று பாருங்கள்.

Edited by நேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கட்டுரை அவலை நினைத்து உரலை இடிக்குமாம்போல் உள்ளது.

அப்போ களநிலைகள் மற்றும் விடையங்கள் பற்றிய விபரம் இவர்கட்கு தெரிந்து அவர்கள் மக்களுக்கு தெரிவிக்காது விட்டார்கள் மாயைநிலையைக்கட்டி வளத்தார்கள் என்று கூறுகிறீர்களே! இவை எல்லாம் தெரிந்திருந்தால் புலம்பெயர் தேசத்தில் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட இப்போதும் பங்கெடுக்கும் சொற்ப விகிதத்தில் உள்ள தமிழர்களுடன் பங்கெடுக்காத மிகுதி தமிழமக்களும் தெருவுக்கு வந்து போராடி இப்படுபொலைகளைத் தடுத்திருப்பார்களா?

முப்பது வருட காலமாக தனிமனிதனாக ஒரு ஞானியாக போரட்ட தவம் புரிகிறானே தவைவன் ! அவனையும் அவன் கட்டளையேற்று வீரகாவியமாகி விதையாகிப்போனார்களே பல்லாயிரக்கணக்கான மாவீரர் அந்த இருவரதும் உளத்தூய்மை ஒத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் அணிதிரளுக்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு. அதைவிடுத்து ஓனாயும் ஆட்டுக்குட்டியும் கதை கூறி பம்மாத்து விட்டுக்கொண்டிருப்போர் ஒதுங்கியிருங்கள் தேர் இழுங்கள் திருவிழாச்சொய்யுங்கள். நீங்கள் தற்போது வாழகின்ற, ஒரு வேளை உணவேனும் ஒரு உடுதுணியோனும் உண்டுறங்க ஓர் நிழளோனும் கிடைத்திட்டது தலைவராலும் மாவீரர்ச் செலவங்களாலும் என்பதை ஓர் கணம் உணருங்கள். இதை யாராவது மறுதலித்தீர்களாக இருந்தால் சண்டைதான் முடிந்து விட்டதே போங்கள் பார்;கலாம் செந்த ஊர்களுக்கு!

யதார்த்தமற்ற விமர்சனங்களை இல்லை விசமத்தனமான கருத்துகளை விடுத்து ஏதாவது உருப்படியாகச் செய்யும் விதமாக மக்களை ஒன்றுதிரட்டுவோம். நாம் அணைவரும் ஓரணியாவோம்.

கொஞ்சம் என்ன, ரொம்பக் கஷ்டமான விடயம் இது பாருங்கோ! ஆடிய ஆட்டமென்ன, வாழ்ந்த வாழ்க்கை என்ன ........... விட்டு விட மனம் வருமா? தமிழன் அழிந்தால் என்ன!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் என்ன, ரொம்பக் கஷ்டமான விடயம் இது பாருங்கோ! ஆடிய ஆட்டமென்ன, வாழ்ந்த வாழ்க்கை என்ன ........... விட்டு விட மனம் வருமா? தமிழன் அழிந்தால் என்ன!

அவர்கள் ஆடி பாடிய போது நீங்கள் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டிருந்தீர்க

அவர்கள் ஆடி பாடிய போது நீங்கள் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டிருந்தீர்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் உமது கருத்தை பார்த்தா பொழுதுபோக்குக்கு இதில எழுதுகிறீர் போல் கிடக்கு, 5 சதம் போராட்ட காலத்தில கொடுத்த ஆள் போல் இல்லை.

ஏன் இவ்வளவு காலமும் வேலை செய்த அன்பர்களை கொச்சை படுத்துகிறீர்?

இறந்தவர்கள், உயிரோடு இருப்பவர்கள் எல்லாரும் சேர்ந்து தான் விடுதலைக்காக உழைத்தோம். தோற்று விட்டோம். நாம் அல்ல ஈழத்தமிழனமே தோற்று விட்டது.

அதற்கு நீரும் ஒரு காரணியாக இருந்திருப்பீர்

நேசன் என்ன எழுதுகின்றீர்கள் அல்லது என்ன நான் எழுதினேன் என்பதை சரிவர புரிந்து கருத்து எழுதுவது அடிப்படையில் கருத்து வைக்கும் உங்கள் மீதும் உங்கள் கருத்து மீதும் மதிப்பளிக்கும்....

கருத்தை சரி வர உள்வாங்காது நீங்களும் எழுந்த மனதாக கருத்து வைத்தால் கட்டுரையாளருக்கும் உங்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக நான் கருதவில்லை.!

இருப்பினும், நன் வைத்த கருத்தில் என்ன தவறு என்று சொல்லாமே? பான்ட் அவர்கள் தமிழ் தேசிய வாதிகள் பற்றி

கொஞ்சம் என்ன, ரொம்பக் கஷ்டமான விடயம் இது பாருங்கோ! ஆடிய ஆட்டமென்ன, வாழ்ந்த வாழ்க்கை என்ன ........... விட்டு விட மனம் வருமா? தமிழன் அழிந்தால் என்ன!

இப்படி எழுதியமைக்கே நான் அவர் ஏன் செயற்பாடுகளில் இணையாமல் அவர்கள் ஆடினார்கள், பாடினார்கள் என்று எழுதுகிறார் என்று சாரம் படவே எழுதினேன்...!

அடிப்படையில் நீங்கள் கருத்துக்களை படிக்காமல் கருத்து வைப்பதால் குழுப்பங்கள்...

நேசன் என்ன எழுதுகின்றீர்கள் அல்லது என்ன நான் எழுதினேன் என்பதை சரிவர புரிந்து கருத்து எழுதுவது அடிப்படையில் கருத்து வைக்கும் உங்கள் மீதும் உங்கள் கருத்து மீதும் மதிப்பளிக்கும்....

கருத்தை சரி வர உள்வாங்காது நீங்களும் எழுந்த மனதாக கருத்து வைத்தால் கட்டுரையாளருக்கும் உங்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக நான் கருதவில்லை.!

இருப்பினும், நன் வைத்த கருத்தில் என்ன தவறு என்று சொல்லாமே? பான்ட் அவர்கள் தமிழ் தேசிய வாதிகள் பற்றி

இப்படி எழுதியமைக்கே நான் அவர் ஏன் செயற்பாடுகளில் இணையாமல் அவர்கள் ஆடினார்கள், பாடினார்கள் என்று எழுதுகிறார் என்று சாரம் படவே எழுதினேன்...!

அடிப்படையில் நீங்கள் கருத்துக்களை படிக்காமல் கருத்து வைப்பதால் குழுப்பங்கள்...

மன்னிக்கவும் பறவைகள். தவறாக உங்கள் கருத்துக்கான பதிலாக இணைத்து விட்டேன்.

பாண்ட் அவர்களின் கருத்துக்கே எனது பதில்

பொறுத்தருள்வீர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று நடந்து முடிந்தபின் புத்திசாலிகள்போல கருத்துக்களைப் பதிவதில் பயனில்லை. இந்த புத்திசாலித்தனம் எமக்கு ஆரம்பத்திலே இருந்திருக்கவேண்டும். இனி இதுபோல் நடக்காமலும் நடந்த அழிவுகளிலிருந்து நிமிர்ந்து எழுவது எப்படி என்பதையும் பற்றி சிந்தித்து செயற்படுவோம். ஆடினார்கள் பாடினார்கள் என்று தெரிந்திருந்தால் அவற்றைத் தட்டிக்கேட்டு வெளிக்கொண்டுவந்திருக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் எமது உறவுகளுக்கு நாமே சேற்றை அள்ளிப் பூசவேண்டியதில்லை. எல்லோரும் நல்லதையேதான் செய்யவிரும்புகிறோம் ஆனால் மற்றவனை வசைபாடாமல் அதைச் செய்து முடிப்போம். எமது தேசியத்தலைவனை நாங்கள் இழந்து விட்டோமா இல்லையா என்பதை ஆராய்ந்து அங்கலாய்ப்பதை விடுத்து விழுந்த எமது உறவுகளை அணைத்து தூக்கி நிறுத்துவோம்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ தங்களுக்கு அப்ப சந்தர்பம் கிடைக்காதவை இப்ப சந்தில சிந்து பாடினம்.யாரோ பிடிக்காதவர்களைத் திட்டுவதற்காக ஒட்டு மொத்த புலத்து தமிழ் தேசிய ஆதரவாளர்களையும் திட்டுவது நல்லதாகப் படவில்லை. செயற்பட்டவர்கள் சரியாகச் செயற்படா விட்டால் அப்பொழுது தட்டிக கேட்காமல் விட்டு இப்பொழுது கேட்பது சந்தேகத்தையே உருவாக்குது. அப்போது உழைத்தவர்கள் ஏதாவது முயற்சி செய்தோம் என்றளவிலாவது பெருமூச்சுவிடலாம். அப்போதும் உதவாமல் எப்போதும் உதவாமல் வைக்கல் பட்டறை நாய் போல இருப்பது நல்லதல்ல.

கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இன்னும் வெளிநாடுகளில் உள்ள வலுவான ஆதரவுக் கட்டமைப்பை உடைக்க இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறதாம்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் கூட வெளிநாடுகளில் அவர்களுக்கான ஆதரவுக் கட்டமைப்பு கொஞ்சம் கூட சிதறாமல் அப்படியே வலுவாகஇ இன்னும் சொல்லப் போனால்இ முன்பை விட மேலும் வலுவாக இருப்பதால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதை உடைக்க தற்போது முயற்சிகளில் இறங்கியுள்ளது. புலிகள் ஆதரவு அதிகம் காணப்படும் நாடுகளுடன் பேசி இந்த கட்டமைப்பை சீர்குலைக்க அது முயன்று வருகிறதாம்.

வடக்கில் நடந்து முடிந்துள்ள சண்டையின்போது விடுதலைப் புலிகளின் அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள்இ கம்ப்யூட்டர் கோப்புகள் உள்ளிட்டவற்றை இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறது.

எங்கெங்கிருந்து புலிகளுக்கு ஆயுதம்இ பணம் உள்ளிட்டவை வந்தது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஆயுதம்இ பணம் உள்ளிட்டவற்றை அனுப்பி வந்த சப்ளை குழு தற்போது எங்கு இருக்கிறது என்பது குறித்து உறுதியான தகவல்கள் இலங்கை அரசு வசம் இல்லையாம்.

அதேசமயம்இ புலம் பெயர்ந்த தமிழர்கள்இ தற்போது புலிகள் அமைப்பின் நோக்கத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளதாக இலங்கை அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் சிலர் தற்போது முக்கியப் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு செயல்படுவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் உலக நாடுகள் முன்பு வைத்து புலிகளுக்கு ஆதரவானவர்களை கட்டுப்படுத்தவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இலங்கை அரசு வற்புறுத்தப் போகிறதாம்.

புலிகள் நடத்தி வந்த 30 ஆண்டு கால தீவிரப் போருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரும் உதவியாக இருந்து வந்தனர். பணம்இ ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆதரவை அவர்கள் தந்து வந்ததால்தான் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் ஆயுதஇ நிதி மற்றும் தொழில்நுட்பப் பலத்தைப் பெற்று அதன் மூலமாக புலிகள் இயக்கத்தை இலங்கையி்ல் தோற்கடித்துள்ளது இலங்கை அரசு.

தற்போது உலக அளவிலும் புலிகள் அமைப்பின் கட்டமைப்பை சீர்குலைக்க அது முயன்று வருகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.