Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓர் உயிருக்காய் துளி கண்ணீர்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுகதை - இளங்கவி

தந்தையை 5 வயதிலேயே இழந்த குடும்பச்சுமை, திருமணமாகத மூன்று சகோதரிகள், ஊரெல்லாம் கடன்பட்டு வளர்த்தெடுத்த அம்மா இப்படிச் சொல்லொண்ணாத் துயரங்களை புலம்பெயர்தேசத்திலே வந்த புதிதில் அனுபவித்துக்கொண்டிருந்தான் கணேஸ். வேலையும் பல மாதங்களாய்க் கிடைக்காமல் இருந்த கஸ்ரத்திலிருந்தவனுக்கு ஓர் வேலை கிடைத்தது ஏதோ கடவுள் செயல் போல இருந்தது...

எப்ப முதல் சம்பளம் வரும், கொஞ்சமென்றாலும் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சம்பளமும் வர அதை எவரெவருக்கு எப்படிப் பிரிக்கலாம் என்று கணக்குப் பார்த்து முடிந்து தூக்கத்துக்குப் போனவனுக்கு அதிகாலை வேளை ஓர் தொலைபேசி அழைப்பு. அதிகாலை தொலைபேசியென்றாலே அது இலங்கையில் இருந்துதான் என்று நினைத்து பதறியடித்து தொலைபேசியை எடுத்தவனுக்கு...

' கலோ...கணேஸ் நிக்கிறாரா, நான் இந்தியாவிலிருந்து கணேஸின் பெரியத்தானின் மகன் சந்திரன் பேசுறன்....' என்றதும்

'டேய் சந்திரன் நான் தான்டா பேசுறன்... நீ எப்படியிருக்கிறாய்.... நான் இங்கே வந்தது எப்படியடா தெரியும்' என்று மிகவும் சந்தோசமாக உரையாடியவனுக்கு வளமையான தொலைபேசி உரையாடல்களுக்குப் பின்...

'இல்லையடா.. நானும் என் குடும்பமும் மூன்று பிள்ளைகளுடன் போனவாரம் தான் இந்தியா வந்தனாங்கள் , உன்ர அம்மா தான் போன் நம்பர் தந்தவ, வந்த இடத்தில் வாடகை வீடு எடுக்கப் பணம் கொஞ்சம் குறையுது, அவசரமாய் தேவைப்படுகுது, காம்பிலையும் இப்ப பதியேலாமல் இருக்கடா... வீடும் எடுக்காட்டி பிள்ளைகளுடன் நடுத்தெருவடா.. தயவு செய்து ஒரு பத்தாயிரம் உடனடியாக அனுப்படா, என் கையில் காசு வந்ததும் நான் உன்ர அம்மாட்டை அனுப்புகிறேன்....'

என்பதைக் கேட்டதும் பட்ஜெட் போட்டு வைத்திருந்தவனுக்கு ஒரே அதிர்ச்சி.... ஆனாலும் பிள்ளைகளுடன் பாவம் தெருவில நிற்கப்போறானே என்று நினைத்துக் கவலைப்பட்டு சரியடா...

' நான் அம்மாவுக்கு அனுப்ப வைத்திருந்த காசைத்தான் அனுப்புகிறேன், மறந்திடாமல் அம்மாட்டை கெதியென்று குடு... சரியா...' என்று கணேஸ் சொல்லிவிட்டு காசு அனுப்ப சந்திரனின் பெயர், தற்காலிக முகவரி அனைத்தையும் எடுத்துவிட்டு தொலைபேசியழைப்பு நின்றுவிடவேலைக்குப் போகமுதல் இன்னும் கொஞ்ச நேரம் கிடப்பமென்று படுக்கைக்குப் போனான்...

இப்படி வேலை, வீடு என்று வளமையான பொழுதுகள் போக, சில மாதங்கள் கழித்து இவனுக்கு இந்தியாவிலிருந்து சந்திரனிடமிருந்து மறுபடியும் தொலைபேசி...

' கணேஸ் நான் சந்திரனடா.... சொறியடா... நான் இன்னும் உன்ர காசு அம்மாவிடம் கொடுக்கலை... வேலைப்ப் பிரைச்சனையால ஆனால் இப்ப அது சரிவருகுது அதாவது ஒரு கடையொன்று எடுக்கிறன் அது ஒழுங்காக நடந்தால் மாதம் 2 - 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமடா அது வந்ததும் உன் காசைத்தந்திடுவேன் அதுதான் கடை எடுக்க கொஞ்சப் பணம் அனுப்பு இனிமேல் கேட்கமாட்டேன்ரா, உன்னை விட்டால் எனக்கு யாரையும் தெரியாதடா..' என்று போனில் மன்றாடினான் சந்திரன்..

'சரியடா நான் உடனே அனுப்பி வைக்கிறேன், காசைச் செலவளித்துப் போடாமல் ஒழுங்காய் கடை அலுவலைப் பார்த்து குடும்பத்தைக் கவனி என்ன...' என்று கணேஸ் சொல்லிவிட்டு, சின்ன வயதில தாய் தகப்பன் சொல்லைக் கேளாமல் யாரோ பெட்டையை கூட்டிகொண்டு ஓடி கலியாணம் செய்துவிட்டு எங்களைச் சித்திரவதைப் படுத்துகிறானே என்று மனதுக்குள் சந்திரனைத் திட்டிக் கொன்டான்..

கணேஸின் பாடும் பெரும்பாடாய் இருந்தது அம்மாவின் கடன் , இவனைக் கூப்பிட்ட மாமாவுக்கு கொடுக்கும் காசு, அக்காமாரின் அலுவல் இப்படியென்று மாதாமாதம் இவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள். சந்திரனுக்கு அனுப்பிய காசைப்பற்றி இவன் அம்மாவிடம் சொல்லாமல் இந்த மாதம் கொஞ்சம் சம்பளம் குறைந்திட்டதம்மா அதுதான் கனக்க அனுப்பமுடியவில்லை என்று அம்மாவிடம் சமாதானம் சொன்னான் கணேஸ்.

சில மாதங்கள் செல்ல மீண்டுமொரு நாள் சந்திரனிடமிருந்து அதிகாலை தொலைபேசி... ' கணேஸ் நீ போனதடவை அனுப்பிய காசு கடையில் போட்டு வியாபாரம் நல்லா நடக்கிறது, மூத்த மகள் சுகமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறாள், டாக்டர்கள் வைத்தியச் செலவுக்கு 20,00 ரூபா வேணுமாம், ஆனால் ஒரு 5000 ரூபா என்னிடம் இருக்குது இன்னுமோரு பதினையாயிரம் வேணுமடா...தயவுசெய்து அனுப்படா..., ஒரு ஆறுமாதத்தில் எல்லாம் திருப்பித்தந்துடுவேன்... கடையில் போட்ட காசை உடனடியாக ஒன்றுமே செய்யமுடியாது உன்னிடம் அடிக்கடி கேட்பதும் கஸ்ரமாயிருக்கடா, இனிமேல் என்ன நடந்தாலும் எதுவும் கேட்கமாட்டேன்...' என்று சொன்னதைக் கேட்டதும் கணேஸ் இந்தத் தடவை மறுப்பேதும் சொல்லாமல் சரி உடனே அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான், காரணம் கணேசுக்கு பிள்ளைகளென்றால் கொள்ளைப் பிரியம், ஒரு எறும்மைக் கூடக்கொல்ல யோசிப்பான், அந்த அளவுக்கு உயிகள் மேல் மிகவும் அன்பு கொண்டவன் கணேஸ்...

ஒரு நாள் இவன் அம்மாவுடன் கதைக்கும் போது....

'இவன் சந்திரனின் பிள்ளை இந்தியாவில் ஆஸ்பத்திரியில் இருந்தது அதுக்கு இப்ப சுகமா என அம்மாவை கேட்க....'

யார் உன்ர பெரியத்தானின் மகனின் பிள்ளைக்கோ, சந்திரனின் தாய் ஒன்றும் அதைப் பற்றிச் சொல்லவில்லையே அறிஞ்சு பார்க்கிறேன்.....' என்று அம்மா சொல்லவும்...

' இல்லையம்மா அவன் இரண்டு மூன்று தரம் காசு கேட்டு அனுப்பினனான்... சில நாட்களுக்கு முன் தான் பிள்ளை ஆஸ்பத்திரியில் என்று சொல்லி காசு அனுப்பினனான்... அதுதான் கேட்டனான்....'' என்றான் கணேஸ்

' நல்ல ஆளுக்கு நீ காசு அனுப்பினனி... அவன் சரியான குடியாம் வேலைக்கும் போறதில்லையாம்... தாயையும் அடிக்கடி காசு அனுப்பு என்று கேட்டு ஒரே கரைச்சலாம், மனிசியின் கையில, காதில, களுத்தில கிடந்ததெல்லாம் வித்துக் குடிச்சுப்போட்டு கடைசியில உன்னையும் கந்தறுக்க வெளிக்கிட்டிருக்கிறானா...''

என்று அம்மாவின் ஆத்திரப் பேச்சைக் கேட்ட கணேஸுக்கு ஒரே ஆத்திரம் சந்திரனில்... இவன் இனிமேல் போன் எடுக்கட்டும் குடுக்கிறன் இந்த நாய்க்கு... நான் பாவம் அம்மாவுக்கும் அனுப்பாமல் இவனுக்கு அனுப்ப இவன் செய்த எழிய வேலையைப் பார் என்று மனதில் கொத்தித்தவனாய் வேலைக்குச் சென்றுவிடவும் இவனால் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை.... இப்படியே சில நாட்கள் சென்றும் இன்னும் ஆத்திரமடங்காமல் இருந்தவனுக்கு..... இவனின் நண்பர்கள் ஓரளவு ஆறுதல் சொன்னார்கள், டேய் கணேஸ் இப்படித்தான்டா பலபேர் இருக்கிறார்ங்கள் எங்களையும் காசுகேட்டு தொல்லை நாங்கள் அனுப்புறதே இல்லை... இனிமேல் என்றாலும் கவனமடா.... என்று சொல்லிமுடித்தார்கள்.

சில வாரங்களில் இந்தியாவிருந்து சந்திரனின் போன் அழைப்பு, அழைப்பை எடுத்த கணேஸ் முதலில் கொஞ்சம் அமைதியாகக் கதைத்தவன் என்ன என்று கேட்க..... சந்திரனோ...

' என்ர இரண்டாவது மகள் மூன்று வயது அவளுக்கு மூளைக்காய்சல் வருத்தமடா ஆஸ்பத்திரியில் வைத்தியச் செலவுக்கு கையில் இருந்த காசெல்லாம் முடிஞ்சுதடா... கொஞ்சம் காசு அனுப்பிறியா கணேஸ் என்று சந்திரன் கேட்க..'

ஆத்திரத்திலிருந்தவன் நல்ல பேச்சுக்கொடுத்து நீ என்னை இவ்வளவு நாளும் என்னை ஏமாற்றிவிட்டாய் நான் இங்கே எவ்வளவு கஸ்ரப்படுகிறேன் தெரியுமா? உனக்கு ஒரு சதமும் அனுப்பமாட்டேன்.... வை போனை...' என்று விட்டு தொலைபேசியை வைத்துவிட்டான்.... சில மணி நேரம் கழித்து மறுபடியும் போன் இது சந்திரனல்ல... யாரோ அவனின் நண்பனாம்... சந்திரன் அன்ணை உங்களிடம் காசு கேட்டவராம் அவரின் மகள் உண்மையிலே ஆஸ்பத்திரியிலாம் தயவுசெய்து காசு அனுப்பட்டாம் என்று சொன்னவர். கணேஸ் அண்ணா.. அது உண்மைத்தான் என்று சொல்லவும்... சரி நீங்கள் போனை வையுங்கோ நான் உண்மையை அறிந்து பார்த்துத் தான் பணம் அனுப்ப முடியுமென்றால் அனுப்புவேன் ஏன்றுவிட்டு போனை வைத்தான்.

கணேஸின் மனம் சற்றுக் கலக்கமடைந்தது... சில வேலை உண்மையாய் இருக்குமோ உண்மையிலே வருத்தமென்றால் மூளைக்காய்ச்சல் தீவிரமான நோயல்லவா.... ! என்று எண்ணிய கணேஸ் அவனின் மற்றச் சொந்தக் காரர்கள் வீட்டுக்கு போன் பண்ணி அவர்கள் மகன் பாபுவிடம்...

''பாபு நான் கணேஸ் லண்டனிலிருந்து பேசுகிறேன்... எங்கடை பெரியத்தானின் மகன் சந்திரனின் மகள் ஆஸ்பத்திரியில் என்று சொன்னவன் ஒருக்கால் அது உண்மையா என்று அறிந்து சொல்லுறியா, அவனின் போன் நம்பர் இதுதான், அவனிட்ட விலாசத்தை கேட்டுவிட்டு நான் சொன்னேன் என்று சொல்லாமல் நேரடியாகப் போய் பார்த்துச் சொல்லுவியா....?' என்று கணேஸ் கேட்டதும்...

' சரியண்ணா... நான் நாளை போய் விட்டுவந்து சொல்கிறேன்..' என்று பாபு சொல்லிவிட்டு போனை வைக்க ஓரளவு நிம்மதியாய் கணேஸும் தன் வளமையான அலுவல்களுக்குப் போனான்....

அடுத்த நாள் மதியமளவில் பாபுவிடமிருந்து போன்...

' கணேஸண்ணா... சந்திரணண்ணாவின் மகள் இரண்டு கிழமைக்கு மேல் சுகமில்லாமல் இருந்தது உண்மைதான், இன்று காலை அந்தப் பிள்ளை இறந்து போச்சுது அதுதான் நானும் போனால் போலை அதன் காரியத்துக்கும் நின்று போட்டு வருகிறன்....' என்று பாபு சொல்லக்கேட்ட கணேஸ் ஒரேயடியாய் இடிந்துபோனான்.... சரியென்று போனை வைத்தவனின் கண்களில் கண்ணீர்த்துளிகள்.....

அட பாவி...இவன் குடிச்சுக்கொண்டு திரியிறத்துக்கு தெரியாமல் காசு அனுப்பிய எனக்கு உண்மையிலேயே ஒரு பிள்ளையின் உயிரைக் காக்க பணமனுப்ப முடியவில்லையே...! என்று மனதில் அழுதவன், தான் பொய் சொல்லிக் காசு வாங்கியதை நான் அறிந்துவிட்டேன் என்ற குற்ற உணர்விலோ, அல்லது பயத்திலோ சந்திரன் இரு வாரங்களாகவும் என்னிடம் பணமேதும் கேட்காமல் கடைசி நாளில் என்னிடம் பணம் கேட்கவும் உண்மையறியாமல் அந்த சிறு பிள்ளையை காக்கமுடியாமல் போனதற்கு இப்படியொரு பொறுப்பில்லாத தகப்பனை நினைத்து இன்றும் ஆத்திரப்படும் கணேஸ், காத்திருக்கப்பட வேண்டிய ஓர் உயிரை காக்கமுடியாமல் போன மன உறுத்தல் இன்றும் அவன் மனதின் மூலையில் இருந்துகொண்டே இருக்கிறது......

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி...

மிகவும் நன்றாக உள்ளது உங்களின் சிறுகதை.நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட நினைத்தேன் இளங்கவி ஒரே கவிதை தான் எழுதிறார் சிறு கதை அப்படியும் ஏதாவது வித்தியாசமாக எழுதலாம் தானே எண்டு.நல்ல கதை தந்து விட்டீர்கள் மீண்டும் நன்றிகள்.அத்தோடு உங்கள் கதையில் கூறப்பட்ட சந்திரன் போன்று நிறைவே ஆக்கள் இருக்கிறார்கள்.வெளிநாட்டில் உள்ளவர்களிடம் காசு வாங்கி தாங்கள் செல்போனும்,மோட்டார் வண்டியும் ஓடுவது...இன்னமும் பல....சொல்லிக்கொண்டே போகலாம்....இப்படியானவர்கள் செய்யும் வேலையால் உண்மையாக உதவி தேவைப் படும் போது சேய்வதற்கு மனம் இடங்கொடுக்க மறுக்கிறது எல்லோரதும் மன இயல்பு.......நன்றி.

யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

நான் யாழில் கடந்த வருடம் நாலோ / ஐந்தோ சரியாக ஞாபகமில்லை - சிறு கதைகள் எழுதியிருந்தேன், பின்னர் நிறுத்திவிட்டேன்... இன்று ஏதோ ஞாபகம் வந்தாபோல மனதில் நெருடலாக இருக்கும் அந்த நினைவால் எழுதிவிட்டேன்...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.....

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடென்றால் காசுமரங்கள் காய்க்கிறதென்ற எம்மவர் நினைப்பு புதுமையில்லை. காலகாலமாக தொடர்கதையாகத்தான் வருகிறது. அந்தரத்தில் வாழ்கிறார்கள் என்ற இரக்கத்தில் நாங்கள் செய்யும் உதவிகளை பலர் தவறாகப்பயன்படுத்துவது மட்டுமின்றி தங்கள் குடும்பங்களையும் தெருவில் விட்டுவிடுகிறார்கள் இளங்கவி. புலத்தில் இத்தகைய பல கணேஸ்கள் தங்களை வறுத்து உறவுகளுக்கு இரையாகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்திக்கு

உண்மைதான்..... இப்படியானவர்கள் சொல்லும் பொய்களால் சில சமயங்களில் உண்மையான நிலையில் கூட உதவமுடியாத பரிதாபம், காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய ஓர் பிஞ்சின் உயிரும் பறிக்கப்பட்டது தான் மிகுந்த சோகம்....

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

கணேஷ் போன்ற இளகிய உள்ளம் இருக்கும் வரை சந்திரன் போன்றவர்கள், குடும்ப பொறுப்பு இல்லாதவர்களும் இருக்க தான் செய்வார்கள்.

பாத்திரம் அறிந்து .......பிச்சை கொடு.

அவன் உண்மையான் பிச்சை காரா என்று அறிந்து பிச்சை யிடு.......என்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

இப்படிப் பல பேர்கள் இருக்கத்தான் செய்கிரார்கள் ஆனால் என்ன செய்வது முதலிலேயே அவர்களை அறிய முடிவதில்லைலே.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.