Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா? - விகடன்

Featured Replies

தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது.

prabhakaran.jpg

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக் கிறது.

பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.

""இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப்போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.

உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல் லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக் கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடு வோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.

ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் ஆஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.

ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.

சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட் டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.

தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.

புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த ஆஸ்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடா விலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை ருத்திர குமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாஜி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.

இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.

அடேயப்பா இவங்களுக்கு புலிகளுடன் இப்பவும் நல்ல தொடர்பு இருக்குது போல

நாங்கள் ,மறந்தாலும் தமிழ்நாட்டு ஊடகங்கள் எங்களை விடாது போல கிடக்குது.

  • தொடங்கியவர்

தமிழக ஊடகங்களுக்கு பிரபாகரன் செய்திதானே சோறு போடுது :(

போதுமடா சாமி இனியாவது உங்கள் புலனாய்வு அறிக்கைகளை நிறுத்துங்கள்.

பிராபாகரன் தொடர்பான சர்ச்கைகள் இத்துடன் முற்றுப்பெறட்டும். தன்னால் மறுபடியும் ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என அவர் நினைத்திருந்தால் அவர் நிச்சயம் தப்பி இருப்பார். இனி அப்படி ஒரு போராட்டத்தை நடத்த முடியாது என அவரது தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தால் அவர் மக்களோடு மக்களாக போராளிகளோடு போராளியாக இருந்து வீரமரணத்தை அடைந்திருப்பார். ஏனெனில் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. ஆனால் அவர் மிகவும் நேர்மையானவர். சிறிதும் சுயநலம் இல்லாதவர், தான் கொண்ட கொள்கைக்கு கடைசி வரை உண்மையாய் இருப்பவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதை 100 வீதம் எப்படி சொல்ல முடியாதோ அப்படித்தான் அவர் இறந்ததையும் 100 வீதம் சொல்ல முடியாது. ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். மக்களை எந்த அறிக்கைகளும் குழப்பக்கூடாது. அவர் இறந்தார் என்ற நம்பிக்கையை விட அவர் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் அதிகமாக இருக்கிறது.

இப்படியே இருக்கட்டுமே. அதில் என்ன தவறு?!

நாம செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கிறது இல்லையா? மக்கள் ரொம்ப முக்கியம். நடக்க கூடாத மாபெரும் அழிவு ஈழத்தமிழருக்கு நடந்திருக்கிறது. இனி நடக்கப் போவது நல்ல விதமா நடக்கணும். அந்த மக்கள் இனி எந்த அழிவையும் சந்திக்கக் கூடாது. அவர்கள் உடனே அவங்க இடத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு அவங்களுக்கு எல்ல அடிப்படை வசதிகளையும் செய்யப் பண்ணணும். நம் கண் முன்னே இருக்கிற தலையாய கடமை இது தான். தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இந்தக் கேவலமான இந்திய ஆட்சிக்கு உட்பட்டு எங்களால எதையுமே செய்ய முடியவில்லை. ஒரு வாய் சோற்றைக் கூட சாப்பிட முடியல. எங்களைக் காட்டிலும் வலியும் வேதனையும் உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

முதல்ல அந்த மக்களை காப்பாற்றியாகணும். நீதி விசாரணைகள் உடனே ஆரம்பிக்கணும். அப்புறம்தான் மற்றவைகள்.

தமிழ்த் தேசியத்தை மக்களின் நலன் சார்ந்து கட்டியெழுப்பணும். இந்தியத் தேசியம் போன்று போலித்தனமாக வளர்த்து எடுக்கக் கூடாது இல்லையா.

எல்லாரிடமும் தவறுகள் இருந்திருக்கின்றன அவற்றை நல்லா அறிந்து தெளிந்து இனி அது போன்ற தவறுகள் நடக்காம பார்த்துக்கணும் குறிப்பாக தமிழர்களுக்குள் இனி உள் சண்டைகள் இருக்கக் கூடாது. நாம ஒற்றுமையாக இருந்தால்தான் இனியாவது நல்லது நடக்கும்.

Edited by ஜனனி

பிராபாகரன் தொடர்பான சர்ச்கைகள் இத்துடன் முற்றுப்பெறட்டும். தன்னால் மறுபடியும் ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என அவர் நினைத்திருந்தால் அவர் நிச்சயம் தப்பி இருப்பார். இனி அப்படி ஒரு போராட்டத்தை நடத்த முடியாது என அவரது தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தால் அவர் மக்களோடு மக்களாக போராளிகளோடு போராளியாக இருந்து வீரமரணத்தை அடைந்திருப்பார். ஏனெனில் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. ஆனால் அவர் மிகவும் நேர்மையானவர். சிறிதும் சுயநலம் இல்லாதவர், தான் கொண்ட கொள்கைக்கு கடைசி வரை உண்மையாய் இருப்பவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதை 100 வீதம் எப்படி சொல்ல முடியாதோ அப்படித்தான் அவர் இறந்ததையும் 100 வீதம் சொல்ல முடியாது. ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். மக்களை எந்த அறிக்கைகளும் குழப்பக்கூடாது. அவர் இறந்தார் என்ற நம்பிக்கையை விட அவர் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் அதிகமாக இருக்கிறது.

இப்படியே இருக்கட்டுமே. அதில் என்ன தவறு?!

நாம செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கிறது இல்லையா? மக்கள் ரொம்ப முக்கியம். நடக்க கூடாத மாபெரும் அழிவு ஈழத்தமிழருக்கு நடந்திருக்கிறது. இனி நடக்கப் போவது நல்ல விதமா நடக்கணும். அந்த மக்கள் இனி எந்த அழிவையும் சந்திக்கக் கூடாது. அவர்கள் உடனே அவங்க இடத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு அவங்களுக்கு எல்ல அடிப்படை வசதிகளையும் செய்யப் பண்ணணும். நம் கண் முன்னே இருக்கிற தலையாய கடமை இது தான். தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இந்தக் கேவலமான இந்திய ஆட்சிக்கு உட்பட்டு எங்களால எதையுமே செய்ய முடியவில்லை. ஒரு வாய் சோற்றைக் கூட சாப்பிடக் முடியல. எங்களைக் காட்டிலும் வலியும் வேதனையும் உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

முதல்ல அந்த மக்களை காப்பாற்றியாகணும். நீதி விசாரணைகள் உடனே ஆரம்பிக்கணும். அப்புறம்தான் மற்றவைகள்.

தமிழ்த் தேசியத்தை மக்களின் நலன் சார்ந்து கட்டியெழுப்பணும். இந்தியத் தேசியம் போன்று போலித்தனமாக வளர்த்து எடுக்கக் கூடாது இல்லையா.

எல்லாரிடமும் தவறுகள் இருந்திருக்கின்றன அவற்றை நல்லா அறிந்து தெளிந்து இனி அது போன்ற தவறுகள் நடக்காம பார்த்துக்கணும் குறிப்பாக தமிழர்களுக்குள் இனி உள் சண்டைகள் இருக்கக் கூடாது. நாம ஒற்றுமையாக இருந்தால்தான் இனியாவது நல்லது நடக்கும்.

சரியாகச் சொன்னீர்கள் ஜனனி; இப்போது தேவையானது எதுவோ அதைச் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் எல்லோருமே வாழ்வார்கள் பின்னர் இறப்பார்கள். நம் தேசியத்தலைவரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் இறந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம் இல்லையென்றால் என்றோ ஒருநாள் இறப்பார் என்பதையும் தெரிந்து கொள்வோம். தமிழ் மக்களின் நன்மைக்காக ஒரு மாபெரும் பணியை முன்னிறுத்தியே தேசியத் தலைவர் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். ஈழமக்களாகிய நாம் எமது தலைவன் முன்னெடுத்த பணியைத்தான் முதன்மைப்படுத்த வேண்டுமே தவிர அதை விட்டுச்சென்ற எந்த தனிமனிதனையுமல்ல. தடங்கிய எமது கடமைகள் கண்டறியப்பட்டு விவேகமாக செயற்பாடுகள் சீரமைக்கப்பட்டு அதை மக்கள் அனைவரும் தொடர்வதை விடுத்து தலைவன் எங்கேயென்று கேட்டு விம்மியழுவதை எமது தேசியத் தலைவரே விரும்பியிருக்க மாட்டார். சரி விடுங்கள் நம் தேசியத் தலைவரைப்பற்றிய முரணான செய்திகளைக் கேட்டு வருத்தப்படுகிறோம் ஆனால் அவர் வளர்த்த தலைவர்கள் பொட்டண்ணாவும் சூசையும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்றெண்ணி மகிழ்வோம். தலைவன் வீரகாவியமானான் என்று முற்று முழுதாக நம்புவோர் சுடரேற்றுங்கள் அவனுக்கு அஞ்சலி செய்யுங்கள். இல்லை அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று நம்பினால் அவன் மீண்டு வரும் நாளுக்காக காத்திருங்கள். இந்த இரண்டில் எதுவாகினும் எமது பணி தொடரப்படவேண்டும். எனக்கு ஒரு சந்தேகம்: மாண்டவருக்கு அஞ்சலி செய்யாமல் விடுவது அல்லது உயிருடன் இருப்பவருக்கு அஞ்சலி செய்வது இந்த இரண்டில் எதை நாம் செய்யக்கூடாது?

ஈழப் போராட்டமே பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் தொடங்கப்பட்டது. விடுதலை சம்பந்தமாக கோட்பாட்டில போராளிக் குழுக்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் தெளிவில்லாம இருந்தது.

லண்டனில் இருக்கும் தோழி ஒருத்தி கூறினார், அதாவது விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஒரு சிலர் அவர்கள் தனி நாட்டிற்காகத்தான் போராடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அதாவது புலிகளின் கனவு என்ன அவர்களின் கொள்கைகள் என்ன என்று தெரியாமலே அவர்களை ஆதரிக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் நடக்கும் கூட்டங்களில் வரலாற்றை புரிய வைத்து தமிழீழத்தின் நியாயங்களை தெளிவாக்குவதற்குப் பதிலா தலைமைத் துதியும் வெற்றுக் கோஷங்களே தூவப்பட்டன.

இப்பக் கூட பாருங்க அங்கு பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி நியாயம் சுமுகமான வாழ்வு போன்றவற்றிற்கு பாடுபடாமல், நாடு கடந்த தமிழீழம், தடையை நீக்குதல் போன்றதுகளைப் பத்திப் பேசிறாங்க. இது மக்கள் போராட்டம் இல்லியா ? தமிழீழம் தேவைதான் அதை விட அங்கு பாதிக்கப் படும் மக்கள் முக்கியமில்லையா?

எந்தத் தேசியத்தைக் காட்டிலும் மக்கள் முக்கியம்.

இப்படி எழுதிறதால என்னைத் தப்பா நினைக்காதீங்க. வெறுப்புடன் விமர்சிக்கிறதுக்கும் அக்கறையுடன் விமர்சிக்கிறதுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்க. எனது கருத்தில முரண்பாடு இருந்தால் சுட்டிக் காட்டுங்க.

Edited by ஜனனி

  • கருத்துக்கள உறவுகள்

எந்தத் தேசியத்தைக் காட்டிலும் மக்கள் முக்கியம்.

ஜனனி.. மக்கள் முக்கியமா தேசியம் முக்கியமா என்ற கேள்வியில் அர்த்தமில்லை. மனிதன் முக்கியமா அல்லது அவன் சுவாசிக்கும் காற்று முக்கியமா என்று கேட்பதைப் போன்றது அது. மனிதனின் இருப்புக்கு காற்று எவ்வளவு முக்கியமோ அதுபோன்றதே ஒரு மக்கள் குழுமத்தின் இருப்புக்கு தேசியத்தின் அவசியமும்.

தேசியத்துக்காக மக்களையும் மக்களுக்காக தேசியத்தையும் கைவிடுதல் என்பது மக்களின் அழிவிலேயே சென்று முடியும். சிங்களவன் தமிழ்தேசியத்தை நிராகரிக்கும் காரணமும் தமிழினத்தின் அழிவு இன்றில்லாவிடினும் என்றாவது ஒரு நாள் அழிந்து தீவு முழுமையும் சிங்களமயப்படல் வேண்டும் என்பதே.

ஜனனி.. மக்கள் முக்கியமா தேசியம் முக்கியமா என்ற கேள்வியில் அர்த்தமில்லை. மனிதன் முக்கியமா அல்லது அவன் சுவாசிக்கும் காற்று முக்கியமா என்று கேட்பதைப் போன்றது அது. மனிதனின் இருப்புக்கு காற்று எவ்வளவு முக்கியமோ அதுபோன்றதே ஒரு மக்கள் குழுமத்தின் இருப்புக்கு தேசியத்தின் அவசியமும்.

தேசியத்துக்காக மக்களையும் மக்களுக்காக தேசியத்தையும் கைவிடுதல் என்பது மக்களின் அழிவிலேயே சென்று முடியும். சிங்களவன் தமிழ்தேசியத்தை நிராகரிக்கும் காரணமும் தமிழினத்தின் அழிவு இன்றில்லாவிடினும் என்றாவது ஒரு நாள் அழிந்து தீவு முழுமையும் சிங்களமயப்படல் வேண்டும் என்பதே.

டங்குவார்!

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் தேசியம் என்பது மக்களின் நலம் சார்ந்து வெளிப்படணும். இந்தியத் தேசியம் போல அருவருப்பாக அசிங்கமாக அது மாறக்கூடாது. நேற்று வரை இந்தியாவை என் தாய் நாடு என்று சொல்லி வந்தேன். இப்போ இந்தியாவ நினைச்சாலே எனக்கு குமட்டக்கிட்டு வருது. இந்தியப் பிசாசுக்கு மக்களின் நலம் முக்கியமல்ல லுசுத்தனமாக வல்லரசு கனவு காணுகிறது. இது வல்லரசு ஆகி எந்த ஏழை மக்களுக்கு சோறு போடப் போகிறது? அப்படிப் பட்ட வல்லரசு நமக்கு இன்னாத்துக்கு அவசியம்.

தமிழீழம் அப்படி அல்ல. அது ஒடுக்கப் பட்ட மக்களின் விடிவுக்காகத் தொடங்கிய தியாக வேள்வி. தமிழ்த் தேசியம் முழுக்க முழுக்க நியாயமானது. ஆனால் தமிழ் மக்களின் நலன்களை அது புறக்கணித்து ஒரு வரட்டுத் தேசியமாக மாறக் கூடாது. அந்த அடிப்படையில்தான் மக்கள் முக்கியம் என்று சொன்னேன்.

Edited by ஜனனி

ஊகத்தின் அடிப்படையில் நாம் எவ்வளவோ கூறலாம். அவ்வாறான அறிக்கைகள் தான் இவை என தற்போது வைத்துக்கொள்வோம். இந்த ஊடகங்கள் எமது போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தன. அவர்களால் எமது தலைவரின் இழப்பை நம்பமுடியாமல் உள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதனால் எம்மில் பலர் ஒருவேளை இப்படிஇருக்குமோ..ஒருவேளை அப்படி இருக்குமோ என்று ஊகிப்பதைப் போல இதுவும் ஒரு ஊகமாக இருக்கின்றது என்பது தெளிவாகின்றது. ஆகவே ஊடகங்கள் தங்களது அதிரடி ஊகங்களை பரபரப்பாக தொடர்ந்து வெளியிடுவார்கள். எதுவும் உறுதிப்படுத்தாத கட்டுரைகள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

ஊடகங்களே உங்களிடம் என்னுடை ஒரு சில கேள்விகள்,

தலைவர் இறக்கவில்லை என்றால் சிங்கள அரசால் வெளியிட்ட தலைவரின் உடல் என்பது யாருடையது?

1. தலைவரைப்போல இருப்பவரது என்றால் ஏன் ஒரு மனித உயிரை, அதுவும் இறுதி யுத்தத்தில் அன்று அநியாயமாக கொள்ளவேண்டும். அதுவும் அவர் இலங்கையில் வன்னியில் தான் அதுவும் தமிழனாக பிறந்து வளர்ந்து இறுதியுத்தம் வரை வன்னியிலே வாழ்ந்தாரா? அவரிற்கு சகல அங்கங்களும் (மீசை, உதடு, மூக்கு, காது, கைவிரல்கள், நிறம், உடல் உயரம், பருமன்....) ஒரேமாதிர் அமையுமா?

2. சரி அது கணணியில் கிறாபிக்கினால் ஊருவாக்கப்பட்டது எனின் எனக்கும் கிறாபிக் நன்றாக தெரியும் என்ற வகையில் நானும் பலமுயற்சிகளின் பின்னர் எனக்கு அது தலைவருதுரது உடல் அல்ல என்று கூறமுடியாமல் உள்ளது. வீடியோ மற்றும் போட்டோக்களில் காணப்படுவது இரண்டும் எனது அறிவிற்கு எட்டியவகையில் நியமானதாகவே காணப்படுகின்றது.(ஆனால் அதையும் தாண்டி மிக மிக உலக வல்லுனர்களினால் செய்யப் பட்டிருந்தாலொளிய அதனை நான் கிறாபிக் எனக் கூறமுடியாமல் உள்ளது. (அப்படி எனின் நி;சயமாக அவர்கள் நோபல் பரிசிற்கு உரியவார்கள்). - ஆனால் படங்களில் காட்டப்படுவது ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு மாதிரி (கண்மூடிய நிலை, கண் திறந்து நிலை, மரணித்தவரின் உடலில் எந்த ஒரு இரத்த துளியும் இல்லாமல் பளபளப்பாக காணப்படுவது இவரின் கொலையின் மர்மத்தை ஊர்யிதப்படுத்துகின்றது இருப்பது சந்தேகத்தை உருவாக்குகின்ற அதேவேளையில் அதற்கான சாத்தியமாக அவை ஒரே நாளில் எடுத்த படம் அல்ல, கொலை செய்யப்பட்ட போது அதன் பின் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை என்பதும் புலனாகின்றது.

3. அறிவழகனின் கூற்றில் எம்மால் ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதாவது இராணுவத்துடன் சண்டையில் தான் இறந்தார் என்று கூறுவது. சண்டையில் இறப்பவரது உடலில்; தலையைத் தவிர எந்தவோரு பகுதிலும் ஒரு நகக் கீறல் கூட காணமுடியவில்லை.

எனக்கு ஒரு சந்தேகம்: மாண்டவருக்கு அஞ்சலி செய்யாமல் விடுவது அல்லது உயிருடன் இருப்பவருக்கு அஞ்சலி செய்வது இந்த இரண்டில் எதை நாம் செய்யக்கூடாது?

மரணித்தவரிற்கு அஞ்சலி செலுத்தாமல் விடுவது.

இவற்றை எல்லாம் தாண்டி தலைவர் இருப்பின் சந்தோசப்படுபவர்கள் யார்தான் இருக்கமாட்டாரல். ஆனால் தலைவர் இருக்கின்றார் அவரே பார்த்துக் கொள்வார் என்றால் நாம் செய்யவேண்டியவைகளை செய்யதவறிவிடுவோம். இந்த குழப்பத்தை பயன்படுத்தி இலங்கை அரசு மிக வேகமாக முன்னேறுகிறது. உதாரணமாக புகைவண்டி பயணம், மீன்பிடி அனுமதி, ஊரடங்கு நேர தளர்வு...இன்னும் வரும், ஆகவே நாம் எமது மக்களின் ஒற்றுமை(தலைவரால் உருவானவை) சிதையமுன் எமது மக்களின் ஒரே ஒன்றுபட்ட கொள்கை உள்ள இந்த நேரத்தில் ஒன்றாக தொடர்ந்து போரிட்டு "நாடுகடந்த தமிழீழ தனியரசை அமைப்போம்". அதன் பின் நாம் அந்த தமிழீழத்தில் சென்று அங்கிருந்துகொண்டு தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதத்தை ஆரம்பிப்போம். அப்போ நானும் வாரன் பாருங்கோ, நாங்கள் எல்லாரும் புளியடிக்கு கீழ இருந்து இரவு பகலா விவாதிப்பம் தலைவர் இருக்கிறாரா இல்லையாவெண்டு.....

தலைவர் இறந்தாலும் அவரின் தமீழக் கொள்கை இன்னும் இறக்கவில்லை. ஆகவே முதலில் நாம் தமீழத்தை வென்றெடுப்Nபுhம். பின்னர் விவாதிப்போம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழமீட்பு வரலாற்றில் பிரபாகரன் வகித்த பங்கு பாரிய அளவு. அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈழமீட்புப்போராட்டம் அவர் இட்ட திருப்பு முனையில் அவரின் வழி நடத்தலைப் பின்பற்றி தொடரும். இதில் இல்லையோ இருக்கின்றாரோ என்று ஆராய்வது எதிரி தான் மற்றவர்கள் போராட்டம் தொடர ஆவன செய்வோம். தமிழரின் தாகம் சுதந்திரத்தமிழீழம். அந்த வழியில் மீணடும் யாரும் வழிநடத்திச்செல்வார்கள். தமிழர்களோ, பிரபாகரனோ தோற்கவில்லை. அநீதியான போர் எங்களுக்கு எதிராக உலகநாடுகளின் துணையுடன் நடத்தப்பட்டது என்றாலும் சரணடையாமல் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்களே.

அது தோல்வியல்ல மீணடும் வெற்றிக்கான வித்து. சிஙகளவன் தனித்துப் போரிட்டு இருந்தால் அல்லது போர் போர் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.