Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

சர்வதேச அமைப்புக்களாலும் இந்தியா போன்ற நாடுகளாலும் அரச அமைச்சுக்களில் எதிர்கட்சிகளில் உள்ள சிங்களவர்களாலும் மட்டுமே இது சாத்தியம். டக்கிளஸ் தேவானந்தாவிடம் கெஞ்சுவதைக் காட்டினும் கோத்தபாயவிடம் கேட்கலாம். ரணிலிடம் கேட்கலாம். ஐசிஆர்சி யிடம் கேட்கலாம். ஐநாவிடம் கேட்கலாம். இந்தியாவிடம் கேட்கலாம்

அதை நான் ஆமோதிக்கிறன்

  • Replies 185
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

3 இலட்சம் மக்களை பாதுகாக்கிற திறனோ.. சரணடைந்த போராளிகளை காக்கிற திறனோ டக்கிளஸ் தேவானந்தா போன்ற கொலைகாரர்களிடம் கிடையாது. அவனே மண்டையன் குழு என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்று கோணிப்பையில் கட்டி எறிந்தவன். அவனே கோவில்களில் கொள்ளையடித்துவிட்டு அதையும் சுருட்டிக் கொண்டு இந்தியப் படைகளோடு இந்தியாவுக்கு ஓடினவன். அவனே சிங்களத்தின் எலும்புக்கு ஒட்டி இருந்து காட்டிக் கொடுப்பு அரசியல் நடத்தியவன். அவனே பல பொதுமக்களின் சாவுக்கு காரணமாக இருந்திருக்கிறான். இந்த நிலையில் அவனிடம்... போய் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுபவர்கள் கையாலாகாதவர்கள் மட்டுமே..!

இவர்கள் 22,000 மாவீரர்களினதும் கனவுக்கு சாவு மணி அடித்தவர்கள். 1,20,000 மக்களின் இறப்பினில் குளிர் காயத்தயங்காதவர்கள்.

3 இலட்சம் மக்களையும் போராளிகளையும் காக்க வேண்டின் அதற்காக ஒரு அமைச்சுப் பதவியில் இருக்கிறவன் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவனால் எத்தனையோ விடயங்களை செய்திருக்க முடியும். ஆனால் இவனாலோ அல்லது இதர ஒட்டுக்குழு ஆயுத தாரி தலைவன்களாளோ இந்தியப் படை காலத்தில் செயற்பட்டது போன்று எதிரியின் மடிக்குள் உறங்கிக் கொண்டு ஆயுத அரசியல் செய்ய முடியுமே அன்றி வேறெதனையும் செய்ய முடியாது. இவர்களால் பிரிந்த வடக்குக் கிழக்கு மாகாண சபையைக் கூட இணைக்க முடியாது. கனவுதான் காண முடியும்.

இவன்.. தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பிரபாகரனை வைச்சே இவ்வளவு காலமும் காலத்தை ஓட்டிட்டான்.. பிரபாகரன் இல்லை என்று அவனே நம்பும் இக்காலத்தில் அவனுக்கு இந்தக் கட்சியும் தேவையில்லை.. அமைச்சும் தேவையில்லை. அவற்றைக் கலைத்துவிட்டு.. லண்டனில் செய்துள்ள பல கோடி முதலீட்டை கவனிக்க லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த பெருமக்களோடு இணைவதே சிறப்பு. அங்கிருந்து இவன் செய்யும் காட்டிக் கொடுப்பு அரசியலை கைவிட்டால்.. போராளிகளிற்கும் மக்களுக்குமான அச்சுறுத்தல் வெகுவாகக் குறையும்.

சிங்களவர்கள் போராளிகளை மக்களை இனங்கண்டு அழித்ததிலும்.. இந்த ஒட்டுக்குழு நாய்கள் காட்டிக் கொடுத்து அழித்ததே அதிகம். இந்த நாய்களிடம் மக்களை பாதுகாக்கக் கோரும்.. மு... மு..ள் களை மக்கள் சரியாக இனங்காண வேண்டும்.

டக்கிளஸ் பேசினாராம்.. போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கச் சொல்லி. அதனை கோத்தபாய உடனடியாக நிறைவேற்றுவாராம் என்று சிலர் சிராட்டிக்குளத்தில் வைத்து புலிகள் மரண அடி அடிக்கப் போகிறார்கள் என்று கட்டுரை வரைந்த கணக்காக கற்பனையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

டக்கிளஸ் தேவானந்தா என்பவன்.. தெளிவான தமிழினத் துரோகி மட்டுமன்றி அவன் சிங்கள அரசில் செல்வாக்குள்ள ஆளும் அல்ல. அவன் அங்கு ஒரு போடுதடி. அவனை நம்பி 3 இலட்சம் மக்களையும் சரணடைந்தவர்களையும் காப்பாற்ற கோருவது கையாலாகதவர்களின் வேலை.

சர்வதேச அமைப்புக்களாலும் இந்தியா போன்ற நாடுகளாலும் அரச அமைச்சுக்களில் எதிர்கட்சிகளில் உள்ள சிங்களவர்களாலும் மட்டுமே இது சாத்தியம். டக்கிளஸ் தேவானந்தாவிடம் கெஞ்சுவதைக் காட்டினும் கோத்தபாயவிடம் கேட்கலாம். ரணிலிடம் கேட்கலாம். ஐசிஆர்சி யிடம் கேட்கலாம். ஐநாவிடம் கேட்கலாம். இந்தியாவிடம் கேட்கலாம்.

இங்கு சிலர் டக்கிளஸ் தேவானந்தாவை ஏதோ சிறீலங்கா அரசில் சக்தி மிக்க ஒருவராக சித்தரிக்க விரும்புகின்றனர். அவனே ஒரு போடுதடியாக இருக்கும் போது..???! இவர்களுக்கு ஏன் இந்த நப்பாசை..! :icon_idea:

உண்மை தான் நெடுக்ஸ் , டக்கிளஸைப் பற்றி போடுதடி என்று சரியான சொற்பதத்தை பாவித்துள்ளீர்கள் .

இவ்வளவு அவலம் நடந்த பின்பும் , தங்களது கட்சித் தொழிலான கடத்தல் , கப்பம் அறவிடுதலை நிறுத்தினார்களா ..... இல்லையே ....

இவர்களின் நோக்கம் தங்கள் இருப்பை பாவித்து கொள்ளையடிப்பது மட்டுமே . இதுகள் சரியான தாதாக்கூட்டம் .

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை பார்க்க தெரியும் என்று சொல்வார்கள் .

ஆக மொத்தத்தில் புலம்பெயர் தமிழர்கள் தற்போது கருத்தியல் ரீதியாக ஆகக்குறைந்தது யாழ் களத்தில் பிரிந்து நிற்கின்றோம் என்பதே தற்போதைய உண்மை. இந்தக் கருத்தியல் வேறுபாடு நம்மிடையே முன்பைவிட அதிகரித்து இருப்பதையும் காணமுடிகின்றது.

:icon_idea: அதுதான் ஜனநாயகம் ,இப்ப தமிழர்களுக்கு சனநாயகம் ஜயா மீது சரியான பாசம் வந்திட்டுது என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு. <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் ஒரு அறிக்கை

தமிழ்தேசிய கூட்டமைபுடன் ,நாங்களும் சேர்ந்து போராடி ஒரு தற்காலிக தீர்வுக்கு வழி காண்போம் இந்தியாவுடனும் சேர்ந்து தீர்வை காண்போம்

புலத்தமிழரின் தாகம் தமிழீழம்

வன்னிதமிழனின் தாகம் குடிதண்ணீர்

  • கருத்துக்கள உறவுகள்

<_< அதுதான் ஜனநாயகம் ,இப்ப தமிழர்களுக்கு சனநாயகம் ஜயா மீது சரியான பாசம் வந்திட்டுது என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு. <_<

இது ஜனநாயகம் அல்ல. சந்தர்ப்பவாதம். இவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்திகள். பச்சோந்திகளுக்கு அது உபயோகமானதுதானே. ஆனால் மக்களுக்கு..????!

இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்குத் தேவை அவர்கள் முன்னெடுத்த 35 வருடகால அரசியல் நிலைப்பாட்டுக்கான கொள்கையை உறுதியோடு காவிச் செல்லக் கூடிய ஒரு கூட்டுத்தலைமையே.

சுயநிர்ணய உரிமை. தமிழர் தாயகக் கோட்பாடு இவற்றை உள்ளடக்கிய தமிழீழத் தனியரசுக்கு நிகரான ஒரு அரசியல் தீர்வு நோக்கிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய உறுதியான இளம் தலைமைத்துவமே இன்று எமது மக்களுக்குத் தேவை. புலம்பெயர் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூடிப் பேசி ஆலோசித்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுவே இன்றைய நிலையில் அவசியம். ஆளாளுக்கு பிரிந்து போகாமல் தலைவர் வகுத்த வழியில் கூட்டமைப்பும் புலம்பெயர் மக்களும் ஒருங்கிணைந்து பயணிக்க எல்லா வழியிலும் முயல வேண்டும்.

அதனை டக்கிளஸ் தேவானந்தா போன்ற போடுதடிகளோ... அல்லது வேறேவருமோ செய்ய முடியாது. அவங்கள்.. எனி அரசியல் செய்ய முடியாத நிலை தோன்றி இருப்பதால் தான் இப்போ மக்களை நோக்கி அறிக்கை விடுறாங்கள். கோத்தபாய டக்கிளசுக்கு வழங்கியுள்ள கால அவகாசத்துக்குள் அவர் கட்சியைக் கலைச்சிட்டு சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாலேயே 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களை வதைக்கும் அவசரகாலச் சட்டத்துக்கு வாக்களித்து வரும் டக்கிளஸ் தேவானந்தா இப்படி அறிக்கைகளை விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். அவனின் அரசியல் எதிர்காலம் பிரபாகரனின் இன்றைய நிலையோடு சூனியமாகிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவன் இந்த சுடலை ஞான அறிக்கையை விட்டிருக்கிறான். அதிலும் கூட புலிகளை போராளிகளாக அவன் கருதவில்லை. எதிர்களாக வர்ணித்துக் கொண்டு மறக்கட்டாம் மன்னிகட்டாம்.

யாரை ஏய்க்கிறான் இவன். சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்தை ஆண்டாலும் பறுவாயில்லை. அது தெளிவாக சிங்கள ஆக்கிரமிப்பை பறை சாற்றும். ஆனால் இந்த காட்டிக் கொடுப்புத் துரோகிகள் தமிழ் மண்ணில் நிலை கொள்ள எனி அனுமதிக்கக் கூடாது. இவர்களுக்கு இவர்களின் எஜமானர்களே தீர்ப்பெழுத நிற்பந்திக்க வேண்டும். எம்மினத்தில் எனி ஒரு காட்டிக் கொடுப்புக்கு இந்த நாய்களை அதன் பரம்பரைகளை மிச்சம் வைக்கவே கூடாது. அதற்காக தமிழ் மக்கள் எந்தப் பேயோடும் கூட்டுச் சேரலாம்.

இவர்களின் அழிவில் தான் தமிழ் மக்களின் விடிவின் முதல் வெற்றி தங்கி இருக்கிறது. :icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழ் மக்கள் எந்தப் பேயோடும் கூட்டுச் சேரலாம்
.

பேசாமல் இந்திய பேய்யுடன் கூட்டு சேர்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்டமைபுடன் ,நாங்களும் சேர்ந்து போராடி ஒரு தற்காலிக தீர்வுக்கு வழி காண்போம் இந்தியாவுடனும் சேர்ந்து தீர்வை காண்போம்

புலத்தமிழரின் தாகம் தமிழீழம்

வன்னிதமிழனின் தாகம் குடிதண்ணீர்

வன்னி மக்களின் இன்றைய தாகம் குடிதண்ணீராக இருக்கலாம். ஆனால் அவர்களின் மனங்களில் அந்தக் குடிதண்ணீர் தாகத்தோடு தமிழீழத் தாகம் இருப்பதை ஏன் நீங்கள் இனங்காண்கிறீர்கள் இல்லை.

மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் முக்கியமானவை தான். ஆனால் அதைக் காட்டி அந்த மக்களின் அரசியல் அபிலாசைகளை நாமே கேவலம் செய்யக் கூடாது.

வன்னி மக்களுக்கு இன்று அண்றாட வாழ்க்கையை வாழ்வதே பிரச்சனை என்பதால் அவர்களுக்கு அரசியல் அபிலாசை என்ற ஒன்றில்லை என்றில்லை. இறுதிவரை தமிழீழக் கனவோடு இத்தனை துயர்களையும் சுமந்தவர்கள் அந்த மக்கள். அதனை நாம் மறக்கக் கூடாது. அதற்காகவே அவர்கள் இந்த தண்ணீர் தாகத்துக்கும் இலக்கானார்கள் என்பதையும் மறக்கக் கூடாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

.

பேசாமல் இந்திய பேய்யுடன் கூட்டு சேர்வோம்

இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதோடு அவர்களின் கடந்த கால தேர்தல் வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் பொது வேலையை வகுத்துக் கொண்டு அதன் வழி செல்வதே இப்போது அரசியல் சூனிய நிலையில் இருக்கும் தமிழ் மக்களை அந்தச் சூனிய நிலையில் இருந்து மீட்க உதவும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தனிப்பட்ட கொள்கைகளை விடுத்து.. தற்போதுள்ளது போன்று தேசிய தலைவரோடு கண்ட இணக்கப்பட்டோடு ஒத்திசைந்து தொடர்ந்து பயணிப்பதோடு மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்படின்.. புலம்பெயர் மக்களின் பூரண ஒத்துழைப்பும் அவர்களுக்குக் கிடைக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையோடு இந்த நிலைக்கு வருமாயின் அவர்கள் தீர்மானிக்கின்ற வழிமுறைகளில் தமிழ் மக்களின் இறுதி இலட்சியத்தை அடைய முயற்சிப்பதற்கு ஒத்துழைக்கலாம். அதில் இந்தியாவோடு கூட்டுச் சேர்வது கூட பரிசீலிக்கப்படலாம். அது தவறல்ல.

ஆனால் டக்கிளஸ் தேவானந்தா கருணா போன்ற துரோகிகள் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யப் போவதில்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு இந்த நாய்களின் இருப்பே முக்கிய காரணம். அதனை மன்னிக்கவோ மறக்கவோ தன் மானம் இன மானம் உள்ள தமிழன் தயார் இல்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

வணக்கம்

முதலில் உள்ள பத்துப்பேரும் என்னைப்போல் தமது குடும்ப உறுப்பினர்களைத்தொலைத்து நேரடிப்பாதிப்புக்குள்ளானவர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரும்பத்திரும்ப புலம்பெயர்ந்த நாங்கள் எப்படி டக்ளசோடோ அல்லது சங்கரியோடோ அல்லது எந்தப்பேயோடோ இணைவதைப்பற்றியே பேசுகிறீர்கள். தாயக மக்கள் யாரோடு இணைவதென்பதை தீர்மானிக்க ரகுநாதனால் முடியாது.

எனக்கு டக்ளசைப்பிடிக்காது. ஆனால் தாயக மக்கள் அவரைத் தெரிவு செய்தால் - அதில் என் விருப்பத்தை திணிக்கமுடியாது. தமது தெரிவுக்கேற்ப- தமது தேவைகளுக்கு ஏற்ப அதை அவர்கள் செய்வதை கவலையுடன் - இப்படியான ஒரு நிலை நமக்குவந்ததே என்ற பெரும்சோகத்துடன் பார்த்துநிற்கத்தான் முடியும்.

அல்லது அவர்களுக்கான அரசியல்தலைமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஏற்படுத்தலாம். ஆனா யதார்த்தம் என்ன என்றால் -

தாயக மக்களுக்கு வெறும் சலுகைகளைக்கூடப் பெற்றுக்கொடுக்கும் நிலையில் கூட்டமைப்பு இல்லை. உரிமைகளை விட தற்போது சில அத்தியாவசிய விடயங்களே இப்போதைக்கு மக்களுக்கும் தேவை.

மற்றும்படி கூட்டமைப்பு ஒரு கட்சியல்ல. அது ஒரு இணைவு. அங்கு மேலும்சிலர் இணையலாம்.

தயவுசெய்து புலம்பெயர்தமிழருக்கு இருக்கிற.. "நீ அவனுக்கு ஓட்டுபோடாதே.. நீ அவனோட கூட்டணி அமைக்காதே.. என்ற எஜமான் மனப்பான்பையில் இருந்துகொண்டு தாயக மக்களுக்கு கட்டளைகள் இடாதீர்கள்.

இங்கு இருந்துகொண்டு என்னதான் குத்திமுறிந்தாலும் -

அங்கே மக்கள் தமது அரசியல் பாதையை தெரிவுசெய்வார்கள் என்பதுதான் உண்மை.

வெளிநாட்டுக்காரனென்றால் நானொரு பெரிய ஆள் - என்ற ஆட்டத்தை லீவில போகும் போது பார்த்துக்கொள்ளலாம்.

--

கலைஞன் - டக்ளசோடு இணையலாம் என்று நேரடியாகச் சொல்லுகிற மனநிலை இன்னும் எனக்கும் வரவில்லை. ஆனால்... அந்த அரசியல் செல்வாக்குச் செலுத்தப்போகிற - அந்த அரசியலை நேரடியாக எதிர்கொள்ளப்போகிற மக்களிடமே சகலதையும்தீர்மானிக்கிற உரிமை உண்டு.

அதனை மன்னிக்கவோ மறக்கவோ தன் மானம் இன மானம் உள்ள தமிழன் தயார் இல்லை

தாயக மக்கள் தன்மானம் இனமானம் இல்லாத நாய்க்கூட்டங்கள் என நீங்கள் சொல்லப்போகிற எதிர்காலம்தான் எஞ்சி நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

முதலில் உள்ள பத்துப்பேரும் என்னைப்போல் தமது குடும்ப உறுப்பினர்களைத்தொலைத்து நேரடிப்பாதிப்புக்குள்ளானவர

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் தன்மானம் இனமானம் இல்லாத நாய்க்கூட்டங்கள் என நீங்கள் சொல்லப்போகிற எதிர்காலம்தான் எஞ்சி நிற்கிறது.

புலம்பெயர்ந்தவர்களுக்கு இப்படி டக்கிளசை நாடும் ஒரு நிலை இருக்கலாம். ஆனால் தாயகத்தில் உள்ள மக்களின் மனங்களில் அநேகருக்கு அப்படி ஒரு எண்ணம் எழுதிருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் தான் அதிகம் அவனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் கள யதார்த்தம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

95ம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சிங்கள அரசு கைப்பற்றியபோது, அன்றைய சூழ்நிலையில் டக்ளஸ் தனது தினமுரசு உற்பட்ட ஊடகங்கள் மூலமாக புலிகளுக்கும் கூட்டணியினருக்கும் தான் பிரச்சனை போன்ற தோற்றத்தை வளர்த்திருந்தார். தனக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித பிரச்சனையுமில்லை என்ற பாணியில் தான் அவரது பிரச்சாரங்கள் அமைந்திருந்தது. அன்றைய சூழ்நிலையில் பலர் கூட்டணியிரைத் தான் டக்ளஸ்சை விட மோசமாக நினைத்திருந்தனர்.

பொதுவாகவே அனைவருக்கும் தெரியும், தமிழ்மக்களின் ஆதரவு புலிகள் மீது என்றைக்குமே உண்டு என்று. அத மகிந்த முதல், டக்ளஸ் வரை நன்கு அறிவர். அதனால் தான் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் மனைவியை தன் கட்சி வேட்பளராக்குவதற்கு மகிந்த அரசு முனைந்து கொண்டிருக்கின்றது.

இன்று டக்ளஸ் போடும் நல்லவர் வேடமும், ஆனந்தசங்கரியார் காட்டும் தமிழ்ப்பற்றாளர் வேடமும் அதுவாகும். இன்றைக்கு வன்னியில் 50 ஆயிரம் வரையிலான பொதுமக்களை இழந்து கொண்டிருந்தபோது வாய் திறக்காத நாய்கள், இப்போது ஏதோ போடுகின்ற வேடம் எதற்காக??

புலிகள் இல்லை, எனி அவர்களின் இடத்தினைப் பிடிச்சு, 10 கதிரை வாங்கி நக்கிப் பிழைக்கலாம் என்பதற்காக..

தமிழ்மக்களுக்காக ஏதாவது ஒரு தீர்வைப் பெற ஒரு நட்புரீதியான அமைப்பை உருவாக்கலாம் என்று தமிழ்க் கூட்டமைப்பு முயன்றபோது, தான் வன்னி மக்களுக்காக புலிகளிடம் கேட்கச் சொன்னேன். கூட்டமைப்புப் பேசவில்லை என அடுத்த நாடகம் போடுகின்றார் சங்கரியார். உண்மையான மனிதனாக நீ இருந்திருந்தால், மகிந்த அரசு பொதுமக்களைக் கொல்வதற்கு எதிராகவல்லவா முதலில் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் இவர்கள் காட்டுகின்ற அன்பு என்பது, எதிர்காலத்தில் நடக்கின்ற தேர்தலுக்காகவே அன்றி தமிழர் பாசமல்ல..

யாரிடமாவது உதவி பெறுங்கள். ஆனால் தமிழரின் சக்தியாக இவர்களை நம்பி ஏமாந்து போகாதீர்கள்.

----------------

சபேசனின் மாற்றம் கண்டு வேதனையாக உள்ளது. பெல்ஜியம் மேடையில் நீங்கள் ஆதரித்துப் பேசிய விடயங்கள் மறந்து விட்டனவா??தமிழர் தேசத்தை மீட்க என்னவோ எல்லாம் செய்வேன் என்று மார்தட்டிய நீங்களா?? என்ன கதைச்சனான், என்ன சொன்னதை சப்போட் பண்ணினான் என்பது மறந்திருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்க

தாயக மக்கள் தமிழ்தேசிய கூட்டமைபத்தான் சனநாயக வழிக்கு தேர்ந்தெடுத்தார்கள். ஆயுத வழிக்கு தலைவரை நம்பினார்கள். இரு தரப்பும் சேர்ந்து நேர்த்தியாக அரசியல் நகர்வுகளை நடாத்தி கொண்டு இருந்தார்கள்.

இடைக்கால நிர்வாக கட்டமைப்பு புலிகள் தயார் செய்த போது தமிழ்தேசிய கூட்டமைப்பும் பங்களிப்பு செய்து அவர்களும் அந்த நிர்வாக சபையில் பங்கு பெற்ற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து ஆனந்த சங்கரி வெளியேறி தேர்தலில் தமிழர் விடுதலைகூட்டனி என்றுஅறிந்த பெயரில் தேர்தலில்

நின்ற போதும் அவர் துரத்தி கலைக்கப்பட்டார்.

தாயக மக்கள் தெளிவான பதிலை எப்பவோ தந்து விட்டார்கள்.

இனி தேர்தல் வந்து எட்டப்பர் வந்தால் அது வன்முறையால், பயத்தால் வக்களித்தே வந்தார்கள் என்றே ஏற்றுக்கொள்ளப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..............

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன் அண்ணா முதல் நெடுக்காலபோவான் அண்ணா வரை நாம் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். வீரவசனங்களும்

உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சுக்களும்

மட்டும் எமக்கு நிரந்தரவிடிவைத்தரப்போவதில்

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் அண்ணா முதல் நெடுக்காலபோவான் அண்ணா வரை நாம் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். வீரவசனங்களும்

உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சுக்களும்

மட்டும் எமக்கு நிரந்தரவிடிவைத்தரப்போவதில்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்புடன் யார் வேணுமெண்றாலும் இணையலாம், கூட்டமைப்பில் இருந்து யார் வேணுமெண்றாலும் விலகிச்செல்லலாம், கூட்டமைப்பு மட்டுமே தமிழரின் நலன் கருதி இயங்கும் ஒரு கட்சி, மற்றவை எல்லாம் நக்கி பிழைக்கும் நாய்கள், கடைசிவரைக்கும் போராளிகளுடனும் , மக்களுடனும் கூட இருந்தவர்கள் கூட்டமைப்பு மட்டுமே, இவர்களே யுத்ததை நிறுத்தும் படி குரல் கொடுத்தவர்கள் வேறு எந்த ஒட்டுக்குழுக்களாவது தமிழரை கொல்லாதே என்று குரல் கொடுத்தார்களா? புலிகள் எமக்காக காட்டி சென்ற ஒரே ஒரு நம்பிக்கை கூட்டமைப்பு மட்டுமே, இங்கே ஆயுதம் இல்லை ஜனநாயக முறையில் இறுதிவரை போராடி பார்க்க, அவர்களே தமிழ்ர்களின் நம்பிக்கை, அவர்களுக்கு மட்டுமே மக்கள் வாக்களிப்பர் தேர்தல் நேர்மைமாக நடந்தால், நேர்மையாக நடக்காவிட்டால் 8 வாக்குகள் மட்டுமே பெற்று ஒட்டுகுழுக்கள் சிங்களத்துடன் சேர்ந்து மக்கள் ரத்தக் குடிப்பர்..

தயவு செய்து யாரை தமிழர் ஆதரிக்க முடியும் எனும் தர்க்கத்தை கிழப்பி விடாதீர்கள்.... டக்கிளசோ , சித்தார்த்தனோ தமிழருக்கு உதவி செய்ய முன்வந்தால் தடுப்பதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது... அவர்கள் தொடர்ந்தும் தமிழர்களுக்கு கெடுதல் செய்யாது இருப்பதுக்காகவாவது நாங்கள் அடக்கி வாசிக்க தான் வேண்டும்...

எல்லாத்தையும் காலம் தான் தீர்மானிக்கும்... இவ்வளவு ஏன்..? எங்களை பற்றிய செய்திகளை வெளியிடாமல் புறக்கணித்த சண் ரீவியை யும் , அதன் தயாரிப்புக்களையும் புறக்கணிக்க யாழுக்கை வேண்டிய பலர் டக்கிளஸ் தேவானந்தாவை இப்போ ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்கள்...

மாற்றம்கள் நிகழும் என்பதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு இல்லையா...??

செ. பத்மநாதன் அண்ணா பல தமிழ் அமைப்புக்களை உள்வாங்கி ஒரு இணைந்த தலைமையை உருவாக்கும் வேலைகளில் இறங்கி இருப்பதாகவும் அது பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்.... ஆகவே அதுவரை பொறுத்து இருங்கள்...

Edited by தயா

இவர்கள் இங்கு பாதிக்கப்பட்ட உறவுகளைக்காப்பாற்ற டக்கிளசின் உதவியை நாடதான் விரும்புகிறார்களே தவிர தலைமைதாங்கல்ல.

மற்ற 20 பேரும்; கூறுவது போல் நான் இவரின் உதவியை வேண்டாமென்று கூறினால் நீங்கள் யாராவது எனகு;கு உதவுவீர்களா??

திரும்பத்திரும்ப புலம்பெயர்ந்த நாங்கள் எப்படி டக்ளசோடோ அல்லது சங்கரியோடோ அல்லது எந்தப்பேயோடோ இணைவதைப்பற்றியே பேசுகிறீர்கள். தாயக மக்கள் யாரோடு இணைவதென்பதை தீர்மானிக்க ரகுநாதனால் முடியாது.

எனக்கு டக்ளசைப்பிடிக்காது. ஆனால் தாயக மக்கள் அவரைத் தெரிவு செய்தால் - அதில் என் விருப்பத்தை திணிக்கமுடியாது. தமது தெரிவுக்கேற்ப- தமது தேவைகளுக்கு ஏற்ப அதை அவர்கள் செய்வதை கவலையுடன் - இப்படியான ஒரு நிலை நமக்குவந்ததே என்ற பெரும்சோகத்துடன் பார்த்துநிற்கத்தான் முடியும்.

கலைஞன் - டக்ளசோடு இணையலாம் என்று நேரடியாகச் சொல்லுகிற மனநிலை இன்னும் எனக்கும் வரவில்லை. ஆனால்... அந்த அரசியல் செல்வாக்குச் செலுத்தப்போகிற - அந்த அரசியலை நேரடியாக எதிர்கொள்ளப்போகிற மக்களிடமே சகலதையும்தீர்மானிக்கிற உரிமை உண்டு. தாயக மக்கள் தன்மானம் இனமானம் இல்லாத நாய்க்கூட்டங்கள் என நீங்கள் சொல்லப்போகிற எதிர்காலம்தான் எஞ்சி நிற்கிறது.

சரியாகச் சொன்னீர்கள், கேட்டீர்கள்! மேலும் தாயகத்தில் உள்ள மக்களின் அவலங்களை போக்க / குறைக்க டக்லசின் உதவியை தற்காலிகமாகவேனும் பெறலாம் என்று கூறுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாரை தமிழர் ஆதரிக்க முடியும் எனும் தர்க்கத்தை கிழப்பி விடாதீர்கள்.... டக்கிளசோ , சித்தார்த்தனோ தமிழருக்கு உதவி செய்ய முன்வந்தால் தடுப்பதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது... அவர்கள் தொடர்ந்தும் தமிழர்களுக்கு கெடுதல் செய்யாது இருப்பதுக்காகவாவது நாங்கள் அடக்கி வாசிக்க தான் வேண்டும்...

எல்லாத்தையும் காலம் தான் தீர்மானிக்கும்... இவ்வளவு ஏன்..? எங்களை பற்றிய செய்திகளை வெளியிடாமல் புறக்கணித்த சண் ரீவியை யும் , அதன் தயாரிப்புக்களையும் புறக்கணிக்க யாழுக்கை வேண்டிய பலர் டக்கிளஸ் தேவானந்தாவை இப்போ ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்கள்...

மாற்றம்கள் நிகழும் என்பதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு இல்லையா...??

செ. பத்மநாதன் அண்ணா பல தமிழ் அமைப்புக்களை உள்வாங்கி ஒரு இணைந்த தலைமையை உருவாக்கும் வேலைகளில் இறங்கி இருப்பதாகவும் அது பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்.... ஆகவே அதுவரை பொறுத்து இருங்கள்...

தயா நம்பிக்கை வைப்பது தவறல்ல. ஆனால் நேற்றுவரை மக்களைக் கொல்லவும் காட்டிக் கொடுக்கவும் செயற்பட்டவன் இன்று மக்களை காக்க உதவுவான் என்று நீங்கள் நம்பச் சொல்வதுதான்.. ஏற்க முடியாதது.

நம்புவதற்கு ஒரு பலமான அடிப்படை அவசியம். இங்கு அது எதுவுமற்ற நிலையில்.. இவங்களை எல்லாம் நம்பச் சொல்கிறீர்கள். கொத்துக்கொத்தாக எம்முறவுகள் வீழ்ந்த போது அவசரகாலச் சட்டத்துக்கு வாக்களித்து வயிறு வளர்த்தவர்கள்.. உதவி செய்யும் மீட்பர்களாவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நிச்சயம் எல்லா மக்களும் அதை நம்பத் தயார் இல்லை. இன்னொரு ஏமாற்றம் எமக்கு அவசியமில்லை..! இதை விட இன்னும் பலமான வழிமுறைகள் இருக்கின்றன..! அதைச் செய்யலாமே.

புகலிடத்தில் ஓய்ந்து போயுள்ள போராட்டங்களை மக்கள் நலனை முன்னுறுத்தி முன்னெடுக்கலாமே. ஏன் செய்கிறார்கள் இல்லை. டக்கிளசும் சித்தார்த்தனும் சங்கரியும் கருணாவும் காப்பாற்றுவார்கள் என்றா. அப்படி என்றால்.. அவர்கள் காப்பாற்றட்டும். ஆனால் மீண்டும் எம்மை நோக்கி வராதீர்கள்.. இப்படி போராடுகள் அப்படிப் போராடுங்கள் என்று சொல்லிக் கொண்டு..! :icon_idea:

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ காலம் எங்களை பின்னோக்கி தள்ளி இருக்கிறது... 1983- 1989 காலப்பகுதியில் இருந்தது போண்ற ஒரு நிலைதான் இப்போது இருப்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்...

பல குழுக்களாக பிரிந்து கிடந்து அதிலேயே ஊறிப்போய் கிடந்த நிலைதான் இப்போது... அப்படி ஒரு நிலயை தொடரவிடுவதால் பாதிப்பு நிச்சயமாக தாயகத்தில் இருக்கும் மக்களுக்குதான்... அப்படி ஒரு குழம்பின குட்டையில் மீன் பிடிக்க பலர் முயல்வார்கள் என்பதை நீங்கள் அறியாததும் அல்ல...

பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை... ஆனாலும் ஒரு விடயதை இப்போ வெளிப்படையாகவே சொல்ல விரும்புகிறேன்... தமிழ் தேசிய கூட்டமைப்பில் இண்று பாராளுமண்ற உறுப்பினர்களாக இருக்கும் பலர் இந்திய இராணுவ காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் தமிழ் மக்களுக்கு பல இன்னல்களை முன் நிண்று நடத்தியவர்கள்... அவர்கள் எல்லாம் தமிழ் தேசியம் உள்வாங்கிய பின்னர் நாங்கள் அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாதில்லையா...????

1989 இல் இருந்த நிலை இன்றில்லை. 1989 இல் இன்றைய ஒட்டுக்குழுக்கள் இந்திய ஆதரவில் முழுமையாக இயங்கின. இன்று அவை சிறீலங்கா சிங்களப் பேரனவாத அரசின் சக்திகளாக இயங்குகின்றன. 1989 இல் இந்தியப் படைகளை நம்பி இயங்கியவர்களை அது கைவிட்ட நிலையில் அவர்கள் தமிழ் தேசியத்தின் மீது காட்டிய அக்கறையின் பெயரில் தேசிய தலைவரால் உள்வாங்கப்பட்டனர். தமிழ் தேசியம் தான் அவர்களை மன்னித்து உள்வாங்கியது.

டக்கிளசும்.. சித்தார்த்தனும்.. சங்கரியும்.. கருணாவும் தமது கட்சிகளை கலைத்துவிட்டு தமிழ் தேசியத்தினை முன்னுறுத்தி கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற முன்வருவார்கள் என்றால் தேசிய தலைவர் இருந்தால் கூட இதனை வரவேற்பார். நாங்களும் தயக்கமின்றி அவர்களுக்கு ஆதரவு வழங்கலாம்.

ஆனால்... இன்றைய இந்த நிலையில் கூட சிங்கள அரசோடு சேர்ந்தியங்கி மக்களை காட்டிக் கொடுத்துக் கொன்று துன்புறுத்திக் கொண்டிருக்கும் இவர்களை நீங்கள் நம்பச் சொல்வதுதான் எனக்குப் புரியவில்லை..! எந்த அடிப்படையில் இவர்களை மக்கள் நம்ப எதிர்பார்க்கிறீர்கள் என்பதும் புரியவில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.