Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடலியின் இரு நூல்கள் கனடாவில் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடலி வெளியீடுகளான கருணாகரனின் பலிஆடு கவிதை நூல் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய இரு நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வு வரும் வெள்ளி 28 ஓகஸ்ட் மாலை 6 மணிக்கு கனடாவில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்கள் கீழே..

bookrelease.jpg

எனது இனிய வாழ்த்துக்கள்.

எம்மவர்களின் அனைத்துப் படைப்புகளையும் வாங்கி ஊக்குவிக்கும் நல்ல இதயங்களுக்கும் நன்றிகள்.

வடலியின் வெளியீடுகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடலியின் இரு நூல்கள் கனடாவில் வெளியீடு

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களின் ஆக்கங்களை புத்தக உருவில் கொண்டுவரும் வடலியின் பணி சிறக்க வாழ்த்துகின்றேன் .

எமது ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஆனால் பொது தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர்களுக்கே நாங்கள் ஆதரவை வழங்கவேண்டும்.

இதில் கருணாகரன் என்ற எழுத்தாளர் அண்மைய யாழ் தேர்ததலில் இன்னும் இரண்டு எழுத்தாளர்களுடன் ஈபிடிபிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யததோடு இதுவரை காலமும் நடந்த விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்துள்ளார்.

எனவே எம்கைகளையே எமது கண்களை குத்துவதற்கு அனுமதிக்ககூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா விசால்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழக ஏடான வெளிச்சம் இதழுக்கு ஆசிரியராக இருந்தவருக்கும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சி செயல் இழக்கும் வரை அதன் இயக்குனராக இருந்தவருக்கும் இப்போது ஏதோ ஒரு காட்டு முகாமில் இராணுவ விசாரணைகளை எதிர்கொண்டு இருக்கிறவருமான கருணாகரனுக்கு மிகச்சிறந்த பட்டம் வழங்கி கௌரவித்துள்ளீர்கள்.

தயவுசெய்து தகவல்களை உறுதிப்படுத்தி எழுதுங்கள். அல்லாதுவிடின் ஏதோ உள்நோக்கத்தோடு நீங்கள் எழுதுவதாக மற்வர்கள் கருதி வீடுவார்கள். ஒரு பக்கம் கோபமாயிருந்தாலும் இறுதிவரை வன்னிக்குள் தம்மை நிறுத்தி வெளிவந்து இப்போது ராணுவ கெடுபிடிகளுக்குள் சிக்குண்டு இருப்பவர்கள் உங்களுக்காகவும் அந்த அந்த துயரைச் சுமந்தார்கள் என எண்ணும் போது கவலையாக இருக்கிறது. .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடலி ஒரு வளரும் நிலையில் உள்ளது. இதற்கிடையில் விசால் போன்றவர்களின் உண்மையும் நேர்மையும் அற்ற தகவல்கள் முளையிலேயே முடக்கும் விடயங்களாக இருக்கும். உண்மையில் விசால் வேண்டுமென்று சொல்லியிருக்க மாட்டார் என நினைக்கிறேன்.வேறு ஏதோ அவலை நினைத்து உரலை இடித்திருக்கிறார் போலும்.

கருணாகரனை அறியாதவர்கள் வெளிச்சம் சஞ்சிகைகளை எடுத்துப்புரட்டுவதோடு என் ரி ரி - தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் இயக்குனர் யாரெனவும் அறிந்து கொள்ளவும்.

இன்னமும் முகாமிலேயே இருக்கும் நபர் ஒருவருக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்த கதை சரியாகப் பொருந்தவில்லை.

எனது பயமெல்லாம் நாளைக்கு புதுவையின் புத்தகமெதையாவது வெளியிட்டால் கூட இப்படியேதாவது கதை வருமோ என்பதுதான்

Edited by sayanthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடலி ஒரு வளரும் நிலையில் உள்ளது. இதற்கிடையில் விசால் போன்றவர்களின் உண்மையும் நேர்மையும் அற்ற தகவல்கள் முளையிலேயே முடக்கும் விடயங்களாக இருக்கும். உண்மையில் விசால் வேண்டுமென்று சொல்லியிருக்க மாட்டார் என நினைக்கிறேன்.வேறு ஏதோ அவலை நினைத்து உரலை இடித்திருக்கிறார் போலும். ஈபிடிபிக்கு ஆதரவாக பிரசாரம்

கருணாகரனை அறியாதவர்கள் வெளிச்சம் சஞ்சிகைகளை எடுத்துப்புரட்டுவதோடு என் ரி ரி - தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் இயக்குனர் யாரெனவும் அறிந்து கொள்ளவும்.

இன்னமும் முகாமிலேயே இருக்கும் நபர் ஒருவருக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்த கதை சரியாகப் பொருந்தவில்லை.

எனது பயமெல்லாம் நாளைக்கு புதுவையின் புத்தகமெதையாவது வெளியிட்டால் கூட இப்படியேதாவது கதை வருமோ என்பதுதான்

சயந்தா பேசாமல் திருக்குறள் ..ஆத்திசூடி..தேவாரம் இப்பிடி ஏதாவது புத்தகங்களை வெளியிட்டால் இப்பிடியான சிக்கல்களிலை இருந்து தப்பலாம். :icon_mrgreen::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தா பேசாமல் திருக்குறள் ..ஆத்திசூடி..தேவாரம் இப்பிடி ஏதாவது புத்தகங்களை வெளியிட்டால் இப்பிடியான சிக்கல்களிலை இருந்து தப்பலாம்.

வள்ளுவர் ஆனந்த சங்கரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது உங்களுக்குத் தெரியாதா..

சயந்தன் நீங்கள் சொல்வது போலவே அவர் இராணுவ விசாரணைகளின் பிடியில் ஏதோ ஒரு காட்டுக்குள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் குறிப்பிடுவது போலவே பல இயக்க வேலைத்திட்டங்களை அவர் செய்ததாகவும் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இப்போது அவரது ஆக்கங்களை புத்தகமாக வெளியிட்டு ஏன் அவரை இக்கட்டுக்குள் சிக்கவைக்க வேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன் நீங்கள் சொல்வது போலவே அவர் இராணுவ விசாரணைகளின் பிடியில் ஏதோ ஒரு காட்டுக்குள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் குறிப்பிடுவது போலவே பல இயக்க வேலைத்திட்டங்களை அவர் செய்ததாகவும் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இப்போது அவரது ஆக்கங்களை புத்தகமாக வெளியிட்டு ஏன் அவரை இக்கட்டுக்குள் சிக்கவைக்க வேண்டும்?

விசால்.. ப்ளீஸ்.. சற்றே தகவல் அறிய முயலுங்கள். இந்த நூல் நேற்று வெளியானதல்ல. கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியானது. கடந்த வருட ஓக்டோபரில் அவரோடு தொடர்புகள் இருந்த போது அவர் அனுப்பியவை அவை. உண்மையில் நூல் வெளிவருகையில் அவரது தொடர்பு இல்லை.

இப்போது கூட அவர் எங்கேயிருந்தார் என்ன செய்தார் என்ற விபரங்களை நாம் பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால் போகிற போக்கில் நீங்கள் அவர் ஈபிடிபிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என பிரசாரம் செய்து விட்டுபோவீர்களாம். நாம் பப்ளிக் பப்ளிக் என அமைதி காக்கவேண்டுமாம் என்றால் என்ன சொல்வது...

புத்தகம் இக்கட்டில் மாட்டுவது இருக்கட்டும். ஒரு கலைஞனை இவர் ஈபிடிபிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் எனச் சொல்லி நீங்கள் எக்கட்டில் மாட்டப் பார்த்தீர்கள் என புரிகிறதா..?

சரி... அறியாமல் செய்த பிழை.. விட்டுவிடலாம்.

Edited by sayanthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி.. போய்வந்து சொல்லுங்கள்.. வேறும் நண்பர்கள் இருந்தால் அழைத்துச் செல்லுங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தா பேசாமல் திருக்குறள் ..ஆத்திசூடி..தேவாரம் இப்பிடி ஏதாவது புத்தகங்களை வெளியிட்டால் இப்பிடியான சிக்கல்களிலை இருந்து தப்பலாம். :icon_mrgreen::lol:

என்னணை மனிசன்காரன் வேலைக்கு போட்டானோ? இல்லாட்டி மப்பிலை கவுண்டு போனானோ? :lol:

ஏனெண்டால் நீங்கள் தங்கச்சி இஞ்சை தினாவெட்டாய் நிக்கிறியள்? :o:):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியிலிருந்து மாலை 5 மணிவரை 1623 young street அமைந்துள்ள செஞ்சிலுவைச்சங்கத்தின் முன்பாக ஆர்ப்பாட்டக் கவனயீர்ப்பு இடம்பெற உள்ளது. அத்தோடு 360 யுனிவேர்சிற்றி அவெனியுவிலும் அன்றையதினம் இரவு 9 மணிவரை பாரிய அளவில் கவனயீர்ப்பை நிகழ்த்த உள்ளதாக தன்னார்வத் தொண்டர்கள் அறிவித்துள்ளார்கள். அதே நேரம் இந்த நூல் வெளியீடும் முக்கியமானதாகவே படுகிறது. நூல் வெளியீட்டுக்குச் செல்வதற்கு முயற்சி எடுக்கிறேன் முடியாதுபோனால் இந்நூற்களை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களை அறிவித்தால் உதவியாக இருக்கும். சூழ்நிலைக்கேற்பத்தான் தற்காலம் உள்ளது. திட்டமிட்டு எதனையும் செய்ய முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விஸால் உங்கள் பார்வையே தவறாக இருக்குது. உங்களைப் பார்த்து நான் பரிதாபப் படுகிறேன். இவ்வளவு பச்சப்புள்ளையாக இருக்கிறீர்களே! மீண்டும் யாராவது உசுப்பி விடுவதற்குள் நிஜ உலகத்துக்கு வரவும்.

கீழே தரப்படுகின்ற அறிக்கை யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பெயரில் ஊடகங்களுக்கு தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கை ஆகும். இதில் வெளிப்படையாக ததேகூ வை விமர்சிப்பதுடன் ஈபிடிபிக்கு ஆதரவளிக்குமாறும் கேட்கப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளில் விருப்பத்தின் அடிப்படையில் அல்லது கட்டாயத்தின் பேரில் கருணாகரன் ஈடுபட்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பெரிய கூட்டம் கூட்டி இதற்கான சகல ஏற்பாடுகளும் அவரது தற்போதைய தலைவர் டக்ளசால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவரால் தற்போது வேறு புனைபெயர்களில் ”பல்வேறு கலைப்படைப்புகள்” தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வெளிவருகின்றன. தற்போது முன்னெடுக்கப்படுகின்ற புத்தக வெளியீடுகள் அடுத்த மாதங்களில் வெளிவரவுள்ள இன்னும் பல வெளியீடுகளுக்கான ஆரம்பமே. போராட்டத்தை விமர்சிக்கும் படைப்புக்கள் எழுதிவிட்டுபோகட்டும். ஆனால் தற்போதைய இவர்களது படைப்புக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கமாக கொண்டே வந்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் அவர் இராணுவத்தின் பிடிக்குள் இருந்தால் அவரது புத்தகங்களை வெளியிட்டு அவருக்கு இக்கட்டுக்குள் ஏற்படுத்த யாரும் விரும்பமாட்டார்கள். இதன் மூலம் வெளியீட்டாளர்களின் உண்மைதன்மையை புரிந்துகொள்ளலாம்.

அறிக்கை இதோ

எங்களிடமிருந்த வன்முறை அரசியலாலும்இ விட்டுக் கொப்பின்மையினாலும்இ முரண்பாடுகளாலும் எமது மக்களே அனுபவிக்க முடியாதளவு துயரங்களை அனுபவித்து இன்று முற்கம்பிச் சிறைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். எமது மக்களை கவனிக்காதுஇ அவர்களைப் பார்வையிடாதுஇ மீட்பதற்கு எந்தச் சிறு நடவடிக்கையும் எடுக்காது வாக்குகளை கேட்க வருகின்ற தமிழ் கட்சிகள் மீது எமக்குக் கடுமையான விமர்சனம் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னி மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளில் இறங்காமல் இருப்பது எமக்கு கடும் அதிருப்தியைத் தந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் இன்றைய உடனடிப் பிரச்சனையாக இருப்பது வன்னி மக்கள்தான். அதுவே தாயகத்து மக்களினதும்இ தமிழக மக்களினதும்இ புலம்பெயர் மக்களினதும் நெருக்கடி நிலையாக உள்ளது. எனவே முதலில் வன்னி மக்களின் உடனடிப் பிரச்சினையை தீர்த்து அவர்களைத் தடுப்பு முகாங்களிலிருந்து விடுவித்து மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்த வேண்டிய அவசியம் உடனடித் தேவையாக உள்ளதைத் தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும். எமது மக்களின் இன்றைய மனிதாபிமான பிரச்சினையை அவலத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு அரசியல் தீர்வை ஏற்படுத்த வலியுறுத்துங்கள். சுயநலமான அரசியல் நோக்கங்களுக்காக வன்னி மக்கைளை பயன்படுத்துவது கண்டு சில தமிழ் கட்சிகள்மீது அதிருப்தி அடைகிறோம்.

வன்னி அகதி மக்களின் விமோசனத்திற்காக நடைமுறையில் இறங்குபவர்களை வன்னி மக்களே தமது பிரதிநியாகத் தெரிவு செய்வார்கள். அவர்களையே புலம்பெயர் மக்களும்இ தமிழகத்து மக்களும் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் மக்கள் சிந்திய குருதி வீண்போகாத வகையிலும் அவர்களுக்கு நல்ல வாழ்வுச் சூழலை கட்டி எழுப்ப நேர்மையான நடவடிக்கையில் இறங்குங்கள். தமிழ் மக்களை இனியும் தோற்கடிக்காமல் ஏகபிரதிநிதித்துவத்தின் வன்முறை அரசியலி;ன் அழிவில் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகிறஇ உலகத்தின் பொதுப்போக்கான பன்மைத்துவ அரசியல் சூழலையும் மக்கள் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்ப மனதாரச் செயற்படுங்கள். அனைவரும் ஒன்றினைந்து வன்னி மக்களின் நலன் சார்ந்த விடயங்களை அசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்து கூறுவோம்.

Edited by vishal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அறிக்கை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ. பிரசன்னா மற்றும் செயலர் பா.பிரதீபன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

//மக்கள் நலன் தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேசுவதோடு நேர்மையாக, மக்கள் நலனுக்காக அர்பணித்து செயற்படுகிற அரசியல் முனைப்பக்களை நாம் வரவேற்பதுடன் அதன் பின் நின்று முழுமையான எங்கள் ஒத்துழைப்பை தருவதற்கு தயாரக உள்ளோம் என்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாட்டை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

நன்றி.

இவ்வண்ணம்,

பா.பிரதீபன் அ.பிரசன்னா

………………………….. ……………………….

செயலாளர் தலைவர்

28.07.2009 இரவு8.00//

---

விசால் வேறு ஏதாவது ஆதாரங்களோடு வாருங்கள்..

--

நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்

நாங்கள் எதற்கு

சாட்சிகளாக்கப்

பட்டிருக்கிறோம்

அல்லது

எதற்காக

சாட்சிகளாயிருக்கிறோம்..

எனக்கெதுவும்

புரியவில்லை.

பகலையும் இரவையும்

கண்டு

அஞ்சும் என்

கண்களை

என்ன செய்வேன்..?

000

ஆசிரியர், வெளிச்சம் சஞ்சிகை, கலை பண்பாட்டுக் கழகம், கோப்பாயோ கொக்குவிலோ என முகவரியிட்டு பதின்ம வயதுகளில் நான் எழுதிய எந்த ஆக்கமும் வெளிச்சம் இதழில் வந்ததில்லை. பதினைந்துகளில் நின்றிருந்த வயதது. அதற்குரிய சந்தேகங்களோடு உவங்கள் தெரிஞ்சாட்கள் எழுதினாத்தான் போடுவாங்கள் போல என நம்பினேன். வெளிச்சம் ஆசிரியரைத் தெரிந்து கொள்ள வேண்டும். பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அதில் மெனக்கெட முடியாதளவிற்கு இடப்பெயர்வுகளும் ஓட்டங்களும் அடுத்த ஆண்டுகளில் நிறைந்து விட்டிருந்ததனால்.. வெளிச்சமாவது இருட்டாவது.. புதுவை இரத்தினதுரையின் பொறுப்பிலிருந்த கலைபண்பாட்டுக் கழகத்தின் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர் கருணாகரன். நான்அறிய அண்மைக்காலம் வரை அவரே அதன் ஆசிரியர்.

000

2003 இல் ஒருநாள். கொழும்பில் ரவி அருணாச்சலம் எழுதிய காலமாகி வந்த கதையின் வெளியீட்டுக்கு கருணாகரன் வந்திருந்தார். அமைதிக் காலமது. நிகழ்வு முடிந்த பிறகு கருணாகரனிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். சற்று சிலநாட்களுக்கு முன் தினக்குரலில் வெளியாயிருந்த எனது சிறுகதையொன்றின் புண்ணியத்தில் அவருக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவராலும் அடையாளப்படுத்தக் கூடியதாக இருந்தது புளுகமாகவும் இருந்தது. தொடர்ச்சியா எழுதுங்கோ என்றார் அவர். அவ்வாறு தொடர்ச்சியாக எழுதினால் ஏதோ ஒரு பொழுதில் நான் நல்ல சிறுகதைகள் எழுதக்கூடும் என அவர் நம்பினாரோ என்னவோ..

000

2005 யூன். கிளிநொச்சி திருநகரிலிருந்த தேசியத்தொலைக்காட்சியின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன். அவர் அப்போது அதன் இயக்குனராயிருந்தார். கிட்டத்தட்ட 10 வருசக்கனவை கேட்டேன். வெளிச்சத்துக்கு ஆக்கம் எழுதித்தந்தால் போடுவியளோ.. கருணாகரன் சிரித்தார். எழுதித்தாரும் பாப்பம் என்றார். நான் ஏதும் சொல்லவில்லை. அந்த அலுவலகத்திற்குள் நிலாந்தன் தவபாலன் ஆகியோரும் இருந்தார்கள். அரசியல் குறித்த பேச்சுத் தொடர்ந்தது.

000

கருணாகரனோடு நண்பர் அகிலனுக்கு அண்மைக்காலம் வரை தொடர்பிருந்தது. கருணாகரன் ஒரு வலைப்பதிவையும் வைத்திருந்தார். பிறகு… யுத்தம் எல்லாவற்றையும் தின்னத் தொடங்க அவருடனான எல்லாத் தொடர்புகளும் அறுந்து போனது. யுத்தம் வன்னியை முழுவதுமாக விழுங்கியது. பெப்ரவரி இறுதியில் என நினைக்கிறேன். ஜெயமோகன் தன்னுடைய வன்னி என்கிற கட்டுரையொன்றில் தனது நெருங்கிய இலக்கிய நண்பர் ஒருவரை போர் காவுகொண்டதாக எழுதியபோது பதட்டமாக இருந்தது. ஜெயமோகன் யார் எவர் என குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் ஜெயமோகனும் கருணாகரனும் நீண்டகால நண்பர்கள் என்பது தெரிந்திருந்தது. பதட்டத்துடன் ஜெமோவிடம் விசாரித்த போது அவர் அது கருணாகரன் இல்லையென்பதைச் சொன்னார்.

000

onkarunaஒருவருடங்களுக்கு முன்பாகவே கருணாகரன் அண்ணை எழுதிய கவிதைகள் சிலவற்றை வெளியிடுவதற்காக பெற்றிருந்த சிலர் கனடாவில் இருந்தார்கள். வடலியின் வெளியீடாக அவரின் கவிதைத் தொகுதியொன்றை வெளியிடுவதற்காக அவற்றை அவர்கள் தொகுத்துத் தந்தார்கள். மொத்தம் 50 கவிதைகள் தொகுக்கப் பட்டு வெளியாகியிருக்கிறது கருணாகரனின் பலி ஆடு கவிதைத் தொகுதி. கருணாகரன் அண்ணையின் தொடர்பு இப்போது இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதுவும் தெரியாது. ஏதோ ஒரு பொழுதில் அந்தச் செய்தியை அவரிடம் சொல்லுவோம் என்ற நம்பிக்கை மட்டுமே உண்டு.

000

வானத்தை நான் பார்க்கவில்லை

நட்சத்திரங்களையும் காணவில்லை

பதுங்குகுழியின்

இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்

சருகு நான்

சூரியன் வந்ததா சென்றதா

நானறியேன்

நிலவின் ஒளியும் மறந்து போயிற்று

நிலம் அதிர்கிறது

குருதியின் மணத்தையும்

மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்

கந்தக நெடில்

கபாலத்தைப் பிளக்கிறது

வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்

அழியும் வாழ்வின் பிரகடனத்தை

ஒவ்வொரு துப்பாக்கிகளிலும்

ஒவ்வொரு பீரங்கியிலும்..

பூக்கள் இனி எப்படியிருக்கும்

மரங்கள் மிஞ்சியிருக்குமா..

பறவைகளின் சிறகுகளில்

சாவு வந்து குந்திக்கொண்டிருக்கும்

காலம் இதுவல்லவா..

இந்தப் பதுங்கு குழிக்கு

நம் எதிர்காலத்தைக் காப்பாற்றும்

கருணையும் வலிமையுமிருக்கிறதா..

அல்லது

எதிரியிடம் பலியிடும்

ஒற்றனைப் போல்க் காத்திருக்கிறதா..

000

அரசியற் தீர்க்கதரிசனங்கள், இராணுவ வெற்றிகளுக்கு அப்பால், போரினுள் அன்பையும் கருணையையும் வேண்டும் மனித இனத்தின் குரலாக, விரட்டப்படும் சனங்களின் அவலத்தின் சிறு ஒலிப்பாக கருணாகரனின் கவிதைகள் உள்ளன. வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்கு முன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தினில் வெளிவருகிறது

-வடலி

பலி ஆடு

வடலி வெளியீடு

மே 2009

மேலும் விபரங்களுக்கும் வாங்கவும் இங்கு அழுத்துங்கள்.

(தமிழக முன்னணி புத்தக கடைகளில் இப்போது கிடைக்கிறது.)

http://sajeek.com/archives/4

-----------

Edited by sayanthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற புத்தக வெளியீடுகள் அடுத்த மாதங்களில் வெளிவரவுள்ள இன்னும் பல வெளியீடுகளுக்கான ஆரம்பமே

நீங்கள் ஒரு ஜேம்ஸ்சு பாண்டு தான் :lol:

வடலி ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்கள் முடிந்துவிட்டது. விசாலுக்காக வடலியின் அடுத்த புத்தக அட்டைப்படத்தையும் இங்கு போடுகிறேன். ஏதாவது நமக்குத் தெரியாத புதிய தகவல்களை அது தொடர்பாக அவர் தரக்கூடும்.

coverpost.jpg

என்ன செய்யிறது.. வடலி புத்தகங்கள் குறித்து நாங்களே சொல்லுவது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விசால் போன்றவர்கள்.. அதாவது புத்தகங்களை படிக்காமல் பேசுகிறவர்களுக்காக சில தகவல்கள்.

முதலாவது வடலி நூல் மரணத்தின் வாசனை வெளியானபோது ஆனந்தவிகடன் அது குறித்து இப்படி எழுதியிருந்தது.

அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

-ஆனந்த விகடன்

வடலிக்கு ஏதோ ஒரு துரோக உள்நோக்குண்டு என்ற கருத்துவிதையை இனிவரும் நாட்களில் செயல்களால் முறியடிப்போம். நன்றி..

Edited by sayanthan

வடலிக்கு ஏதோ ஒரு துரோக உள்நோக்குண்டு என்ற கருத்துவிதையை இனிவரும் நாட்களில் செயல்களால் முறியடிப்போம். நன்றி..

அந்த நாளை எதிர்பார்க்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.