Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள்: திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வரும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும் என அக் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "எழும் தமிழ் ஈழம்'-தமிழின விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:

இந்த மாநாட்டுக்காக பல்வேறு இடங்களில் தொண்டர்கள் வைத்திருந்த 2,000 பேனர்கள் அகற்றப்பட்டன. மத்திய உளவுத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளால் ஏராளமான விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நம்மை சீண்டுவார்கள். ஆனால், நாம் உணர்ச்சி வசப்படாமல் பொறுப்புணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் நடக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவதும், அடக்குமுறைக்கு ஆளானோர் ஆயுதம் ஏந்துவதும் தவிர்க்க முடியாதது. விளம்பரங்களை அழித்தாலும் எங்கள் உணர்வுகளைத் தடுக்க முடியாது. இன விடுதலை மற்றும் ஜாதி ஒழிப்பு ஆகியவற்றுக்காக போராடுவதே விடுதலைச் சிறுத்தைகளின் இரட்டைக் கடமைகள் ஆகும்.

எழும் தமிழ் ஈழம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது. எங்களால் திமுக அரசுக்கு எவ்வித இடையூறும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ஆனால், எங்களது கொள்கைகளில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

இறையாண்மைக்கு கட்டுப்பட்டவர்களாக நாங்கள் இருப்போம். ஆனால், தமிழினத்துக்கு எதிரான துரோகத்தை எதிர்ப்போம். தமிழகத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள்.

ஈழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழ் ஈழம் மட்டுமே இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இலங்கையில் 3 லட்சம் தமிழ் மக்கள் முள் வேலிக்குள் அகதிகளாக குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவிக்கின்றனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

பிரபாகரன் மீண்டும் ஈழ விடுதலைப் போரை ஏற்று நடத்துவார். அவர் உயிரிழந்தது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இதுவரை ராஜபக்ஷ அறிவிக்காதது ஏன்? இந்திய அரசுக்கு பிரபாகரனின் இறப்புச் சான்று இதுவரை அளிக்கப்படவில்லையே ஏன்?. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று.

ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் தொடர்ந்து போராடும் பொறுப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு உண்டு. தலைமறைவாக இருக்கும் பிரபாகரன் மீண்டும் திரும்பி வந்து தலைமை தாங்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும். ஈழம் வெல்லும். அதை சரித்திரம் சொல்லும்.

பாமக மீது குற்றச்சாட்டு: தைலாபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் முன்பு, பாமக இல்லாத அணி வெற்றி பெற முடியாது என்றனர். ஆனால், இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்றார் தொல். திருமாவளவன்.

இதில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போலீஸாரின் கெடுபிடிகளுக்குப் பின்னரும், இந்த மாநாடு நடைபெற்ற திரு.வி.க. பூங்கா சுற்றுப் பகுதிகளில் பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் ஆண்டனி ஆகியோரது உருவத்துடன் திருமாவளவன் படமும் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கூட்டத்தில் பிரபாகரன் படங்கள், வாழ்க்கை வரலாற்றை விளக்கும் "விடுதலைத் தீப்பொறிகள்', "தலை நிமிர்வு', "உயிராயுதம்' ஆகிய சிடிக்கள் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டன.

பா.ராகவன் எழுதிய "பிரபாகரன்- வாழ்வும், மரணமும்' என்ற நூல் ரூ. 100 விலைக்கு விற்கப்பட்டன.

http://www.newindianews.com/ta/view.php?2b...fVmA3d0e3I4C60e

Edited by ஜீவா

:lol: :lol: :D :D

தமிழினத்துக்கு எதிரான துரோகத்தை எதிர்ப்போம்

தமிழினத்தின் முதுபெரும் பழம்பெரும் துரோகியோட கூட்டு சேர்ந்துவிட்டு இப்படி சொல்லலாமா??

Edited by நெப்போலியன்

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :D :D

தமிழினத்தின் முதுபெரும் பழம்பெரும் துரோகியோட கூட்டு சேர்ந்துவிட்டு இப்படி சொல்லலாமா??

நெப்போலியன் அண்ணே!

சும்மா இருந்துகொண்டு கேள்விகள் கேட்பது என்பது மிக எளிதானது. ஆரம்ப காலங்களில் இயக்கங்கள் கூட்ங்கள் வைத்தபோது...... நாம் எப்படி மின்சாரத்தை பெறுவது என்ற கேள்வியும்..... அதை கடல் அலைகளை பயன்படுத்தி ஒரு சூழற்சி மூலம் மின்சாரத்தை பெறலாம் என்ற விளக்கங்களையும் நீங்கள் நேரிலேயே கேட்டிருக்கலாம். இதை குறிப்பிடுவதற்கு காரணம் இந்த கேள்விகளை கேட்வர்களும் விளக்கம் அளித்தவர்களும் அந்த சமூகத்தின் கல்விஅறிவை கொண்டிருந்தவர்கள். அப்போதைய நிலமையில் முக்கிய கேள்வி நாம் எப்படி ஈழத்தை பெறுவது தனிநாட்டை உருவாக்குவது போன்றதாகும். ஆனாலும் அந்த கூட்டம் நிகழும் சூழலில் தம்மை ஒரு கல்வியாளராகவும் ஏதொ தொலைநோக்கு உடையவராகவும் அறிமுக படுத்தவே அந்த கேள்விகள் எழுந்தன. கேட்கபட வேண்டிய கேளிவிகள் கேளாமல் விடபட்டதற்கான காரணம் பதில் நீங்கள் எல்லோரும் போரட வர வேண்டும் என்பது ஆகும். அது அவர்களுக்கு உகந்ததான பதிலாக இருக்க முடியாது. ஆகவே கேள்விகளும் விளக்கங்களும் இல்லாது போயின......

அது போல் எதாவது ஒனறுக்கு செயல்வடிவம் கொடுப்தே..... சிரமமானது. மனிதன் கருவிகளை கொண்டு பறவைகள்போல் வானத்தில் பறக்கலாம் என்று றைட் சகோதரர்கள் நம்பினார்கள். மற்வர்கள் கேள்விகள் கேட்டு அவர்களை நையாண்டிபண்ணினார்கள். ஆனால் இப்போது நானும் நீங்களும் பல தடவைகள் அவர்களின் நம்பிக்கiயின் பிரகாரம் பறந்துவிட்டோம் இல்லலையா?

அரசியல் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. பல ஆப்பிரிக்க நாடுகளில் தேர்தல்களும் நடக்கின்றன பெரும்பாண்மை வாக்குகளோடு 30-40 வருட காலமாக ஒருவரே பல நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். காரணம் மக்களுக்கு மாற்றம் பற்றிய போதிய அறிவு கிடையாது. சில நாடுகளில் ஆட்சியாளர்கள் ஒவ்வொருதடவையும் மாறுகின்றார்கள். மக்கள் ஆட்சியை மாற்றினால் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறார்கள். ஆக இந்திய அரசியல் பற்றி தெளிவுபட்டாலே திருமா பற்றி நாம் விமர்சிக்க முடியும். நியாயத்தின் பக்கம் மட்டுமே திருமா நிற்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால் ஆயுதங்களுடன் திருமா காட்டிலே மட்டுமே நிற்க முடியும்....... தேர்தலில் நிற்க முடியாது. தமிழக மக்களின் மனநிலையும் அரசியல் அறிவும் அவ்வாறனது ஆக நாம் திருமாவை சாடமுடியாது.

இப்போது நண்பரே...... சுயநலமற்ற கேள்விகளும்..... தெளிவுகளுமே எமக்கு தேவை. ஆகவே முன்னு போல் மின்சாரம் பற்றி பிதற்றி எம்மை ஒரு படித்தவராக காட்ட முயல்வதிலும் பார்க்க. நாம் திருமாவிற்கு இந்திய அரசியலின் ஊடாக ஈழம் எட்ட கூடிய சாத்தியங்கள் எத்தனை உள்ளன போன்ற கேள்ளிகளையும் தெளிதல்களையும் முன்வைப்போம்.

கருநாய் நிதி 3 மணிநேரம் மனைவிமாரோட ஜல்சா செய்திட்டு ஈழத்தில் போர்நிறுத்தம் வந்து விட்டது என்டு அப்பட்டமா பொய் சொல்ல அத மறுத்து அறிக்கை விட கூட திராணியில்லாதவர்கள் எப்படி ஈழப்போராட்டத்தை தாங்க போகிறார்கள்??

இந்த தேர்தல் நாடகங்களோட வீரமணி, சுப வீரபாண்டியன், திருமா மேல இருந்த மதிப்பும் மரியாதையும் சுத்தமா போய் விட்டது.

அங்க ஒரே நாளில செல் வீச்சில 3000 சனம் சாக கருநாநிதி அத "மழை விட்டும் தூவானம் விடவில்லை" என்டு கேவலமான அறிக்கை விட்ட பிறகும் அந்த நாய்க்கு இவர்கள் ஜால்ரா தானே அடித்துக்கொண்டு இருந்தவர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

கிழட்டு நாய் பாடையில்ப் போகும் நாளுக்காகக் காத்திருப்போம். நாய் சாவதைக் காட்டிலும் அது தமிழினத்துக்கு செய்யக்கூடிய சேவை வேறொன்றும் இருக்கமுடியாது. ஆகவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இந்த கிழட்டு நாய் விரைவில் செத்து விழ பிரார்த்திப்போமாக !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கருநாயின் சந்ததி எண்டைக்கு அழியுதோ அண்டைக்குத்தான் தமிழினத்தின் விடிவு நாள் :lol:

சகுனிக்கூட்டங்கள்

Edited by குமாரசாமி

கருணாநிதி இறப்பதாலோ அவர்களது சந்ததி இறப்பதாலோ எங்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. அவர்களது இடத்தை நிரப்ப வேறு யாரும் வருவார்கள்.

தமிழக மக்கள் மனம் திருந்த வேண்டும். பணத்திற்கு வாக்களிப்பதை தவிர்த்து உண்மையாகவே தமிழினத்திற்கு சேவை செய்யக்கூடியவர்களை மாத்திரம் இனங்கண்டு தெரிவு செய்ய வேண்டும். தமிழக மக்கள் எப்போது ஒன்று திரண்டு எம்மோடு இணைந்து போராடுகிறார்களோ அன்றே தமிழீழ தமிழக தமிழர்களிற்கு விடிவு. அதுவரை நாங்கள் சிங்களவனுக்கும் அவர்கள் வடக்கத்தையானுக்கும் சேவகம் செய்ய வேண்டியதுதான்.

மயிரைப் புடுங்குவோம்.

கிழட்டு நாய் பாடையில்ப் போகும் நாளுக்காகக் காத்திருப்போம். நாய் சாவதைக் காட்டிலும் அது தமிழினத்துக்கு செய்யக்கூடிய சேவை வேறொன்றும் இருக்கமுடியாது. ஆகவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இந்த கிழட்டு நாய் விரைவில் செத்து விழ பிரார்த்திப்போமாக !

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே நாம் எமது உணர்சிகளின் தூண்டலால் வார்த்தைகளை கொட்டுகிறோம் தவிர உள்நாட்டு அரசியலை அடியோடு மறந்தே கருத்துக்களை முன்வைக்கிறோம். தமிழக அரசியல்வாதிகளிடம் இருப்பது இரண்டு தெரிவு ஒன்று நெளிவு சுளிவுகளினுடாக ஒன்றை சாதிப்பது இல்லையேல் சிறைசெல்வது. இதில் எது எமக்கும் அவர்களுக்கும் தேவையானது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

கடைசிநேரத்தில் கருணாநிதி குடும்ப அரசியலாலால் தனது கண்ணை தானே குத்தினார் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போதைய நிலையி;ல் 80 வயதையும் தாண்டிய கருணாநிதி வெறும் பொம்மைதான் அவரை ஆட்ட முடியுமே தவிர அவரால் இனி ஆட முடியாது. தன்வினை தன்னை சுடும் என்பார்கள் அதுபோல் தனது குடும்ப அங்கத்தவராலேயே மாசுபடுத்தபட போகின்ற ஒருவராகவே இவர் இப்போது இருக்கின்றார். இதற்குள் எத்தனையோ சதிகள் திட்டமிட்டு நடைபெற்றன உதாணத்திற்கு வைகோவை "றோ" பிரித்தது பின்பு வேறுசிலரை ஜெயலலிதா காசு கொடுத்து வாங்கினார் என்று அவரின் கைகளைமீறியும் பல நடந்தன. ஆனால் எப்போதுமே தனது ஆட்சியிலேயே குறியாய் இருந்தது என்பது அவருடைய தவறென நாம் வாதிடலாம். ஆனால் ஆட்சியில் இல்லையென்றால் சொந்த மனைவிகூட சொல்வதை கேட்கமாட்டாள் என்பது தமிழக அரசியல்வாதிகளின் நிலமை. ஆகவே தேர்தல் நேரங்களில் பல்டி அடிப்பது அல்லது அரசியலைவிட்டு விலகுவது இரண்டில் ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும். காரணம் நாட்டு மக்களின் மனோநிலை அப்படியானது. உதாரணத்திற்கு சினிமாவை கூட எடுத்துபாருங்கள் அரைத்த மாவையே அரைக்கின்றார்கள்..... அதற்காக திறமைசாலிகளே அங்கே இல்லை என்பது பொருளில்லை. இருக்கின்றார்கள் திறமையான நாட்டு மக்களுக்கு தேவையான படங்களை பல கோடி முதல்களை போட்டு எடுத்தால் மூன்றாவது நாளே திரையரங்குகளை விட்டும் படங்களை எடுக்கவேண்டிய நிலை. தவிர நமீதாவின் ஆட்டம் விஜயின் மதுரையில் இருந்து சென்னைக்கு பாய்ச்சால் போன்றவைகள்தான் தொடாந்துகொண்டிருக்க முடியும்.

கடைசிநேரத்தில் கருணாநிதி குடும்ப அரசியலாலால் தனது கண்ணை தானே குத்தினார் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போதைய நிலையி;ல் 80 வயதையும் தாண்டிய கருணாநிதி வெறும் பொம்மைதான் அவரை ஆட்ட முடியுமே தவிர அவரால் இனி ஆட முடியாது.

அவர் எப்படி வேண்டுமென்டாலும் ஆடட்டும்..அதுக்காக எமது மக்களின் சாவை வைத்து அரசியல் செய்த அந்த கீழ்த்தனமான செயலை நீங்கள் எப்படி நியாயப்படுத்தினாலும் எடுபடாது. எதிர்த்து அரசியல் சேய்ய முடியாமல் தான் காங்கிரஸ்ஸோடு சேர்ந்தோம் என்டு சொல்லுற திருமா இப்ப 4 மாசமா சட்டமன்ற உறுப்பினராகி என்ன செய்தவர்?

புலிகளோட ஒப்பிட கூடிய தகுதி வி.சிறுத்தைகள் மட்டுமில்லை வேற எவருக்குமே கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எப்படி வேண்டுமென்டாலும் ஆடட்டும்..அதுக்காக எமது மக்களின் சாவை வைத்து அரசியல் செய்த அந்த கீழ்த்தனமான செயலை நீங்கள் எப்படி நியாயப்படுத்தினாலும் எடுபடாது. எதிர்த்து அரசியல் சேய்ய முடியாமல் தான் காங்கிரஸ்ஸோடு சேர்ந்தோம் என்டு சொல்லுற திருமா இப்ப 4 மாசமா சட்டமன்ற உறுப்பினராகி என்ன செய்தவர்?

புலிகளோட ஒப்பிட கூடிய தகுதி வி.சிறுத்தைகள் மட்டுமில்லை வேற எவருக்குமே கிடையாது.

உங்களின் கருத்துகள் நியாயமானவைதான்!

ஆனால் நீதியும் தர்மமும் உலகில் செத்து பல வருசம் ஆய்ச்சே?

தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை

தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேனர்இ போஸ்டர்கள் ஒட்டிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் மாநில பொதுச் செயலரும் எம்.எல்.ஏ.வுமான சி. ஞானசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்இ

சென்னையில் திருமாவளவனின் பிறந்தநாளை "எழும் ஈழம்' என்று ஆகஸ்ட் 17ல் கொண்டாடினார்கள். அதற்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள்இ போஸ்டர்கள்இ விளம்பரங்கள் அனைத்திலும்இ தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தையும்இ லச்சினையையும் பயன்படுத்தியுள்ளனர்.

அவற்றை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். அதே நேரத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவது குற்றச்செயல் என்று தலைமைச் செயலர் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

ஆனால்இ இதுவரை இத்தவறை செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார.

நக்கீரன்.

தமிழகத்தில் ஈழம் பற்றி பேச யாராவது வேண்டும் புரிந்து கொள்ளுங்கள் !

எதிர்தரப்பில் இருந்து கொன்டு ஈழம் என்று சவுண்ட் விடுவதிலும் பார்க்க அரசுதரப்பில் இருந்து அரசியலுரிமைக்காக சவுண்ட் விட்டால் நல்லம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.