Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவாகரத்து கோரி 89 வயது முதியவர் வழக்கு

Featured Replies

விவாகரத்து கோரி 89 வயது முதியவர் வழக்கு

சென்னை வில்லிவாக்கத்தில் 89 வயதான முதியவர் வசித்து வருகிறார். இதே வீட்டில் 80 வயதான அவருடைய மனைவி வசித்து வருகிறார். 89 வயதான முதியவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

"எனக்கும் எனது மனைவிக்கும் 1949 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 60 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் பிறந்தன. மகன்கள் தொடங்கிய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இப்போது எனது மகன்களோடு சேர்ந்து கொண்டு எனது மனைவி என்னை துன்புறுத்துகிறாள். மேலும் என்னை ஒதுக்கி வைத்து விட்டார். ஆகவே எனது மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு சென்னை 2 வது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17 ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

[நக்கீரன்]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

பொண்ணுங்க நம்பி கழுத்தறுப்பாங்கள்.

ஒண்ணுதான் புரியல. மனைவியை புரிந்து கொள்ள இத்தனை வருசங்கள் ஆகியிருக்கிறதே

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்து கோரி 89 வயது முதியவர் வழக்கு

சென்னை வில்லிவாக்கத்தில் 89 வயதான முதியவர் வசித்து வருகிறார். இதே வீட்டில் 80 வயதான அவருடைய மனைவி வசித்து வருகிறார். 89 வயதான முதியவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

-----

-----

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு சென்னை 2 வது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17 ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

[நக்கீரன்]

எனக்கென்னவோ பெரிசு இரண்டாவது கலியாணத்துக்கு ஆயத்தப் படுத்துது போலை கிடக்கிது . :(

அதுசரி ...... ஆகஸ்டு 17 ம் திகதி மட்டும் பெரிசு உயிரோடை இருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கவில்லை. இந்த ஐயா மனைவியைப் பிரிய விவாகரத்துக்கு கோரி இருக்கிறார் என்று.

இளமையில் இருக்கும் போதே முதுமையை திட்டமிட வேண்டும். ஏனெனில் முதுமையில்.. தான் அன்பும்.. அரவணைப்பும்.. பாசமும்.. எதிர்பார்ப்பும் அதிகம் இருக்குமாம். அப்போதுதான் வாழ்க்கைத் துணை என்பதன் உண்மையான அர்த்தத்தை கணவனும் மனைவியும் புரிந்து கொள்வார்களாம்.

பிள்ளைகளின் பேச்சில் கணவனின் எதிர்பார்ப்புக்களை விட்டு விலகியுள்ள அந்த மனைவியை நல்வழிக்குக் கொண்டு வரவே இந்த ஐயா இந்த முயற்சியைச் செய்கிறார் என்றே எனக்குப் படுகிறது.

நீதிபதிகளும் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி.. இந்த ஐயாவின் முதுமைக்காலம்.. அமைதியும் அன்பும் பாசமும் நிறைந்ததாக இனிமையாக இருக்க வகை செய்வார்கள் என்று நம்புகின்றேன்..! :(

Edited by nedukkalapoovan

ஒண்ணுதான் புரியல. மனைவியை புரிந்து கொள்ள இத்தனை வருசங்கள் ஆகியிருக்கிறதே

ஆறு பிள்ளைகள், அறுவதுவருச தாம்பத்திய வாழ்வு. கொஞ்சம் யோசிக்கவேண்டிய கேள்வி. :D

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த மனுசனுக்கு என்ன பிரச்சனையோ :D

Edited by sagevan

56565093.jpg

""நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரத்திலும் விசித்திரமாக இருக்கிறது ’’- என்று 'சிம்சன்' கண்ணன் என்கிற பெரியவர் தாக்கல் செய்திருக்கும் வழக்கைப் பற்றி பேசுகிறார்கள் நீதித்துறையினர்.

60 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நலக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக் கிறார் 86 வயது பெரியவர் 'சிம்சன்' கண்ணன்! 6 நாட்களில் விவாகரத்து, 6 மாதங்களில் விவாகரத்து, 6 வருடங்களில் விவாகரத்து என்று கோர்ட் படியேறும் அளவுக்கு சமூகச்சூழல் மாறிவருகிறதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ... 60 வருட அன்யோன்யமான உறவினை தூக்கி எறியத் துணிந்துவிட்டாரே என்ற கவலையோடு முதியவர் ‘சிம்சன்' கண்ணனை சந்திக்க சென்றோம்.

வில்லிவாக்கத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டின் பின்புறம் ஒரு சின்ன அறையில் தனியே தங்கியிருக்கிறார் கண்ணன். கேட்கும் திறன் கொஞ் சம் குறைந்திருப்பதால் மெஷினை மாட்டிக் கொண்டு நம்முடன் பேசுகிறார். அறை சுவர்களில் முன்னாள் முதல்வர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்களுடன் 'சிம்சன்' கண்ணன் இருக்கும் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன.

''சிம்சன்ல தொழிற்சங்க தலைவராக இருந்தேன். அப்ப ஐ.என்.டி.யு.சி. சார்பா நிறைய போராட்டங்கள்ல ஈடுபட்டிருக்கேன். என்னைப் பொறுத்தவரை நியாயம்தான் பெரிசு. அதுக்கு முன்னால யாரும் பெரிசில்லைன்னு வாழ்ந்த ஆள் நான். வேலை பார்த்த இடத்தில் மட்டுமில்ல... வீட்லயும் நியாயம் எதுவோ அதுக்குதான் கட்டுப்படுவேன். என் மனசுக்கு நியாயமில்லாத விஷயம்னா புள்ளை, பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன். இப்ப என் சம்சாரம் நியாயமில்லாம நடக்கிறதால விவாகரத்து பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.'' நம்மிடம் பேசிக்கொண்டே கடையில் இருந்து வாங்கி வந்திருந்த மதிய சாப்பாட்டை முடிக்கிறார் கண்ணன்.

தண்ணீர் குடிக்க பேச்சை நிறுத்தியவரிடம்,’’ "'இந்த வயசில் ஏன் இப்படி தனியா கஷ்டப்படறீங்க? உங்க மனைவி, பிள்ளைகளுக்கும் கஷ்டம்தானே? பிரச்சனை யை பேசி முடிச்சுக்க முடியலையா?’’'' என்று நாம் கேட்க, குடித்த தண்ணீரைப் பாதியில் வைத்துவிட்டு,

''அந்த பேச்சுக்கே இடம் இல்லை. எனக்கு எவனும் புள்ளையே இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். அவளும் பைத்தியக்காரத் தனமா... புள்ளைங்க பேச்சைக் கேட்டு என்னை ஜெயிலுக்கு அனுப்பினவ. நியாயத்துக்குப் புறம்பா செயல்படற யாரோடயும் நான் உறவு கொண்டாட விரும்பலை. இந்த வீடு என் சொந்த உழைப்பில் வந்தது. அதை வச்சு நான் சாவற வரைக்கும் காலத்தை ஓட்டிடுவேன்.’' என்று ஆவேசமாக படபடத்தார்.

மகாபலிபுரத்தை சேர்ந்த கண்ணன் 1949-ல் மைலாப்பூரைச் சேர்ந்த ராஜ லட்சுமியை மணந் திருக்கிறார். இவர்களின் அன்னியோன்யமான தாம் பத்தியத்தில் 9 குழந்தை கள் பிறந்திருக்கின்றன. இதில் 6 பேர்தான் உயி ருடன் இருக்கிறார்கள். மற்ற 3 குழந்தைகளும் பிரசவத்தின் போதே மண் ணைத் தொடாமல் மர ணத்தை தழுவியிருக்கின் றன. 2 பெண்கள், 4 ஆண் கள் என 6 குழந்தைகளும் வளர்ந்து பெரியவர் களாகும் வரை கண்ணனுக்கும் அவர் மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே எந்த பிரச்சனையும் எழவில்லை. 1999-ல் கண்ணன் - ராஜலட்சுமி தம்பதிகள் தங்களின் திருமண நாள் பொன்விழாவையும் எல்லா பிள்ளைகளோடும், பேரப்பிள்ளைகளோடும் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த வருடம்தான் கண்ணனுக்கு 75 வயது நிரம்பியது என்பதால் அதையும் சேர்த்தே சந்தோஷமாக கொண்டாடியிருக்கிறது குடும்பம். அதன் பிறகுதான் பிரச்சனைகள் வரத்தொடங்கியிருக்கிறது.

"பொன்விழாவுக்கு வந்தவங்க எல்லாம் பொறாமைப்படற அளவுக்கு சந்தோஷமா இருந்த குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கியது என்னோட பசங்கதான். என் முதல் பொண்ணு ரமணி பெங்களூர்ல இருக்கிறா. இரண்டாவது பொண்ணு குணவதி சிங்கப்பூர்ல இருக்கிறா. பேருக்கு ஏத்த மாதிரி குணமுள்ள பொண்ணு. மாப்பிள்ளையும் அப்படித்தான். ஆனா பசங்க அப்படி இல்லை. அவனுங்களுக்கு வந்த பொண்டாட்டிகளும் சரியில்லை. அதிலயும் 4வது பையன் ஜெயக்குமாரும், 5வது புள்ளை லீலாகிருஷ்ணனும் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு நடக்கிறவனுங்க. லீலாகிருஷ்ணன் மாமனார், மாமியார் சொல்றதையும் கேட்டுகிட்டு ஆடுவான். இந்த வீட்டை எப்படியாவது தன் பேருக்கு மாத்திடணும்னு நிறைய பண்ணான்.

2001-ல் வடசென்னை அ.தி.மு.க. மா.செ. சேகர்பாபு மூலம் போலீசுக்கு பிரஷர் கொடுத்து என்னை ஜெயில்ல போட்டாங்க. என் மனைவி பேர்லயே கம்ப்ளைண்ட் வாங்கிட்டாங்க. அவளும் புள்ளைங்க பேச்சைக் கேட்டு புகார் கொடுத்தா. அதுக்கு பிறகு ஒரு முறையும் என்னை ஜெயில்ல போட்டாங்க. அதுல இருந்து மனசு வெறுத்துப் போச்சு. யாருக்கும் பயப்படாத தொழிற்சங்கவாதியா இருந்த வன் நான். சொசைட்டியில் எனக்குன்னு மரியாதை இருந்துச்சு. ஆதம்பாக்கம் டி.ஏ.வி. ஸ்கூல்ல டிரஸ்ட் மெம்பர் நான். அப்படிப்பட்டவனை சொத்துக்காக ஜெயில்ல போட்டு அசிங்கப்படுத்திட்டாங்க. என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு இந்த வீட்ல இருக்கிற மேல் போர்ஷன்ல அத்துமீறி ஆக்ரமிப்பு பண்ணிட்டாங்க இரண்டு பசங்களும். அம்மாக்காரியும் அவங்களோட போயிட்டா. என் மனைவி யோட சேர்த்து வைங்கன்னு கோர்ட்ல கேஸ் போட்டேன். சேர்ந்து வாழ விருப்ப மில்லைன்னு சொல்லிட்டா என் சம்சாரம். அதுக்கு பிறகுதான் முறைப்படி பிரிஞ்சுடுவோம்னு டைவர்ஸ் கேட்டிருக்கேன். இந்த வீட்லயிருந்து அவங்களை வெளியேற்றணும்னு தனியா ஒரு கேசும் போட்டிருக்கேன். ரவுடிங்களை வச்சு என்னை அடிக்க வர்ற புள்ளைங்களோட எப்படி ஒத்து போக முடியும்? தப்பு பண்ணா புள்ளை, பொண்டாட்டின்னு பார்க்க முடியாது. சாவறவரைக்கும் இப்ப டித்தான்இருப்பேன்'' என்று காரம் குறையாமலேயே பேசினார் 'சிம்சன்' கண்ணன்.

""பெரிய மனுஷரா இருக்கிற நீங்க, மனைவியோட மனம் விட்டுப் பேசி பிரச்சனையை சரிபண்ண முடியாதா?'' என்று விடாமல் சமாதானத்துக்கு முயற்சித் தோம். இப்பவும் சொல்றேங்க... என் மனைவி நல்லவதான். 50 வருஷம் எங்களுக் குள்ள ஒரு பிரச்சனையும் வந்தது இல்லை. காலையில 6 மணிக்கு வெளியே கிளம்பறேன்னா... ஐந்தரை மணிக்கெல்லாம் சாப்பாடு ரெடி பண்ணிடுவா. எந்த விஷயத்திலும் எதிர்த்து பேசினது இல்ல. அவ மட்டும் இல்லை. பசங்களும் அப்படித்தான் இருந்தாங்க. என் பேச்சுக்கு எதிர்ப் பேச்சே இருந்தது இல்லை. இப்பதான் இப்படி ஆகிட்டாங்க. வயசாயிடுச்சுன்னு நினைக்கிறானுங்க.

நானும் என் மனைவியை நல்லாத்தான் வச்சிருந்தேன். திருப்பதி கோயிலுக்கு போகணும்னா கார் வச்சுத் தான் கூப்பிட்டு போவேன். பசங்க பேச்சை கேக்காமல் தனியா யோசிச்சு பார்த்தால் ...நான் எப்படி வச்சிருந்தேன்னு அவ மன சாட்சிக்கு புரியும். அவ திருந்தி வந்தால் இப்பவும் நான் சேர்ந்து வாழ தயாரா இருக்கேன். ஆனா வரமாட்டா. இந்த சொத்தை யாருக்கோ கொடுத்திடுவேன்னு என் வயசைப்பத்தி கூட யோசிக் காம சில விஷயங்களை பேசறாங்க. நான் எந்த பொம்பளைக்கும் சொத்தை கொடுத்திட மாட் டேன். என் காலத்துக்கு பிறகு பேரப்பசங்களுக்கு போற மாதிரி எழுதப்போறேன்.

நல்ல வேளையா என்னோட நேர்மையான வாழ்க்கை யால உடம்புக்கு ஒரு பிரச்ச னையும் இல்லாமல் இருக்கேன். ஆனால் சொத்துக்காக இந்த பசங்க என்னை எதாவது பண் ணிடுவானுங்க. சங்கத்துக்காக போராடினவன், பசங்களோட போராட மாட்டேனா?’’ விடாப்பிடியாக பேசுகிறார் 'சிம்சன்' கண்ணன்.

அதே வீட்டின் மாடி போர்ஷனில் மகன் லீலா கிருஷ்ணனோடு இருந்த ராஜ லட்சுமி பாட்டியையும் பார்த் தோம். ""75 வயசில் ஏன் இப்படி? நீங்களாவது பேசித்தீர்க்க முயற் சிக்கலாமே?'' என்று கேட்டோம். "அந்த ஆளு குணம் தெரியாம பேசறீங்க. நெறைய பட்டுட்டேன். இன்னதுன்னு இல்லை. பல பிரச்சனை. வெளியில் அந்த ஆள் பெரிய மனுஷனா இருந்திருக்கலாம். ஆனால் வீட்ல சின்ன புத்தியோடதான் இருந்தார். சொந்த புள்ளைங்க சாப்பாட் டுக்கு கஷ்டப்படறப்ப... அவங் களை வீட்டை விட்டு வெளியே விரட்டுற ஆளை எப்படி சகிச் சுக்க முடியும். என் புள்ளை என்ன சொல்றான்... உனக்கும் சேர்த்து சோறு போடறேன்னு தானே அவங்கப்பன் கிட்ட சொன்னான். அந்த ஆளு... சிங்கப்பூர்ல இருக்கிற பொண்ணு பேச்சையும் இங்க இருக்கிற இரண்டு பேரு பேச்சையும் கேட்டுகிட்டு புள்ளைங்க மேலயே அபாண்டமா கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பறார். அவனுங்க மேல கொலைப் பழி போடறார். எங்க வீட்ல எனக்கு கொடுத்த நகையை எல்லாம் அழிச்சதோட... சாலிகிராமத்தில் இருந்த ஒரு கோடி ரூபாய் சொத்தையும் அழிச்சுட்டார்'' என்றவரிடம், 50 வருஷமா நல்லாதானே இருந்தீங்க?''’’ என்று கேட்டோம்.

"அப்பவும் பிரச்சனைதான். தொழிற்சங்க தலைவர்ங்கிற பேர்ல சகவாசம் கெட்டு போயிருந்தார். துணை நடிகை ஒருத்தரை வீட்டுக்கே கூட்டிகிட்டு வந்திருக்கார். அப்பல்லாம் என் புள்ளைங்களுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். புள்ளைங்க வளர்ந்த பிறகும் மாறலைன்னா எப்படி? அப்ப அடக்கி வச்சிருந்தது எல்லாம் ஒரு நாள் வெடிச்சது. அன்னைக்குதான் அவரை விட்டு வந்துட்டேன். அந்த ஆளு திருந்த மாட்டார். இப்ப கோர்ட்டுக்கு போய் குடும்ப மானத்தையும் விக்கிறார். கோர்ட்டுக்கு போய் ஜட்ஜ்கிட்ட எல்லாத்தையும் சொல்லி நியாயம் கேட்க போறேன்'' என ராஜலட்சுமி பாட்டியும் பிடிவாதமாய் இருக்கிறார்.

75c.jpg

அருகில் இருந்த மகன் லீலா கிருஷ்ணன், “இந்த சொத்து ஒண்ணும் அவர் சம்பாதித்தது இல்லைங்க. பசங்க நாங்க சம்பாதித்து அவர் பேர்ல வாங்கினது. பெரிய அளவில் தொழில் பண்ணிகிட்டு இருந்தோம். எல்லாத் தையும் ஜிம்கானா கிளப்லயே அழிச் சார். எந்த எந்த பொம்பளைங்களுக்கோ அள்ளிக் கொடுக்கிறார். சொந்த பசங்களுக்கு தரமாட்டேங்கிறார். என் பொண்ணு ஸ்கூல் ஃபீஸ் கூட கட்ட முடியலை. நீயும் எங்க வீட்லயே இருந்து சாப்பிடுன்னு நான் சொன்னப்ப... "சாப்பாட்டில் விஷம் கலந்துருவேன்'னு சொன்னார். முதல்ல என் புள்ளைக்கு கொடுத்துட்டு அதுக்கு பிறகு சாப்பிடுன்னு கூட சொன்னேன். இதுக்கு மேல நான் எப்படிங்க இறங்கிப் போக முடியும். கிழவனுக்கே இந்த வைராக்கியம் இருக்குன்னா எங்களுக்கு இருக் காதா? கோர்ட்ல பார்த்துக்கறோம்'' - மகனும் ஈகோ குறையாமல் இருக்கிறார்.

இது எதுவுமே புரியாத அந்த வீட்டு பேத்தி அனுஷ்யா, ""ஏம்பா தாத்தா கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்ற?'' என்று கேட்கிறது.

"அப்பா சொன்னா கேட்டுக்க வேண்டியதுதானே... எதிர்த்து கேள்வி கேட்பியா?'' என்று சத்தம் போட்டதும் அடங்கிப் போகிறது அந்தக் குழந்தை. 60 வயது தாம்பத்யம் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் விட்டு வைத்திருப்பது இதைத்தானா?

- ச.கார்த்திகைச்செல்வன்

அட்டை மற்றும் படங்கள் : அசோக்

http://www.nakkheeran.in/

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரம் சிம்சனுக்கு என் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.