Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

Featured Replies

ஈழத்திலேயே உங்களுக்கு உங்கட பரம்பரைக்கு வரலாறில்லை. கனடாவில.. கனவுதான்..! <_<:D

இப்ப எங்கன்ட வரலாறுகள் எல்லாம் கணனியில் இருக்கு ,ஏன் u.s.b இருக்கு,

ஈழத்தில் வரலாறு இல்லாமல் போனதுக்கு காரணம் ஒலைச்சுவடிகளில் எழுதிவைத்தபடியால் கறையான் அறிச்சுபோட்டுது மற்ரும் சுண்ணாம்பு பாறகளிள் எழுதமுடியாத படியால் வரலாறு எனையோர் அறியமுடியாமல் போய்விட்டது :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோருமே ஒண்ட வந்த பிடாரிகள் தான் யாரும் கனேடிய தேசத்தை உரிமை கோர முடியாது ஒரு சின்ன வித்தியாசம் அவர்கள் சற்று முன்னர் வந்து விட்டனர் நாம் காலம் தாழ்ந்து வந்தோம். இதனால் வெள்ளையினத்தவர்களுக்கே கனடா உரித்தானது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரம் கனேடிய பூர்வ குடீகள் வெள்ளையினத்தவர்களால் மிதமிஞ்சிய சலுகைகள் வழங்க்பப்ட்டு அவர்கள் தங்களை பற்றி சிந்திக்காமல் வாழ வைக்கப்பட்டுள்ளனர். நாம் கனேடியர்களாக அவர்களையே கருத முடியும்! மற்றதெல்லாம் வந்தான் வரத்தான் தான்!

பறவைகள்..

நீங்கள் சொல்வது வேறு. நான் சொல்ல வந்தது வேறு.

சட்டப்படியும், கடந்தகால வரலாற்றின் அடிப்படையிலும் நீங்கள் சொல்ல வந்தது நியாயமே.. அதற்காக உங்கள் வீட்டின் அருகில், எங்கிருந்தோ வந்தவர்கள் சட்டத்தைமீறி திருட்டுத்தனமாக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆபத்துக்கு உள்ளாக்கினால் நீங்கள் கனேடிய வரலாற்றைப் பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை. திட்டித் தீர்த்துக்கொண்டுதான் இருப்பீர்கள்..! அப்படி ஒரு சில நூறு பேர் திட்ட ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அது ஒரு அந்த இனத்தவர் மேல் வெறுப்பாக மாறிவிடுகிறது. அதுவே ஊடகங்களிலும் பிரதிபலிக்கப் படுகிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களை விடுங்கள்.. நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்தவன்கூட திட்டித் தீர்ப்பான்..!

முதலில் நாம் தவறு இழைத்திருந்தோமானால் அதை ஒத்துக்கொள்வோம். அதுவே எமது சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமையும்.

பறவைகள்..

முதலில் நாம் தவறு இழைத்திருந்தோமானால் அதை ஒத்துக்கொள்வோம். அதுவே எமது சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமையும்.

அதனை நாம் ஒரு போதும் செய்ய மாட்டோம்...ஏன் எம்மில் தவறுண்டு என்பதைக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம். பறவைகள் போன்று வெறும் புனித கனவில் காலத்தை ஓட்டுவோம்.

ஒருவனை ஒரு சிலர் புரிந்து கொள்ளாவிடில் அது அந்த ஒரு சிலரின் தவறாக இருக்கலாம், ஆனால் எவருமே புரிந்து கொள்ளாவிடின் அது அவனது தவறாகத் தானிருக்கும்

உதையெல்லாம் வாசிச்சுப்போட்டு சினேகிதி இப்ப தலையைக்கொண்டுபோய் சுவரோட முட்டுறதை என்னால கற்பனை செய்து பார்க்ககூடியதாய் இருக்கிது.

என்னதான் இருந்தாலும்.. நெடுக்காலபோவானுக்கு நாங்கள் கனேடியர்கள் என்று சொன்னால் முகம் கொஞ்சம் கோணிப்போவார் எண்டுறது மட்டும் எனக்கு தெரியும். <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதையெல்லாம் வாசிச்சுப்போட்டு சினேகிதி இப்ப தலையைக்கொண்டுபோய் சுவரோட முட்டுறதை என்னால கற்பனை செய்து பார்க்ககூடியதாய் இருக்கிது.

உண்மை தான். பாவம், சினேகிதி!

சகோதரி: நீங்கள் மினக்கட்டு சில கருத்துகளை அக்கறை எடுத்து தான் முன்வைத்து இருந்தீர்கள்.

எனது அறிவில் சரியென பட்டதை சொன்னேன். கருத்துகள் ஆளுக்காள் மாறு பட்டதாய் இருக்கும். இதில் சரி பிழை என்று கருப்பு வெள்ளையாய் எதுவுமே இல்லை.

பறவைகள்:

தமிழர்கள் என்று ஒரு கூடாத குறிப்பில் எமது பெயர் வருமாயிருந்தால் அது எல்லாருக்கும் கவலையே. ஆனால் இந்த மாதிரி பாதிப்பு எமக்கு மட்டுமல்ல - எல்லா சிறு பான்மை இனத்தினருக்குமே உண்டு. அதை நினைத்து கவலை பட வேணும். ...கவலை பட்டால் தான் திரும்ப அது மாதிரி நடக்காமல் பார்க்க வேணும் என்ற அக்கறை வரும். அவங்கள் யாரோ பிழை செய்ய போய் இப்ப எங்கள் எல்லாரின் பெயரும் பழுதாய் போயிற்று என்று பார்க்காமல் - அடிப்படையில் ஏன் இந்த நிகழ்வுகள் நடக்கிறது என்பதில் மட்டும் அதிகளவு கவனத்தை செலுத்தினால் - வெறும் கவலைக்கு பதில் ஆக்கபூர்வமான தீர்வுகள் கிடைக்கும் என்பது எனது கூற்று. இது தவிர தமிழரின் பெயர் பழுதாய் போகிறது என்ற கவலை எமது இளைஞர்களின் செயற்பாடுகளை பார்க்கும் போது எனக்கும் நிறையவே வரும்..

பதினெட்டு முதல் இருபது வயது வரை உள்ள பிள்ளைகளை பெற்றோர் தமது கெட்டிதனத்தால் மட்டுமே நல்லபடி இயக்கி வைக்க முடியும். எல்லா சுதந்திரத்தையும் கொடுத்தாலும், நல்லது எது கெட்டது என்று சிறு வயது முதலே பிள்ளைக்கு விளக்கத்தாலும் அனுபவத்தாலும் கற்று கொடுத்து வளர்க்க முடியும் என்பது எனது நம்பிக்கை. எனக்கு பிள்ளை இன்னும் இல்லை, அதனால் நடைமுறையில் அது எவ்வளவு கடினம் என்பதை நான் ஜோசித்து மட்டும் தான் பார்க்க முடியும்.

சூழல் எங்களை/ எங்கள் மனநிலைகளை அதிகம் பாதிக்கும் போது, எங்களுக்கு ஏற்ற படி ஒரு சூழலை உண்டாக்குவது ஒரு வழி.

அது சாத்தியமாகத பட்சத்தில் சூழலுக்கேற்ப சில சிந்தனைகளை நாம் உள்வாங்குவது அவசியம். அது சுலபமான வேலை என்று நான் ஒரு போதும் சொல்ல போவது இல்லை. கஷ்டமாய் இருந்தாலும் சிலது அவசியமாகிறது.

மானத்தை பெரிதாய் பார்ப்பவர் - பிழை செய்தாலும், பெயரின் பொருட்டு அதை மறைக்க முயல்வர்.

தங்கள் பிழையை பெரிதாய் பார்ப்பவர் - திருத்த முயல்வர்.

என்பது எனது நம்பிக்கை. எங்கட பிழையளை திருத்த முயலுவம்... நல்ல பெயர் தானாய் வரும். அப்ப "நல்ல பிள்ளை certificate நீயா எங்களுக்கு தாறது?!" என்று உலகத்தை பார்த்து நாங்களே நினைப்பம்.

--------------------------------------------

--------------------------------------------

- பிற்குறிப்பு: கருத்துகளை பதியும் போது ஏன் எம்மில் சிலர் சுடு தண்ணி ஊத்து பட்டது போல இருக்கிறம்? கோவத்தில் எரிஞ்சு விழோனும் போல இருக்கு என்று எண்ணி எழுதினால் - அடுத்தவருக்கு எமது கருத்து புரிந்தாலும், ஏற்று கொள்ளும் மனநிலை இராது. நீங்கள் சொல்வதில் நிறைய ஆக்கபூர்வமான விடயங்கள் இருக்கு, நிதானமாய் சொல்ல பாருங்கள். அதால் பிரயோசனங்கள் பல உண்டு. இங்கு கருத்துகளை வாசிப்பவர்கள் பல்தர பட்ட கள உறவுகள் - வார்த்தைகளால் அதிகம் தாக்கி பேசினால் உங்கள் கருத்துகளை விட உங்கள் குலைப்பு தான் அவர்களை நோகடிக்கும். மென்மையான சுபாவம் உள்ள கருத்தாளர்கள் பதில் சொல்வதற்கும் தயங்குவார்கள்.

:lol:

.

- பிற்குறிப்பு: கருத்துகளை பதியும் போது ஏன் எம்மில் சிலர் சுடு தண்ணி ஊத்து பட்டது போல இருக்கிறம்? .

:lol:

இளையபிள்ளை அது வேறு ஒண்றுமில்லை...சுடுதண்ணி போல இருப்பதற்க்கு முக்கிய காரணம் கருத்து எழுதுபவரின் கருத்தைவிட கருத்து எழுதுபவர் புலி விசுவாசியா புலி எதிர்பாளன என்று பார்ப்பதால் தான்

  • தொடங்கியவர்

நான் குறிபு்புகளும் கேள்விகளும் என்றுதான் தலைப்பிட்டிருந்தேன். எனது குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் தெளிவான கருத்துகள் மூலம் பதிலளித்த எல்லாருக்கும் நன்றிகள்.

Edited by Snegethy

  • கருத்துக்கள உறவுகள்

எட பீத்தமிழா (இப்படித்தான் சிங்களவனும் எமைப் பிடிக்காதவனும் அழைக்கிறான் நாமதான் ஏர்ரோப்பிளேனிலை போறதா கனவு காணுகிறம்) புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற உனக்குத் தந்த அடையாளப்படுத்தும் கடுதாசிகள் நீ பிச்சையெடிக்க மட்டுமே உரிமை உள்ளது. அதை விட பெரிதாக ஒண்ணுமில்லை.

எத்தனை காலம் நீ வாழ்கின்ற நாட்டில் வாழ்ந்தாலும் அகதி அகதிதான். இதனை மறக்காதே. இதை விடக் கேவலம் நீ வாழ்ந்த நாடாகிய ஈழத்திலும் உனக்கு மரியாதை இல்லை உனது உழைப்பை நன்றாகப் பெற்றுவிட்டு இப்போது "நீ உள்ளூரில் சம்பாதித்து உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்குச் சோறுபோட வக்கில்லாது வெளிநாடுபோய் கக்கூசு கழுவி வயுறு வளர்க்கப் போனவர்தானெ " என ஏளனம் செய்கின்றார்கள் இதுக்குள்ள ஒபாமாக் கனவு...

திமிர் பிடித்து சிலதுகள் கத்தி கம்பு பொல்லுகளுடன் திரியுது அதுகளை கவனிக்காது விடுங்கோ என்ன கேடு கெட்டும் போகட்டும்.

எதாவது அலுவலுக்கு சொன்ன நேரத்துக்கு போறதில்லை. பதினெட்டு சாமி அதுகைடை கைகளில் வாள் சுத்தியல் உருட்டுக்கட்டை. ஒழுங்குபடுத்தப்படாத சமய அனுட்டானங்கள். சோனகனும் வேதக்காரனும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரேமாதிரித்தான் கும்பிடிகிறான் ஒரேமாதிரித்தான் முணுமுணுக்கிறன். நாம மாத்திரம்தான் கலயாடுறதும் தேங்காயை மலையாகக் குவித்து ஒண்டோடு ஒண்டை மோதவிட்டு இளநீரை தலையிலூத்தி அந்த உடம்போட நல்ல உடுத்துவாற இளம்பெட்டையளை உரசி தன்னையும் கேவலப்படுத்தி மற்றவயளையும் கேவலப்படுத்தி.... இப்போதெல்லாம் ரீவீக்காரன் ஆபிரிக்காவுக்கொ ஆசியாவுக்கோ கமறாவைக் கொண்டுபோய் அவங்களுக்கு காசு கொடுத்து காட்சிப்படுத்தி உள்ளூரிலை டீவியிலை காட்டுறதில்லை ஏனெண்டால் அந்தக் கண்றாவிகளையெல்லாம்தானே நாமள் அவர்களது வாசல்படியிலேயே வந்து செய்து காட்டுகிறம். தனது உழைப்பிலும் கை வைத்துவிடான் என்கிற வயித்தெரிச்சலிலை நாங்கள் உணர்வுடன் செய்கின்ற ஆர்ர்ப்பாட்டங்களையும் கண்டுக்கிறதில்லை. இதுவும் ஏதோ அவங்கட ஊர் திருவிழாவோ என நினைத்து போய்விடுகிறான்.

னீ டாக்குத்தரெடா நீ இன் யினீயரடா அதை விட எதயும் படிக்க முயற்சி செய்ய பிள்ளைகளை விடாது சாமத்திய வீட்டிலும் பிள்ளை என்ன படிக்குது எண்டு விண்ணாணம் கேட்கும் பெண்டுகளுக்கு அவர் இல்லாட்டில் அவள் , இப்ப என்றன்ஸ் எக்சாம் எடுக்கினம் அடுத்த வருடம் டாக்குத்த்ர் படிப்பு அல்லது பொறியாளர் படிப்பு ( இதுக்குள்ள பிரபல்யமான பல்கலைக் கழகங்களின் பெயரையும் மனப்பாடம் செய்து வைப்பினம்)

பிள்ளை சோதினயில் பால் ஊத்தி விட்டதெனில் போதைக்கு அடிமை காரணம் அப்பனும் ஆத்தையும் அவர்கள் மனதில் வளர்த்துவிட்ட டாக்குத்தர் பொறியாளர் பூதம் போதையை விடப் பயங்கரமானது. அன்றேல் சமூகத்தின் கடை நிலைக்கு சறுக்கி வந்து கத்தி பொல்லு வாழ்க்கை.....

.

இதுக்குள்ள ஒபாமாக் கனவு...

ஒபாமாவின்ட பரம்பரையும் கக்கூஸ் கழுவித்தான் முன்னுக்கு வந்தது.அது சரி கக்கூஸ் கழுவிறதையும் திட்டிறியள்,டாக்குத்தர் ,இன் ஜினியரயியும் ,திட்டிறியள் அப்ப தமிழன் என்ன தொழிலை செய்ய சொல்லுறியள்

இல்லாட்டி எல்லாத்தமிழனும் தற்கொலை செய்ய வேணுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைத் தமிழனாக இருக்கச் சொல்கிறேன். எதிர்கால உலகில் மனித குலத்தின் மேம்பாட்டுக்குரிய மாற்றங்கள் நிகழுமாகவிருந்தால் அதில் ஈழத்தமிழனது பங்களிப்பும் கூடவே இருக்கவேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் பயனிக்க வேண்டும். அதற்காக பல இடையூறான விடையங்களை நாம் எம்மிடத்திலிருந்து தூகியெறிய வேண்டும். அதோடு உலகின் பொருளாதார சக்தி படைத்த கக்கள் கூட்டமாக நாம் மாறுதல் வேண்டும். அதற்காக புலம்பெயர் தேசத்துக் கடைத்தெருக்களில் நம்மவர் விக்கும் நகைகளை கிலோ கணக்கில் வாங்கி ஒண்டுக்கும் உதவாது பெட்டிக்குள் வைப்பதைக் கூறவில்லை. ( இவற்றில் அனேகமானவை மாற்றுக் குறைந்த தங்கத்தினால் உருவாக்கப்பட்டதும் பொடிவிளக்கனம் கூடியவையும் என்பது நமது பொம்மனாட்டிகளுக்குத் தெரியாது. இத்தங்கத்தையே 24கரட் தங்க க் கட்டிகளாக வாங்கிவைத்தால் அதை முதலீடு எனக் கூறலாம்)

தமிழனைத் தமிழனாக இருக்கச் சொல்கிறேன். எதிர்கால உலகில் மனித குலத்தின் மேம்பாட்டுக்குரிய மாற்றங்கள் நிகழுமாகவிருந்தால் அதில் ஈழத்தமிழனது பங்களிப்பும் கூடவே இருக்கவேண்டும். )

தமிழனின் விகிதாசரத்துடன் ஒப்பிடும் பொழுது அவர்களுடைய வாரிசுகளை வைத்தியதுறையில் அதிகமாகவேஉருவாக்கியுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.