Jump to content

என்னவளே .....அடி என்னவளே ..............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

என்னவளே .....அடி என்னவளே ..............

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ......சற்று கண் அயரலாம் என்று படுக்கையில் சரிந்தவளுக்கு .......தொலை பேசியின் கிணு கிணுப்பு ...விழித்து எழ வைத்தது ,,,,,,சுதா ,,எடுத்து கலோ ..........என்றவள் .மறு முனையில் சற்று பழக்கமிலாத குரல் ஆனாலும் எங்கோ கேட்டது போன்று ஒரு உணர்வு ..........கலோ ..நீங்க யார் என்று தெரியவில்லையே .......பெயரை சொன்னான் . பின் நீண்ட மெளனம். அவன் .சுந்தர மூர்த்தி எனும் சுந்தர் ............சுதா என்னை மறந்து விடாயா ? .நீண்ட மெளனம் ...அவளை தாயக நினைவுக்கு இட்டு சென்றது . பாடசாலைக்காலத்தில் ....அதே கலூரியில் படித்தவன். அவள் பினால் சுற்றி திரிந்தவன் .........நீண்ட காலத்தின் பின் மனம் மாறி அவனை விரும்பியவள். இவள் பத்தாம் வகுப்பு இறுதி சோதனை செய்யும் போது அவன் பல்கலை கழகம் நுழைய இருந்தவன். ரண்டு வயது இவளை விட கூடியவன். ஒரு நாள் இவள் ... பஸ் தரிப்பில் கண்டதும ஓடி வந்து தான் நாட்டு நிலைமை காரணமாக் வெளி நாடு செல்ல இருப்பதாக ஓடி வந்து சொன்னவன் ......"..காத்திரு வருவேன் " என்றவன். கொழும்பில் நின்று இரண்டு மடல்கள் நண்பன் மூலம் கொடுத்து விடிருந்தான். பின் இரண்டு வரு டங்களாக எதுவுமே இல்லை. இவை எதுவுமே சுதாவின் பெற்றா ருக்கோ .........சுந்தரின் பெற்றா ருக்கோ தெரியாது . காலம் யாருக்காகவும் காத்திராமல் உருண்டு ஓடியது .......

...இடப்பெயர்வுகள். ...கெடுபிடிகள். குண்டு சத்தங்கள் ....என்று ஐந்து வருடங்கள். ஓடி விட்டன . எல்லோரைய்ம போலவே சுதாவும் இடம் பெயர்ந்து வவனியாவந்து பின் கொழும்பில் உள்ள ஒரு மாமா வீட்டுக்கு வந்து சிலகாலம் தங்கி இருந்தார்கள். பின் சுதாவின் பெரிய மாமாவின் உதவியுடன் ஒரு வீடின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து கொண்டார்கள். ஒரே ஒரு பிள்ளையான சுதாவை ஒரு நல்லவன் கையில் பிடித்து கொடுக்கவேண்டும் என்று பெற்றவர்கள். பேசிக்கொண்டனர். சுதாவின் தந்தையும் ஊரில் செய்த தரகு வேலை இல்லாததால் புடவை கடை ஒன்றில் சிறு பணியை தேடிக்கொண்டார். அவர்கள் வாழ்வு அமைதியாகவே போனது .....சுந்தரின் எது வித தொடர்பும் இல்லாததால் சுதாவும் எதுவும் பெற்றவருக்கு சொல்லவில்லை. காலம் தான் யாருக்கும் காத்தி ருப்பதி ல்லையே . சுதாவுக்கு திருமணம் முற்றாகி ...வெளிநாடு மாப்பிள்ளை க்கு மனைவியானாள். ஆறு மாதமாக் வதிவிட விசாவுக்காக காத்திருந்தவள் , மூன்று மாதமுன்பு தான் கனடாவந்து சேர்ந்தாள். தன கதையை சொல்லி முடித்தவள் . மறு முனையில் ...சுந்தரின் கதையை கேடும் அழுதே விடாள். சுந்தர் கொழும்பில் இருந்து வெளிக்கிட்டு ..மலாசியா வந்ததும் ...ரண்டு முறை திருப்பி அனுப பட்டதும் , பின் மூன்றாம் முறையில் அமெரிக்க வந்து .....கடந்த மூன்று வருடமாக் கனடாவில் இருப்பதாய் அறிந்து கொண்டாள். இவளை பற்றி விசாரித்த போதுஇவள் வவனியாவில் இருப்பதாக் தான் கேள்வி பட்ட்தாக் சொனார்கள். விதியே நம்மை சேர்த்து வைக்கவில்லை. என் மன ஆதங்கம் தீர தான் உன்னை தேடி உன் தொடர்பு கொண்டேன் . திருமண விடயமும் கேள்வி படேன் . நீ எனக்கு இல்லய் என்றதும் எவ்வளவு கவலை படேன். நம்ம விதி அவ்வளவு தான் சந்தோஷமாக் இரு . நான் உன்னை தொடர்பு கொண்டத்தை கணவனுக்கு சொல்லாதே வீண் சந்தேகங்களும் பிரச்சினைகளும் வரும் . என் சுதா சந்தோசமாக் இருக்கிறாள் என்ற மன அமைதியில் வாழ்ந்து விடுவேன். எப்போதாவது என்னை கண்டால் .... பழைய மாணவன் என்று அறிமுகப்படுத்தி ஒரு வார்த்தை கதைத்து விடு . எனக்கு மேலும் யுனி வரை படிக்கவில்லை என்ற கவலை தான் . நாடுக்கு வந்த காசுபிரசினை தீர்க்க வேலை செய்யவெளிக்கிட்டு ...கடன் கட்டியது தான் மிச்சம் . ஒரு காலத்தில் என் பிள்ளையும் உன் பெண்ணும் கல்லூரியில் படித்தால் ....சேர்த்து வைப்போம். இனி மேல் உன்னுடன் தொடர்பு கொள்ள மாடேன். சந்தோசமாயிரு . எந்த விதத்திலும் உன்னை தொல்லை படுத்த மாடேன் இது தான் முதலும் கடைசியுமான அழைப்பு . என்னை நம்பு சுதா .

சுதா கண்ணீருடன் கட்டிலில் விழுந்தாள் .சுந்தர் இங்கு இருக்கிறான் என்று தெரிந்தால் நான் கலியாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாடேன். எந்த நம்பிக்கையை வைத்து நான் காத்திருபது ...புயல் வீசியது போல இருந்த உரையாடல் . எழுந்து சென்று குளித்து விட்டு , தன் ஆங்கில வகுப்புக்கு போக ஆயத்தமாகி பஸ் தரிப்பில் நின்றாள் . நிறை வேறாத ஆயிரம் ஆயிரம் காதலில் அவளது காதலும் சேர்ந்து கொண்டது .

Posted

அக்கா கதை படிக்க நல்லாய் இருக்குது............

என்ன அக்கா உங்கட கதை போல கிடக்குது..............

சரி சரி மனசை தேற்றி கிடைத்த வாழ்வை சந்தோசமாய்

வாழுங்கள்!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சத்தியமாய் என் கதை இல்லை . நாங்க எல்லாம் போராடி (காதலுக்காக ) வென்ற ஆட்கள்.

நட்புக்களுக்குள் உறவுகளுக்குள் நடந்த கதை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலா அக்கா ரொம்ப அழவைத்து விட்டீர்கள்.உங்களின் சிறுகதை மிகவும் நன்றாக இருக்கிறது.

யாயினி.

Posted

வணக்கம் நிலாமதி அக்கா

சொல்ல முடியாத பலரின் உணர்வுகளை படம் பிடித்து காட்டிய

உங்கள் கதை அழகு .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நிலாமதி டிச்சர் அக்கா..

கதை சூப்பர்..

வாழ்த்துக்கள் அக்கா...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.