Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் தீர்த்தமாகிய வன்னி வறிய மக்களின் குருதி

Featured Replies

  • தொடங்கியவர்

காலச்சுவட்டினை கிட்டத்தட்ட சு.ரா ஆரம்பித்த காலத்தில் இருந்து விடாமல் வாசித்து வருகின்றேன். பார்ப்பன சாயல் கொண்ட. இந்திய தேசியவாதத்தினை தூக்கிப் பிடிக்கும் கட்டுரைகள் பலவந்தாலும்இ இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் தலித் இலக்கியங்களுக்கான ஒரு சிறந்த களமாகவும் காலசுவடு இருக்கின்றது.

இந்தியாவிலும் சரி ஈழத்திலும் சரி ஒடுக்கப்பட்டவனுக்காக ஒடுக்கு முறைக்கு காரணமானவன் குரல்கொடுப்பது ஒரு சாபக்கேடு. ஈழத்தில் இனம்காணப்பட்ட முதலாளித்துவம் என்பதும் வர்க்க உயர்நிலை என்பதும் ஒருவகையில் சாதியத்திலும் பொருளாதரத்திலும் கல்வியிலும் உயர்நிலையில் உள்ளவர்களின் வாழ்கை முறையிலேயே இருக்கின்றது. ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் போராடவேண்டியது இவர்களுக்கு எதிராகவே. ஆனால் மார்க்சியம் மற்றும் ஏனைய இடதுசாரிய சமூக சீர்சிருத்தங்களுக்கான சித்தாந்தங்களை கையில் எடுத்தவர்கள் விவசாயிகளோ கடற்தொழிலாளர்களோ அல்லது அடிமட்டக் கூலிகளோ இல்லை மாறாக முதலாளிய வடிவமாக வாழ்பவர்களே இவற்றை கையில் எடுத்தார்கள்.

இந்தியத் தேசியம் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானது. அதை நிலைநிறுத்துவது பார்ப்பனச் சாயல் பத்திரிகைகளும் இலக்கியங்களும் இன்ன பிறவும். காலச்சுவட்டில் தலித் இலக்கியம். குமுதம் தீராநதியில் தலித் இலக்கியம் என்பதெல்லாம் நேர்மையானதாக கருத முடியாது. இந்து ராம் ஒரு மாக்சியவாதி. அது சம்மந்தமாக பயிற்சிப்பட்டறைகளை நடத்துகின்றார். அ. மார்க்ஸ் தீராநதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை குறித்து எழுதுகின்றார். தாழ்த்தப்பட்டவனுக்கு விமோசனம் கிடைக்கும்? பொது உடமை மலரும்? நிச்சயமாக இல்லை. பொதுஉடமைக்காக ஏகாதிபத்தியம் குரல்கொடுப்பதன் சுட்குமம் புரட்சிகளுக்கான சந்தர்ப்பங்களை என்றும் இல்லாமல் செய்வதாகும். இதுவே இந்தியாவிலும் சரி ஈழத்திலும் சரி நடக்கும் சாபக்கேடு. புரட்சிகள் மாற்றங்கள் அற்ற சமுதாயமாக புரட்சிகள் முளைவிடும் போது அவை கிள்ளி எறியப்பட்டு தோல்விகளில் முடியும் சமுதாயமாக மட்டுமே வரலாறு நீளவும் இருக்கின்றதுக்கு காரணமும் இதுவே. சுருக்கமாகச் சொன்னால் வேதனையில் துடிப்பவன் சுதந்திரமாக அழமுடியாது அவன் தண்டிப்பவனின் விருப்பப் படியே அழமுடியும்.

இணைப்பிற்கு நன்றி நிழலி,

முதலாவது தொடுப்பை வாசித்து பார்த்தேன். காலச்சுவடியில் யாழ் இணையம் போல வெவ்வேறு பார்வைகள், நோக்கங்கள், கொள்கைகள் உடைய பல்வேறு தரப்பினர் பங்களிக்கின்றனர் என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஒவ்வொரு கட்டுரைக்கும், கருத்துகளிற்கும் தனிநபர்களே அன்றி யாழ் இணையம்போல.. காலச்சுவடியின் நிருவாகமோ/ காலச்சுவடியோ பொறுப்பு இல்லை என்று சொல்லத்தோன்றுகின்றது.

எனவே, மேலே நாரதரும் சொல்லியதுபோல்.. உண்மைகள் எழுதப்பட்டு இருந்தாலும்கூட.. கட்டுரை எழுதியவரின் கட்டுரையின் உள்ளார்ந்தம் அறியப்படும்போது கட்டுரையின் நம்பகத்தன்மை, நடுவுநிலமை என்பன கேள்விக்குறியாகின்றன. இந்தவகையில்..எப்படியான கட்டுரைகளை காலச்சுவடி பிரசுரித்து இருந்தாலும்.. கட்டுரையாளரின் சுய விருப்பு, வெறுப்புகளிற்கு அப்பால்பட்டு கட்டுரை வரையப்படாதபோது காலச்சுவடி அதற்கு பொறுப்பாக முடியாது.

நன்றி!

  • தொடங்கியவர்

வன்னி மக்கள் புலிகளால் பாதிக்கப்பட்டது என்பது உண்மையே, மிக மோசமான நிலைமகள் உருவாகியது என்பது உண்மையே, ஆனால் இந்த நிலமைகளை புலிகளின் தலமைமேல் போட்டுவிடுவது எம்மை நாமே ஏமாற்றும் ஒரு அயோக்கியத்தனம். இது எமது இனத்தின் நீண்டகால தவறான இருத்தலின் விழைவு. இந்த மோசமான நிலமைகளை புலிகள் தலமை ஊடாக நாம் அரங்கேற்றினோம் என்பதே உண்மை.

தமிழீழம் என்பது எமக்கு வேண்டும். தமிழகத்தில் உள்ள தமிழுணர்வாளர்களுக்கும் அது பெரும் விருப்பம். இதற்காக பெரும் நிர்ப்பந்தகளை செய்தோம். புலிகளை வைத்து தமிழீழம் அடைந்துவிட இனம் முனைந்தது. பெரும்பான்மை மக்கள் போராடிக் கஸ்டங்களை ஏற்று தமக்கென்று ஒரு தனியரசை உருவாக்க முனையவில்லை. வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையில் இருந்தார்கள். புலப்பெயர்வுகளும் புலப்பெயர்வினூடாக புலத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டுதலும் முதன்மையானது. புலிகளில் இருந்து பிரிந்து அரசகட்டுப்பாடுகளில் நெளிவு சுழிவுகளூடாக வாழ்தல் என பெரும்பான்மை மக்கள் போராட்டத்தில் இருந்து அன்னியப்பட்ட அதே நேரம் தமிழீழம் வேண்டும் என்ற விருப்பை பெரிதளவில் வளர்த்துக்கொண்டார்கள். அந்த விருப்பை புலிகள் மீது திணித்தார்கள். இந்த நிலையில் போராட்டம் என்பதுக்கும் பெரும்பான்மை மக்களுக்குமிடையில் பெரியதொரு இடைவெளி உருவாகின்றது. மக்கள் வேறு புலிகள் வேறு என்று உலகம் தனது சூழ்ச்சிகளை இந்த இடைவெளியூடாகத்தான் அரங்கேற்றியது. இந்த இடைவெளியும் இதற்கு காரணமான அன்னியப்படுதலும் இனத்தின் நீண்ட தவறான இருப்பின் விழைவாகின்றது. இன ஒற்றுமைஇன்மை இனத்தின் சிதைவு இனப்பற்றுக்கு எதிரான காரணிகள், மனோநிலை போன்றவற்றின் மூலமாக சாதி மத வர்க்க பிரச்சனைகள் தொடர்ச்சியாக இருக்கின்றது.

இவ்வாறான அன்னியப்படுதல் அதனால் உருவான இடைவெளிகள் போன்றவற்றின் ஊடாக எமக்கான படைபலம் என்ன உலகின் போக்கு என்ன என்பதை நாம் உணரவில்லை. நாம் உணர்ந்திருந்தால் தமிழீழம் என்ற தனியரசுக்கான நிர்ப்பந்தத்தை நிச்சயம் தொடரவாய்பிருந்திருக்காது. எமது எதிர்பார்புகளுக்காக புலிகள் இயங்கவேண்டியிருந்தது காரணம் புலிகள் இந்த இனத்தில் இருந்து வந்தவர்கள். எமது இனத்தின் சிதைவுகள் குறித்தும் நாம் ஒவ்வொருவரின் நிலை குறித்தும் அதாவது எங்கிருக்கின்றோம் போராட்டத்துக்கும் எமக்குமான நேரடியான பங்கு என்ன ஏனைய மக்கள் நிலை என்ன போன்றவை குறித்தும் நாம் தெளிவாய் இருந்திருந்தால் புலிகளின் போக்கில் மாற்றம் வந்திருக்கும். மோசமான நிலமைகள் உருவாக முன்னரே ஆயுதங்களை ஒப்படைத்து ஒரு அரசியல் மார்க்கமாக சில மாற்றங்களை செய்து உலகின் போக்கை வேறுவிதமாக எதிர்கொண்டிருக்கலாம். நிறைய இழப்புகளை தவிர்த்திருக்கலாம். இறுதிவரை யாரொருவருக்கும் இந்த போக்கில் உடன்பாடு இல்லை. இறுதிவரை மானத்துடன் போராடி மடிதல் என்பதே குறியாக இருந்தது. இது புலிகளின் தனிப்பட்ட விருப்பத்துக்கு அப்பால் இந்த இனத்தின் பொதுக்கருத்து இது. ஆனால் இந்தப் பொதுக்கருத்துக்கு தகுதியுடைதாக இனம் இல்லை என்பதை எவரும் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்தப் பொதுக்கருத்துமம் இந்தக்கருத்துக்குரிய இயக்கமும் அதுசார்ந்த வரட்டுக்கௌரவங்களுமே வன்னிமக்களை யுத்தத்தின் கொடுமைகளுக்குத் தள்ளியது. போராடும் நிர்ப்பந்தத்தை புலிகள் தலமை ஊடாக கொடுத்தது.

இதே ஒரு கட்டத்தில் சிங்களத்தினதும் உலகினதும் படைபலம் பெருமளவு உள்ளது எம்மிடம் இதை எதிர்கொள்ளக் கூடியளவு படைகளோ வளங்களோ படைகளை திரட்டக்கூடிய மக்கள் எண்ணிக்கையோ இல்லை நாம் ஆயுதங்களை ஒப்படைத்து அரசியல் மார்;க்கமாக போராட்ட வடிவத்தை மாற்றப்போவதாக உள்ளோம் என புலிகள் தலைமை அறிவித்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ள யார் இருந்திருப்பார்கள்?

இது புலகளின் தோல்வி இல்லை மாறக இனத்தின் தோல்வி. வன்னிமக்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் அதன அவலங்கள் புலிகள் தலமையின் சுய முடிவு இல்லை மாறக இனத்தின் பொதுவான கருத்தின் விழைவு இதில் அனைத்து மக்களினதும் பங்கும் இருக்கின்றது.

புலிகளும் அதன் தலைமையும் முடிந்தவரை சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக 30 வருடங்களிற்கு மேலாக சிறுகச் சிறுக கட்டி வழர்த்த போராட்டத்தை graceful degradation மூலம் முடிவிற்கு கொண்டு வந்தார்கள். அந்த முடிவை புலம்பெயர்ந்தவர்கள் கடைசிவரை ஏற்றுக் கொள்ளவில்லை கற்பனையில் மிதந்தார்கள். அதற்கு இடை நடுவில் இருந்த பூசாரிகளும் காரணம்.

ஒவ்வொரு உயிரிழப்பும் வேதனைக்குரியது தான். ஆனால் புலிகிளனதும் தலமையினதும் நிலையில் வேறு யாரும் இருந்தால் அவர்களிற்கு இருந்த பல தெரிவுகளை கவனத்தில் கொண்டால் நிலமை இன்னமும் படுமோசமாக முடிந்திருக்கலாம். தமது வாழ்நாட்கள் முழுவது அர்பணிப்புடன் போராடியது வெற்றியின்றி முடிவிற்கு வருகிறது என்று தெரிந்திருந்தும் முடிந்தவரை கட்டுப்பாட்டுடன் தான் இருந்தார்கள். சிறீலங்கா இந்தியா மற்றும் சர்வதேசம் புலிகளின் இறுதிக்கால கட்டத்தில் ( apocalypse moments) பல்வேறு மோசமான நிகழ்வுகளை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களுடை மோசமான எதிர்பார்ப்புகள் போல் நடக்காதது போராட்டத்தின் தூய்மைத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

. சிறீலங்கா இந்தியா மற்றும் சர்வதேசம் புலிகளின் இறுதிக்கால கட்டத்தில் ( apocalypse moments) பல்வேறு மோசமான நிகழ்வுகளை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களுடை மோசமான எதிர்பார்ப்புகள் போல் நடக்காதது போராட்டத்தின் தூய்மைத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

சீறிலன்கா,இந்தியா,மற்றும் சர்வதேசம் எதிர்பார்த்த அந்த மோசமான நிகழ்வுகள் எவை?

அவர்கள் எதிர்பார்த்ததுதான் நடந்துள்ளது.இதைவிட என்ன மோசமான நிலமை எங்களுக்கு நடக்க இருக்கு.

மோசமான நிகழ்வுகள் என்பது சிறீலங்காவின் நிலைப்பாட்டில் இருந்து எழுதியது. புலிகளின் இறுதிக்கட்டம் என்பது உறுதியான நிலையில் எதிர்காலம் என்று ஒன்று இல்லை என்பதால் நற்பெயர் அங்கீகாரம் போன்றவற்றைப்பற்றி யோசிக்கத்தேவையில்லை. பயங்கரவாத முத்திரைக்கோ சர்வதேசக் கண்டனங்களிற்கோ பயப்படத்தேவையில்லை என்று பல கண்மூடித்தனமான செயல்களைச் புலிகள் செய்து முடித்திருக்கலாம் சிறீலங்கா முழுவதும். இவற்றிற்கு இராணுரீதியில் பலன் இல்லை என்றாலும். இப்படியான எதிர்பார்ப்புகளையும் அவற்றிற்கான தயார்படுத்தல்களையும் சிறீலங்காவும், இந்தியாவும் சர்வதேசமும் கொண்டிருந்தது. அப்படி எதுவும் நடக்கவில்லை. வரலாறு வெல்லும் தரப்பால் எழுதப்படுகிறது. இது 2006 இல் இருந்தோ அல்லது இந்த வருட ஆரம்பகாலத்தில் இருந்து வைகாசி 19 வரையானதோ என்று நின்றுவிடாது. படிப்படியாக முழுப் போராட்டவரலாறும் மாற்றி எழுதப்படும். தீபாவளி போல் வைகாசி 17...19 அய் கொண்டாடும் சந்ததியும் உருவாகும்.

உதாரணத்திற்கு செஞ்சோலைப்படுகொலை வரலாற்றை மாற்றி எழுத சரணடைந்தவர்களின் வாக்குமூலம் என்று பல அரங்கேற்றப்படுகிறது சர்வதேச ஊடகங்களிற்கு.

சிறீலங்காவும் இந்தியாவும் சர்வதேசமும் ஏன் தமிழரிற்கு மோசமான நிலமை ஏற்படுமா இல்லையா என்று ஆராச்சி செய்து தயார்படுத்தல்களைச் செய்யப்போகிறது? அதனால் அவர்களிற்கு என்ன இலாபம்?

  • கருத்துக்கள உறவுகள்

இது புலகளின் தோல்வி இல்லை மாறக இனத்தின் தோல்வி. வன்னிமக்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் அதன அவலங்கள் புலிகள் தலமையின் சுய முடிவு இல்லை மாறக இனத்தின் பொதுவான கருத்தின் விழைவு இதில் அனைத்து மக்களினதும் பங்கும் இருக்கின்றது.

இதை புரிந்து கொள்ள கூடிய நிலையில் எமது இனம் இப்போதமு; இல்லை. முற்றாக அழியும் நிலையில் யாரவது புரியலாம் அப்போது எல்லாம் காலம் கடந்து இருக்கும். புனைகதைகளுடாக வாழ்கையை நடத்துபவர்களை சுய உலகிற்கு அழைத்துவருவது என்பது எளிதான ஒன்றல்ல. நல்லுரில் தீர்த்தமாட கந்தனை அழைத்த பேரில் ஒரு அரைவாசி பேர் வன்னி மக்களின் குருதியை நிறுத்த யாழில் ஒரு எழுச்சிபோராட்டத்திற்கு துணிந்திருப்பின் அதன் விளைவு எத்தனை? ஆனால் இன்று எதிரியின் பக்கம் நின்று வன்னி மக்ளின் குருதியில் தீர்த்தமாடுகின்றார்கள்.

யாராவது ஒருவரின் மேல் பழியை போட்டுவிட்டு தங்களை புத்திசாலிகள் என காட்டிகொள்ளும் நிலமை இப்போதைக்கு மாறது. அப்டி பட்ட இனத்திற்கு இப்போது புலிகள் அவல் மாதிரி சும்மாவா விடுவார்கள். புலிகள் சுட்டார்கள் அதுதான் சிங்களவருடன் சேர்ந்து உங்களை கற்பழிக்கின்றோம் எனும் ஈ.பி.டி.பி போன்ற ஒட்டு குழுக்களுக்கும் இந்த சாதாரண மக்களுக்கும் எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.

மேலேயே சில உத்த புத்திரர்கள்..... நடுசிலமையாளராக நின்று நீதி பேசுகிறார்கள் வாசித்துவிட்டு குப்புறபடுக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் அதன் தலைமையும் முடிந்தவரை சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக 30 வருடங்களிற்கு மேலாக சிறுகச் சிறுக கட்டி வழர்த்த போராட்டத்தை graceful degradation மூலம் முடிவிற்கு கொண்டு வந்தார்கள். அந்த முடிவை புலம்பெயர்ந்தவர்கள் கடைசிவரை ஏற்றுக் கொள்ளவில்லை கற்பனையில் மிதந்தார்கள். அதற்கு இடை நடுவில் இருந்த பூசாரிகளும் காரணம்.

ஒவ்வொரு உயிரிழப்பும் வேதனைக்குரியது தான். ஆனால் புலிகிளனதும் தலமையினதும் நிலையில் வேறு யாரும் இருந்தால் அவர்களிற்கு இருந்த பல தெரிவுகளை கவனத்தில் கொண்டால் நிலமை இன்னமும் படுமோசமாக முடிந்திருக்கலாம். தமது வாழ்நாட்கள் முழுவது அர்பணிப்புடன் போராடியது வெற்றியின்றி முடிவிற்கு வருகிறது என்று தெரிந்திருந்தும் முடிந்தவரை கட்டுப்பாட்டுடன் தான் இருந்தார்கள். சிறீலங்கா இந்தியா மற்றும் சர்வதேசம் புலிகளின் இறுதிக்கால கட்டத்தில் ( apocalypse moments) பல்வேறு மோசமான நிகழ்வுகளை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களுடை மோசமான எதிர்பார்ப்புகள் போல் நடக்காதது போராட்டத்தின் தூய்மைத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

இதேல்லாம் ஏதோ மாயாஜாலம் மந்திரம் செய்வது எப்படி? போன்ற வார்த்தைகள்போல் தான் இப்போது பலருக்கும் தெரிகின்றது..... இதை யாரும் வாசிக்கவும் போவதில்லை வாசித்தாலும் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு விளங்கவும் போவதில்லை. ஆகவே நீங்கள் இதை இப்போதைக்கு கைவிடுவதே உத்தமம். ஏதாவது எழுத வேண்டும் என்றால் தடுப்பு முகாம்களில் மக்கள் படும் அவஸ்தைகள் என்று தொடங்கி............... இதற்கெல்லாம் யார் காரணம் என்று ஒரு அலசல் அலசி அப்படியே புலிகளை கைநீட்டி காட்டி........ உங்களையும் ஒரு நடுநிலமையாளராகவும்........ தலைசிறந்த கல்விமானாகவும்..... நீதிமானகவும் காட்டிவிட்டு இருப்பதற்கே இந்த காலம் உகந்தது. இந்த பாழாய்போன இனத்திற்கு வெடிமருந்து சுமந்து வெடித்தவர்கள் மாஏமாளிகள். மாவீரர் என்ற பதமும் எம்மோடு அழிந்துவிடும்.

நல்லூர் திருவிழா நடந்தது எவ்வளவு பிரச்சாரத்துக்கு பயன்பட்டுதோ அதை விட அதிகமாக மடு தேவலய திருவிழா உதவியிருக்கிறது. அமைதிக்கும், இன ஒற்றுமைக்கும் மடுத்திருவிழா அடி கொலுவதாக எல்லாரும் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்லுறியள் அப்பிடி தானோ? இது வன்னி மக்களின் இரத்ததில் நடந்த கொண்டாட்டம் இல்லையோ? நல்லூர் தேர் போல மடுவிலையும் 500, 000 பேர் கூடினவையாம். போன சனம் எல்லாரையும் உணர்ச்சியற்ற சடங்கள் எண்டு திட்டலாமோ?

A sudden phone call gave the BBC's Sri Lanka correspondent Charles Haviland rare access to the the war-battered north of the island. He saw Tamils languishing in a vast refugee camp - but also scenes of ethnic harmony at a Catholic shrine.

http://news.bbc.co.uk/2/hi/programmes/from...ent/8212770.stm

http://www.google.com/hostednews/ap/articl...sQ-NiAD9A31N8G0

http://news.xinhuanet.com/english/2009-08/...nt_11886102.htm

http://www.colombopage.com/archive_091/Aug1250360811CH.html

From Our Lady of Madhu a task for Christians in Sri Lanka: Peace between Sinhalese and Tamils

http://www.asianews.it/index.php?l=en&...6066&size=A

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோசமான நிகழ்வுகள் என்பது சிறீலங்காவின் நிலைப்பாட்டில் இருந்து எழுதியது. புலிகளின் இறுதிக்கட்டம் என்பது உறுதியான நிலையில் எதிர்காலம் என்று ஒன்று இல்லை என்பதால் நற்பெயர் அங்கீகாரம் போன்றவற்றைப்பற்றி யோசிக்கத்தேவையில்லை. பயங்கரவாத முத்திரைக்கோ சர்வதேசக் கண்டனங்களிற்கோ பயப்படத்தேவையில்லை என்று பல கண்மூடித்தனமான செயல்களைச் புலிகள் செய்து முடித்திருக்கலாம் சிறீலங்கா முழுவதும். இவற்றிற்கு இராணுரீதியில் பலன் இல்லை என்றாலும். இப்படியான எதிர்பார்ப்புகளையும் அவற்றிற்கான தயார்படுத்தல்களையும் சிறீலங்காவும், இந்தியாவும் சர்வதேசமும் கொண்டிருந்தது. அப்படி எதுவும் நடக்கவில்லை. வரலாறு வெல்லும் தரப்பால் எழுதப்படுகிறது. இது 2006 இல் இருந்தோ அல்லது இந்த வருட ஆரம்பகாலத்தில் இருந்து வைகாசி 19 வரையானதோ என்று நின்றுவிடாது. படிப்படியாக முழுப் போராட்டவரலாறும் மாற்றி எழுதப்படும். தீபாவளி போல் வைகாசி 17...19 அய் கொண்டாடும் சந்ததியும் உருவாகும்.

உதாரணத்திற்கு செஞ்சோலைப்படுகொலை வரலாற்றை மாற்றி எழுத சரணடைந்தவர்களின் வாக்குமூலம் என்று பல அரங்கேற்றப்படுகிறது சர்வதேச ஊடகங்களிற்கு.

சிறீலங்காவும் இந்தியாவும் சர்வதேசமும் ஏன் தமிழரிற்கு மோசமான நிலமை ஏற்படுமா இல்லையா என்று ஆராச்சி செய்து தயார்படுத்தல்களைச் செய்யப்போகிறது? அதனால் அவர்களிற்கு என்ன இலாபம்?

அண்ணை எனக்கு இது புரியல்ல

இயக்கம் கிளிநொச்சி பிடிபட்ட கையோடய கொரில்லா படையா மாறி காட்டுக்குள்ள போயிருக்கலாம் தானே ஏன் அப்பிடிச்் செய்யேல்ல

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எனக்கு இது புரியல்ல

இயக்கம் கிளிநொச்சி பிடிபட்ட கையோடய கொரில்லா படையா மாறி காட்டுக்குள்ள போயிருக்கலாம் தானே ஏன் அப்பிடிச்் செய்யேல்ல

மக்களுக்காக போராடியவர்கள் மக்களை நிர்க்கதியாக விட்டு விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள் புலிகள் என்று பிளேற்றை மாற்றி விடுவீர்களே?.

Edited by nunavilan

[quote name='kurukaalapoovan' date='Aug 23 2009, 08:46 PM' post='536282']

ஒவ்வொரு உயிரிழப்பும் வேதனைக்குரியது தான். ஆனால் புலிகிளனதும் தலமையினதும் நிலையில் வேறு யாரும் இருந்தால் அவர்களிற்கு இருந்த பல தெரிவுகளை கவனத்தில் கொண்டால் நிலமை இன்னமும் படுமோசமாக முடிந்திருக்கலாம். தமது வாழ்நாட்கள் முழுவது அர்பணிப்புடன் போராடியது வெற்றியின்றி முடிவிற்கு வருகிறது என்று தெரிந்திருந்தும் முடிந்தவரை கட்டுப்பாட்டுடன் தான் இருந்தார்கள். சிறீலங்கா இந்தியா மற்றும் சர்வதேசம் புலிகளின் இறுதிக்கால கட்டத்தில் ( apocalypse moments) பல்வேறு மோசமான நிகழ்வுகளை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களுடை மோசமான எதிர்பார்ப்புகள் போல் நடக்காதது போராட்டத்தின் தூய்மைத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களுக்காக போராடியவர்கள் மக்களை நிர்க்கதியாக விட்டு விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள் புலிகள் என்று பிளேற்றை மாற்றி விடுவீர்களே?.

இப்ப மட்டும் என்ன கிழிச்சிச்சாம்.

மக்கள் முகாம்களுக்குள்ள நிர்க்கதியா இல்லாம என்ன கதியா இருக்கீனம்.

காட்டுக்கு போயிருந்தாலாவது தயார்படுத்திட்டு வந்து மக்கள மீட்டிருக்கலாம்.

இப்ப தட்டிக்கெட்க ஆளில்லாம சிங்களன் என்னமா ஆடறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.